Navigation


RSS : Articles / Comments


12:17 PM, Posted by sathiri, No Comment

ஈழப்போராட்டத்தில் எனது (பொய்)சாட்சியம் பாகம் 8


இந்தவாரத்தொடர் நிர்மலா பற்றியது புஸ்பராசாவின் புத்தகம் பற்றிய விமர்சனத்தில் இருந்து சிறிது விலகிசென்றாலும் இன்றைய காலத்தின் மற்றும் இன்றைய இளம் புலம் பெயர் சந்ததியினரிற்கு சில விடயங்களையும் தெழிவு படும்தும் நோக்கத்திற்காகவும் எழுதப்படுகிறது ராஜினியின் சகோதரி நிர்மலா இவரது கணவர்பெயர் நித்தியானந்தன் நிர்மலா நித்தியானந்தன் என்கிற பெயர் 82 களில் இலங்கையில் பத்திரிகைகளில் பிரபல்யமாக அடிபட்ட பெயர் போராளிகளிற்கு உதவினார்கள் என்பதாலும் ஆயுதபோராட்டத்திற்கு ஆதரவளித்தவர்கள் என்கிற காரணத்ததால் இலங்கையரசால் சிறையிலடைக்கப்பட்டு 83 யூலை படுகொலைகளில் வெலிக்கடை சிறையில் இருந்து உயிர் தப்பி பின்னர் அங்கு உயிர் தப்பியவர்கள் மட்டகளப்பு சிறைக்கு மாற்றபட்ட பொழுது இவர்களையும் மட்களப்பு சிறைக்கு மாற்றினார்கள்

அங்கு 23ந்திகதி செப்ரெம்பர் மாதம் 83 ஆண்டு உள்ளிருந்த பல இயக்கங்களையும் சார்ந்தவர்களால் மட்டகளப்பு சிறை உடைக்கபட்டு பலர் தப்பியோடினார்கள் அதில் நித்தியானந்தனும் தப்பிக்கொள்ள இந்நத சிறையுடைப்பு சிறையிலிருந்த ஆண்கள் தாங்கள் மட்டும் தப்பியோடும் நோக்கில் உடைக்கபட்டதால் சிறையின் பெண்கள் பகுதியிலிருந்த பெண்களையோ நிர்மலாவையோ அவர்களால் மீட்க முடியவில்லை தப்பியோடி வெளியில் வந்தவர்களிற்கு அந்த நேரம் புளொட் மற்றும் ஈபிஆர்எல் எவ் அமைப்பினர் உதவி செய்து அவர்களை இந்தியா தமிழ் நாட்டிற்கு தப்பிசெல்ல உதவினார்கள். பின்னர் தாங்கள் தான் அந்த சிறையை உடைத்தது என புளொட்டும் ஈபி யும் பின்னர் மாறி மாறி உரிமை கோரி கொண்டனர்.

இது இப்படியிருக்க 84ம் புலிகள் மட்டகளப்பு சிறையை உடைத்து நிர்மலா மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் ஊடாக தமிழ் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரிற்கு புலிகள் அமைப்பினரே உதவிகள் செய்து புலிகள் அமைப்பின் ஆதரவு ஏடான விடுதலைப்புலிகள் என்கிற பத்திரிகையை நிருவகிக்கும் பொறுப்பும் இவரது கணவன் நித்தியானந்தத்துடன் இணைத்து வழங்கப்பட்டது. இதே காலகட்டத்தில் புலிகள் அமைப்பு பெண்கள் படைப்பிரிவை கட்டியமைக்கும் பணியை ஆரம்பித்திருந்தனர் அப்போது புலிகள் இயக்கத்தில் அதிகளவு பெண்கள் இணைந்திருக்காத காலகட்டம் எனவே புதிதாய் போராளிகளை இணைக்கவும் ஏற்கனவே இணைந்த போராளிகளிற்கு அரசியல் மற்றும் போராட்டம் பற்றிய தெளிவூட்டல்கள் என்பனவற்றை வழங்க புலிகளின் தலைமை முடிவுசெய்து

அதற்கான பொறுப்பை திருமதி அடேல் பாலசிங்கத்திடம் அந்த பொறுப்பு கையளிக்கப்பட்டது.இது நிர்மலாவிற்கு வெறுப்பை உண்டு பண்ணியது.தானே பெண்ணியவாதியெனவும் படித்தஇலக்கியவாதி ஈழப்பெண்களில் போராட்டத்திறகாக சிறைசென்றபெண் நானிருக்க எப்படி அடேல் பாலசிங்கத்திற்கு அந்த பொறுப்பை கொடுக்கலாமென்று இயக்கத்தினுள் ஒரு குழப்பத்தை உண்டுபண்ணி இயக்கத்தை விமர்சிக்க தொடங்கினார். இவரை பற்றி அடேல் பாலசிங்கம் அவர்கள் எழுதிய சுதந்திர வேட்கை என்கிற நூலில் பக்கம்115ல் இவ்வாறு கூறுகிறார் " விடுதலைப்புலிகள் இயக்கத்தில் நிர்மலாவை இணைப்பதற்கு பிரபாகரன் அவர்கள் ஆர்வமாக இருக்கவில்லை

பெண்ணிய எண்ணக்கரு தொடர்பான தெளிவான முரண்பாடு இருவரது எண்ணப்போக்கிலும் காணப்பட்டது.பிரபாரகரனுடைய சித்தார்ந்த பார்வையில் நிர்மலாவினது பெண்விடுதலைப்பார்வை ஒர் அச்சடித்த மேற்குல பெண்விடுதலைப் பார்வையாக இருந்ததேயன்றி உண்மையாக விடுதலை வேண்டி நின்ற தமிழ்பெணகளை இனம்கண்டு தழுவக்கூடிய பெண்விடுதலை இலட்சியமாக இருக்கவில்லை. எனவே பெண்கள் பிரிவை கட்டியெழுப்பும் எந்தவொரு பொறுப்பையும் நிர்மலாவிடம் கொடுக்கும் திட்டம் பிரபாகரனிடம் இருக்கவில்லை" . இப்படி எழுதியிருக்கிறார்.அதைவிட புலிகள் அமைப்பில் ஆயுதம் தாங்கிய முதல் பெண் போராளி என்று பார்த்தாலும் கூட அது திருமதி அடேல் பாலசிங்கம் அவர்களே.

தனக்கு பதவிகள் பொறுப்புக்கள் தராததால் நிர்மலா வெறுப்படைந்து புலிகள் இயக்கத்தை விமர்சிக்க தொடங்கினார் அதே நேரம் புலிகள் அமைப்பின் ஆரம்பகால உறுப்பினரும் புலிகளின் தலைமைக்கு மிகநெருங்கியவராகவும் இருந்த வடக்கு புன்னாலைகட்டுவனைச்சேர்ந்த சின்னையா சிவகுமார் (ராகவன்) என்பரிற்கும் இவரிற்கும் காதல் பூத்து கனிந்தது இதனை அறிந்த நித்தியானந்தன் புலிகளின் தொடர்புகள் மற்றும் அவர் நடாத்திய பத்திரிகையின் பொறுப்புகளை விட்டு வெளியேறி வெளிநாடொன்றிக்கு சென்றுவிட நிர்மலா ராகவனைப் பயன் படுத்தி புலிகளின் தலைமைக்கு எதிராகவும் அதே நேரம் புலிகள் அமைப்பை உடைத்து அதனை கைப்பற்றும் நோக்குடன் காய்கள் பழங்கள் எல்லாத்தையும் நகர்த்திப்பார்த்தார்.

ஊகூம் ஒண்றும் நடக்கவில்லை அதுமட்டுமல்ல ஒரு விடுதலைப்போராட்டத்தை கட்டுக்கோப்புடன் உறுதியாக கொண்டு நடாத்தகூடிய வல்லமை ராகவனிடம் இல்லையென்பது ராகவனுக்கே தெரியும் அதுமட்டுமல்ல நிர்மலாவின் பேச்சைகேட்டு யாரும் அவரை நம்பி பின்னால் போகிற நிலைமையிலும் இருக்கவில்லையென்பதும் உண்மையே . எனவே இவர்கள் இருவரும் இயக்கத்திலிருந்து வெளியேறி அவர்கள் விரும்பிய படி விரும்பிய இடத்திற்கு சென்று அவர்களின் சொந்த வாழ்க்கை தொடர இயக்கத்தின் தலைமை வழியனுப்பி வைத்தது.

இவர்கள் இருவரும் புலத்து பெண்ணியம் பேசும் ராயேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் உதவியுடன் இங்கிலாந்து வந்து குடியேறி எங்கிருந்து என்ன செய்கிறார்கள் என்றே பல ஆண்டுகள் சத்தமில்லாமல் இருந்தவர்கள் தற்சமயம் புலிகள் இலங்கை அரசுடன் செய்து கொண்ட போர் நிறுத்த உடன்படிக்கையின்பின்னர் பழைய குருடியின் வீட்டுகதவை தட்டதொடங்கியிருந்தாலும் தமிழர்கள் யாரும் இவர்கள் கதை கேட்கும் குருடர்களாய் இல்லை என்பது மட்டுமல்ல ராஜினியுடன் அவர் உயிருடன் இருந்த காலத்திலேயே தொடர்புகள் ஏதும் இல்லாதிருந்த திரணகமவும் மற்றும் மனைவின் நடத்தைகளால் அவரைவிட்டு பிரிந்த நித்தியானந்தனும் இவர்களுடன் சேர்ந்து புலியெதிர்ப்பு கதைப்பது வேடிக்கை.

கூடவே சேர்ந்து வேறு பலபுலத்து புலியெதிர்பு காரர்களையும் நிர்மலா ஒண்றிணைத்து மனிதவுரிமைவாதிகள் என்கிற பெயரில் புலிக்கு புல்லு தீத்த முடியாவிட்டாலும் பரவாயில்லை புண்ணாக்காவது தீத்தியே தீருவது என்று புலம்பி திரிகிறார்கள். மீண்டும் புஸ்பராசாவின் புத்தகத்தை தட்டுவோம்.அதில் பத்மநாபாவை மட்டுமல்ல இந்திய படை காலத்தில் வடகிழக்கு மாகாண முதலமைச்சராய் இருந்த வரதராயபெருமாள்பற்றி பக்கம் 326 ல் இப்படி சொல்கிறார் வடகிழக்கிற்கு முதலமைச்சராக வரும் எல்லா தகுதியும் கொண்ட ஒரவரையே பத்மநாபா முதலமைச்சராக்கினார்்

இப்போது இருக்கும் அத்தனை அரசியல் வாதிகளிற்கும் சவால்விட கூடிய கூர்மையான அறிவுத்திறண் கொண்டஒரு இளம் அரசியல் வாதியாக அவரைப்பார்த்தேன் எங்களது மக்களிற்காக ஜெனரல் கல்கத்தடன் அவர் எவ்வளவோ வாதாடினார். சந்தேகம் கொள்பவர்கள் ஒரு சுதந்திரமான சூழலில் அவரை அரசியல் களத்தில் விட்டுப்பாருங்கள் என்று சவால் விடுகிறேன் என்று சவாடல் விட்டு அவர் சார்ந்திருந்த ஈ பி அர் எல் எவ் இயக்கத்தை பற்றி அவர் வைக்கின்ற புழுகு பூக்களை வைக்க எமது காதின் அளவு போதாது. அதேநேரம் ஒரு கணிசமான தொகை உறுப்பினர்களையும் பலத்தையும் கொண்டிருந்த அதே நேரம் எண்பதுகளின் முக்கியமான 5 இயக்கங்களின் வரிசையில் இருந்த ஈபிஆர் எல் எவ் இயக்கத்தை பற்றி ஆகா ஓகொ என்று புகழ்ந்தவரால்

அந்த இயக்கம் இயங்கிய காலத்தில் இலங்கை அரசபடைகளிற்கெதிராக உருப்படியாக செய்த ஒரு தாக்குதலை கூட அவரது புத்கத்தில் விபரிக்க முடியவில்லை காரணம் அப்படி எந்த தாக்குதல்களுமே அந்த இயக்கத்தால் செய்யப்பட்டிருக்கவில்லை.ஆனாலும் ஈபிஆர்எல்எவ் இயக்கம் என்றதும் ஈழத்துமக்கள் அனைவரினதும் ஞாபகத்திற்கு வருவது கரைநகர் கடற்படைத்தளமே. காரணம் அவர்கள் அந்த தளத்தை தாக்கி அது தோல்வியில் முடிந்ததே காரணம் . யுத்தம் என்பதில் வெற்றிதோல்விகள் சாதாரணமானவைதான் . புலிகள் இயக்கம் கூட தங்கள் தோல்விகளைத்தான் தங்கள் அடுத்த வெற்றியின் பாடமாக்கினார்கள்.

ஆகவே ஈபி யினர் காரை நகர் தளத்தை தாக்கியதை நான் விமர்சிக்கவில்லை அந்த தாக்குதலை நெறிப்படுத்திய விதம் தான் விமர்சனத்திற்கும் நகைப்பிற்கும் வழி கோலியது.அந்த தாக்குதல் நடந்து முடிந்த பின்னர் அந்த காலகட்டத்தில் இளையவர்கள் நக்கலாக ஒரு பாடலை பாடுவார்கள் காத்தடிக்குது கலகலக்குது காரை நகரை ஈபி அடிக்குது சோத்து பாசலுக்கு புளொட் அடிக்கிது தூரத்திலை ஈரோஸ் அடிக்கிது விட்டு விட்டு ரெலோ அடிக்கிது இடைவிடாமல் புலி அடிக்கிது என்று பாடுவது ஞாபகத்தில் இருக்கிறது. இந்த தாக்குதலுக்கு அனேகமான தயாரிப்பு வேலைகள் மானிப்பாயிலேயே நடந்தேறின. எனக்கு ஈபிஆர்எல்எவ்வின் அரசியல் பிரிவில் பொறுப்பாய் இருந்த மானிப்பாயை சேர்ந்தவர்களான் டேவிற்சன் மற்றும் ஜோர்ச் போன்றவர்கள் பாடசாலைகாலத்திலேயே நன்கு பழக்கமானவர்களாக் இருந்ததனால் அவர்களின் காரை நகர் முகாம் தாக்குதல் பற்றிய விபரங்கள் மற்றும் தயாரிப்புவெலைகளையும் பார்வையிட கூடிய சந்தர்ப்பங்களும் கிடைத்தது எனவே காரை நகர் அடித்த கதையுடன் அடுத்த பாகத்தில் சந்திப்போம்

விசா

1:37 PM, Posted by sathiri, 3 Comments

எனக்கு வயது 30 திருமணமாகிவிட்டது மனைவிக்கு வயது 25 ஒரு மகன் இருக்கிறான் வயது 2 மனைவி இப்போ அடுத்த தரம் கரப்பமாகி 8மாத கர்ப்பிணி பிரான்ஸ் நாட்டிற்கு வந்து 10 வருசமாகிது பாரீசிலை இருக்கிறன் எனக்கோ எனது மனைவிக்கோ பிரான்ஸ் நாட்டு வதிவிட அனுமதி பத்திரம் இன்னமும் கிடைக்க வில்லை.

இனி எனது மிச்ச சோகத்திற்கு போகலாம் வாருங்கள் பாரிசிலை ஒரு உணவு விடுதியிலை வேலை செய்யிறன். நண்பன் ஒருதனின்ரை விசாவிலை தான் அது முதலாளிக்கும் தெரியும். அங்கை எட்டு வருசத்திற்கு முதல் பாசையும் தெரியாமல் கோப்பை கழுவிற வேலைக்கு போய் சேந்து பிறகு படிப்படியா வேலையை பிடிச்சு இண்டைக்கு நான் தான் அங்கை பிரதான சமையல் காரன்.

முதலாளியும் நல்லவன் வயசான கிழவன் எங்களிட்டை எப்பிடி அன்பா வேலை வாங்கிறதெண்டு அவனுக்குதெரியும் இப்ப அவனுக்கு ஏலாது வயசு போட்டு தெண்டு கடையை ஒருத்தனுக்கு வித்து போட்டான். வித்து போட்டு போகேக்கைநல்லா மாடு மாதிரி வேலை செய்வன் எண்டு என்னை பற்றி நல்லா சொல்லி போட்டு என்ரை விசா பிரச்சனையையும் சொல்லி பேட்டுதான் போனவன். புதுசா வாங்கினவனுக்கு ஒரு 40 வயது வரும் ஆனால் ஆள் சரியான துன்பம் பிடிச்சவன். தான் முதலாழி எண்ட கொழுப்பு மனிசரை மதிக்க தெரியாத ஒருத்தன்.

ஒரு நாழைக்கு ஒரு பெட்டையோடை வந்து விடிய விடிய தண்ணியடிச்சு கொண்டிருப்பான். சரி சரி அது அவனின்ரை சொந்த பிரச்சனை என்ரை பிரச்சனைக்கு வருவம். நான் இருக்கிற இடத்திலை இருந்து வேலைக்கு போக ஒரு அரை மணித்தியாலம் பாதாள தொடர் வண்டியிலை (சுரங்க ரெயின்)போக வேணும் அங்காலை ஒரு 5 நிமிச நடை .வேலையிடம் உந்த சுரங்க வண்டி நிலையத்திலை இருந்து வெளியிலை போகேக்கைஆண் பெண்ணெண்டு சில வயசான சிலபேர் மலிஞ்ச வைனைவாங்கி குடிச்சு கொண்டு போற வாற ஆக்களிட்டை காசு கேட்டு கொண்டும் இருப்பினம். வந்த புதிசிலை அவையளை பாக்கேக்கை எனக்கு அதிசயமா தான் இருந்தது இஞ்சையும் பிச்சைகாரரா எண்டு. பிறகு பழகிட்டிதுசில நேரத்திலை நானும் சில்லறையளை போட்டிட்டு போறனான்.சில நேரங்களிலை அதிலை வழைமையா இருந்த ஆக்கள் காணாமல் போடுவினம் வேறை புது ஆக்கள்வருவினம்.

காணாமல் போனவை வேறை இடம் போனவையா அல்லது இறந்திட்டினமா எண்டெல்லாம் எண்டெல்லாம் எனக்கு கவலை இல்லை இப்ப ஒரு கிழைமையா புதிசா ஒருத்தன் என்ரை வயதிருக்கும் வயது ஒரு 35க்கை தான் இருக்கும் கையிலை ஒரு பழைய இரண்டு கம்பியறுந்த கித்தார் பக்கத்திலை ஒருநாய்.அந்த கித்தாரை தட்டி தட்டி தனக்கு தெரிந்த ஆங்கில பிரெஞ்சு பாட்டுகளை பாடுவான் எண்டிறதை விட வசனமா சொல்லுவான். அவனுக்கு முன்னாலை உள்ள தொப்பியிலை சில சனம் காசு போடும்.

சேந்த காசுக்கு வழமை போல வைனும் வாங்கி தனக்கும் நாய்க்கும் ஏதாவது சாப்பாடு வாங்கி சாப்பிட்டிட்டு நான் இரவு வேவை முடிஞ்சு வரேக்கை பக்கத்திலை ஒரு கடுதாசி மட்டையை போட்டிட்டு அதிலை அவனும் அவன்ரை தலை மாட்டிலை அவனின்ரை நாயும் நல்ல நித்திரை கொண்டு கொணடிருப்பினம் எனக்கு அவனை பாத்தாலே எரிச்சலா வரும் இளம் வயசு கைகால் எல்லாம் ஒழுங்கா இருக்கு ஏன் என்னை மாதிரி உழைச்சு சாப்பிடலாம்தானே அதை விட்டிட்டு பிச்சையெடுத்து கொண்டு இவனுக்கு ஒரு சதம் கூட போட கூடாது எண்டு மனசுக்கை நினைச்சு கொண்டு வேலைக்கு போவன்.

திரும்பவும் ஆற்ரையோ கதையை சொல்லி கொண்டு போறன் என்ரை கதைக்கு வருவம். நேற்ரைக்கு வேலைக்கு வெளிக்கிட்டு அவசரமா தொடர் வண்டியை பிடிப்பம் எண்டு ஒடினன் வண்டி வரேல்லை யரோ தண்டவாளத்திலை குதிச்சு தற்கொலை செய்திட்டாங்களாம் அதாலை வண்டி வரதாமதமாகும் எண்டு அறிவிச்சாங்கள்.

சே நான் வேலைக்கு போற நேரத்திலையா எவனாவது தற்கொலை செய்ய வேணுமெண்டு மனதுக்குள் திட்டியவாறே வேலையிடத்திற்கு எனது கைத்தொலை பேசியில் நிலைமையை அறிவித்து விட்டு அரை மணி நேரம் பிந்தி வந்த வண்டியில் வேலையிடத்திற்கு போனால் அங்கை அண்டைக்கெண்டு முதலாளி முன்னுக்கு நிண்டான். நான் அவனிடம் போய் வணக்கம் எண்டன் அதுக்கு அவன் என்னை பாத்து நக்கலா வாங்கோ முதலாளி வாங்கோ வணக்கம் எண்டான். எனக்கு கோவம் பத்தி கொண்டு வந்தது எண்டாலும் அடக்கி கொண்டு பிரச்சனையை விளங்க படுத்த முயல சரி சரி போய் வேலையை பார் எண்டு ஏதோ நாயை துரத்திற மாதிரி சொன்னான்.

நானும் பேசாமல் போய் வேலையை தொடங்கினன். என்ன செய்ய நாய் வேடம் போட்டா குலைச்சு தானே ஆகவேணும்.இரவு 12 மணியாகி கொண்டிருந்தது எனது வேலையை முடித்து விட்டு புறப்பட தயாரான போது வழமை போல ஒரு பெண்ணுடன் தண்ணியடிச்சு கொண்டிருந்த முதலாளி காரன் என்னை பாத்து சொன்னான் பொறு நாங்கள் சாப்பிட வேணும் எண்டான் . நான் சொன்னன் இன்னும் அரை மணி நேரத்திலை கடைசி றெயின் கெதியா சாப்பிட்டா நல்லது எண்டு சொல்ல அவனோ தனது நண்பியிடம் பாத்தாயா வேலைக்கு வந்ததே பிந்தி அதிலை அய்யா சொல்லேக்கை நாங்கள் சாப்பிட வேணுமாம் என்றான். அவனின்ரை நண்பியோஒருபடி மேலே போய் எதுக்கு அவருக்கு கரைச்சல் குடுக்கிறாய் பேசாமல் அவரை வீட்டிலை இருக்க விட்டிட்டு மாமதா மாதம் சமபளத்தை அனுப்பி விடலாமே

இப்ப என்ன றெயின் இல்லாட்டி நடந்து போ காலிருக்குதானே எண்ட அங்கு நின்ற மற்றைய வேலை காரர் எல்லாரும் சிரிக்க எனக்குஅவமானமா போட்டுது. முதலாளி ஏதும் சொன்னாலும் பறவாயில்லை சம்பளம் தாறவன் எண்டு பொறுக்கலாம் ஆனால் ஆனால் அவனின்ரை ஒட்டுண்ணியெல்லாம் என்னை நக்கலடிக்கிது எண்டு எனக்கு ரோசம் பொங்கி கொண்டு வர ஒருநிமிசம் என்ரை நிலைலைமை எல்லாத்தையும் மறந்துபோய் கோவத்திலை நீ விரும்பினா போட்டு சாப்பிடு எண்டு முதலாளியிட்டை சொல்லி போட்டு வெளியேறிட்டன். வீட்டை போய் மனிசியிட்டை பிரச்சனையை சொன்னன். ஏதோ கோவத்திலை விட்டிட்டு வந்திட்டன்

விசாவுமில்லாமல் வேறை வேலை எடுக்கிறதும் கஸ்ரம் எங்கை வேலைக்கு போனாலும் முதல் விசா மற்றது வேலை செய்த அனுபவம் இரண்டையும்; தான் கேப்பாங்கள் ஏதோ ஒரு எட்டு வருசம் ஒரு பிரச்சனையுமில்லாமல் காலம் ஒடிட்டிது வேலையை விட்டா விசா இல்லாமல் உதவி பணம் கூட கிடைக்காது. சரி எதுக்கும் நாளைக்கு போய் அவனிட்டை மன்னிப்பு கேட்டிட்டு வேலையை செய்வம் எண்டு மனிசிக்கு சொல்லிப்போட்டு படுத்திட்டன். இண்டைக்கு காலைமை எழும்பி வழமை போலை வேலைக்கு போனன் அங்கை என்ரை இடத்திலை புதிசா வெள்ளை ஒருத்தன்

வேலைசெய்து கொண்டு நிண்டான்.முதலாளியிட்டை போய் காலை வணக்கம் எண்டன். நிமிந்து பாத்து என்ன வேணுமெண்டான்.நான் நேற்று செய்தது பிழை மன்னிச்சு கொள்ளுங்கோ இனி அப்பிடி தவறு வராமல் நான் நடக்கிறன் எண்டு மன்னிப்பு கேட்டன். முதலாளியோ உன்னை எனக்கு தெரியாது போகலாம் எண்டான். அவனுக்கு தெரியும்எனக்கு விசா இல்லாத படியால் சட்டப்படி என்னால் எதுவும் செய்ய முடியாது எண்டு.

விசா இல்லாத நாயே உனக்கெல்லாம் எதுக்கு ரோசம் கோபம் எண்டு என்னை நானே திட்டியவாறு சுரங்க ரயில் நிலையத்தை நேக்கி நடந்தன். இனியென்ன செய்யலாம் தெரிந்த தமிழாக்களிட்டைதான் நிலைமையை சொல்லி வேலை கேக்க வேணும்.;வீட்டையும் உடனை போக மனம் வராமல் சுரங்க இரயில் நிலைய படியிலை கொஞ்ச நேரம் இருந்தன். அந்த கித்தார் கார பெடியன் தொப்பியை முன்னுக்கு வைச்சிட்டு கித்தாரை தட்டினபடி ஜோர்ச் மைக்கலின்ரை பிரீடம் பிரீடம் எண்ட எண்ட பாட்டை பாடிக்கொண்டிருந்தான். அவனை கொஞ்ச நேரம் உத்து பாத்தன் என்ன கவலை இல்லாதா மனிதன் மாத கடைசியிலை வாடகை பிரச்சனையா? மின்சார கட்டணமா?தண்ணி கட்டணமா? சீட்டா வட்டியா? ஊருக்கு பணம் அனுப்ப வேண்டுமா? என்று எதுவித பிரச்சனையுமற்ற ஒருமனிதன் அன்றாடம் கிடைக்கிற பணத்திலை தனக்கும் தன்ரை நாய்க்கும் உணவு மிச்சத்துக்கு மலிந்த வைன் அதோடை பிரச்சனை முடிஞ்சுது. இப்போ என்னை பாக்கவே எனக்கு வெறுப்பாக இருந்தது அவன் கடவுளாக தெரிந்தான் அவன் பாடும் பாடல் தேவ கானமாக இனித்தது சட்டை பையினுள் கையை விட்டு சில சில்லறைகளை அவனது தொப்பிக்குள் போட்டு விட்டு வீடு நோக்கி பயணமானேன் _________________

நிழலாடுடும் நினைவுகள்2

12:56 AM, Posted by sathiri, 6 Comments

நிழலாடும் நினைவுகள் 2

1996ஆம் ஆண்டு ஆனி மாதம் மத்திய சென்னையில் ஒரு காலை நேரம் அவசர அவசர மாக வெளிக்கிட்டு சில பைகளில் நான் தயார் படுத்தி வைத்திருந்த பொருட்களையும் எடுத்துக் கொண்டு தயாராய் வீட்டு வாசலில் காத்து நின்ற ஒட்டோவில்ப் போய் ஏறிய படி ஓட்டோக்காரனிடம் வரசளவாக்கம் போங்க என்றுவிட்டு அமர்கிறேன். எனக்குள் ஒரு இனம் புரியாத சந்தோசம் ராணியக்காவை பாக்க போறன். இன்றைக்கு சுமார் 8 ஆண்டுகளிற்குப் பிறகு ராணியக்காவை பார்க்க போகின்ற மகிழ்ச்சி எனக்குள்.

இப்ப எப்பிடி இருப்பார்? என்று எனக்குள் சில கற்பனைகள்!! எனது மனதில் 8 ஆண்டுகளிற்கு முன்பு பார்த்த ராணியக்காவின் உருவத்திற்கு ஏற்றதாய் சில உடுப்புகள் அவரிற்காக வாங்கியிருந்தேன். ராணியக்கா எனது சொந்த அக்கா இல்லை ஏன் சொந்தம் கூட இல்லை . ராணியக்காவின் தாய் தந்தை ஈழத்தில் வேறு ஒரு ஊரை சேர்ந்தவர்கள் அவர்கள் சாதி மாறி காதலித்து கலியாணம் செய்ததால் அவர்கள் உறவினர்களால் பிரச்சனை என்று எங்கள் ஊரிலிருந்த ஒருவரின் உதவியுடன் எங்கள் ஊரில் இருந்த வெறும் காணி ஒன்றில் வந்து குடிசை போட்டு வாழத் தொடங்கினார்கள்.

தந்தை இலங்கை போக்குவரத்துச் சபையில் சாரதியாக இருந்தவர். அவர்களின் மூத்தமகள்தான் ராணியக்கா பின்னர் இரண்டு மகன்கள். நாட்டுப் பிரச்சனைகள் காரணமாக யாழ் குடாவில் இலங்கை போக்குவரத்துச் சபையின் சேவைகள் இல்லாது போனதால் ராணியக்காவின் தந்தையின் வேலையும் பறி போக அவர்களது குடும்பம் மிகவும் பொருளாதார பிரச்னையில் விழுந்தது. அப்போது பத்தாம் வகுப்பு படித்து கொண்டிருந்த ராணியக்காவும் தனது படிப்பை இடை நிறுத்தி விட்டு குடும்ப பாரத்தை சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

தந்தை பின்னர் தூர இடங்களிற்குப் போய் சாமான்கள் வாங்கி வந்து ஊர்ச் சந்தையில் விப்பார் .ராணியக்காவின் தாயர் துணிகள் தைத்து குடுப்பவர். ராணியக்காவும் தாயாரிடம் தையல் பழகிக் கொண்டு ஒரு மிசினும் வாங்கி ஊரில் உள்ளவர்களிற்கு உடுப்புகள் தைத்து குடுத்தும் மற்றும் வீட்டை சுற்றியள்ள காணியில் தோட்டம் ஆடு மாடு கோழி வளர்த்தல் என்று என்னென்ன வகையில் பொருளாதாரத்தை பெறலாம் என்று யோசித்து யோசித்து செய்தார். அத்துடன் தம்பியர் இருவரையும் கவனமாகப் படிப்பித்து அவர்களை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வருவதும் அவரது எதிர் கால கனவில் ஒன்றாய் இருந்தது.

அவரது மூத்த தம்பி ரமணன் எனது பாடசாலை நண்பன். அவனுடன் அவர்களது வீட்டிற்குப் போய் வரத் தொடங்கிய எனது நட்பு காலப்போக்கில் என்னை அவர்களது குடும்பத்தின் ஒருவன் போல ஆக்கிவிட்டது. நான் எப்போதும் கத்திக் கல கலப்பாய் கதைப்பதால் ராணியக்கா எனக்கு செல்லமாய் வைத்த பட்ட பெயர் காகம். நானும் அவரை அவர் குள்ளமாய் இருந்ததால் உரல் குத்தி என்று கூப்பிடுவேன். மாலை வேளைகளில் நானும் ரமணனும் வெளியில் போகும் போது தோட்டத்தில் வேலை செய்து கொண்டு நின்றபடி ராணியக்கா கூப்பிடுவார். பெடியள் எங்கை போறியள் அந்த ஆலமரத்திலை ஏறி ஆடு மாட்டுக்கு கொஞ்சம் குளை வெட்டித் தந்திட்டு போங்கோடா....... என்பார் .

சரி பிறத்தாலை கூப்பிட்டிட்டாள் இனிப் போற காரியம் உருப்பட்ட மாதிரித்தான் என்று நான் சலித்துக் கொள்ள . ஓமடா உங்கடை முக்கிய அலுவல் என்ன எண்டு எனக்குத் தெரியும் தானே உதிலை சந்தியிலை போய் நிண்டு போற வாற பெட்டையளை பார்த்து வீணி வடிக்கப் போறியள் அதை விட பிரயோசனமா குளையாவது வெட்டலாம் தானே என்பார். போடி உரல் குத்தி நீ பனையிலையே பாஞ்சு பாஞ்சு ஏறுவியே நீயே ஏறி வெட்டடி என்று விட்டு நாங்கள் சைக்கிழை மிதிக்கவும். நில்லடா காகம் என்ற படி

தோட்டத்தில் உள்ள மண்ணாங்கட்டிகளை பொறுக்கி எங்களை நொக்கி எறிந்த படி இரண்டு பேரும் இனி வீட்டுப் பக்கம் வந்து பாருங்கோ இருக்கு இரண்டு பேருக்கும் என்றபடி தனது வேலையைத் தொடர போய் விடுவார் . இப்படியே ஒவ்வொரு நாளும் எங்களுக்குள் சின்னச்சின்ன சீண்டல்கள் சண்டைகள் என்று தொடர்ந்து கொண்டேயிருக்கும். ஆனாலும் ஒரு நாள் கூட உண்மையாய் சண்டை பிடித்தது கிடையாது. ராணியக்கா குள்ளமாக இருப்பார். ஆனால் கடின உழைப்பினால் உருண்ட உறுதியான தேகம்

நீண்ட தலைமுடி. அவர் தனது தலை முடியை பாராமரிக்கவே ஒவ்வொரு நாளும் அரை மணித்தியாலமாவாவது செலவிடுவார். ஒவ்வொரு நாளும் சம்போ வைத்து கழுவி பின்னர் தலை முடியை ஒரு கதிரையில் பரப்பிவிட்டு அதற்கு சாம்பிராணி புகை போடுவார். அப்பொதும் சரி வேறு வேலைகள் செய்யும் போதும் சரி ராணியக்கா புதிய வார்ப்பு பட பாடலான “இதயம் போகுதே .....” என்கிற பாடலைப் பாடிக்கொண்டே வேலைகளை செய்வார். அவரிற்குள் ஒரு காதல் இருந்ததா? யாரையாவது காதலித்தாரா?? என்று ஏதும் எனக்குத் தெரியாது

அந்த பாடல் ஏன் அவருக்குப் பிடிக்கும் என்று நான் இது வரை கேட்டதில்லை. சரி இன்றுதான் அவரைப் பார்க்க போகிறோமே கேட்டால்ப் போச்சு என்றபடி ராணியக்காவின் நினைவகளில் மூழ்கிப் போயிருந்த என்னை சார் மணி குடுங்க ஆட்டோக்கு பெற்றோல் போடணும் எண்டு நினைவுகளைக் கலைத்தான். அவனிற்கு ஒரு அம்பது ருபாய் தாளை எடுத்து நீட்டி விட்டு ராணியக்காவை பற்றிய நினவகளில் மீண்டும் மூழ்கிப் போனேன். இப்படியே சிரிப்பும் சந்தோசமுமாய் இருந்த குடும்பத்தில் ஈழத்தின் பல குடும்பத்தில் விழுந்த இடியை போலவே இவர்களது குடும்பத்திலும் இந்தியப் படை காலத்தின் ஒரு நாள் 1988ஆம் ஆண்டு தை மாதம்

ஒரு இரவு ஒரு இடி விழுந்தது. அன்று இரவு வழமை போல ஊரடங்குச் சட்டம் வீதி ரோந்து வந்த இந்திய இராணுவம் என்ன நினைத்ததோ ராணியக்காவின் வீட்டிற்கள்ப் புகுந்து படுத்திருந்த அவர்களை எழுப்பி எல் ரி ரி தெரியுமா?? என்று மிரட்டினார்கள் சுமார் பத்து பேரளவில் வீட்டிற்குள் புகுந்து சாமான்கள் எல்லாவற்றையும் கிழறிக்கொண்டிருக்க ஒரு சீக்கியன் ரமணனனை யு ஆர் எல்ரி ரி என்று கேட்க அவனும் நோ சேர் நோ என்றவும் அவன் ரமணனை துப்பாக்கி பிடியால் தாக்கவே அதைப் பாத்துக் கொண்டிருந்த ராணியக்கா பொறுக்க முடியாமல் இருவருக்கும் இடையில் புகுந்து அந்த சீக்கியனிடம் தனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் அவன் எல் ரி ரி இல்லை படிக்கிற மாணவன் என்றவும்.

அந்த சீக்கியன் ராணியக்காவின் தலை மயிரை பிடித்து இழுத்து மறு பக்கம் தள்ளி விட்டு ரமணனனை தொடர்ந்து தாக்க ராணியக்கா வெறி கொண்டவராய் மீண்டும் பாய்ந்து அந்த சிக்கியனின் துப்பாக்கியை பிடித்து அடிக்க வேண்டாம் என்ற தடுக்க . இன்னொரு ஆமிக்காரன் வந்து அந்த சீக்கியனின் காதில் கிந்தியில் ஏதோ சொல்ல . அவன் உடனே நீதான் எல் ரி ரி வா உன்னை விசாரிக்க வேண்டும் என்று ஆங்கிலத்தில் கூறிய படி ராணியக்காவை வெளியே இழுத்து கொண்டு போக ராணியக்காவும் தம்பி ரமணணனை எப்படியாவது காப்பாற்றி விட வெண்டும் என்கிற துடிப்பில் அவர்களுடன் நாளை காலை கட்டாயம் உங்கள் முகாமிற்கு நானும் தம்பியும் வருகிறோம்

தயவு செய்து இப்போ தொந்தரவு தராதீர்கள் என்று கெஞ்சிப் பார்க்கிறார் ஆனால் அவர்களோ வீட்டில் உள்ளவர்கள் எல்லாரையும் ஒரு அறையில் இருத்தி விட்டு வெளியில் வந்தால் சுட்டுவிடவோம் என மிரட்டிவிட்டு ராணியக்காவை பலாத்காரமாக இழுத்துப் போகிறார்கள். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்திலுள்ளவர்களும் யாரும் வெளியே வரப் பயம் காரணம் ஊரடங்கு உத்தரவு இருந்தது வெளியே வந்தால் ராணுவம் சுட்டுவிடும். விடியும் வரையும் அழுதபடியே விழித்திருந்த ராணியக்காவின் தாயாரும் தந்தையும் விடிந்ததும் அருகிலுள்ள இந்திய இராணுவ முகாமில் போய்த் தங்கள் மகளைப் பாக்க வேணும் என்று அழுதபடியே விசாரித்தார்கள்

ஆனால் அங்கு காவல் கடைமையில் நின்ற இராணுவத்தினனோ அங்கு யாரையும் அப்படிக் கைது செய்து கொண்டு வரவில்லையென்று கூறிவிட்டான். அவர்களது சத்தம் கேட்டு அந்த மகாம் பொறுப்பதிகாரியோ தங்கள் முகாமிலிருந்து யாரும் யாரையும் கைது வசய்யவில்லை வேண்டுமானால் வேறு அருகிலிருக்கும் முகாம்களில் போய் விசாரிக்கச் சொல்லி அனுப்பி விடுகிறான். அவர்களும் அருகிலிருந்த மற்றைய முகாம்கள் எல்லாம் போய் விசாரித்து கொண்டிருக்க ஊரில் ஒருவர் ஊரின் ஒதக்கு புறமாக வயற்பக்கம் ஒரு பாழடைந்த வீட்டில் ராணியக்காவின் உடல் கிடப்பதாக வந்து சொல்ல

ஊர் இளைஞர்கள் சிலருடன் நானும் சேர்ந்து அந்த வீட்டை நொக்கி ஓடினோம். அங்கு நான் கண்ட காட்சி ராணியக்காவின் உடலில் ஒரு துணிகூட இல்லாமல் அவரது சட்டையைக் கிழித்து வாயில் அடைத்தபடி கைகள் பின்புறமாக கட்டப்பட்டிருந்தது. இரத்த வெள்ளத்தில் ராணியக்கா கிடந்தார்\. எனக்கு உடனேயே புரிந்து விட்டது என்ன நடந்து விட்டதென்று. ராணியக்கா அந்த மிருகங்களுடன் முடிந்தவரை போராடியிருக்க வேண்டும் அதனால் அவர் தலையை கூட அசைக்க முடியாமல் ஒரு பெரிய கல்லை தலை பக்கமாக வைத்து அவரது நீண்ட தலை முடியை அதில் இறுக்கிக் கட்டிவிட்டு அமைதி காக்க காந்திய தேசத்திலிருந்து வந்த அகிம்சாவாதிகள் தங்கள் கருணை அன்பு சமாதானம் எல்லாவற்றையுமே காமக் கழிவுகளாய் அந்த அப்பாவிப் பெண்ணின் மீது வெளியேற்றி விட்டுச் சென்று விட்டார்கள்.

நல்ல வேளை அவரது அந்தக் கோலத்தை அவரது தாய் தந்தையர் கண்டிருந்தால் அந்த இடத்திலேயெ மாரடைப்பு வந்து இறந்து போயிருப்பார்கள். அவரருகில் போய் உடலை மெதுவாய் தொட்டுப் பார்த்தேன் உடல் சூடாகவே இருந்தது நாடித்துடிப்பும் இருந்தது. உடனடியாகவே அருகில் இருந்த வீட்டுக்காரர் ஒருவரிடம் ஒரு செலையை வாங்கி ராணியக்காவை சுற்றி கொண்டு ஊரில் வீட்டில் வைத்தியம் செய்யும் வைத்தியரிடம் கொண்டு ஓடினோம். வைத்தியரும் தன்னால் முடிந்த முதலுதவிகளை செய்து விட்டு குளுக்கோஸ் ஏற்றி விட்டு என்னிடம் சொன்னார் தம்பி என்னட்டை உள்ள வசதியை வைச்சு இவ்வளவுதான் செய்யலாம்.

உடனை வசதியுள்ள ஏதாவது ஆஸ்பத்திரிக்கு உடனை கொண்டு போனீங்களெண்டாத்தான் ஆளை காப்பாற்றலாம் இல்லாட்டி கஸ்ரம் எண்டார். யாழ்ப்பாணம் வைத்திய சாலைக்கு கொண்டு போக ஏலாது காரணம் அந்த வைத்தியசாலையும் இந்திய இராணுவத்தின் வெறியாட்டத்திற்குள்ளாகி சரியாக இயங்க தொடங்கியிருக்கவில்லை. அடுத்ததாக மானிப்பாய் வைத்திய சாலைக்குத் தான் கொண்டு போகவேண்டும் ஆனால் அங்கும் சுற்றிவர இராணுவக் காவல் என்ன செய்யலாமெண்டு யொசித்த போதுதான்

மானிப்பாய் வைத்திய சாலையிில் வேலை செய்கிற ஒரு தாதி எனக்கு நல்ல பழக்கம் உடனே அவரிடம் ஓடிப்போய் விடயத்தை சொல்ல அவரும் தாமதிக்காமல் உடைனேயே தனது தாதி உடைகளை அவசரமாக அணிந்து கொண்டு என்னுடன் வந்து ஒரு வானில் ராணியக்காவை ஏற்றிக்கொண்டு யாரும் வர வேண்டாம் தானே எப்படியாவது வைத்திய சாலைக்குள் கொண்டு போய் விடுவேன் ஆனால் தான் செய்தி அனுப்பும் வரை யாரும் வைத்திய சாலை பக்கம் வர வேண்டாம் பிறகு பிரச்னையாயிடும் என்று கண்டிப்பாய்ச் சொல்லி விட்டு ஒரு வெள்ளை துணியை ஒரு தடியில் கட்டி அதனை வானின் முன்புறத்தில் கட்டிக் கொண்டு எப்படியோ வைத்திய சாலைக்குள் கொண்டு போய்

அங்கு வைத்தியர்களின் ஒரு வார கால போராட்த்தின் பின்னர் கோமா நிலையிலிருந்த ராணியக்காவின் உயிரை மட்டும் அவர்களால் இழுத்து பிடித்து நிறுத்த முடிந்தது ஆனால் அவர்களால் ராணியக்காவின் உணர்வுகளையோ நினைவுகளைகயோ திருப்ப கொண்டுவர முடியாமல் போய் விட்டது. ராணியக்கா தனது ஞாபகங்களை இழந்து மன நோயாளியாகி விட்டார். அது மட்டுமல்ல அவரது அடி வயிற்றிலும் பலமாக துப்பாக்கிப் பிடியால் தாக்கியிருக்கிறார்கள் அதனால் இடுப்பிற்கு கீழே உணர்வுகளும் அற்றுப் போய் விட்டது என்று அந்த தாதி என்னிடம் கூறினார். அதன் பின்னர் எனக்கும் அவர்களுடனான தொடர்பு இல்லாமல் போய் விட்டாலும்


அவ்வப்போது தெரிந்தவர்களிடம் விசாரிப்பேன் சில காலத்தின் பின்னர் அவர்கள் குடும்பமாக வள்ளத்தில் இந்தியா போய் விட்டதாக அறிந்தேன். நானும் பின்னர் பிரான்சிற்கு வந்த பின்னர் ரமணன் கனடாவில் இருப்தாக ஒரு செய்தி கிடைத்தது எப்படியும் அவனை தொடர்பு கொள்ளலாம் என நினைத்து தெரிந்தவர்கள் மற்றும் ஐரோப்பிய கனடிய தமிழ் வானொலிகள் ஊடாகவும் பலதடைவைகள் தொடர்ச்சியான எனது தேடலில் ஒரு நாள் ரமணனின் தொலைபேசி அழைப்பு எனக்கு வந்தது.

அவனுடன் கதைத்த போது நான் முதல் கேட்ட கேள்வி ராணியக்கா எப்பிடி இருக்கிறார் என்பதுதான். கன கால போராட்டத்தின் பின்னர் இந்தியாவில் பெரிய பெரிய வைத்தியர்களிடம் எல்லாம் காட்டி இப்ப கொஞ்சம் பரவாயில்லை என்றான் . நானும் அந்த வருடம் இந்தியா போக வேண்டி இருந்ததால் ரமணனிடம் விலாசம் விபரம் எல்லாம் பெற்றுக் கொண்டு இதோ இப்போது ராணியக்கா வீட்டிற்கு வந்து விட்டேன். எனக்காக மதிய சமையல் செய்து விட்டு ராணியக்காவின் தந்தையும் தாயும் காத்திருந்தனர்

என்னை கண்டதும் தாயார் வந்து கட்டியணைத்து அழுதே விட்டார். அவர்களிடம் அக்கா எங்கை என்று கேட்க ஒரு அறையைக் காட்டினார்கள் உள்ளே போனேன். எனக்கோ பெரிய அதிர்ச்சி நான் தேடி வந்த ராணியக்கா இவர் இல்லை என் கற்பனையில் இருந்த ராணியக்கா இவர் இல்லை பார்ப்பதற்கு ஒரு 60 வயதிற்கும் மேற்பட்ட ஒரு கிழவியின் தோற்றம் பல மாதங்கள் பட்டினி கிடந்தது போல கண்கள் எல்லாம் உள்ளே போய் அவரது பற்கள் எல்லாம் வெளியே தெரிய தொடரச்சியான மருந்து பாவனைகளால் அவரது தலை முடியும் உதிர்ந்து போனதால் மொட்டை அடித்திருந்தனர். மெதுவாக அவரது அருகில் போய் அவரின் கைகளை பிடித்து பார்த்தேன்

தோட்ட வேலையெல்லாம் செய்து எவ்வளவு உறுதியாய் இருந்த அவரது கைகள் ஒரு பிறந்த குழந்தையின் கையை போல சூம்பி போய் மிருதுவாய் இருந்தது. ராணியக்கா நான் தான் காகம் வந்திருக்கிறன் என்னை ஞாபகம் இருக்கா என்றேன். அவரோ எந்த வித சலனமும் இல்லாமல் சுவரையே வெறித்துப் பாத்தபடி இருந்தார். நானும் சில பழைய கதைகளை சொல்லிச் நானே சிரித்தும் பார்த்தேன் அவர் எந்த வித உணர்ச்சிகளையும் காட்டிக் கொள்ளவில்லை. அதற்கு மேலும் அங்கு என்னால் நிற்க முடியாமல் அறையை விட்டு வெளியே வந்த போது தாயார் சொன்னார் தம்பி இப்ப வருத்தமெல்லாம்
மாறிட்டுது தானே தன்ரை வேலையள் எல்லாம் தனிய செய்ய தொடங்கிட்டா

ஆனால் இப்பிடித்தான் வெறிச்சுப் பாத்தபடி ஒருதரோடையும் ஒரு கதையும் இல்லை ஆனால் டொக்ரர் மார் சொல்லினம் இப்ப ஒரு பிரச்சனையும் இல்லை ஆனால் மனரீதியான தாக்கத்திலை இருந்து இனி அவாவே தான் கொஞ்சம் கொஞ்சமா வெளிலை வரவேணுமெண்டு . அதக்காக தான் இப்ப நாங்களும் கொஞ்சம் வெளியிலை கூட்டிக் கொண்டு திரிய வெளிக்கிட்டிருக்கிறம் அப்பிடியாவது கொஞ்சம் பழைய மாதிரி இல்லையெண்டாலும் கொஞ்சமாவது கதைச்சால் நிம்மதி என்றார்.

நானும் அவர்களுடன் மதியம் உணவருந்தி விட்டுப் புறப்பட தாயாராகியபடி மீண்டும் ராணியக்காவிடம் போய் ஏதோ எனக்கு அவரை முத்தமிடவேண்டும் போல் இருந்தது. குனிந்து அவரது கன்னத்தில் முத்தமிட்டு விட்டு ராணியக்கா நான் போகப் போறன் திரும்ப ஒரு சந்தர்ப்பம் கிடைச்சால் கட்டாயம் வாறன் என்றபடி அவரை உற்று பார்க்க அவரது கைகள் மெதுவாய் உயர்ந்தி எனது கைகளை சில நிமிடங்கள் பிடித்தவர் பின்னர் விட்டு விட்டார் முகத்தில் எந்த வித உணர்ச்சியும் இல்லாமல் அவரது கண்களில் இருந்து கண்ணிர் வடிந்துகொண்டிருந்தது.

என்னை அவருக்கு அடையாளம் தெரிகிறது நான் கதைப்பது எல்லாமே அவருக்கு புரிகிறது என்பது மட்டும் எனக்குப் புரிந்தது. ஆனாலும் தனக்குத் தானே ஒரு கூட்டை கட்டி அதற்கு ஒரு பூட்டும் போட்டு வாழ்ந்து கொண்டிருந்தார் ராணியக்கா. அவர் அப்படி இருந்ததும் எனக்கு சரியாகத்தான் பட்டது காரணம் அவர் அந்த கூட்டை விட்டு வெளியே வந்து கதைக்கத் தொடங்கினால் பலரின் பல நுறு கேள்விகளிற்கு பதில் சொல்லியே மீண்டும் மன நோயாளியாகி விடுவார்.

பின்னர் ஓராண்டுகள் கழித்து ரமணணின் தொலை பேசி அழைப்பு வந்தது.ராணியக்கா நேற்று தற்கொலை செய்திட்டா நான் இந்தியாவுக்கு வெளிக்கிடுறன் என்றான் . எப்பிடி?? என்றேன் வீட்டுக்காரர் கவனிக்காத நேரம் அவாக்கு இரவிலை வழமையா குடுக்கிற நித்திரைக் குளிசை எல்லாத்தையும் எடுத்து போட்டுட்டாவாம் வீட்டுக்காரரும் அவா நித்தரை கொள்ளுறா எண்டு கன நேரமா கவனிக்க வில்லையாம் என்றான்.

எனக்கு தற்கொலை செய்பவர்கள் மீது வாழ்க்கையில் போராட முடியாத கோழைகள் என்று கொபம் வரும் ் அனால் போராட்டமே வாழ்க்கையாய் அமைந்து விட்ட ராணியக்காவின் முடிவு எனக்கு கோபத்தை தரவில்லை. ஆனால் என்னிடம் இன்னமும் விடை தெரியாத ஒரு கேள்வி இந்த இளம் வயதில் இத்தனை கொடுமைகளை அனுபவிக்க ராணியக்கா செய்த பாவம் தான் என்ன ???? இந்தக் கெள்வி ஈழத்தில் பல ராணியக்காக்களினது கேள்வியும் இதுவே............................

ஈழபொராட்டத்தில் எனது(பொய்) சாட்சியம் பாகம்7

7:09 AM, Posted by sathiri, No Comment


சுபத்திரனிடம் பொறுப்பு ஒப்படைக்க பட்டதும் அவர் அந்த வேலையை செய்து முடிக்க தங்களது திருநெல்வேலி முகாமிலிருந்து நான்கு பேரை தெரிவு செய்து பொறுப்பை ஒப்படைக்கிறார். எங்கும் சந்திக்கு சந்தி இந்திய இராணுவத்தின் காவலரண்கள் ரோந்துகள் ஒட்டுக்குளுக்கனான ஈ.என்.டி.எல்.எவ். மற்றும் ஈ.பி. ஆர்.எல்.எவ். முகாம் என்று உயர் பாது காப்பு பகுதியாக மாறியிருந்த திருநெல்வேலியில்.1989 ம் ஆண்டு புரட்டாதி மாதம் 21ந் திகதி காலை வழைமை போல தனது கடைமைகளிற்காக ராஜினி தன்னுடைய சைக்கிளில் யாழ் பல்கலை கழகம் நோக்கி போய்க்கொண்டிருக்கிறார். அப்போது நடந்த சம்பவத்தை பார்த்தவர்கள் கூறியது அவரிற்கு எதிரே இரண்டு சைக்கிள்களில் நான்கு இளைஞர்கள் வந்துகொண்டிருக்கின்றனர் அவரை கடந்து ஒரு சைக்கிள் செல்ல ராஜினியை கடந்து பினேசென்ற சைக்கிளில்முன்னிற்கு இருந்தவன் ஒரு பெரிய துப்பாக்கியை சாரத்தால் சுத்தியபடி வைத்திருந்தான்.
மற்றைய சைக்கிள் அவரிற்கு எதிரே நிக்க அந்த சைக்கிளில் முன்இருந்து வந்த ஒருவன் தனது கைத்துப்பாக்கியால் முதலில் ராஜினியை நோக்கி சுட சைக்கிளை ஓட்டிவந்தவனும் ராஜினியை நோக்கி கைத்துப்பாக்கியால் சுட்டான் .ராஜினி அந்த இடத்திலேயே இறந்து போனார். இப்போ பெருக்கி பிரித்து பாருங்கள் கணக்கு சரியாக இருக்கும் யார் ராஜினியை கொன்றார்கள் என்று.ராஜினி கொல்லப்பட்ட செய்தி அறிந்ததும் சிறிதரனிற்கு தலை சுற்றியது காரணம் அவரிற்கு தெரியும் அடுத்த தலை தன்னுடையததான் என்று. என்ன செய்யலாமென யோசித்தவர். இந்தியபடை காலத்தில் யாழ் அசோகா விடுதிதான் ஈ.பி.ஆர்.எல்.எவ்.வின் தலைமை முகாமாகவும் அன்றைய வடகிழக்கு முதலமைச்சர் என்று சொல்லிக்கொண்ட வரதராஜபெருமாளின் அலுவலகமாகவும் இயங்கிவந்தது.எனவே
ஈ.பி. ஆர். எல்.எவ். வுடன் தொடர்புடைய ஒரு வைத்திய சாலை ஊழியரை அவசரமாக அசோகா விடுதிக்கு அனுப்பி வைத்தார். அவரை வந்து சந்திக்கும்படி அழைப்பும் கிடைத்தது.அந்த ஊழியரையும் அழைத்துக்கொண்டு அசோகா விடுதிக்கு அரக்கபரக்க ஓடினார் சிறீதரன்.அவரை மட்டும்பரிசோதனைகளின் பின்னர் உள்ளே அழைத்தனர் உள்ளே போனவரிற்கு வரதராஜபெருமாள் வணக்கம் சொன்னார்.சிரமப்பட்டு சிரித்தபடி சிறீதரனும் வணக்கம் சொல்லி எதிரே அமர ஏளனமாக பார்த்தபடியே வரதராஜபெருமாள் சொன்னார். பாருங்கள் எத்தனையாயிரம் படை எவ்வளவு ஆயுதங்கள் உலகின் மிகப்பெரிய இராணுவம் எங்கள் பக்கம். முழத்திற்கு முழம் சந்திக்கு சந்தி எங்கள் ஆட்கள் வடக்கு கிழக்கு எங்கும் எங்கள் கட்டுப்பாட்டிற்குள். இன்னமும் சில சில்லறை புலிகளே மிச்சம் சல்லடை போட்டு தேடி அழித்து அந்த புலிளை புதைத்த இடத்தில் புல்லுமுளைக்கவிடுவோம்.ஆனால் நீங்களோ சிறுபிள்ளைதனமாய் இதற்குள் இருந்துகொண்டு மனிதவுரிமை மண்ணாங்கட்டி என்று எழுதிகொண்டு எதற்கு வேண்டாத வேலை??எங்கள் சொல் கேட்டால் நீங்கள் முன்னேற ஆயிரம்வழி இல்லையென்று அடம்பிடித்தால் ஒரேயொருவழி அது ராஜினிசென்றவழி இதில் எந்தவழி நீங்களே முடிவுசெய்யலாம் இது உங்களிற்கு மட்டுமல்ல உங்களைசேர்ந்தவர்களிற்கும் என்றார்.சிறிது யோசித்த சிறீதரன் இந்தமுறை உண்மை சந்தோசமாக சிரித்தபடி எழுந்தவர் நீங்கள் சொன்ன முதல்வழி என்வழிஎன்றுவிட்டு வெளியேறியவர் வெளியேநின்ற அந்த வைத்திய சாலைஊழியரைபார்த்து சொன்னார் புலிகள்தான் ராஜினியை கொன்றுவிட்டார்கள் என்றவும்.புரிந்துகொண்ட அந்த ஊழியரும் புன்னகைத்தார்.பின்னர் யாழ்பல்கலைகழக வளாகத்திற்கு வந்த சிறீதரன் ராஜினியை புலிகள்கொன்றுவிட்டனர் என்றும் அவரிற்கு தெரிந்த ஆனால் அந்த காலகட்டத்தில் பிரபல்யம் இல்லாத மூன்று புலிஉறுப்பினர்களின் பெயரையும் கூறி(இவர் கூறியவர்கள் ஒருவர் கோண்டாவிலையும் மற்றவர் சாவகச்சேரியையும் இன்னொருவர் மானிப்பாயையும் சேர்ந்வர்கள்) வில்லில்லாமலேயே பாட ஆமா புலிகள்தான் கொன்றுவிட்டனர் ராஜன்கூலும் பின்பாட்டுபாடினார்.ஆகா படித்தமனிதர் பெரிய மனிதர்அதுவும் கணிததுறையில் முனைவர் பட்டம் பெற்ற ஒரவர் சொல்லிவிட்டாரேஅவர் சொன்னால் சரியாக இருக்கும் என்று சிலரும் நம்பிவிட்டனர்.நாளிற்கு நாள் சிறீதரனின் விசுவாசத்தை பார்த்த ஈ.பி.ஆர்.எல்.எவ். இயக்கமும் சிறீதரனிற்கு வேண்டிய வசதிகளும் பணஉதவிகள் செய்தது மட்டுமல்லாமல் பாதுகாப்பிறகென கைத்துப்பாக்கியும் ஒரு வோக்கிரோக்கியும் கூட கொடுத்திருந்தனர்.சிறீதரனும் பின்னர் சண்டிலிப்பாய் கல்வளையில் இருந்த அவரது வீட்டிற்கு செல்வதை தவிர்த்து யாழ் நகரபகுதியிலேயே பாதுகாப்பாக இருந்தபடி வாங்கின பணத்திற்கு புலியெதிர்பு பாடிகொண்டிருந்தார்.
இதுதான் ராஜினியின் கொலை புலிகள் வாலில் கட்டிவிட்டகதை. இதே விபரத்தை அதாவது ஈ.பி அமைப்புதான் கொலை செய்தனர் என்கிற விபரத்தை அதே அமைப்பிலிருந்து பிரிந்துசென்று பின்னர் ஈ.பி.டி.பி அமைப்பில் இணைந்து அந்த அமைப்பில் ஒரு பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்த அற்புதராஜா என்பவர் ஈ.பி.டி.யினரின் பத்திரிகையாகிய தினமுரசு பத்திரிகையிலும் அற்புதன் என்கிற பொயரில் ஆதாரங்களுடன் எழுதியிரந்தார் என்பதும் குறிப்பிடதக்கது.இது இப்படியிருக்க ராஜினியின் சகோதரியான நிர்மலா திடீரென சிலவருடங்களாக சிறீதரன் பாடிய அதேபாழைய பாட்டை ஏன் பாடுகிறார்??????அடுத்த பாகத்தில்...................