Navigation


RSS : Articles / Comments


ஈழம் சகோதர யுத்தம் இறுதிப்பாகம்

12:16 AM, Posted by sathiri, 13 Comments

இனி இறுதியாக சகோதர யுத்தம் பற்றி கருணாநிதி அவர்கள் அடிக்கடி அறிக்கையாக புலம்புவதன் நோக்கம் என்னவென்று பார்த்தால். அவரிற்கு உண்மையாகவே ஈழத்தமிழர் போராட்டத்தில் உண்மையான உணர்வுள்ள பற்று என்றுமே இருந்ததில்லை.உதாரணமாக ஈழ விடுதலைப்போராட்டத்தின் ஆரம்பகாலப் போராளிகளில் ஒருவரான குட்டிமணி என்பவர் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் பகுதியில் தலைமறைவாக இருந்த 1973 ம் ஆண்டு காலத்தில் இலங்கையரசின் வேண்டுகேளிற்கிணங்க குட்டிமணியை கைதுசெய்து இலங்கைக்கு நாடு கடத்த உத்தரவிட்டிருந்தார்.அதேபோல அவரும் நாடு கடத்தப்பட்டு சிறீலங்கா காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவர் சிறையிலிருந்து வெளிவந்து மீண்டும் இலங்கையரசிற்கு எதிரான போராட்டங்களை தொடர்ந்து கொண்டுடிருந்தபொழுது மீண்டும் கைது செய்யப்பட்டு சிறீலங்கா அரசினால் தூக்குதண்டனை வழங்கப்பட்டது. தூக்குத்தண்டனை வழங்கப்பட்ட அன்று அவர் நீதிமன்றத்தில் சில நிமிடங்கள் ஆற்றிய உரை அன்று ஈழத்தமிழ் இளைஞர்கள் மத்தியில் போராட்ட உணர்வலைகளை தோற்றுவித்திருந்தது.

அவர் ஆற்றிய உரையில் "" குட்டிமணியை தூக்கில் போடுங்கள் கவலையில்லை ஏனென்றால் என்னைப்போல ஈழத்தில் ஆயிரம் குட்டிமணிகள் உருவாகுவார்கள். அதேநேரம் எனது இறுதி ஆசை என்னவென்றால் என்னை தூக்கில் போட்டபின்னர் என்னுடைய கண்களை எடுத்து பார்வையற்ற ஒரு தமிழனுக்கு பொருத்தி விடுங்கள்.அந்தக் கண்கள் நாளை மலரப்போகும் தமிழீழத்தினை பார்த்து மகிழட்டும் ""என்று கூறியதற்காகவே 83ம் ஆண்டு யூலை 25 ந்திகதி சிங்கள இனவெறிக்கும்பல் அவர் இருந்த சிறை அறையை உடைத்து அவரது கண்களை தோண்டியெடுத்து ""தமிழீழமா பார்க்கப்போகிறாய் "" என்றபடி சிறைவளாகத்தில் இருந்த அன்புசெய் என்ற புத்தனின் சிலையில் ஒட்டவைத்து ஆனந்தக்கூத்தாடினார்கள்.

அடுத்ததாக 1999 ம் ஆண்டு சிறீலங்காவில் சந்திரிக்கா வின் ஆட்சியில் ஆலோசகராக இருந்த நீலன் திருச்செல்வம் என்பவரின் கொலை சம்பந்தமாக சந்தேகத்தின் பெயரில் சிறிலங்கா அரசால் தேடப்பட்டஒருவர் தமிழ்நாட்டில் சட்டப்படி எவ்வித பிரச்சனைகளும் இன்றி தகுந்த அனுமதிகளுடன் தங்கியிருந்த பொழுது சி .பி.ஜ அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டபின்னர். அவரை நாடு கடத்துவதற்கான எவ்விதசட்ட ரீதியான காரணங்களும் இல்லாத நிலையில்.அவரை இலங்கைக்கு நாடு கடத்த கருணாநிதியிடம் அனுமதி கோரப்பட்டது. கருணாநிதியும் உடனடியாக சட்டத்திற்கு புறம்பான அனுமதியினை நேரடியாகவே கடிதமூலம் வழங்கியிருந்தார்.அதன் பின்னர் இரண்டு சி.பி.ஜ அதிகாரிகள் நேரடியாகவே அவரை சிறீலங்காவிற்கு அழைத்துச்சென்று இலங்கை புலனாய்வு பிரிவினரிடம் கையளித்தனர்.

இங்கு கவனிக்கப்படவேண்டிய விடயம் என்னவெனில் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் குற்றவாளிகளை பரிமாறும் அல்லது நாடு கடத்தும் உடன்படிக்கைகள் எதுவும் சட்டப்படி இல்லை. ஆனாலும் இன்றுவரை பிரபாகரனை பிடித்தால் இந்தியாவிடம் தரவேண்டும் என்று காங்கிரஸ் காரரும் ... பிரபாகரனை பிடித்து இந்தியாவிடம் தருவோம் என்று இலங்கையரசும் எதனடிப்படையில் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள் என்று புரியவில்லை.

இந்தியா... ஈழப்போராட்ட இயக்கங்களிற்கு தன்னுடைய சுயநலத்திற்காக உதவிகள் செய்து கொண்டிருந்த பொழுது. உண்மையாகவே உணர்வுடன் அதுவும் புலிகள் இயக்கத்திற்கு அதிக உதவிகள் செய்தவர் எம்.ஜி.ஆர் அவர்கள். அவர் எவ்வித விளம்பரங்களோ ஆர்ப்பாட்டங்களோ அறிக்கைகளோ எதுவுமின்றி புலிகள் இயக்கத்திற்கு பலகோடி ரூபாய்கள்கொடுத்து உதவியது மட்டுமல்ல புலிகள் தங்கள் போராட்டத்திற்காக வேறு நாடுகளில் வாங்கும் ஆயுதங்களை பத்திரமாய் ஈழத்திற்கு எடுத்துபோவதற்கும் மறைத்து வைக்கவும் தமிழ்நாட்டின் கரையோர பகுதிகளை பாவிக்க பல உதவிகளையும் செய்துவந்தார்.

இதனையறிந்த கருணாநிதியோ தன்னுடைய அரசியல் எதிரியான எம்.ஜி.ஆரை கவிழ்க்கவும் இன்று போலவே தமிழ் நாட்டில் எழுந்திருந்த ஈழத் தமிழர் ஆதரவினை தன்பக்கம் திருப்பி ஈழத்தமிழர் அவலத்தினை தனது வாக்குவங்கியாக மாற்றத் திட்டமிட்டு தமிழீழ ஆதரவு அமைப்பு என்கிற ஒரு அமைப்பினை உருவாக்கி அனைத்து மேடைகளும் ஈழத்தமிழரிற்கு ஆதரவான அவரது அனல் கக்கும் பேச்சுக்களால் அதிரவைத்தார். அவருடைய அன்றைய அந்த அனல் கக்கும் பேச்சுக்களுடன் ஒப்பிடுகையில் இன்றை சீமானின் பேச்சுக்கள் எல்லாம் சீ இதுக்குப்போய் குண்டர் சட்டமா?? என எண்ணத்தோன்றும்.

ஆனால் எம்.ஜி.ஆரோ அன்று கருணாநியை கடைமைக்காகக்கூட கருணாநிதியை கைது செய்யவில்லை. இன்று எப்படி ஈழத்தமிழர் பிரச்சனையை தன்னுடைய சுயநலத்திறகாக பயன்படுத்துவது போலவே 1984 ம் ஆண்டு கருணாநிதி தன்னுடைய பிறந்தநாளையொட்டி ஒரு விளம்பர அரசியலிற்கு திட்டமிட்டு ஈழப்போராட்டக்குழுக்களான ரெலோ .ஈ.பி.ஆர்.எல்.எவ்.ஈரோஸ் .புளொட்.மற்றும் புலிகள் இயக்கம் ஆகியவற்றிற்கு 50 இலட்சம் ரூபாய்கள் நிதியுதவிசெய்யப்போவதாக அறிவித்துவிட்டு பத்திரிகையாளர்களையும் அழைத்துவைத்துக்கொண்டு காவலிருந்தார்.இதில் ரெலோ...ஈ.பி.ஆர்.எல்.எவ்.ஈரோஸ் என்பன ஒன்றாகவும் .புளொட் தனியாகவும் சென்று பணத்தை பெற்றுக்கொண்டனர்.புலிகள் இயக்கம் பணம் வாங்க செல்லாமல் தங்களிற்கு பண உதவிகள் தேவையில்லை உங்களின் ஆதரவே போதும்என்கிற செய்தியை மாத்திரம் கருணாநிதிக்கு அனுப்பியிருந்தனர்.அந்தச் சம்பவம் கருணாநிதிக்கு பெரும் ஏமாற்றமாகவே இருந்தது.

படத்தில் ரெலோ.சிறிசபாரத்தினம். ஈ.பி பத்மநாபா..ஈரோஸ் பாலகுமார் ஆகியோர்.

அடுத்து 1989ம் அண்டு இந்தியாவின் பொதுத் தேர்தலில் காங்கிரஸ் தோற்றகடிக்கப்பட்டு வி.பி சிங் பிரதமரானதும். இந்தியப்படைகள் இலங்கையை விட்டு வெளியேத்தொடங்கின. அதே நேரம் ராஜீவ் அரசின் கைப்புள்ளையாய் இருந்த வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜபெருமாள் இந்தியப் படைவெளியேற்றத்துடன் தன்னுடைய பதவிக்கும் அழகான ஆப்பு ஒன்று சீவப்படும் என்று தெரிந்து டெல்லிக்கும் சென்னைக்குமாய் பறந்து திரிந்து அரசியல் தவைர்களிடம் ஈழத்திலிருந்து இந்தியபடைகள்வெளியேறுவதை தடுத்து நிறுத்த முயற்சித்தார். அனால் வி.பி சிங் அவர்கள் பெருமாளின் கோரிக்கையை நிராகரித்தார்.அடுத்ததாய் கருணாநிதியிடம் ஓடியவர் இலங்கையில் புலிகளிற்கும் பிரேமதாசா அரசிற்கும் நடக்கும் பேச்சு வார்த்தையில் புலிகளிற்கு மாகாணசபை ஆட்சியதிகாரம் கிடைக்கப் போகிறது. அதில் தன்னுடைய கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சிக்கும் சரி பாதி இருக்கைகள் வாங்கித்தருமாறு கோரிக்கையை வைத்தார். அதன்படி கருணாநிதியும் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தை அவசரமாக சென்னைக்கு அழைத்து சென்னை துறைமுக விருந்தினர் இல்லத்தில் பேச்சு வார்த்தைகள் நடந்தது.

அந்தப் பேச்சு வார்த்தையில் கருணாநிதியுடன் முரசொலிமாறனும். அன்னரன் பாலசிங்கத்துடன் அவரது துணைவியார் அடேலும். யோகியும் பங்கேற்றிருந்தனர்.புலிகள் வரதராஜப்பெருமாளுடன் மாகாண சபை அதிகாரத்தினை பகிர்ந்து கொள்ளவேண்டுமென கருணாநிதிஅவர்கள் அன்ரன் பாலசிங்கத்திடம் வைத்த கோரிக்கைக்கு விளக்கமாக பதில் அளிக்கபட்டது.அதாவது மகாணசபை அதிகாரங்கள் வழங்கும் நிலைவந்தால் வடக்கு கிழக்கில் ஒரு தேர்தல் ஒன்றின் மூலமே மக்கள் தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பார்கள். அப்படியான ஒரு தேர்தலிற்கு புலிகள் இயக்கம் தயாராகி வருகின்றது்.எனவே அதனை வடக்கு கிழக்கு மக்களே முடிவுசெய்வார்கள் இந்த விடயத்தில் புலிகளால் ஒன்றும் செய்யமுடியாது என்று நிலைமையை திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.

(அதனைக்கேட்ட கருணாநிதி மிகவும் குளப்பமடைந்திருந்தார் என்று அன்ரன் பாலசிங்கம் அவர்கள் எழுதிய போரும் சமாதானமும் புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.)

இப்படி தான் சொன்னவற்றிற்கெல்லாம் புலிகள் தலையாட்டாதது கருணாநிதிக்கு கசப்பான அனுபவங்களாகவே இருந்திருக்கும்.எனவேதான் அன்று இந்திய புலனாய்வு பிரிவான றோ அதிகாரிகளின் சூழ்ச்சியினால் புலிகளுடன் முரண்பட்டு நின்றவர்களான ரெலோ. ஈ.பி.ஆர்.எல்.எவ். ..ஈரோஸ் அகிய அமைப்புக்கள் ஈழத் தமிழர்களின் எதிர் காலத்தின் நலனையும். அதற்காக போராடுகின்ற புலிகளையும் ஆதரித்து அரவணைத்து இன்று ஓரணியில் திரண்டு நிற்கின்ற இன்றைய காகட்டத்தில் கருணாநிதிமட்டும் மீண்டும் மீண்டும் சகோதரயுத்தம் செய்தார்கள் என்று திரும்ப திரும்ப சொல்லி ஓரணியில் திரண்டு நிற்பவர்களை மீண்டும் பிரித்து வைத்து மோதவிடலாமென கனவு கண்டபடி எரிந்து கொண்டிருக்கும் ஈழத்தமிழினத்தின் மீது எண்ணெய் ஊற்றிக்கொண்டிருக்கின்றார்.

ஈழம் சகோதர யுத்தம் முதற்பாகம்
ஈழம் சகோதர யுத்தம் இரண்டாம் பாகம்.

இந்தக்கட்டுரை அனைத்து உறவுகளையும் சென்றடைய உங்கள் ஓட்டின் முலம் உதவிடுங்கள் நன்றிகள்..

13 Comments

அருண்மொழி @ 1:03 AM

// 1984 ம் ஆண்டு கருணாநிதி தன்னுடைய பிறந்தநாளையொட்டி ஒரு விளம்பர அரசியலிற்கு திட்டமிட்டு ஈழப்போராட்டக்குழுக்களான ரெலோ .ஈ.பி.ஆர்.எல்.எவ்.ஈரோஸ் .புளொட்.மற்றும் புலிகள் இயக்கம் ஆகியவற்றிற்கு 50 இலட்சம் ரூபாய்கள் நிதியுதவிசெய்யப்போவதாக அறிவித்துவிட்டு //

அப்பணம் அவர் பிறந்தநாள் விழாவில் உண்டியல் மூலம் திரட்டிய தொகை. அது 2 இலட்சம்தான் ஒவ்வொரு குழுவிற்கும் 50000 ரூபாய் பிரித்து அளிக்கப்பட்டது. புலிகள் அதை வாங்க வரவில்லை.

ராஜ நடராஜன் @ 2:35 AM

அறியத் தந்தமைக்கு நன்றி.

Manikandan Neelan @ 3:55 AM

Thanks for your information. really this one help to understand the who is really supporting Tamil Eelam...

Manikandan Neelan @ 3:55 AM
This comment has been removed by a blog administrator.
Shankar @ 9:50 AM

மிக்க நன்றி. கருணாநிதி எந்த வகையில் நம்பகத்தன்மையற்றவரோ, அவருக்கு சற்றும் குறைவில்லாதவர்கள் திருமாவளவன் மற்றும் ராமதாஸ் ஆகியோர். இதோ திருமாவளவன் காங்கிரசை சகட்டுமேனிக்கு ஜனவரியில் வசைபாடினார்(அப்ப எலக்சன் தேதி தெரியாது சாரே). எனவே ஈழச் சகோதரர்கள் இவ்வாறான பொய்யர்களை நம்பாதிருக்க வேண்டுகிறேன். ஒன்று ஜெ/சு.சாமி போன்றோர் மாதிரி ஒரே எதிர்ப்பு இல்லை வைகோ போன்று மாறாத ஆதரவு. இந்த கருணாநிதிகள்,ராமதாஸ்கள்,திருமாக்கள் ஆகியோர் மதில்மேல் பூனை போன்றவர்கள். சமயத்திற்கு தகுந்தாற்போல அரிதாரம் பூசுவார்கள்.நீங்கள் இவர்களை ஈழச் சகோதரர்கள் எவ்வாறு கருதுகிறார்கள் என்பதைப் பற்றி ஒரு பதிவு எழுத வேண்டுகிறேன்.

Anonymous @ 1:14 AM

saathiri,

in 1990 LTTE requested karunanidhi to inform V.P Singh to widraw I.P.K.F. and karunanidhi did so. at that time karunanidhi was praised by LTTE. he didnt go to invite returning IPKF. Today, LTTE is scolding Karunanidhi. this clearly shows their "keel chathi puththi". saathiri. neerum nalavan thane? ummada puththiyum vambila pirantha puththi thaan.

Anonymous @ 11:06 AM

anonimous,

please dont use bad words. them there will not be any any dffrenece between them and you. all the lieas are gone now. these asholes are always support whatever Ltte did. they must ask from the people under LTTE control. those peple a spitting on LTTE. everthing, all comedies are now going to end. people are going to live peacefully without LTTE. But these bugers like saaththiri should not be allowed to come to Sri Lanak and if they come they should be treated accordingly.

Rajarajan
UK

sathiri @ 1:56 PM

//அருண்மொழி @ 1:03 AM

// 1984 ம் ஆண்டு கருணாநிதி தன்னுடைய பிறந்தநாளையொட்டி ஒரு விளம்பர அரசியலிற்கு திட்டமிட்டு ஈழப்போராட்டக்குழுக்களான ரெலோ .ஈ.பி.ஆர்.எல்.எவ்.ஈரோஸ் .புளொட்.மற்றும் புலிகள் இயக்கம் ஆகியவற்றிற்கு 50 இலட்சம் ரூபாய்கள் நிதியுதவிசெய்யப்போவதாக அறிவித்துவிட்டு //

அப்பணம் அவர் பிறந்தநாள் விழாவில் உண்டியல் மூலம் திரட்டிய தொகை. அது 2 இலட்சம்தான் ஒவ்வொரு குழுவிற்கும் 50000 ரூபாய் பிரித்து அளிக்கப்பட்டது. புலிகள் அதை வாங்க வரவில்லை.//

வரவிற்கு நன்றிகள்.. இப்பொழுதும் ஈழத்தமிழர் நிதி என்று 34 கோடிகள் சேர்திருக்கிறார் யாரிடம் கொடுக்கப் போகிறார் என்று தெரியவில்லை??

sathiri @ 3:39 PM

//Shankar @ 9:50 AM

மிக்க நன்றி. கருணாநிதி எந்த வகையில் நம்பகத்தன்மையற்றவரோ, அவருக்கு சற்றும் குறைவில்லாதவர்கள் திருமாவளவன் மற்றும் ராமதாஸ் ஆகியோர். இதோ திருமாவளவன் காங்கிரசை சகட்டுமேனிக்கு ஜனவரியில் வசைபாடினார்(அப்ப எலக்சன் தேதி தெரியாது சாரே). எனவே ஈழச் சகோதரர்கள் இவ்வாறான பொய்யர்களை நம்பாதிருக்க வேண்டுகிறேன். ஒன்று ஜெ/சு.சாமி போன்றோர் மாதிரி ஒரே எதிர்ப்பு இல்லை வைகோ போன்று மாறாத ஆதரவு. இந்த கருணாநிதிகள்,ராமதாஸ்கள்,திருமாக்கள் ஆகியோர் மதில்மேல் பூனை போன்றவர்கள். சமயத்திற்கு தகுந்தாற்போல அரிதாரம் பூசுவார்கள்.நீங்கள் இவர்களை ஈழச் சகோதரர்கள் எவ்வாறு கருதுகிறார்கள் என்பதைப் பற்றி ஒரு பதிவு எழுத வேண்டுகிறேன்.//

ஈழத்தமிழரைப் பொறுத்தவரை தமிழ் நாட்டில் யார் எப்படிவேண்டுமானாலும் அரசியலை நடத்தி சம்பாதித்துவிட்டுப் போகட்டும்.ஈழத்தமிழனை அழித்துத்தான் இந்தியா வல்லரசாகவேண்டுமென்று டெல்லியில் சிலர்அடம்பிடிக்கின்றனர். ஆனால் தயவுசெய்து எம்மை அழிக்கவோ அல்லது எம்மை அழிப்பவர்களிற்கோ உதவாமல் இருந்தாலே போதும்.அதுதான் அன்றிலிருந்து இன்றுவரை கெஞ்சிக் கேட்பது.

Anonymous @ 4:49 PM

Rajarajan,
Good joke from Colombos Tamil (you)
You can wash .. for Singaleesee or Kruna or Doglas or even Sangari, but we dont want to do .. dont

Anonymous @ 9:08 PM

anonimous...

you dont want to wash anybody's in colombo...because you are already washing foreigners for your living...so every body need not to wash..just because you are washing..wash carefully..otherwise whites dont like and will depot you..

Anonymous @ 9:48 AM

rajarajan
i think 10 months b4 u born a sinhalese moda s live as ur neighbor

u r just a fool thinkin that u r intelligent........................ i saw so many fools n wind bags like u....
bt i am encourage u n keep washing the ... of Sinhalese so real tamils(who born 2 a tamil father)
cn identify u n laugh at u...
(i wsnt use any bad words no my dear frnd)

Anonymous @ 9:54 AM

//இந்தியா... ஈழப்போராட்ட இயக்கங்களிற்கு தன்னுடைய சுயநலத்திற்காக உதவிகள் செய்து கொண்டிருந்த பொழுது...// அப்படியென்றால் அதை வாங்க மறுக்க வேண்டியதுதானே? நன்றி கெட்டவர்களே! உங்களுக்கு உதவ எண்ணி இந்தியா இழந்தது அதிகம்.