Navigation


RSS : Articles / Comments


வியாபாரிகளால் வீழ்ந்த என்தலைவா... வீர வணக்கங்கள்..

11:49 AM, Posted by Siva Sri, 23 Commentsஇந்த மாதமாதம்..17..18..19.. ந்திகளில் இரவும் பகலும் எனது வீட்டுத்தொலைபேசி மணிஅடிக்கும் பொழுதெல்லாம் அவை மரணத்தின் மணிச்சந்தங்களாகவே இருந்தது..19 ந்திகதி மதியத்துடன் தொலைபேசி சத்தங்கள் மட்டுமல்ல நானும் சேர்ந்தே சோர்ந்து போனேன்..எங்கள் கனவு..எங்கள் உழைப்பு..எங்கள் தியாகங்கள்..போராளிகளுடன் இறுதிவரை உறுதுணையாய் நின்ற மக்கள் அவர்களின் நம்பிக்கைகள்..கொஞ்சம் கொஞ்சமாய் கட்டி வளர்த்த இயக்கம்..தளபதிகள் போராளிகள். எல்லவற்றிற்கும் அவன் இருக்கிறான் என்று நாங்கள் இறுமாப்பாய் சொன்ன எங்கள் தலைவன்..அவனது குடும்பம்.. என்று அத்தனையையுமே இழந்துவிட்டோம்..இனியென்ன எல்லாம் முடிந்து விட்டது.. இனி பத்திரிகைகளில் மட்டுமல்ல இணையத்தளங்களிலும் எழுதுவதில்லை அகதிமுகாம்களில் தங்கியிருக்கும் மக்களிற்கு ஏதாவது செய்தாலே போதும் என்று முடிவெடுத்து மூடிக்கொண்டு இருந்துவிட்டேன்..

ஆனாலும் முடியவில்லை..காரணம்.. இப்பொழுது பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்று சர்ச்சையில் உலகமெங்கும் வாழும் தமிழர்கள் இரண்டாக பிரிந்து ஒரு சண்டை பிடித்துக்கொண்டு நிற்கிறார்கள்.. ஒருவர் மற்றவரை சாதாரணமாய் நலம் விசாரிப்பது போலவே அவர்களிற்குள் துரோகிகள் என்று கூறிவிட்டு போய்க்கொண்டிருக்கிறார்கள்.. புலிகளின் வெளிநாட்டு விவகாரங்களிற்கான பேச்சாளர் பத்மநாதன்.. 24ந்திகதி பிரபாகரனும்.. அவரது பிள்ளைகளும் யுத்தத்தில் இறந்து விட்டார்கள் என்கிற அறிவிப்பே..இத்தனைக்கும் காரணம்..அவரின் அறிவிப்பு வெளியான உடனேயே வெளிநாடுகளில் உள்ள ஒரு குழுவினர்..பத்மநாதன் விலைபோய்விட்டார் துரோகி என்றுவிட்டு அறிவிப்பு வெளியான ஒரு சில மணி நேரங்களிலேயே அவசரமாக நெடுமாறன் அவர்களுடனும் வைகோடனும் தொடர்பு கொண்டு பிரபகரன் இறக்கவில்லை உயிரோடதான் இருக்கிறார் என்று ஒரு அறிவிப்பை விடவைக்கின்றனர்.

வழைமை போலவே அதிகமாய் உணர்ச்சி வசப்படும் வை.கோ அவர்கள் இந்த விடயத்திலும் உணர்ச்சி வசப்பட்டு பத்மநாதனின் இந்த அறிவிப்பு துரோகத்தனமானது என்று ஒரு வசனத்தையும் சேர்த்தே சொல்லி விட்டார்.. இவர்கள் இருவரும் புலிகளின் ஆதரவாளர்களே தவிர புலிகளின் பேச்சாளர்களோ உறுப்பினர்களோ அல்ல..இவற்றுக்கிடையில்.. யாரென்று இதுவரையில் கேள்விப்பட்டே இருக்காத பெயர்களிலும்.. இல்லாத படையணியின் பெயரிலும் கூட பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்கிற அறிவிப்புக்கள் வெளியாகிக்கொண்டிருந்தபோது புலிகளின் அரசியல் பிரிவில் எஞ்சியிருக்கும் மட்டு..அம்பாறை மாவட்ட அரசியல் பிரிவின் பொறுப்பாளர் தயாமோகனும் பிரபாகரன் இல்லை என்பதனை ..பி.பி.சி. தமிழ் ஓசையூடாக உறுதி செய்தபொழுது தயாமோகனும் துரோகியாக்கப்பட்டார்..

பிரபாகரனிற்காக அஞசலிநிகழ்வு செய்த ஜி.ரி.வி. என்கிற தொலைக்காட்சி சேவையின் ஊழியர்கள் மிரட்டப்பட்டார்கள்..(அவர்கள் மிரட்டப்படுவது இது முதல்தடைவையல்ல)ஜி. ரி்வியும்..எதற்கு வம்பு என்று .. பிரபாரனிற்கான அஞ்சலி நிகழ்வினை இடைநிறுத்தியது..சரி இனி இவர்களிற்கு யார்தான் வந்து உறுதிப்படுத்தவேண்டும்.. இறந்து போன பிரபாகரனே திரும்பவந்து நான் இறந்துவிட்டேன் நம்புங்கடா.. என்று சொல்லவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களா??அப்படி நடந்தாலும் பிரபாகரனும் துரோகியாக்கப்படுவார்.. 34 ஆண்டுகள் ஒரு ஆயுத விடுதலைப்போராட்டத்தினைநடத்தி.. கொண்ட கொள்கைக்காக தன்னையே அர்ப்பணித்த ஒரு வீரனிற்கு ஒரு பூவினைப்போட்டு மனதார அஞ்சலி செலுத்தக்கூட விடாமல் மக்களை குழப்பியடித்து முரண்பாடான அறிக்கைகளை வெளியிடுபவர்கள் மாற்றுக்கருத்தாளர்களோ..இலங்கையரசோ அதன் கூலிகளோ அல்ல..

புலிகளின் வெளிநாட்டு பணியகங்களின் பொறுப்பாளர்களே இத்தனை அசிங்கங்களையும் நிறைவேற்றுகின்றனர்..காரணம் இறுதியாக அவசரகால நிதியென்று புலம்பெயர் தமிழர்களிடம் இவர்கள் சேகரித்த பல மில்லியன் யுரோக்கள் அந்தந்த நாட்டுப்பொறுப்பாளர்களிடமே முடங்கிப்போயுள்ளது. எதிர்பாராதவிதமாக புலிகளின் தலைமையில் அத்தனைபேருமே அழிக்கப்பட்டு விட்டதால்..இனி யாரிற்கும் கணக்கு காட்டத்தேவையில்லையென்று நினைத்து புலம்பெயர்தேசங்களில் உள்ள மக்களிற்கும் கடவுள் ஒருநாள் வருவார் என்பதைப்போல பிரபாகரன் இருக்கிறார்.. ஒருநாள் வருவார்..என்று கதைவிட்டுக்கொண்டே காலத்தை ஓட்டிவிடலாமென்று நினைத்தவர்களிற்கு. பத்மநாதன் மற்றும் தயாமோகனின் அறிக்கைகள் இடியாய் இறங்கியிருக்கும் என்பதில் ஆச்சரியமில்லை..புலிகள் இனி அரசியல் ரீதியான ஒரு போராட்டத்தினை முன்னெடுப்தற்கு வெளிநாடுகளில் அரசியல் கட்டமைப்பு ஒன்றினை உருவாக்கும் முயற்சிசியில் இறங்கிருக்கிறார்கள் என்கிற செய்தியாலும் இவர்கள் ஆடிப்போயிருக்கிறார்கள் அப்படி ஒரு கட்டமைப்பு உருவானால் அவர்களிடம் தங்கள் கணக்குகள் சொத்துக்கள் பற்றிய விபரங்களையும் கையளிக்கவேண்டிவிடும் என்பதே இவர்களது பயம்..

சரி ஒரு வாதத்திற்கு பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்றுவைத்தாலும்..புலிகளின் தளபதிகள் தங்கள் இறுதிக்கணம் வரையும் சட்டிலைற் தொலைபேசி வசதியுடன் உலகில்அத்தனை பகுதிகளிற்கும் தொடர்புகொண்டபடியேதான் இருந்தனர்..இது அனைவரிற்கும் தெரிந்த விடயம்...பத்மநாதன் மற்றும் தயா மோகனது அறிக்கைகளால் உலகத்தமிழர்களது நிலை குழப்பமடைந்து அது ஈழத்தமிழர்களின் அடுத்தகட்ட நடவடிக்கைகளிற்கு தடையாக அமைந்து அவர்கள் சோர்வடைந்து விடுவார்கள் என்றுகூட சிந்திக்கத்தெரியாமல் 34 ஆண்டுகால போராட்டத்தினை நடத்தியவரல்ல பிரபாகரன்...அவர் எங்கு மறைந்திருந்தாலும் சில நிமிட உரையையாவது பதிவு செய்து சட்டிலைற் தொ.பே மூலம் உலகத்தமிழர்களிற்கு தெரியப்படுத்தி தமது அடுத்தகட்ட நடவடிக்கை என்னவென்று நிச்சயம் அறியத் தந்திருப்பார்..

ஏனென்றால். 88ம் ஆண்டு இந்தியப்படை ஆக்கிரமிப்புக்காலத்தில் பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார் என்று இந்திய ஊடகங்கள் எழுதியதில் அது பொதுமக்களிடமும் குழப்பத்தை ஏற்படுத்தியபொழுது அன்று இந்தளவு தொழில் நுட்பவளங்கள் இல்லாதபொழுதும் பிரபாகரனின் 3 நிமிடங்கள் அடங்கிய பேச்சை பதிவுசெய்து போராளிகளால் மக்கள் கூடும் இடங்களில் சிறிய ரேப்றிக்காடர்களில் ஒலிக்கவிடப்பட்டு அவரது இருப்பு உறுதிசெய்யப்பட்டது..சரி் அவர் பத்மநாதனின் அறிக்கையை வெளியான பின்னர் பிரபாகரன்உயிருடன்இருந்தும் பதில் அறிக்கைகள் விடாமல் இருக்கிறார் என்றால் அவரும் பத்மநாதனின் அறிக்கையை ஏதோ காரணங்களிற்காக ஏற்றுக்கொள்கிறார் என்பதுதானே அர்த்தம்..

ஆனால் வெளிநாடுகளின் பொறுப்பாளர்கள் மட்டும் ஏற்கமறுப்பதற்கு அவர்கள் சொல்லும் சப்பைக்காரணம் வெளிநாடுகளில் உள்ள தமிழ்மக்கள் மனமுடைந்து விடுவார்களாம்..வெளிநாட்டு தமிழர்கள் மனமுடைந்து போனால் அதனை ஒட்டவைக்க ஆயிரம் வழிகளுண்டு இரண்டு நாள் அழுது விட்டு மூன்றாவது நாள் வழைமைக்கு திரும்பி விடுவார்கள்.ஆனால் இறந்து போன பிரபாகரனை இன்னமும் வாழ வைப்பதன் மூலம் மேலும் சட்டச்சிக்கல்களை உருவாக்கி வவுனியாவில் முட்கம்பிகளிற்கு பின்னால் நாளை என்ன நடக்குமென்றே தெரியாமல் எதிர் காலத்தை தொலைத்துவிட்டு நிற்கும் மூன்று இலட்சம் மக்களினது வாழ்வு மட்டுமல்ல இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த பத்தாயிரத்திற்கு மேற்பட்ட போராளிகள்..தனியாக சிறப்பு முகாம்களில் அடைக்கபட்டுள்ள 2300ற்கும் மேலான புலிகளின் இரண்டாம் மூன்றாம் கட்டத்தலைவர்கள் அரசியல் அமைப்பாளர்கள்.அவர்களது குடும்பங்கள் என்று நீளும் பட்டியலில் உள்ளவர்களின் எதிகாலம் என்ன???சிந்திப்பீர்களா??

இதற்குமேல் என்னால் வாழைப்பழத்தை உரித்து அவர்கள் வாயில்வைத்து.ஒரு தடியால் வயிற்றிலும் தள்ளிவிடமுடியாது..எம்தலைவனிற்கு அஞசலிசெய்யத்தடையாய் நிற்காதீர்கள் என்று கெஞ்சிக்கேட்டுக்கொண்டு துரோகமும் வஞ்சகமும். புலம்பெயர் நாடுகளில் உள்ள புலிகளின் பணியக பொறுப்பாளர்களினால் நடத்தைகளினாலும் அவர்களால் அள்ளிவீசப்பட்ட வாக்குறிதிகளினாலும்.உலகநாடுகளின் ஏமாற்று உறுதி மொழிகளினாலும் அழிக்கப்பட்ட ஈழப்போராட்டத்தின் இறுதிநாட்கள் பற்றிய விரிவான அடுத்த பதிவொன்றுடன் சந்திக்கிறேன் நன்றி.

23 Comments

http://mullaimann.blogspot.com/ @ 12:29 PM

வஞ்சகம் கொன்று வீழந்த தலைவனுக்கு ஒரு வணக்கத்தைச் செலுத்தத் தடை நிற்கும் வஞ்சகர்களை எமது மக்கள் விலக்கிவிட்டு அந்த மாபெரும் தலைவனுக்கு அஞ்சலிப்போம்.

எங்கள் கடவுளைக் காவு கொண்ட துரோகத்தை உலகறிவிப்போம்.

சாந்தி

ஈழவன் @ 1:30 PM

காலத்தின் தேவையறிந்து காத்திரமான பதிவொன்றினை இட்டமைக்கு நன்றி சிறி.

ஆயினும் செல்வராஜா பத்மநாதன் (கேபி), தயாமோகன்..... பட்டியலில் துரோகியாக சிறியும் இந் நேரத்தில் நீங்கள் பதிவில் குறிப்பிட்ட நபர்களினால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பீர்களோ என்னவோ!

முட்கம்பி வேலிக்குள் நிர்க்கதியாக தவிக்கும் எம் மக்களினதும், போராளிகளென நிர்ப்பந்தத்தின் மத்தியில் பயிற்றுவிக்கப்பட்டு நிர்க்கதியாகக்கப்பட்ட இளைய தலைமுறையின் எதிர்காலத்தின் தேவையறிந்து மௌனம் சாதிக்கும் பிரபாகரனோ அல்லது தளபதிகளோ மீண்டு வந்து உண்மையைக் கூற வேண்டும், இல்லையேல் பிரபாகரனின் மரணத்தை மறுப்போர் பிரபாகரனின் இருப்பை உறுதி செய்தாக வேண்டும்.

சாந்தி @ 1:56 PM

//ஆயினும் செல்வராஜா பத்மநாதன் (கேபி), தயாமோகன்..... பட்டியலில் துரோகியாக சிறியும் இந் நேரத்தில் நீங்கள் பதிவில் குறிப்பிட்ட நபர்களினால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பீர்களோ என்னவோ!//

ஈழவன் ! இத்தகைய போக்குகளே எங்கள் இனத்தை இன்று நட்டநடுத்தெருவில் விட்டுள்ளது.இத்தனையாயிரம் பலியெடுப்புக்கு வழிகோலியுள்ளது.

துரோகியென்று நமது புலத்துத் தலைகளால் எத்தனையோ நன்மைகள் கிடைக்காமல் போயின. இனியும் அது நீடிக்கக்கூடாது.

இந்தத் தமிழ்ச்சாதிக்காக தனது ஆயுளை முடித்தக்கொண்ட அந்தத் தலைவனுக்கு ஒரு அஞ்சலி கூட செய்யவிடாமல் ஓர் அனாதைபோல் ஆக்கிய இந்த அடங்காப்பிடாரிகளை இனங்காட்டுவதே இப்போதைய கடமை.

காலமறிந்த சிறியின் கட்டுரை பலரது திரைகளைக் கிழித்திருக்கிறது.

சாந்தி

Anonymous @ 2:00 PM

நம் மக்களின் நம்பிக்கை காப்பரண்களாக திகழ்ந்து வீழ்ந்த புலிகளுக்கும் அவர்களின் தலைமைக்கும் வீரவணக்கங்கள்....

:(

இது, இன்றைய தேவையை உணர்த்தும் பதிவு..

//செல்வராஜா பத்மநாதன் (கேபி), தயாமோகன்..... பட்டியலில் துரோகியாக சிறியும் இந் நேரத்தில் நீங்கள் பதிவில் குறிப்பிட்ட நபர்களினால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பீர்களோ என்னவோ!//

இந்த பதிவிற்கு வந்து குவியும் - ஓட்டுக்கள் அதற்கு சாட்சியாக இருக்கும்...

இதோ, வைகோ, நெடுமாறன் வரிசையில் அடுத்து திருமா

http://www.thiruma.in/2009/05/5.html

இவர்கள் எந்த தகவல் தரவுகளை வைத்து இது போன்ற அறிக்கையினை விடுகின்றார்கள்??

//நாளை என்ன நடக்குமென்றே தெரியாமல் எதிர் காலத்தை தொலைத்துவிட்டு நிற்கும் மூன்று இலட்சம் மக்களினது வாழ்வு மட்டுமல்ல இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த பத்தாயிரத்திற்கு மேற்பட்ட போராளிகள்..தனியாக சிறப்பு முகாம்களில் அடைக்கபட்டுள்ள 2300ற்கும் மேலான புலிகளின் இரண்டாம் மூன்றாம் கட்டத்தலைவர்கள் அரசியல் அமைப்பாளர்கள்.அவர்களது குடும்பங்கள் என்று நீளும் பட்டியலில் உள்ளவர்களின் எதிகாலம் என்ன???சிந்திப்பீர்களா??//

அதைப்பற்றி இந்த அறிக்கைப் போராளிகளுக்கு எந்தக் கவலையும் இருப்பதாக தெரியவில்லை...

Anonymous @ 2:41 PM

inku viyaapaariyum illai
thurokiyum illa vidivukkai nitkum makkalukkaaha thayavu seithu adakki vaasiyunkal nantry

Anonymous @ 2:44 PM

nice dream former ltte

how did you proof that he is dead now

he is alive or not no ones know but how you say yes

Anonymous @ 2:47 PM

Thursday, May 28, 2009
பிரபாகரன் உயிரிழந்தமை மரபணு பரிசோதனையின் மூலம் உறுதி: உதய நாணயக்கார

இன்று உறுதிசெய்தனர் என்றும் அவர் கூறினார்.

they said today they confirmed but how come they said before who he is and you ?????

தமிழன் @ 3:35 PM

// அவனது குடும்பம்.. என்று அத்தனையையுமே இழந்துவிட்டோம்..///

ஆனால் அவர்கள் உயிரோடு இருப்பதாக அவர்களே அறிவித்திருக்கின்றார்கள்

//இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த பத்தாயிரத்திற்கு மேற்பட்ட போராளிகள்..தனியாக சிறப்பு முகாம்களில் அடைக்கபட்டுள்ள 2300ற்கும் மேலான புலிகளின் இரண்டாம் மூன்றாம் கட்டத்தலைவர்கள் அரசியல் அமைப்பாளர்கள்.///

இந்த தரவுகளை எங்கிருந்து பெற்றீர்கள் இராணுவமே 6000 என்று தான் அறிவித்தது ஆனால் நீங்கள் 12300 க்கு மேல் ,,,,,

அவர்களை பொறுத்தவரையில் தமிழர்கள் எல்லோரும் புலிகளே

சரி போகட்டும் இவர்களின் விடிவு யார் கைகளிலும் இல்லை

அதற்கும் தலைவர் சாக வேண்டும் என்பதற்கும் என்ன தொடர்பு

தலைவர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இவர்களை காப்பாற்ற முடியாது

அதற்காக தலைவரை ஏன் கொல்ல வேண்டும் ??? அல்லது கொல்லாதீர்கள்

///அதை விட இன்று பொன்சேகா கூறுகையில், பொட்டு அம்மானின் உடல் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றார்.///

ஆனால் எப்போதோ இவர்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றார்கள் கொல்லப்பட்டதாக

இப்போது /////
தேசிய தலைவரின் பெற்றோர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது//

இன்று சாலஸ் அன்ரனியின் மரபனுவோடு ஒப்பிட்டுப் பார்த்தாக அறிவித்திருக்கின்றார்கள்

நாளை அவரின் பெற்றோரோடு ஒப்பிட்டு பார்த்தாக அறிவிப்பார்கள் பொறுத்திருங்கள்

///இனி யாரிற்கும் கணக்கு காட்டத்தேவையில்லையென்று நினைத்து புலம்பெயர்தேசங்களில் ///

இவர்கள் புலிகளிற்கே கணக்கு காட்டினார்களொ தெரியாது எப்படி எங்களுக்கு காட்டுவது

நீங்கள் இதுவரை பங்களிப்பே செய்தது கிடையாது போல் இருக்கின்றது

இவர்கள் மக்களுக்கு கணக்கு காட்டியது கிடையாது அப்படி காட்டவும் முடியாது யதார்த்தத்தில்

எல்லாளன் @ 3:46 PM

எமது தலைவர் உயிரோடு இருக்கின்றார் என்று நம்புகின்றேன்

ஆனால் தலைவனின் எப்படிப்பட்டவன் என்று எல்லோருக்கும் தெரியும்

இவ்வளவு படுகொலைகளையும் அவலத்தையும் தன்னால் தடுக்க முடியவில்லை என்ற ஏக்கமும் வேதனையும் அவரைக் கொல்லாமல் கொன்று கொண்டிருக்கப் போகின்றது

இந்த பச்சோந்தி தமிழர்களுக்காக தன்னையும் தனது வாழ் நாளையும் அர்ப்பணித்த அற்புத தலைவன்

இனியும் நடைப்பிணமாக வாழ்வதிலும் பார்க்க வீரமரணம் ஏய்திருக்க வேண்டும் என்பதே எனது அவா

சாத்திரி @ 11:08 PM

//http://mullaimann.blogspot.com/ @ 12:29 PM

வஞ்சகம் கொன்று வீழந்த தலைவனுக்கு ஒரு வணக்கத்தைச் செலுத்தத் தடை நிற்கும் வஞ்சகர்களை எமது மக்கள் விலக்கிவிட்டு அந்த மாபெரும் தலைவனுக்கு அஞ்சலிப்போம்.

எங்கள் கடவுளைக் காவு கொண்ட துரோகத்தை உலகறிவிப்போம்.

சாந்தி//

அதுதான் நாம் இப்பொழுது செய்யவேண்டியது

கவிக்கிழவன் @ 11:45 PM

பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்

Anonymous @ 12:13 AM

ஆகா. ஆப்படியென்றால் அந்த க*******க்கு சங்கு ஊதியாச்சா. டேய் வண்ணார சிறி நாயே ஒருக்காலும் கீழ் சாதி நாய்கள் எங்களை ஆள நினைக்காதங்கோ. மாத்தையாவை அதாலாளன சட்டனிங்கள். டொமினிக்குக்கு என்ன நடந்தது. அந்த கரை********** நாய் தான் உயா் ஜாதிக்கு வரவேண்டும் என்டுதானே இவ்வளவும் முக்கினது. காதலிச்சுப் போட்டான் என்டு தானே எல்லாரையும் சுட்டுப்போட்டு கடைசிலை வெள்ளாள பொம்பிளையை கட்த்தி தாலிகட்டின நாள்க்கு இதுவம் வேணும். ஒவ்வொரு சண்டைக்கையும் ஒவ்வொரு பிள்ளை பெத்த நாய்க்கு இப்ப எத்தினை மாசம். முதலிலை காம் வழிய இருக்கிற எளிய நாய் சாதிகளை சட்டு கொல்ல வேண்டும்.

Theepan @ 12:15 AM

ஆகா. ஆப்படியென்றால் அந்த க*******க்கு சங்கு ஊதியாச்சா. டேய் வண்ணார சிறி நாயே ஒருக்காலும் கீழ் சாதி நாய்கள் எங்களை ஆள நினைக்காதங்கோ. மாத்தையாவை அதாலாளன சட்டனிங்கள். டொமினிக்குக்கு என்ன நடந்தது. அந்த கரை********** நாய் தான் உயா் ஜாதிக்கு வரவேண்டும் என்டுதானே இவ்வளவும் முக்கினது. காதலிச்சுப் போட்டான் என்டு தானே எல்லாரையும் சுட்டுப்போட்டு கடைசிலை வெள்ளாள பொம்பிளையை கட்த்தி தாலிகட்டின நாள்க்கு இதுவம் வேணும். ஒவ்வொரு சண்டைக்கையும் ஒவ்வொரு பிள்ளை பெத்த நாய்க்கு இப்ப எத்தினை மாசம். முதலிலை காம் வழிய இருக்கிற எளிய நாய் சாதிகளை சட்டு கொல்ல வேண்டும்.

Anonymous @ 12:52 AM

Excellant Artile!!!

My request to Tamil people is Accept the Reality and save the millions of Tamil People..

இளைய அப்துல்லாஹ் @ 12:53 AM

உங்களது எல்லாம் சத்தியமான வார்த்தைகள் ஆனால் இன்னும் வியாபாரிகள் விடுகிறார்களில்லை குறிப்பாக சொன்னால் அவர்கள் பிணங்களின் மீது பிஸ்னஸ் செய்து கொண்டுதான் இரக்ககிறார்கள் இன்னும்

சாத்திரி @ 2:21 PM

..//இளைய அப்துல்லாஹ் @ 12:53 AM

உங்களது எல்லாம் சத்தியமான வார்த்தைகள் ஆனால் இன்னும் வியாபாரிகள் விடுகிறார்களில்லை குறிப்பாக சொன்னால் அவர்கள் பிணங்களின் மீது பிஸ்னஸ் செய்து கொண்டுதான் இரக்ககிறார்கள் இன்னும்//

இளைய அப்துல்லா நீங்களும் ஒரு ஊடகத்துறையை சார்ந்தவர் என்கிற முறையில் இந்த செய்திகளால்பாதிக்கப்பட்டிருப்பீர்கள் என்று எனக்கு தெரியும்.. ஆனால் இருட்டினில் நீதி மறைந்துள்ளது தன்னால் வெளிவரும்.. உங்கள் பணியை தொடருங்கள்.

shiva kumar @ 11:28 AM

தமிழ் தலைவர்களில் ஒப்பட்ட்ற ஒரு தலைவர்
இனி தமிழ் மக்களுக்கு கிடைப்பாரா அண்ணா ???

shiva kumar @ 11:31 AM
This comment has been removed by a blog administrator.
Deva @ 1:20 AM

niz..i ll put ur esay n my blog..and u have 2 write an article only 4 our blog...will u? u can.... yaarl.blogspot.com... arunkokul@hotmail.com

Anonymous @ 12:55 PM

gj;kehjid ge;jk;gpbj;J gzk; fwf;fKaYk; rpyupd; Kaw;rpfs; vkf;Fj;njupAk;.ahuhtJ nghWg;gpy; cs;stiu ge;jk; gpbj;J
gzk; gz;Zk; fiy rhe;jpf;Fk; rhj;jpupf;Fk; kpfj;njupe;j fiyjhd;.
re;jputjdh vd;w Nah;kdpy; trpf;Fk; jkpo;ngz;zpd; jkpo;eilf;Fk;
jiytiu re;jpj;Jtpl;L mth; vOjpa Mf;fq;fshYk; fho;g;Gk;
ntWg;Gk; nfhz;L castro tpd; fhypy; tpOe;J re;jputjdhitg;gw;wp
Nfhs;%l;ba rhj;jpupAk; rhe;jpAk; ,g;Ngh castre itg;gw;wp gpiofz;Lgpbj;J
vOJtJ ey;y fhnkbjhd;. – kzp-

சாத்திரி @ 2:06 PM

இறுதியாக அனானியாக வந்து மணி என்கிற பெயரில் அருணகிரி பாமினிஎழுத்துருவில் எழுதியது என்னவெனில்..

//பத்மநாதனை பந்தம்பிடித்து பணம் கறக்கமுயலும் சிலரின் முயற்சிகள் எமக்குத்தெரியும்.யாராவது பொறுப்பில் உள்ளவரை பந்தம் பிடித்து
பணம் பண்ணும் கலை சாந்திக்கும் சாத்திரிக்கும் மிகத்தெரிந்த கலைதான்.
சந்திரவதனா என்ற யேர்மனில் வசிக்கும் தமிழ்பெண்ணின் தமிழ்நடைக்கும்
தலைவரை சந்தித்துவிட்டு அவர் எழுதிய ஆக்கங்களாலும் காழ்ப்பும்
வெறுப்பும் கொண்டு உயளவசழ வின் காலில் விழுந்து சந்திரவதனாவைப்பற்றி
கோள்மூட்டிய சாத்திரியும் சாந்தியும் இப்போ உயளவசந வைப்பற்றி பிழைகண்டுபிடித்து
எழுதுவது நல்ல காமெடிதான். – மணி-
//
மேலே உள்ள பின்னூட்டத்தில் உயளவசழ என்பது ஆங்கிலத்தில் கஸ்ரோ என்று வரும்..கஸ்ரோ என்பவர்தான் புலிகளின் அனைத்துலகச்செயலத்தின் பொறுப்பாளராக இருந்தவர்.. எனவே மேற்படி பின்னூட்டத்தினை பதிந்த
பல புனைபெயர்களைக்கொண்ட பழைய புலி புலனாய்வு உறுப்பினரிற்கு.. உங்களைமாதிரி ஆக்களையெல்லாம் புலனாய்வு பிரிவிலை புலிகள் இயக்கம் வைத்திருந்திருக்கிறார்களே என்பதை நினைக்க சிரிப்புத்தான் வருகிது..அடி ஆத்தி இதோ பார்ரா..காலே இல்லாத கஸ்ரோவின் காலில் வீழ்ந்ததாக சொல்றது நியாயமா??? தர்மமா??...தகுமா??அதுமட்டுமல்ல பந்தம் பிடித்தவரே மற்றவரை பந்தம் பிடிக்கிறதாய் சொல்லுறது ..முடியவில்லை..இல்லை..லை..லை.. எனக்கு அஞ்சு பிடிக்கும் ..அதுவும் பிஞ்சு பிடிக்கும்.....ஆனால் அப்பனோடை மூஞ்சைதான் பிடிக்கலை..பிடிக்கலை.

Anonymous @ 3:03 AM

[url=http://seoservicemarket.com]seo service[/url]

தனிமரம் @ 1:52 PM

என்ன சொல்வது ஐயா இப்ப தலைவர் இருப்பு இன்னொரு வியார தந்திரம்!