கணணிக் காதல்
1:00 PM, Posted by sathiri, 3 Comments
கண்கள் பார்த்தால்
காதல் வரும்
கண்கள் பார்க்காமலும்
காதல் வரும்
காலத்தின் கோலம்
கணணிக் காலம்
இனிக்கும் மணக்கும்
இதமாய் இருக்கும்
இதுவல்லவோ உலகமென்று
இவ்வுலகமும் மறக்கும்
தடைபோட்டு தடைபோட்டு
தாய் தந்தை தடுத்தாலும்
முளைவிட்டு கிளைவிட்டு
காதல் பூ பூக்கும்
சுற்றமெல்லாம்
குற்றம் சொல்வார்
குறை சொல்வார்
குறையெல்லாம்
கறையாய் துடைத்து
காறி உமிழ்ந்துவிட்டு
முத்தம் இடும்போது
கிடைக்கும் சுகம்பெரிதா
இட்ட முத்தத்தை
நினைக்கும் சுகம்பெரிதா
காத்திருப்பது சுகமா
காக்க வைப்பது சுகமா
பேசிகொண்டிருப்பது சுகமா
பேசியதை அசை போட்டு
பொறும் இன்பம் சுகமா
தொடமுடியுமா என
தவிப்பது சுகமா
தொடதொட சுகமா
பாதி இரவில் பட்டிமன்றம்
பாவி மனதில்
முத்து குளிப்பவனிற்கு
மூச்சு திணறும்
பக்குவமாய் படிக்காதவனிற்கு
பாடம் கசக்கும்
அறுசுவை உணவையும்
ஆறஅமரஉண்ணாவிடில்
அது சுவையற்றது
மருந்தும் விருந்தும்
காதலே
மருந்தோ விருந்தோ
அருந்துபவரிற்கு
அளவுதேவை
கண்டதும் காதல்
கொண்டதும் காமம்
இரண்டுமே பாவம்
கூடிவாழ முன்னரே
கூடி முடித்து விட்டால்
பள்ளியறை செல்லாமலே
பாடம்முடித்துவிட்டால்
ஆலயம் செல்லாமலே
அருச்சனை முடித்துவிட்டால்
சுகம் இல்லாத சொர்க்கம்
சுரம் இல்லாத சங்கீதம்
உள்ளத்தில் தொடங்கி
உடலில் முடிக்காமல்
உடலில் தொடங்கி
கள்ளத்தில் முடிப்பது
காதலல்ல அது
கண்கள் பார்த்த
காதலானாலும்
பார்க்காத காதலானாலும்
ஆயினும் காதல்
செய்வீர் கண்ணியமாய்
நல்ல கவிதை. பாராட்டுக்கள்
மருந்தும் விருந்தும்
காதலே//
வரி சூப்பர்!!
காதலுக்கு மரியாதை தரும் கவிதை
அருமை