Navigation


RSS : Articles / Comments


மலேசியா.. எரிந்துவிட்ட இன்னொரு உறவு

10:46 AM, Posted by sathiri, One Comment



இலங்கைத் தமிழர்களை காப்பாற்ற வலியுறுத்தி மலேசியாவில் இலங்கைத் தமிழர் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்தார்.

இலங்கையில் போர் நிறுத்தம் செய்யக்கோரி உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.



தமிழ்நாட்டில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்டத் தைச் சேர்ந்த முத்துக்குமார், பள்ளப் பட்டிரவி, சீர்காழி ரவிச்சந்திரன் ஆகியோர் தீக்குளித்து உயிரிழந்தனர்.

இதே போல மலேசியாவில் வசித்து வந்த இலங்கை தமிழரான ராஜா என்ற 27 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்திருக்கிறார். ராஜாவின் உடலுக்கு அருகே ஒரு பெரிய டைரி, பணப்பை, தீப்பெட்டி, மேலும் ஒரு பை ஆகியவற்றை போலீசார் மீட்டனர். கருகிய நிலையில் உயிரிழந்த ராஜாவின் உடலை சிரம்பான் துவாங்கு ஜபார் மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

போலீசார் மீட்ட அவரது டைரியில், நீண்டகடிதம் ஒன்றை அவர் எழுதி வைத்திருக்கிறார். இலங்கையில் பிறந்த நான் பிழைப்பு தேடி மலேசியா வந்தேன். இங்கு எனக்கு நல்லவேலை கிடைத்தது. காலையில் கார் கழுவும் வேலையும், மாலையில் சீன ஓட்டல் ஒன்றிலும் வேலை செய்து வந்தேன். இதன் மூலம் 1200 வெள்ளி (மலேசிய நாணயம்) வருமானம் கிடைத்து வருகிறது.

இலங்கையில் நிரந்தர போர் நிறுத்தம், உடனடி பேச்சு வார்த்தை ஆகியவற்றை வலியுறுத்தி நான் தீக்குளிக்கிறேன். அப்பாவி தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ அமெரிக்க புதிய அதிபர் ஒபாமா உடனடியாக இலங்கை சென்று போர் நிறுத்தத்தை வலியுறுத்த வேண்டும். அவருடன் இந்திய பிரதமர் மன்மோகன் சிங், தமிழக முதல்வர் கருணாநிதி, நார்வே சமாதான தூதர், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரும் செல்ல வேண்டும்.

இந்த டைரியை வைகோவிடம் கொடுக்கவும். எனது கோரிக்கைகளை எல்லாம் வைகோ நிறைவேற்ற வேண்டும். இப்படிக்கு ராஜா என்று அந்த டைரியில் அவர் எழுதியிருந்தார்.

உயிரிழந்த ராஜா இரவு நேரத்தில் கோட்டை முனீஸ்வரர் ஆலயத்துக்கு வந்து இலங்கை அரசால் தமிழர்கள் கொன்று குவிக்கப்படுவதை சோகமான குரலில் கூறி கவலைபடுவாராம். இதை அந்த பகுதியில் உள்ள மக்கள் கூறி, இறந்த ராஜாவுக்காக அனுதாபப்பட்டனர்.

One Comment

Anonymous @ 12:25 AM

Hi

We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.

Please check your blog post link here

If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

Sincerely Yours

Valaipookkal Team