Navigation


RSS : Articles / Comments


ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரிடம் ஈழத் தமிழரின் பேரவலம் குறித்த விண்ணப்பம் கையளிக்கப்பட்டது.

1:55 PM, Posted by sathiri, No Comment


ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரிடம் ஈழத் தமிழரின் பேரவலம் குறித்த விண்ணப்பம் கையளிக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபையின் 60 ஆவது மனித உரிமைகள் நாளான நேற்று முன்நாள் புதன்கிழமை சிறிலங்காவில் தமிழரின் பேரவலம் குறித்த விண்ணப்பம் டென்மார்க் தமிழ் மக்களின் சார்பில் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரிடம் கையளிக்கப்பட்டது.

டென்மார்கின் சமூக லிபறல் கட்சியின் பிரமுகர் த. தர்மகுலசிங்கம் மற்றும் டென்மார்க்கின் லுங்பி பங்குத்தந்தை அல்றின் சூசைப்பிள்ளை ஆகியோர் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் கிறகம் வற்சனை புரூசல் நகரில் அமைந்துள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்து இந்த விண்ணப்பத்தை கையளித்தனர்.

கிறகம் வற்சன் பிரித்தானியாவின் மேற்கு லண்டன் லிபறல் ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், பிரித்தானியாவின் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரும், ஐரோப்பிய லிபறல் ஜனநாயக கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுத்தலைவரும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த விண்ணப்பத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

வன்னி மக்கள் கட்டாய இடப்பெயர்வுக்குட்படுத்தப்ப�
�்டு காடுகளில் மரங்களின் கீழ் ஒதுங்கி உணவு மருந்து மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் ஏதுமின்றி விடப்பட்டுள்ளனர்.

கடந்த 3 ஆம் நாள் ஒஸ்லோவில் 102 நாடுகள் இணைந்து கிளஸ்ரர் குண்டு பாவனையை தடைசெய்யும் ஒப்பந்தத்தில் கைசாத்திட்டன.

சிறிலங்கா வான்படையினர் ரஷ்ய தயாரிப்பான OFAB 500 ரக கொத்தணிக் குண்டுகளை அப்பாவித் தமிழ் மக்கள் மீது பிரயோகித்துள்ளனர்.

உணவு மருந்து மற்றும் அத்தியாவசியப் பொருட்களின்றி தவிக்க விட்டது மட்டுமன்றி இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவிய அனைத்துலக மனிதாபிமான அமைப்புக்களையும் வன்னியிலிருந்து வெளியேற்றியுள்ளது.

இந்நிறுவனங்களை வன்னியில் மீண்டும் பணிபுரிய அனுமதிக்க வேண்டும்.

வன்னியில் நடைபெறுவது சிறிலங்கா அரசு காட்டிக்கொள்வது போல் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் அல்ல. அது இன அடக்குமுறைக்கான போர்.

அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளும் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று கருதி சிறிலங்கா அரசுக்கு ஆதரவு வழங்குகின்றன.

இந்தியா, பாகிஸ்தான் சீனா போன்ற நாடுகளும் சிறிலங்காவுக்கு இராணுவ உதவிகளை வழங்குகின்றன..

தற்போது நிகழும் போர் சிறிலங்காவின் அனைத்துத் தரப்பு மக்களையும் பாதித்துள்ளது.

உடலியல் ரீதியிலும் மனவியல் ரீதியிலும் அப்பாவித் தமிழ் மக்களின் வாழ்க்கை துயரமாகியுள்ளது.

டிசம்பர் 2008 முதல் வாரத்தில் சிறிலங்கா குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவு, சிறிலங்கா நாடாளுமன்றத்தின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று உறுப்பினர்களை வெளிநாடுகளில் சுயநிர்ணய உரிமை பற்றி ஆதரவாகப் பேசியதற்காக விசாரணை நடத்தியுள்ளனர்.

இதன் மூலம் டென்மார்க் தழிழராகிய நாங்கள், தமிழீழ விடுதலைப் புலிகளால் கோரப்பட்ட சமாதானப் பேச்சுவார்த்தைகளை சிறிலங்கா அரசு தொடர்வதற்கு உங்கள் அரசு நிர்ப்பந்திக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

இலங்கையில் உடனடியானதும் நிரந்தரமானதுமான சமாதானத்தைக் கோருகின்றோம்.

இந்த சமாதானத்தை அடைவதற்காக தழிழீழ விடுதலைப் புலிகளை தமிழரின் பிரதிநிதிகள் என்றே ஏற்றுக்கொண்டுள்ளோம்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஒன்றே தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை கவனத்திலெடுத்து தொலைநோக்குடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட்டு வருகிறது.

எனவே எதுவித தீர்வும் தமிழீழ விடுதலைப் புலிகளை உள்ளடக்கியதாகவே இருக்கவேண்டும். சமாதானத்தை அடைவதற்கான ஒரே வழி விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவதே என உறுதியுடன் நம்புகின்றோம்.

மேலும் சமாதானம் தொடர்ந்தும் நிலவ கடந்த கால போர்நிறுத்த ஒப்பந்தத்தில் இருதரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிபந்தனைகள் நடைமுறைப்படுத்த வேண்டும்.

உங்கள் மூலம் சிறிலங்கா அரசுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையில் விரைந்து போர் நிறுத்தம் ஏற்படவேண்டும்.

தேவையேற்படின் நாமும் சமாதானப் பேச்சுவார்த்தையில் துணை புரிவோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No Comment