லண்டனில் பாமரனும் ஜீவஜோதி கடை வடையும்
2:19 PM, Posted by sathiri, 35 Comments
நான் கடந்த இரு வாரத்திற்கு முன்னர் லண்டனில் நின்றபொழுது எனது நண்பரும் ஒரு பேப்பர் ஆசிரியருமான கோபி வீட்டில்தான் தங்கி நின்றனான். அப்பொழுது கோபி சென்னார் பாமரனும் இந்தியாவிலையிருந்து வாறார் நேரமிருந்தால் அவரையும் சந்திச்சிட்டு போகலாமென்றார்.அனேகமாக பாமரனும் இலண்டனிலை நடந்த பேரணிக்கு சிலநேரம் வரலாம் அப்பிடி வந்தால் அங்கையே சந்திக்கலாமென்று நினைத்து எதற்கும் பாமரன் முதலிலை லண்டனுக்கு வந்திட்டாரா இல்லையா என்பதை உறுதிசெய்ய பாமரனை விமான நிலையத்திற்கு அழைத்துவர போனவரிற்கு போனடித்து......."பாமாரன் வந்திட்டாரா??"...என்று விசாரித்தோம்..அந்தநண்பரோ கடுப்பாகி பாமரன் வரவேண்டிய பிளைட் வந்து .. எல்லாரும் வெளியிலை போய்கொண்டிருக்கிறாங்கள்.யாரைப்பாத்தாலும் படிச்சமனிசராய்தான் தெரியிது ஆனால் பாமரனை காணேல்லை என்றார்..சரி பாமரன்தானே பாதைமாறி எங்கையாவது போய் யாராவது இழுத்துவந்து வெளியிலை விடுவாங்கள்தானே அப்பிடி வந்தால் ஊர்வலம் முடியிற கை பார்க் திடலுக்கு வாங்கோ சந்திப்பம் என்றுவிட்டு நாங்கள் ஊர்வலத்திற்கு போயிட்டோம்..
பாமரனும் தான்வரவேண்டடிய விமானத்தை தவறவிட்டு அடுத்த விமானத்தை பிடித்து லண்டன் வந்து....கை பார்க் திடலிற்கு அன்று வந்திருந்தாலும் அங்கிருந்த ஒன்றரைஇலச்சம் சனத்திரளிற்குள்ளை ஒரு பாமரனை தேடிப்பிடிக்கமுடியமல்போய்விட்டது..
அதாலை அடுத்தநாள் காத்தாலை றெயினஸ் வீதியில் சந்திக்கலாமென நானும் கோபியும் சந்திக்கப் போயிருந்தம்.. பாமரனும் அவரின்ரை ஈழத்து நண்பர் கருணாவோடை(அந்தக் கருணா இல்லை)வந்திருந்தார்.. எங்கள் தேசிய பானமான டீ குடிச்சுக்கொண்டே கதைக்கலாமென்று நினைத்து அருகிலிருந்த அண்ணாச்சியின் சரவணபவான் கடைக்குள்ளை புகுந்து துண்டைபோட்டு உக்காந்து நாலு டீ ஒடர் பண்ணிவிட்டு ..பாமரனிட்டை என்ன சாப்பிடுறிங்கள் என்றேன்....அவர் இது என்ன கடை சைவமா?? அசைவமா ??என்றதும்..
கோபி.. அவரிடம் .. இது நம்ம அண்ணாசியோடை சரவணபவான் சைவம்தான் என்ன சாப்பிடறீங்க என்றார்...
அட நம்ம ஜீவஜேதிகடையா........ அப்ப வடை நல்லாயிருக்கும்..எனக்கு இரண்டு சாம்பார்வடை சொல்லுங்கப்பா என்று பாமரன்.சவுண்டு விட ...
அங்கிருந்த சர்வரும் நாமளும் தமிழ்நாட்டுக்காரர்தான்.. மதுரை பக்கம் என்றார்..
அவரைக்கூப்பிட்டு பாமரனைக்காட்டி இவரு தமிழ்நாட்டிலை பெரீய்ய்ய்ய்......ய எழுத்தாளர் பாமரன்னு பேரு.. வடை சாப்பிடுறதுக்காகவே இந்தியாவிலை இருந்து இங்கை வந்திருக்கிறார்..சூடா நாலு சாம்பர் வடை கொண்டங்க எண்டதும்... சர்வரோ பாமரனா?? என்று தலையை சொறிய நானும் விடுவதாக இல்லை.... என்னசார் பாமரன் கேள்விப்பட்டதில்லையா?? குமுதத்திலையெல்லாம்..கும்மியடிப்பாரே அவருதான் என்றதும் ..
தன்னை ஓவராய் பில்டப்பண்ணி காட்டுறாங்களா??? இல்லை இப்பிடி லண்டனிலை வைத்து பழிவாங்கிறாங்களா என்று பாமரன் யேசித்து கடுப்பானாரோ தெரியாது.. யோவ்.. பார்த்தஉடைனையே படக்கின்னு கண்டுபிடிக்க நானென்ன நமீதாவா???
.முதல்லை வடையை கொண்டாங்கய்யா என்றதும்..சர்வர் தப்பித்தோம் பிழைத்தோம் என்றதைப்போல அங்கிருந்து ஓடிப்போய் நாலு சாம்பர் வடையை கொண்டந்து வைக்கவும்... பாமரன்
"வெங்காயம்... வெங்காயம்.." எண்டார்....நானும் இவரு தன்னைதெரியாதென்று சொன்ன சர்வரை பெரியாரைப்போலவே வெங்காயம் என்று திட்டுகிறார் என்று நினைத்து.. பாவம் விட்டிடுங்க ஏதோ தெரியாமல் தெரியாது என்று சொல்லிட்டான் வடையை சாப்பிடுங்க என்றவும்..
அவரோ சாம்பார் வடைமேலை தூவியிருந்த பச்சை வெங்காயத்தைக்காட்டி அதில்லையா நான் பச்சைவெங்காயம் சாப்பிடுறதில்லை அதாவை வெங்காயம் போடாமல் இரண்டு வடை கொண்டாரசொல்லுங்க என்றார்..
பிறகென்ன அவரது வடையையும் நான் என்பக்கம் இழுத்து விட்டு அவரிற்கு வெங்காயம் இல்லாத இரண்டு வடை ஓடர்பண்ணிட்டு இருக்க பாமரனின் செல்போன் சிணுங்க காதில் வைத்தவர் என்னைப்பார்த்து நம்ம ஓசை செல்வா பய பேசுறான் என்றுவிட்டு.. ...
ஆமாண்டா எப்பிடி இருக்கிற... நான் நம்ம ஜீவஜோதி கடையிலை வடைசாப்பிட்டிட்டு இருக்கிறமில்லை ... என்று சொல்லும்போது வடையுடன் வந்த சர்வர் வடையை வைத்து விட்டு ஜீவஜேதியா அது யாருங்க என்றார்...அப்பொழுதான் புரிந்தது அவரிடம்போய் பாமரனை தெரியுமான்னு கேட்டது எவ்வளவு பெரீரீரீ......ய்ய....தப்புன்னு...
//நான் கடந்த இரு வாரத்திற்கு முன்னர் லண்டனில் நின்றபொழுது எனது நண்பரும் ஒரு பேப்பர் ஆசிரியருமான கோபி வீட்டில்தான் தங்கி நின்றனான்.//
லண்டனில போய் நின்றிருக்கிறீங்கள்? பாவம் நீங்கள் சாத்து :(
அடுத்த முறை லண்டன் போகும் போது கதிரை ஒன்று வாங்கிப் போகவும்.
அன்புடன்
வசி
ஜீவஜோதி யார்?
Too good... I kept loughing in the office when others were looking at me as if what happend...
நடசத்திர வாழ்த்துக்கள் சாத்திரியாரே...
ஷங்கர்
நட்சத்திர வாழ்த்துக்கள் :))
நடசத்திர வாழ்த்துக்கள் சாத்திரியாரே...
நட்சத்திர வாழ்த்துக்கள் சாத்திரியார், உங்களிடம் அதிகமாக எதிர்பார்க்கிறோம்:-)
//வடையுடன் வந்த சர்வர் வடையை வைத்து விட்டு ஜீவஜேதியா அது யாருங்க என்றார்...அப்பொழுதான் புரிந்தது அவரிடம்போய் பாமரனை தெரியுமான்னு கேட்டது எவ்வளவு பெரீரீரீ......ய்ய....தப்புன்னு...//
:-))
நட்சத்திர வாழ்த்துக்கள் சாத்திரி
:))))))
நட்சத்திர வாழ்த்துக்கள் !!!!!
நட்சத்திர வாழ்த்துக்கள்.
ரெங்கா-சிங்கப்பூர்
வாழ்த்துக்கள்.
நட்சத்திரப் பதிவராக தெரிவு செய்யப் பட்டதற்கு வாழ்த்துக்கள்.
நான் பாமரனின் விசிறி.
நக்கல் கலந்த வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும், அதே சமயம் நறுக்கென்று உண்மையை சொல்லும் அவரது எழுத்துப்பாணி எனக்கு மிகவும் பிடிக்கும் .
அன்று தொடக்கம் இன்று வரை மாறாத அவரது ஈழ ஆதரவு உணர்வு பாராட்டுக்குரியது.
-வானதி
நட்சத்திர வாழ்த்துக்கள்.
அது ஓசை செல்வா இல்லை "ஓசை செல்லா".
/
யோவ்.. பார்த்தஉடைனையே படக்கின்னு கண்டுபிடிக்க நானென்ன நமீதாவா???
/
:)))))))))))
ROTFL
இந்த சின்னக்குட்டியின் நட்சத்தி்ர வாழ்த்துக்கள் சாத்திரியாருக்கு...
//vasi said...
ஜீவஜோதி யார்?//
அவர்தான் வடை ஓனர்
செப்டம்பர்மாசம் லண்டனுக்கு வெளிக்கிட்டவர் ஏப்ரல்லதான் வந்து சேர்ந்தாரா... ? எத்தனை தரம் பிளேனை மிஸ் பண்ணினாரோ...
அதுசரி.. கொழுவியைப்பற்றி விசாரிச்சாராமே.. உண்மையா.?
நட்சத்திரச்சாத்திரிக்கு நட்சத்திர வாழ்த்துக்கள்.
வடைக்கு உழுந்தை அரைச்சமாதிரி சாத்திரிக்கு சாத்து விழப்போகுது.
சாந்தி
பாமரனுக்கு இனிமேல் வடை ஆசையே வராது. சாத்திரியிட்டை மாட்டி வெங்காயமாகி வடை சாப்பிட்டதே வாழ்நாளில் வடை மீது தடை விதிக்கப்பண்ணிவிடும்.
எங்கை போனாலும் சாத்திரியின் சாதுரியம்தான் வெல்லுது.
சாந்தி
சொல் மாறி வந்திருந்தால் ஆபாசமாக ஆகிப்போயிருக்கும் :P
ஃஃஃஃஃஃஃ
விண்மீன் வார வாழ்த்துக்கள் சாத்திரி !
நன்றாக இருந்தது, மிகவும் ரசித்தேன்.
நான் ஜீவஜோதி கடை வடையை சொல்லல உங்க இடுகையை சொன்னேன் :-)
நட்சத்திர வாழ்த்துக்கள்!
நடசத்திர வாழ்த்துக்கள் சாத்திரி!
என்னை வாழ்த்திய வசி.சுகு..அரசியல்..ஆயில்யன்...கானா பிரபா..பிருந்தன்..சென்ஷி..பதி..அற்புதன்...வானதி...மங்களுர் சிவா..சின்னக்குட்டி...கொழுவி..சாந்தி..ரிபி்சிடி....இளையகரிகாலன்..தமிழ்பிரியன்.. ஆகிய உறவுகளிற்கும்.. மற்றும் என்னுடைய பதிவுகளிற்கு வரவேற்றும்..திட்டியும்.. அனானியாக வந்து அழிச்சாட்டியம் பண்ணுகின்ற உறவுகளிற்கும். என்னுடைய நன்றியுடனான வணக்கங்கள்..
நட்சத்திர வாழ்த்துக்கள் அண்ணன்..!
தனி அரசியல் என்றில்லாமல் கலந்து எழுதுவீர்களென எதிர்பார்க்கிறேன்...
\\
பார்த்தஉடைனையே படக்கின்னு கண்டுபிடிக்க நானென்ன நமீதாவா???
\\
\\
ஜீவஜேதியா அது யாருங்க என்றார்...அப்பொழுதான் புரிந்தது அவரிடம்போய் பாமரனை தெரியுமான்னு கேட்டது எவ்வளவு பெரீரீரீ......ய்ய....தப்புன்னு
\\
:)))) :))
நடசத்திர வாழ்த்துக்கள் சாத்திரியாரே!
அரசியல் என்று மட்டும் இல்லாமல், கொஞ்சம் ஜோசியமும் சேர்த்து சொல்லுங்கோ சாத்திரி அங்கிள் :)
தமிழன் கறுப்பி மற்றும் லேகா பக்சே உங்கள் வாத்துக்களிற்கு நன்றிகள்.. உங்களிற்காகத்தானே அரசியல் எழுதாமல் வடை சுட்ட கதையிலை தொடங்கியிருக்கிறேன்.. ஆனால் நீங்கள் வடையை அரசியலாக்கிடாதீங்கய்யா... நன்றி.
நடசத்திர வாழ்த்துக்கள்.
//உங்களிற்காகத்தானே அரசியல் எழுதாமல் வடை சுட்ட கதையிலை தொடங்கியிருக்கிறேன்.. ஆனால் நீங்கள் வடையை அரசியலாக்கிடாதீங்கய்யா... //
ஹா ஹா
நட்சத்திர வாழ்த்துக்கள்.
ஜீவஜோதி கடை வடைமேல பாமரனுக்கும் ஒரு கண்ணா??? பாத்து.. களிதிங்குற நிலமை வந்திராம :-)
நடசத்திர வாழ்த்துக்கள் :)
முஞ்சியப் பாத்தப்பவே நெனச்சேன்.....ஆளு கொஞ்சம் நக்கல் புடுச்சதாத்தான் இருக்கும்ன்னு.... கடைசீல பத்த வெச்சுட்டியே பரட்ட.....
வாழ்த்துக்கள் சொன்ன வாசுகி..உழவன்..மாயா..பாமரன் ஆகியோரிற்கும் நன்றிகள்..
// நடசத்திர வாழ்த்துக்கள் :)
4:06 AM
Delete
Anonymous pamaran said...
முஞ்சியப் பாத்தப்பவே நெனச்சேன்.....ஆளு கொஞ்சம் நக்கல் புடுச்சதாத்தான் இருக்கும்ன்னு.... கடைசீல பத்த வெச்சுட்டியே பரட்ட.....
7:00 AM//
அப்பாடா இப்பதான் நிம்மதி...:):):)
அங்க வந்துமா இவர் அக்கப் போர் தாங்கலை?. நேரில் பேச படு வேடிக்கையான மனிதர். அவர் அறைக்கு போய் நாளாச்சி. இந்தியா வந்துட்டாரா? :))
வெள்ளந்தியான மனிதர் அவர் (பாமரன்)அவரை ஒரு முறை பார்த்து பேசினால் எல்லோருக்கும் உடனே பிடித்து விடும்.