Navigation


RSS : Articles / Comments


புரிய வையுங்கள் டோண்டு சார்.

2:52 PM, Posted by sathiri, 19 Comments

புரிய வையுங்கள் டோண்டு சார்.
கீழே வருபவை நீங்கள் உங்கள் பதிவில் எழுதியவைதான்.


சிங்கள ராணுவத்தாரால் ஈழத் தமிழர்கள் கொல்லப்படுவதை இங்கு நானோ சோவோ மறுக்கவில்லை. அதற்கு முக்கிய பொறுப்பு அப்பாவி மக்களை மனிதக் கேடயமாக பயன்படுத்தும் புலிகள்தான். அதை முதலில் மனதில் வைக்கவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

அவை அப்படியே இருக்கட்டும். ஈழத்தமிழர்கள் கொல்லப்படுவதை சோ ராமசாமி மறுக்கவில்லையென்பது இருக்கட்டும் நீங்கள் மறுக்கவில்லையென்பதில் மகிழ்ச்சியே. அப்பாவி மக்களை புலிகள் கேடயமாக பயன் படுத்துகிறார்கள் என்கிற உங்களது வாதத்திற்கே வருவோம். யுத்தம் என்றால் நீங்கள் இன்னமும் பதினெட்டாம் நுற்றாண்டு காலப்பகுதியிலேயே இருந்து கருத்தெழுகிறீர்கள் என்பது புரிகிறது .முதலில் ஒரு யுத்தம் பற்றி எழுதமுன்னர் குறைந்தபட்ச இராணுவ அல்லது ஆயுத அறிவை தெரிந்து கொண்டு எழுதத் தொடங்குவது நல்லது இல்லையெனில் பேசாமல் ஏதாவது மொக்கை போட்டு விட்டு போவது நல்லது. புலிகள் மக்களை கேடயமாக பயன்படுத்தகிறார்கள் என்றே வைத்துக்கொள்வோம். இன்றைய செய்திகளை நீங்கள் தொடர்து படிப்பீர்கள் என நம்புகிறேன். எல்லாச் செய்திகளையும் கவனியுங்கள் .எந்தச் செய்திகளிலும் புலிகள் மற்றும் சிறீலங்கா இராணுவத்திற்கும் நேரடியாய் எற்பட்ட நேரடி மேதல்களில் புலிகளின் செய்தி மட்டுமல்ல நீங்கள் உங்கள் உள்ளங்கைகளில் தாங்கி நிற்கும் இலங்கை இராணுவச் செய்திகளில் கூட வருவதில்லை. தமிழ்ப்பொது மக்களின் இழப்புச் செய்திகள் வான் தாக்குதல்களினாலும். எறிகணைத்தாக்குதல்களினாலும்தான் ஏற்படுகின்றது. ஒரு இடத்தினை இலங்கை இராணுவம் தாக்கி விட்டு முக்கிய புலிகளின் இலக்கு தாக்கப்பட்டுள்ளது என செய்தி வெளியிடும்பொழுது அங்கு இறந்தவர்கள் மட்டும் ஏன் பொது மக்களாக இருக்கிறார்கள். இலங்கை இராணுவத்தின் எறிகணைகள் வீழ்ந்து வெடிக்கிற இடங்களில் இறக்கிறவர்களும் பொதுமக்களாகத்தான் இருக்கிறார்கள். உங்கள் விவாதத்தின்படி மக்களை புலிகள் கேடயமாகப் படுத்தினால் ??( கேடயம் என்பதன் பொருள் உங்களிற்கு நான் புரியவைக்கத் தேவையில்லை. )புலிகளினுடனான நேரடி மோதல்களில் அப்பாவி தமிழர்கள் இறக்கமல். வான் தாக்குதல்களிலும் எறிகணைத்தாக்குதல்களிலும் இறப்பதன் காரணம். சிறீலங்கா போர் விமானங்கள் குண்டு வீசும் பொழுது புலிகள் அப்பாவித் தமிழர்களை வானத்தை நோக்கி தூக்கிப்பிடித்து வான் குண்டுகளைத்தடுக்கிறார்களா?? சிறீலங்கா இராணுவத்தின் எறிகணைகள் சீறி வரும்பொழுது ஒவ்வொரு அப்பாவித் தமிழனையும் வானத்தை நோக்கி வீசி எறிகணைகளை தடுப்பதால் அவர்களை கேடயமாக்கி தாங்கள் தப்பித்துக்கொள்கிறார்களா??ஈழத்தமிழன் என்கிற முறையிலும் இந்தியா எனக்கும் இராணுவப்பயிற்சி தந்தது என்கிற முறையிலும் எனக்கும் சிறிது இராணுவ மற்றும் ஆயுத அறிவு உள்ளது என்கிற முறையில்தான் கேட்கிறேன் புரியவைக்கவும் நன்றி.

19 Comments

Anonymous @ 4:14 PM

புரியாதவர்களுக்குப் புரிய வைக்கலாம்.இவர்களின் நடிப்பை வெளிக்கொண்ரத்தான் இவர்களுடைய இனத்தை வெளிக்கொண்ர வேண்டியுள்ளது.
இந்திய பாகிஸ்தான் சண்டையிலே இப்படிப் பொது மக்கள் கொல்லப் பட்டனரா,விமானக் குண்டுகளால்.
6000க்கும் மேற்பட்ட குண்டுகள் குறி பார்த்து மக்கள் குடியிருப்புக்கள்,பள்ளிகள்,மருத்துவ மனைகள்...இன்னும் மூடி மறைக்கப் பார்ப்பது மனிதத் தன்மையா?
அதனாலேதானே கேட்கிறார்கள்,காஷ்மீரத்துப் பண்டித பார்ப்பனர்க்கு வக்காலத்து வாங்கும் பார்ப்பான்,ஈழத்தில் சாவோர் பார்ப்பனர்களாகவும்,அங்கு கற்பழிக்கப் படுவோர் பார்ப்பனத்திகளாகவும் இருந்தால் இப்படி எழுதுவாரா?

பாண்டித்துரை @ 4:39 PM

டோண்டு ராகவன் ப்ளிஸ் முடிஞ்சா சோ- கிட்ட சொல்லி ஒரு டிக்கெட் போட்டு ஈழம் சென்று ஆழமா பார்த்துட்டு வந்து சொன்னேன்னா பேஸா - யிருக்கும்

பாண்டித்துரை @ 4:41 PM

அநாதத்தைய பின்னூட்டங்களை தவிர்க்கவும் நண்பா

dondu(#11168674346665545885) @ 4:55 PM

பொது மக்கள சண்டை நடக்கும் இடங்களை விட்டு வேறிடம் செல்வதிலிருந்து தடுக்கும் புலிகள் செயல்பாடுதான் மக்களை கேடயமாக பயன்படுத்தி கொள்கிறார்கள் என்று கூறப்படுகிறது. யுத்தம் என்று வந்து விட்டால் குண்டு போடும்போது இது தவிர்க்க முடியாது அல்லவா.

ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவை மட்டுமா கொன்றார்கள் புலிகள்? Collateral damage என்று கேள்விப்பட்டதில்லையா நீங்கள்?

தற்கால யுத்தம் என்றால் என்னவென்று எனக்கும் தெரியும். இப்போதைக்கு நான் புலிகள் மீதுதான் அதிகம் தவறு காணுகிறேன்.

Anonymous @ 5:53 PM

டொண்டு எண்ட கிழட்டு போக்கிரி மாங்கா மடயனுக்க்கு தேவையில்லம என்னத்துக்கு பிரபலம் தேடி குடுக்கிறீங்க. அந்த கிழடு சுய தம்பட்ட மன நோய் பிடித்த பிசாசு...

Anonymous @ 6:56 PM

நல்லா கேட்டீங்களே ஒரு கேள்வி.

அந்த யோக்கியமணிக்கு இது தெரியாதா என்ன?
தூங்கற மாதிரி நடிக்கறவங்கள எழுப்பமுடியாது சார்.

அந்த கும்பல் இப்படித்தான் நூற்றுக்கனக்கான வருசங்களை தமிழ்நாட்டுல ஓட்டிக்கிட்டிருக்கு.

அவனுங்கள பத்தி தெரிஞ்சிக்கிட்டா போதும். புறந்தள்ளி போய்க்கட்டே இருக்கனும். அவனுங்க பொழப்பே அதுதான்.
அவனுங்க கிட்டே நேர்மை நாணயத்தை எதிர்பார்க்க முடியாது.

sathiri @ 11:09 PM

//donduபொது மக்கள சண்டை நடக்கும் இடங்களை விட்டு வேறிடம் செல்வதிலிருந்து தடுக்கும் புலிகள் செயல்பாடுதான் மக்களை கேடயமாக பயன்படுத்தி கொள்கிறார்கள் என்று கூறப்படுகிறது. யுத்தம் என்று வந்து விட்டால் குண்டு போடும்போது இது தவிர்க்க முடியாது அல்லவா.

ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவை மட்டுமா கொன்றார்கள் புலிகள்? Collateral damage என்று கேள்விப்பட்டதில்லையா நீங்கள்?

தற்கால யுத்தம் என்றால் என்னவென்று எனக்கும் தெரியும். இப்போதைக்கு நான் புலிகள் மீதுதான் அதிகம் தவறு காணுகிறேன்.
//
மக்களை வேறிடம் போகாமல் புலிகள் தடுத்தால் இன்றுவரை யுத்தத்தினால் ஒருஇலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இடம்பெயர்ந்து தமிழகத்திற்கு வந்திருக்கிறார்களே அவர்களிடம்ஒவ்வொருவராய் போய் கேட்டுப்பாருங்கள் யாராவது புலிகள் தங்களை வெளியேறவிடாமல் தடுத்தார்களாஎன்று சொல்வார்கள். அடுத்ததாய் இலங்கையரசு தங்களிடம் வாருங்கள் என்று வருந்தியழைத்தும் எவரும் போகவில்லையே போகவும் மாட்டார்களென்று இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களே சொல்கிறார்களே . சரி இவைகளை விடுவோம். கிழக்கில் புலிகளை ஒட்டுமொத்தமாய் துடைத்தழித்துவிட்டோம் என்று அங்கு தேர்தலும் வைத்து பிள்ளையான் முதலமைச்சராகவும் வந்து விட்டார். ஆனால் கடத்தல் கொள்ளை அதுமட்டுமல்ல ஒரு வாரத்தில் முப்பதிற்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்படுவதாக செய்திகளும் மனிதவுரிமை அமைப்பின் அறிக்கைகளும் சொல்கிறதே புலிகளை அழித்து அவர்களே இல்லாத இடத்தில் யார் மக்களை கேடயமாக்குகிறார்கள்.

Thamizhan @ 6:46 AM

சுனாமியின் போதும் சரி,இப்போதைய சுனாமியான வெள்ளப் பெருக்கின் போதும் சரி மக்களுக்கு உடனே உதவி செய்தவர்கள் புலிகளின் அமைப்புக்கள் தான்.சண்டையும் போட்டுக் கொண்டு மக்களின் மருத்துவ,மற்ற தேவைகளையும் செய்யும் குழுக்களையும் திட்ட மிட்டு ஏற்படுத்திச் செயல் பட்டு வருகின்றனர்.
மக்கள் ஆதரவு இல்லாமல் 30 ஆண்டுகள் இவ்வளவு பெரிய ராணுவத்துடன் போராட முடியுமா?
உலக மனித நேய அமைப்புக்களின் கண்டனங்கள் எதனால் சிங்கள அரசிற்கு த்ரப்படுகின்றன்?
இது சோமாரிகளுக்காகச் சொல்லப் படவில்லை,தமிழ் ஏமாளிகளுக்காகச் சொல்லுகிறோம்.
ஈழத் தமிழர் படு கொலையை ஆதரிப்போர் ஈனத் தமிழர்களும்,மாமாக்களுந்தான்.

Anonymous @ 7:59 AM

அமரர் ராசீவ் காந்தி மரணத்தை பேசி நீலி கண்ணீர் வடித்து ஒப்பாரி வைக்கும் 'டோண்டு வகைறாக்களே'[ அதே போல் காந்தியை சுட்டு கொன்ற கோட்சே வை பற்றியோ அன்னை இந்திரா காந்தியின் சாவை பற்றியோ யாரவது பேசுவீர்களா? தியாந்து சிங்கு என்ற சீக்கிய இனத்தவனால் தான் அன்னை இந்திராகாந்தி சுடப்பட்டார் கொல்லப்பட்டார் என ஒரு அவாளுக்கோ பேச இந்த நாட்டில் தைரியமோ திரணியொ உண்டா? வீடு தேடி வந்து உன் பயிரை இறைத்துவிடுவான் சீக்கியன்!

அவனுடைய மனைவி நாடாளுமன்ற உறுப்பினராக வைத்து அழகு பார்ப்பதன் காரணம் என்ன? மன்னிப்பு கேட்பதென்ன? தமிழன் இளிச்சவாயன் என்பதாகும்..

தமிழா இன உணர்வு கொள்! அது தெரியவில்லை என்றால் அடுத்தவனை பார்த்தாவது கற்றுக் கொள்!
ஒரு சீக்கியனை பார்த்து ஒரு மராத்தியனை பார்த்து உன்னை வருடம் தோறும் இன்ஸ்டால் மெண்டில் அடிக்கும் கன்னடனை பார்த்து.. இவ்வளவு ஏன்?
சோமாறி+பொந்து ராம்+செயலலிதா+சப்புற மணிசாமி +மணி ஆட்டும் ஐயர் இவர்களுடைய ஒற்றுமையை பாராட தமிழா! நம்மால் மட்டும் ஒற்றுமையாக இருக்க முடியாதா?

Anonymous @ 10:44 AM

Mr.Dondu,
why do you and your people always function as the mouthpiece of sinhala govt and it's army?
the sinhala govt says that tigers are using people as human shield,you immediately follow the same line and just repeat what they say.not only in this instance ,in other times as well,you ,jayalalitha,cho and etc,etc just echo what the sinhala govt says.
you say it is inevitable people gets killed duringbombing. Don't you have any sympathetic bones in your body?even today a 5 month old baby was killed by sinhala army shelling.
why don't you and others like cho etc form a fan club and call it 'sinhala Rajapakshe Rasikar Manram '.
I just don't understand you people.you speak tamil,you live in tamil nadu.your ancestors lived in tamil nadu,you make money in tamil nadu,but you appear to hate anything associated with tamil language or tamil people.How is it possible?
don't you have natural love towards tamil language,tamil nadu and tamil people wherever they live.after all your ancestors have been living in tamil nadu for thousands of years.

sathiri @ 1:47 PM

//பாண்டித்துரை @ 4:41 PM

அநாதத்தைய பின்னூட்டங்களை தவிர்க்கவும் நண்பா//

வணக்கம் பாண்டித்துரை அநாகரீகமான பின்னூட்டங்களை நீக்கியிருக்கிறேன்.

Anonymous @ 2:18 PM

சாத்திரி
உங்களை போன்றவைர்களுக்கு ஒரு பெரிய வேண்டுகோள்,
தயவு செய்து டோண்டு போண்றவர்களுக்கு உண்மையை புரிய வைக்க மெனக்கெடவேணாம்.
அந்த நேரத்தையும் காலத்தையும் வேறு உபயோகமான(உதா: உன்மை நிலவரம் தெரியாமல் இந்த கேடுகெட்ட கூட்டத்தின் பின் போகும் சில நல்ல உள்ளங்களுக்கு புரிய வைக்கலாம்)

அதேமாதிரி இலங்கையில் வாழு(டு)ம் தமிழ் மக்களுக்கும் ஒரு செய்தியை ஆணி அடித்தார் போல புரியவைக்கவேண்டும். தமிழ்நாட்டில் என்ன கோரிக்கை எழுந்தாலும், எங்கே என்ன நடந்தாலும் இந்திய அராசாங்கம் என்றுமே இலங்கை தமிழர்களுக்கு எந்த நல்லதையும் செய்யாது. எனவே இவர்களை நம்பாமல் (ஏன் எந்த உலக நாடுகளையும் நம்ப வேண்டாம்) ஒற்றுமையாக/வலியமையாக போராடுவதை தவிர வேறு வழி இல்லை தன்மானமாக வாழ்வதர்க்கு. இல்லையேல் பொன்செகா சொன்னது போல் உரிமை மறுக்கபட்ட\இரண்டாம் தர குடிமக்களாக வாழலாம். இங்கே நான் போராட்டம் என்பது ஆயுதம் எந்துவதை மட்டும் குறிக்கவில்லை அது போக அனைத்து உலக ஈழ தமிழர்களிடம் ஒற்றுமையை வலியுறுத்த வேண்டும்


இப்படிக்கு

உங்கள் துயரங்களுக்கு குரலை கூட அதிகம் குடுக்கமுடியமால்,
சில கேடுகேட்ட நாய்கள் சிங்கள அரசு போடும் எலும்பு துண்டுகளுக்காக தங்கள் பத்திரிக்கைகள்/மீடியாக்கள் மூலம் விஷம் கக்குவதையும் சகித்துகொண்டு,
தினமும் மனம் புழுங்கும் ஒரு,
கையிலாகத,
ஒரு இந்தியத் தமிழன்.

Unknown @ 12:01 AM

டோண்டு,
கிழக்கில் சென்ற வாரத்தில் இரண்டே நாட்களில் 25 தமிழர்கள் குடும்பத்தோடு வெட்டியும் சுடப்பட்டும் கொல்லப்பட்டர்களே. அவர்களும் புலிகளால் கேடயமாக பயன்படுத்தப்பட்டவர்களா????

Anonymous @ 7:13 AM

நம்ம ஊர்ல ஒரு பழமொழி சொல்லுவாங்க:'காது கேட்காத குருட்டு நாயும் குலைக்கத்தான் செய்யும்'.



சொன்ன‌து ச‌ரியாப் போச்சு. அது த‌ன்பாட்டுக்கு கிடைக்கிற‌த‌ திண்டுட்டு வாந்தியெடுத்திட்டுப் போகும்.

Anonymous @ 9:32 AM
This comment has been removed by a blog administrator.
sathiri @ 11:22 AM

டோண்டு பற்றிய அனானியின் அநாகரீகமான கருத்து நீக்கப்பட்டுள்ளன.

dondu(#11168674346665545885) @ 7:42 PM

அனானி என்னை குறித்து போட்ட அநாகரிக பின்னூட்டத்தை நீக்கியதற்கு நன்றி. ஆனால் என்னைப் பற்றி நீங்கள் இட்ட இந்த அநாகரிக பதிவுக்கு என்ன சொல்லப் போகிறீர்கள்? பார்க்க: http://sathirir.blogspot.com/2008/12/blog-post.html
நீங்கள் இம்மாதிரியெல்லாம் அநாகரிகமாக போடும் பதிவுகளுக்கு மேட்சாகத்தான் அந்த அநானி பின்னூட்டம் இட்டிருக்கலாம் அல்லவா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous @ 8:34 AM

சாத்திரியின் கேள்வி -

//இன்றுவரை யுத்தத்தினால் ஒருஇலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இடம்பெயர்ந்து தமிழகத்திற்கு வந்திருக்கிறார்களே //

//கிழக்கில் புலிகளை ஒட்டுமொத்தமாய் துடைத்தழித்துவிட்டோம் என்று அங்கு தேர்தலும் வைத்து பிள்ளையான் முதலமைச்சராகவும் வந்து விட்டார். ஆனால் கடத்தல் கொள்ளை அதுமட்டுமல்ல ஒரு வாரத்தில் முப்பதிற்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்படுவதாக செய்திகளும் மனிதவுரிமை அமைப்பின் அறிக்கைகளும் சொல்கிறதே//

சேவியர் கேள்வி -

//டோண்டு,
கிழக்கில் சென்ற வாரத்தில் இரண்டே நாட்களில் 25 தமிழர்கள் குடும்பத்தோடு வெட்டியும் சுடப்பட்டும் கொல்லப்பட்டர்களே. அவர்களும் புலிகளால் கேடயமாக பயன்படுத்தப்பட்டவர்களா????//


தமிழன் கேள்வி -

//சுனாமியின் போதும் சரி,இப்போதைய சுனாமியான வெள்ளப் பெருக்கின் போதும் சரி மக்களுக்கு உடனே உதவி செய்தவர்கள் புலிகளின் அமைப்புக்கள் தான்.சண்டையும் போட்டுக் கொண்டு மக்களின் மருத்துவ,மற்ற தேவைகளையும் செய்யும் குழுக்களையும் திட்ட மிட்டு ஏற்படுத்திச் செயல் பட்டு வருகின்றனர்.
மக்கள் ஆதரவு இல்லாமல் 30 ஆண்டுகள் இவ்வளவு பெரிய ராணுவத்துடன் போராட முடியுமா?//

அனானி கேள்விகள் -

//Mr.Dondu,
why do you and your people always function as the mouthpiece of sinhala govt and it's army?
the sinhala govt says that tigers are using people as human shield,you immediately follow the same line and just repeat what they say.//

//I just don't understand you people.you speak tamil,you live in tamil nadu.your ancestors lived in tamil nadu,you make money in tamil nadu,but you appear to hate anything associated with tamil language or tamil people.How is it possible?
don't you have natural love towards tamil language,tamil nadu and tamil people wherever they live.after all your ancestors have been living in tamil nadu for thousands of years.//

___________________________________


இதற்கெல்லாம் பதில் எங்கே டோண்டு????

sathiri @ 9:32 AM

//அனானி என்னை குறித்து போட்ட அநாகரிக பின்னூட்டத்தை நீக்கியதற்கு நன்றி. ஆனால் என்னைப் பற்றி நீங்கள் இட்ட இந்த அநாகரிக பதிவுக்கு என்ன சொல்லப் போகிறீர்கள்? பார்க்க: http://sathirir.blogspot.com/2008/12/blog-post.html
நீங்கள் இம்மாதிரியெல்லாம் அநாகரிகமாக போடும் பதிவுகளுக்கு மேட்சாகத்தான் அந்த அநானி பின்னூட்டம் இட்டிருக்கலாம் அல்லவா?

அன்புடன்,
டோண்டு ராகவன்//

டோண்டு இராகவன் ஜயாவிற்கு வணக்கங்கள்.தாங்கள் நான் தங்கள்மீது அநாகரீகப்பதிவிட்டுள்ளதாக கூறி நான் இட்ட சுயஇன்ப டோண்டுவும் கையைத்தட்டிவிட்ட பெயரிலியும் என்கிற பதிவின் இணைப்பினை இங்கு இணைத்து இந்த அநாகரீகப்பதிவிற்கு என்ன சொல்லப்போகிறீர்கள் என்று ஒரு வினாவினை வைத்துள்ளீர்கள். நிற்க அந்தப் பதிவிலேயே நீங்கள் வந்து அதில் அநாகரீகமான கருத்து அல்லது அநாகரீகமான வரிகள் எவை என்று சுட்டிக்காட்டுமிடத்து நானும் அவற்றிற்கான என்னுடைய விளக்கல் பதிலையும் இடவசதியாக இருக்குமென்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி வணக்கம்.