இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா. பாண்டியன் பத்திக்கைகளுக்கு விடுத்துள்ள அறிக்கை.
சென்னை உயர் நிதி மன்றத்தில் காவல் துறையினர் நுழைந்து காட்டுமிரண்டித்தனமானத் தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள். இது வரை தமிழக வரலாற்றில் கேட்டறியாதவாறு உயர்நீதி மன்றத்தில், கொலைவெறியுடன் காவல்துறை தாக்குதல் நடத்தியுள்ளதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
இலங்கை தமிழ் மக்களின் உயிர்காக்கும் போராட்டத்தில் தமிழகம் பெதும் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததுதான். இதில் மாநிலம் முழுவதும் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தைப் புறக்கணித்து, முன்னணியில் நின்று போராடி வரும் பின்னணியில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.
சுப்பிரமணியசாமியின் மீதான முட்டை வீசிய வழக்கில், கைது செய்வதற்கு நீதிமன்ற வளாகத்திற்கு வந்த சிறப்புக் காவல்துறையிடம் சம்மந்தப்பட்ட வழக்கறிஞர்கள் தாங்களே முன் வந்து கைதான நிலையில் இந்த கொடிய நிகழ்ச்சி நடந்துள்ளது. ஆராய்ந்து பார்த்தால், நடந்துள்ள இந்த தாக்குதல் எதிர்பாராமல் நடந்ததாகத் தெயவில்லை. காவல்துறை தாக்கியதில் உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி ஒருவர் தாக்கப்பட்டதாகத் தெகிறது. வழக்கறிஞர்களின் மண்டை உடைபட்டு ரத்தம் கொட்டுவதை ஊடகங்கள் திரையிட்டு காட்டுகின்றனர். நீதிமன்றத்திற்குள் புகுந்து இந்த தாக்குதலை காவல் துறை நடத்தியுள்ளது. வழக்கறிஞர்கள் பெரும் எண்ணிக்கையில் படுகாயமடைந்துள்ளார்கள். நீதிமன்றத்தில் பெண் வழக்கறிஞர்களும் பெண் ஊழியர்களும் காயப்பட்டுள்ளார்கள். 100 க்கும் அதிகமான கார்களும் இரு சக்கர வாகனங்களும் காவல்துறையால் தகர்க்கப்பட்டுள்ளது.
காவல்துறையின் இந்த காட்டுமிரண்டிததனமான நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதுடன், காவல்துறையின் மீது உய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்..