Navigation


RSS : Articles / Comments


வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்றைய காலத்திற்கு பொருத்தமானதா??

1:16 PM, Posted by சாத்திரி, 4 Comments




வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்றைய காலத்திற்கு பொருத்தமானதா?? என்பது பற்றியதான கலந்துரையாடல்.. .ஈழத்தின் விடுதலைப்போராட்ட காலத்தின் ஆரம்பகால போராளியாகவும்..ஈரோஸ் இயக்கதின் மத்தியகுழு உறுப்பினராகவுமிருந்த கி.பி.அரவிந்தன் அவர்களுடனான கலந்துரையாடல்..கலந்து கொண்டபவர்கள்...சாத்திரி மற்றும் சாந்தி ரமேஸ் ஆகியோர்.இங்கு அழுத்தி கேட்கலாம்

தமிழினப் படுகொலைகள் ஆவணப்புத்தகம்

12:21 PM, Posted by சாத்திரி, No Comment

சிறீலங்காலில் 1956ம் ஆண்டிலிருந்து 2009 ம் ஆண்டு மேமாதம் வரையிலான தமிழினத்தின் மீதான சிறீ லங்கா அரசின் படுகொலைகளை ''தமிழனப் படுகொலைகள்' என்ற ஆவணப் புத்தகத்தை மனிதம் அமைப்பு மற்றும் சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியமும் இணைந்து வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.


உடனே இலங்கை அதிபரை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும். இலங்கை அதிபரின் தம்பிகள் இருவரையும், இராணுவ தளபதியையும் அப்படியே செய்ய வேண்டும். இது உலகம் முழுக்க உள்ள தமிழ் மக்களின் குரலாய் தற்போது ஒலித்துக் கொண்டிருக்கிறது.

இந்த சமயத்தில், அவர்களை குற்ற கூண்டில் ஏற்ற தேவையான படுகொலை ஆவணத்தை புத்தக வடிவில் தமிழகத்தை மையமாகக் கொண்டு இயங்கி வரும் மனிதம் - மனித உரிமை அமைப்பு, 6 மொழிகளில் (தமிழ், ஆங்கிலம், பிரன்சு, ஜெர்மன், சிங்களம் மற்றும் இந்தி) கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

வணங்காமண் நிவாரணப் பொருட்களை ஏற்றி வந்த கப்பலை இலங்கை அரசு முதலில் திருப்பி அனுப்பப்பட்ட பிறகு, 2009 அக்டோபர் இறுதி வாரத்தில் வன்னி மக்களிடம் வணங்காமண் நிவாரணப் பொருட்களை கொண்டு சேர்க்க காரணமாய் இருந்தது மனிதம் அமைப்பு என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மனிதம் அமைப்பு, புத்தக வெளியீட்டிற்காக எழுத்துபூர்வமான அனுமதியை முறையாக பெற்றுக்கொண்டு, சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்துடன் (International Association of Tamil Journalists,) தற்போது அப்பணிகளிலும் ஈடுபட்டுள்ளது என மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்துகிறது. (அனுமதி கடிதம் இணைக்கப்பட்டுள்ளது)

இலங்கையில் தமிழர் பகுதிகளில் 1956 முதல் 2009 ஏப்ரல் வரையில் சுமார் 200க்கும் அதிகமான படுகொலைகள் நடந்தறின.2009 ம் ஆண்டு மேமாதம் கடைசிகட்ட போர் குறித்த ஆவணங்கள் தற்போது அதிமுக்கிய பொறுப்பாளர்களால் சேகரிக்கப்பட்டு நிறைவு பெற்று வருகிறது என்பது குறிப்பித்தக்கது.

இப்படுகொலையில் இறந்தவர்கள் யார், யார் - காயமடைந்தவர்களின் பெயர்கள், எந்த ஊரை சேர்நதவர்கள், 14 வயதுக்கு கீழ்உள்ள குழந்தைகள் எத்தனை பேர், படுகொலை நடந்த இடம், தேதி முதலிய ஆவணங்களை கிளிநொச்சியை மையமாகக் கொண்டு இயங்கி வரும் 'வடகிழக்கு மனித உரிமைகள் செயலகம் (North East Secretariat on Human Rights)' தன்னிச்சையாகவும் சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்களுடன் இணைந்தும் செயல்பட்டு நேரிடையாக பார்வையிட்டு இந்த ஆவணங்களை சேகரித்து உள்ளது. அதேபோல், இப்புத்தகத்தில் படுகொலை செய்யப்பட்ட இடத்தின் வரை படங்களும், படுகொலையில் சிக்குண்ட நபர்களின் புகைப்படங்களும் கூடிய மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

படுகொலைகள் இலங்கை இராணுவ கட்டுப்பாட்டு பகுதிகள் மற்றும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளில் நடைபெற்றவைகளும் சேகரிக்கப்பட்டுள்ளன. 2002-ல் அமைதி உடன்படிக்கையின் போது நடைபெற்ற படுகொலைகளும் இதில் அடக்கம்.

புத்தகம் கிட்டத்தட்ட 350க்கும் மேற்பட்ட பக்கங்களில், இப்போது வடகிழக்கு மனித உரிமைகள் செயலகத்தின் முக்கிய பொறுப்பாளர்களால் திருத்தம் செய்யப்பட்டு, மக்களிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பை மனிதம் - மனித உரிமை அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆவணப்புத்தகத்திற்கான முன்னுரையை அமெரிக்காவில் ஈழத்தின் மனித உரிமை விடுதலைக்காக பாடுபட்டுவரும் திருமதி. எலின் சாடார் அவர்கள் கொடுக்க உள்ளார். புத்தகத்தின் அட்டை வடிவமைப்பும், மிகச்சிறந்த ஓவியரான நந்தா கந்தசாமியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மொழி மாற்றம் செய்யும் பணி தொடங்கப்பட்டு, விரைவில் முடிக்கப்பட உள்ளது என்பது மகிழ்ச்சியான செய்தி.

இனப்படுகொலையின் முக்கியமான வரலாற்று ஆவணமாக இப்புத்தகம் விளங்கப் போகிறது.சிறீலங்கா அரசின் போர்க்குற்றங்களிற்கு எதிராக மனிதவுரிமை அமைப்புக்களோ..நாடுகளோ..தனி நபர்களோ சட்டரீதியாக எடுக்கப்படும் நடவடிக்கைகளிற்கு இந்த ஆவணம் மிக உதவியாக இருக்கும். இப்புத்தகங்களை 2009ம் ஆண்டு இறுதிக்குள் கொண்டு வர திட்டமிட்டப்பட்டுள்ளது.

6 மொழிகளில் கொண்டுவரப்பட உள்ள இந்த ஆவணப்புத்தகத்தை அச்சிட்டு வெளி கொண்டுவர இந்திய ரூபாய் பல லட்சம் செலவு ஆகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

ஆனால் அதேசமயம், இப்புத்தகம் விற்பனை நோக்கம் கொண்டது அல்ல. புத்தகம் கொண்டுவர ஆகும் செலவு மற்றும் இதர செலவுகளை மட்டுமே நன்கொடையாக வாங்கப்படும்.

இப்புத்தகத்தில் கிடைக்கும் நன்கொடை தொகையை, ஈழத்தில் போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக செலவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்பது மிக முக்கிய செய்தியாகும்.

தமிழர் வரலாற்றில் பதிப்படப்போகும் இந்த ஆவணப் புத்தகத்தை வெளிகொண்டு வர ஆர்வமுள்ளவர்கள் நிதி ஆதரவு எதிர்பார்க்க்படுகிறது. குறித்த காலத்தில் இப்புத்தகத்தை கொண்டு வர உதவிகாரமாய் உங்கள் ஆதரவு இருக்கும். அத்தோடு, நிதி ஆதரவு கொடுப்போருக்கு, அவர்களுக்கு உரிய புத்தகங்கள் கொடுக்கப்படும்.

இப்புத்தகம் வெளிவர அனைத்து தமிழர்களின் ஒத்துழைப்பும்இ ஆதரவும் வேண்டி நிற்கிறோம். உங்களின் அரிய யோசனைகளையும் எங்கள் முகவரிக்கு தெரியப்படுத்தவும் கேட்டுக் கொள்கிறோம்.


புத்தக நிதி ஆதரவினை கொடுக்க விரும்புவோர், தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

தொடர்பு:

அக்னி சுப்ரமணியம்
செயல் இயக்குநர், மனிதம் - மனித உரிமை அமைப்பு
274- ஜி.சி, அவ்வை சண்முகம் சாலை, இராயப்போட்டை, சென்னை - 600014, தமிழகம்
தொலைப்பேசி எண் : +91-9003027712 - 9443322543 - 9003133661
தொலைநகலி எண் : +91-44-28133968
மின்னஞ்சல் : manitham@gmail.com
இணையம் : www.manitham.net/nesohr

சிறி
சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம் (International Association of Tamil Journalists), France
தொலைப்பேசி : 0033611149470
மின்னஞ்சல் : sri@orupaper.com sathiri@gmail.com

சும்மா பவிடிக்குத்தான்.......

9:15 AM, Posted by சாத்திரி, 12 Comments

பெரிதாய் பார்க்க படத்தில் நீங்கள் விரும்பியவர் மீது அழுத்தவும்..



கிழக்குப் பதிப்பகம்.பா.இராவகன் திருடினாரா??

1:10 PM, Posted by சாத்திரி, 4 Comments

எனது நண்பரான நந்தா கந்தசாமியின் மனக்குமுறல்.

என்னுடைய் ஓவியத்தை இணைய தளத்தில் இருந்து திருடி மழை ருசி என்னும் புத்தகத்தில் கவர் டிசைன் ஆக கிழக்கு பதிப்பகம் பாவித்திருந்தார்கள் . அதில் எனது பெயர் கூட குறிப்பிட படவில்லை. பல இணைய என் முகம் கூட தெரியாத நண்பர்கள் பலர் கிழக்கு பதிபக்தினருடன் இது சம்பந்தமாக இணைய தளங்களில் எழுதியும் அம்பலப் படுத்தி இருந்தனர்
இதன் பின்பு கிழக்கு பதிபகத்தை சேர்ந்த
சேசாத்ரி என்னுடன் தொடர்புக்கொண்டு நடந்த தவறுகளுக்கு ஒரு மன்னிப்பு கடிதம் எழுதி இருந்தார் அத்துடன் நான் கேட்டு கொண்டது க்கு இணங்க கைருப்பிலுள்ள எல்லா புத்தகங்களுக்கும் எனது பெயர் அச்சிடபட்டு வெளிடுவதாக சொன்னார்கள் அதன் பிற்பாடு
மழை ருசி இரண்டு புத்தகங்களில் எனது பெயர் வெட்டி ஒட்டி அனுபி ருந்தனர் அத்துடன் அவர்களது வெளிஈடுலிருந்து நான்கு புத்தகங்கள் அனுப்பி இருந்தார்கள் அனால் இன்று தட்செயலக இணைய தளத்தை பார்த்தபோது என்னக்கு காம்பன்சேஷன் தொகை கொடுக்கபட்டதாக ... Lire la suite
பா .ராகவன் எழுதி உள்ளார். இது மிகவும் கேவலமானதும் அப்பட்டமான பொய்யுமாகும்
அவரது இணையதலத்தில் நடந்த தவறுகளுக்கு மன்னிப்புகேட்க தவிர்க்கவில்லை என்ன சொல்லி கொடுப்பனவு கொட்டுக்கபட்டது என அபாண்டத்தை சுமத்துகிறார்

திருகுதாளத் திருமாவும் திருந்தாத சில புலம்பெயர் தமிழரும்

1:43 PM, Posted by சாத்திரி, 11 Comments


இந்த வார ஒரு பேப்பரிற்காக

சீறினால் சிறுத்தை..வாய் திறந்தால் வரிப்புலி..பார்த்தால் பாயும் புலி..கர்ச்சித்தால் கரும்புலி..செயலில் வெறும் பழப்புளியான..எங்கள் அண்ணன்திருமா அவர்கள் வன்னியில் அடைபட்டுக்கிடக்கும் மூன்று இலட்சம் தமிழர்களையும் இரட்சிப்பதற்காக ..இதோ இரண்டாவது தடைவையாக ஜரோப்பவிற்கும்.முதற் தடைவையாக இங்கிலாந்திற்கும் வருகிறார்..பராக் பராக்..பராக்..
பிராக்கு பாக்கிற தமிழரெல்லாரும் திரண்டு வாருங்கள்.. டம..டம..டம..டம...டம்.டம்..டம்...


நான் கட்டியம் கூறிட்டன்..கட்டுரையை படிக்கிற பலர் என்னைக் கட்டிவைச்சு இழவு கூறத்தயாராவார்கள் என்பதும் எனக்கு தெரியும் ஆனாலும்..சொல்ல வந்த விடயத்தை சொல்லிமுடிக்கிறேன்... இலண்டனில் புங்குடுதீவு நலன்புரிச்சங்கம்.இந்த 26ந் திகதி ஈழத்தில் யுத்தத்தால் பெற்றோரை இழந்த குழந்தைகளை பராமரிப்பதற்காக காற்றுவழிக்கிராமம் என்கிற ஒரு நிகழ்வினை செய்யவிருக்கிறார்கள்..இன்றைய காலகட்டத்தில் மிக மிக தேவையானதும் அவசியமானதுமான ஒரு நிகழ்வு. அதனை மனதார வரவேற்கிறேன்..ஆனால் இந்த நிகழ்விற்கு திருமாவளவனை சிறப்புரையாற்ற அழைத்திருப்பதுதான் இழவு வீட்டில் திருமண மந்திரம் ஓதுவதைப்போல இருக்கின்றது..

ஈழத்தமிழரின் இன்றைய இன்னல்கள் இழப்புக்கள் அனைத்திற்கும் காரணமான இந்திய காங்கிரஸ் கட்சியுடன் கூட்டுச்சேர்ந்து ஒரேயொரு கதிரைக்காக ஒட்டுமொத்த ஈழத்தமிழழர்களும் அவர் மீது கட்டிவைத்திருந்த நம்பிக்கைகளைத் தகர்த்தவர்தான் திருமா..பல்லாயிரம் தமிழரின் வாழ்வை அழித்த சோனியாவை சென்னைத் தீவுத்திடல் கூட்டத்து மேடையில் வைத்து சோனியா அம்மையாரை வாழ்க என்று கையுயர்த்தி கோசம் போட்டு தன் தமிழீழ மக்கள் மீது தான் கொண்டுள்ள அன்பின் வேடத்தை கலைத்துவிட்டவர்...சரி அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்று கவுண்டமணி பாணியில் சொல்லிவிட்டாலும்..வென்று கொடிபிடித்து கோட்டைக்குள் போனபின்னர் இன்று மானிலத்திலும் மத்தியிலும் ஆழும் கட்சி வரிசையில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார்..அதற்கு பிறகாவது ஈழத்தில் தினம் தினம் அல்லல் பட்டும் செத்து மடியும் தமிழரிற்காக உருப்படியாக ஏதாவது செய்தாரா என்றால் அதுவும் இல்லை ..

எங்காவது ஒரு மேடையில் பிரபாகரன் திரும்ப வருவான் ..5 ம்கட்ட ஈழப்போர் வெடிக்கும் ..தமிழீழம் மலரும்..அது மலர்ந்ததும் அதைப் பிடுங்கி நாங்கள் மாலையாபோட்டுக்கலாம் என்று.. வெறும் வெட்டிப்பேச்சுக்கள் மட்டுமல்ல.. அந்த மேடையில் வைத்துத்தான் அவர் சோனியாவை நோக்கி.."எங்கள் அன்னை ஈழத்தமிழரிற்காவும் உதவுங்கள் என்று மன்றாட்டமாய் வேண்டிக்கொள்கிறேன்" என்று ஏதோ மாதா கோயிலில் வாசலில் முட்டுக்காலில் மெழுகுதிரியுடன் நிற்பவனின் வேண்டுதலைப்போல ஒரு வேண்டுதலையும் வைப்பார்..கலைஞராவது ஈழத்தமிழரை காப்பாற்ற அடிக்கடி தந்தியடிப்பார் .. இவரால் ஒரு கடிதம் கூடவா எழுதமுடியாது..

இப்படித்தான் கடந்த மாதம் ஜெர்மனியில் றைனை என்கிற நகரில் நடந்த ஈழத்தமிழர் வாழ்வுரிமை மகாநாட்டில் வைத்து. கேக்கிறதற்கு கேனையர்கள் புலம்பெயர் தமிழர்கள் இருக்கிறார்கள் என்கிற துணிவில் இந்தியாவையும்..அவர் சார்ந்திருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எதிராகப் பேசியது மட்டுமல்ல 5ம் கட்ட ஈழப்போர் வெடிக்கும் என்கிற வீராவேசப் பேச்சுக்களை வீசியெறிந்து விட்டுப்போனார். ஆனால் இந்தியா விமான நிலையத்தில் இறங்கியதுமே மறுபடியும் அதே அன்னையிடம் மறுபடியும் மன்றாட்டம்..இவைகளையெல்லாம் விட்டு விடுவோம்..புலம்பெயர் தமிழரெல்லோரும் சேர்ந்து தங்கள் உறவுகளிற்காக மருந்தும் உணவுப்பொருட்களும் அனுப்பிய வணங்கா மண் கப்பலை இலங்கையரசு தடுத்து திருப்பியனுப்பியிருந்து..அப்
போது இலங்கையரசை கண்டித்து வீராவேசமாக கண்டன அறிக்கைகளை விட்ட திருமா அவர்கள்..

அதே வணங்காமண் கப்பல் இந்தியக்கடல் எல்லையில் நின்றபடி அந்த உணவுப்பொருட்களை இந்தியாவிலுள்ள ஈழத்து அகதிகளிற்காவது கொடுக்க உதவுங்கள் என்று ஒரு வேண்டு கோளை வைத்தனர்..அந்த வேண்டு கோள் திருமாவிடமும் வைக்கப்பட்டது..இது இரண்டு அரசுகள் சம்பத்தப்பட்ட விடயம் தன்னால் எதுவுமே செய்யமுடியாது எனகழண்டுகொண்டார்.பின்னர் அந்த விடயத்தை மனிதம் என்கிற மனிதவுரிமை அமைப்பு பொறுப்பெடுத்து பல சிரமங்களிற்கு மத்தியில் மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்புவதற்கான வேலைகளை செய்து அவை நிறைவடைந்து வணங்கா மண் கப்பல் இலங்கைக்கு திரும்ப செல்லப்போகின்றதென்பது உறுதியானதும்.. அந்தக் கப்பலை அனுப்பவதற்காக பின்நின்று உழைத்த சிலரிடம் தன்னுடைய ஆட்களை அனுப்பி ஆவணங்களை கைப்பற்றி அந்தக்கப்பல் தன்னுடைய முயற்சியினால்தான் இலங்கைக்கு அனுப்பப்பட்டது என்கிற தோற்றப்பாட்டை உருவாக்கி அறிக்கைவிட்டு கீழ்த்தரமான அரசியலை செய்ய நினைத்தவர் தான் இந்த ஆயுதமேந்தாத காகிதப்புலி.. ஆனால் மனிதம் அமைப்பினரின் கட்டுக்கோப்பான உறுதியான நடவடிக்கைளினால் இவரது தகிடுத்தனம் பலிக்கவில்லை...இன்னமும் இவர்போன்ற அரசியல் இலாபக்கணக்கு மட்டுமே போடத்தெரிந்த இந்திய இறக்குமதிகளை நம்பியா எமது வாழ்வாதாரப் போராட்டத்தை நடாத்தப் போகின்றோம்..இவர்களின் வீராவேப் பேச்சுக்களிற்கு உணர்ச்சிவசப்பட்டு வெறும் விசிலடிச்சான் குஞ்சுகளாகவா புலம்பெயர் இளையசமூகம் இருக்கப் போகின்றது..புலம்பெயர் இளைய சமூகமே உங்களிற்குள் உணர்வில்லையா?? உங்கள் உறவுகளிற்கு நீங்கள் உதவுவது உங்கள் உரிமையில்லையா??இவர் போன்ற காவடிகள் இந்தியாவிருந்,து வந்து சொல்லித்தான் நாம் எமது உறவுகளிற்கு உதவப்போகிறோமா. எனவே இவர்களைப்போன்றவர்கள் இன்னமும் தேவையா?? முடிவெடுங்கள்..

அய்..அய்ய்...அய்ய்ய்......

11:21 AM, Posted by சாத்திரி, No Comment

video

தமிழகமும் ஈழத்தமிழரும் மனிதம் அமைப்பின் இயக்குனர் அக்கினி சுப்பிரமணியத்துடனான கலந்துரையாடல்.

1:01 PM, Posted by சாத்திரி, One Comment



மனிதம் ! மனிதம் என்கிற அமைப்பு. இது மனிதவுரிமை மக்கள் நலன் மற்றும்சுற்றுப்புறச்சூழல் ஆகியவற்றுக்குஆதரவாகக் குரல் கொடுத்தும் அதற்கானநடவடிக்கைகளை எடுத்துவரும் ஒர்அமைப்பு. அந்த வகையில்நீண்டகாலமாக ஈழத்தமிழரின்உரிமைகளுக்கு ஆதரவாகமட்டுமல்லபல உதவிகளையும் செய்துவருகின்றனர். அண்மையில் புலம்பெயர் தேசத்தமிழ் மக்களால் தமதுஉறவுகளுக்காக உதவும் வகையில் அனுப்பப்பட்ட வணங்காமண் கப்பலைஇலங்கையரசு தடுத்து திருப்பியனுப்பியதும், அதனைப் பல சிரமங்களுக்குமத்தியில் மீண்டும் ஈழத்தமிழரிற்குப் போய்ச் சேரும் வழிவகைகளைச் செய்துமுடித்துள்ளனர் . அந்த அமைப்பின் அமைப்பாளரும் நிர்வாக இயக்குனருமானதிரு.அக்கினி சுப்பிரமணியத்துடனான ஒரு கலந்துரையாடல்.

இந்நிகழ்ச்சியை தரவிறக்கம் செய்து கேட்க இங்கே அழுத்துங்கள்.