Navigation


RSS : Articles / Comments


மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு குண்டு வைத்தது புலிகளா??

10:18 AM, Posted by sathiri, 5 Comments

பலகாலங்களாக வலைப்பதிவுகளில் ஈழம் பற்றியும் விடுதலைப்புலிகளைப்பற்றி பேச்சு எழும்தோதெல்லாம் விடுதலைப்புலிகளைப்பற்றி குற்றச் சாட்டுக்களை வைப்பவர்கள் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலும் குண்டு வைத்தது புலிகள்தான் என்று தொடர்ச்சியாக எழுதி வருகின்றார்கள். ஆனால் அந்தக் குண்டினை வைத்தது TEA என்கிற தமிழீழ விடுதலை இராணுவம் என்கிற அமைப்புத்தான். இந்த அமைப்பின் தலைவராக இருந்தவர். தம்பிப் பிள்ளை மகேஸ்வரன் என்பவர். இவர் சிறீலங்காவில் காவல்த்துறையால்கைது செய்யப்படு பனாங்கொடை இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பொழுது தப்பியோடியதால் இவரிற்கு பனாங்கொடை மகேஸ்வரன் என்றும் அழைப்பார்கள்.இவரே 1984 ம் ஆண்டுமீனம்பாக்கத்திலிருந்து புறப்பட்ட ஏயார் லங்கா விமானத்திற்கு குண்டு வைப்பதற்காக திட்டம் தீட்டி ஒருவரிடம் நேரம் கணித்த குண்டு பாசலை கொடுத்தனுப்பியிருந்தார்.அந்த நபர் கொழும்பு போவதற்கு பயணபோடிங்பாஸ் எடுத்து விட்டு குண்டுப்பொதியையும் பதிவு செய்து விமானத்தில் ஏற்றிவிட்டு அவர் அங்கிருந்துவெளியேறிவிடவேண்டும்.விமானம் வானில் கிழம்பியதும் குண்டு வெடிக்கக் கூடிதாய் நேரக்கணிப்பு செய்யப்பட்டிருந்தது இதுதான் திட்டம். ஆனால் குண்டுப் பொதியுடன் உள்ளே போனவருக்கு அங்கு காவல் அதிகாரிகளை பார்த்ததும் பயத்தில் குண்டுப்பொதியை அப்படியே விட்டு விட்டு வெளியேறிவிட்டார். குண்டுப்பாசல் ஏயார் லங்கா விமானத்தில் ஏற்றப்படவில்லையென்று தெரிந்ததும் தமிழீழ விடுதலை இராணுவ அமைப்பினால் விமானநிலையத்திற்கு தொலைபேசியடித்து குண்டு எச்சரிக்கையை விடுத்திருந்தனர். ஆனாலும் குண்டு வெடித்து பலர் இறந்து போயிருந்தனர். தம்பிப் பிள்ளை மகேஸ்வரன் தற்சமயம் வேலூர் சிறையில் இருக்கிறார்.

5 Comments

Anonymous @ 9:46 PM

Not தம்பிப் பிள்ளை மகேஸ்வரன்

Thambapillai Maheswaran

sathiri @ 12:16 AM

//anonymous said
Not தம்பிப் பிள்ளை மகேஸ்வரன் //

அவரை எல்லோரும் பொதுவாக தம்பாப்பிள்ளை மகேஸஸ்வரன் என்றுதான் அழைப்பார்கள் ஆனால் இலங்கையில் காவல்த்துறை தற்றும் இராணுவம் அவரை தேடிய காலங்களில்: அவரது பெயர் தம்பிப் பிள்ளை மகேஸ்வரன் என்றே பத்திரிகைகளில் வெளியாகியிருந்தது. எனவேதான் தம்பிப் பிள்ளை என்று குறிப்பிட்டேன்.

Anonymous @ 4:06 AM

தப்பு பிள்ளை மகேஸ்வரன் என இருந்தால் பொருத்தமாக இருக்கும்.

செல்வராஜ்

வெத்து வேட்டு @ 10:14 AM

why is he in Velor Jail? any ciriminal activities?

Anonymous @ 11:10 AM

thamba pillai indru iravu 3.30 hrs india-vil erunthu naadu kadathappattaar.........08-01-2010