Navigation


RSS : Articles / Comments


எல்லாமே புலிகள்தான்....

1:07 PM, Posted by sathiri, 7 Comments

ஈழத்தில் ஆயுதவிடுதலைப்போர் தொடங்கிய காலத்தில் இலங்கையரசிற்கு எதிரான உணர்ச்சி வேகத்தில் ஈழத்தில் 33 போராட்ட இயக்கங்கள் தொடங்கப்பட்டது. ஆனால் அவை எல்லாமே அன்றைய காகட்டத்தில் இந்தியாவிலும் ஏன் தமிழ் நாட்டிலும் புலிகள் என்றே அழைக்கப்பட்டனர். அதனாலேயோ தமிழகத்தில் புலிகள் அமைப்பு பல சங்கடங்களை சந்தித்தது. அப்படி தொடங்கிய இயக்கங்களின் பெயர்களை எனது நினைவில் வந்தவற்றை இங்கு தருகிறேன்.

1)தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்.( P.L.O.T )தலைவர் உமாமகேஸ்வரன். வறுத்தலைவிளான் யாழ்ப்பாணம்
2)தமிழீழ விடுதலை இயக்கம் (T.E.L.O )தலைவர் சிறீ சபாரத்தினம். கல்வியங்காடு யாழ்ப்பாணம்.
3)ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி '(E.P.R.L.F. )தலைவர் பத்மநாபா .காங்கேசன்துறை யாழ்ப்பாணம்.
4)தமிழீழ விடுதலைப்புலிகள்(L.T.T.E ) தலைவர் பிரபாகரன்.வல்வெட்டித்துறை .யாழ்ப்பாணம்.
5)ஈழமக்கள் புரட்சிகர மாணவர் இயக்கம்( E.R.O.S. ) அமைப்பாளர் இரட்ணசபாபதி. இணுவில் யாழ்ப்பாணம்.

மேலேயுள்ள இயக்கங்கள் தான் ஆரம்பகாலத்தின் முதல் முக்கிய குழுக்களாகவும் இந்தியாவிடம் பயிற்சி மற்றும் உதவிகள் பெற்றதும். மற்றும் வேறு வெளிநாட்டு விடுதலைப்போராட்ட அமைப்புக்களிடம் தொடர்புகளையும் பயிற்சிகளையும் கொண்டிருந்த இயக்கங்களும் ஆகும். அவைகளை 84ம் ஆண்டளவில் உறுப்பினர் தொகைகளை அடிப்படையாக வைத்து வரிசைப்படுத்தியுள்ளேன். இனி மற்றையவை.


6)தமிழீழ இராணுவம்.( T.E.A ) தலைவர். மகேஸ்வரன்.புங்குடுதீவு.யாழ்ப்பாணம்.
7)தமிழீழ விடுதலை இராணுவம்.(T.E.L.A ) தலைவர் ஒபறோய் தேவன். கோண்டாவில்.யாழ்ப்பாணம்.
8)தமழீழ விடுதலை இராணுவம் 7 ( 7.T.E.L.A ) இராஜன். ஊர்பெயர் தெரியாது.யாழ்ப்பாணம்.இது T.E.L.A. இயக்கத்திலிருந்து 7 பேர் பிரிந்து போய் தொடங்கியது.
9)தமிழீழ விடுதலை அமைப்பு.( T.E.L.E )தலைவர்.ஜெகன்.அராலி .யாழ்ப்பாணம்.
10)தமிழீழ தேசிய விடுதலை முன்னணி(N.L.F.T )தலைவர்.விசுவானந்த தேவன். கல்லுவம் .யாழ்ப்பாணம்.
11)மக்கள் தேசிய விடுதலை முன்னணி(P.L.F.T)
12)தமிழர் பேரவை
13) R.A(செம்படை)
14) C.A(நாகபடை)
15)R.E.N.A
16)R.E.L.E
17)T.E.N.A
18)புதியபாதை. .(தலைவர் பெயர் சுந்தரம்.யாழ். மூளாய்)
19)R.E.L.O
20)தீப்பொறி
21)T.E.D.F(தமிழீழ பாதுகாப்புப்படை)
22)T.P.S.O.(தமிழ் மக்கள் பாதுகாப்பு அமைப்பு
23)T.E.E.F.(தமிழீழ கழுகுகள் முன்னணி)
24)T.E.C. (தமிழீழக் கொமாண்டோக்கள்)
25.)E.F.(கழுகுப்படை)
26) S.R.S.F (சமூகப் புரட்சிப்படை)
27) தமிழ் மாணவர் பேரவை . இது 1970 ம் ஆண்டு தொடங்கப்பட்டு ஆரம்பத்தில் அரசியல் ரீதியான போராட்டஙகளையே நடாத்தியது. பின்னர் இந்த அமைப்பும் ஈழத்தமிழர் பிரச்சனைக்கு ஆயுதப்போராட்டமே தீர்வு என முடிவெடுத்தனர். இதன் அமைப்பாளர்.சத்தியசீலன்.உரும்பிராய் யாழ்ப்பாணம்.

மேலும் ஆறு இயக்கங்களின் பெயர் எனக்கு நினைவில் இல்லை.. யாருக்காவது நினைவிலிருந்தால் தெரிவியுங்கள்.

இனி தமிழ் மற்றும் தமிழீழம் என்கிற பெயர்களை வைத்துக்கொண்டு இலங்கை மற்றும் இந்திய அரசுகளிற்கு தொண்டு செய்வதற்காகவே அவர்களால் உருவாக்கப்பட்ட அமைப்புக்கள்.
1.E.P.D.P........ ஈ.பி.ஆர்.எல்.எவ்..அமைப்பிலிருந்து பிரிந்து சென்ற டக்லஸ் தேவானந்தாவினை வைத்து புலிகளிற்கு எதிராக அன்றைய இலங்கை அதிபர் பிரேமதாசாவினால் உருவாக்கப்பட்டது.
2. 3 STAR........இந்தியப்படை இலங்கையில் கால் வைத்ததும். இந்தியாவில் அகதி முகாம்களில் தங்கியிருந்தபுலிகள் தவிர்ந்ந மற்றைய இயக்க உறுப்பினர்களை இணைத்து புலிகளிற்கு எதிராக தொடங்கப்பட்ட முதல் ஒட்டுக்குழு.
3.E.N.D.L.F..........இந்திய அதிகாரிகள் .3 ஸ்ரார் ஆயுதக்குழுவினை விரிவாக்கம் செய்து அதனை அரசியல் கட்சியாக்கி பெயர்மாற்றம் செய்து ஒரு போலியான தேர்தலை நடாத்துவதற்காக உருவாக்கப்பட்டதுதான் இந்த அமைப்பு.
4.T.M.V.P. இது இலங்கை இந்திய கூட்டுச்சதியால் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்த கருணாவால் தொடங்கப்பட்டது. இப்பொழுது இதற்கு யார் தலைவர் என்பதில் பிரச்சனை. எனவே இதிலிருந்து இன்னொரு ஒட்டுக்குழு உருவானாலும் உருவாகலாம்.

7 Comments

தமிழ் மதுரம் @ 9:42 AM

இராஜன். ஊர்பெயர் //


நான் நினைக்கின்றேன்....இவரைத்தான் பரந்தன் ராஜன் என்று அழைப்பார்கள்????

http://vimbam.blogspot.com/2008/12/blog-post_31.html


மேலதிக விபரங்களுக்கு இதனைப் பார்க்கவும்??

sathiri @ 1:24 PM

//இராஜன். ஊர்பெயர் //


நான் நினைக்கின்றேன்....இவரைத்தான் பரந்தன் ராஜன் என்று அழைப்பார்கள்????

http://vimbam.blogspot.com/2008/12/blog-post_31.html


மேலதிக விபரங்களுக்கு இதனைப் பார்க்கவும்??//

கமல் பரந்தன் இராஜன் முன்னர் புளொட்டிலிருந்து பிரிந்து தீப்பொறி அமைப்பிலிருந்தார். அப்படி இருந்தவேளை இருந்தவேளை ஈ.என்.டி.எல்.எவ். அமைப்பிற்கு இந்திய றோ அமைப்பு அவரை தலைவராக்கியது.

Anonymous @ 1:44 PM

"தமிழீழ விடுதலை இராணுவம்.(T.E.L.A ) தலைவர் ஒபறோய் தேவன். கோண்டாவில்.யாழ்ப்பாணம்."

இவர் கோண்டாவிலைச் சேர்ந்தவரல்ல. திருநெல்வேலியைச் சேர்ந்தவர். திருநெல்வேலிச் சந்தையில் இருந்து 500 மீற்றர் தொலைவில் பலாலியில் இவரது வீடு இருந்தது.

sathiri @ 2:27 PM

//Anonymous @ 1:44 PM
"தமிழீழ விடுதலை இராணுவம்.(T.E.L.A ) தலைவர் ஒபறோய் தேவன். கோண்டாவில்.யாழ்ப்பாணம்."

இவர் கோண்டாவிலைச் சேர்ந்தவரல்ல. திருநெல்வேலியைச் சேர்ந்தவர். திருநெல்வேலிச் சந்தையில் இருந்து 500 மீற்றர் தொலைவில் பலாலியில் இவரது வீடு இருந்தது.//

அனானி திருநெல்வேலி சந்தையிலிருந்து 500 மீற்றர் தொலைவில் பலாலியா?? அல்லது பலாலி வீதியென்பதை மாறி எழுதிவிட்டீர்களா??

Anonymous @ 2:48 PM

இந்த T.E.L.A அமைப்பில், ஊத்தை காந்தன் என்டு ஒருவர் இருந்தார். அது மட்டும் எனக்கு தெரியும்.

Anonymous @ 2:10 PM

ரெனா (TENA)- தலைவர் அமிர்தலிங்கம் பகீரதன் (ரவி), பண்ணாகம் (தந்தை) அல்லது குரும்பசிட்டி (தாய்), யாழ்ப்பாணம்
மக்கள் தேசிய விடுதலை முன்னணி(P.L.F.T) -தமிழ்மாறன், கரவெட்டி, யாழ்ப்பாணம்

Anonymous @ 12:15 AM

தமிழ் இளைஞர் பேரவை 1973-ஜனவரி 28 சி.புஸ்பராஜா- தலைவர்...பின்னாளில் தமிழீழ விடுதலை இயக்கம்- அனைத்து விடுதலை இயக்கங்களும் இதிலிருந்தே பிரிந்தன..அன்றைய கால கட்டத்திலே அனைத்து இயக்கத் தலைவர்களும் இதன் உறுப்பினர்களே. வாசிக்கவும் -" ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்" -கிடைக்குமிடம் - VITHURAN PUSHPARAJA, 7 RUE RACINE, 95140 GARGES, FRANCE


ஒபரோய் தேவன் சொந்த ஊர்- கேணியடி, கொக்குவில் கிழக்கு

தமிழரின் ஆயுதம் ஏந்திய படைகளை சங்க காலத்தில் இருந்தே "புலிப் படை" என்று அழைக்கப் பட்டது. சோழ மன்னர்களின் கொடியாக புலிச்சின்னம் விளங்கியதே இதன் காரணம். மேலும் துட்ட கைமுனு எல்லாளன் யுத்தத்திலே தமிழ் படை "புலிப் படை" என்று அழைக்கப் பட்டது. ஆதாரம் "மகாவம்சம்--கி.பி-779