Navigation


RSS : Articles / Comments


தமிழகத்து தமிழர்களே ஈழத்தமிழனிற்கு ஏற்பட்ட நிலை உங்களிற்கும் வேண்டாம் விழித்துக் கொள்ளுங்கள்.

1:28 PM, Posted by sathiri, 6 Comments

தமிழ்நாட்டு உறவுகளே ஈழத்துத் தமிழர் போராட்டம் தொடங்கப்பட்ட ஆரம்ப காலகட்டங்களையே இன்றைய தமிழக நிலைமைகள் நினைவு படுத்துகின்றது. தமிழனின் உரிமைகோரி உண்ணாவிரதம் . ஆர்ப்பாட்டம் . கறுப்புக்கொடி காட்டுதல்.கடையடைப்பு. வேலைநிறுத்தம். இப்படி 58 ம் ஆண்டுகளில் தொடங்கிய ஈழத்தமிழனின் போராட்டங்கள் அனைத்தையும் இலங்கையரசு மதிக்காமல் தொடர்ந்தும் தட்டிக்கழித்தும் அவற்றை அடக்க வன்முறையை கையிலெடுத்ததனாலும்தான் ஈழத் தமிழன் தானும் வன்முறையை கையிலெடுப்பதைத் தவிரவேறு வழியில்லையென நினைத்து பல குழுக்களாக தொடங்கிய வன்முறைப்போராட்டம் இன்று பிரபாகரன் தலைமையில் முனைப்புப் பெற்று நிற்கிறது.அதே போல இன்றைய தமிழகத்து நிலைமைகளும் இருக்கின்றது தமிழர்களது தொடர்ச்சியான வன்முறையற்ற தங்களை தாங்களே வருத்திக் கொள்கின்ற அனைத்துப் போராட்டங்களும் ஆட்சியாளர்களால் அலட்சியப்படுத்தியும் அவற்றை அடக்குமுகமாக ஆட்சியாளர்களால் வன்முறையும் மேற்கொள்கப்பட்டு வருகின்றது.முத்துக்குமார் போன்றவர்களின் தமிழகத்து தமிழனின் எந்தவொரு உணர்வும் மத்திய அரசால் கவனத்திலெடுக்கப்படுவதாக இல்லை.ஏன் கவனத்திலெடுக்கப்படுவதாக பாசாங்கிற்கு ஒரு அறிக்கைகூட வெளியிடவில்லை என்பது தமிழகத்தை இந்திய மத்திய அரசு அற்பமாக நினைக்கின்றது என்பது புலனாகின்றது.எனவே காலப்போக்கில் இலங்கையரசு எப்படி ஈழத்தமிழனை கொஞ்சம் கொஞ்சமாக ஒடுக்கத் தொடங்கியதோ அதேபோன்றதொரு நிலைமையே தமிழகத்து தமிழரிற்கும் எற்படுமென்பது உண்மை.தற்சமயம் வெளியான செய்திகளின்படி இலங்கை விமானப்படைக்கு தாம்பரம் விமானப்படை முகாமில் பயிற்சியளிக்கப்பட்ட கசிந்ததை தொடர்ந்து இலங்கை விமானப்படையினரை வெளியேற்றச் சொல்லி தமிழக மக்கள் ஆர்ப்பாட்டம் செய்ததை தொடர்ந்து அவர்கள் இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்டு விட்டனர் என்று அவசர அவசரமாக கருணாநிதி ஒரு அறிக்கையையும் விட்டு விட்டு இலங்கை விமானப்படையினர் பெங்களுரில் உள்ள விமானப்படை முகாமில் தங்கியிருப்பதாக செய்திகள் வெளி வருகின்றது. தமிழர்களே நிங்கள் என்னவேண்டுமானாலும் கத்துங்கள் நாங்கள் நினைத்ததைத்தான் செய்வோம் என்று ஆட்சியாளர்கள் நினைக்கின்றனர். தமிழகத்து தமிழர்களே ஈழத்தமிழனிற்கு ஏற்பட்ட நிலை உங்களிற்கும் வேண்டாம் விழித்துக் கொள்ளுங்கள்.

6 Comments

ரவி @ 2:19 PM

we dont have forest, trees to do gerilla warfare. we already cut all the trees.

sathiri @ 2:32 PM

ரவி காடே இல்லாத யாழ்ப்பாணத்தில்தான் எங்கள் போராட்டமே கருவானது

Anonymous @ 4:06 PM

ம் ஆரம்பித்து விட்டாச்சா? இதுக்கு தான் உங்க ஆட்களையும் போராட்டத்தையும் தமிழ்நாட்டில் கண்டு கொள்வதே இல்லை.

Anonymous @ 8:33 PM

40 பாராளுமன்ற உறுப்பினர்கள்,
அவர்களது ஆதரவினால் உண்டான ஆட்சி,பல அமைச்சர்கள் ஆனால்,
ஆனால்,பெரிய ஆனால்...
தமிழா உனது அரசு,தலைவர்கள்,மக்கள்,உங்கள் உணர்ச்சி எல்லாம் வடநாட்டு ஏகாதிபத்தியத்திற்குக் கால் தூசி.
இன்று ஈழத்திற்கு அனுப்பப்பட்டுள்ள அதே இந்திய ராணுவம் உங்களையும் உதைக்கும்.
அத்ற்குக் காரணம் என்றெல்லாம் ஒன்றும் வேண்டியதில்லை.உங்கள் குடுமி டில்லியிலுள்ள குடுமிகளிடந்தான் உள்ளது.உணர்ந்து அடிமைகளாக வாழக் கற்றுக் கொள்ளுங்கள்.

sathiri @ 7:20 AM

//Anonymous @ 4:06 PM

ம் ஆரம்பித்து விட்டாச்சா? இதுக்கு தான் உங்க ஆட்களையும் போராட்டத்தையும் தமிழ்நாட்டில் கண்டு கொள்வதே இல்லை.//


அனானிஎங்கள் ஆட்களையும் எங்கள் போராட்டத்தையும் தமிழ்நாடு கண்டு கொள்வது இருக்கட்டும் தமிழகத் தமிழர்களையும் அவர்களது போராட்டங்களையும் டெல்லி கண்டு கொள்கிறதா என்பதனை பாருங்கள்

Anonymous @ 10:01 AM

விளங்கீரும்!