Navigation


RSS : Articles / Comments


தேவையா??இது..

8:47 AM, Posted by sathiri, 8 Comments

கையில் காந்தி புத்தகத்துடன் காங்கிரஸ் கட்சிக்காரரனின் உண்ணாவிரதம். தேவையா??இது..



கையில் காந்தி புத்தகத்துடன் பாலமுருகன் என்கிற காங்கிரஸ்காரர் சேலத்தில் ஈழத்தமிழர்களிற்காக உண்ணாவிதரம் இருக்கிறார் என்கிற செய்திறை படித்ததும் சிரிக்கிறதா அழுகிறதா எனறு தோன்றவில்லை.காந்தியென்றால் யாரென்றும் உண்ணா விரதம் என்றால் என்னவென்றும் கேட்கிற காங்கிர்காரர்கள் இன்று இருக்கிறார்கள். அல்லது காந்தி சோனியா காந்தியின் பாட்டன் இத்தாலியில் பிறந்து இந்திய சுததந்திரத்திறகாக போராடியவர் என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவற்கில்லை.இப்படியான காங்கிரஸ்கட்சியிடம் ஒரு காங்கிரஸ் காரர் உண்ணா விரதப்போராட்டம் நடத்துவதில் எவ்வித பிரயேசனமம் கிடையாது. எனவே தமிழ்நாட்டுத் தமிழர்கள் இனியாவது இவ்விதம் மென்முறை போராட்டங்களை கைவிட்டு பிரயோசனமாக ஏதாவது சிந்தித்து செயல்படுங்கள்

8 Comments

? @ 10:25 AM
This comment has been removed by the author.
? @ 10:25 AM
This comment has been removed by a blog administrator.
sathiri @ 11:21 AM

//Blogger நந்தவனத்தான் said...புலிகள் எவ்வளவு பெரியா சுயநலவாதிகள் என்பதினை தெள்ளத்தெளிவாக காட்டிவிட்டீர்.

10:25 AM//

இங்கே புலிகள் எங்கே வந்தார்கள் நந்தவனத்தான்???

Anonymous @ 11:28 AM

observer stop spamming.

? @ 11:34 AM

//இங்கே புலிகள் எங்கே வந்தார்கள் நந்தவனத்தான்??//

நீங்கள் புலிகள் அமைப்பின் (முன்னாள்?)உறுப்பினர் என்ற கருதி எழுதினேன். இல்லையெனில் மன்னிக்க. ஆக நீங்கள் சுயநலவாதி என்பது எனது குற்றசாட்டு. ஈழத்தமிழர் நலனுக்காக சாத்வீக போரட்ட முறைகளை கையிலெடுத்துள்ள எம்மை சாகச் சொல்கின்றீரே? இது சரியா? மென்முறைகளை கை விட்டு தமிழ்நாடும் ஈழம் போல் தமிழனுக்கு சுடுகாடாய் ஆக வேண்டுமா?

sathiri @ 11:50 AM

//நந்தவனத்தான் @ 11:34 AM

//இங்கே புலிகள் எங்கே வந்தார்கள் நந்தவனத்தான்??//

நீங்கள் புலிகள் அமைப்பின் (முன்னாள்?)உறுப்பினர் என்ற கருதி எழுதினேன். இல்லையெனில் மன்னிக்க. ஆக நீங்கள் சுயநலவாதி என்பது எனது குற்றசாட்டு. ஈழத்தமிழர் நலனுக்காக சாத்வீக போரட்ட முறைகளை கையிலெடுத்துள்ள எம்மை சாகச் சொல்கின்றீரே? இது சரியா? மென்முறைகளை கை விட்டு தமிழ்நாடும் ஈழம் போல் தமிழனுக்கு சுடுகாடாய் ஆக வேண்டுமா?//
நந்தவனத்தான் இதுவரை நடந்த சாதவீக போராட்டங்களால் எவ்வித பயனும் இல்லாத பொழுது தொடர்ந்தும் அப்படியான போராட்டங்களால் தமிழகத்து தமிழர்கள் தங்களை ஏன் வருத்திக்கொள்ளவேண்டும்?? மற்றபடி ஈழம்போல தமிழ்நாடும் சுடுகாடாக வேண்டும் என்பதெல்லாம் எனது ஆசையில்லை.. ஆனால் டெல்லியிடம் தமிழன் தன்மானத்தை இழந்து தலைகுனிந்து நிற்கத்தேவையில்லையென்பதே என்னுடைய கருத்து.மற்றும்படி மன்னிப்பெல்லாம் வேண்டாம்.உரிமையுடன் எழுதுங்கள்.நன்றிகள்.

? @ 12:10 PM

//ஆனால் டெல்லியிடம் தமிழன் தன்மானத்தை இழந்து தலைகுனிந்து நிற்கத்தேவையில்லையென்பதே என்னுடைய கருத்து.//

டெல்லியிடம் தன்மானமெல்லாம் நாங்கள் இழக்க வில்லை.
http://tbcd-tbcd.blogspot.com/2009/02/522009.html
படித்து பாருங்கள்.இதுதான் உண்மை. ஏனெனில் டெல்லிகாரர் எப்படியும் எங்களிடம் ஓட்டுக்காக வந்துதான் தீர வேண்டும்.ஆனால் எங்களிடம்தான் ஒரு மித்த கருத்து இல்லை.

ராசீவ் கொலைக்கு பின்பு எல்லாம் மாறிவிட்டது, இங்கு பலர் குழம்பித்தான் போய்விட்டோம்.

அவசரப் பட்டு நாங்கள் ராணுவத்தை அனுப்ப நாங்கள் ராஜீவிடம் கெஞ்சியிருக்க வேண்டாம்,அவரும் அனுப்பியிருக்க வேண்டாம்.ஐயோ, அந்தத் தவறு தமிழனை இன்றும் வேட்டையாடுகிறது.

? @ 12:16 PM

//மற்றும்படி மன்னிப்பெல்லாம் வேண்டாம்.உரிமையுடன் எழுதுங்கள்.நன்றிகள்.//

புரிதலுக்கு நன்றிகள்.