Navigation


RSS : Articles / Comments


அகங்கார சிறீலங்காவும் ஆப்பிறுகிய இந்தியாவும்

2:20 PM, Posted by sathiri, 21 Comments





வன்னியில் இன்று குறுகிய நிலப்பரப்பில் குற்றுயிராய் கிடக்கும் தமிழனின் வாயிலிருந்து இறுதி மூச்சாகவும்.. அதனைக்கண்டு பொறுக்கமுடியாத தமிழகத்து உறவுகளிடமிருந்து ஆதங்கமாகவும்..ஆத்திரமாகவும்..உலகெங்கும் வாழும் தமிழர்களிடமிருந்து ஆவேசமாகவும் ஒலித்துக்கொண்டிலுக்கும் வேண்டு கோள்கள் என்னவெனில்..இந்தியாஅரசே இலங்கையில் நடக்கும் யுத்தத்தினை நிறுத்து....தமிழர் படுகொலையை நிறுத்து.. சிறீலங்கா அரசிற்கு ஆயுத உதவியை நிறுத்து... இவைதான்.. ஆனால் உண்மையிலேயே இந்திய அரசு நினைத்தாலும் கூட இப்பொழுது யுத்தத்தினை நிறுத்தமுடியாது...

காரணம் இந்தியாவும் இலங்கையும் சுதந்திரமடைந்த காலத்தின் பின்னர் வரலாற்றினை சிறிது பின்நோக்கி புரட்டினால்..காலங்காலமாகவே குட்டிசிறீலங்கா என்கிற தீவின் அகங்காரமும் அதற்கு அடங்கியே பழகிப்போன இந்தியத்துணைக்கண்டத்தின் தொடைநடுங்கித்தனத்தையும் துல்லியமாகவே காணலாம்.. அதற்கு மிகப்பெரிய உதாரணங்களாக..1961 லும் 1964 லும் சிறீலங்காவின் சீன மற்றும் பாகிஸ்த்தான் அதரவு நிலையை தடுப்பதற்காக சிறீலங்காவிடம் பணிந்து போய் செய்த ஒப்பந்தங்கள் முலம் பல இலட்சம் மலையகத்தமிழர்களின்எதிர்காலத்தினைஅழித்துமட்டுமல்ல..அதற்கடுத்ததாக..1975 ம் ஆண்டு மீண்டும் சிறீலங்காவின் பாகிஸ்தான் ஆதரவு நிலையை தடுப்பதற்காக கச்சதீவை வர்ணக்கடதாசியில் பொட்டலம் கட்டி சிறீலங்கவிற்கு பரிசாகக்கொடுத்தனர்.. பொட்டலம் கட்டுவதற்கு வர்ணக்கடதாசி கொடுத்து ஒப்புதலும் கொடுத்த இன்றை தமிழக முதல்வர்தான் அன்றைகாலகட்டத்திலும் தமிழக முதல்வராக் இருந்தார்..

இதனை நான் எழுதிக்கொண்டிருக்கும்பொழுது கச்சதீவை திரும்பப்பெறும்வரை போராட்டம் தொடரும் என்று ஒருதேர்தல் அறிக்கையும் வெளியிட்டிருக்கிறார்..இத்தனைக்கும் கச்சதீவை சிறீலங்காவிற்கு கரம்பிடித்து கொடுத்த காங்கிரஸ் மத்தியிலும்.. அதற்கு சாட்சிக் கையொப்பமிட்ட தி.மு.க.தமிழ்நாட்டிலும் ஆட்சியில் இருக்கின்றது..
அதற்கடுத்தாக சிறீலங்காவில் 83 ம் ஆண்டு நடந்த தமிழினப்படுகொலைகளை நிறுத்தச்சொல்லி அன்றைய இந்தியப்பிரதமர் இந்திராகாந்தி அவர்கள் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த பி.வி. நரசிம்மராவ், மத்திய அமைச்சர் அந்தஸ்தில் இருந்த வெளியுறவுத்துறை ஆலோசனைக் குழுத் தலைவர் ஜி. பார்த்தசாரதி ஆகிய இருவரையும் கொழும்புக்கு அனுப்பி வைத்தார்.. அன்றைய சிறீலங்கா ஜனாதிபதி ஜே.ஆர். அவர்கள் இருவரையும் சந்திக்காமல் இழுத்தடித்து பின்னர் தன்னுடைய அலுவலக வாசலிலேயே ஒரு மணிநேரம்வரை காக்கவைத்த சம்பவங்களை ஜி.பார்த்தசாரதி அவர்களே தன்னுடைய புத்தகத்தில் எழுதியுள்ளார்..

அடுத்தாக 87ம் ஆண்டு ஒப்பந்தம் கைச்சாத்திட சென்ற இராஜீவ் காந்தியை துப்பாக்கியால் அடித்து வரவேற்றதை இந்த உலகமே கண்டுகளித்தது..இராஜீவ் காந்தியை துப்பாக்கியால் அடித்த ரோகன விஜயமுனி என்பவர் ராஜீவின் தலைக்குத்தான் இலக்கு வைத்தேன்: என்று பகிரங்க வாக்குமூலம் கொடுத்திருந்தும். சிறீலங்கா அரசு ஒரு சம்பிரதாயக் கைது மட்டும் செய்து விடுதலை செய்துவிட்டு ..சூரிய வெப்பத்தில் அதிகநேரம் நின்றதால் அந்த இராணுவ வீரன் மயங்கி விழும்பொழுது துப்பாக்கி இராஜீவின் பிடரி மயிரில் பட்டுவிட்டது என்றொரு அறிவியல் ரீதியான விளக்கத்தையும் கொடுத்து..அடித்தவனிற்கு சிறீலங்காவின் தேசிய வீரர் என்கிற பட்டமும் கொடுத்து மகிழ்ந்தது சிறீலங்கா..

அப்படி அடிவாங்கி கொண்டும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இலங்கையில் இந்திய இராணுவத்தினை குவித்து இந்திய மக்களின் பலகோடி வரிப்பணத்தினை செலவழித்து மூவாயிரத்திற்கு மேற்பட்ட இந்திய இராணுவத்தினை பலிகொடுத்தும்..பல ஆயிரம் இரணுவத்தினரை அங்கவீனர்களாக்கியும் புலிகள் மீதும் ஈழத்தமிழர்கள் மீதும் ஒரு முடிவில்லாத யுத்தத்தினை நடத்திக்கொண்டிருந்த பொழுது.. சிறீலங்காவில் பிரேமதாசா ஜனாதிபதியாகபதவியேற்றதும் முதலில் செய்த வேலையாக இந்தியாவைப்பார்த்து சொன்னார்.. இது எங்கள் உள்வீட்டு பிரச்சனை நீங்கள் வெளியேறலாமென்றார்..பிறகென்ன இந்தியாவும் வெளியேறியது மட்டுமல்ல இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் மாபெரும் தியாகம் செய்து தான் ஈழத்தமிழர்களிற்கு செய்த ஒரோயொரு சாதனையென்று இந்தியா மார்தட்டிக்கொண்ட வடக்கு கிழக்கு இணைப்பு என்கிற ஒப்பந்தத்தையும் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டது போல ஒரு பொதுசனவாக்கெடுப்பு நடத்தாமலேயே சிறீலங்கா அரசு கிழித்து எறிந்தபொழுது.. புதுமணப்பெண்போல இந்தியா நாணிக் கோணி எதுவும் பேசாமல் தலைகுனிந்து நின்றது..

ஆனால் மீண்டும் 87 ம் ஆண்டு இராஜீவ் காந்தி தட்டிய அதே பழைய குருடியின் வீ்ட்டுக்கதவினை சோனியாவின் தலைமையில் மன்மோகன் சிங் தட்டினார்..புலிகளை அழிக்க அத்தனை உதவிகளையும் தரலாமென்றனர்.. சிறீலங்கவிற்கு சார்க் மகாநாட்டிற்கு போன பிரணாப் நடுத்தெருவில் நடத்திவிடப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார்.. ஆனாலும் நாங்க ரெம்ப நல்லவங்க... என்றபடியே தொழில்நுட்ப உதவிகளையும்..ராடர்வசதிகள்..இந்திய இராணுவ அதிகாரிகளின் நேரடி ஆலோசனைகள்.. என்று மீண்டும் அனைத்தையும் கொடுத்து கெஞ்சிக்கூத்தாடியாவது சிறீலங்காவின் இதயத்தில் ஒரு ரோசாப்பூவாய் இடம்பிடிக்க ஆசைப்படுகின்றது..இத்தனைக்கும் சீனா சத்தமின்றி சிறீலங்காவில் அம்பாந்தோட்டையில் நவீனவசதிகளுடனான துறைமுகம் ஒன்றினை நிருமானித்து அதில் கண்காணிப்பு கோபுரத்தை அமைத்து இந்தியாவை வர்ணப் படங்கள் எடுப்பது மட்டுமல்ல மன்னாரில் எண்ணெய் ஆராய்ச்சி என்கிற பெயரில்..இந்தியாவிற்கு மிக அருகிலேயே தமிழகத்தில் எல்லையில் இந்தியாவிற்கு எள்ளெண்ணெய் கொழுத்த தயாராகிக்கொண்டிருக்கின்றது..

இந்தியத் தேர்தல் பிரச்சாரங்கள் தொடங்கு முன்னரேயே அதாவது சித்திரை 14ற்கு முன்னரேயே பிரபாகரனை பிடித்து ஒரு பெட்டியில் போட்டு அவர் மூச்சுவிட மட்டும் அதில் ஒரு ஓட்டையை போட்டு உங்களிடம் தந்துவிடுவேன் என்று ராஜபக்சாவின் வார்ததைகளை நம்பி இராணுவ உதவிகளை வாரி வாரி கொடுத்துக்கொண்டிருந்த இந்தியாவே சித்திரை 14 கடந்தும் இன்னமும் சிறீலங்கா அரசு சொல்லும் நாள்கணக்குகளையும்.. மணித்தியாலக்கணக்குகளையும்..கூட்டிக்கழித்து நித்திரையின்றி தவிக்கின்றது..இத்தனைக்கும் மேற்குலகிற்கு விழிபிதுங்க வைத்துக்கொண்டிருக்கும் சீனப்பெரும்சுவரிற்கு மாற்றாக ஒரு சுவரை எழுப்புவதற்காகவும் இன்றைய பொருளாதாரச்சரிவினாலும் இந்தியாவை நம்பியிருக்கும் சர்வதேசத்தையும் இலங்கையரசின் வாக்குறுதியை நம்பி இலங்கை விவகாரத்தில் தலையிடவிடாமல் எழுப்பிவைத்திருந்த தடைச்சுவரும் உலகெங்கும் வாழும் தமிழர்களினதும் மனிதவுரிமை ஆர்வலர்களது தொடர்ச்சியான போராட்டங்களாலும் மெல்லத் தகர்ந்து மேற்குலம் நாளிற்கொரு தூதரை அனுப்பத்தொடங்கி விட்ட நிலையிலும்..

இந்தியத்தேர்தல் தாய்த்தமிழகத்தின் கொந்தளிப்பினால் இனி காங்கிரஸ் என்கிற பெயரில் தமிழ்நாட்டில் ஒரு நடாத்தமுடியுமா?? என்கிற கவலையிலும்..அவளைத்தொடுவானேன் கவலைப்படுவானேன் என்கிற நிலையில் கலைஞரின் உண்ணாவிரதம் நடத்ததையடுத்து இந்தியவரவிருந்த சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சரிடம் எந்தா சாரே உங்களிற்கு சிரமம் வேண்டாம்உங்களுடன் சம்சாரிக்க நாங்களே உங்களிடம் வருகிறோமென்று அவசரமாக மேனனும் நாராயணனும் குறைந்த பட்சம் சிலநாட்களாவது அதாவது இந்தியத் தேர்தல் முடியும்வரையாவது போரை கொஞ்சம் நிறுத்தினால்..அதைக்காட்டியே தமிழகத்தில் நாங்களும் எங்களை நம்பி ஆற்றில் இறங்கிவிட்ட கருணாநிதியும் கரையேறிவிடுவார்..அதற்கு பின்னர் உங்கள் விருப்பம் என்று ஒரு கோரிக்கையை வைத்திருக்கிறார்கள்..

ஆனால் யுத்தநிறுத்தம் என்கிற வார்த்தையே எங்கள் அகராதியில் இல்லை என்று சிறீலங்கா சொல்லிவிட்டது.. அதற்கு மேலும் யுத்தநிறுத்தம் பற்றி கதைத்தால்...நீங்கள் உங்கள் ராடர்களையும் கழற்றிக்கொண்டு உங்கள் இராணுவஅதிகாரிகளையும் கூட்டிக்கொண்டு உடனடியாகவே வெளிறேலாம் என்று கோத்தபாய கோபமாய் கத்துவார்என்று தெரியும்...எனவேதான் சிறீலங்கா இனிமேல் பெரிய பெரிய .குண்டுகளால் தமிழர்களை கொல்லாது.. குட்டிக் குட்டிக் குண்டுகள் மட்டுமே போட்டுக்கொல்லும் என்றொரு அறிக்கையையும் விட்டு விட்டு சந்திப்ப நல்லபடியாய் முடிந்தது வெற்றி வெற்றி என்றபடி வந்த இருவரும் இந்தியா சென்று விட்டனர்..உண்ணாவிரதம் இருந்த கருணாநிதியோ இலங்கைக்கு பேச்சுவார்ததைக்கு போனவங்கள் இரண்டுபேருமே தமிழ்நாட்டிற்கே தண்ணிதராத கேரளாக்காரங்கள்..இவனுகளிற்கு நான் சாப்பிட்டாலென்ன சாப்பிடாமல் இருந்தாலென்ன கவலையில்லை என்று கைவிட்டுவாங்கள் என்று நினைத்து தன்பங்கிற்கு அவரும் வெற்றி வெற்றி..என்று ஒரு அறிக்கையை விட்டிட்டு போய்விட்டார்.. அதே நேரம் சிறீலங்காவிற்கோ இந்தியாவில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அங்கு அவர்கள் செல்வாக்கு செலுத்த தன்மீதான அழுத்தங்களை கொடுக்கும் என்று நினைத்துத்தான் சீனா சத்தமின்றி செய்துவரும் உதவிகளைப்பற்றி எதுவுமே வாய்திறக்காமல்..

சிறீலங்கா அமைச்சர்களோ அடிக்கடி இந்தியாவிற்கும் இந்தியா செய்த உதவிகளிற்கும்.. நன்றி..நன்றி.. என்று அறிக்கை விட்டுக்கொண்டிருக்கின்றார்கள்...ஏனென்னறால் அவர்களின் ஒவ்வொரு நன்றி அறிக்கைகளிற்கும்.. உலகத்தின் ஒட்டுமொத்த தமிழினத்தின் வெறுப்பு காங்கிரசின் மீது ஒவ்வொருபடி உயரும் என்பது சிறீலங்காவின் அரசியல் கணக்கு..எனவே காங்கிரஸ் தோற்று விட்டால் மீண்டும் சீனாவுடனான சிறீலங்காவின் தேன்நிலவு இன்பமாய் கழியும்..ஆனால் வல்லரசுக்கனவில் தமிழினத்தை மதிக்காமல் தெருவில் போய்க்கொண்டிருந்த சிறீலங்காவை மீண்டும் மீண்டும் கூப்பிட்டு தனக்கொரு ஆப்பு வைக்கச்சொல்லி அடம்பிடிக்கும் காங்கிரசிற்கு தமிழர்கள் ஆப்படிப்பார்கள் என்பதுமட்டும் உறுதி

21 Comments

Anonymous @ 3:21 PM

Excellent article...

பதி @ 3:27 PM

சாத்திரி,

உங்கள் மன ஆதங்கத்தினை வெளியிட்டுள்ளீர்கள்...

ஆனால்,

//வல்லரசுக்கனவில் தமிழினத்தை மதிக்காமல் தெருவில் போய்க்கொண்டிருந்த சிறீலங்காவை மீண்டும் மீண்டும் கூப்பிட்டு தனக்கொரு ஆப்பு வைக்கச்சொல்லி அடம்பிடிக்கும் காங்கிரசிற்கு தமிழர்கள் ஆப்படிப்பார்கள் என்பதுமட்டும் உறுதி//

இந்த வரிகளைத் தவிர அனைத்தும் பிடித்திருந்தது. ஏனெனில், மே 16ல் தேர்தல் முடிவுகள் வந்தால் மட்டுமே இதனைப் பற்றி பேச இயலும் !!!

பார்ப்போம்....

அப்பாவி தமிழன் @ 5:26 PM

ஒட்டு போட்டாச்சு பணம் சம்பாதிக்கறது பற்றி ஒரு பதிவு போட்டு இருக்கேன் வந்து பாருங்க http://technotamil.blogspot.com/2009/05/blog-post_06.html

Anonymous @ 6:44 PM

சூப்பர் இன்னமும் அதிகமாக எதிர்பார்க்கிறோம்

வெண்காட்டான் @ 8:04 PM

excellent article.

Anonymous @ 8:45 PM

நல்ல பதிவு.
தமிழர்களும் ஆபத்தான நேரங்களில் இந்தியா தான் தமக்கு உதவும் என்று
தப்பான அபிப்பிராயம் வைத்திருந்தார்கள்.
இந்தியாவும் முடிந்த வரை தமிழருக்கு ஆப்படித்திருக்கு.

இந்தியாவும் முடிந்தவரை இலங்கை அரசிற்கு பணிந்தே போகிறது.
இந்தியா, பாகிஸ்தான், சீனா என்று ஆசிய நாடுகள் இலங்கை அரசிற்கு
ஆதரவாக இருப்பதால் அமெரிக்கா, பிரித்தானியா போன்றவை
தமிழருக்கு உதவ யோசிக்கிறது.

vanathy @ 11:17 PM

நல்லொரு ஆய்வு.
ஸ்ரீலங்கா என்ற இந்தக் குட்டிப்பிசாசு இந்தப் பெரிய இந்தியாவை அன்று தொடக்கம் இன்று வரை blackmail பண்ணிக்கொண்டுதான் இருக்கிறது .
இந்தக் குட்டிப்பிசாசுக்கு சரியான ஒரு பாடம் கற்பிக்க ஒரு துணிச்சலான, தீர்க்க தரிசனம் உள்ள இந்தியத் தலைவர் இனிமேல்தான் வர வேண்டும்.
வருவாரா?
-வானதி

கலகலப்ரியா @ 11:57 PM

வாழ்த்துக்கள்! ஈழத்து மைந்தர்களை நட்சத்திரங்களாக பார்ப்பதில் ரொம்ப சந்தோசம்!

Suresh Kumar @ 2:57 AM

அருமையான பதிவு. தமிழர்கள் ஆப்பு வைக்க தயாராகி விட்டனர்

Jeeva @ 3:52 AM

Super Article.

Thanks for ur Sharing.

லேகா பக்க்ஷே @ 4:42 AM

Excellent article!
ஆனால் காங்கிரஸ் தோற்று போகும் என்பது என்ன நிச்சயம்???

தமயந்தி @ 4:43 AM

natchatra adaiyalathuku vaazhthukal

sathiri @ 6:42 AM

கருத்துக்கூறிய அனைத்து நல்உள்ளங்களிற்கும் நன்றிகள்.

தமிழ்பித்தன் @ 8:02 AM

nice

Anonymous @ 9:17 AM

இந்தியா தான் இலங்கையை பார்த்து பயப்படுகிறதே. அப்புறம் என்ன மயிருக்கு இந்தியா தலையிடனும்னு கெஞ்சறிங்க? இந்தியன் போடற பிய் சோத்துக்கு அகதியா வரும்போது மட்டும் இனிக்கிதா?

வெத்து வேட்டு @ 10:43 AM

சாத்திரி மற்றும் புலி ஆதரவாளர்களுக்கு இப்போது தான் ஆப்பு என்றால் என்ன என்று விளங்கி இருக்கு :)
வன்னி படங்களை பார்க்கும் போது இந்தியா அதுவும் சோனியா வைத்த ஆப்பை நினைத்து நினைத்து நோகும் இடங்களை தடவ வேண்டியது தான்
இன்றைய நிலையில் இலங்கை அரசு இந்தியாவை மீறி எதுவுமே செய்யமுடியாது..
இலங்கையின் ஒவ்வொரு மேற்கத்தைய நட்பு நாடுகளின் ஆதரவும் கேள்விக்குள்ளாக பட்டுள்ளது..ஆகவே இலங்கை இந்தியா சைனா போன்ற நாடுகளில் தங்கிஇருக்க வேண்டிய நாடாக்கப்பட்டுள்ளது இது தான் இந்தியாவிற்கும் சைனாவிற்கும் தேவை..இந்தியாவும் சைனாவும் ஒரு போதும் ஆயுதமெடுத்து இனி சண்டை போடபோவதில்லை ...பாகிஸ்தான் இனி ஒரு நாடாகவே இருக்கவும் போவதில்லை.. ஆகவே தெற்காசியாவில் இந்தியாவிற்கு சலாம் போட்டாள் வாழலாம் இல்லைன்னா தலைவர் பிரபாவிற்கு வைத்த ஆப்பே..இந்தியாவை நெருங்குபவருக்கு கிடைக்கும்
நேபால், இலங்கை, பங்களாதேஸ், மாலைதீவு எல்லாரும் இந்தியாவை ஒட்டியே வாழ முடியும் ....
ராஜீவுக்கு வைச்ச ஆப்பு ... தலைவர் தனக்கும் வன்னி மக்களுக்குமா சேர்த்து வைச்ச ஆப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பூஊஊஊஊ

Sathyan @ 11:30 AM

வாழ்த்துக்கள் சகோதரன். படைப்புக்கள் சிறப்பாக உள்ளது.

குடிப்பதுக்கு தண்ணி கூட இல்லாமல் இனம் சாகுது. என்ன செய்யப்போகிறம்?!
Months ago SL Gov said only 70,000 civilians were there in NFZ. Week ago 110, 000 already fled according to SL Gov. Now it says only 15,000 - 20,000 people left. But Vanni sources say another 165,000 left inside NFZ. Time for IC to wake up before it's too late and stop yet another the carnage to be unleashed by Sinhala State Terror. Another mass slaughter of civilians will take place this week. What are we going to do?!

Girls as young as 14 year olds gang raped 'n left to die by Mahitler Rajapakse's Forces. There are reports from Nazi style Vanni concentration camps that girls are kidnapped 'n sent to secret locations where they are sexually abused by members of top level defence establishment.

watch this video secretly filmed by UK's CHANNEL 4 NEWS @
VIDEO: CHANNEL 4 NEWS & more

sathiri @ 12:55 PM

இது வரை கருத்துக்கூறிய அனைவரிற்கும் நன்றிகள்.

vasu balaji @ 8:55 PM

நல்ல அலசல். தொடரட்டும்.

Anonymous @ 10:56 PM

.//.பாகிஸ்தான் இனி ஒரு நாடாகவே இருக்கவும் போவதில்லை.. ஆகவே தெற்காசியாவில் இந்தியாவிற்கு சலாம் போட்டாள் வாழலாம் இல்லைன்னா தலைவர் பிரபாவிற்கு வைத்த ஆப்பே..இந்தியாவை நெருங்குபவருக்கு கிடைக்கும்
நேபால், இலங்கை, பங்களாதேஸ், மாலைதீவு எல்லாரும் இந்தியாவை ஒட்டியே வாழ முடியும் ....//

ஆகா என்ன ஒரு நினைப்பு.
இந்தியா தன்னை சுற்றி இருக்கிற எல்லா நாடுகளுடனும் சண்டை.
பாகிஸ்தான், பங்களாதேஷ், சீனா...............

இலங்கைக்கு பயந்து தானே கச்சதீவையே எழுதி வைத்தது இந்தியா.

அது சரி, ராஜீவ் தன் ராணுவத்தை அனுப்பி மக்களை கொல்வார். இதை எல்லோரும் பார்த்துக்கொண்டு இருக்க வேண்டும்.

தீப்பெட்டி @ 3:16 AM

நான் இதுவரை படித்த இலங்கை இந்தியா சம்பந்தபட்ட பதிவுகளில் மிக சிறந்த பதிவு இது,