Navigation


RSS : Articles / Comments


தாலி பெண்ணுக்கு வேலியா ? சோலியா ?

7:05 AM, Posted by sathiri, 2 Comments

(07டிசம்பர் ஒரு பேப்பரில் வெளியான இவ்வாக்கத்தை தமிழ்மணம் வாசகர்களுக்காகத் தருகிறோம்)

ஐயோ என்னை விடுங்கோ...நான் கழட்டமாட்டேன்... ஐயோ கடவுளே ஏனிப்பிடியொருசம்பிரதாயத்தை வைச்சினமோ..? நனென்னபாவம் செய்தனான்..? ஐயோ என்னைவிடுங்கோ என்ர தாலியை நான் கழட்டமாட்டேன்.....'

24.11.07 மதியப்பொμதில் கேட்டகதறல் ஒலி இன்னும் காதுகளில் ஒலித்தபடியேஇருக்கிறது. புலத்தில் வெள்ளையர்களின் சாவு நிகழ்வுகள், தமிழரின் சாவு நிகழ்வுகள் எனஅவ்வப்போது கலந்து கொண்ட சமயங்களில் ஏற்படாத துயரும் தாக்கமும் 24.11.07 அன்றுயேர்மனிய நகரம் ஒன்றில் நடந்த சாவுநிகழ்வில் ஏற்பட்டது.

45வயதில் தனது வாழ்வை முடித்துக் கொண்டஒரு கணவனின் சாவின் பின் தனது வாழ்வை நினைத்து அந்தரித்துக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணுக்கு நிகழ்ந்த அநீதியே இப்பத்தியில் பதிவாகிறது.

நோய்வாய்ப்பட்டு 21.11.07 அன்றுஇறந்து போன ஒரு தமிழ்க் கணவனின் இறப்பின்பின் சம்பிரதாயம் என்ற பெயரில் நடந்து முடிந்த கொடுமைக்கு தமிழ்ப்பண்பாடு என்று முத்திரையிட்டு எல்லாம் முடிந்த கதை இனி அதைப்பற்றி என்ன கதையென்று அங்கலாய்ப்போருக்கெல்லாம் இந்தப்பத்தி ஏற்படுத்தப்போகும் அசௌகரியத்துக்கு மன்னிக்கவும்.

ஒரு இனத்தின் அடையாளத்தை காவும் காவிகள் பெண்களாக முற்கால சினிமா முதல் இக்கால சின்னத்திரை வரையும் உரைத்து உரைத்து மூளையில் பதியப்படுத்தப்படுகிறது. புலம்பெயர்ந்து வளர்ச்சியடைந்த நாடுகளில் தங்கள் சந்ததியை பதியவிட்டிருக்கும் எம்மவர்களுக்குள்ளும் தென்னிந்திய சினிமாவும் சின்னத்திரையும் செலுத்தும் ஆதிக்கமானது புதிதுபுதிதாக சடங்குகளையும் அறிமுகப்படுத்துகிறது.

நித்திரையால் எழும்போதே கல்கிகுஷ்புவும் கோலங்கள் அபியும் இரவு என்னசெய்யப் போகிறார்கள் என்பதே பலரதுமனதில் ஆறாத்துயராக உள்ளது.

சின்னத்திரையும் சினிமாவும் எங்கள் உலகமாக இருக்க உலகில் மாற்றங்கள் கண்டுபிடிப்புக்கள் சாதனைகள் என விண்வெளிவரை பெண்களின் சாதனைகள் உயர்ந்து ஓங்கியிருக்கிறது.

தேச விடுதலையுடன் தமிழீழத் தாயகத்தில் பெண்விடுதலையும் மாற்றங்களும் சத்தமில்லாமல் நடக்க அந்த மண்ணிலிருந்து புலம் பெயர்ந்தவர்களால் இன்னும் சம்பிரதாயம் சடங்கு என பெண்களை வருத்தும் நிகழ்வுகள் அதிகரித்துக் கொண்டே போகின்றன.

கணவன் இறந்தால் மனைவிக்கு வெள்ளைச்சேலை கொடுத்து சிறுவயது முதலே வைத்தபொட்டும் பூவும் பறிக்கப்பட்டு மூளியாக்கிமங்கலம் என அடையாளமிடப்படும் நிகழ்வுகளிலிருந்து பெண்ணை ஒதுக்கி வைத்தது தமிழ்ப்பண்பாடு. கணவன் பிணத்தின் முன் மனைவியின் மகிழ்ச்சிகளையெல்லாம் பறித்தெடுத்தபோலிப்பண்பாட்டை விதித்து வைத்த ஆதிக்கமனப்பான்மை மிக்கவர்களால் பெண்ணாகப்பிறப்பதே பாவம் என்ற நிலையையே மீதம்வைத்தது.

நூற்றாண்டுகள் கடந்த நிலையில் புலம்பெயர் நாடுகளில் அங்கங்கே மேற்படி நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டிருப்பது இந்த நூற்றாண்டில் இப்படியுமா என வியக்க வைக்கிறது. இதுவெல்லாம் தமிழ்ப்பண்பாடு எனகொக்கரிப்போருக்கு இந்த நாடுகளின் சட்டத்தை நாடி தண்டனை கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

அண்மையில் யேர்மனிய நகரொன்றில் நடந்த மரணம். இன்னும் 2மணித்தியாலங்களில் உனது கணவன் உயிர் பிரியப் போகிறது என மருத்துவமும் மருத்துவர்களும் சொன்னதன் பின் இருந்த நம்பிக்கைகள் இழந்துஅழுதபடி பக்கத்தில் நின்று தன் துணையின்சாவைச் சந்தித்தாள் ஒருத்தி.

சுவாசத்துடிப்பு ஒவ்வொன்றாய் குறையக் குறைய தந்தையின் இரு காதுகளுக்குக் கிட்ட நின்று குழந்தைகள் 'அப்பா...அப்பா....என அழ....என்ரை தெய்வமே என்னை விட்டிட்டுப் போகாதை...என அவள்கதற....அந்தச்சாவு நிகழ்ந்தேறியது. ஒருகனவு போல அந்தச்சாவு அந்தக் குடும்பத்தை ஆறாத்துயரில் விμத்திவிட்டிருந்தது.

ஆளுக்கு ஒரு சம்பிரதாயம் ஊருக்கு ஒருபண்பாடு உள்ள பெருமை மிக்க இனம் நாமென்ற மார்தட்டலுடன் இறந்த மனிதனை இந்துமத முறைப்படி எரிப்பது என முடிவாகியது. எரிந்து முடியும் சாம்பலை யேர்மனியில் பாதியும் பிறந்த மண்ணில் பாதியும் சடங்கு செய்து கரைப்பது என முந்திரிக்கொட்டை முதலாளிகள் சிலர் முடிவு செய்தனர்.

யேர்மனிய சட்டப்படி பொதுவான தண்ணீர் ஓடும் இடங்களில் சாம்பல் கரைத்தலுக்கு அனுமதியில்லையென சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். `உங்கினை ஓடுற ஆறுகளில நாங்கள்கரைச்சா உவங்களென்ன செய்வாங்கள்'சாம்பல் கரைப்புப்பற்றிய கதை முற்றுப்பெறாமல் முணுமுணுப்புகளுடன் நிறைகிறது. கடவுள் இல்லை மதம் இல்லை மனிதமே மேலென்று மார்தட்டுவோர் கூட இத்தகைய போலிச்சடங்குகளை அங்கீகரித்து ஒப்புதல் கொடுப்த்தது ஊருக்குத்தான் உபதேசம் உனக்கில்லையடிகண்ணே என்ற பதத்தை நினைவூட்டுகிறது.

22.11.07 அன்று இறந்துபோன கணவனின்படத்தைப் பார்த்து அவனால் கட்டப்பட்ட தாலியைப் போடுமாறு சம்பிரதாயச் சாக்கடைக்குள் புதைந்து கிடக்கும் பெண்ணொருத்தியால் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆயினும் அந்த வேண்டுகையை ஏற்கமறுத்து அந்தப்பெண் கதறல்தான் வீட்டில் கேட்டது.

தமிழ்ப்பண்பாட்டின்படி கணவன் கட்டியதாலியை அவன் இறந்தவுடன் கழுத்தில் மாட்டி எரியும் நாளில் கழற்ற வேண்டும், அதுதான்ஒரு பெண் தனது கணவனுக்கு விசுவாசமானவள் என்பதற்கு அடையாளம், தமிழ்ப்பண்பாட்டின்படி தாலி கட்டியவள் கட்டாயம் இதைச் செய்ய வேண்டும் இந்து சமயம் இதைத்தான் சொல்கிறது, இதைச் செய்யத் தவறினால் இறந்த கணவனின் ஆத்மா சாந்தியடையாதுஎன பலவாறான புலம்பல்கள் புதுக்கதைகள்சொல்லப்பட்டன.

24.11.07 அன்று உறவினர் நண்பர்கள் முன்னிலையில் மரணக்கொண்டாட்டம் நடைபெற்றது. வரவிருந்த ஐயர் வராமல் முக்கியமானவர்கள் என சிலர் முன்னின்று மரணக்கொண்டாட்டம் நடந்தது.

கடுங்குளிரில் மனைவி சேலையுடுப்பிக்கப்பட்டு தாலி அணிவிக்கப்பட்டு இறந்தவரின் சவப் பெட்டிக்கு முன்னால் நிறுத்தப்பட்டு சடங்கு ஆரம்பமாகியது.

கதிரையில் வைக்கப்பட்ட நிழற்படத்துக்கு அரப் பெண்ணை, வாய்க்கரிசிபோட்டு இறுதி நிகழ்வாக தாலிகழற்றல்,மணநாளில் முதல் மனைவி கட்டிய கூறைச்சேலையை சவப்பெட்டியில் வைத்தல் ஆரம்பமாகியது.

மேடைக்கு முன்னின்று ஆண்கள் சிலர் சொல்லச் சொல்ல அப்பிடிச் செய் அப்பிடிச் செய்யென அருகில் துணை நின்ற பெண்ணொருவர் ஆணையிட்டுக் கொண்டிருந்தார்.

ஐயோ நானிந்தக் கூறையை ஆசைக்குக்கட்டேல்லயே...
கவனமாயெல்லோ காத்துவைச்சிருந்தனான்.....
ஐயோ நானென்னண்டு இதை உங்கடை பெட்டியிலை போட....
சிலநிமிடம் கதறலுடன் கூறைச் சேலை சவப்பெட்டிக்கு விரிக்கப்படுகிறது.

ஐயோ நான்பொட்டு வைக்காமல் வெளியில போகமாட்டேனே என்ரை சந்தோசமெல்லாத்தையும்கொண்டு போட்டியளேயப்பா....
ஓயாத அந்தப்பெண்ணின் அμகை....
மரண வீட்டிற்கு வந்திருந்த வெளிநாட்டவர்களையும் அந்தக் கதறல் கலவரப்படுத்தியது.

இறுதி நிகழ்வாக தாலி கழற்றல் ஆரம்பம்.
ஐயோ நான் கழட்ட மாட்டேன்....
என்னைவிடுங்கோ....
இல்லை நீங்கள் கழற்றி வைச்சால்தான்உங்கடை கணவன்ரை ஆன்மா சாந்திபெறும்கழட்டுங்கோ...
கழட்டுங்கோ....
முன்னின்றஆண்களின் கட்டளைகள் இவை.

ஐயோ பாரப்பா எழும்பி கழட்டிக்க வேண்டாமெண்டு சொல்லப்பா...
நானென்ன பாவம் செய்தனானான்....
உன்னொடை வாழத்தானேயப்பா வெளிநாடு வந்தனான்.....
எனக்கேனிந்த நிலை....
நான் கழட்டிப்போடுறதுக்காக அவரிதை எனக்குக் கட்டேல்ல நான் போடத்தான்இதைக் கட்டினவர்....
நான் கழட்டமாட்டேன்என்னை விடுங்கோ....
உங்களுக்கு உங்களுக்கெண்டு வந்தாத்தான் என்ரை நிலை விளங்கும் என்னை விடுங்கொ.....
ஐயோ கடவுளே ஏனிப்பிடியொரு சம்பிரதாயத்தைப் படைச்சியோ....
என்ரை சந்தோசமெல்லாம் போகுதே.....

இந்தக் கதறலைக் கேட்ட பின்னும் யாரால்தான் அமைதியாக நிற்க முடியும். சம்பந்தப்பட்டவர்களிடம் வேண்டினேன்.
அவவை விடுங்கோ அவவிரும்பாததை செய்ய வேண்டாம்.

சம்பிரதாயம் என்ற போர்வையில் ஒரு பெண்ணின் விருப்பம் நிராகரிக்கப்பட்டு கட்டாயப்படுத்தலை என்னைத் தவிர சபையில் இருந்த எந்தப் பெண்ணுக்கும் எதிர்த்துக் கேட்கும் துணிவு இல்லாமல் போய்விட்டது.

கணவனை இழந்த பெண்ணுக்கு வாழ்வின் மீதான நம்பிக்கையை ஊட்டாமல் ஒவ்வொன்றாய் பறித்தெடுத்தல் எந்தச் சட்டத்தில் எழுதப்பட்ட விதி? கணவன் இறந்தால் உன் கதை சரி என்ற விதியா பெண்ணுக்கு? இதை யார் இயற்றினார்?

முதலில் மனைவி இறந்தால் ஆணுக்கு இப்படியொரு சடங்கு இந்து மதத்தில் இதுவரை இயற்றப்படவில்லையா ?

சபையில் நின்ற ஒரு மனிதர் சபையில் இருந்த தன் உறவுக்காரப் பெண் ஒருவரை அழைத்து போயதைக் கழட்டிவிடுங்கோ அது கழட்டுதில்லை என அழைக்க, சினிமாக்களில் பார்த்தவில்லத்தனமான பாத்திரம் போல அந்தப்பெண் எழும்பி வந்து 'கழட்டுங்கோ எனஅருகில் லண்டனிலிருந்து வருகை தந்திருந்தபெண்ணுமாகச் சேர்ந்து கழட்டு கழட்டென்றுகத்திக் குழறி அந்தப் பெண்ணின் தாலிகழற்றப்பட்டு சவப்பெட்டியின் மேல் போடப்படுகிறது.

இரத்த உரித்துடைய ஆண்களும் பெண்களும் தாலியறுப்புக்குக் காரணமானவர்களும் சேர்ந்து ஒப்பு வைத்துக் கதறி தாலியறுத்து முடிந்தது.

இந்த அநியாயத்தை பொறுக்க முடியாத எனது கோபத்தைப் பார்த்த ஒரு பெண் சொன்னார்.

` சாந்தி நாங்கள் முதலில செத்துப்போயிடவேணும் இல்லாட்டி எங்களுக்கும் உந்த நிலைதான் என்றார்'

இதென்ன விதியிது கணவனின் இறப்புடன் மனைவியின் வாழ்வை முடிப்பதா ?

`இப்பவே சாவுங்கோ இளமையிலை போனா இன்னும் நல்லமே.' சொல்லத்தான் வாய் எழுந்தது. ஆனால் அதைச் சொல்லவில்லை நான். நல்லவேளை நெருப்பிருந்தால் நெருப்புக்குள்ளும் அந்தப் பெண்ணைத் தள்ளிவிட்டிருப்பார்கள். `கணவன் இறந்த துயர் தாளாமல்மனைவி தீயில் எரிந்தாள்' என தலைப்புச்செய்தி வந்திருக்கும்.

எல்லாம் முடிந்து சவப்பெட்டியை சவக்காலை எடுத்துச் செல்லுமுன் அந்த அதிகாரி கேட்டார். கூறைச் சேலையைக் காட்டி பிணத்தை எரிக்கும் போது இதையும் எரிக்கிறதா?
எரிக்கச் சொல்லுங்கோ என்று பலர் சொன்னார்கள். தாலியை அறுத்தவர்கள் தாலியைப் பையொன்றில் திரும்பப்போட்டு பத்திரமாக வீட்டுக்குக் கொண்டு செல்ல வைத்திருந்தார்கள்.

`தாலி தங்கமென்றதாலை வீட்டுக்குக் கொண்டு போகலாம் கூறைச்சேலை தங்கத்தைவிடமலிவு ஆகையால் எரிக்கலாம்' அந்த இடத்தில் நின்றவர்களுக்குக் கேட்கும்படி சொல்லிவிட்டு கனத்த மனதோடு வெளியேறுகிறேன்.

மேற்படி சடங்குபற்றி எல்லோருமே திருப்திப்பட நானும் என்னவனும் முரண்பட்டுக் கொண்டது புதுமையுமில்லை புரட்சியுமில்லை பெண்ணியமுமில்லை. ஒரு இறப்பிற்கு விலை இன்னொரு உயிரை வதைத்தல் இல்லையென்றமனிதாபிமான எண்ணமே தான்.

சடங்கென்று பெண்ணை் கொடுமைப்படுத்தி மரண வீட்டில் வதைப்பது இன்னொரு திருமணத்தைப்பெண் விரும்பாமலிருப்பதற்கான முன்னோரின் உத்தி. இந்த 21ம் நூற்றாண்டிலும் இந்துமதச் சடங்கு தமிழ்ப்பண்பாடு என பம்மாத்துப் பண்ணுவது சம்பந்தப்பட்டவர்களின்அறியாமைதான்.

தாலிகழற்றலை முன்னின்று செய்வித்தவர்களும் சம்பிரதாயப் பம்மாத்துக்காரர்களும்`சாந்தியென்றவ யார் உதைப்பற்றிக் கதைக்க ?உவவென்ன புரட்சியோ செய்யப்போறா ? உவாக்கேன் உந்தத் தேவையில்லாத வேலை?உவாடை ஊரிலை உப்பிடியில்லைப்போலை ?உவவுக்கேன் நோகுது ? நாடுநாடாக தொலைபேசியில் என்னைச் சபிப்பவர்கள் அனைவருமே சபியுங்கள். எனக்கு எந்தவித கவலையுமில்லை.
- சாந்தி ரமேஷ் வவுனியன் -

தர்மஅடி

9:39 AM, Posted by sathiri, No Comment

தர்மஅடி

இந்த வார ஒரு பேப்பரிற்காக

தர்மஅடி என்பது அனேகமாக ஊர்விட்டு வேறை ஊருக்குபோய் ஏதாவது பிரச்னை வந்தால் தான் அனேகமாக இந்த தர்மஅடி கிடைக்கசந்தர்ப்பம் உண்டு. உங்களிலும் சிலபேர் இந்த தர்ம அடி எங்கையாவது வாங்கியிருக்கலாம் அல்லது தர்ம அடிகிடைக்க இருந்த நேரத்தில் தப்பியிருக்கலாம்.அதையெல்லாம வெளியில் சொல்ல மனம் வராது எப்பவாவது மனசுக்குள்ளை நினைத்து சந்தோசப்பட்டு கொள்ளுவிங்கள். அதே போல நானும் ஒரு மறை தர்ம அடி வாங்கியிருக்கிறேன் என்பதை பெருமையுடன் சொல்வது மட்டுமல்ல அதை நான் மட்டும் மனதுக்:குள்ளேயே நினைத்து நினைத்து பெருமைப்பட்டுக்கொள்ளும் வஞ்சக எண்ணம் எனக்கு இல்லை எனவே உங்களிற்கும் தாராள மனதுடன் சொல்லி பெருமைப்பட்டு கொள்கிறேன்.இந்த தர்மஅடி விழுகிறது என்றாலே உடனேயே சொல்லி விடலாம் யாராவது பெட்டையுடன் சேட்டை விட்டிருப்பினம் அல்லது ஏதாவது காதல் பிரச்சனையாய் இருக்கும்.

இவை இரண்டையும் தவிர்த்தால் வேறு காரணங்கள் குறைவாகத்தான் இருக்கும்.சரி விசயத்துக்கு வாறன் இதுவும் 80 களில் நடந்த கதைதான்.எங்கள் ஊரில் எங்கள் கோயில் மடத்து நண்பன் ஒருவனிற்கு அளவெட்டி கிராமத்தில் உறவுக்காரர்கள் இருந்தார்கள். அவனும் அந்த உறவுக்காரர்கள் வீட்டிற்கு போய்வந்து கொண்டிருந்த பொழுது அவர்களது அயல் வீட்டு பெண்ணொருவருடன் கடலையை போட்டு காதல் ஏற்பட்டு விட்டது. அந்தக்காதல் கதை கொஞ்சம் ஊருக்குள் கசியத்தொடங்கவே எனது நண்பனை அவனது உறவுக்காரர்கள் தங்கள்: வீட்டிற்கு வரவேண்டாம் என்று சொல்லி விடவே அவனும் எப்படியோ கஸ்ரப்பட்டு வேறு வழிகளில் அடிக்கடி அந்த பெண்ணை சந்தித்து கதைத்த கொண்டுதான் இருந்தான். இது இப்பிடி இருக்க அளவெட்டி கும்பிளாவளை பிள்ளையார் கோயில் கொடியேறி திருவிழா தொடங்கியது. பிறகென்ன ஊரிலை கோயில் கொடி ஏறினாலே இளசுகளிற்கு கொண்டாட்டம் தானே.

இவனும் ஏறிய பிள்ளையார் கோயில் கொடியை தன்னுடைய காதல் கொடி ஏறியதாகவே நினைத்து நம்ம நண்பனுக்கு தலைகால் தெரியாத சந்தோசம் ஏணெண்டால் இனி 25 நாழும் அவனுடைய ஆள் கோயிலுக்கு தவறாமல் வரும் இவனும் கோயிலுக்கு போகிற சாட்டிலையே கச்சானோ சோழப்பொரியோ வாங்கி தின்றபடி தன்னுடைய ஆளுடன்: கடலை போடலாம் அதுதான் அவனது சந்தோசத்துக்கு காரணம். ஆரம்பத்தில் தனியாகவே ஏதோ பக்தி முத்தினவனைப்போல காலையும் மாலையும் போய் அந்த பெண்ணின் தரிசனம் வாங்கி வந்து கொண்டிருக்கவே இவன் போய் வந்தது பெண்ணின் வீட்டு காரருக்கு தெரிந்து பெண்ணை மாலை திருவிழாவிற்கு போக விடாமல் தடுத்து விட்டனர். பகல் திருவிழாவிற்கு அதுவும் யாராவது துணையுடன்தான் அனுப்புவினம். இது நம்ம சினேகிதனுக்கும் கொஞ்சம் பயத்தை கொடுக்கவே. அவனும் எங்களிற்கு சோடா கச்சான் வாங்கி தருவதாக கொல்லி எங்களையும் கெஞ்சி கூத்தாடி துணைக்கு கூட்டிக்கொண்டு போவான்.

பிறகென்ன எங்களிற்கும் வீரம் பிறந்துவிடும் டேய் நாங்கள் இருக்கிறம் கவலைப்படாதை நீ பயப்பிடாமல் போய் உன்ரை ஆளோடை கதை நாங்கள் பாத்து கொள்ளுறம் என்றபடி உள்ளுக்கை உதறல் எடுத்தாலும் அதை காட்டிக்கொள்ளாமல் அவன் வாங்கி தந்த சோடாவை உறுஞ்சியபடி கோயில் வீதியை சுற்றி வந்து கொண்டிருந்தோம். அவனும் எப்படியாவது அந்தப்பெண்ணை சந்தித்து ஒரு வசனமாவது பேசி விட்டு வந்து விடுவான். ஆனால் கோயில் திருவிழாவும் முடிந்து தேர்த்திருவிழாவை நெருங்க நெருங்க அந்த பெண்ணிற்கும் பாதுகாப்பு கூடிக்கொண்டே போனது.அதனால் ஆரம்பத்தில் நண்பனிற்கு உதவியாய் இரண்டு மூன்று பேர் மட்டுமே போய் கொண்டிருந்த நாங்களும் பாதுகாப்பிற்காக ஆக்களின் எண்ணிக்கையை கூட்டவேண்டி வந்தது.அதாவது தேர்த்திருவிழா அன்று வழைமை போல நாங்கள் ஒரு எட்டுப்பேரளவில் போயிருந்தோம். கும்பிளாவளை பிள்ளையார் கோயில் பிரபலமான ஒரு கோயில் என்பதால் பல ஊர்களிலும் இருந்து வந்திருந்த பக்தர்காளால் நிரம்பியிருந்தது.

எனவே அதற்குள் அவனது ஆளை தேடிப் பிடிப்பதென்பது சிரமமாய் இருந்தது .உடனே போனடிச்சு " கலோ நீ எந்த வீதியிலை நிக்கிறாய்" எண்டு கேப்பதற்கு அந்தக்காலத்தில் என்ன கைதொலைபேசியா இருந்தது. இப்ப நானும் மனிசியும் இஞ்சை சுப்பர்மாக்கற்றுக்கை போனாலே மனிசியை காணாமல் நான் சில நேரம் போனடிச்சு எங்கையப்பா நிக்கிறாய் எண்ட மனிசி பின்னாலை நிண்டு நுள்ளிப்போட்டு ஏனப்பா கத்துறாய் பின்னாலைதான் நிக்கிறன் எண்டும்.சரி திரும்ப அளவெட்டிக்கே போவம்.சன நெருக்கம் கூட இருந்ததாலை நாங்கள் இரண்டு பிரிவா பிரிஞ்சு அந்த பெண்ணை தேடுறதெண்டு முடிவெடுத்தம். எனக்கு அந்த பெண்ணை தெரியும் எண்டதாலை என்னோடை ஒரு குறூபும் நண்பனோடை மற்ற ஒரு குறூப் எண்டு தேடுறது கடைசியாய் தேரடியிலை சந்திக்கிறது எண்டு முடிவெடுத்து தேடதொடங்கினம். எனது நண்பனும் ஒரு பக்கற் சோழப்பொரியை வாங்கிக்கொண்டு தனது காதலியை தேடபோய் விட்டான்.உள்வீதி வெளிவீதி எண்டு மாறி மாறி சுத்தியும் அவளை கண்டு பிடிக்கமுடியவில்லை.

பூசை முடிஞ்சு தேரும் இழுத்து முடிஞ்சு அன்னதானமும் தொடங்கி விட்டிருந்தது. நண்பனின் கையில் இருந்த சோழப்பொரியும் கசிந்த வியர்வையில் நசிந்து போயிருந்தது.நான் நண்பனிடம் சொன்னன் டேய் அவள் வரேல்லை போலை அன்னதானமும் தொடங்கிட்டு பசிக்கிது அதாலை வா பேசாமல் சாப்பிட்டு போவம் எண்டவும்.நண்பனோ விடுவதா இல்லை "இல்லையடா கட்டாயம் எப்பிடியும் வருவன் எண்டவள் சனம் கூடவா இருக்கு அதாலைதான் கண்டு பிடிக்க ஏலாமல் இருக்கு கொஞ்சம் பொறுப்பம் சனம் குறைய எப்பிடியும் சந்திக்கலாம்" எண்டான். அவனைப்பாக்கவும் பாவமாய் இருந்தது. அப்பதான் குழந்தையை தவற விட்ட யாரோ ஒருவர் தன்னுடைய பிள்ளையின் வயது போட்டிருந்த சட்டையின் நிறம் எல்லாம் சொல்லி ஸ்பீக்கரில் அறிவித்துக்கொண்டிருந்தார்஼br />?ள். அப்பதான் எனக்கு திடீரெண்டு ஒரு யொசினை வந்தது.

உடனை நண்பனிட்டை சொன்னன் சரி உன்ரை ஆள் கோயிலுக்கு வந்திருந்தால் கட்டாயம் சந்திக்கலாம் அதுக்கு என்னட்டை ஒரு ஜடியா இருக்கு வா எண்டு அவனை இழுத்துக்கொண்டு மைக் செற் இருந்த இடத்துக்கு போய் மைக் காரரிடம் நண்பனைக்காட்டி "அண்ணை நாங்கள் கோயிலுக்கு வந்த இடத்திலை இவரின்ரை தங்கச்சியை மாற விட்டிட்டம் இப்ப அவசரமா வீட்டை போகவேணும் அதாலை ஒருக்கா மைக்கிலை அறிவிக்க வேணும்" எண்டவும். மைக்காரர் பெயர் வயசு போட்டிருந்த சட்டை நிறம் எண்டு விசாரணையை தொடங்க நான் சொன்னன் "அண்ணை அவாவுக்கு வயசு 15 நீங்கள் அவாவின்ரை பெயரை மட்டும் சொல்லி இவனின்ரை பெயரையும் சொல்லி இவர் தேடுறார் அதாலை உடைனை தேரடிக்கு வரச்சொல்லி விடுங்கோ எண்டவும்.

மைக்காரருக்கு கொஞ்சம் சந்தேகம் வந்திரக்க வேணும் எங்களை ஒரு மாதிரியாய் பாத்தபடியே அந்த பெண்ணின் பெயரை சொல்லி அவரது அண்ணன் தேடுகிறார் உடனடியாக தேரடிக்கு வரவும் எண்டு என் நண்பனின் பெயரையும் அறிவித்து விட்டார். நாங்கள் உடனடியாக தேரடிக்கு போய் நின்று கொண்டோம்.சரி இனித்தான் கிளைமாக்ஸ். சனக்கூட்டமும் குறைந்திருந்தது கொஞ்ச நேரத்தில் திடீரெண்டு எங்களுக்கு முன்னாலை அந்த மைக்செற் காரர் எங்களை பாத்து இவங்கள் தான் ஆக்கள் என்டு கையை காட்டினார்.அவருக்கு பின்னாலை பி.வாசுவின்ரை படங்களிலை வாற வில்லனின்ரை கையாட்கள் மாதிரி வெள்ளை வேட்டி சட்டையோடை ஒரு பத்து பதினைஞ்சு பேர் எங்களை நோக்கி பாஞ்சினம்.என்ன நடக்கபோகுது எண்டு நினைக்கிற அந்த செக்கனிலேயே அடிவிழத்தொடங்கியது.அளவெட்ட༢r />?? பகுதி பெரும்பாலும் விவசாயம் செய்யிற ஆக்கள் மண்வெட்டி பிடி்ச்ச கையாலை அடிவாங்கினால் எப்பிடி இருக்கும் எண்டு ஒருக்கால் கற்பனை பண்ணிப்பாருங்கோ.

யாருக்கு எப்பிடியெல்லாம்அடி விழுந்தது எண்டு தெரியாது . காதைப்பொத்தி எனக்கும் ஒரு அடி விழுந்தது. ஏதோ யாழ்தேவி றெயின் இடம்மாறி கும்பிளாவளை பிள்ளையார் கோயில் வீதியாலை ஓடினது மாதிரி எனக்கு ஒரு உணர்வு. அதே நேரம் பின்னாலை இருந்து யாரோ சேட்டிலை பிடிச்சு இழுக்க நல்லவேளை நான் போட்டிருந்தது கொஞ்சம் பெரிய சேட்டு அது மட்டுமில்லை கழுத்திலை போட்டிருந்த சங்கிலி வெளியாலை தெரியட்டும் எண்டு இரண்டு தெறியையும் களட்டிவிட்டிருந்த படியால் சுலபமாய் சேட்டை உருவி கழட்டிவிட்டு ஓடிப்போய் சைக்கிளை எடுத்துக்கொண்டு அளவெட்டி தோட்டவெளி வரம்பாலை ஓடி ஒரு மாதிரி வீட்டை வந்து சேந்திட்டன். எங்களோடை வந்த ஒருநண்பன் சைக்கிளைக்கூட எடுக்கவில்லை ஓடியந்திட்டான்.மறுநாள் எனக்கு காதில் இரைச்சல் குறைந்திருந்தாலும் ஒரு பக்கத்துகாது சரியாய் கேட்காத மாதிரி ஒரு உணர்வு தலையை சரித்து காதுக்குள் விரலை விட்டு குடைந்தபொழுது காய்ந்துபேன இரண்டு சோத்து பருக்கை வெளியில் வந்தது.அப்பதான் விழங்கியது பாவிப்பயல் யாரோ அன்னதானத்திலை சாப்பிட்டிட்டு கையை கழுவாமலேயே சோத்துக்கையாலை அடிச்சிருக்கிறான்.

பசிக்கிறவைக்கு சோறு போட்டால் தர்மம் எண்டிறவை .அதுமாதிரி சோத்து கையாலை அடிக்கிறதைத்தான் தர்மஅடி எண்டு எனக்கு அப்பதான் விழங்கினது. அடுத்தநாள் வழைமைபோல நாங்கள் எங்கடை கோயில் மடத்திலை சந்திச்சு எவருமே அடிவாங்காத மாதிரி கதைத்து கொண்டோம். எனது நண்பனோ பிறகு தன்னுடைய காதலியை காணமுடியாமல் சோகத்தில் சில நாட்கள் திரிந்தான் ஒரு நாள் மாலை வழைமையாய் கோயில் மடத்திற்கு வந்தவன் கலகலப்பாய் கதைத்துவிட்டு எங்கள் எல்லோருக்கும் பணிஸ்சும் சோடாவும் வாங்கித்தந்தவன் அன்றிரவு தங்கள் தோட்டத்திற்கு போய் பொலிடோலை(பூச்சிமருந்து) குடித்து தற்கொலை செய்துகொண்டுவிட்டான்.

ஆத்தா நான் வயசுக்கு வந்திட்டேன்.

11:33 AM, Posted by sathiri, 7 Comments

ஆத்தா நான் வயசுக்கு வந்திட்டேன்.

அண்மையில் யெர்மனியில் உள்ள பெண்ணியவாதி ஒருவருடன் புலம்பெயர் தேசத்தில் பெண்களின் பிரச்சனைகள் பற்றியவிடயங்களை உரையாடிக்கொண்டிருந்த பொழுது அவர் புலத்தில் இன்று பூப்புனித நீராட்டுவிழா எண்டது ஒரு வியதி மாதிரி பரவி அதன் உள்ளே தென்னிந்திய சினிமா மோகமும் கலந்து பெற்றோர் பெண்பிள்ளைகளை படாத பாடு படுத்துகின்றனர் என்று கவலைப்பட்டா.அவாவிட்டை நான் சொன்னன் அக்கா அது எங்கடை பண்பாடு கலை கலாச்சாரம் காலம் காலமாய் எங்கடை முன்னோர்கள் செய்து வந்தது நாங்களும் அவையளை போலவே ஏன் எதுக்கு எண்டு தெரியாமல் அதுகளை ஆராயாமல் தொடர்ந்து செய்யவேணும் அப்பதான் எங்கடை இனத்துக்கும் கலாச்சாரத்துக்கும் பெருமை வேணுமெண்டால் இன்றைய தொழில் நுட்பத்தையும் புகுத்தி ஏதாவது செய்து தொடர்ந்து செய்யவேணும் என்று அடிச்சு சொல்லிபோட்டு இருக்க.

பாரிசிலை என்ரை நண்பன் ஒருதனின்ரை மகளும் பருவமடைஞ்சிட்டுது. அவன் அதை கொண்டாட பெரிய மண்டபம் எடுத்து காட் எல்லாம் அடிச்சிட்டு எனக்கு செய்தியை சொல்ல போனடிச்சு கதைச்சு கொண்டிருக்கும்பொழுது சொன்னான் டேய் பாரிசிலை ஏன் யுரோப்பிலையே ஒருத்தரும் செய்யாத அளவுக்கு விசேசமா மகளின்ரை சாமத்திய வீட்டை செய்யவேணும் எல்லாம் ஏற்பாடு செய்திட்டன் ஆனாலும் எல்லா நிகழ்ச்சியிலையும் முக்கியமானது இந்த வீடியோ ஏணெண்டால் அதைதான் விழாவுக்கு வரஇயலாத ஆக்கள் மற்றது ஊரிலை உள்ளவை எல்லாருக்கும் அனுப்பிறது. அது மட்டுமில்லை பிறகும் வீட்டுக்கு வாற ஆக்களுக்கும் போட்டுக்காட்டி பெருமையடிக்கிற ஒரு முக்கியமான சாமான் அதாலை இந்த வீடியோவிலையும் இப்ப எல்லாரும் ஒரு வித்தியாசத்தை செய்யினம். அதாலை எல்லாரும் மற்றசாமத்திய வீடுகளிலை எடுக்காத மாதிரி அந்த வீடியோ ஆரம்பத்தை அதாவது ஓப்பினிங் வித்தியாசமா வாற மாதிரி சினிமாப்பட ரேஞ்சுக்கு ஒரு யோசனை சொல்லு எண்டான்.

எனக்கு தலை சுத்த தொடங்கிட்டுது இதென்னடா வில்லங்கம். செய்யிறது சாமத்திய வீடு இதிலை வித்தியாசமான ஓப்பினிங் வேணுமெண்டால் நான் எங்கை போறது எண்டு யோசிக்க.அவனும் விடுறமாதிரி இல்லை .நீதானே கதையெண்ட பேரிலை எத்தினை அறுவையளை எழுதிறாய் அதாலை கட்டாயம் நீ கொஞ்ச யொசனை சொல்லத்தான் வேணுமெண்டு அடம்பிடிக்க நானும் "சரி கஸ்ரப்பட்டு யோசிக்கிறதை உனக்கு மட்டும் சொல்லாமல் எல்லாரும் பாக்கிறமாதிரி வழைமை போல பேப்பரிலையே எழுதி போடுறன் அதிலை விருப்பமானதை எடுத்து உன்ரை ஓப்பினிங்கிலை போடு என்று சொல்லி விட்டன். இதோ உங்கள் மகள்களும் வயதுக்கு வந்துவிட்டார்களா வீடியோவில் வித்தியாசமான ஆரம்பத்துடன் படமாக்க வேண்டுமா பெரும்சிரமப்பட்டு யோசித்தில் எனக்கு தோன்றிய சில யோசனைகள்.

1)வீடியோ ஸ்ராட். பாரதிராஜாவின் பதினாறு வயதினிலே படத்தில் சிறீதேவி ஓடிவந்து ஆத்தா நான் பாசாயிட்டேன் என்று கத்தியபடி எழும்பி குதிப்பார் அப்போது அவரை அந்தரத்தில் நிறுத்தியபடி கதை வசனம் டைரக்சன் பாரதிராஜா எண்டு எழுத்து விழும் அது போலவே உங்கள் மகள் அறையில் இருந்து ஓடிவந்து உங்கள் வரவேற்பறையில் ஆத்தா நான் வயசுக்கு வந்திட்டேன் என்று கத்தியபடி எழும்பி குதிக்கும் போது அப்படியே அந்தரத்தில் அவரை நிறுத்தி விட்டு பூப்புனித நீராட்டுவிழா என்று எழுத்தோட்டம் போடலாம்.

2)இப்ப வெளிநாடுகளிலை தமிழ்கடை காரரிட்டை சொல்லி இந்தியா தாய்லாந்து ஆகிய நாடுகளிலை இருந்து குருத்தோலை முதல் காவேலை வரை இறக்குமதி செய்யலாம். எனவே தென்னிந்திய கிராமங்களில் வயசுக்கு வந்த பெண்ணை பரிசம் போடுவது போல . நீங்களும் தென்னோலை வரவழைத்து உள்கள் வீட்டு குளியலறையில் கூடுமாதிரி கட்டி தாய்மாமனை விட்டு தண்ணீர் ஊற்றசொல்லி வீடியோ எடுக்கலாம். வசதியெண்டால் உங்கள் வீட்டுக்கு பக்கத்தில் ஏதாவது பூங்கா இருந்தால் அங்கும் தென்னோலையால் கூடு கட்டி செய்யலாம்.இயற்கையாகவும் நல்ல ஓப்பினிங்காகவும் இருக்கும்.ஆனால் உங்கள் மாநகரசபை உங்கள் மீது வழக்கு போட்டால் நான் பொறுப்பு அல்ல.

3)அடுத்ததா ஒரு சங்கர் பட ஸ்ரைலில் உங்கடை பெண்ணிற்கு மேற்கத்தைய மொடேண் உடுப்பு மினியோ மிடியோ கையில்லாத முண்டா பெனியனோ போட்டு அவாவோடை படிக்கிற ஒரு பத்து வெள்ளைக்கார பெட்டையளை பிடிச்சு பாவாடை தாவணியை போட்டு அவையை உங்கடை மகளை சுத்திவர ஆடவிட்டு பின்னணியிலை ஒரு பாடலை போட்டு ஒரு ஓப்பினிங்கை குடுக்கலாம். பின்னணி போடக்கூடிய சில பாடல்கள் சட்டென்று எனக்கு நினைவுக்கு வந்தவை
1) சக்கரவள்ளி கிழங்கு மாமா சமைஞ்சது எப்படி எப்படி
2)பூசைக்கேத்த பூவிது நேத்து தானே பூத்தது பூத்தது யாரதை பாத்தது
3)நான் ஆளான தாமரை ரெம்ப நாளாக தூங்கலை

4)அடுத்ததாக எல்லா வீடியோ காரரரையும் போலை ஆரம்பத்திலை சோடினையளையும் இயற்கைக்காட்சியளையும் காட்டாமல் பெண்ணின் தகப்பனை காட்டலாம். அவர் பாரதிராஜா ஸ்ரைலில் இரண்டு கையையும் தலைக்கு மேலை தூக்கி கும்பிட்டபடி "என் இனிய சொந்த பந்தங்களே புதிதாய் பூப்படைந்து புறப்பட்டு வருகிறாள் என் புத்திரி.அவளிற்காய் வட்டிக்கு பணமெடுத்து பெருமெடுப்பில் விழா எடுக்கிறான் இந்த தந்தை.நீங்கள் வாயார வாழ்த்தாவிட்டாலும் பரவாயில்லை வயிறார சாப்பிட்டதற்கு வஞ்சகம் பண்ணாமல் பொய் செக் (காசோலை)எழுதிதராமல் மெய்யாய் மொய் எழுதிபோகும்படி கேட்டுகொள்கிறேன்.நன்றி

இப்பிடி கனக்க யோசனையள் இருக்கு ஆனால் எல்லாத்தையும் இஞ்சை எழுதஏலாது வெட்டிபோடுவாங்கள். எழுத்தை மட்டுமில்லை என்னையும் சேத்துதான். அதாலை மேலதிக ஆலோசனை தேவைப்படுகிற ஆக்கள் என்னோடை மின்னஞ்சலிலை தொடர்பு கொள்ளுங்கோ.சரி கடைசியா ஒரு ஆலோசனை இந்த சாமத்தியபட்ட பிள்ளையளுக்கு வாழ்த்து சொல்லுறவை றேடியோவிலையோ இல்லாட்டி தொலைக்காட்சியிலையோ வாழ்த்து சொல்லுற ஒரு நிகழ்ச்சியை ஆரம்பிக்கலாம். அது மட்டுமில்லை வாழ்த்து சொல்லுறவை கொஞ்சப்பேர் ஒண்டாய் சேர்ந்து தங்கடை பெயர்களை போட்டு ஒரு வாழ்த்து நோட்டிஸ் அடிச்சு தமிழ் ஆக்கள் அதிகமாய் இருக்கிற இடங்களிலையும் ஒட்டலாம் நன்றி சாத்திரி

பிரான்சில் கைது செய்யப்பட்ட தமிழர்களை விடுவிக்கக் கோரி கையொப்பம் சேகரிப்பு

1:35 PM, Posted by sathiri, One Comment

பிரான்சில் கைது செய்யப்பட்ட தமிழர்களை விடுவிக்கக் கோரி கையொப்பம் சேகரிப்பு

விண்ணப்பம் பற்றிய விபரத்தின் தமிழாக்கம் :

30 வருடங்களாக சிங்கள அரசாங்க அடக்குமுறையை எதிர்த்து தமிழர்கள் போராடி வருகிறார்கள். போராலும் ஆழிப் பேரலையாலும் பாதிக்கப்பட்ட இலட்சக்கணக்கான தமிழர்கள் வீடுகளை இழந்து முகாம்களில் வாழ்ந்து வருகிறார்கள். 70 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் போரினால் உயிரிழந்துள்ளனர்.


கடந்த சில வருடங்களாக மனித உரிமை மீறல்கள் பாரிய அளவில் மீறப்படுகின்றன. கடந்த 2 வருடங்களாக ஆள்கடத்தல்களும் கொலைகளும் அதிகரித்துள்ளதாக Human Rights Watch கூறியுள்ளது. தமிழர் பகுதிகளுக்கான பிரதான பாதைகள் மூடப்பட்டுள்ளன. பல அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்வது அரசாங்கத்தினால் தடுக்கப்படுகிறது.

அரச சார்பற்ற நிறுவனங்கள் மட்டுமே இப் பகுதிகளில் சேவயாற்றி வந்தன. ஆனால் இரண்டு வருடங்களாக மனித நேயப் பணியாளர்களும் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். 39 மனித நேயப் பணியாளர்கள் இக் காலப் பகுதியுல் கொல்லப்பட்டுள்ளனர். சர்வதேச மன்னிப்புச் சபை, Action Contre Faim அமைப்பைச் சேர்ந்த 17 பணியாளர்களின் கொலைக்கு இலங்கை அரசாங்கத்தைக் குற்றம் சாட்டியுள்ளது. இந்த நிலையில் அரச சார்பற்ற நிறுவனங்கள் தமது சேவைகளை நிறுத்தி வருகின்றன.

இன்று வெளிநாடுகளில் வாழும் தமிழர்களே தமது ஆதரவை TRO போன்ற சேவை நிறுவனங்களூடாக வழங்கி வருகின்றனர். ஏப்ரல் மாதம் CCT அமைப்பில் பணிபுரிந்த 15 தமிழர்கள் பொலிசாரினால் கைது செய்யப்பட்டனர். கடந்த ஆறு மாதங்களாக அவர்கள் தொடர்ந்தும் சிறையிலேயே வைக்கப்பட்டுள்ளனர். கவலை அடைந்துள்ள கைது செய்யப்பட்ட தமிழர்களின் குடும்பங்களையும் இலங்கையில் வாழும் தமிழர்களின் நிலையையும் கவனத்தில் கொண்டு உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு வேண்டுகிறோம்.

--------

கீழுள்ள இணைப்புக்குச் சென்று உங்கள் கையொப்பங்களைப் பதிவு செய்யலாம்.

http://www.gopetition.com/online/14849.html

தீவாளி

2:38 PM, Posted by sathiri, No Comment

தீவாளி

ஒரு பேப்பரிற்காக

தீபாவளியை தீவாளி என்றுதான் பேச்சு வழக்கில் ஊரில் சொல்லுவோம்.வருசா வருசம் தீபாவளி வரும்போதெல்லாம் இப்பொழுது தீபாவளி தமிழருடையதா??தீபாவளியை கொண்டாடலாமா? கூடாதா??என்று சர்ச்சைகளும் கட்டுரைகளும் வெளிவர ஆரம்பிக்கும். தீபாவளி ஏன் கொண்டாட வேணும் எண்டு எப்பவோ யாரோ சொல்லிவிட்டு போன நரகாசுரன் கதையிலை கொலைசெய்யப்பட்ட நரகாசுரனுக்கு வாழ்த்து சொல்லுற அளவுக்கு இப்ப நிலைமை வந்திட்டிது. ஏன் எதுக்கு எண்டு சரியான விபரம் தெரியாமலேயோ தமிழர் கொண்டாடுற பல பெருநாளிலை இதுவும் ஒண்டு.

அதையெல்லாம் ஒரு கரையிலை வைச்சிட்டு ஊரிலை சின்னிலை கொண்டாடின என்ரை சில தீபாவளி நினைவுகளை உங்களோடை பகிர்ந்து கொள்ளுறன். தீபாவளியை பலபேர் பல மாதிரி கொண்டாடுவினம் .இந்தியாவிலை அதுவும் வடநாடுகள்மற்றும் ராஜஸ்தான் மானிலத்திலை பெரியளவிலை 3 நாளைக்கு கொண்டாடறவை. ஒரு தீபவாளி கொண்டாட்டத்தை நான் ராஜஸ்தானிலை பார்த்திருக்கிறன். ஆனால் அங்கையெல்லாம் அன்று விரதம் இருந்து லக்சுமி தெய்வத்திற்கு படையல் செய்வது வழைமை.எங்கடை நாட்டிலையும் சிலபேர் அப்பிடிதான் செய்யிறவை ஆனால் எங்கடை ஊர்ப்பக்கம் தீபாவளி கொண்டாடுற விதமே தனி. சாதாரணமா மரக்கறி சாப்பிடுறவை கூட அண்டைக்குதான் மச்சம்(இறைச்சி). சாப்பிடுவினம். வீட்டுக்கு வெளியிலை அடுப்பு மூட்டி அதிலை ஆடு கிடந்து கொதிக்கும்.

அது மட்டுமில்லை பொதுவா தண்ணியடிக்காதவை கூட அண்டைக்கு மூக்கு முட்ட அடிச்சிட்டு செய்யிற கூத்துகள் அதுவே ஒரு திருவிழா மாதிரித்தான்.சிலர் கொஞ்சமா அடிச்சிட்டு சும்மா சினிமா காட்டுறவையும் இருந்தவை. பெரும்பாலும் ஊருக்கை பழைய கோபதாபங்களும் அண்டைக்குதான் தீர்க்கபடுறதுமட்டுமில்லை தண்ணியடிச்சவர் யாரோ தன்பாட்டிலை சிவனே எண்டு போய் கொண்டிருக்கிறவரை பாத்து டேய் உன்ரை பார்வை சரியில்லை எண்டு வம்புக்கிளுப்பினம் .சிலநேரம் அவருக்கு உண்மையிலேயே வாக்கு கண்ணாகவும் இருக்கும்.அண்டைக்கு எங்கடை ஊர் ஆஸ்பத்திரியிலை நேஸ்மாருக்கு வேலையும் கூட .ஏணெண்டால் வெட்டு கொத்து பட்டு கனபேர் வருவினம். அடுத்தா எங்கடை ஊரிலை தீபாவளி நாளுக்கெண்டே ஆட்டுக்கிடாயள் வளக்கிறவை. வீட்டிலை பிள்ளைக்கு பால்மா இருக்கோ இல்லையோ ஆட்டுக்கெண்டு விசேசமா முருக்கங்குளை தவிடு எண்டு ஊட்டி ஊட்டி வளப்பினம்.

பிறகு தீபாவளியண்டு நாலைஞ்சு குடும்பமா சேந்து வீட்டு வளவுக்கை இல்லாட்டி ஊர் ஒதுக்குபுறமா ஒரு இடத்தலை ஆட்டை வெட்டி பங்கு போடுவினம். பங்கு போடேக்கை சில நேரம் ஆட்டுக்குடலுக்குஅடிபட்டு ஆக்களின்ரை குடல் வெளியிலை வந்த கதையளும் நடந்திருக்கு.இதெல்லாம் பெரியாக்களின்ரை தீபாவளியெண்டால் இனி எங்கடை தீபாவளிக்கு வருவம். தீபாவளியண்டு எல்லாருக்கும் புது உடுப்பு வாங்கிறது வழக்கம். ஆறு ஏழு பிள்ளையள் எண்டு இருக்கிற நடுத்தர குடும்பங்களிலை எல்லா பிள்ளையளிற்கும் விதம்விதமாய் உடுப்ப வாங்கிறது எண்டது இயலாத காரியம்.அது மாதிரிஎங்கடை வீட்டிலையும் நாங்கள் ஆறு உருப்படி். அதாலை விசேசமான நாட்களிலை எங்கடை ஊர் சங்கக் கடைக்கு இலங்கை கைத்தெறி கூட்டுத்தாபனம் சிங்களத்திலை சலுசலா எண்டு சொல்லுறவை அந்த சலுசலா துணி வாறது ஒரு குறிப்பிட்ட டிசைன் துணி மட்டும் வரும்.விலையும் மலிவு.

அதைவிட எங்கடை மாமா ஒருதர் சங்கக்கடை மனேச்சரா இருந்தவர் அவரிட்டை சொல்லி விட்டால் இன்னமும் கொஞ்சம் மலிவா வாங்கியருவார். அனேகமான தீபாவளிக்கு எங்களுக்கு எல்லாருக்கும் சலுசலாதுணியிலை டிசைன் போட்டது சில மீற்றர் டிசைன் போடாதது சில மீற்றர் எண்டு வாங்குவினம்.எங்கடை ஊரிலை ஒரு தையல் காரர் இருந்தவர் எனக்கு தெரிந்து இதுவரை உலகத்திலேயோ மீற்றர் அளவை பாவிக்காமல் பார்வையிலேயே அளவெடுத்து தைக்கிற ஒரேயொரு கெட்டிக்கார தையல்காரர் அவர்தான். அவரிட்டை துணியையும் குடுத்து எங்களையும் காட்டிவிட்டால் போதும். அது மட்டுமில்லை தையல் காரரிட்டை அப்பா ஒரு வசனம்சொல்லுவார் "வளர்ற பிள்ளையள் பாத்து கொஞ்சம் பெருசா தையுங்கோ எண்டுவார்." பிறகென்ன பார்வையிலையே அளவெடுக்கிற தையல்காரர் எங்களை பார்க்காமலேயே தைக்கிற காற்சட்டையை நாங்கள் போட்டு அதுக்கு இரண்டு பக்கமும் ஊசி குத்திவிட்டால்தான் இடுப்பை விட்டு கீழை விழாமல் நிக்கும். அதோடை ஒரு கலர் துணியிலையே அண்ணனுக்கு சேட்டு அக்காக்கு சட்டை எனக்கு காற்சட்டை தங்கைக்கு பாவாடை எண்டு எல்லாம் தைச்சு மிச்ச துணி கொஞ்சம் பெரிசா மிஞ்சினால் வீட்டுக்கு யன்னல் சீலை அதிலையும் மிஞ்சினால் தலைகணி உறை எண்டு பல கலர் மயமா இல்லாமல் ஒரோயொரு கலர் மயமா இருக்கும்.

அடு்த்ததா தீபாவளியண்டு எங்களையெல்லாம் வரிசையா இருத்தி குளிக்க வாத்து புது உடுப்பை போட்டு எங்களுக்கு கையிலை ஆளுக்கொரு கற்பூரகட்டியை கையிலை தந்து கோயிலுக்கு அனுப்பி விடுவினம் கோயிலுக்கு போய் அதை கொளுத்தி கும்பிட்டிட்டு அடுத்த வேலையா ஊரிலை இருக்கிற எங்களுக்கு படிப்பிக்கிற வாத்தியார் மற்றும் எங்கடை சொந்த காரர் வீடுகளுக்கு போய் புது உடுப்பை காட்டிபோட்டு அவை கையிலை தாற சில்லறைகளை வாங்கி கொண்டு சந்தோசமா வருவம்.தீபாவளிக்கு மறுநாள் மட்டும் பாடசாலைக்கு சீருடை போடத் தேவையில்லை ஒரு நாள் விசேட சலுகை தருவினம் அண்டைக்கு நாங்கள் தீபாவளி உடுப்பை போட்டு கொண்டு போய் பள்ளிகூடத்திலையும் கலர் காட்டலாம்.

ஆனால் பலருக்கு தாய்தகப்பன் தீபாவளி உடுப்பே பள்ளிக்கூட சீருடையை வாங்கி குடுத்திருப்பினம் அவைபாடு அண்டைக்கு கவலைதான். இப்படித்தான் ஒரு தீபாவளிக்கு வழைமை போல எங்கள் ஆறு பேருக்கும் சலுசலா ஒரேகலர் துணியிலை தைச்ச உடுப்பை போட்டுக்கொண்டு நாங்கள் வரிலையாய் கோயிலுக்கு போய்கொண்டிருக்க வீதியிலை போன யாரோ ஒருத்தர் " சலுசலா விளம்பரம் போகுதடா டோய்" எண்டு கத்த அப்ப கொஞ்சம் வளந்திருந்த அண்ணன் கோபத்திலை வீட்டை வந்து சேட்டை கழட்டி எறிஞ்சதோடை சலுசலா துணி உடுப்பிலை கொஞ்சம் மாற்றம் வந்தது. பிறகு நாங்களும் வளர வளர வீட்டிலை காசை வாங்கி எங்களுக்கு பிடிச்ச துணியை வாங்கி யாழ்ப்பாணம் புதிய சந்தை கட்டிடத்திலை இருந்த நியூ டீசன்ஸ். ஈரான். எண்டு பிரபலமான தையல் கடைகளை நோக்கி போக ஆரம்பித்து விட்டடோம்.ஆனாலும் பார்வையிலேயே அளவெடுத்து தைக்கிற எங்கள் ஊர் தையல்காரருக்கும் மவுசு இருந்துகொண்டேதான் இருந்தது. இப்படியாக எங்களிற்கு நரகாசுரனை பற்றியதோ கிருஸ்ணர் அவதாரம் எடுத்து கொலை செய்ததை பற்றி கதையை பற்றிய அக்கறை எதுவுமே இல்லை. பின்னர் நாட்டில் பிரச்சனைகள் தொடங்கிய போதும் கூட குண்டுச்சத்தங்கள் வெடியோசைகளின் நடுவிலும் எங்களை பொறுத்தவை மகிழ்ச்சியான ஒரு பண்டிகையாக தீபாவளி வருடா வருடம் வந்து போய் கொண்டிருந்தது.

1987ம் ஆண்டும் தீபாவளி வந்தது ஆனால் வழைமையான இலங்கை இராணுவத்தின் வெடியோசையுடன் அல்ல மாறாக அமைதிகாக்கும் படை என்கிற முத்திரையுடன் வந்த இந்திய அழிவுப்படையின் வெடியோசைகள் மத்தியில் அந்த தீபாவளிநாள் விடிந்தது அன்று எனது தந்தையையும் எனது சகோதரியையும் இந்தியப்படைகள் எங்கள் வீதியில் வைத்து சுட்டுகொன்று கொழுத்திவிட்டு போயிருந்தனர். அன்றிலிருந்து ஒவ்வொரு தீபாவளி நாளும் எங்கள் குடும்பத்திற்கு நினைவுநாளாகி போனது.

போத்தல் பித்தளை அலுமினியம்.

10:42 AM, Posted by sathiri, No Comment

போத்தல் பித்தளை அலுமினியம்.

இந்தவார ஒரு பேப்பரிற்காக எழுதியது.

பேத்தில் பித்தளை அலுமினியம். இந்த சத்தத்தை ஊரில் கேட்காதர்களே இருந்திருக்க மாட்டீர்கள். ஒரு சைக்கிளில் பின்னால் இரண்டுபக்கமும் சாக்கு அல்லது உரப்பையை கட்டியபடி போத்தில் பித்தளை அலுமினியம் இருக்கா என்று கத்தியபடியே வருவார்கள்.வீடுகளில் உள்ள பழைய உபோகிக்க முடியாத இரும்பு பித்தளை சாமான்களை நிறுத்து வாங்கி கொண்டு போவார்கள்.சிலர் பண்டமாற்று முறையில் வாங்கிய பொருட்களிற்கு பிளாஸ்ரிக் அல்லது அலுமினிய பாத்திரங்களை தருவார்கள். முன்னர் யாழ்சோனதெருவில் வசித்துவந்த சோனகர்களே பெரும்பாலும் இந்த வியாபாரத்தை செய்தனர்.இப்படி வேறு சில வியாபாரிகளின் கூவல் சத்தங்களையும் ஊரிலை கேட்கலாம் ஆடு இரிக்கா ஆடு.பழையகோட்.இப்பிடி இன்னும். அடுத்ததாய் மீன்வியாபாரிகளும். ஜஸ்பழவியாபாரிகளும் கோண் அடிப்பார்கள் அல்லது மணியடித்தபடி வருவார்கள்.

இதில் இந்த ஜஸ்பழம்தான்தான் இந்தவாரத்து கதை.ஜஸ்பழம் எண்டதும் வாயூறாத ஆக்களே இருக்க முடியாது அதுவும் புலம்பெயர்ந்து வாழுறவைக்கு ஜஸ்பழம் எண்டதும் ஊர் கோயில்திருவிழா அல்லது வேறை அதோடை சம்பந்தபட்ட மறக்கமுடியாத சம்பவம் கனக்க ஞாபகத்துக்கு வரும்.அதுமாதிரித்தான் எனக்கு ஒரு நினைவு. ஊரிலை நான் முதல் சொன்னது போலை சைக்கிளில் பின்னுக்கு ஒரு பெட்டிகட்டி அதில் ஜஸ்பழத்தை வைத்து வித்துகொண்டு வருவார்கள் பெட்டியில் கலர்கலராய் படம்கீறி அந்த ஜஸ்பழகொம்பனியின் பெயரும் எழுதியிருக்கும்.உள்ளை ஜஸ்பழமும் கலர்கலாய் இருக்கும். இதிலை கொஞ்சம் விசேசமானது ஜஸ்சொக் கொஞ்சம் விலையும் கூடுதல்.இந்த ஜஸ்பழ சைக்கிள் வியாபாரியள் சாதாரமாக ஒவ்வொருநாளும் ஊரிலை வலம் வருவினம். அடுத்ததா வாகனத்திலையும் வருவினம் இந்த வாகனகாரர் அனேகமா ஏதாவது நல்லநாள் பெருநாளிலைதான் ஊருக்கை வலம் வருவினம்.இல்லாட்டி கோயில் திருவிழாக்கள் பள்ளிக்கூட விழையாட்டு போட்டிஇப்பிடி ஏதாவது நிகழ்ச்சி நடக்கிற இடங்களிலை காணலாம்.

இந்த வாகனத்தை சுத்தி கலர் ரியூப்லைற் பூட்டி சின்ன ஸ்பீக்கரும் பூட்டி அதிலை சினிமா பாட்டைபோட்டுகொண்டுதான் வருவினம். அவையின்ரை ஸ்பீக்கரிலை பாடுற சினிமாபாட்டை செளந்தர்ராஜனும்.பி.சுலாவும் பாடியிருந்தாலும் அதிலை வாற சத்தம் இரண்டு பேரின்ரை குரலும் ஒரேமாதிரி வித்தியாசம் கண்டு பிடிக்கேலாத குரலாதான் கேக்கும்.ஆனாலும் பாட்டு என்ன பாட்டு எண்டு விளங்கும்.அதைவிட ஜஸ்பழவானின்ரை டீசல் இஞ்சின்வேலைசெய்யிற சத்தம் பாட்டுச்சத்தத்துக்கு மேலாலை கேக்கும்.சின்னவயசிலை ஜஸ்பழம் வாங்கிகுடிக்கிறதெண்டது ஒரு போராட்டமானவிசயம். ஏணெண்டால் ஊரிரை சாதாரணமா குடும்பங்கள் எல்லாத்திலையும் குறைஞ்சது அஞ்சு அல்லது ஆறு பிள்ளையள் இருப்பினம். இதிலை வருமானத்ததை கணக்கு பாத்து வாழுகின்ற நடுத்தரக்குடும்பங்களிலை கிழைமைக்கு ஒருக்கா எல்லா பிள்ளைகளிற்கும் ஜஸ்பழம் வாங்கி குடுக்கிறதெண்டால் கட்டுபடியாகாத விசயம்.

எனவே நடுத்தரகுடும்பங்களிலை உள்ள பிள்ளையளிற்கு ஊர் கோயில் கொடியேறினால் இல்லாட்டி தீபாவளி வருசத்துக்குதான் ஜஸ்பழம். இல்லாட்டி தூரத்து உறவினர் யாராவது வீட்டுக்குவந்திட்டு போகேக்கை கையிலை தாற சில்லறை அதுவும்இல்லாட்டி வீட்டிலை இருந்து மல்லிப்பேணி. உள்ளிப்பேணிக்கை அம்மா இல்லாட்டி அம்மம்மா வைக்கிறகாசிலை சில்லறையை களவெடுத்தால்தான்(உள்ளதை சொல்லதானே வேணும்) ஜஸ்பழம் குடிக்கலாம். அப்பிடி ஜஸ்பழத்தை வாங்கி குடிச்சு முடிஞ்சாலும் கடைசியா இருக்கிற தடிக்குச்சியையும் சூப்பி அதை சப்புசப்பெண்டு சப்பி அது முரசிலை குத்தி ரத்தம் வந்தாலும் கவலைப்படாமல் சப்பி தும்பாக்கி தான் எறிவம்.இப்பிடி சின்னவயசிலை நாங்கள் ஜஸ்பழம் குடிக்க படுகிற கஸ்ரங்களை பாத்து ஜஸ்பழவியாபாரியள் எல்லாருமா சேர்ந்து எங்கடை நெஞ்சிலை ரின்பாலை வாக்கிறமாதிரி ஒரு திட்டத்தை கொண்டு வந்திச்சினம்.அதாவது ஜஸ்பழவியாபாரியளும் போத்தில் பித்தளை இரும்புசாமானை வாங்கிகொண்டு அதுக்கு மாற்றீடா பண்டமாற்று முறையிலை ஜஸ்பழம் தருவினம் .

ஆனால் என்ன நாங்கள் எந்த விலையான பெருளை குடுத்தாலும் அதுக்கு விலை நிர்ணயம் கிடையாது ஒரு ஜஸ்பழம்மதான் கிடைக்கும். எங்களுக்கு அது போதும் தானே.இனி விசயத்துக்கு வாறன் அப்ப எனக்கொரு 10 வயது இருக்கும் ஒருநாள் பின்னேரம்வீட்டிலை நானும் தங்கையும்தான் என்ரை சின்னவயது நணபன் இருள்அழகனும் ஒழிச்சு பிடிச்சு விழையாடிக்கொண்டு நிண்டனாங்கள் அந்த நேரம் ஜஸ்பழகாரனின்ரை மணிச்சத்தம் கேக்க இருள்அழகன் அவசரமாய் ஓடினான் கொஞ்ச நேரத்தாலை கையிலை ஜஸ்பழம்குடிச்சபடி வர. எங்காலை காசு எண்டு நான் கேட்கவும் அவன் சொன்னான் காசு தேவையில்லை நான் வீட்டிலை இருந்த அலுமினிய பானையை குடுத்து வாங்கினனான் எண்டான். அப்பதான் எனக்கு மூளை வேகமாக வேலை செய்தது ஓடிப்போய் வீட்டிலை பழைய பாவிக்காத சாமான் ஏதாவது இருக்கா எண்டு தேடினன் கிடைக்கேல்லை ஜஸ்பழகாரனின் மணிச்சத்தம் தூரமாக போய்கொண்டிருந்தது அவசரத்துக்கு பாவமில்லை எண்டு கழுவி கவிட்டு வைத்திருந்த பித்தளை தேத்தண்ணி கேத்திலின்ரை மூடியை தூக்கி கொண்டோடிப்போய் ஜஸ்பழகாரனிட்டை குடுக்க அவனும் ஒரு ஜஸ்பழத்தை தந்தான்.

பின்னாலையே தங்கை தனக்கும் ஜஸ்பழம் வாங்கித்தரசொல்லி அழுதபடி ஓடிவரவே என்ன செய்யலாமென யோசித்த நான் மூடியே இல்லை பிறகென்னத்துக்கு கேத்தில் என நினைச்சு கேத்திலையும் தூக்கிகொண்டோடிப்போய் ஜஸ்பழகாரனிட்டை குடுக்க அவனும் ஏதோ லொத்தோ விழுந்த சந்தோசத்திலை சிரிச்சபடி ஒரு ஜஸ்பழத்தை தந்தான்.நாங்கள் ஜஸ்பழத்தை குடிச்சு முடிஞ்சு தடியை சப்பிக்கொண்டிருக்கவே வெளியிலை போயிருந்த அம்மா வந்து எங்களை பாத்திட்டு என்னட்டை ஜஸ்பழம் எங்காலை ஆர் வாங்கி தந்தது எண்டு கேட்டார். அந்த வயசிலை திட்டம் போட்டு பொய் சொல்ல தெரியாதுதானே நானும் மாமா வாங்கிதந்திட்டு போனவர் எண்டு சொல்ல அம்மாவும் பேசாமல் போய் வெளியாலை போய் வந்த களைப்பிற்கு தேத்தண்ணி போட கேத்திலை தேடினார். கேத்திலை காணமால் என்னைக்கூப்பிட்டு கேத்தில் எங்கை எண்டு கேக்கவும் நானும் பயத்திலை முழுசதொடங்க தங்கச்சி உடைனையே அம்மாதரப்பு சாட்சியாய் மாறி கேத்தில் ஜஸ்பழமாய் மாறியதை சொல்லி அப்புறூவர்ஆகி விட்டாள்.பிறகென்ன வேலியில் நின்ற பூவரசம் தடியொன்று அம்மாவின் கைகளிற்கு மாறி என்மீது விழையாடியது.

அது முடிய அம்மா என்ரை கையிலை காசை தந்து மரியாதையாய் ஓடிப்போய் ஜஸ்பழகாரன் எங்கை நிண்டாலும் தேடிப்பிடிச்சு காசை குடுத்திட்டு கேத்திலை வாங்கிகொண்டுவா என கலைச்சு விட்டார்.நானும் அழுதபடி ஜஸ்பழகாரனை தேடி இருள்அழகன் வீட்டை கடந்து ஓடிக்கொண்டிருக்கும் போது அய்யோ அய்யோ எண்டு இளுள்அழகனின்ரை அலறல் சத்தம் கோட்டது ஏணெண்டால் இருள்அழகன் ஜஸ்பழகாரனிட்டை குடுத்தது அவங்கடை வீட்டு புட்டுபானையை

பாரீசில் மகாகவிபாரதியாரின் 125 வது ஆண்டுவிழா

11:33 AM, Posted by sathiri, 3 Comments

பாரீசில் மகாகவிபாரதியாரின் 125 வது ஆண்டுவிழா

Comite de célébration du 125 éme Anniversaire de Mahakavi Bharathiyar

04-11-2007. காலை 9மணியிலிருந்து இரவு 8 மணிவரை

இடம் Salle ADYAR. 4-Square Repp (bd-Repp) 7507-Paris
M°.- Ecole Miltaire (RER(C) Pont de l'Alma


சிறப்பு விருந்தினராக திரு வெ.வைத்திலிங்கம்

(புதுவை தொழிற்துறை அமைச்சர்)

திரு தமிழருவி மணியன்
திருமதி ரேணுகா அப்பாத்துரை


தமிழகத்திலிருந்து மேலும் பல தமிழறிஞர்கள் கலந்து சிறப்பிக்கிறார்கள்

பரதநாட்டியம்.இன்னிசை.பட்டிமன்றம்.கவியரங்கம் இவற்றுடன்.தமிழ்நாடு கலைக்கோல் புரிசை கண்ணப்பதம்பிரான் தெருக்கூத்து மன்றம் வழங்கும்

பாரதியாரின் பாஞ்சாலி சபதம்

மதிய விருந்தோம்பலுடன் அனைத்தும் இலவசம்

தொடர்புகளிற்கு B.Dassaradane -.0 42 53 03 12 Paris- Brathassarady:- 06 12 23 86 14 Vannai Theivam:- 01 48 61 42 23

மாசில்லாதர்

3:12 PM, Posted by sathiri, 4 Comments

பரிசுத்தமானவரிற்கு கோடி வணக்கங்கள் அதுதானுங்கோ மாசில்லாதர் என்றால் பரிசுத்தமானவர் என்றுதானே தமிழில் அர்த்தம். அதைதான் சொனேன். இது கொழுவிக்கான உங்கள் பதிவின் பின்னூட்டம்தான்: ஆனால் நான் தமிழிச்சிக்கு அனுப்பிய பின்னூட்டங்களைபோல இதுவும் கடாசபட்டுவிடுமோ என்கிற ஆதங்கத்தில்தான் இங்கும் பதிவாக்குகின்றேன். எனவே பரிசுத்தமானவரோ நான் மெய்யாலும் மெய்யாலுமே உங்களிற்கு சொல்லவழி வருவது யாதெனில் பாரிஸ் மாணிக்க பிள்ளையார் தேரன்று கார்து நோர்த் தொடர்வண்டி(பழைய சொற்றாடல் எழுத்தாடல் முறைப்படி புகையிரத)நிலையத்திற்கு முன்நின்று பிள்ளையார் தேரிற்கு தேங்காய் உடைக்கும் காட்டு மிராண்டிகள் என்று துண்டு பிரசுரம் கொடுத்து விட்டு இன்று கொழுவிக்கு தெரு தேங்காய் வழிபிள்ளையார் இது முதுமொழி அல்லது பழமொழி இதை உதாரணமாக காட்டுபவர். ஒன்று அந்த உதாரணத்தை ஏற்று கொள்பவராகவோ அல்லது அதனுடன் உடன்பட்டவராகவோ மட்டுமேயாக உள்ளவரால்தான் அதனை உதாரமாக்க முடியும்.அப்படியானால் தாங்கள் உதாரணத்தை ஏற்று கொள்கிறீர்களா? உதாரணத்தின் மீதான தேங்காயையும் பிள்ளையாரையும் ஏற்று கொள்கிறீர்களா?பிள்ளையாரை ஏற்று கொண்டால் நீங்கள் நீங்கள் நாத்திகம் பேசுவதற்கு தகுதியற்றவர். அடுத்ததாக தேங்காயை ஏற்று கொள்ளதான்வேணும் ஆனால் தெரு தேங்காயை எடுத்து தன்மண்டையில்உடைத்த மாதிரி என்று உதாரணம் காட்டியிருந்தால் அதற்கும் கேள்விகள் இருக்கு ஆனால் நீங்கள் நாத்திகவாதி ஆனாலும் பிள்ளையாருக்கு என்று எழுதிய விதத்தில் நீங்கள் மீண்டும் நாத்திகம் பேச தகுதி அற்வர். அடுத்ததாக நீங்கள் இரண்டாம் உலகமகா யுத்தத்தின் பின்னர் சிதைந்து பேயிருந்த பிரான்சு தேசத்தை கட்டியெழுப்பி அதன் பொருளாதாரத்தை மீட்டு பிரான்சு தேசத்தை வல்லரசாகவும் உலகின் பேரரசாகவும் வாழ வழிவகைசெய்வதற்காகவும் மேலும் உங்கள் ஒரு தோள் மீது பிரெஞ்சு தேசத்தின் ஒரு பகுதியை வீழ்ந்து விடாமல் தாங்கிகொண்டு நிற்கும் வேளையில் நீங்கள் கட்டியெழுப்பிய பிரான்சு தோசம் சில கோப்பை கழுவ வந்த ஈழதமிழ் அகதிகளால் சிறுபிள்ளைதனமாக சிதைக்கப்பட்டு சின்னா பின்னபட்டு அழிந்து போகமால் காப்பாற்ற வேண்டிய தேவைகள் அனேகம் அனேகம் எனவே ஈழத்தமிழ் அகதிகளால் அவை அழிந்து போகாமல் காப்பாற்றபட வேண்டிட கடைமை .கடைமையின் உணர்வு உணர்வின் உயிர் உயிரின் உறவு உறவின் மானிடம் மானிடத்தின் மனிதம் மனிதத்தின் மரணம் மரணத்தின் புறவாக்கம் புறவாக்கத்தின் உறவாக்கம் உறவாக்கத்தின் உள்நிலை செயற்பாடு உள்நிலையின் வெளிப்பாடு வெளிப்பாட்டின் புறப்பாடு புறப்பாட்டின் காரணி சரி வேண்டாம் இத்தோடு நிறுத்தி கொள்கிறேன் பிறகு எனக்கும் புரியகூடாது என்பதற்காகவே எழுதகிறவர்களிற்கும் வித்தியசம் இல்லாமல் போய் விடும் என்னாலும் அப்படி எழுத முடியும் காரணம் நானும் ஒரு சிவப்பு

பிரான்சில் தலித் மகாநாடு

3:16 PM, Posted by sathiri, No Comment

பிரான்சில் தலித்மகாநாடு என்கிற பெயரில் நடக்க இருக்கும் மகாநாட்டின் மூலமாக ஈழத்தமிழர் வாழ்வாதார போராட்டத்தை கொச்சைப்படுத்தி திசைதிருப்பும் நோக்கத்திற்காக சிலர் செயற்படுவதே அந்த மகாநாட்டின் நோக்கம் என்பதற்கு ஆதாரமாக ஈழத்தமிழர் போராட்டத்திற்கு எதிராக இலங்கை புலனாயய்வு பிரிவினரால் இங்கிலாந்தில் இயக்கப்படும் தேசம் என்கிற இணைய தளத்தில் தலித் மகாநாட்டிற்கான விளம்பரத்தினை இங்கு இணைக்கிறேன் பார்கக்கவும். இந்த விளம்பரத்தில் நான் சிவப்பு வண்ணத்தில் அடையாளமிட்டுள்ளவற்றை படித்தாலே புரியும்



http://thesamnet.net/?p=38

புலம் பெயர்ந்து, பல நாடுகளைத் தங்கள் வாழ்விடமாகக் கொண்ட தலித் சமூகத்திலிருந்து ஒரு சில சமூக சிந்தனையாளர்கள் தங்கள் சமூகப் பிரச்சினையும், இலங்கை இனப் பிரச்சனைத் தீர்வுடன் இணைக்கப்படவேண்டும் என கோரிக்கையைத் செயற்படுத்தும் வேலைத்திட்டங்களைத் தொடங்கியிருக்கிறார்கள்.
கடந்த வருடத்திலிருந்து, பலவிதமான தலித் சமூக மேம்பாட்டு விழிப்புணர்ச்சி வேலைகள் செயற்படத் தொடங்கியதற்கு அடையாளமாக “வடு” என்ற மாதப் பத்திரிகை கடந்த நான்கு மாதங்களாக வெளிவருகிறது. “வடு” பத்திரிகையில் தலித் மக்களின் சரித்திரக் கூறுகள், அரசியல், பொருளாதார, சமூக விடயங்கள் எழுத்து வடிவத்தில் படைக்கப்படுகின்றன. இத்துடன் “தூ” என்ற தோழமை இணையத்தளமும் தலித் மக்களின் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை பிரதிபலிக்கின்றன.
எத்தனையோ தமிழ் இயக்கங்களும், பிரமுகர்களும் கலந்து கொண்ட ஸ்ருக்காட் மாநாட்டில் எழுப்பப்பட்ட தலித் குரல்களை தமிழ்த் தேசியத்துக்குள் அடக்க முயன்றாலும்; E.P.R.L.F போன்ற முற்போக்குக் குழுக்கள் தலித் பிரச்சனையை ஒரு அரசியல் விடயமாகக் கணித்து பிரான்சில் இருக்கும் தலித் சமூக மேம்பாட்டுக் குழுவினருடன் ஒரு சந்திப்பை நடத்தினார்கள்.
தலித் முன்னணியினரின் அடுத்த செயற்பாடாக இலங்கையிலும், புலம் பெயர்ந்த நாடுகளிலும் வாழும் தலித் மக்களின் பல்வேறு விடயங்களை ஆராயும் நோக்கில் இவ்வருடம் ஒக்டோபர் மாதம் 20, 21 ம் திகதிகளில் பாரிசில் ஒரு மகாநாடு நடக்கவிருக்கிறது.
அரசியல் ஆர்வலர்கள், புத்திஜீவிகள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் என்று பல தரப்பட்ட முற்போக்கு சக்திகளும் இணையும் இந்த மகாநாடு தமிழ் மக்களின் சமூக விடுதலைக்கு ஒரு வித்தியாசமான பரிமாணத்தைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“எங்கள் ஆட்சி வந்தால் எந்தவிதமான பேதங்களும் இருக்காது” என்று மக்களை ஏமாற்றும் அரசியல் வாதத்தின் போலிமுகத்தை இனங்காட்டப் பல சரித்திர உண்மைகளை இந்த மகாநாடு மேடையேற்றும் என நம்பலாம்.
சமூகவியலில் அரசியல் மாற்றங்கள் தவிர்கமுடியாதவை. இம்மகாநாடு, தமிழ்த் தேசியத்தின் மாற்றுக் கருத்துக்களுக்கு முதற்படியாகும்
என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை என்பது அவர்களின் நிகழ்ச்சி நிரலை பார்த்தபோது புரிகிறது

சிலதமிழிச்சிகளின் பேச்சுகள்

3:10 PM, Posted by sathiri, No Comment

26 வது பெண்கள் மகாநாடு நடந்து முடிந்த பின்னர் அதில் சிலதமிழிச்சிகளின் பேச்சுகள் வெளிவந்த பின்னராவது நான் எழுதிய கட்டுரையின் உண்மைதத் தன்மை பற்றி வலைப்பதிவாளர் பலரிற்கு புரிந்திருக்கும் என நினைக்கிறேன். இந்த கூட்டத்தை இப்பொழுதல்ல 26 வருடமாக பார்த்து வருபவன் நான் .இதுதான்தலித்துகள் மகாநாட்டிலும் நடக்க போகிறது மற்றபடி பெரிதாய் ஒன்றும் இல்லை. கூடிபேசி படம் எடுத்து இணையத்ததிலை போடுவார்கள் அதை நாங்கள் பார்த்து ரசிக்கலாம்.

புலம்பெயர் தேசத்தில் சிறீலங்கா புலனாய்வு பிரிவின் புதிய பொறிகள்

2:33 PM, Posted by sathiri, 2 Comments

புலம்பெயர் தேசத்தில் சிறீலங்கா புலனாய்வு பிரிவின் புதிய பொறிகள்

இந்தவார ஓரு பேப்பரிற்காக எழுதியது

சிறீலங்கா அரசானது காலங்காலமாக தனது தமிழின அழிப்பு வேலைகளை தாயகத்தில் மேற்கொண்டுவரும் வேளைகளில் அதற்கு எதிராக புலம்பெயர் தேசமெங்கும் வாழும் தமிழர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைளையும் அடக்கிவிட தனது சகல வளங்களையும் பாவித்து சில நடவடிக்கைகளை மேற்டிகாள்வதும் பொதுவாக சகலரும் அறிந்ததே. அது போலத்தான் தற்சமயம் மகிந்த அரசும் புலம்பெயர் தேசங்களில் தமிழர்களின் தமிழ் தேசியத்திறகான ஆதரவை குலைப்பதில் முழுமூச்சாக முயன்று வருகிறார். ஆனால் கடந்த காலங்களில் சிறீலங்கா அரசபதவிகளில் இருந்தவர்கள் தமிழர்களின் எழுச்சியை ஒடுக்க யாராவது ஒரு தமிழரிற்கு பதவிகளை கொடுத்து அவர் மூலமாகவே சர்வதேசமெங்கும் தமிழ் தேசிய செயற்பாடுகளிற்கொதிரான பிரச்சாரங்களை மேற்கொண்டனர்.

மகிந்த அரசோ தன் சொந்த நலனை காக்ககூட ஒரு தமிழனிற்கு பெரும்பதவி ஒன்றினை குடுக்க விரும்பாமல் கொஞ்சம் மாறு பட்டு புலம்பெயர் தேசங்களில் இலகுவாய் விலை போக கூடிய சில தமிழர்களை தேடிப்பிடித்து அவர்கள் மூலமாக குறைந்த செலவில் நிறைந்த சேவையை எதிர்பாத்து சில செயற்பாடுகளை முடுக்கி விட்டுள்ளனர். இந்த புலம்பெயர் தமிழர்களும் வாங்கியதற்கு வஞ்சகமில்லாமல் உழைப்பதையே காணக்கூடியதாக உள்ளது. இது பேலத்தான் அண்மையில் பிரான்சிற்கு வந்து போன ஒரு தமிழ் அமைச்சர் மூலமாக இலங்கை புலனாய்வு துறை பிரான்சிலும் சில நடவடிக்கைகளை செய்து முடிக்க சில திட்டங்கள் தீட்டப்பட்டு அவற்றை சில தமிழர்களிடம் ஒப்படைத்து சென்று விட்டார்.

அவர்கள் திட்டப்படி பிரான்ஸ் வாழ் தமிழர்கள் மத்தியில் பல்வேறு பெயர்களில் பல்வேறு தலைப்புக்களில் பல்வேறு பட்ட நோக்கங்களிற்காக நடாத்தபடுவது போன்ற ஒரு மாயையை காட்டி சில நிகழ்வுகளை ஏற்பாடு செய்வது. ஆனால் அந்த எல்லா நிகழ்வுகளிலுமே முதற்கட்டமாக மக்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் தேசிய மற்றும் தமிழர்களின் உரிமைபோரிற்கும் எதிரான கருத்துக்களை பரப்பி அவர்களை குழப்பத்தில் ஆழ்த்திவிடுவது. பின்னர் மீண்டும் தொடர்ச்சியான நிகழ்வுகள் மூலம் தொடர்ச்சியான பிரச்சாரத்தை மேற்கொண்டு தமிழர் உரிமை போரின் முதுகெலும்பாக இருக்கும் புலம்பெயர் தேசத்து தமிழர்களின் ஆதரவை மழுங்கடிப்பதே முக்கிய நோக்கமாகும்.

அதே போல இந்தியாவில் இலங்கையரசு ஆழும்கட்சிகளையும் சில அதிகாரிகளையும் தன் சூழ்ச்சியால் தன்வசம் இழுத்து வைத்திருந்தாலும் தமிழ் நாட்டின் சாதாரண மக்களிடம் ஈழத்தமிழரிற்கான ஆதரவை இன்றுவரை சிதைக்க முடியாமல் திண்டாடிவருவது அனைவரிற்கும் தெரிந்த விடயம்தான். அதற்காக இலங்கையரசும் இந்திய அதிகாரிகளும் சேர்ந்து ஆடிய நாடகங்களும் அதே நேரம் தமிழ்நாட்டில் உள்ள இலங்கை கிளைத்தூதரகமும் தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டும் பெரிய அளவில் எவ்வித பயனையும் இலங்கையரசு பெறாததால். அடுத்த நடவடிக்கையாக புலம்பெயர் தேசத்து தமிழர்களை வைத்தே இந்த தமிழ்நாட்டு தமிழர்களின் ஆதரவை சிதைக்க திட்டம் தீட்டியுள்ளது. முக்கியமா தமிழ் நாட்டில் எத்தனை துன்பங்கள் வந்தபோதும் தமது தளராத ஆதரவை தந்தவர்கள் பெரியார் திராவிடஇயக்கங்களும் அரசியல் கட்சிகளும்.
தலித் இயக்கங்களும் அரசியல்கட்சிகளும் ஆகும்.

எனவே இந்த அமைப்புக்களின் ஆதரவை தமிழ் நாட்டில் சிதைத்து விட்டால் மற்றைய ஆதரவு கரங்களையும் மடக்கி விடாலாமென்பது இலங்கையரசின் கனவு. இதன் ஆரம்ப கட்டமாக பிரான்சில் சிறீலங்கா அரசிற்கு சேவகம் செய்ய புறப்பட்டவர்களால் சில நிகழ்வுகள் எற்பாடு செய்யபபட்டுள்ளன. அவை சமாதானப்பறைவைகள் என்கிற பெயரில் ஈராக் மீதான ஆக்கிரமிப்பு என்கிற தலைப்பில் ஒரு எற்பாடு . இதை கேட்டதுமே சிரிப்புதான் வந்தது இதை படிக்கின்ற உங்களும் கட்டாயம் வரும். ஏனெனில் எங்கள் தேசத்தில் எவ்வித பிரச்னையும் இல்லாமல் அமைதி பூத்து குலுங்குகின்றது. எனவேதான் ஈராக்கை பற்றி கதைக்க போகினமாம். அடுத்த நிகழ்வு 26 புகலிட பெண்கள் சந்திப்பு இந்த புகலிட பெண்கள் சந்திப்பில் வருடா வருடம் வழைமை போல நடக்கின்ற புலியெதிர்ப்பு தான் இந்த வருடமும் நடக்க போகின்றது. எனவே இதைப்பற்றி அதிகம் அலட்டிக்கொள்ள தேவையில்லை.

அனால் அடுத்ததாக நடக்க போகின்ற முதலாவது தலித்மகாநாடு என்கிற பெயரில்: நடக்க போகின்ற மகாநாடுதான் முக்கியமான ஆனால் மேசமான விளைவுகளை ஏற்படுத்த போகின்ற மகாநாடு. ஏனெனில் நான் முதலே குறிப்பிட்டது போல இது இந்தியாவில் தலித் அடைப்புகளிடையே ஈழத்தமிழரிற்கு இருக்கும் ஆதரவை சீர்குலைக்கும் ஒரு நிகழ்வு காரணம் இந்த நிகழ்வை ஒழுங்கு படுத்தியிருப்பவர்கள் இலங்கையரசின் எலும்புத்துண்டை எட்டிப்பிடித்தவர்கள். ஏற்கனவே இந்த மகாநாடு பற்றி நான் எதிர்பார்த்ததை போல இணைய தளங்களிலும் வலைப்பூக்களிலும் பல சர்ச்சையைகளை கிழப்பி விவாதங்களும் தொடங்கி விட்டது.

இந்த மகாநாட்டிற்கு பிரான்சில் பெரியார் விழிப்பணர்வு இயக்கம் என்று தன்னை அடையாளப்படுத்தி கொள்ளும் ஒரு பெண்மணியும் தெரிந்தோ தெரியாமலோ இந்த மகாநாட்டிற்கு ஆதரவு குரல் கொடுத்துள்ளார் ஆனாலும் அவரிற்கு தலித் மகாநாட்டின்உள்நோக்கம் பற்றிய போதிய விளக்கம் கொடுத்தும் அவர் பெரியார் இயக்கத்தின் பெயரால் தொடர்ந்தும் தனது ஆதரவை நடக்கவிரக்கும் தலித் மகாநாட்டிற்கு ஆதரவு வழங்குவதால் இந்த பெண்மணியும் இலங்கையரசிடம் விலைபோயுள்ளார் என்று எண்ணவே தோன்றுகின்றது. எது எப்படியோ இலங்கை புலனாய்வு பிரிவினர்களால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் இந்த நிகழ்வுகள் பற்றி பிரான்ஸ்வாழ் தமிழர்கள் விழிப்பாயிருக்க வேண்டிகால கட்டம் இது. ஆனால் இந்த ஏற்பாடுகள் இந்தியாவில் ஈழத்தமிழர்களின் ஆதரவுத்தளம் ஆட்டம்காணுமா??அல்லது இந்தச்சதிகள் தகர்க்கப்பட்டு மேலும் உறுதியாகுமா?? பொறுத்திருந்து பார்க்கலாம் நன்றி சாத்திரி

பொம்பளைப் பொறுக்கிங்களா?

6:43 AM, Posted by sathiri, No Comment

பொம்பளைப் பொறுக்கிங்களா?

பெண்கள் என்றால் உங்களுக்கு என்ன காமக்கழிச்சடைகளா?

போதைக்கு உபயோகித்துக் கொள்ளும் வஸ்துக்களா?

உங்களின் காமவெறிக்கு உருவான ஜீவன்களா?

இணையத்தில் சில பொம்பளைப் பொறுக்கி பதிவர்கள் இருக்கிறார்கள்.

பெண் பதிவர்களை எப்படி வர்ணிப்பது?

கவர்ச்சியான அதே சமயம்

இரட்டை அர்த்த வார்த்தைகளை எப்படி போட்டு எப்படி எழுதுவது

என்றே நினைத்துக் கொண்டிருப்பார்கள் போலும்!

உதாரணத்திற்கு பதிவர் சாத்திரி என்னை ஆண்பாலில் அழைக்கின்றார்.

http://sathirir.blogspot.com/2007/10/blog-post_8155.html


இயக்கத்தின் ஆதரவாளர் போல் பேசும் இவரின் செயல்களுக்கு

இயக்கம் கண்டனம் தெரிவிக்காதது ஏன்?


நான் பெண் என்பது தெரிந்தும் "தம்பி" என்று அழைப்பதற்கு காரணம்

பல உட்பொருளை கொண்டது. முகம் தெரியாத அவரை நான் "டீ" போட்டு

பேசட்டுமா? ஏன்டி நீ உன் அம்மாவை "அப்பா" என்று தான் அழைப்பாயாடி!

அனானி பெயரிலும் அதை தொடர்ந்து வரும் உன் பின்னூட்டத்தையும்

வைத்து உன்னை அடையாளப்படுத்திக் கொண்டுவிட்டாய்!

பெண் என்றால் கேலிக்குறிய ஜீவனாக நினைக்கும் உனக்காக

நிர்வாணப் பெண்களின் போராட்டத்தைத்பார்.


http://sinnakuddy1.blogspot.com/2007/01/blog-post_29.html


உரிமையும், அட்டுழியமும், ரொவுடித்தனமும் அதிகரிக்கும் போது

ஆவேசப் பெண்களின் புரட்சியை பார்.


தமிழச்சி

பெரியார் விழிப்புணர்வு இயக்கம் - அய்ரோப்பா.

தொடர்புகளுக்கு : periyar71@yahoo.com


Posted by தமிழச்சி at 12:54


எனக்கெல்லாம் மினக்கெட்டு பதில் பதிவு போட்டதற்கு நன்றி தமிழிச்சி மற்றப்பக்கம் உங்களிற்காக சிறீ ரங்கன் கொடுக்கு கட்டிவிட்டார் முடிந்தால் சோபா சக்தி .சுகனையும் ரயாகரனையும் கூப்பிடுங்கள்..வாழ்க பெரியார் விழிப்புணர்வு. வளர்க அவர்புகள் ஒங்குக தமிழிச்சி தம்பியின் தற்பெருமை

தமிழிச்சி தம்பிக்கு

2:11 PM, Posted by sathiri, 6 Comments

சாசலில் வாழும்அன்பான தமிழிச்சி தம்பிக்கு ஒரு வேண்டுகோள் தம்பி உங்களள் ஆரம்பத்தை வலைப்பூவில் வடிவாகதான் கொண்டுவநந்தீர்கள் ஆனால் கடைசியிலைபாரிஸ்பிள்ளையார் தேரண்டு துண்டுபிரசுரம் குடுத்தன் புலியாதரவாளர்கள் மிரட்டல்தலித் மகா நாடு ஏன் ஒரு படத்தை வேறைபல கோணத்திலை விலாசமா போட்டு சே எதுக்கு இந்த பிழைப்பு

ஜரோப்பிய அவலம்

1:08 PM, Posted by sathiri, One Comment

ஜரோப்பிய அவலம்

ஜரோப்பா வாழ் தமிழர்களே அவதானமாயிருங்கள்.

இலங்கை அரசும் அதன் ஒட்டுகுழுக்களும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்கள் மத்தியில் அவர்களது தமிழ்தேசியத்தின் பற்றுறிதியையும் மற்றும் தமிழீழ விடுதலை ஆதரவையும் மழுங்கடிக்கும் செயற்பாடுகளை அண்மைகாலமாக வேகமாக முடிக்கி விடப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே. அதற்காக அவர்கள் வெளிநாடுகளில் தங்கள் சுயநலத்திற்காக விலைபோன பலரையும் ஒன்றிணைத்து அவர்களிற்கு வேண்டிய பொருளாதார உதவிகளை வாரி வழங்கி தங்களிற்கு உதவியாக இணைத்து பல செயற்பாடுகளை புலம்பெயர் தேசமெங்கும் செயற்படுத்த தொடங்கியுள்ளனர். இவர்களின் இந்த செயற்பாடுகள் தற்சமயம் பிரான்ஸ் நாட்டை மையமாக வைத்தே தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு அண்மையில் பிரான்ஸ் நாட்டிற்கு வந்து போன ஈ.பி.டி.பி. ஒட்டுக்குழுவின் தலைவர் டக்டஸ் அவர்கள் பிரான்ஸ் நாட்டில் சிலவிலைபோன தமிழர்களை வைத்து அதற்கான அத்தி வாரத்தை போட்டுவிட்டு போயிருக்கிறார்.

அவர்களது திட்டத்தின் படி பலவேறு அமைப்பகளின் பெயர்களில் பல்வேறு தலைப்புக்களில் பல கூட்டங்கள் அல்லது கலந்துரையாடல்களை ஒழுங்கு படுத்தி அதில் பிரான்ஸ் வாழ் தமிழர்களை உள்வாங்கி அவர்கள் மத்தியில் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ்தேசிய உணர்வையும் தமிழீழ விடுதலை ஆதரவையும் மழுங்கடிப்பதாகும்.இதற்கெனஇவர்கள் நன்கு திட்டமிட்டு சில கூட்டங்களையும் கலந்துரையாடல்களையும் பிரான்சில் ஏற்பாடு செய்து துண்டு பிரசுரங்கள் தொலைபேசி மூலமாகவும் ஆள்சேர்க்கும் பிரசாரத்தையும் தொடங்கிவிட்டனர். அவர்கள் முதற்கட்டமாக தொடங்கியுள்ள சில நிகழ்வுகள் இதோ 26வது புகலிடபெண்கள் சந்திப்பு இதில் பெண்கள் பற்றி பிரச்சனைகளை ஆராய போகினமாம். 13மற்றும்.14.10.2007 இடம் la courneuve அடுத்ததாக 14.10.2007 சமாதான பறைவைகள் என்கிற தலைப்பில் ஈராக்மீதான ஆக்கிரமிப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்க போகினமாம். இடம் sacelleஅடுத்ததாக20.மற்றும் 21 .10.2007 ந் திகதிகளில் தலித்து மகாநாடாம். இடம் sacelle இந்த மூன்று நிகழ்வுகளிலும் உள்ளே கதைக்கபோறது என்னவோ ஈழபோராட்டத்திற்கான எதிர்புகருத்துகள்தான். எனவே பிரான்ஸ் வாழ் தமிழர்களே அவதானமாயிருங்கள். இவர்களை இனங்காணுங்கள்.

ஜயோஅப்பா அடிக்காதையுங்கோ

3:01 PM, Posted by sathiri, No Comment

ஒரு பேப்பருக்காக

விஞ்ஞான கண்டு பிடிப்புக்களில் இந்த தொலைபேசியின் கண்டுபிடிப்பும் ஒரு உன்னதமானதுதான். கைத்தொலைபேசியின் வரவிற்கு பின்னர் அதன் தொழில் நுட்பவளர்ச்சியும் மாற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துதான் செல்கிறது.முன்பெல்லாம் ஊரில் ஒருவர் வீதியில் தன்பாட்டில் சிரித்து கதைச்சபடி நடந்து போனல் சந்தேகமே இல்லை அவருக்கு விசர் என்று எல்லோரும் முடிவு கட்டிடுவினம்.ஆனால் இன்று நிலைமை அப்பிடியில்லை காரணம் கைத்தொலைபேசி புளுதோத் என்கிற சின்ன கருவியை காதுக்குள்ளை வைச்சிட்டு எல்லாருமே தங்கடை பாட்டிலை கதைச்சபடிதான் போகினம். இப்ப யார் கதைக்காமல் தன்ரை பாட்டிலை கம்மெண்டு போகினமோ அவைதான்விசரர் எண்டு நினைக்கிற அளவுக்கு நிலைமை மாறி போச்சுது.அது மட்டுமில்லை தொலைபேசி தொல்லை பேசியாவும் மாறிப்போச்சுது.இன்றைய நிலைமை இப்பிடியிருக்கு முந்தி ஊரிலை தொலைபேசியை காணுறதெண்டாலே அபூர்வம்.

முக்கியமா அரசாங்கம் சம்பந்த பட்ட கச்சேரி புகையிரத நிலையம்.தபால்கந்தோர்.காவல்ந??லையங்களிலையும் மற்றது பெரிய பணக்காரர் அதுவும் அரசியல் செல்வாக்கு இருக்கிறவையின்ரை வீடுகளிலைதான் தொலைபேசி இருக்கும்.இதன் இணைப்புகள் வீதியிலை ஒருபக்கம் கரண் கம்பம் எண்டால் மற்றபக்கம் பதிவாய் கம்பங்கள் நட்டு பித்தளை கம்பிகளால் இணைப்பு கொடுக்கப்பட்டிருக்கும். தொலைபேசி பெரியதாய் கறுப்பாய் கிட்டத்தட்ட ஒரு மூண்டு நாலு கிலோ பாரமாவது இருக்கும். நீங்கள் வெளிமாவட்டத்திற்கு யாரோடையாவது கதைக்கிறதெண்டாலே நேரடியாய் அடிச்சு கதைக்க முடியாது .

தொலைபேசி கட்டுப்பாட்டு நிலையத்துக்கு அடிச்சு நீங்கள் கதைக்கபோற இலக்கத்தை குடுத்திட்டு தொலைபேசிக்கு பக்கத்திலை ஒரு கதிரையை போட்டு காவல் இருக்க வேண்டியதுதான் அவையள் அந்த இலக்கத்துக்கு அடிச்சு லைன் கிடைச்சதும் உங்களுக்கும் அடிச்சு இணைச்சு விடுவினம்.அப்பிடி நீங்கள் கதைச்சு கொண்டு இருக்கேக்கை எங்கையாவது கம்பி இணைப்பிலை காவோலை விழுந்து கம்பி அறுந்தால் உங்கடை கதையும் அறுந்து போகும்.எனக்கு சின்னவயசிலை ஒரு பெரிய சந்தேகம் நாங்கள் கதைக்கிறது எப்பிடி இந்த கம்பிக்குள்ளாலை போகுது எண்டு பலநாள் யோசிச்சுபாத்தும் பிடிபடேல்லை ஒருநாள் அதை ஆராச்சி பண்ணிபாக்கவேணும் எண்டு நினைச்சு ஒருநாள் தந்தி கம்பத்திலை ஏறி கம்பியிலை காதைவைச்சு கொண்டிருக்க அந்தவழியாலை வந்த சித்தப்பா கண்டிட்டு பூவரசம் தடியொண்டை புடுங்கி வீடுவரைக்கும் கலைச்சு அடிச்சு கொண்டு வர அதை பாத்திட்டு அப்பா ஏன் மகனுக்கு அடிக்கிறாயெண்டார்.

அதுக்கு சித்தப்பா சொன்னார் உன்ரை மகன் தந்திக்கம்பத்திலை ஏறி கம்பியிலை காதைவைச்சு கொண்டிருக்கிறான் இப்பிடியே விட்டா நாளைக்கு கரண்டு கம்பத்திலை ஏறி கரண்வருதாஎண்டு கையை வைச்சு பாப்பான் எண்டார்.பிறகென்ன மிச்சத்துக்கு அப்பாவும் கூரையிலை செருகியிருந்த பிரம்பை உருவ என்ரை ஆராச்சியும் அதோடை நிண்டுபோச்சுது.இல்லாட்டி இண்டைக்கு நானும் ஒரு விஞ்ஞானியாகி குறுந்தாடியும் வைச்சு கண்ணாடியும் வெள்ளை கோட்டும் போட்டபடி விஞ்ஞான விளக்கம் குடுத்துகொண்டிருப்பன். இப்பிடி உங்களுக்கு விண்ணாணம் எழுதிகொண்டிந்திருக்கமாட்டன் என்னாலை இப்ப குறுந்தாடி தான் வைக்க முடிஞ்சுது விஞ்ஞானியா வரமுடியேல்லை எல்லாத்தையும் சித்தப்பா கெடுத்துப்போட்டார் சரி ஆராச்சிதான் பண்ண முடியேல்லை ஒரு நாளாவது தொலைபேசியிலை யாரோடையாவது கதைக்கவேணும் எண்டு எனக்குள்ளை ஒரு ஆசை ஏன் பேராசை எண்டே சொல்லலாம்.

ஆனால் அந்த நேரத்திலை எங்கடை ஊரிலை இரண்டே இரண்டு தொலைபேசி தான் இருந்தது ஒண்டு தபால்கந்தோரிலை மற்றது ஒரு பெரிய அரசியல்புள்ளி ஒருதரின்ரை வீட்டிலை.83ம் ஆண்டு கலவரம் நடக்கேக்கை எங்கடை ஊர்ச்சனம் எல்லாம் தங்கடை சொந்தங்களின்ரை செய்தி அறிய இவரின்ரை வீட்டு தொலைபேசியைதான் சுத்திவர காவல் நிண்டது இப்பவும் நல்ல ஞாபகம். அந்தநேரத்திலை இந்த வெளிநாட்டு அழைப்பெல்லாம் வாறேல்லை .அனேகமா கொழும்பிலை இருந்து இல்லாட்டி ஏதாவது மாவட்டத்திலை இருந்து அவசர செய்தி மட்டும் வரும்.எங்கடை ஊரிலை உள்ளவைக்கு ஏதாவது அவசர செய்தியெண்டால் ஒண்டு தந்தி வரும் அல்லது அந்த அரசியல்வாதி வீட்டுக்கு தொலைபேசிவரும் செய்தியை சொல்லிவிடச்சொல்லி.

இந்த தந்தியிலையும் தொலைபேசியிலையும் எவ்வளோ செய்தியளை பரிமாறலாம் ஆனாலும் எங்கடையாக்களுக்கு அந்த நேரம் ஏதாவது விபத்து இல்லாட்டி யாராவது செத்தால்தான் தந்தியடிக்கிற இல்லாட்டி தொலைபேசியடிக்கிற பழக்கம்இருந்ததாலை தந்தி வந்தால் அதை பிரிச்சு வாசிக்காமலேயே ஒப்பாரிவைக்க தொடங்கிவிடுவினம். அதே மாதிரித்தான் அந்த அரசியல் வாதியின் வீட்டு வேலைக்கார பெடியன்வந்து யாராது வீட்டில் உங்களுக்கு ரெலிபோன் வந்திருக்கு கெதியா வாங்கோ எண்டாலே போதும் வீட்டுகாரரர் பக்கத்து வீட்டு காரர் எல்லாரும் அலறியடிச்சபடி ஓடுவினம்.இது இப்பிடியிருக்க ஒருநாள் யாழ்ப்பாணநகரத்துக்கு போன நான் என்ரை நீண்ட நாள் தொலைபேசிகதைக்கிற ஆசையை அண்டைக்கு நிறைவேற்றலாம் எண்டு நினைச்சு யாழ்ப்பாணம் தபால் கந்தோருக்குள்ளை நுளைஞ்சன் ஆனால் யாருக்கு அடிக்கிறதெண்டு யோசிச்சு பாத்தன் ஏணெண்டால் தொலைபேசியிலை கதைக்கிற அளவுக்கு எனக்கு ஒருதரையும் தெயாதது மட்டுமில்லை எனக்கு தெரிஞ்சவையின்ரை வீடுகளிலை தொலைபேசியும் இல்லை.

அதாலை எங்கடை ஊர் அரசியல் வாதியின்ரை வீட்டுக்கு போனடிச்சு எங்கடை வீட்டு காரரை கூப்பிட்டு கதைப்பம் எண்டு நினைச்சு அந்த வீட்டு இலக்கத்தை தபால்கந்தேர் காரரிட்டை சொல்ல அவரும் தொலைபேசியிலை விரலை விட்டு சுழட்டி போட்டு றிசீவரை தந்தார்.அந்த வீட்டிலை தொலைபேசியை எடுத்தவரிட்டை நான் அப்பாவின்ரை பெயரை சொல்லி அந்த வீட்டு காரரோடை அவசரமா கதைக்கவேணும் ஒருக்கா கூப்பிடுங்கோ நான் ஒரு அஞ்சு நிமிசத்தாலை திருப்ப எடுக்கிறன் எண்டிட்டு வைச்சிட்டன். அந்த வீட்டு வேலைக்கார பெடியன் செய்தி சொல்ல வீட்டை போன நேரம் வீட்டிலை அம்மம்மாவை தவிர வேறை ஒருத்தரும் இருக்கேல்லை.அவனும் அம்மம்மாவிட்டை உங்களுக்கு ரெலிபோன் வந்திருக்கு அவசரமாம் கெதியா வாங்கோ எண்டு சொல்லவும். அம்மம்வாவும் கொழும்பிலை இருந்த மாமாவுக்கோ இல்லாட்டி திருகொணமலையிலை இருந்த சின்னம்மாவுக்கோ ஏதோ நடந்திட்டு எண்டு நினைச்சு ஒப்பாரிவைக்க பக்கத்து வீட்டுகாரரும் சத்தம்கேட்டு வந்து அம்மம்மாவை சமாதானப்படுத்தி எல்லாருமா சேந்து அந்த வீட்டிலை வந்து என்ரை தொலைபேசிக்காக காவல் நிண்டிச்சினம்.

நான் மீண்டும் அடிக்கவும் பக்கத்து வீட்டுகாரர்தான் கதைத்தார் அவர் என்னிடம் தம்பி அந்தவீட்டிலை மாமியாரை தவிர மற்றாக்கள் ஒருதரும் இல்லை நீங்கள் என்ன பிரச்சனையெண்டாலும் என்னட்டை சொல்லுங்கோ நான் பக்கத்து வீட்டுகாரர்தான் எண்டாலும் அவையின்ரை குடும்பத்திலை ஒருத்தர் மாதிரி அதாலை பிரச்சனையில்லை என்னட்டை சொல்லுங்கோ நான் அவையிட்டை பக்குவமா எடுத்து சொல்லுறன் எண்டு படபடப்பாய் கதைத்து கொண்டிருக்கவும் எனக்கு அம்மம்மாவின் அழுகை சத்தம் தொலைபேசிக்குள்ளாலை கேட்டது. அப்போதான் என்ரை விழையாட்டு வினையாபேச்சுதெண்டது எனக்குவிழங்கியது .

உடனே அவரிடம் நான் தான் கதைக்கிறது என்கிற விபரத்தை சொல்லி அம்மம்மாவை அழவேண்டாமெண்டு செல்லுங்கோ நான் சும்மாதான் போனடிச்சனான் கொஞ்ச நேரத்திலை வீட்டை வாறன் என்று சொல்லி தொலை பேசியை வைத்து விட்டு வீட்டுகாரர் வர முதல் முதலே வேகமாய் போய் அம்மம்மாவை சமாதானப்படுத்தி விடலாமென்று நினைத்து சைக்கிளை மிதித்தேன். ஆனால் நான் வீட்டிற்கு போகும் போதே வீட்டுக்காரர் எல்லோரும் முற்றத்தில் நின்றபடி என்வரவை எதிர்பார்த்து வழிமேல் விழிவைத்து காத்திருந்தனர்.நான் சைக்கிளை நிறுத்தியதும் அப்பாவின் கை கூரையில் செருகியிருந்த பிரம்பை உருவியது. பிறகென்ன அய்யோ அப்பா அடிக்காதேங்கோ இனி இப்பிடி செய்யமாட்டன்.......................

சப்பறம் பாக்கலாம்

7:44 AM, Posted by sathiri, No Comment

சப்பறம் பாக்கலாம்

ஒரு பேப்பரிற்காக

கடந்த ஞாயிறன்று பாரிஸ் மாணிக்க பிள்ளையார் கோவில் தேரிற்கு சென்றிருந்த வேளை ஊர் நண்பனுடன் எங்கள் ஊர் பிள்ளையார் கோவில் திருவிழா ஞாபகங்களை நினைத்து பேசிய பொழுதுதான் வாழ் நாளில் எப்படி எங்கள் சில நகைச்சுவை அனுபவங்களை மறக்க முடியாதோ அது போலவே எங்களால் ஏதோ ஒரு சில காரணங்களிற்காக சில நகைச்சுவையான அல்லது வேடிக்கையான மனிதர்களையும் வாழ் நாளில் மறக்க முடியாது. அப்படியான ஒரு உறுவுக்காரர் எங்கள் ஊரில் இருந்தார்.கதைக்காக அவரிற்கு ராசா பெயர் வைக்கிறேன். ராசா நன்றாக படித்து புகையிரத ஓட்டுனராக வேலையும் செய்தார்.

ஆனால் அவருக்கு தண்ணியிலை கண்டம். நான் சொல்லுறது கடல் தண்ணி ஆத்து தண்ணியில்லை இது அடிக்கிற தண்ணி. இவர் காங்கேசன் துறைக்கு கொழும்பில் இருந்து வரும் இரவு புகையிரதத்தை ஓட்டி வந்தால் மறுநாள் மாலை காங்கேசன் துறையில் இருந்து இவர்தான் கொழும்பிற்கு ஓட்டிசெல்ல வேண்டும் ஆனால் இவர் பகல் முழுதும் மப்படித்து விட்டு எங்காவது படுத்து நித்திரையாகி விடுவார். மாலையானதும் புகையிரதத்தை எடுக்க ஆளை காணவில்லையென்று றெயில்வே திணைக்கள ஜுப்பில் அதன் ஊழியர்களும் ஒரு பொலிஸ்காரரும் இவரை தேடி ஊருக்கு வருவார்கள்.

பிறகு நாங்களும் சேந்து அவர் கோயிலடியிலையா அல்லது கள்ளு கொட்டில்களில் படுத்திருக்கிறாரா என்று தேடிப்பிடித்து ஜுப்பில் ஏற்றி அனுப்பி விடுவோம். ஆனாலும் மறுபடியும் அதே கதைதான். கார் பஸ் என்றால் அவசரத்திற்கு யாராவது ஓடலாம் ஆனால் றெயின் ஓட யாரை பிடிக்கிறது என்கிற கவலையில் றெயில்வே திணைக்களமும் இவரை வேலையில் இருந்து நீக்காமல் பொறுமைகாத்தது. ஆனாலும் அது நீடிக்கவில்லை காரணம் ஒரு முறை இவர் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்த பயணிஒருவருடன் ஏதோ தகராறாம். அந்த பயணி கோண்டாவில் நிறுத்தத்தில் இறங்க வேண்டியவர் என்பதை தெரிந்து கொண்ட ராசா கோண்டாவில் நிலையத்தில் புகையிரதத்தை நிறுத்தாமல் கொஞ்ச தூரம் கொண்டு போய் இணுவில் தோட்டவெளிப்பக்கமாக நிறுத்தியிருக்கிறார்.

பயணிகள் எல்லாம் திட்டியபடி இறங்கி போய் பின்னர் பெட்டிசங்களும் இவருக்கு எதிராக போய் விழ பிறகென்ன வேலை காலி. அதுக்கு பிறகு அவரும் எங்களுடன் கோயிலடி மடத்து உறுப்பினராகி தனது புகையிரம் ஓட்டிய அனுபவங்களை பிறிஸ்ரல் சிகரற் பிடித்த வாயால் பீடி புகையை இழுத்து விட்டபடி சொல்லிக்கொண்டிருப்பார்.அப༢r />?போது எங்கள் கோயில் திருவிழாவும் தொடங்கியிருந்தது. கோயிலில் இருபத்தைந்து திருவிழாவையும் சிலர் தனிக்குடும்பங்களாகவும் சிலர் சொந்தங்கள் ஒன்று சேர்ந்து செய்வதும் வழைமை.சொந்தங்கள் அல்லது பலர் ஒன்று சேர்ந்து செய்யும் திருவிழாக்கள் பலரும் பணம் சேர்த்து செய்வதால் ஆடம்பரமாக பலகூட்டம் மேளம். பாட்டு கச்சேரி. சின்னமேளம்.கலர் கலரா றியூப்லைற் சேடனைகள் என்று களை கட்டும்.

அது போலத்தான் எங்களது திருவிழா சப்பறத்திருவிழா.நாங்களும் சொந்தங்கள் பலர் சேர்ந்து செய்வதால் திருவிழா களை கட்டும். அதிலை சின்னமேளத்திற்கான மொத்த செலவையும் என்ரை தாத்தா தான் பொறுப்பெடுக்கிறவர். அண்டைக்கு தாத்தா காத்தாலை எழும்பி உடம்பெல்லாம் எண்ணை தேச்சு கொஞ்ச நேரம் வெய்யில்லை நிண்டு தோஞ்சு குளிச்சு பட்டுவேட்டி சால்வை கழுத்திலை புலிப்பல்லு சங்கிலியெண்டு மைனர் குஞ்சு மாதிரித்தான் வலம் வருவார்.மற்ற நாளிலை நாங்கள் என்ன கேட்டாலும் மறுக்காமல் வாங்கிதாற பாட்டி அண்டைக்கு நாங்கள் என்ன கேட்டாலும் புறு புறுத்தபடி எங்களிலை எரிஞ்சு விழுவா. அது ஏனெண்டு எங்களுக்கு அப்ப விழங்கிறெல்லை பிறகு நாங்கள் வளருகின்ற காலங்களிலை திருவிழாக்களிலை பொப்இசைக்குழு பிறகு ரி.வி. எண்டு வந்ததாலை சின்னமேளம் இல்லாமல் போட்டுது. அதலை எங்களுக்கு சின்னமேளம் பாத்த அனுபவங்கள் இல்லை அதாலை கனடாவிலை இருந்து உவர் பாலச்சந்திரன் அண்ணைதான் அதைப்பற்றி எழுதவேணும்.

சரி நான் சப்பறத்துக்கு வாறன்.அந்த வருச சப்பறத்திருவிழாவை நாங்கள் எப்பிடி செய்யிறதெண்டு பெரியாக்கள் எல்லாரும் கோயிலடியிலை நிண்டு திட்டம் போட்டு கொண்டு நிக்க ராசா வந்து சொன்னார் இந்த வருசம் தானும் ஊரிலை நிக்கிற படியா எல்லாரும் காசை சேத்து தன்னட்டை தாங்கோ மிச்ச காசை தான் போட்டு இதுவரை செய்யாத மாதிரி விசேசமா தான் செய்து காட்டுறணெண்டார்.எங்கடை பெருசுகளும் கதைச்சு பேசி ராசாண்ணையிடமே பெறுப்பை குடுக்கிறதா முடிவெடுத்தினம். ஆனாலும் எனக்கு சந்தேகம்தான் பிறிஸ்ரலுக்கு வழியில்லாமல் பீடி இழுத்து கொண்டு திரியிறவரிட்டை நம்பி பொறுப்பை குடுக்கினம் ஏதாவது வில்லங்கத்திலை தான் முடியும் என்று யோசித்தாலும் நான் சொல்லி பெருசுகள் கேட்கவா போகினம் எதுக்கு வாயை குடுப்பான் என்று பேசாமல் இருந்து விட்டேன்.

ஆனாலும் பாதி காசுக்கு மேலை பொறுப்பெடுங்கிறீங்களே உங்களாலை இயலுமா எண்டு ராசாண்ணையிடம் சந்தேகத்தை கேட்காமல் இருக்க முடியவில்லை. அவர் சொன்னார் டேய் என்னை வேலையாலை நிப்பாட்டினதக்கு றெயில்வே ஒரு தொகை காசு தந்தது பாங்கிலை போட்டிருக்கினம் பார் இந்தமுறை இருவரை காலமும் நடத்தாத மாதிரி திருவிழாவை நடத்திகாட்டுறன் எண்டார்.சரி என்னமோ எங்களுக்கு திருவிழா நடந்தால் சரி முக்கியமா பாட்டு கோஸ்ரி பிடிக்கவேணும் என்று விட்டு போய் விட்டேன். ராசாண்ணை சொன்னபடியே செய்தும் காட்டினார். திருவிழா காலங்களிலை மேளம். பாட்டு கச்சேரி . வில்லுப்பாட்டு ஆகியவற்றை நாங்கள் விரும்பின படி ஒழுங்கு பண்ணித்தர அதுக்கெண்டு புறோக்கர் மார் இருப்பினம் அவைக்கு அதிலை ஒரு கொமிசன் இருக்கும்.. ராசாண்ணையும் ஒரு புறோக்கரை பிடித்து முற்பணத்தை கொடுத்து நாலு கூட்டம் மேளம் பாட்டு கோஸ்ரி வில்லுப்பாட்டு காரர் எண்டு வந்து இறங்கி கொண்டே இருந்திச்சினம்.

அது மட்டுமில்லை வழைமையா கோயில் வீதியிலை மட்டும் கட்டிற சப்பறம் அந்த முறை ஊர் சந்தியிலையும் கட்டி கோயிலை சுத்தி ஒரு கிலோ மீற்றர் தூரமளவிற்கு கலர் கலரா லைற்றுகள் எவ்வொரு தந்தி கம்பத்திலையும் ஸ்பீக்கர் எண்டு ஒரு கலக்கு கலக்கிச்சுது. ஊர் சனமும் ராசா ஏதோ தண்ணியடிச்சு குளப்படி பண்ணினாலும் ஆள் விசய காரன் எண்டு கதைக்க இதை யெல்லாம் மேற்பார்வை பாத்தபடி புறோக்கருடன் ராசாண்ணையும் ராச நடை நடந்து திரிந்தார்.திருவிழா எல்லாம் நல்ல படியாக நடந்து முடிந்து சனமும் போய் இசை நிகழ்ச்சிகள் நடத்தினவையும் போய் சேர்ந்திட்டினம். புறோக்கர் மட்டும் மடத்திலையே படுத்திருந்தார் காரணம். நிகழ்ச்சிகளை செய்தவர்களிற்கு ஒரு தொகை முற்பணம் மட்டுமே கொடுத்து நிகழ்ச்சிகளை ஒழுங்கு பண்ணுவது வழைமை பின்னர் நிகழ்ச்சி முடிந்து மறுநாள் மீதி பணத்தை திருவிழா காரரிடம் புறோக்கரே வாங்கி கொண்டு போய் நிகழ்ச்சி செய்தவர்கள் வீடுகளில் போய் கொடுத்து விட்டு தனது பங்கையும் எடுத்து கொள்வார். இந்த பண கொடுக்கல் வாங்கல்கள் எல்லாம் ஒரு நம்பிக்கையின் அடிப்படையிலே நடைபெறுவது வழைமை.

மறு நாள் காலை ராசாண்ணை எப்படியும் மீதி பணத்துடன் வந்து விடுவார் என்று காத்திருந்த புறோக்கர் நேரம் செல்ல செல்ல அக்கம் பக்கம் ராசாண்ணையை தேடி விசாரிக்க தொடங்கினார்.நேரம் மதியத்தையும் தாண்டி மாலையாகி விட்டது அதற்கிடையில் ஊரெங்கும் கதை பரவி புறோக்கருடன் நாங்களும் தேடிகொண்டிருக்க ராசாண்ணை கோயில் குளத்தடியில் படுத்திருப்பதாக செய்தி வந்ததும் அங்கு ஓடிபோய் பார்த்தோம்.பாம்பின் மேல் பால்கடலில் பள்ளிகொண்ட திருமலைபோல ஸ்ரைலாக தலைக்கு ஒரு கையை வைத்தபடி ராசாண்ணை குளக்கட்டில் படுத்திருந்தார். புறோக்கர் அவரிடம் போய் தம்பி காத்தாலை இருந்து தேடுறன் எனக்கு பயமும் வந்திட்டிது மிச்ச காசை தந்தால் நான் கொண்டு போய் குடுக்கிறவைக்கு குடுத்திட்டு என்ரை வேலையை பாக்கலாம் எண்டு இழுக்கவும் கோபம் வந்தவராய் துள்ளி எழும்பிய ராசாண்ணை புறோக்கரை பார்த்து என்னவோய் மேளம் பிடிச்சனீர் ஒருதனும் ஒழுங்கா அடிக்கேல்லை சரி பாட்டு கோஸ்ரிதான் நல்ல பாட்டு பாடுமெண்டால் அதுவும் இல்லை அதைவிட சோடிச்ச ரியூப்லைற்றிலை பாதி ராத்திரி எரியேல்லை அதாலை உங்களுக்கு தாற காசை இந்த குளத்துக்கை எறியலாம் என்றபடி இடுப்பில் இருந்த பேஸ்(பணப்பை) ஒன்றை எடுத்து குளத்தினுள் எறிந்தார்.

அவர் ஆத்திரத்திலை காசை குளத்திலை எறிஞ்சிட்டார் என்று நினைத்து பதறியபடி புறோக்கர் குளத்துக்கை குதிக்க நாங்களும் சேர்ந்து குளத்தினுள் குதித்து சுழியோடி பணப்பையை எடுத்து பிரித்து பார்த்தால் வெறும் கடதாசிகள் மடித்து வைக்கபட்டிருந்தது.வெளியே வந்து பார்த்தால் ராசாண்ணையை காணவில்லை ஓடிவிட்டார்.பிறகென்ன புறோக்கரின்ரை பரிதாபத்தை பார்த்து நாங்கள் மீண்டும பணம் சேர்த்து கொடுத்து அனுப்பி வைத்தோம்.அன்று ஓடிய ராசாண்ணையை பல வருடங்களாக ஊர்ப்பக்கம் காணவில்லை வன்னியில் கண்டதாக யாரோ வந்து சொன்னார்கள்.

கிபீர் ஆமி அம்மன் ஜரோப்பிய அவலம் 11

3:09 PM, Posted by sathiri, 2 Comments


த.ஈ.வே.வெ.வெ...

8:31 AM, Posted by sathiri, No Comment

த.ஈ.வே.வெ.வெ........

இந்த வார ஒரு பேப்பரிற்காய் எனது அனுபவ தொடரின் ஒரு நினைவு

என்னது ஏதோ குழந்தை பிள்ளைகள் கதைக்க தொடங்கிற காலத்திலை கதைச்ச மாதிரி இருக்கே எண்டு யோசிக்கிறீங்களா. கடந்த வார ஒரு பேப்பரில் பாலச்சந்திரன் அண்ணாவும் பா.வை.ஜெயபலனும் ஆடிமாதத்து நினைவுகளை கிழப்பிவிட்டு போய் விட்டார்கள். அதனால்தான் எனது இந்த ஆடிமாதத்து நினைவும். ஆனால் இது அம்மி பறந்த நினைவு அல்ல ஆனால் இது இலங்கையில் 83ம் ஆண்டு தமிழர் அடிவாங்கி பறந்தோடிய ஆண்டு நினைவு.

எங்கள் ஊர் பிள்ளையார் கோவிலில் வழைமையாக பூசை முடிந்ததும் பஞ்சாட்சரம் என்று ஒருவர்தான் சுண்டல் புக்கை மற்றும் பஞ்சாமிர்தம் ஆகியபிரசாதங்களை கொடுப்பார் கோயில் பூசை முடிந்து அய்யர் விபூதி சந்தணம் கொடுத்து விட்டு போகும் வரை கொயில் தேர் முட்டியில் காத்திருந்து விட்டு பஞ்சாட்சரம் அவர்கள் சுண்டல் சட்டியுடன் வரும்போதுதான் நாங்கள் எழுந்து போய் வரிசையில் நிற்போம்.அவரும் அவல் சுண்டல் எல்லாம் கொஞ்சம் கைகளில் வைத்து கொண்டே போவார். ஆனால் இந்த பஞ்சாமிர்தம் தரும்போது மட்டும் பஞ்சாமிர்த சட்டியில் ஒரு முறை கையை வைத்தார் எண்டால் அதை ஒரு பத்து பேரின் கையிலாவது தடவிகொண்டு போவார். கையில் கொஞ்ச தேன்மட்டும் தான்ஒட்டும் அதை உடனே நக்கி விட்டு திருப்ப கையை நீட்டினாலும் அவர் தரமாட்டார் தன்பாட்டிற்கு போய் கொண்டேயிருப்பார்.

இறுதியில் மிஞ்சுகின்ற பஞ்சாமிர்தத்தை அவர் வீட்டிற்கு கொண்டு போய் விடுவார். இதனால் எங்களிற்கும் அவரிற்கும் ஒரு நிழல் யுத்தமே நடந்து கொண்டிருந்தது. சில நேரங்களில் இரவு வேளைகளில் அவரது வீட்டை சைக்கிளில் கடந்து போகும் போது பஞ்சாமிர்தம் தராத பஞ்சாட்சரம் ஒழிக என்று கத்தி விட்டு ஓடுவதும் உண்டு. அவரிற்கும் தெரியும் நாங்கள் தான் கத்துவது என்று ஆனாலும் எப்பொழுதுமே நேரடியாக நாங்கள் சண்டை பிடித்தது கிடையாது.இப்படி இது தொடர்ந்து கொண்டிருந்த காலகட்டத்தில் தான்


83ம் ஆண்மடு ஆடி மாதம் 23 ந்திகதி தொடங்கிய கலவரத்தில் வடக்கு கிழக்கு தவிர்ந்த இடங்களிலை இருந்த எல்லாத் தமிழரும் சிங்களவரிட்டை அடி வாங்கி கொண்டு உறவுகள் உடைமைகள் என்றுயாழ் காங்கேசன் துறையில் கப்பல்களில் வந்து இறங்க தொடங்கினர்.அந்தநேரம் நாங்களும் வந்தவர்களிற்கு முடிந்தளவு உதவிகளை செய்தோம் எங்கள் ஊரிலும் பலர் வந்திறங்கினார்கள் அதில் பலர் ஊரின் வாசமே மறந்து போனவர்களும் அடக்கம். அப்படி வந்தவர்களில் ஒரு அம்மணி கொழும்பில் பெரிய அரசியல் பலம் பண பலம் என்று வாழ்ந்தவா அவாவும் போட்ட உடுப்போடைதான் ஓடிவந்து ஊரிலை அவையின்ரை பாட்டன் வீட்டிலை இருந்தவை . ஆனால் அப்பிடி அடிவாங்கி கொண்டு ஓடிவந்தும் அந்த அம்மணியோஊரிலை சே சரியான டேட்டி விலேச் என்று குதிக்காலாலை நடந்து திரிஞ்சவா.இந்த கால கட்டம் வடக்கு கிழக்கு தமிழர்களிடம் ஒரு கொந்தளித்த மன நிலையெ காணப்பட்டது.

யாழிலும் மூலை முடுக்கெல்லாம் முப்பதிற்கும் மேற்பட்ட இயக்கங்களும் முளைக்க அரம்பித்திருந்தது. இவைகள் ஒரு பக்கத்தாலை நடந்து கொண்டிருக்க இந்த பஞ்சாட்சரம் அவர்களின் மகளிற்கு திருமணம் ஒழுங்கு பண்ணப்பட்டிருந்தது. ஆனால் ஆடி மாதம் யாரும் ஊரில் திருமணம் வைப்பதில்லை என்பதால் ஆவணி மாதம் நாள் வைத்து அதற்கான ஏற்பாடுகள் தடலு் புடலாக நடைபெற்றது. வீடு பெயின்ற் அடிக்கப்பட்டு அவர் வீட்டு மதிலும் சுண்ணாம்பு அடித்து பளிச்சென்று இருந்தது. ஊரிலை உங்கள் எல்லாரிற்கும் தெரிந்த விடயம் றோட்டு போடுறதெண்டால் முதலில் கல்லைகொண்டு வந்து கொட்டி ஒரு பாத்தி மாதிரி கட்டிவிட்டு போவார்கள்.

பிறகு ஒரு ஆறு மாதத்திற்கு பிறகு தார் தகரத்தை கொண்டு வந்து போட்டு விட்டு போவார்கள் றோட்டு போட ஒரு வருசமும் ஆகலாம் சில வருசமும் ஆகலாம். அது எப்ப போடப்படும் எண்டு எங்கள் ஊர் பிள்ளையாருக்கே தெரியாது. ஆனால் றோட்டு போட தொடங்கும் போது பறிச்ச கல்லிலை பாதியும். ஊரிலை உள்ள ஓட்டை வாளியள் சருவகுடம் கிடாரம் அடைக்க எண்டு கொஞ்ச தாரும் காணாமல் போயிருக்கும்.

அப்பிடித்தான் ஊரிலை றோட்டு போட எண்டு கல்லும் தாரும் பறிக்கப்பட்டு இருந்தது.ஒரு நாள் இரவு கோயிலடியிலை இருந்து அரட்டை அடிச்சிட்டு இரவு நானும் இருள் அளகனும் வீட்டிற்கு போய்க்கொண்டிருந்த போது பளிச்சென்று சுண்ணாம்படித்த பஞ்சாட்சரத்தின் வீட்டு மதிலும் அதக்கு பக்கத்திலை தார் தகரத்தையும் பார்த்ததும் என்னுடைய மூளையும் அதே நேரம் படபடப்பில் இதயமும் ஒண்றாக இயங்க ஆரம்பித்தது. ஆனாலும் தைரியத்தை வரவளைத்து கொண்டு இருள் அளகனிடம் டேய் இந்த பஞ்சாட்சரம் எத்தினை வருசமா எங்களிற்கு பஞ்சாமிர்தம் தராமல் பம்மாத்து விடுறார் அவருக்கு ஒரு வேலை செய்யப்போறன் பார் என்று விட்டு ஒரு தடியை எடுத்து தார் தகரத்துக்குள்ளை விட்டு பார்த்தன். ஆடி வெய்யிலில் தார் நல்லா உருகி இருந்தது. அப்பதான் நான் ஏதோ செய்யபோறன் எண்டு இருள் அளகனிற்கு விழங்கியது. அவன் என்னைப்பார்த்து டேய் வேண்டாம் பிடிபட்டா பஞ்சாட்சரமும் வீட்டு காரரும் சேர்ந்தே தோலை உரிச்சு போடுவினம் வேண்டமாடா என்று கெஞ்சினான்.

டேய் அது ஒண்டும் நடக்காத மாதிரி என்னட்டை அய்டியா இருக்கு என்று விட்டு தடியில் தாரை நன்றாக தோய்த்து பஞ்சாட்சரம் வீட்டு பளிச்சென்ற மதிலில் ஜே.ஆர் அரசே தமிழர்கள் மீதான வன் முறையை உடனடியாக நிறுத்து இல்லாவிடில் நீயும் உனது அரச படையும் பயங்கர விளைவை சந்திக்க நேரிடும் என்று எழுதி விட்டு ஏதாவது ஒரு இயக்கத்தின் பெயரை கட்டாயம்கீழே எழுத வேண்டுமே என்று யோசித்த போதுதான் எதுக்கு வேறை ஏதாவது இயக்கத்தின்ரை பெயரை எழுதி வீண் வம்பிலை மாட்டுவான் என்று நினைத்து எல்லா இயக்கங்களின் பெயரிலுமே த.ஈ என்கிற அதாவது தமிழ் ஈழம் என்று தொடங்கி ஏதாவது ஒரு பெயர் வரும் எனவே நானும் ஏதாவது ஒரு பெயரை புதிதாய் போட நினைத்து த.ஈ.வே.வெ.வெ. என்று கீழே எழுதி விட்டு ஓடிவிட்டோம்.

மறுநாள் வழைமை போல கோயிலில் மாலை பூசை முடியும் வரை கோயில் தேர் முட்டியில் இருந்து முதல் நாள் இரவு நான் செய்த வீரபிரதாபத்தை மற்றைய நண்பர்களிடம் சொல்லி சிரித்து கொண்டிருந்து விட்டு பஞ்சாட்சரத்தை கண்டதும் எழுத்து போய் வரிசையில் நின்றோம். பஞ்சாட்சரமும் சுண்டல் அவல் புக்கை எல்லாவற்றையும் தந்து விட்டு போய் விட்டார் பஞ்சாமிர்தத்தை காணவேயில்லை.நாங்களும் பஞ்சாட்சரம் பழிவாங்கிட்டாரடா என்றபடி போய் மீண்டும் தேரடியில் இருந்தபோதுதான் திடீரென பஞ்சாட்சரம் பஞ்சாமிர்த சட்டியுடன் சிரித்தபடி எங்கள் முன்னே வந்து நின்றபடி தம்பியவை இது உங்களுக்காக ஸ்பெசலா செய்த பஞ்சாமிர்தம் அதாலைதான் மற்றவைக்கும் குடுக்காமல் உங்களுக்காக கொண்டந்தனான் என்றபடி கை நிறைய எல்லாருக்கும் அள்ளி எங்கள் கைகளில் வைத்தபடி தம்பியவை உங்களிட்டை ஒரு விசயம் சொல்ல வேணும் என்றவும் நானும் இருள் அளகனும் ஒருதரையொருத்தர் பாத்து கொண்டோம்.

அவர் தொடர்ந்தார் தம்பியவை என்ரை மகளின்ரை கலியாணத்துக்கு ஏதோ கடனை வாங்கி ஒழுங்கு பண்ணி வீட்டுக்கும் பெயின்ற் அடிச்சு மதிலுக்கும் சுண்ணாம்பு அடிச்சிருந்தனான் ஆனால் யாரெண்டு தெரியாது நேற்றிரவு என்ரை மதிலிலை ஏதோ நான்தான் கலவரத்தை தொடக்கி விட்டமாதிரிஜே.ஆர் அரசே பயங்கர வாதத்தை நிறுத்து எண்டு தாராலை எழுதி போட்டு போட்டாங்கள். தம்பியவை எனக்குத் தெரியும் நீங்கள் எழுதியிருக்க மாட்டியள் ஆனால் உங்களிற்கு தெரிஞ்சவை யாரும் எழுதியிருந்தால் அவையிட்டை சொல்லுங்கோ முடிஞ்சால் கொழும்புக்கு போய் ஜே.ஆரின்ரை வீட்டு மதிலிலையோ ஆமிகாம்ப் சுவரிலையோ இல்லாட்டி பொலிஸ் ஸ்ரேசன் வாசல்லையோ எழுத சொல்லுங்கோ.

மகளின்ரை கலியாணம் முடிஞ்சு நாலாம் சடங்கு முடியும் மட்டுமாவது மதிலை கொஞ்சம் வெள்ளையா இருக்க விட்டா காணும் என்று விட்டு.தம்பியவை வடிவா சாப்பிடுங்கோ காணாட்டிலும் கேட்டு வாங்கி சாப்பிடுங்கோ என்று விட்டு போய் விட்டார் நான் பஞ்சாமிர்தத்தை சாப்பிடாமல் அப்படியே கைகளில் வைத்திருக்க வில் இடுக்குளினால் தேன் ஒழுகிகொண்டிருந்தது.அப்போத தான் இருள் அழகன் என்னிடம் டேய் மனிசன் எங்களை கண்டு பிடிச்சிட்டுதாக்கும் எண்டு நான் சரியா பயந்தே போனன் நல்லவேளை தப்பிவிட்டம் என்றவன் எல்லாம் சரி உன்ரை இயக்கத்துக்கு பெயர் என்ன?? த.ஈ.என்றால் தமிழ் ஈழம். அதென்ன வெ...வெவ்...வே... எண்டு குழந்தையள் நெக்காட்டினமாதிரி (நக்கல் பண்ணுவது) எழுதியிருக்கிறாய் அதுகின்ரை அர்த்தம் என்ன என்றான். அப்பதான் நான் பஞ்சாமிர்தத்தை சாப்பிட்ட படி ஓ அதுவா தமிழீழ வேலை வெட்டியற்ற வெறும் பயலுகள். நான் மட்டுமில்லை நீங்களும்தான் அதன் உறுப்பினர்கள் என்றவும் எல்லோரும் தாங்கள் சாப்பிட்டு முடிந்த பஞ்சாமிர்த கையை என்மீது துடைத்தார்கள் நீங்களும் பல்லை நெருமுவது கேட்கிறது எனவே எஸ்கேப் அடுத்த பேப்பரில் சந்திக்கிறேன்

ஜரோப்பிய அவலம் 10

2:10 PM, Posted by sathiri, No Comment



2:07 PM, Posted by sathiri, No Comment

படம் காட்டுறம் வாங்கோ

8:37 AM, Posted by sathiri, One Comment

படம் காட்டுறம் வாங்கோ

கடந்த ஒரு பேப்பரில் எனக்கு ASIA வேணும் என்கிற எனது அனுபவ கதை பலரும்விரும்பி படித்ததால் இந்தவார ஒரு பேப்பரிற்காக எழுதிய இன்னொரு அனுபவக்கதை

இதுவும் 80களின்ரை ஆரம்ப காலகட்ட கதைதான் இந்த காலகட்டம்தான் தொலைகாட்சி பெட்டியும் இலங்கையிலை பரவலா அறிமுகமாக தொடங்கின கால கட்டம். அந்த கால கட்டத்திலை கோயில் திருவிழா. கலியாணவீடு .சாமத்தியவீடு எண்டு எல்லா மங்கல விழாவிலையும் ரிவியிலை விடிய விடிய அஞ்சு . ஆறு படம் ஓடுறகாலம்.ஆரம்பத்தில் இந்த ரிவி டெக் ஆகியவற்றை சில வீடியொ கடையளும் வாடைகைக்கு விடுவினம் அவையளிட்டை போய் சொன்னா சரி. ரிவி டெக் ஆகியவற்றை ஒரு வானில் கொண்டு வந்து இறக்கி படத்தை போட்டு செற்பண்ணி விட்டிட்டு படங்களை மாத்துறதுக்காகவே ஒருதர் விடிய விடிய காவல் நிப்பார். பிறகு காலப்போக்கிலை வெளிநாடு மற்றும் கப்பல்களில் வேலைக்கு போறவை எல்லாருமே லீவிலை வரும்போது கட்டாயம் கையோடை கொண்டு வாற சாமான் இந்த ரிவி தான் அதுவும் 99 வீதம் பேரும் கொண்டுவாறது(SONY) ரிவிதான்.அதாலை சைக்கிள் கரியரிலை கட்டி கொண்டு போற அளவுக்கு இந்த ரிவியின்ரை பெருமை குறைஞ்சு போச்சுது.


இப்பிடித்தான்பாடசாலை தவணை விடுமுறை விட்டஒருநாள் என்னுயிர்த்தோழன் இருள் அழகன் எங்கடை கோயில் மடத்திலை இருந்து அதுகின்ரை முகட்டை பாத்தபடி என்னிடம் " டேய் இந்த உலகத்திலை பிறந்து இதவரை என்னத்தை சாதிச்சிருக்கிறம்" எண்டான். இதென்னடா இவனுக்கு திடீரெண்டு மடத்து முகட்டிலை இருந்து ஏதும் ஞானம் கிடைச்சிட்டுதா எண்டு நினைச்சபடி . அவனையும் முகட்டையும் மாறி மாறி பாக்க . இல்லையடா இந்த ஊருக்காவது ஏதாவது செய்யவேணும் போலை இருக்கு அததான் இந்த லீவிலையாவது எதாவது பிரயோசனமா இந்த ஊர் மக்களுக்கு செய்வம் எண்டு யோசிச்சு இருக்கிறன்எண்டான்.

நல்ல சிந்தனைதான் ஆனால் அது உனக்கு வந்திருக்கு அதுதான் யோசிக்கிறன் சரி என்ன செய்யபோறாய் என்றவும். ஒரு ரிவி டெக் வடைகைக்கு எடுத்து எங்கடை ஊர் மக்களுக்கு படம் காட்ட போறன் என்றான்.அப்பதான் எனக்கு நிம்மதி ஒரு நிமிசம் இவனுக்கு ஏதும் ஞானம் பிறந்திட்டுதாக்கும் என்று பயந்து போயிட்டன். அப்பிடியே பிள்ளையாரை எட்டிப்பார்த்து மனதுக்குள் நன்றி சொல்லிவிட்டு சரி ஏதோ பொழுது போகதானே வேணும் அது படம் பாத்ததா போகட்டும் என்று நினைத்து அதற்கான பட்ஜெட்டை போட்டு பார்தோம்.

ரிவி.டெக்மற்றும் 5 படக்கொப்பி ல்லாவற்றிக்குமாக வாடைகை 1500 ரூபாவை தாண்டியது. வீட்டிலை கைசெலவுக்கு தருகின்ற 5 ரூபாவுக்கே எத்தினை குட்டிகரணம் அடிக்க வேண்டியிருக்கு இதுக்கை 1500 ரூபாக்கு எங்கை போறது என்று நினைத்து செலவை குறைக்க ஒரு யோசனை தோன்றியது. படம் ஓட ஒரு இடம் வேணும் அதுவும் ஆமி ரோந்து பிரச்சனை இருக்கிறபடியா பிரதான வீதியை அண்டாமல்
ஒதுக்கு புறமா மின்சார வசதியோடை ஒரு வீடு வேணும் யோசிச்சு பாத்ததிலை அதே வசதிகளோடை இருக்கிற எனது சித்தப்பா ஒருதர் ஞாபகத்திற்கு வந்தார் அதைவிட அவரிட்டை ரிவியும் இருந்தது அதோடை அவரும் சித்தியும் சரியான பட பைத்தியம் அவரோதைச்சு அவர் இடமும் ரிவியும் தந்தாரெண்டால் பாதி பிரச்சனை முடிஞ்ச மாதிரி என்று நினைத்து அவரிடம் போய் கதைச்சன் அவரும் முதலாவது படம் தன்னுடைய அபிமான நடிகர் எம்.ஜி. ஆர் நடிச்ச படம் போடவேணும் சரியெண்டா தான் இடமும் ரி வியும் தாறதா சொன்னார்.

இடம் ரிவி பிரச்னை முடிஞ்சுது மிச்சமா டெக் மற்றும் பட கொப்ப்பி எடுக்க வடைகை ஒரு 700 ரூபாயளவில் தேவை இருள் அளகனின்ரை சேமிப்பு உண்டியலை உடைச்சதிலை ஒரு 150 ரூபாய் தேறியது . என்னிடம் உண்டியல் சேமிப்பு பழக்கம் இல்லை ஏணெண்டால் நான் எப்பவுமே நாளையை பற்றி கவலை படாத ஆள் .( இன்றுவரை அதே நிலைமைதான்) அதாலை நான் வழைமை போல எனக்கு பணம் தேவைப்படும் போதெல்லாம் எனக்கு கை கொடுப்பது எங்கள் தென்னங்காணி இது எங்கள் வீட்டிலிருந்து சுமார் 500 மீற்றர் தொலைவில் இருந்தது அதனால் அங்கு கைவைத்தால் வீட்டிற்கு தெரியவராது.

அதுமட்டுமில்லை ஆள்வைத்து தேங்காய் பிடுங்கினால் வீட்டில் பிடிபட்டு விடுவேன் என்றதால் நானே கஸ்ரபட்டு தென்னைமரமேற கற்று கொண்டேன். தென்னை மாமேறினால் நெஞ்சு பகுதியில் மரம் உரஞ்சி கீறல் காயங்கள் வரும் அது மாறும்வரை வீட்டு காரருக்கு முன்னால் சேட்டை கழற்றாமல் திரிய வேண்டும்.அடுத்தாய் அந்த காணிக்கை பாக்கு மரங்களும் நிண்டது கொட்டை பாக்கும் பொறுக்கி விக்கலாம். வீட்டுக்கு தெரியாமல் வழைமை போல நானும் நண்பனும் தென்னையில் கை வைக்க முடிவு செய்தோம். நான் தேங்காய்களை புடுங்கி போட இருள் அழகன் ஓடியொடி பொறுக்கி உரித்தான் அதோடு கொட்டை பாக்கும் கொஞ்சம் பொறுக்கி சாக்கில் போட்டு கட்டியாகிவிட்டது.

ஊர்சந்தையில் கொண்டு போய் விக்கமுடியாது வீட்.டுகாரர் யாராவது கண்டால் பிரச்சனையாகிவிடும் என்பதால் மருதனார் மடம் சந்தையில் கொண்டு போய் வித்து ஒரு 200 ரூபாயளவில் தேறியது சந்தையை விட்டு வெளியே வந்ததும் முன்னாலிருந்த கூல்பார் கண்ணில்பட நண்பனிடம் டேய் இவ்வளவு கஸ்ரபட்டு மரமேறி தேங்காயெல்லாம் புடுங்கி வித்தாச்சு நெஞ்செல்லாம் மரம்உரஞ்சி எரியிது வா கூலா ஒரு பலூடா குடிப்பம் என்றேன். அதுக்கு அவனோ டேய் எங்கடை இலட்சியம் எல்லாம் படம் ஓடுவது அதுநிறைவேறும்வரை காசு செலவுபண்ணக்கூடாது இடையில் எந்த ஆசா பாசத்திற்கும் இடம்இல்லை பேசாமல் வா என்று கைநீட்டி சத்தியபிரமாணம் எடுக்காத குறையாக சொன்னான்.

அட விழங்காத பயலே படம் ஓடுறதெல்லாம் ஒரு இலட்சியம் அதுக்கு இடையிலை ஒரு பலூடா கூட குடிக்கமுடியாதா என்று புறுபுறுத்தாலும் அப்போ அவனுடன் கோபமாக கதைத்தால் அவனே அப்புறூவராக மாறி என்வீட்டில் தேங்காய் கதையை போட்டுடைத்து விடுவான் பிறகு வீட்டில் என் தலைதான் தேங்காயாக உருளும் எனவே பொத்திக்கொண்டு நடந்தேன்.எங்களிடம் இருந்த பணம் நண்பர்களிடம் கடனுதவி பெற்றது எண்டு எல்லாம் திரட்டியும் ஒரு 200 ரூபாய் பட்ஜெட்டில் துண்டு விழுந்தது.அதனால்ஆளுக்கு 3 ரூபாய் கட்டணம் அறவிடுவது என்றுஎங்கள் பொதுநலத்தெண்டில் சிறிய மாற்றம் கொண்டு வந்தோம் . அதே நேரம் படம் ஓடுகின்ற செய்தியை ஊருக்கு ஒரு ஸ்பீக்கர் முலமாக அறிவிக்கலாமென நினைத்து எங்கள் ஊரில் ஸ்பீக்கர் வாடைகைக்கு விடுகிறவர் ஒருவரிடம் போய் கேட்கவும் அவர் தம்பி வீட்டிலை பெரியாக்கள் யாரும் இருந்தா கூட்டிகொண்டு வாங்கோ உங்களை நம்பி தர ஏலாது என்றார்.

எனக்கு வந்த கோபத்திற்கு சற்று தூரத்தில் போய் நின்று ஒய் உன்ரை மகளைகலியாணம் கட்டிதர சொல்லியா கேட்டனான் ஸ்பீக்கர்தானே கேட்டனான் என்று கத்தி விட்டு ஓடிவிட்டேன். அப்படியே பண்டத்தரிப்பு வரை ஓடிப்போய் அங்கு எனக்கு தெரிந்த செல்வா சவுண்ட் சேவீஸ் காரரிடம் தலையை சொறிந்தேன் அவரும் ஓசியிலை குடுக்கிறதுதானே என்று நினைத்து ஒரு பழைய மைக் 2 சிறிய ஸ்பீக்கர் அம்பிலி(ampli)தந்துதவினார். அதை கொண்டுவந்து சித்தப்பாவிடம் நின்ற ஒற்றைதிருக்கல்(ஒருமாடு மட்டும் இழுக்கும் வண்டில்)வண்டிலில் மாட்டையும் கட்டி இரண்டு ஸ்பீக்கரையும் கட்டி எல்லாம் பொருத்தி முடிய இருள் அழகன் நான் தான் அறிவிப்பாளர் என்று அடம் பிடித்தான் .

சரி இதென்ன இலங்கை வானொலியா அவனின் ஆசையை ஏன் கெடுப்பான் அறிவிக்கட்டும் நான் வண்டிலை ஓடுவம் என்று நினைத்து மாட்டின் கயிற்றை பிடிக்கு முன்னர் இருள் அளகன் அவசரப்பட்டு வண். ரூ. திறீ மைக்: ரெஸ்ரிங் எண்றவும் ஸ்பீக்கர் கீகீகீ............என்று கீச்சிட மாடு வெருண்டு ஒடதொங்கி விட்டது. கொஞ்சத்தூரம் ஓடிய பின்னர் மாடும் வண்டிலும் கஸ்ரப்பட்டு என்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.ஆனாலும் இதையெல்லாம் பாத்துகொண்டு நின்ற சித்தப்பாவோ டேய் உங்கடை ஒரு நாள் கூத்துக்கு என்ரை மாட்டையும் வண்டிலையும் நாசமாக்க வேண்டாம் பேசாமல் ஸ்பீக்கரைமரத்திலை கட்டி அறிவியுங்ககோஎன்று மாட்டு வண்டிலை புடுங்கி கொண்டார்.

ஒரு மாதிரி மாலையானதும் எங்கடை அறிவிப்பிற்கு சனமும் வர தொடங்கியது ரிவியில் பாட்டுகள் ஒடிக்கொண்டிருந்தது. சித்தப்பா என்னிடம் தம்பி நான் டக்கெண்டு ஓடிப்போய் ஒரு போத்தல் அடிச்சிட்டு வாறன் அதவரைக்கும் பாட்டை ஒடவிடு என்று விட்டு கள்ளடிக்க போய்விட்டார்.நான் வாசலில் நின்று வசூலை கவனித்து கொண்டு இருள் அளகனிடம் டேய் யாராவது காசு தராமல் களவாய் வேலி பாஞ்சு வருவாங்கள் அதாலை நீ வீட்டை சுத்தி கவனி என்று அவனை அனுப்பி விட அவனும் எதோ நாட்டின் எல்லையை கவனிக்க அனுப்பின மாதிரி கையிலை ஒரு பொல்லை எடுத்த கொண்டு வீட்டின் பின்பக்கமாக போனான்.

சிறிது நேரத்தில் அய்யோ என்றொருசத்தம் கேட்டது இருள்அளகன் பொல்லு இல்லாமல் வேகமாய் ஓடிவந்து என்னிடம் நடுங்கியபடி டேய் ஒரு பிரச்சனை நடந்து போச்சு என்றவும் பின்னால் சித்தப்பா மண்டையை பொத்திப்பிடித்தபடி டேய் என்ரை வீட்டிலை என்ரை ரிவியிலை படமோடிகொண்டு என்னையே அடிக்கிறியளா??இண்டைக்கு எப்பிடி படம் ஓடறியள் எண்டு பாப்பம் என்றபடிஆவேசமாய் வந்து ரி வி வயர் எல்லாத்தையும் கழற்றி எறிய தொடங்கினார்.ஒரு மாதிரி நான் சித்தி எல்லாருமாக அவரை சமாதானப்படுத்தி விட்டு இருள் அளகனிடம் விபரத்தை கேட்டேன். கள்ளடிச்சிட்டு வந்த சித்தப்பா வீட்டின் பின்பக்கம் இருந்த பொட்டுக்குள்ளாலை உள்ளை வர தலையை விட்டிருக்கிறார் அதை யாரோ களவாய் படம்பாக்க வருகினம் என்று நினைத்து இருள்அளகன் இருட்டுக்குள்ளை ஆழை அடையாளம் தெரியாமல் கையிலை இருந்த கட்டையாலை மண்டையிலை போட்டிட்டான்.

பிறகு சித்தப்பாவிடம் மன்னிப்பு கேட்டு கெஞ்சி கூத்தாடி அவருக்கு பிடித்த எம்.ஜி. ஆரின் நினைத்ததை முடிப்பவன் படத்துடன் எங்கள் படம் காட்டல் இனிதே ஆரம்பமானது

அடுத்த பேப்பரில் இன்னொரு கதையுடன் சந்திக்கிறேன்

7:06 AM, Posted by sathiri, No Comment

MSN இல் சாத்திரியும் சோழியனும் ...

இந்தவார ஒரு பேப்பரில் வெளிவந்தது

யெர்மனியில் வசிக்கும் எழுத்தாளர் நாடகநடிகர் வில்லிசை கலைஞர் இப்படி பல கலைத்துறையிலும் காலடி பதித்திருக்கும் சோழியன் என்கிற ராஜன் முருகவேல் அவர்களுடன் எம்.எஸ்.என். மெசஞ்சரில் நடந்த ஒரு உரையாடல் அதனை பதிந்துஉங்களிற்கும்போட்டிருக்கிறேன்.

சாத்திரி. வணக்கமண்ணோய் எப்பிடி சுகம்

சோழியன். வணக்கம் நல்ல சுகம் `ஹம் அம்மன் கோயில் தேருக்கு போயிருந்தன் அங்கை உந்த ஒரு பேப்பர் மற்றது ஒரு றேடியொ காரரும் வந்திருந்தவை

சாத்திரி. ஓமண்ணை கேள்விப்பட்டனான் அவங்கள் இப்பிடித்தான் எங்கையாவது அன்னதானம் சக்கரை தண்ணி ஊத்தினம் எண்டு கேள்விப்பட்டால் எத்தினையாயிரம் கிலோ மீற்றர் எண்டாலும் பிளைற் பிடிச்சு போடுவாங்கள் ஊர்ப்பழக்கம் திருத்த ஏலாது.

சோழியன். கி..கி..கி.. சரி அங்கை ஒரு பேப்பர் கிடைச்சது படிச்சன் கன பக்கத்தோடை நல்லா இருந்திது அது எங்கடை சிற்றிக்கும் தொடந்து கிடைக்கிற மாதிரி ஏதாவது வழி பண்ணஏலாதோ??

சாத்திரி. அண்ணோய் அதுக்கு நீங்கள் தான் ஏதாவது ஒரு வழி பண்ணவேணும் முடிஞ்சளவு எல்லா இடமும் அனுப்பினம் இதுக்குமேலை நீங்கள் ஏதாவது உதவினால் உங்கடை சிற்றி பிறீமனுக்கும் தொடந்து வர பண்ணலாம்.

சோழியன். அதுக்கு என்ன செய்யவேணும்

சாத்திரி. முடிஞ்சா அங்கை சபேசனொடை கதைச்சு பாருங்கோ ஏதாவது வழி பண்ணலாம் ஆளை தெரியும் தானே

சோழியன். ஓ நல்லா தெரியும் முந்தி நான் அவரின்ரை இடத்துக்கு பக்கத்திலை லிவகசனிலைதான் இருந்தனான்.

சாத்திரி. லிவகுசனிலையோ ?? அப்ப உங்களுக்கு மானிப்பாய் ராசுவை தெரியுமோ நாடகமெல்லாம் நடிக்கிறவர்.

சோழியன். ஓ நல்லா தெரியும் நாங்கள் யெர்மன் வந்த புதிசிலை ஒரே காம்பிலைதான் இருந்தனாங்கள் சோசல் காசு எடுக்கிற நாளிலை இரண்டு பேரும் ஒரே கொண்டாட்டம் தான்

சாத்திரி. ஓ அவர் என்ரை மாமா தான் அப்ப சிறி எண்டவரை தெரியுமா அதே காம்பிலை தான் இருந்தவர்.

சோழியன். ஓ அவரையும் தெரியும் யெர்மனியிலையே முதல் முதல் 85ம் ஆண்டு தமிழ் முறைப்படி நடந்த கலியணம்எண்டா அவரின்ரை கலியாணமாதான் இருக்கும். ஊரிலை பல வருசமாகாதலிச்சு இஞ்சை வந்துதான் செய்தவை.பிள்ளையும் நல்ல பிள்ளை

சாத்திரி. ம் தெரியும் அங்கை ஒரு எட்டு வருசத்துக்கு மேலை காதலிச்சு இரண்டு வீட்டு காரருக்கும் விருப்பம் இல்லாததாலை பெரிய சண்டையெல்லாம் நடந்தது

சோழியன்.. நாங்கள் காம்பிலை இருந்த எல்லாருமா சேந்துதான் செய்து வைச்சனாங்கள் . அந்த நேரம் இஞ்சை குத்து விளக்கு தேங்காயெல்லாம் கிடைக்காதுதானே. நான்தான் இரண்டு ஆஸ்ரேயை எடுத்து கீழை கம்பியாலை கட்டி அலுமினிய பேப்பர் எல்லாம் சுத்தி குத்துவிள்கு மாதிரி செய்து கொழுத்தி கலியாணத்தை நடத்தினாங்கள்.அதை மறக்கேலுமா

சாத்திரி. ஓ அப்ப தேங்காய் எப்பிடி செய்தனியள்

சோழியன். அது யாரோ எங்கையோ தேடிபிடிச்சு வாங்கியந்தான். பிறகு அவையளுக்கு இரண்டு பிள்ளையளும் பிறந்து சந்தோசமாய் இருந்திச்சினம் பிறகு நானும் சிற்றி மாறி தூரமா வந்தா பிறகு தொடர்புகள் இல்லாமல் போச்சுது.

சாத்திரி. அவைக்கு இரண்டு பிள்ளையளில்லை மூண்டு பிள்ளையள் ஆனால் இப்ப டிவோஸ் இரண்பேரும்

சோழியன். சே உண்மையாவோ இல்லை பகிடியோ

சாத்திரி. உண்மையாதான் அண்ணை அது நடந்து ஒரு அஞ்சு வருசமாகிது

சோழியன். என் தம்பி இரண்டும் காதலிச்சு எவ்வளவு கஸ்ரபட்டு இஞ்சைவந்து கலியாணம் செய்து இருந்ததுகள் பெடியனும் நல்ல பெடியன். என்ன நடந்தது??

சாத்திரி. ஓமண்ணை எட்டு வருசம் காதலிச்சு உறவுகளை எதிர்த்து ஊரைவிட்டு வந்து கலியாணம் செய்து பதினாறுவருசம் குடும்பம் நடத்தி மூண்டு பிள்ளையளையும் பெத்து கடைசியிலை அந்த பிள்ளையளை வளக்கிறதாலை நடந்த பிரச்சனையிலை இப்ப பிரிஞ்சு போச்சினம்.

சோழியன். ஒண்டும் விளங்கேல்லை

சாத்திரி. உங்களுக்கு தெரியும்தானே பெடியன் கொஞ்சம் கண்டிப்பான ஆள் பிள்ளையளை கண்டிக்கிறதிலை தாய்க்கும் தகப்பனுக்கும் நடந்த சின்ன சின்ன பிரச்சனையளை பிறகு வந்து சேந்த சொந்தங்களும் அந்த பிரச்சனையளை ஊதி பெருப்பிச்சு போட்டினம்.

சோழியன்..அடடடடா உந்த சில செந்தங்களுக்கு இதுதான் வேலை புருசன் பெண்டாட்டி பிரச்னையை அவையை தீர்க்க விடுறேல்லை அதுக்கை புகுந்து ஏதாவது செய்து போடுவினம்.பிள்ளையளின்ரை எதிர்காலத்தை பற்றி யோசிக்கிறேல்லை

சாத்திரி. உண்மைதான் பெட்டையின்ரை பக்கம் சிலர் பிள்ளையளைஇஞ்சை அடிக்க ஏலாது நீ வேலைக்கு போறாய் காசு இருக்கு கார் இருக்கு அதோடை பாசையும் தெரியும் ஏன் புருசனுக்கு பயபிடுறாய் எண்டு உருவேத்த பெடியனின்ரை பக்கம் நீ ஆம்பிளை என்னவும் செய்யலாம் எண்டு ஏத்திவிட கடைசியா வீணான வீம்பாலை கோட்டடி வாசல்லை கதை கிழிஞ்சு போச்சுது

சோழியன். கேக்க கவலையாதான் இருக்கு

சாத்திரி .எனக்கும்தான் கவலை நானும் முடிஞ்சளவு முயற்சி பண்ணி பாத்தன் இரண்டு பேரையும் கோபத்தை விட்டு ஒரு மணித்தியாலம் மனம் விட்டு கதைக்கபண்ணினா ஏதாவது நல்லது நடக்குமெண்டு ஆனால் இரண்டு பேருமே தங்கடை வறட்டு கெளரவத்தை காப்பாத்துறதிலை பிள்ளையளை மறந்திட்டினம். இப்ப கடைசியா அவையின்ரை மன சாட்சி எண்டு ஒண்டு இருக்கும் தானே அதாலை சொந்தம் சினேகிதம் எண்டு எவையின்ரை தொடர்பும் இல்லாமல் எங்கையோ ஏதோ ஒரு மூலையிலை வாழ்ந்து கொண்டிருக்கினம்.

சோழியன். கல கலப்பா கதையை தொடக்கி இப்பிடி கவலையிலை முடிச்சு போட்டீர் சரி மனிசி சாப்பிட கூப்பிடுறா பிறகு சந்திப்பம்

சாத்திரி. சரியண்ணை மீண்டும் சந்திப்பம்

எனக்கு ASIA வேணும்

1:41 PM, Posted by sathiri, 3 Comments

எனக்கு ASIA வேணும்

தலைப்பை மட்டும் படிச்சிட்டு நீங்களும் ஆளாளுக்கு எனக்கு அமெரிக்கா வேணும் ஜரோப்பா வேணும் ஆபிரிக்கா வேணும் எண்டு அடம் பிடிக்க கூடாது கதையை ஒழுங்கா படியுங்கோ. சைக்கிள் என்றால் கொஞ்சம் வயசான ஆக்களுக்கு உடைனை நினைவுக்கு வாறது றலி.றாம். கம்மர். பிறகு ஏசியா.லுமாலா.றொபின்சன். சிங்கர் . இப்பிடி பல ரகம் இருக்கு. என்னட்டையும் ஊரிலை 80 களிலை படிக்கிற காலத்திலை சைக்கிள் என்கிற பெயரிலை ஒரு சிங்கர் சைக்கிள் இருந்தது இது ஒரு இந்தியா தயாரிப்பு.

80களில் தான் யப்பான் தயாரிப்பான ஏசியா சைக்கிள் சில தொழில் நுட்ப மாற்றங்களுடன் பாரமற்ற இலகுவான ஒரு கலப்பு உலோகத்தால் செய்யபட்டு பின்பக்க வீல் சின்னதாகவும் அத்துடன் மற்றைய சைக்கிள் ரயர்களை விட காற்றின் உராய்வைகுறைக்கும் வகையில் ரயர் அகலம் குறைந்ததாக செய்ப்பட்டு இலங்கையில் அறிமுகமாகியது.இந்த சில மாற்றங்களால் இந்த சைக்கிள் மற்றைய சைக்கிள்களை விட கொஞ்சம் வேகமாக ஒடும்.இது இளையவர் மத்தியில் வெகு வேகமாக ஒரு இடத்தை பிடித்துகொண்டிருந்தது. எனது நண்பர்கள் சிலரும் ஏசியா சைக்கிளை வாங்கி அதில் ஒரு றோலிங் பெல்லையும் பூட்டி மானிப்பாய் மகளிர் பாடசாலை விட்டதும் சைக்கிள் களில் போய்கொண்டிருக்கு மாணவிகளை கலைத்து கொண்டு போய் அவர்களிற்கு முன்னால் றோலிங் பெல்லை அடித்தபடி சர்ர்ர்ர்.....எண்டு பிறேக் அடிக்கவும் பெட்டையளும் திடுக்கிட்டு ஆஆஆ...எண்டு கத்திபோட்டு "சரியான குரங்குகள்" எண்டு திட்டவும் அந்த திட்டை ஒரு மகானின் வாயிலிருந்து வந்த வாழ்த்தைபோல நினைத்து பிறவி பெரும்பயனை அடைந்தது போல இளைஞர்களிற்கு ஒரு மகிழ்ச்சி.இவர்களை பேலவே நானும் றோலிங்பெல்பூட்டி சர்ர்ர்...எண்டு பிறேக்கடிச்சு குரங்கு எண்டு திட்டு வாங்க மனம் தவியாய் தவிச்சது.

ஆனால் என்ரை சிங்கர்சைக்கிள் அதுக்கு தடையாய் இருந்தது காரணம் சைக்கிளின் பாரத்தை குறைத்தால் வேகமாக ஓடும் எண்டு என்னுயிர் நண்பன் இருள்அழகன்(பட்டப்பெயர்தான்) சொன்னதை நம்பி நானும் மக்காட் செயின்கவர்.பெல்.டைனமோ.கெட்லைற் எல்லாத்தையும் கழட்டி அரை விலைக்கு வித்து கோயில் திருவிழாவிலை ஜஸ்பழம் வாங்கி குடிச்சிட்டன்.அதனாலை எப்பிடியும் ஒரு புது ஏசியா வாங்க அம்மாவை அனுசரணையாளராக்கி அப்பாவிடம் தூது அனுப்பிக்கொண்டிருந்தேன்.ஒரு நாள் நண்பன் இருள்அழகனே புது ஏசியாவில் வந்து எனக்கு முன்னால் சர்ர்ர்....எண்டு பிறேக் அடித்தான்.அதுக்கு மேலையும் என்னாலை பொறுக்க ஏலாமல் நானே நேராக களத்தில் இறங்கிஅப்பாவிடம் கேட்டு விடமுடிவுசெய்துஅப்பாவிடம் போய் " அப்பா எனக்கு எசியா சைக்கிள்வாங்கி தாங்கோ" என்றேன்.

என்னை மேலும் கீழுமாக பாத்து விட்டு "ஏன் இப்ப இருக்கிற சைக்கிளுக்கு என்ன அதுக்கும் இரண்டு சில்லு பெடல் ஒரு காண்டில் இருக்கு உழக்கினால் ஓடும்தானே" என்றார் இது எங்களுக்கு தெரியாதாக்கும் என்று மனதில் நினைத்தபடி" அதில்லையப்பா என்ரை சினேதமெல்லாம் ஏன் இவன் இருள்அழகன் கூட ஏசியா வாங்கிட்டான் எனக்கு இந்த சைக்கிள்ளை பள்ளிகூடம் போக வெக்கமா கிடக்கு" என்றவும் மற்றவனை பாத்து எல்லாம் செய்ய வெளிக்கிடாதை எத்தினை பேர் பள்ளிகூடத்துக்கு நடந்து வாறாங்கள் அப்ப நீயும் அவங்களை மாதிரி நாளையிலை இருந்து நடந்து போ "என்று விட்டு போய்விட்டார்.தோல்வி என்கிற வார்த்தை எனது அகராதியிலேயே இல்லையென்று சொன்ன நெப்போலியன் ரஸ்யாவில் தோத்து போய் பிரான்ஸ் திரும்பியபோது என்ன மன நிலையில் இருந்திருப்பானோஅதே மன நிலையில் நானும் தலையை தொங்க போட்டபடி அடுத்ததாய் ஒரு முடிவுக்கு வந்தேன்(நெப்போலியன் வந்து தன்ரை மன நிலையை உன்னட்டை சொன்னவனா எண்டு கேக்க கூடாது)

இனிமேல் வெளியிலை எங்கைபோனாலும் சைக்கிளை பூட்டாமல் விட்டால் எப்பிடியும் யாராவது களவெடுத்துகொண்டு போவாங்கள்.பிறகு அதேசாட்டாக வைத்து புது ஏசியா வாங்கி விடலாமெண்டு நினைச்சு சைக்கிளை பூட்டாமலே விட்டு பாத்தன். ஆனால் யாருமே தொட்டு கூட பாக்கேல்லை.ஒருநாள் நண்பன் என்னட்டை டேய் இண்டைக்கு சங்கானை ஞானவைரவர் கோயில் பொங்கல் ரிவியிலை படம் போடுறாங்களாம் வாறியா போய் பாத்திட்டு வருவம் எண்டான்.அந்தகாலகட்டம் தான் ஊரிலை உந்த ரி.வி வந்த புதுசு எனக்கு ஆசையாய்தான் இருந்தது ஆனால் இரவிலை திரியவும் பயம் காரணம் பொலிஸ் ஆமிதிடீரெண்டு ரோந்து வருவாங்கள் அம்பிட்டா பிடிச்சு கொண்டு போடுவாங்கள் சில நேரம் வெடியும் விழும்.ஆனாலும் ஆமி பொலிசின்ரை ரோந்து எப்பிடியும் இரவு 11 மணிக்கு பிறகுதான் வருவாங்கள் நாங்கள் முதல் படத்தை பாத்திட்டு 10 மணிக்கெல்லாம் வந்திடலாமெண்டு இருள் அழகன் தந்த தைரியத்திலை இரண்டு பேருமா போய் வைரவர் கோயில்லை புக்கையையும் வாங்கி சாப்பிட்டபடி முதல் படத்தை பாத்தாச்சு ஆனால் இரண்டாவதாய் கமல் நடிச்ச புது படம் ஒண்டு போட்டாங்கள் இரண்டு பேருக்கும் வெளிக்கிட மனமில்லை ஒருத்தரையெருத்தர் பாத்தபடி சரி இதையும் பாத்திட்டு போவம் நாளைக்கு பள்ளி கூடத்திலை வகுப்பிலை நித்திரையை கொள்ளலாம் எண்டு நினைச்சு அதையும் பாத்திட்டு வெளிக்கிட ஒரு மணியாச்சுது.றோட்டிலை ஒருதரும் இல்லை பயமாகவும் இருந்தது.

வாகனங்கள் ஏதாவது வருதா எண்டு பாத்தபடியே சைக்கிளை மிதித்தபடி கட்டுடை வயல்வெளிக்கு வந்து விட்டோம் இந்த வயல் வெளியை கடக்கிறதக்கிடையிலை ஆமி வந்திட்டாங்கள் எண்டால் கதை கந்தல். வெளிக்குள்ளாலை எங்கையும் ஓட ஏலாது பிடிச்சு கொண்டு போடுவாங்கள் அதாலை வயல்வெளியை வேகமா கடக்க வேணும் எண்டு நினைச்சு சைக்கிளை வேகமாக மிதித்தோம். என்னை விட இருள்அழகன் சில மீற்றர் தூரம் முன்னுக்கு பேய் கொண்டிருந்தான் பாதி வெளியை கடந்தபோதுதான் பின்பக்கமா பெரிய வெளிச்சம் தெரிஞ்சுது திரும்பி பாத்தோம். ஆமிதான்.கன வாகனம் வந்து கொண்டிருந்தது.டேய் கெதியா மிதியடா ஆமி வாறான் எண்டு கத்தினபடி நண்பன் வேகத்தை கூட்டினான்.

அந்த வயல்வெளி முடிவில் இரண்டு வீடு தள்ளி ஒரு ஒழுங்கை வரும் அதுக்கை இறங்கினால் தப்பிடலாம் என நினைத்து நண்பனிடம் டேய் வாற ஒழுங்கையிலை திருப்பு என்று கத்தியபடி நானும் முடிந்தளவு வேகமாய் மிதித்தேன்.எனக்கு முன்னால் போய்கொண்டிருந்த நண்பன் என்னை பரிதாபமாய் பாத்தபடி ஒழுங்கையில் இறங்கி மறைந்து விட்டான்.இன்னும் சில மீற்றர் தூரத்தில் தான் ஒழுங்கை ஆமியும் நெருங்கிகொண்டிருந்தான்.என்னுடைய பலமெல்லாத்தையும் திரட்டி எழும்பி பெடலை மிதித்தேன் கால் வியர்வையில் செருப்பு வழுக்கி நடு பாரில் பலமான ஒரு அடி. சைக்கிளை எழும்பி மிதிக்கும் போது கால் வழுக்கினால் எங்கை அடி விழும் எண்டு அடி வாங்கின அனுபவ பட்ட அத்தனை ஆண்களுக்கும் தெரியும். அடிவயித்தை ஒரு கையால் பொத்திபிடிக்க சைக்கிள் தட்டுதடுமாறி ஒழுங்கை வழைவில் விழுந்து போனேன்.

ஆனாலும் சைக்கிளை தூக்கி திருப்பவும் ஓட நேரம் காணாது வாகனங்கள் நெருங்கி கொண்டிருந்தன.அந்த ஒழுங்கையில் ஒரு பக்கம் பெரிய தண்ணிவாய்க்கால் ஒண்டு இருந்தது அந்த வாயக்காலின் இரண்டு பக்கமும் பெரிசா வளந்திருந்த கோரை புல்லுக்கை புகுந்து படுப்பம் எண்டு நினைத்த போதுதான் ஒரு வீட்டு வேலியில் வளைஞ்சு நிண்ட பூவரசு கண்ணில் பட ஓடிப்போய் பாஞ்சு பூவரசு மரத்திலை ஏறி வேலியை தாண்டி அந்த வளவுக்குள்ளை பாஞ்சு ஒரு அடி எடுத்து வைச்சிருப்பன் கால் தடக்கி நிலை தடுமாறி தொம்மெண்டு தண்ணிக்குள்ளை விழுந்து தத்தளிச்சு மேலை வந்து பாக்கதான் நான் அந்த வளவு கிணத்துக்குள்ளை விழுந்து போனன் எண்டு விழங்கிச்சுது.

நல்ல வேளை நீந்த தெரிஞ்சதாலை தப்பிட்டன்.கிணத்து சுவரிலை படிக்கல்லை பிடிச்சடி கொஞ்ச நேரம் நிண்டன் வாகனங்கள் போற சத்தம் கேட்டுது.கிணத்துக்காலை வெளியாலை வந்து மெல்ல வேலியாலை எட்டிப்பாத்தன் ஒரு அசைவும் இல்லை வேலியை திரும்ப பாஞ்சு றோட்டுக்கு வந்து பாத்தன் ஆமி போட்டான் ஆனால் என்ரை சைக்கிளை காணேல்லை அவங்கள் தூக்கி கொண்டு போட்டாங்கள்.அடுத்த நாள் அப்பாவிட்டை நடந்த விசயத்தை சொன்னன் ஆனால் கோயிலுக்கு பொங்கலுக்கு போனது மட்டும் தான் படம் பாத்ததை இல்லை.அடுத்தநாள் பின்னேரம் அப்பா "டேய் வெளிக்கிடு உனக்கு சைக்கிள் வாங்க யாழ்ப்பாணம் ரவுணுக்கு போட்டு வருவம்" எண்டார் எனக்கு சந்தோசத்தில் என்னைச்சுற்றி ஆயிரம் இலையான்கள்.(சந்தோசத்திலை பட்டாம் பூச்சிதான் பறக்க வேணும் எண்டு சட்டமா??)சைக்கிள் கடைக்குள்ளை போனதும் அப்பா சைக்கிள் கடை காரரிடம் விலை குறைஞ்சதா நல்லதா ஒரு சைக்கிள் வேணும் என்றவும்.

கடை காரர் விலை குறைஞ்சதெண்டா அந்த பக்கம் சிங்கர். லுமாலா சைக்கிள் இருக்கு போய் பாருங்கோ எண்றார். எனக்கோ மீண்டும் நெப்போலியன்.... மீண்டும் ரஸ்யாவில்.... சே வேண்டாம் எதுக்கு உங்களை வெறுப்பேத்துவான் கதையை முடிக்கிறன். எனக்கு கோபமும் அழுகையுமா வரவே தலையை தொங்க போட்டபடி கடைக்கு வெளியே வந்து நிக்கவும் அப்பா என்னிடம் வந்து " ஏன் உனக்கு சைக்கிள் வேண்டாமோ??"என்றார். அப்பாவை அப்பாவியாக பாத்தபடி அப்பா எனக்கு ஏசியா தான்வேணும் என்றவும் சரி சரி வா வாங்கி தாறன் என்றபடி கடைக்கு உள்ளே போனார். என்னைச்சுற்றி மீண்டும் ஆயிரம் இலையான்கள் உண்மையாகவே. பக்கத்தில் கரும்பு சாறு விற்று கொண்டிருந்தவன் கையை அசைத்ததால் கரும்பு சக்கையில் இருந்த இலையான்களே அவை .

மறந்த நாள்

2:44 PM, Posted by sathiri, 2 Comments

மறந்த நாள்

ரெலிபோன் மணிஅடித்த சத்தத்தில் நல்ல நித்திரையில் இருந்த நான் திடுக்கிட்டு எழும்பி தட்டி தடவி ரெலிபோனை எடுத்து காதில்வைத்தபடி அனுங்கிய குரலில் கலோ என்றோன் மறு பக்கம் 'கலோ தம்பி 'அவ்வளவுதான் கட்டாகி விட்டது நேரத்தை பார்த்தேன் அதிகாலை 5 மணி ரெலிபோனில் நம்பரும் விழவில்லை இது ஊரிலை இருந்து அம்மான்ரை போனாத்தான் இருக்கும் நித்திரை தூக்கத்திலை சத்தமும் விழங்கேல்லை. பாதி தூக்கத்தில் கண்ணை திறக்காமலே யாரப்பா போனிலை என்றாள் மனிசி. யாழ்ப்பாணத்திலை இருந்து அம்மா போலை கட்டாயிட்டுது என்றேன்.


ம்...என்னபடி மற்றபக்கம் பிரண்டு படுத்து கொண்டாள்.திரும்ப போன் அடிக்கும் என பாதி தூக்கத்தில் கண்ணை மூடியபடி எதிர்பார்த்தேன். அடிக்கவில்லை சரி அம்மா ஏதும் அவசரத்திற்கு அடிச்சாவோ தெரியாது போனை தூக்கி கொண்டு போய் கோலுக்கை நிண்டு ஒருக்கா அடிச்சு பாப்பம் என்று நினைத்து.எழும்பி நடக்க வல கால் சின்ன விரல் பாதி திறந்திருந்த கதவிலை படாரெண்டு அடிபட்டு நெட்டி முறிஞ்ச சத்தமும் கேட்டது.அம்மா... என்று மெல்ல முனகியவாறு லைற்றை போட்டு பாத்தன் பாதிநகம் பிய்ந்து இரத்தம் கசிந்தது.அதோடை நித்திரையும் முறிஞ்சு போச்சுது. மெதுவாய் பிய்ந்த நகத்தை வெட்டிவிட்டு ஒரு பிளாஸ்ரரை சுத்தி கொண்டு. போனை அடிச்சன் போனில்"ஒப அமத்த அங்கய பற்றிக்சாரய நமத "யாரது சிங்களத்தி கதைக்கிறாள் என்ன ஒண்டும் விழங்கேல்லை எண்டு யோசிக்கதான் நீங்கள் அழைத்த இலக்கத்தை அடைய முடியவில்லை என்று தமிழிலை சொல்லிச்சிது.

ஒரு பத்து நிமிசம் அடிச்சு பாத்தன் திருப்ப திருப்ப அதையே சொல்லி கொண்டிருந்தது. கால் வலியோடை இப்ப சாதுவா தலையும் வலிக்கிற மாதிரி இருந்திது.காலங்காத்தாலை எழும்பியிருந்து திருப்ப திருப்ப கேட்க இது என்ன சுப்பிர பாதமா எண்டு நினைச்சு சரி ஏதும் அவசரமெண்டா திருப்பி எடுப்பினம் தானேஎன்று நினைச்சபடி போய் திரும்ப படுத்தன். நித்திரை வரேல்லை கட்டிலிலை அங்கை இங்கை பிரண்டபடி கொஞ்ச நேரத்தாலை நித்திரையா போனன். திடீரெண்டு மனிசி பதறியபடி என்னை அடிச்சு எழுப்பிச்சிது. என்னப்பா நான் வழைமை மாதிரி ஆறு மணிக்கு அலாரம் வைச்சனான் அடிக்கேல்லை ஏழுமணியா போச்சுது நீங்களே அலாரத்தை நிப்பாட்டினது அய்யோ எனக்கு வேலைக்கு நேரம் போட்டுது எழும்புங்கோ இனி பஸ் பிடிச்சு போக ஏலாது என்னை காரிலை கொண்டு போய் விட்டிட்டு வாங்கோ என்றபடி அவசரமாய் குளியலறையில் நுளைந்தாள்.

நான் தான் காலைமை போன் எடுக்கிற அவசரத்திலை மணிக்கூட்டு அலாமை மாறி அமத்தி போட்டன் போலை என்றபடி எழும்பி போய் இரண்டு தேதண்ணியை போட்டு ஒண்டை குடிக்கவும் வழைமை போலை வயிற்றை கலக்கியது ரொய்லற்றுக்கை குந்தவும் மனிசி ரொய்லற் கதைவை தட்டி "என்னப்பா என்ன செய்யிறியள்??" எண்டாள்.
பொறு நல்ல படம் ஒண்டு போகுது பாக்கிறன் குழப்பாதை.


உங்களுக்கு இந்த அவசரத்திலையும் நக்கல் எனக்கு தெரியும் நீங்கள் உதுக்குள்ளை போனால் ஒரு பேப்பரை முழுசா படிச்சு முடிச்சிட்டு தான் வெளியாலை வருவியள் எங்கை என்ன செய்யிறதெண்டு தெரியாத மனிசன் கெதியா வாங்கோ நேரம் போட்டுது.

பின்னை ரொய்லற்றுக்கை இருக்கிற மனிசனிட்டை கதவை தட்டி என்ன செய்யிறியள் எண்டா என்னத்தை சொல்ல.பெரும் பணக்காரனிலை இருந்து பிச்சை காரன் வரை நிம்மதியா கொஞ்ச நேரம் இருக்கிற இடம் இதுதான் இதுவும் அவசரமெண்டா என்ன செய்ய. என்றவாறு வெளியில் வந்து வெளிக்கிட்டபடி தேத்தண்ணி போட்டு வைச்சனான் குடிச்சனியா?

உங்களுக்கென்ன 10 மணிக்கு வேலை நல்லா மூசி மூசி நித்திரை கொண்டிட்டு ஆறுதலா எழும்பி போகலாம் எனக்கு 8 மணிக்கு வேலை. வேண்டாம் நேரம் காணாது இருக்கட்டும் பின்னேரம் வந்து சூடாக்கி குடிக்கிறன்.

எட போட்டு வைச்ச தேதண்ணியை குடி எண்டு சொன்னதுக்கு ஏனப்பா கோவிக்கிறாய் சரி சரி வா எனறபடி சப்பாத்தை போட குனிந்து காலை பார்த்தேன்.அடிபட்ட சின்ன விரலும் வீங்கி
எனது வலக்காலில் இரண்டு பெருவிரல்கள் இருந்தது.சப்பாத்து போட முடியாத அளவுக்கு வலி ஒரு மாதிரி சமாளிச்சு சப்பாதை போட்டு கொண்டு வெளியில் லிப்ற் இருக்குமிடத்திற்கு வந்தேன். அதன் கதவில் ஒரு கடதாசியில் " இது வேலை செய்யவில்லை " என்று எழுதி ஒட்டியிருந்தது. நான் மனிசியை பார்க்க பிறகென்ன பாக்கிறியள் அதுதான் எழுதி ஒட்டியிருக்கெல்லோ வேலை செய்யாதெண்டு
கெதியா படியாலை இறங்குவம்
எண்றபடி மனிசி இறங்க தொடங்க நானும் பினாலை. 4 ம் மாடியிலிருந்து படிவழியாக கால் வலியெடுக்க தாண்டி தாண்டி இறங்கி கொண்டிருக்க.மனிசி என்னை திரும்பி பாத்துஏனப்பா தாண்டுறியள்??

இல்லையப்பா வாழ்க்கையிலை என்ன கஸ்ரம் வந்தாலும் தாண்ட பழகவேணும் எண்டு எனக்கு சின்னவயசிலை என்ரை அம்மம்மா சொல்லி தந்தவா அதுதான் தாண்டுறன்.

இப்ப என்னை வேலையிடத்துக்கு காரிலை கொண்டு போய் விட சொன்னது பெரிய கஸ்ரமோ

அய்யோ அதில்லையப்பா காத்தாலை கதவு காலிலை அடிச்சு போட்டுது அதுதான் தாண்டுறன் சரி சரி நீ நட என்றபடி மனிசியை வேலையிடத்தில் கொண்டு போய் விட்டு விட்டு நேரத்தை பார்த்தேன் 8.30 எனக்கு 10மணிக்குதான் வேலை. திரும்ப வீட்டிற்கு போய் போக நேரம் காணாது. சப்பாத்து இறுக்க காலும் வலி கூடிகொண்டே போக சிற்றிக்குள்ளை(நகரமத்தி) போய் செருப்பு கடையிலை
ஒரு செருப்பு வாங்கி போட்டால் நல்லது பிறகு அங்கையிருந்து அப்பிடியே கைவே (அதி வேக வீதி)எடுத்து வேலைக்கு போகலாம் என நினைத்து சிற்றிக்குள்ளை போய் செருப்பு கடையடிக்கு போட்டன் ஆனால் கார் விட இடம் கிடைக்கேல்லை சரி ஒடிப்போய் ஒரு செருப்பை எடுத்து கொண்டு ஒடியாறதுதானே எண்டு நினைச்சு காரை எமேஜென்சி சிக்னலை போட்டு நடை பாதையிலை விட்டிட்டு ஓடிப்போய் கடைக்குள்ளை புகுந்தன்.

கால்வலி மாறும் மட்டும் நாலைஞ்சு நாளைக்கு போட்டிட்டு எறியிறதுதானே எதுக்கு விலையான செருப்பு வாங்குவான் என்று நினைத்து 9.90யுரோக்கு ஒரு செருப்பை வாங்கி கொண்டு ஓடியந்து பாத்தன் அதுக்கிடையிலை பொலிஸ்காரன் வந்து 30யுரோ தண்டம் எழுதிவைச்சிட்டு போய்கொண்டிருந்தான். சரி என்ன செய்யிறது 39.90யுரோக்கு செருப்பு வாங்கினது எண்டு நினைச்சு கொள்ளுவம் என்று நினைத்தபடி காரை கிளப்பினேன் நான் நின்ற இடத்திலிருந்து எனது வேலையிடம் ஒரு 50 கி்.மீ தூரம் வரும் கைவேயிலை போனால் அரை மணித்தியாலத்திலை போயிடலாம் எனவே காரை கைவேயில் ஏத்தி ஒரு 10 கி. மீ தூரம் ஒடியிருப்பன் முன்னால் போன வாகனங்கள் எல்லாம் எமெஜென்சி சிக்னலை போட்டபடி மெதுவாக ஓடி பின்னர் அப்படியே வீதியில் எல்லாம் அசையாமல நின்று விட்டன.

சரி கிழிஞ்சுது போ ஏதோ விபத்து பேலை காரை கைவேயிலை திருப்பி கொண்டா ஓட ஏலும் கொஞ்ச நேரத்திலை ஓட வெளிக்கிட்டா சரி. நேரத்தை பார்த்தேன் மணி 9.30 ஆகியிருந்தது சரி என்ன நடந்திருக்கும் எண்டு றேடியொவிலை TRAFIC F.M கேட்டா தெரியும் என நினைத்து சி.டி யிலை போய் கொண்டிருந்த "எங்கே செல்லும் இந்த பாதை " தமிழ்பாட்டை நிறுத்தி விட்டு TRAFIC F.M மை போட்டேன் அதில் "குட்பாய் மை லவ்வர் குட்பாய் மை பிறெண்ஸ்" என்று பாட்டு போய் கொண்டிருந்தது.

அட போய் தொலையடா இப்ப செய்தியை போடுவியா என்று நினைக்க பாட்டை நிறுத்தி செய்தி போனது பெரிய லொறி ஒண்டு விபத்திற்குள்ளாகி வீதியிலை குறுக்கை பிரண்டு போய்கிடக்கு அதலைதான் 10 கி.மீ தூரத்துக்கு வாகன நெரிசல் என்று அறிவிச்சாங்கள்.அட அந்த லெறி றைவருக்கு என்ன நடந்திருக்கும் பாவம் காயப் பட்டானா?? அல்லது போயிட்டானா என்று ஒரு நல்ல பாவப்படும் சிந்தனை கூட எனக்கு வரேல்லை உடைன நான் நினைச்சன் அட பிரண்டதுதான் பிரண்டான் பாதையிலை ஒரு ஓரமா பிரண்டிருக்க கூடாதா.

நடு றோட்டிலை கவிண்டு இப்ப எனக்கு வேலைக்கும் போக ஏலாமல் போட்டுது என்று நினைச்சபடி சரி முதலாளிக்கு போன் அடிச்சு விபரத்தை சொல்லுவம் என்று நினைச்சபோததான் நான் காலை அவசரத்தில் கைதொலைபேசியை கையை விட்டு விட்டு வந்தது ஞாபகத்தக்கு வந்தது. இனியென்ன போய் முதலாளியும் தாறதை வாங்குவம் என்றபடி எறும்பை விட மெதுவாக காரை ஓடிக்கொண்டிக்க என்ரை கார் கணணி பேசியது "உங்கள் வாகனத்தில் எரிபொருள் குறைந்தளவே உள்ளது " அப்பதான் திடுக்கிட்டு பார்த்தேன் மஞ்சள் லைற் எரிந்து கொண்டிருந்தது.

இப்ப எதுவுமே செய்யிற மாதிரி இல்லை சாதாரணமா ஓடினால் இன்னுமொரு 10 கி.மீ லை ஒரு பெற்றொல் செற் இருக்கு தப்பிடலாம் ஆனால் இப்பிடி ஊர்ந்து கொண்டு போனால் நடு றோட்டிலைதான் நிக்கவேணும் எதுக்கும் கடைசி லைனை பிடிச்சு ஓடினால் பெற்றோல் முடிஞ்சு கார் நிண்டாலும் அப்பிடியே கரையிலை நிப்பாட்டலாம் எண்டு நினைச்சு ஒரு மாதிரி கடைசி லைனுக்கு வந்திட்டன் ஆனால் நேரம் 10 மணியையும் தாண்டிவிட்டது அரை மணித்தியாலத்திலை ஒரு கி.மீ தூரம்தான் ஓடியிருப்பன் கார் மீண்டும் கதைத்தது " உங்கள் எரி பொருள் தீர்ந்து விட்டது இயந்திரத்தை நிறுத்தவும்" என்று இறுதியாய் கதைத்தது் சரி நான் நினைச்சபடி நடு றோட்டுத்தான் இண்டைக்கு.

காரை ஓரமாய் நிறுத்தி விட்டு அருகிலிருந்த S.O.S போனில் அழைத்து விபரத்தை சொன்னேன்.நிங்கள் நிற்கின்ற பகுதியில் வாகன நெரிசலாய் இருப்பதால் பாதை தெளிவானதும் உதவியாளர் எரி பொருளுடன் வருவார் என்று சொல்லி கார் என்ன கலர் அதின்ரை நம்பர் பெற்றோலா டீசலா என்ற விபரம் எல்லாம் எடுத்து விட்டு நன்றி வணக்கம் சொன்னார்கள். 11.30 தாண்டிவிட்டது எந்த வாகனமும் அசையவில்லை வெய்யில் ஏற ஏற தண்ணி தாகமும் எடுத்தது தண்ணி போத்தல் ஏதாவது இருக்குமா என்று கார் டிக்கியைபோய் திறந்து பார்தேன் ஓயில் கான் தான் இருந்தது. இதே ஊராய் அல்லது இந்தியாவாய் இருந்தால் செய்தி கேள்வி பட்டதும் இளனி சோடா ஏன் தோசை மசாலை வடை கூட கொண்டந்து விக்க தொடங்கியிருப்பாங்கள் இது கண்டறியாத வெளி நாடு ஒண்டும் இல்லை நடு றொட்டிலை காய வேண்டிகிடக்கு எண்டு நினைச்சன்.

ஒரு மாதிரி 11.30மணியளவிலை றோட்டு கிளியராகி பெற்றொலும் வந்து வேலைக்கு போய் முதலாளியிட்டை பம்மினபடி மன்னிப்பு கேட்டு நடந்ததை நடிச்சு காட்டி காலவலியோடை வேலையையும் முடிச்சிட்டு பின்னேரம் வீட்டை வந்து விரலிலை இரந்த பிளாஸ்ரரை களட்டிஎறிஞ்சிட்டு குளிப்பம் எண்டு குளியலறைக்கை புகுந்து தண்ணியை திறந்திட்டு தலையை நீட்ட வீட்டு போன் விடாமல் அடிச்சிது அட ஆரெண்டு பாப்பம் எண்டு துவாயை எடுத்து சுத்தி கொண்டு படுக்கையறைக்கு ஓடியந்தன் மீண்டும் அதே கதவு அதே இடத்தில் அச்சு பிசகாமல் படாரெண்டு அடித்தது. அய்யோ என்றபடி வாயில் வந்ததையெல்லாம் திட்டி கதவை எட்டி உதைந்து விட்டு போனை எடுத்து கலோ என்றேன் மறு பக்கம் அம்மா


" தம்பி காத்தாலை இருந்து உனக்கு அடிச்சு கொண்டேயிருக்கிறன் லைன் கிடைக்கேல்லை இண்டைக்கு உன்ரை பிறந்த நாள் அல்லோ அததான் வாழ்த்து சொல்ல அடிச்சனான் பிறந்த நாள் வாழ்த்துகள் எப்பிடி பிறந்த நாள் நல்லா போச்சுதோ "

ஓமம்மா அந்த மாதிரி போச்சுது என்று சொல்லி கொஞ்ச நேரம் கதைத்து விட்டு போனை வைத்தேன். அப்போதுதான் தெரியும் காத்தாலை போன் வந்ததிலை இருந்து நடந்த குளப்பத்திலை எனக்கு இண்டைக்குஎன்ரை பிறந்தநாள் எண்டதே மறந்து போச்சு.மீண்டும் போய் குளித்த விட்டு வந்து மீண்டும் கால் விரலில் ஒரு பிளாஸ்ரரை ஒட்டிகொண்டு கொஞ்ச நேரம் படுக்கலாமென நினைக்க மனிசி வேலை முடிந்து வந்து கதவை திறந்தபடி "என்னப்பா இண்டைக்கு உங்கடை பிறந்த நாளெல்லோ நான் உங்களுக்கு ஒரு சேட்டும் வாங்கி வைச்சிருந்தனான் காலைமை நேரம் பிந்தினதாலை தர ஏலாமல் போச்சுது இந்தாங்கோ போட்டு பாருங்கோ" என்று சேட்டை நீட்டியபடி சரி காலைமை காலிலை ஏதோ அடிச்சதெண்டனிங்களல்லோ இப்ப எப்பிடியிருக்குஎன்றாள் நானும் சேட்டை போட்டு பார்த்தபடி" பட்ட காலிலேயே படும்" எண்டவும் மனிசி ஒன்றும் புரியாமல் என்னை பாத்தபடி இந்த மனிசன் எப்பவும் இப்பிடித்தான் நான் ஒண்டு கேட்டா தாணெண்டு சொல்லும் என்றபடி தொலை காட்சியை போட்டாள்.