Navigation


RSS : Articles / Comments


புனித கன்னி மரியாளிற்கும் குண்டுவீச்சு

12:07 PM, Posted by sathiri, 3 Comments



கிளிநொச்சி, பரந்தன் சந்தியில் இருந்து 600 மீற்றர் தூரத்தில் முல்லைத்தீவு வீதியிலுள்ள தேவாலயத்தின் மீது (Holy Cross Convent) சிறீலங்கா வான் படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

நாளை கிறிஸ்மஸ் நடைபெறவுள்ள நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 10:30 மணியளவில் இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.

தாக்குதல் இடம்பெற்ற தேவாலயத்தின் கூரையில் பாதுகாப்பு இடங்களிற்கான செஞ்சிலுவை அடையாளம் காணப்படுகின்ற போதிலும், சிறீலங்கா வான் படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

3 Comments

தமிழ்நதி @ 7:21 PM

கிறிஸ்மஸ் என்றால் என்ன? தீபாவளி என்றால் என்ன? பேரினவாதிகளுக்கு 'வான'வேடிக்கைதான். மாதா வீழ்ந்து கிடப்பதைப் பார்க்க... என்ன சொல்வது வழக்கமான வார்த்தைகள்தான். வருத்தமாக இருக்கிறது.

sathiri @ 12:46 AM

//தமிழ் நதி saidகிறிஸ்மஸ் என்றால் என்ன? தீபாவளி என்றால் என்ன? பேரினவாதிகளுக்கு 'வான'வேடிக்கைதான். மாதா வீழ்ந்து கிடப்பதைப் பார்க்க... என்ன சொல்வது வழக்கமான வார்த்தைகள்தான். வருத்தமாக இருக்கிறது.//

சிங்களத்திற்கு தமிழ்மண்ணில் எல்லாமே எதிரிகள்தான் அதற்கு சாமி சிலையும் எதிரிதான்.

Anonymous @ 8:17 AM

உலகக் கிருத்துவ வலைத்தலங்களுக்கும்,
சர்ச் நிறுவனங்களுக்கும்
இதை அனுப்பி வையுங்கள்.
இந்தியா இன்னும் வான் படை
ஆலோசகர்களை அனுப்பி வைத்துள்ளது
வெட்கக் கேடு.