Navigation


RSS : Articles / Comments


சீனாவிடம் விடுதலைப் புலிகள் கோரிக்கை

3:11 PM, Posted by sathiri, One Comment

சீனா அரசாங்கத்திடம் தமிழ் மக்களின் நிலை தொடர்பில் ஐநாவின் பாதுகாப்புசபை கூட்டத்தில் இரண்டாவது தடைவை விவாதிக்கப்படுவதை சீனா அரசாங்கம் நிறுத்தப்போவதை பரீசீலிக்குமாறு விடுதலை புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பி.நடேசன் அவர்கள் இன்று வெள்ளிக்கிழமை கேட்டுக்கொண்டுள்ளார்.



சிறீலங்கா தமிழர்களின் இறையாண்மையை மறுப்பதோடு மட்டுமல்லாது இனஅழிவு நடவடிக்கையில் பலவேறு வடிவங்களில் முன்னெடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



நாங்கள் சீனா, ரஸ்சியா மற்றும் உலகின் வல்லாதிக்க நாடுகள் சிறீலங்கா அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் இனஅழிவு நடவடிக்கையை அசட்டை செய்ய வேண்டாம் எனவும் கோருவதாகவும் தெரிவித்துள்ளார்.



முதலில் ரஸ்சியாh பாதுகாப்புசபையில் இதுதொடர்பில் விவாதிக்க விரும்பவில்லை எனவும் பின்னர் பாதுகாப்புசபையில் சுருக்கமாக பேசப்பட்டமையும் சுட்டிக்காட்டத்தக்கது.



மருத்துவப்பொருட்கள், மனிதநேய விநியோகங்களை தடுத்தல் மற்றும் பொதுமக்கள் வாழும் வதிவிடங்களை வேண்டுமென்றே தாக்குதல் போன்றன யுத்;த குற்றச் செயல்களாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
70 மில்லியனுக்கு மேற்பட்ட தமிழ் மக்கள் தமது சொந்தங்களுக்கு ஏற்பட்டுள்ள இந்நிலைகொண்டு ஆழ்ந்த கவலை கொண்டுள்ளனர்.



விடுதலைப்புலிகள் பிரதிநிதிகள் தமிழ்மக்களின் இந்நிலை தொடர்பில் சீனா அதிகாரிகளுக்க விளக்க விருப்பமுடையர்களாக உள்ளதாகவும் சீனாவிடம் ஐநாவில் தமிழ்மக்களின்நிலை தொடர்பில் விவாதிக்கவேண்டும் எனவும் கோரியுள்ளனர்.

One Comment

கிருஷ்ணா @ 3:54 PM

கோரிக்கை நல்ல பலனைத்தர வேண்டும். அதேநேரம் ஒரு குழப்பம் சாத்திரி.. இங்கு விடுதலைப் புலிகளால் அண்மையில் நியமிக்கப்பட்ட சர்வதேச விவகாரப் பிரதிநிதியின் பாத்திரம் என்ன?