Navigation


RSS : Articles / Comments


இளையோர் போராட்டங்களும்..இழிபிறப்புக்களும்...

2:43 PM, Posted by sathiri, 15 Comments



தமிழர் புலம்பெயர்ந்து வாழும் தேசமெங்கும் இன்று எமது இளையோர் போராட்டங்கள் தீவிரமாகியிருக்கின்றது.. எம்மக்கள் மீதான இன அழிப்பினைக்கண்டு கொதித்தெழுந்த இளையோர்களின் போராட்டமானது உண்ணாவிரதம் .ஊர்வலங்கள் .ஆர்ப்பாட்டங்கள். என்றும்.தனியாக இனஅழி்பிற்கெதிரன போராட்டமாக மட்டுமல்லாது ஜரோப்பா .கனடா .அமெரிக்கா என்று சீரற்ற காலநிலைகளையும் எதிர்த்து மழையிலும் கொட்டும் பனியிலும் இரவு பகலாக தொர்ந்து போராடிவருகிறார்கள்..முதலில் அவர்களிற்காய் தலைநிமிர்ந்து மனப்பூர்வமாய் ஒரு மரியாதை வணக்கத்தினை செலுத்தி விட்டு தொடர்கிறேன்...


சிறிது காலங்களிற்கு முன்னர்.. கழண்டு விழும்கழுசாண்..காதிலே கடுக்கன்..கலர்அடித்த தலை. கழுத்தில் கம்பி வழையங்கள்....காதிலே எந்தநேரமும் கைத்தொலைபேசியோ அல்லது ஜ போனோ கிணு கிணுக்க கையை காலை ஆட்டியபடி திரிந்த இவர்களைப்பார்த்து...நாங்கள் சொன்னதெல்லாம்..உருப்படாததுகள்..இதுகள் தமிழையோ கலாச்சாரத்தையோ காப்பாத்தாதுகள்..இனி எல்லாஞ்சரி அழிஞ்சுபோச்சுது.. அங்காலை சிங்களவன் அழிக்கிறான் இஞ்சை இதுகள் அழிக்கிதுகள்..என்று ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்த நேரத்தில்தான் ..எமது இனத்தின் இருப்பின் இறுதிப்போராட்டத்திற்கு வலுச்சேர்க்க புலம்பெயர் தேசமெங்கும் புயலெனப்புகுந்த இளையவர்களைப்பார்த்து புறணிபாடியவர்களெல்லாம் வாயடைத்து நாக்கைப்புடுங்கலாமா?? மூக்கைப்புடுங்கலாமா என்று முழிபிதுங்கிநிற்க..


உலகின் அனைத்து இன மக்களிற்கும் அதன் அரசுகளிற்கு எங்கள் போராட்டத்தின் தேவையும் நோக்கமும் பிரச்சனைகளும் அவர்களிற்கேயுரிய மொழிகளிலும்..வழிகளிலும் போய்ச்சேர்ந்ததுமட்டுமல்ல..இதுவரை காலமும் எங்கள் போராட்டங்களின் நியாயங்களையும் எங்கள் அவலங்களையும் எவ்வளதூரம் மூடிமறைத்து ஆணியடித்து வைத்திருந்த முடியுமோ அவ்வளவிற்கு மூடிமறைத்து வைத்திருந்த சர்வதேச ஊடகங்களும் தங்கள் பின்பக்க தூசிகளை தட்டியவாறே மெல்ல எழுந்து முன்பக்க செய்திகளில் போடத்தொடங்கினார்கள்..இந்த உலகின் ஒரு முலையில் சிறிலங்கா என்கிற குட்டித்தீவில் ஈழம் என்கிற இன்னொரு குறுகிய சேத்தில் வாழும் இனத்தின்மீது இதுவரைகாலமும் நடாத்தப்பட்டுவந்த அழிப்புக்களும் அனியாயங்களும் ஒரு குறுகிய காலத்திலேயே உலகெங்கும் ஒலிக்கவைத்துக்கொண்டிருக்கும் எமது இளையொர் சந்திக்கும் சவால்களும் இடையூறுகளும் கொஞ்சநஞ்சமல்ல..


சீரற்ற காலநிலைகள் கூட இவர்களைச்சீண்டிவிடாது.. ஆனால் இவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் சிறீலங்கா அரசின் நேரடியான அழுத்தங்கள்.. இரண்டகக்குழுக்களின் சதிகள் பொய்யான பரப்புரைகள் .. இவை எல்லாவற்றிற்கும் மேலாக.. ஆனால் முக்கியமானதும் பாரியதுமான பிரச்சனை என்னவெனில் ..இதுவரை காலமும் போராட்டங்களை நடத்தியவர்களும் புலம்பெயர் தேசங்களின் தமிழ்த்தேசியத்தின் ஒட்டுமொத்த காவலர்கள் தாங்களே என்று கூறித்திரியும் ஒரு கும்பல்தான் இலங்கையரைவிட மிக மோசமான செயல்களையும் அழுத்தங்களையும் அவப்பெயர்களையும் இந்த இளையோர்மீது திணித்து வருகின்றனர்.அவர்கள் இளையோர் மீது முக்கியமாக வைக்கும் குற்றச்சாட்டு என்னவெனில் போராட்டங்களில் சட்டத்தை மீறுகிறார்கள்.. வன்முறை செய்கிறார்கள் என்பதே.....


போராட்டம் என்றாலே வன்முறைகலந்ததும் சட்டத்தை மீறுவதும்தான் போராட்டம்.. சட்டத்தை மீறாமலும் வன்முறையற்றும் போராட்டம் நடாத்தவேண்டுமென்றால் இன்று எங்கோ எஞ்சியிருக்கும் ஒரு சில தமிழர்கள் இன்னமும் காலிமுகத்திடலில் உண்ணாவிரதம் இருந்துகொண்டிந்திருப்பார்கள்...நாங்களும் எண்பதுகளிலிருந்து புலம்பெயர் தேசமெங்கும் சட்டத்திற்குட்பட்டும் வன்முறையற்றும் போராட்டங்களை நடாத்தியிருக்கிறோம்.. காவல்த்துறையிடம் சட்டப்படி அனுமதியெடுத்து .. அவர்கள் காட்டிய கட்டத்திற்குள் நின்றபடி ..சுட்டுக்கொண்டுவந்த வடை சூடாறிப்போகமுதல்..சம்பலுடன் தொட்டுத்தின்றபடி..மொட்டைத்தலை முருகேசன்ரை பெடியும் கட்டைத்தங்கம்மாவின்ரை கடைசிப்பெட்டையும் காதலிச்சு ஓட்டினமாம்..என்றும்.. சிற்றிசன் எடுத்தாச்சோ.. இன்னமும் வாடைகை வீடுதானே..வாங்கியாச்சோ???இப்ப என்னகார் வைச்சிருக்கிறாய்...என்றும் இன்னபிற பல கதைகள் பேசி......


என்ன கூட்டம் என்று பக்கத்தில் வந்து தட்டிக்கேட்ட வெள்ளைக்கு பதில் சொல்லத்தெரியாமல் வெக்கத்தில் நெளிந்து.... கடைசியாய் .நா..சபை கட்டிடக் காவலாளியிமும் உணவு விடுதி ஊளியரிடமும் எங்கள் கோரிக்கை மனுவைக்கொடுத்து படமும் எடுத்து விட்டு ...காவல்த்துறை குறித்துக்கொடுத்த முகூர்த்தநேரம் முடிந்ததும் கூடிய இடத்தில் கொட்டியிருந்த குப்பைகளையும் கூட்டியெடுத்து சட்டைப்பைக்குள் போட்டுகொண்டு வீட்டைபோய் குப்பைக்கூடைக்கள் போட்டுவிட்டு.. வெள்ளைக்காரனிற்கு எங்கள் பிரச்னைகளைச்சொல்லித்தெரியவைப்பதை விட வெள்ளைக்காரனிடம் எப்படி நல்லபெயர் எடுப்பது என்று மட்டுமே சிந்தித்து செயலாற்றி யதும் எடுத்தபடங்களை அதை வன்னிக்கனுப்பி கால் இல்லாதஒருவரிற்கு வால் பிடித்தும்தான் நாங்கள் நடாத்திய போராட்டங்கள்

இன்று இளையோர் உணவு மறந்து உறக்கம் தொலைத்து இரவுபகலாய் எங்கள் தேசம் தமிழீழம்.. எங்கள் தலைவன் பிரபாகரன்..எங்கள் மீதான இனஅழிப்பினை நிறுத்து என்றுஉரத்துச்சொல்லி உலகத்தின் கவனத்தையே எங்கள் பக்கம் திருப்பி பழைய தமிழ்த்தேசிய பெருச்சாளிகளால் அரிக்கமுடியாததை முறித்துக்காட்டிய இளையோரின் போராட்டங்கள் வன்முறையாகத்தான் தெரியும்... குறிப்பாக சுவிஸ். கனடா..ஜெர்மனி.இங்கிலாந்து .ஆகிய நாடுகளில் வாழும் தேசியத்து பூசாரிகளே கவனியுங்கள்...புலம்பெயர்ந்து வாழும் தேசங்களில் இன்னமும் நீங்கள் போடும் கோட்டினுள் நின்றுதான் கும்புடுபோடவேண்டும் என்கிற வறட்டு பிடிவாதத்தில் நின்றுகொண்டிருந்தால் வன்னியில் கடைசித் தமிழனின் மூச்சும் காற்றில் கரைந்துவிடும்..மாறிக்கொள்ளுங்கள் அல்லது மாற்றப்படுவீர்கள்..இளையோர் இங்கு குண்டுவைக்கவில்லை..கொள்ளையடிக்கவில்லை... கொலைசெய்யவில்லை.... தங்கள் பக்கம் மற்றையவர்கள் கவனத்தினை திருப்ப சிலமணிநேர சாலைமறியல்கள் செய்தனர்... சாலைமறியல் என்பது சர்வதேசக்குற்றம் அல்ல....நீங்கள் வாழும் நாடுகளிலேயே அரசிற்கெதிரான போராட்டங்களில் முதலில் குதிப்பது போக்குவரத்து நிறுவனங்கள்தான்..இயந்திர மயமாகிவிட்ட மேலைநாடுகளில் போக்குவரத்து நிறுத்தப்படு்ம்பொழுதுதான் பிரச்சனைகள் நேரடியாகவும் உடனடியாகவும் மக்களை சென்றடைகின்றது..அது அவர்களை சிந்திக்கவைக்கிறதே தவிர சினக்கவைப்பதில்லை...எனவே புலம்பெயர் தேசங்களில் தமிழத்தேசியத்தினை ஒட்டுமொத்த குத்தகைக்கு எடுத்துவைத்திருக்கும் தேசியத்துப்பூசாரிகளே...போராட்டங்கள் இன்று உங்கள் கையைவிட்டு போகின்ற வயித்தெரிச்சலில் வன்முறை .. வன்முறை என்று கத்தாமல்..வாய்மூடி வழிவிடுங்கள்..

15 Comments

Anonymous @ 3:56 PM

Very good article. Well done.

- Nathan

கிருஷ்ணா @ 5:04 PM

இன்றைய காலத்துக்குத் தேவையான பதிவு. பெருச்சாளிகளுக்கு தங்கள் தங்கள் நாட்டு அரசியலில் நுழையும் ஆசையும் அதற்காக தங்கள் சுயநலத்தை முன்னிறுத்தும் தேவையும் முக்கியமாகப் படுகிறது. இளையவர்களிடம் அது இல்லை. இனியாவது இவர்கள் இளையவர்களுக்கு வழிவிடவேண்டும். இல்லாவிட்டால் தமிழீழத் தேசியப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக வெடித்தபோது, அப்போது அரசியலில் இருந்த பெருசுகள் ஒதுக்கப்பட்ட வரலாறு புலம்பெயர் நாடுகளிலும் மீள எழுதப்படலாம்..

வெண்காட்டான் @ 8:19 PM

angeye pirathu valarthoorum ithil mukiya pangu vagikindrnar. nalla pathivu. nandri

Niraj @ 10:53 PM

Sathri brought the reality.
Well analized.
100% true.
Please let our youngsters to take our leadership.

பதி @ 2:21 AM

இன்றைய கால கட்டத்திற்கு மிகவும் தேவையான பதிவு...

பாரீஸ் தவிர்த்து மற்றைய சிறிய நகரங்களில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் பெருமளவில் முன்னெடுக்கப்படாததிற்கும் இது போன்ற பழைய பெருச்சாளிகளின் அழுத்தமும் ஒரு காரணம் என நான் நம்புகிறேன்.. ஏனெனில், மற்றைய நகரங்களில் இளையோர்கள் உள்ளனர், அவர்களும் இதே அளவிலான மனநிலையில் தான் உள்ளனர்..

Anonymous @ 2:46 AM

INTHA NIGALVU FRANCE NADDIL KIZHAKKU NAGARAM ONRIL NADANTHU VARUKINRATHU.INGUM KAVANAYEERPU PORADDANGAL NADAIPERUKINRANA. ANNAL ORU VARAYARAKKU UDPADDU.ATHANAI VIRIVUPADUTHTHA AVARKAL MUNVARUVATHILLAI.APPADI YARUM MUN VANTHAALUM ATHANAI SAAKKU POKKU KADDI THADDI KAZHITHTHU VIDUKINRANAR.EEN THAAN IVARKAL IPPADI IRUKKINRAARKALO THERIYAVILLAI.AVARKALIRRKU AVARKALAAL THAAN ELLAM NADAIPERAVENDUM ENRU ASASAI.ATHTHUDAN PERIYAPORADDANGAL SEYTHAAL THAMATHU PEYAR THERIYAVARAATHU ALLATHU THAMATHU PEYAR FRENCHKARAR MATHTHIYIL KEDDUVIDIM ENPATHATKKAKA EPPAVUM SIRIYA VADDATHTHITKULLEYE PORAADDANGAL THODARKINRANA.

IPPADIKKU
UNGAL KADDURAIYIN UNMAI THANMAIYAI UNARNTHA PULAM PEYAR THAMIZHAN

சோமி @ 3:59 AM

\\மாறிக்கொள்ளுங்கள் அல்லது மாற்றப்படுவீர்கள்\\

எண்பதுகளில் இதே போன்றதொரு வசனத்தில் வேறு சொற்களில் கேட்க்க முடிந்தது. இப்போது வசனம் இப்படி மாறியிருப்பது நல்லதும் நம்பிக்கையானதுதான்.(அது என்ன வசன் எண்ட கண்டுபிக்க நீங்கள் யோசிக்ககூட தேவையில்லை.

உண்மையில் நீங்கள் சொல்வது போன்ற செய்திகளை நானும் கேள்விப் பட்டேன்.இதுவரை காலமும் புலத்தில் நடந்த குளறுபடிகளும் குத்துவெட்டு குளிபறிப்பு துரோக முத்திரை போன்றவைகள் எமது போரட்டதின் பெரும் பலவீனங்களில் ஒன்று.பல புலமையாளர்களை போராளிகளை ஒதுங்கியிருக்கச் செய்தது.

வேறு வழியற்று சில பல சிக்கல்களை அறீந்தும் எதுவும் செய்ய முடியாமால் இருப்பதாக புலிகள் கூறியுமுள்ளனர். இதுவரை காலமும் குண்டுச் சட்டியில் நாம் குதிரை ஓட்டினோம் என்பது புலத்தில் கசப்பான உண்மைதான்.தமிழ் பத்திரிகை, வானொலி தொ.கா நடத்துவதும். துரோகிகளை மக்களுக்கும் இயக்கத்திற்க்கும் த.ஈ.தே தலைமைக்கு இனங்காட்டுவதும்தான் போராட்டமாகவும் பரப்புரையாகவும் இருந்தது. உணமையில் நாங்கள் நம்பிக்கையிழந்திருந்தோம். எனக்கு கடுமையான விமர்சனங்கள் இருந்தது அதை உடைத்து ஒரு புதிய நம்பிக்கைஅயை இளையோ போராட்டம் ஏற்படுத்தியுள்ளது.

ஊடங்களுக்கு உண்ணாவிரதம் செய்தியல்ல கலவரம்தான் செய்தி. நாங்கள் வன்முறையை விருமபவில்லை ஆனால் ஊடகங்களுக்கு அதுதானே பிடித்திருக்கிறது.

இருந்தாலும் உங்கள் எழுத்தில் கொஞ்சம் ந்தான்ம் தேவை.

வரவனையான் @ 5:21 AM

//
Anonymous said...
Very good article. Well done.

- Nathan//


Repeatuuuu..........

Anonymous @ 7:42 AM

சாத்திரி அண்ணா! வணக்கம்! தமிழ் நாட்டில் தான் கருணாநிதி தான்
இளைவர்களுக்கு வழி விடனும் என்று சொல்லி கொண்டு 55,60 வயது

ஆனா தன மகன்களை பதவியில் அமரித்துகிறார் என்றல் புலம் பெயர்ந்த்த தமிழ் மக்கள் மத்திலும் இப்படியா ஆனாள் இதற்க்காக
வறுத்த படவேண்டியது இல்லை ஏன் என்றல் கடந்த மாவிரர் உரையில்
தமிழ் ஈழா தேசிய தலைவர் குறிப்பாக இளைவர்கள் செயல்பாடுகள்
திர்ப்ப்தி அளிப்பதாக சொல்லி இருக்காரே ......................நீங்கள் உணர்ந்ததை மற்றவர்களும் உணரவேண்டும் அண்ணா .......உங்கள்
பதிவுக்கு நன்றி
நன்றி வணக்கம்
சுரேஷ் குமார்
பஹ்ரைன்

Anonymous @ 12:28 PM

ithuvarai nadathiyavarkal izhipirapukal enraal avarkalin ilaya pillaikal eppadi uyar pirappaaka irukka mudiyum ? yaar enraalum kadamai kanniyam kadduppaadu maddumey uyarvu tharum.

Anonymous @ 9:01 PM

நன்றி சாத்திரி அவர்களே, பழமை - புதுமை , முதியோர் - இளையோர், தலைமுறை இடைவெளி போன்ற விசயங்களில் தென்படும் முரண் நிலையை நடைமுறை அனுபவத்திலிருந்து சொல்லி இருக்கிறீர்கள்.

இதை அனைத்து துறைகளிலும் பார்க்கமுடியும். புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை பழைய தலைமுறை மேதைகள் எளிதில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இசையில் மாற்று முயட்சியை மேற்கொண்டால் முந்தைய தலைமுறையின் அதை வழிதவறிய முறையாக கருதுவர். நிர்வாக துறையிலும் அப்படியே. மாற்றங்களை விரும்பாத , தன்னுடைய இருப்பை தக்க வைத்துகொள்ளும் பழைய தலைமுறையினரின் விருப்பமே இதற்கு காரணம். அப்படியே மாற்றங்கள் நிகழ்ந்தாலும் , அது தங்களுடைய ஆளுமையின் கீழ் தான் நடக்கவேண்டும் என்ற தன்முனைப்பே காரணம்.

இவர்களை தாண்டி செல்வதும் ஒருவகையில் ஒரு சுதந்திர போராட்டம் தான். இதன் மூலம் பழமை மறுக்க பட்டு , புதிய வரலாறு எழுதபடுகிறது . மேலும் , பழைய ஆட்களின் நல்ல விசயங்களை மட்டும் உள்வாங்கி கொண்டு, தீய விசயங்களை திருத்திக்கொண்டு இளையோர் செயல்பட்டால் , பழைய ஆட்களே இளையோரிடம் பாடம் கற்கும் நிலை வரலாம்.

மிகுந்த நிதானத்துடன் , ஆனால் உறுதியாக கோரிக்கையை முன்வைத்தல், நேர்த்தியான ஒழுங்கு முறையில் நடந்து கொள்ளல், சாலை மறியல் போன்ற விடயங்களில் மக்களின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் செயல்பட்டு, அதே சமயத்தில் நடைமுறை வாழ்க்கைக்கு பங்கம் வராமல் சரியான கால வரையறைக்குள் முடித்துக்கொள்ளல், நமது இனத்தின் உயர்ந்த பண்பாட்டு கூறுகளை போராட்டத்தின் காட்டுதல், போன்றவை கண்டிபாக வெள்ளைகாரர்களிடம் நல்ல பயன்தரத்தக்க மாற்றாத்தை உண்டு பண்ணும்.

சிவா

தமிழ்பித்தன் @ 12:19 AM

Thanks

Anonymous @ 4:17 AM

http://www.parismatch.com/Actu-Match/Monde/Actu/La-peur-au-quotidien-des-tamouls-au-Sri-Lanka-94270/

http://www.parismatch.com/Actu-Match/Monde/Actu/Sri-Lanka-L-impuissance-de-l-Occident-94344/

http://www.parismatch.com/Actu-Match/Monde/Video/L-appel-au-secours-des-tamouls-de-France-94401/

Unknown @ 5:45 AM

மெல்லத் தமிழினி எழும்!
எங்கள் வல்லினம் தமிழர் களத்தின் சார்பில் திருநெல்வேலியில் காங்கிரசுக்கு எதிராக காலில் விழும் போராட்டம் நடத்தி வருகிறோம்...
பார்க்க..
www.aaraamthinai.blogapot.com

Anonymous @ 2:00 PM

Ippadi usuppethiye udamba rana kalam aakittaanga paa...