
புலிகளே ஆயுதங்களை கீழே போடுங்கள். போட்டுவிட்டு அரசியல் ரீதியில் போராடுங்கள் என்று இந்தியாவிற்கு பால்க்குடம் தூக்கியுள்ள இலங்கைக்கான முன்னைநாள் சமாதானத்துதுவர் ஏரிக்கொல்கைம் கூறியுள்ளார். அதாவது ஈழத்தமிழரை 1905 ம் அண்டிற்கு திரும்பச்சொல்கிறார். ஈழத்தமிழர்களின் உரிமைப்போராட்டம் 1905 ம் ஆண்டு அரசியல் போராட்டமாக உருவெடுத்து கிட்டத்தட்ட 1983 வரை 78 ஆண்டுகள்வரை தொடர்ந்தது் அதன்பின்னர்தான் முற்று முழுதாக ஆயுதப்போராட்டம் முனைப்புப் பெற்றது.இப்பொழுது மீண்டும் 1905 ம் ஆண்டிற்கு போகச்சொல்கிறார் இவர்.
இவருக்கு இன்னமும் துரோகி பட்டம் கொடுக்கவில்லையா?
ஈழம் என்பது கனவில் மட்டுமே சாத்தியம் என உங்களுக்கும் தெரியும். இருந்தாலும் ஏதோ ஒரு பிடிவாதம் தலைகனம் போர் வேண்டும் என சொல்கிறது .
அனானி போர் வேண்டும் என்று கூறவில்லை ஆனால் ஈழம் என்பது கனவு என்று மட்டும் கூறவேண்டாம் ஆம் யூதர்களின் வரலாற்றை புரட்டுங்கள் அவர்களின் கனவான இஸ்ரேல் இரண்டாயிரம் ஆண்டு கனவின் விடியல். அவர்கள் விடுதலை பெற்றதற்கு புலம் பெயர்ந்த யூதர்களும் காரணம் ஒன்றே ஒன்று அவர்கள் இஸ்ரேல் அமையும் என்று நம்பினார் ஆனால் நம்மில் சிலர் இன்று இன துரோகிகளாக உள்ளனர்.