7:06 AM, Posted by sathiri, No Comment
இந்தவார ஒரு பேப்பரில் வெளிவந்தது
யெர்மனியில் வசிக்கும் எழுத்தாளர் நாடகநடிகர் வில்லிசை கலைஞர் இப்படி பல கலைத்துறையிலும் காலடி பதித்திருக்கும் சோழியன் என்கிற ராஜன் முருகவேல் அவர்களுடன் எம்.எஸ்.என். மெசஞ்சரில் நடந்த ஒரு உரையாடல் அதனை பதிந்துஉங்களிற்கும்போட்டிருக்கிறேன்.
சாத்திரி. வணக்கமண்ணோய் எப்பிடி சுகம்
சோழியன். வணக்கம் நல்ல சுகம் `ஹம் அம்மன் கோயில் தேருக்கு போயிருந்தன் அங்கை உந்த ஒரு பேப்பர் மற்றது ஒரு றேடியொ காரரும் வந்திருந்தவை
சாத்திரி. ஓமண்ணை கேள்விப்பட்டனான் அவங்கள் இப்பிடித்தான் எங்கையாவது அன்னதானம் சக்கரை தண்ணி ஊத்தினம் எண்டு கேள்விப்பட்டால் எத்தினையாயிரம் கிலோ மீற்றர் எண்டாலும் பிளைற் பிடிச்சு போடுவாங்கள் ஊர்ப்பழக்கம் திருத்த ஏலாது.
சோழியன். கி..கி..கி.. சரி அங்கை ஒரு பேப்பர் கிடைச்சது படிச்சன் கன பக்கத்தோடை நல்லா இருந்திது அது எங்கடை சிற்றிக்கும் தொடந்து கிடைக்கிற மாதிரி ஏதாவது வழி பண்ணஏலாதோ??
சாத்திரி. அண்ணோய் அதுக்கு நீங்கள் தான் ஏதாவது ஒரு வழி பண்ணவேணும் முடிஞ்சளவு எல்லா இடமும் அனுப்பினம் இதுக்குமேலை நீங்கள் ஏதாவது உதவினால் உங்கடை சிற்றி பிறீமனுக்கும் தொடந்து வர பண்ணலாம்.
சோழியன். அதுக்கு என்ன செய்யவேணும்
சாத்திரி. முடிஞ்சா அங்கை சபேசனொடை கதைச்சு பாருங்கோ ஏதாவது வழி பண்ணலாம் ஆளை தெரியும் தானே
சோழியன். ஓ நல்லா தெரியும் முந்தி நான் அவரின்ரை இடத்துக்கு பக்கத்திலை லிவகசனிலைதான் இருந்தனான்.
சாத்திரி. லிவகுசனிலையோ ?? அப்ப உங்களுக்கு மானிப்பாய் ராசுவை தெரியுமோ நாடகமெல்லாம் நடிக்கிறவர்.
சோழியன். ஓ நல்லா தெரியும் நாங்கள் யெர்மன் வந்த புதிசிலை ஒரே காம்பிலைதான் இருந்தனாங்கள் சோசல் காசு எடுக்கிற நாளிலை இரண்டு பேரும் ஒரே கொண்டாட்டம் தான்
சாத்திரி. ஓ அவர் என்ரை மாமா தான் அப்ப சிறி எண்டவரை தெரியுமா அதே காம்பிலை தான் இருந்தவர்.
சோழியன். ஓ அவரையும் தெரியும் யெர்மனியிலையே முதல் முதல் 85ம் ஆண்டு தமிழ் முறைப்படி நடந்த கலியணம்எண்டா அவரின்ரை கலியாணமாதான் இருக்கும். ஊரிலை பல வருசமாகாதலிச்சு இஞ்சை வந்துதான் செய்தவை.பிள்ளையும் நல்ல பிள்ளை
சாத்திரி. ம் தெரியும் அங்கை ஒரு எட்டு வருசத்துக்கு மேலை காதலிச்சு இரண்டு வீட்டு காரருக்கும் விருப்பம் இல்லாததாலை பெரிய சண்டையெல்லாம் நடந்தது
சோழியன்.. நாங்கள் காம்பிலை இருந்த எல்லாருமா சேந்துதான் செய்து வைச்சனாங்கள் . அந்த நேரம் இஞ்சை குத்து விளக்கு தேங்காயெல்லாம் கிடைக்காதுதானே. நான்தான் இரண்டு ஆஸ்ரேயை எடுத்து கீழை கம்பியாலை கட்டி அலுமினிய பேப்பர் எல்லாம் சுத்தி குத்துவிள்கு மாதிரி செய்து கொழுத்தி கலியாணத்தை நடத்தினாங்கள்.அதை மறக்கேலுமா
சாத்திரி. ஓ அப்ப தேங்காய் எப்பிடி செய்தனியள்
சோழியன். அது யாரோ எங்கையோ தேடிபிடிச்சு வாங்கியந்தான். பிறகு அவையளுக்கு இரண்டு பிள்ளையளும் பிறந்து சந்தோசமாய் இருந்திச்சினம் பிறகு நானும் சிற்றி மாறி தூரமா வந்தா பிறகு தொடர்புகள் இல்லாமல் போச்சுது.
சாத்திரி. அவைக்கு இரண்டு பிள்ளையளில்லை மூண்டு பிள்ளையள் ஆனால் இப்ப டிவோஸ் இரண்பேரும்
சோழியன். சே உண்மையாவோ இல்லை பகிடியோ
சாத்திரி. உண்மையாதான் அண்ணை அது நடந்து ஒரு அஞ்சு வருசமாகிது
சோழியன். என் தம்பி இரண்டும் காதலிச்சு எவ்வளவு கஸ்ரபட்டு இஞ்சைவந்து கலியாணம் செய்து இருந்ததுகள் பெடியனும் நல்ல பெடியன். என்ன நடந்தது??
சாத்திரி. ஓமண்ணை எட்டு வருசம் காதலிச்சு உறவுகளை எதிர்த்து ஊரைவிட்டு வந்து கலியாணம் செய்து பதினாறுவருசம் குடும்பம் நடத்தி மூண்டு பிள்ளையளையும் பெத்து கடைசியிலை அந்த பிள்ளையளை வளக்கிறதாலை நடந்த பிரச்சனையிலை இப்ப பிரிஞ்சு போச்சினம்.
சோழியன். ஒண்டும் விளங்கேல்லை
சாத்திரி. உங்களுக்கு தெரியும்தானே பெடியன் கொஞ்சம் கண்டிப்பான ஆள் பிள்ளையளை கண்டிக்கிறதிலை தாய்க்கும் தகப்பனுக்கும் நடந்த சின்ன சின்ன பிரச்சனையளை பிறகு வந்து சேந்த சொந்தங்களும் அந்த பிரச்சனையளை ஊதி பெருப்பிச்சு போட்டினம்.
சோழியன்..அடடடடா உந்த சில செந்தங்களுக்கு இதுதான் வேலை புருசன் பெண்டாட்டி பிரச்னையை அவையை தீர்க்க விடுறேல்லை அதுக்கை புகுந்து ஏதாவது செய்து போடுவினம்.பிள்ளையளின்ரை எதிர்காலத்தை பற்றி யோசிக்கிறேல்லை
சாத்திரி. உண்மைதான் பெட்டையின்ரை பக்கம் சிலர் பிள்ளையளைஇஞ்சை அடிக்க ஏலாது நீ வேலைக்கு போறாய் காசு இருக்கு கார் இருக்கு அதோடை பாசையும் தெரியும் ஏன் புருசனுக்கு பயபிடுறாய் எண்டு உருவேத்த பெடியனின்ரை பக்கம் நீ ஆம்பிளை என்னவும் செய்யலாம் எண்டு ஏத்திவிட கடைசியா வீணான வீம்பாலை கோட்டடி வாசல்லை கதை கிழிஞ்சு போச்சுது
சோழியன். கேக்க கவலையாதான் இருக்கு
சாத்திரி .எனக்கும்தான் கவலை நானும் முடிஞ்சளவு முயற்சி பண்ணி பாத்தன் இரண்டு பேரையும் கோபத்தை விட்டு ஒரு மணித்தியாலம் மனம் விட்டு கதைக்கபண்ணினா ஏதாவது நல்லது நடக்குமெண்டு ஆனால் இரண்டு பேருமே தங்கடை வறட்டு கெளரவத்தை காப்பாத்துறதிலை பிள்ளையளை மறந்திட்டினம். இப்ப கடைசியா அவையின்ரை மன சாட்சி எண்டு ஒண்டு இருக்கும் தானே அதாலை சொந்தம் சினேகிதம் எண்டு எவையின்ரை தொடர்பும் இல்லாமல் எங்கையோ ஏதோ ஒரு மூலையிலை வாழ்ந்து கொண்டிருக்கினம்.
சோழியன். கல கலப்பா கதையை தொடக்கி இப்பிடி கவலையிலை முடிச்சு போட்டீர் சரி மனிசி சாப்பிட கூப்பிடுறா பிறகு சந்திப்பம்
சாத்திரி. சரியண்ணை மீண்டும் சந்திப்பம்
எனக்கு ASIA வேணும்
1:41 PM, Posted by sathiri, 3 Comments
தலைப்பை மட்டும் படிச்சிட்டு நீங்களும் ஆளாளுக்கு எனக்கு அமெரிக்கா வேணும் ஜரோப்பா வேணும் ஆபிரிக்கா வேணும் எண்டு அடம் பிடிக்க கூடாது கதையை ஒழுங்கா படியுங்கோ. சைக்கிள் என்றால் கொஞ்சம் வயசான ஆக்களுக்கு உடைனை நினைவுக்கு வாறது றலி.றாம். கம்மர். பிறகு ஏசியா.லுமாலா.றொபின்சன். சிங்கர் . இப்பிடி பல ரகம் இருக்கு. என்னட்டையும் ஊரிலை 80 களிலை படிக்கிற காலத்திலை சைக்கிள் என்கிற பெயரிலை ஒரு சிங்கர் சைக்கிள் இருந்தது இது ஒரு இந்தியா தயாரிப்பு.
80களில் தான் யப்பான் தயாரிப்பான ஏசியா சைக்கிள் சில தொழில் நுட்ப மாற்றங்களுடன் பாரமற்ற இலகுவான ஒரு கலப்பு உலோகத்தால் செய்யபட்டு பின்பக்க வீல் சின்னதாகவும் அத்துடன் மற்றைய சைக்கிள் ரயர்களை விட காற்றின் உராய்வைகுறைக்கும் வகையில் ரயர் அகலம் குறைந்ததாக செய்ப்பட்டு இலங்கையில் அறிமுகமாகியது.இந்த சில மாற்றங்களால் இந்த சைக்கிள் மற்றைய சைக்கிள்களை விட கொஞ்சம் வேகமாக ஒடும்.இது இளையவர் மத்தியில் வெகு வேகமாக ஒரு இடத்தை பிடித்துகொண்டிருந்தது. எனது நண்பர்கள் சிலரும் ஏசியா சைக்கிளை வாங்கி அதில் ஒரு றோலிங் பெல்லையும் பூட்டி மானிப்பாய் மகளிர் பாடசாலை விட்டதும் சைக்கிள் களில் போய்கொண்டிருக்கு மாணவிகளை கலைத்து கொண்டு போய் அவர்களிற்கு முன்னால் றோலிங் பெல்லை அடித்தபடி சர்ர்ர்ர்.....எண்டு பிறேக் அடிக்கவும் பெட்டையளும் திடுக்கிட்டு ஆஆஆ...எண்டு கத்திபோட்டு "சரியான குரங்குகள்" எண்டு திட்டவும் அந்த திட்டை ஒரு மகானின் வாயிலிருந்து வந்த வாழ்த்தைபோல நினைத்து பிறவி பெரும்பயனை அடைந்தது போல இளைஞர்களிற்கு ஒரு மகிழ்ச்சி.இவர்களை பேலவே நானும் றோலிங்பெல்பூட்டி சர்ர்ர்...எண்டு பிறேக்கடிச்சு குரங்கு எண்டு திட்டு வாங்க மனம் தவியாய் தவிச்சது.
ஆனால் என்ரை சிங்கர்சைக்கிள் அதுக்கு தடையாய் இருந்தது காரணம் சைக்கிளின் பாரத்தை குறைத்தால் வேகமாக ஓடும் எண்டு என்னுயிர் நண்பன் இருள்அழகன்(பட்டப்பெயர்தான்) சொன்னதை நம்பி நானும் மக்காட் செயின்கவர்.பெல்.டைனமோ.கெட்லைற் எல்லாத்தையும் கழட்டி அரை விலைக்கு வித்து கோயில் திருவிழாவிலை ஜஸ்பழம் வாங்கி குடிச்சிட்டன்.அதனாலை எப்பிடியும் ஒரு புது ஏசியா வாங்க அம்மாவை அனுசரணையாளராக்கி அப்பாவிடம் தூது அனுப்பிக்கொண்டிருந்தேன்.ஒரு நாள் நண்பன் இருள்அழகனே புது ஏசியாவில் வந்து எனக்கு முன்னால் சர்ர்ர்....எண்டு பிறேக் அடித்தான்.அதுக்கு மேலையும் என்னாலை பொறுக்க ஏலாமல் நானே நேராக களத்தில் இறங்கிஅப்பாவிடம் கேட்டு விடமுடிவுசெய்துஅப்பாவிடம் போய் " அப்பா எனக்கு எசியா சைக்கிள்வாங்கி தாங்கோ" என்றேன்.
என்னை மேலும் கீழுமாக பாத்து விட்டு "ஏன் இப்ப இருக்கிற சைக்கிளுக்கு என்ன அதுக்கும் இரண்டு சில்லு பெடல் ஒரு காண்டில் இருக்கு உழக்கினால் ஓடும்தானே" என்றார் இது எங்களுக்கு தெரியாதாக்கும் என்று மனதில் நினைத்தபடி" அதில்லையப்பா என்ரை சினேதமெல்லாம் ஏன் இவன் இருள்அழகன் கூட ஏசியா வாங்கிட்டான் எனக்கு இந்த சைக்கிள்ளை பள்ளிகூடம் போக வெக்கமா கிடக்கு" என்றவும் மற்றவனை பாத்து எல்லாம் செய்ய வெளிக்கிடாதை எத்தினை பேர் பள்ளிகூடத்துக்கு நடந்து வாறாங்கள் அப்ப நீயும் அவங்களை மாதிரி நாளையிலை இருந்து நடந்து போ "என்று விட்டு போய்விட்டார்.தோல்வி என்கிற வார்த்தை எனது அகராதியிலேயே இல்லையென்று சொன்ன நெப்போலியன் ரஸ்யாவில் தோத்து போய் பிரான்ஸ் திரும்பியபோது என்ன மன நிலையில் இருந்திருப்பானோஅதே மன நிலையில் நானும் தலையை தொங்க போட்டபடி அடுத்ததாய் ஒரு முடிவுக்கு வந்தேன்(நெப்போலியன் வந்து தன்ரை மன நிலையை உன்னட்டை சொன்னவனா எண்டு கேக்க கூடாது)
இனிமேல் வெளியிலை எங்கைபோனாலும் சைக்கிளை பூட்டாமல் விட்டால் எப்பிடியும் யாராவது களவெடுத்துகொண்டு போவாங்கள்.பிறகு அதேசாட்டாக வைத்து புது ஏசியா வாங்கி விடலாமெண்டு நினைச்சு சைக்கிளை பூட்டாமலே விட்டு பாத்தன். ஆனால் யாருமே தொட்டு கூட பாக்கேல்லை.ஒருநாள் நண்பன் என்னட்டை டேய் இண்டைக்கு சங்கானை ஞானவைரவர் கோயில் பொங்கல் ரிவியிலை படம் போடுறாங்களாம் வாறியா போய் பாத்திட்டு வருவம் எண்டான்.அந்தகாலகட்டம் தான் ஊரிலை உந்த ரி.வி வந்த புதுசு எனக்கு ஆசையாய்தான் இருந்தது ஆனால் இரவிலை திரியவும் பயம் காரணம் பொலிஸ் ஆமிதிடீரெண்டு ரோந்து வருவாங்கள் அம்பிட்டா பிடிச்சு கொண்டு போடுவாங்கள் சில நேரம் வெடியும் விழும்.ஆனாலும் ஆமி பொலிசின்ரை ரோந்து எப்பிடியும் இரவு 11 மணிக்கு பிறகுதான் வருவாங்கள் நாங்கள் முதல் படத்தை பாத்திட்டு 10 மணிக்கெல்லாம் வந்திடலாமெண்டு இருள் அழகன் தந்த தைரியத்திலை இரண்டு பேருமா போய் வைரவர் கோயில்லை புக்கையையும் வாங்கி சாப்பிட்டபடி முதல் படத்தை பாத்தாச்சு ஆனால் இரண்டாவதாய் கமல் நடிச்ச புது படம் ஒண்டு போட்டாங்கள் இரண்டு பேருக்கும் வெளிக்கிட மனமில்லை ஒருத்தரையெருத்தர் பாத்தபடி சரி இதையும் பாத்திட்டு போவம் நாளைக்கு பள்ளி கூடத்திலை வகுப்பிலை நித்திரையை கொள்ளலாம் எண்டு நினைச்சு அதையும் பாத்திட்டு வெளிக்கிட ஒரு மணியாச்சுது.றோட்டிலை ஒருதரும் இல்லை பயமாகவும் இருந்தது.
வாகனங்கள் ஏதாவது வருதா எண்டு பாத்தபடியே சைக்கிளை மிதித்தபடி கட்டுடை வயல்வெளிக்கு வந்து விட்டோம் இந்த வயல் வெளியை கடக்கிறதக்கிடையிலை ஆமி வந்திட்டாங்கள் எண்டால் கதை கந்தல். வெளிக்குள்ளாலை எங்கையும் ஓட ஏலாது பிடிச்சு கொண்டு போடுவாங்கள் அதாலை வயல்வெளியை வேகமா கடக்க வேணும் எண்டு நினைச்சு சைக்கிளை வேகமாக மிதித்தோம். என்னை விட இருள்அழகன் சில மீற்றர் தூரம் முன்னுக்கு பேய் கொண்டிருந்தான் பாதி வெளியை கடந்தபோதுதான் பின்பக்கமா பெரிய வெளிச்சம் தெரிஞ்சுது திரும்பி பாத்தோம். ஆமிதான்.கன வாகனம் வந்து கொண்டிருந்தது.டேய் கெதியா மிதியடா ஆமி வாறான் எண்டு கத்தினபடி நண்பன் வேகத்தை கூட்டினான்.
அந்த வயல்வெளி முடிவில் இரண்டு வீடு தள்ளி ஒரு ஒழுங்கை வரும் அதுக்கை இறங்கினால் தப்பிடலாம் என நினைத்து நண்பனிடம் டேய் வாற ஒழுங்கையிலை திருப்பு என்று கத்தியபடி நானும் முடிந்தளவு வேகமாய் மிதித்தேன்.எனக்கு முன்னால் போய்கொண்டிருந்த நண்பன் என்னை பரிதாபமாய் பாத்தபடி ஒழுங்கையில் இறங்கி மறைந்து விட்டான்.இன்னும் சில மீற்றர் தூரத்தில் தான் ஒழுங்கை ஆமியும் நெருங்கிகொண்டிருந்தான்.என்னுடைய பலமெல்லாத்தையும் திரட்டி எழும்பி பெடலை மிதித்தேன் கால் வியர்வையில் செருப்பு வழுக்கி நடு பாரில் பலமான ஒரு அடி. சைக்கிளை எழும்பி மிதிக்கும் போது கால் வழுக்கினால் எங்கை அடி விழும் எண்டு அடி வாங்கின அனுபவ பட்ட அத்தனை ஆண்களுக்கும் தெரியும். அடிவயித்தை ஒரு கையால் பொத்திபிடிக்க சைக்கிள் தட்டுதடுமாறி ஒழுங்கை வழைவில் விழுந்து போனேன்.
ஆனாலும் சைக்கிளை தூக்கி திருப்பவும் ஓட நேரம் காணாது வாகனங்கள் நெருங்கி கொண்டிருந்தன.அந்த ஒழுங்கையில் ஒரு பக்கம் பெரிய தண்ணிவாய்க்கால் ஒண்டு இருந்தது அந்த வாயக்காலின் இரண்டு பக்கமும் பெரிசா வளந்திருந்த கோரை புல்லுக்கை புகுந்து படுப்பம் எண்டு நினைத்த போதுதான் ஒரு வீட்டு வேலியில் வளைஞ்சு நிண்ட பூவரசு கண்ணில் பட ஓடிப்போய் பாஞ்சு பூவரசு மரத்திலை ஏறி வேலியை தாண்டி அந்த வளவுக்குள்ளை பாஞ்சு ஒரு அடி எடுத்து வைச்சிருப்பன் கால் தடக்கி நிலை தடுமாறி தொம்மெண்டு தண்ணிக்குள்ளை விழுந்து தத்தளிச்சு மேலை வந்து பாக்கதான் நான் அந்த வளவு கிணத்துக்குள்ளை விழுந்து போனன் எண்டு விழங்கிச்சுது.
நல்ல வேளை நீந்த தெரிஞ்சதாலை தப்பிட்டன்.கிணத்து சுவரிலை படிக்கல்லை பிடிச்சடி கொஞ்ச நேரம் நிண்டன் வாகனங்கள் போற சத்தம் கேட்டுது.கிணத்துக்காலை வெளியாலை வந்து மெல்ல வேலியாலை எட்டிப்பாத்தன் ஒரு அசைவும் இல்லை வேலியை திரும்ப பாஞ்சு றோட்டுக்கு வந்து பாத்தன் ஆமி போட்டான் ஆனால் என்ரை சைக்கிளை காணேல்லை அவங்கள் தூக்கி கொண்டு போட்டாங்கள்.அடுத்த நாள் அப்பாவிட்டை நடந்த விசயத்தை சொன்னன் ஆனால் கோயிலுக்கு பொங்கலுக்கு போனது மட்டும் தான் படம் பாத்ததை இல்லை.அடுத்தநாள் பின்னேரம் அப்பா "டேய் வெளிக்கிடு உனக்கு சைக்கிள் வாங்க யாழ்ப்பாணம் ரவுணுக்கு போட்டு வருவம்" எண்டார் எனக்கு சந்தோசத்தில் என்னைச்சுற்றி ஆயிரம் இலையான்கள்.(சந்தோசத்திலை பட்டாம் பூச்சிதான் பறக்க வேணும் எண்டு சட்டமா??)சைக்கிள் கடைக்குள்ளை போனதும் அப்பா சைக்கிள் கடை காரரிடம் விலை குறைஞ்சதா நல்லதா ஒரு சைக்கிள் வேணும் என்றவும்.
கடை காரர் விலை குறைஞ்சதெண்டா அந்த பக்கம் சிங்கர். லுமாலா சைக்கிள் இருக்கு போய் பாருங்கோ எண்றார். எனக்கோ மீண்டும் நெப்போலியன்.... மீண்டும் ரஸ்யாவில்.... சே வேண்டாம் எதுக்கு உங்களை வெறுப்பேத்துவான் கதையை முடிக்கிறன். எனக்கு கோபமும் அழுகையுமா வரவே தலையை தொங்க போட்டபடி கடைக்கு வெளியே வந்து நிக்கவும் அப்பா என்னிடம் வந்து " ஏன் உனக்கு சைக்கிள் வேண்டாமோ??"என்றார். அப்பாவை அப்பாவியாக பாத்தபடி அப்பா எனக்கு ஏசியா தான்வேணும் என்றவும் சரி சரி வா வாங்கி தாறன் என்றபடி கடைக்கு உள்ளே போனார். என்னைச்சுற்றி மீண்டும் ஆயிரம் இலையான்கள் உண்மையாகவே. பக்கத்தில் கரும்பு சாறு விற்று கொண்டிருந்தவன் கையை அசைத்ததால் கரும்பு சக்கையில் இருந்த இலையான்களே அவை .
மறந்த நாள்
2:44 PM, Posted by sathiri, 2 Comments
ரெலிபோன் மணிஅடித்த சத்தத்தில் நல்ல நித்திரையில் இருந்த நான் திடுக்கிட்டு எழும்பி தட்டி தடவி ரெலிபோனை எடுத்து காதில்வைத்தபடி அனுங்கிய குரலில் கலோ என்றோன் மறு பக்கம் 'கலோ தம்பி 'அவ்வளவுதான் கட்டாகி விட்டது நேரத்தை பார்த்தேன் அதிகாலை 5 மணி ரெலிபோனில் நம்பரும் விழவில்லை இது ஊரிலை இருந்து அம்மான்ரை போனாத்தான் இருக்கும் நித்திரை தூக்கத்திலை சத்தமும் விழங்கேல்லை. பாதி தூக்கத்தில் கண்ணை திறக்காமலே யாரப்பா போனிலை என்றாள் மனிசி. யாழ்ப்பாணத்திலை இருந்து அம்மா போலை கட்டாயிட்டுது என்றேன்.
ம்...என்னபடி மற்றபக்கம் பிரண்டு படுத்து கொண்டாள்.திரும்ப போன் அடிக்கும் என பாதி தூக்கத்தில் கண்ணை மூடியபடி எதிர்பார்த்தேன். அடிக்கவில்லை சரி அம்மா ஏதும் அவசரத்திற்கு அடிச்சாவோ தெரியாது போனை தூக்கி கொண்டு போய் கோலுக்கை நிண்டு ஒருக்கா அடிச்சு பாப்பம் என்று நினைத்து.எழும்பி நடக்க வல கால் சின்ன விரல் பாதி திறந்திருந்த கதவிலை படாரெண்டு அடிபட்டு நெட்டி முறிஞ்ச சத்தமும் கேட்டது.அம்மா... என்று மெல்ல முனகியவாறு லைற்றை போட்டு பாத்தன் பாதிநகம் பிய்ந்து இரத்தம் கசிந்தது.அதோடை நித்திரையும் முறிஞ்சு போச்சுது. மெதுவாய் பிய்ந்த நகத்தை வெட்டிவிட்டு ஒரு பிளாஸ்ரரை சுத்தி கொண்டு. போனை அடிச்சன் போனில்"ஒப அமத்த அங்கய பற்றிக்சாரய நமத "யாரது சிங்களத்தி கதைக்கிறாள் என்ன ஒண்டும் விழங்கேல்லை எண்டு யோசிக்கதான் நீங்கள் அழைத்த இலக்கத்தை அடைய முடியவில்லை என்று தமிழிலை சொல்லிச்சிது.
ஒரு பத்து நிமிசம் அடிச்சு பாத்தன் திருப்ப திருப்ப அதையே சொல்லி கொண்டிருந்தது. கால் வலியோடை இப்ப சாதுவா தலையும் வலிக்கிற மாதிரி இருந்திது.காலங்காத்தாலை எழும்பியிருந்து திருப்ப திருப்ப கேட்க இது என்ன சுப்பிர பாதமா எண்டு நினைச்சு சரி ஏதும் அவசரமெண்டா திருப்பி எடுப்பினம் தானேஎன்று நினைச்சபடி போய் திரும்ப படுத்தன். நித்திரை வரேல்லை கட்டிலிலை அங்கை இங்கை பிரண்டபடி கொஞ்ச நேரத்தாலை நித்திரையா போனன். திடீரெண்டு மனிசி பதறியபடி என்னை அடிச்சு எழுப்பிச்சிது. என்னப்பா நான் வழைமை மாதிரி ஆறு மணிக்கு அலாரம் வைச்சனான் அடிக்கேல்லை ஏழுமணியா போச்சுது நீங்களே அலாரத்தை நிப்பாட்டினது அய்யோ எனக்கு வேலைக்கு நேரம் போட்டுது எழும்புங்கோ இனி பஸ் பிடிச்சு போக ஏலாது என்னை காரிலை கொண்டு போய் விட்டிட்டு வாங்கோ என்றபடி அவசரமாய் குளியலறையில் நுளைந்தாள்.
நான் தான் காலைமை போன் எடுக்கிற அவசரத்திலை மணிக்கூட்டு அலாமை மாறி அமத்தி போட்டன் போலை என்றபடி எழும்பி போய் இரண்டு தேதண்ணியை போட்டு ஒண்டை குடிக்கவும் வழைமை போலை வயிற்றை கலக்கியது ரொய்லற்றுக்கை குந்தவும் மனிசி ரொய்லற் கதைவை தட்டி "என்னப்பா என்ன செய்யிறியள்??" எண்டாள்.
பொறு நல்ல படம் ஒண்டு போகுது பாக்கிறன் குழப்பாதை.
உங்களுக்கு இந்த அவசரத்திலையும் நக்கல் எனக்கு தெரியும் நீங்கள் உதுக்குள்ளை போனால் ஒரு பேப்பரை முழுசா படிச்சு முடிச்சிட்டு தான் வெளியாலை வருவியள் எங்கை என்ன செய்யிறதெண்டு தெரியாத மனிசன் கெதியா வாங்கோ நேரம் போட்டுது.
பின்னை ரொய்லற்றுக்கை இருக்கிற மனிசனிட்டை கதவை தட்டி என்ன செய்யிறியள் எண்டா என்னத்தை சொல்ல.பெரும் பணக்காரனிலை இருந்து பிச்சை காரன் வரை நிம்மதியா கொஞ்ச நேரம் இருக்கிற இடம் இதுதான் இதுவும் அவசரமெண்டா என்ன செய்ய. என்றவாறு வெளியில் வந்து வெளிக்கிட்டபடி தேத்தண்ணி போட்டு வைச்சனான் குடிச்சனியா?
உங்களுக்கென்ன 10 மணிக்கு வேலை நல்லா மூசி மூசி நித்திரை கொண்டிட்டு ஆறுதலா எழும்பி போகலாம் எனக்கு 8 மணிக்கு வேலை. வேண்டாம் நேரம் காணாது இருக்கட்டும் பின்னேரம் வந்து சூடாக்கி குடிக்கிறன்.
எட போட்டு வைச்ச தேதண்ணியை குடி எண்டு சொன்னதுக்கு ஏனப்பா கோவிக்கிறாய் சரி சரி வா எனறபடி சப்பாத்தை போட குனிந்து காலை பார்த்தேன்.அடிபட்ட சின்ன விரலும் வீங்கி
எனது வலக்காலில் இரண்டு பெருவிரல்கள் இருந்தது.சப்பாத்து போட முடியாத அளவுக்கு வலி ஒரு மாதிரி சமாளிச்சு சப்பாதை போட்டு கொண்டு வெளியில் லிப்ற் இருக்குமிடத்திற்கு வந்தேன். அதன் கதவில் ஒரு கடதாசியில் " இது வேலை செய்யவில்லை " என்று எழுதி ஒட்டியிருந்தது. நான் மனிசியை பார்க்க பிறகென்ன பாக்கிறியள் அதுதான் எழுதி ஒட்டியிருக்கெல்லோ வேலை செய்யாதெண்டு
கெதியா படியாலை இறங்குவம் எண்றபடி மனிசி இறங்க தொடங்க நானும் பினாலை. 4 ம் மாடியிலிருந்து படிவழியாக கால் வலியெடுக்க தாண்டி தாண்டி இறங்கி கொண்டிருக்க.மனிசி என்னை திரும்பி பாத்துஏனப்பா தாண்டுறியள்??
இல்லையப்பா வாழ்க்கையிலை என்ன கஸ்ரம் வந்தாலும் தாண்ட பழகவேணும் எண்டு எனக்கு சின்னவயசிலை என்ரை அம்மம்மா சொல்லி தந்தவா அதுதான் தாண்டுறன்.
இப்ப என்னை வேலையிடத்துக்கு காரிலை கொண்டு போய் விட சொன்னது பெரிய கஸ்ரமோ
அய்யோ அதில்லையப்பா காத்தாலை கதவு காலிலை அடிச்சு போட்டுது அதுதான் தாண்டுறன் சரி சரி நீ நட என்றபடி மனிசியை வேலையிடத்தில் கொண்டு போய் விட்டு விட்டு நேரத்தை பார்த்தேன் 8.30 எனக்கு 10மணிக்குதான் வேலை. திரும்ப வீட்டிற்கு போய் போக நேரம் காணாது. சப்பாத்து இறுக்க காலும் வலி கூடிகொண்டே போக சிற்றிக்குள்ளை(நகரமத்தி) போய் செருப்பு கடையிலை
ஒரு செருப்பு வாங்கி போட்டால் நல்லது பிறகு அங்கையிருந்து அப்பிடியே கைவே (அதி வேக வீதி)எடுத்து வேலைக்கு போகலாம் என நினைத்து சிற்றிக்குள்ளை போய் செருப்பு கடையடிக்கு போட்டன் ஆனால் கார் விட இடம் கிடைக்கேல்லை சரி ஒடிப்போய் ஒரு செருப்பை எடுத்து கொண்டு ஒடியாறதுதானே எண்டு நினைச்சு காரை எமேஜென்சி சிக்னலை போட்டு நடை பாதையிலை விட்டிட்டு ஓடிப்போய் கடைக்குள்ளை புகுந்தன்.
கால்வலி மாறும் மட்டும் நாலைஞ்சு நாளைக்கு போட்டிட்டு எறியிறதுதானே எதுக்கு விலையான செருப்பு வாங்குவான் என்று நினைத்து 9.90யுரோக்கு ஒரு செருப்பை வாங்கி கொண்டு ஓடியந்து பாத்தன் அதுக்கிடையிலை பொலிஸ்காரன் வந்து 30யுரோ தண்டம் எழுதிவைச்சிட்டு போய்கொண்டிருந்தான். சரி என்ன செய்யிறது 39.90யுரோக்கு செருப்பு வாங்கினது எண்டு நினைச்சு கொள்ளுவம் என்று நினைத்தபடி காரை கிளப்பினேன் நான் நின்ற இடத்திலிருந்து எனது வேலையிடம் ஒரு 50 கி்.மீ தூரம் வரும் கைவேயிலை போனால் அரை மணித்தியாலத்திலை போயிடலாம் எனவே காரை கைவேயில் ஏத்தி ஒரு 10 கி. மீ தூரம் ஒடியிருப்பன் முன்னால் போன வாகனங்கள் எல்லாம் எமெஜென்சி சிக்னலை போட்டபடி மெதுவாக ஓடி பின்னர் அப்படியே வீதியில் எல்லாம் அசையாமல நின்று விட்டன.
சரி கிழிஞ்சுது போ ஏதோ விபத்து பேலை காரை கைவேயிலை திருப்பி கொண்டா ஓட ஏலும் கொஞ்ச நேரத்திலை ஓட வெளிக்கிட்டா சரி. நேரத்தை பார்த்தேன் மணி 9.30 ஆகியிருந்தது சரி என்ன நடந்திருக்கும் எண்டு றேடியொவிலை TRAFIC F.M கேட்டா தெரியும் என நினைத்து சி.டி யிலை போய் கொண்டிருந்த "எங்கே செல்லும் இந்த பாதை " தமிழ்பாட்டை நிறுத்தி விட்டு TRAFIC F.M மை போட்டேன் அதில் "குட்பாய் மை லவ்வர் குட்பாய் மை பிறெண்ஸ்" என்று பாட்டு போய் கொண்டிருந்தது.
அட போய் தொலையடா இப்ப செய்தியை போடுவியா என்று நினைக்க பாட்டை நிறுத்தி செய்தி போனது பெரிய லொறி ஒண்டு விபத்திற்குள்ளாகி வீதியிலை குறுக்கை பிரண்டு போய்கிடக்கு அதலைதான் 10 கி.மீ தூரத்துக்கு வாகன நெரிசல் என்று அறிவிச்சாங்கள்.அட அந்த லெறி றைவருக்கு என்ன நடந்திருக்கும் பாவம் காயப் பட்டானா?? அல்லது போயிட்டானா என்று ஒரு நல்ல பாவப்படும் சிந்தனை கூட எனக்கு வரேல்லை உடைன நான் நினைச்சன் அட பிரண்டதுதான் பிரண்டான் பாதையிலை ஒரு ஓரமா பிரண்டிருக்க கூடாதா.
நடு றோட்டிலை கவிண்டு இப்ப எனக்கு வேலைக்கும் போக ஏலாமல் போட்டுது என்று நினைச்சபடி சரி முதலாளிக்கு போன் அடிச்சு விபரத்தை சொல்லுவம் என்று நினைச்சபோததான் நான் காலை அவசரத்தில் கைதொலைபேசியை கையை விட்டு விட்டு வந்தது ஞாபகத்தக்கு வந்தது. இனியென்ன போய் முதலாளியும் தாறதை வாங்குவம் என்றபடி எறும்பை விட மெதுவாக காரை ஓடிக்கொண்டிக்க என்ரை கார் கணணி பேசியது "உங்கள் வாகனத்தில் எரிபொருள் குறைந்தளவே உள்ளது " அப்பதான் திடுக்கிட்டு பார்த்தேன் மஞ்சள் லைற் எரிந்து கொண்டிருந்தது.
இப்ப எதுவுமே செய்யிற மாதிரி இல்லை சாதாரணமா ஓடினால் இன்னுமொரு 10 கி.மீ லை ஒரு பெற்றொல் செற் இருக்கு தப்பிடலாம் ஆனால் இப்பிடி ஊர்ந்து கொண்டு போனால் நடு றோட்டிலைதான் நிக்கவேணும் எதுக்கும் கடைசி லைனை பிடிச்சு ஓடினால் பெற்றோல் முடிஞ்சு கார் நிண்டாலும் அப்பிடியே கரையிலை நிப்பாட்டலாம் எண்டு நினைச்சு ஒரு மாதிரி கடைசி லைனுக்கு வந்திட்டன் ஆனால் நேரம் 10 மணியையும் தாண்டிவிட்டது அரை மணித்தியாலத்திலை ஒரு கி.மீ தூரம்தான் ஓடியிருப்பன் கார் மீண்டும் கதைத்தது " உங்கள் எரி பொருள் தீர்ந்து விட்டது இயந்திரத்தை நிறுத்தவும்" என்று இறுதியாய் கதைத்தது் சரி நான் நினைச்சபடி நடு றோட்டுத்தான் இண்டைக்கு.
காரை ஓரமாய் நிறுத்தி விட்டு அருகிலிருந்த S.O.S போனில் அழைத்து விபரத்தை சொன்னேன்.நிங்கள் நிற்கின்ற பகுதியில் வாகன நெரிசலாய் இருப்பதால் பாதை தெளிவானதும் உதவியாளர் எரி பொருளுடன் வருவார் என்று சொல்லி கார் என்ன கலர் அதின்ரை நம்பர் பெற்றோலா டீசலா என்ற விபரம் எல்லாம் எடுத்து விட்டு நன்றி வணக்கம் சொன்னார்கள். 11.30 தாண்டிவிட்டது எந்த வாகனமும் அசையவில்லை வெய்யில் ஏற ஏற தண்ணி தாகமும் எடுத்தது தண்ணி போத்தல் ஏதாவது இருக்குமா என்று கார் டிக்கியைபோய் திறந்து பார்தேன் ஓயில் கான் தான் இருந்தது. இதே ஊராய் அல்லது இந்தியாவாய் இருந்தால் செய்தி கேள்வி பட்டதும் இளனி சோடா ஏன் தோசை மசாலை வடை கூட கொண்டந்து விக்க தொடங்கியிருப்பாங்கள் இது கண்டறியாத வெளி நாடு ஒண்டும் இல்லை நடு றொட்டிலை காய வேண்டிகிடக்கு எண்டு நினைச்சன்.
ஒரு மாதிரி 11.30மணியளவிலை றோட்டு கிளியராகி பெற்றொலும் வந்து வேலைக்கு போய் முதலாளியிட்டை பம்மினபடி மன்னிப்பு கேட்டு நடந்ததை நடிச்சு காட்டி காலவலியோடை வேலையையும் முடிச்சிட்டு பின்னேரம் வீட்டை வந்து விரலிலை இரந்த பிளாஸ்ரரை களட்டிஎறிஞ்சிட்டு குளிப்பம் எண்டு குளியலறைக்கை புகுந்து தண்ணியை திறந்திட்டு தலையை நீட்ட வீட்டு போன் விடாமல் அடிச்சிது அட ஆரெண்டு பாப்பம் எண்டு துவாயை எடுத்து சுத்தி கொண்டு படுக்கையறைக்கு ஓடியந்தன் மீண்டும் அதே கதவு அதே இடத்தில் அச்சு பிசகாமல் படாரெண்டு அடித்தது. அய்யோ என்றபடி வாயில் வந்ததையெல்லாம் திட்டி கதவை எட்டி உதைந்து விட்டு போனை எடுத்து கலோ என்றேன் மறு பக்கம் அம்மா
" தம்பி காத்தாலை இருந்து உனக்கு அடிச்சு கொண்டேயிருக்கிறன் லைன் கிடைக்கேல்லை இண்டைக்கு உன்ரை பிறந்த நாள் அல்லோ அததான் வாழ்த்து சொல்ல அடிச்சனான் பிறந்த நாள் வாழ்த்துகள் எப்பிடி பிறந்த நாள் நல்லா போச்சுதோ "
ஓமம்மா அந்த மாதிரி போச்சுது என்று சொல்லி கொஞ்ச நேரம் கதைத்து விட்டு போனை வைத்தேன். அப்போதுதான் தெரியும் காத்தாலை போன் வந்ததிலை இருந்து நடந்த குளப்பத்திலை எனக்கு இண்டைக்குஎன்ரை பிறந்தநாள் எண்டதே மறந்து போச்சு.மீண்டும் போய் குளித்த விட்டு வந்து மீண்டும் கால் விரலில் ஒரு பிளாஸ்ரரை ஒட்டிகொண்டு கொஞ்ச நேரம் படுக்கலாமென நினைக்க மனிசி வேலை முடிந்து வந்து கதவை திறந்தபடி "என்னப்பா இண்டைக்கு உங்கடை பிறந்த நாளெல்லோ நான் உங்களுக்கு ஒரு சேட்டும் வாங்கி வைச்சிருந்தனான் காலைமை நேரம் பிந்தினதாலை தர ஏலாமல் போச்சுது இந்தாங்கோ போட்டு பாருங்கோ" என்று சேட்டை நீட்டியபடி சரி காலைமை காலிலை ஏதோ அடிச்சதெண்டனிங்களல்லோ இப்ப எப்பிடியிருக்குஎன்றாள் நானும் சேட்டை போட்டு பார்த்தபடி" பட்ட காலிலேயே படும்" எண்டவும் மனிசி ஒன்றும் புரியாமல் என்னை பாத்தபடி இந்த மனிசன் எப்பவும் இப்பிடித்தான் நான் ஒண்டு கேட்டா தாணெண்டு சொல்லும் என்றபடி தொலை காட்சியை போட்டாள்.
புலிக்காச்சல்
11:49 AM, Posted by sathiri, 4 Comments
புலிக்காச்சல்
புலிக்காச்சல் இதுவும் எலிக்காச்சல் பிளேக் கோழிகாச்சல் குனியா மாதிரி இதுவும் ஒரு காச்சல் தான் இதன் தோற்றம் இலங்கையில் புலிகள் ஆயுத போராட்டம் தொடங்கிய காலத்திலேயே இந்த காச்சலும் இலங்கையில் தேற்றம் பெற்று பின்னர் தமிழ்நாடு ஊடாக இந்தியா விரலும் பரவி இன்று அவுஸ்ரேலியா தொடக்கம் கனடாவரை பரவியிருக்கிறது.இது தானாகவும் தொற்றி கொள்ளும் மற்றது பரம்பரையாகவும் இது பரவும் ஆனால் மிக அபூர்வமாக இலட்சத்தில் ஒருவரே இந்த நோயால் பாதிக்கபடுகிறார்கள். சாதாரணமாக காச்சல் வருபவர்கள் எல்லோரும் வைத்தியரிடம்தான் போவார்கள் ஆனால் புலிகாச்சல் வந்தவர்கள் மட்டும் காவல்துறையினரிடம் போவார்கள்.
சரி இந்த காச்சலால் பாதிக்கபட்வர்கள் அல்லது பாதிக்கபட்டவர்களால் நிகழ்ந்த சம்பவங்கள் சிலதை பார்ப்பதே இந்த கட்டுரையின் நோக்கம். அண்மையை சில செய்திகளை பார்தால் சிலரிற்கு புலிகாச்சல் உச்சத்தில் எறியிருக்கிறது.உதாரணமாக ஒரு செய்தி அ.தி.மு.க. தலைவி ஜெயலிதாவிற்கு post card மூலம் புலிகள் மிரட்டல் இப்படி எல்லா ஊடகங்களிலும் பரபரப்பான செய்தி. இந்தியாவில் அவனவன் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற சொல்லி வட்டத்தை பிடித்து மாவட்டத்தை பிடித்து எம்.எல்.ஏ எம்.பி என்று கால் கடுக்க காத்து நின்று அதிகாரிகளிற்கு குடுக்கிறதை குடுத்து ஒரு மனுவை எல்லா கையெழுத்தோடையும் தயார் பண்ணி கொண்டு போய் முதல்வரிடம் குடுத்தாலும் அது அடுத்தவரிற்கு தெரியாமல் குப்பை கூடையிலையோ அல்லது கிடப்பிலையோ போய்விடும்.
ஆனால் யாரோ ஒரு பொழுது போகாத போக்கற்றவன் ஒரு 50 சத post card லை புலி எண்டு எழுதி முன்நாள் மதல்வரிற்கு அனுப்பினது மூலை முடுக்கெல்லாம் செய்தியா பரவிட்டுது. அது மட்டுமா தெழிலதிபரிற்கு தெலைபேசியில் மிரட்டல். துறைமுகத்தை தரைமட்டமாக்க போகிறோம் என்று மிரட்டல்.மீனவர்களை வைத்து ஒழிச்சு பிடிச்சு விழையாட்டு என்று இது இந்தியாவிலை இந்த காச்சலாலை பாதிக்கபட்டவையின்வை செயற்பாடு என்றால் புலத்திலை இந்த காச்சல் பிடிச்சஒரு சிலர்.அண்மையில் பிரான்சின் பொதுதேர்தல் நடந்து அதில் வலது சாரி கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தபொழுது சோசலிச கட்சியின் தோல்வியை தாங்க முடியாத பலர் பிரான்சின் முக்கிய நகரங்களிலும் பாரீசிலும் ஆர்பாட்டங்களை நடாத்தினர் அது கலவரமாக மாறி ஆயிரக்கணக்கான வாகனங்களும் ஆர்ப்பாட்ட காரர்களால் கொழுத்தப்பட்டது.
அப்பொழுது பாரிஸ் பகுதியில் வாழும் புலிக்காச்சலில் திரியும் ரயாகரனின் வீட்டிற்கு அருகாமையிலும் ஒரு வானம் கொழுத்தபட்டு அந்த நெருப்பு அவர் இருந்த கட்டிடத்தின் ஒரு பகுதியையும் பாதித்திருந்தது. ஆனால் உடனடியாக தீயணைப்பு படையினரால் அந்த தீ அணைக்கபட்டாலும். பிறகென்ன வழைமை போல காவல் நிலையத்திற்கு ஓடிய அவர் அய்யோ புலிகள் என்னை கொல்ல சதி வீட்டை கொழுத்தி விட்டனர் என்று போட்டார் ஒரு போடு . அது மட்டுமல்ல இந்த காச்சல் காரர்களினால் நடாத்தபடும் இணையதளங்களிலும் செய்தியாக வந்தது.
இவரது கோமாளித்தனம் இப்படியென்றால் இன்னொருவர் அவர்தான் குகநாதன்: பிரான்சில் வானொலி பத்திரிகை தொலைக்காட்சி என்று அனைத்து ஊடக வழிகளையும் தன் சுருட்டலிற்காக பயன் படுத்த நினைத்து ஒரு வானொலி சேவை ஒன்றை தொடங்கினார் அந்த காலகட்டத்தில் தமிழை கேட்க கதைக்க ஏங்கிய புலத்து தமிழர்களிடையே இந்த வானொலி நல்லதொரு வரவேற்பை பெற்றது அந்த மக்களின் ஆதரவை தனக்கு லாபமாக்க முயன்ற இவர் அடிக்கடி பண பற்றாகுறை அதனால் வானொலியை நிறுத்தபோகின்றோம் என்று அடிக்கடி அறிவித்தல் விடுவார். தங்கள் வீட்டில் தமிழ் ஒலிக்காமல் போய் விடுமோ என்கிற ஆதங்கத்தில் மக்களும் பணமாகவும் காப்பு சங்கிலி தோடு ஏன் தாலிகொடியை கூட கழட்டி கொடுத்திருந்தனர்.
அதையே அவர் தொடர்ச்சியாக செய்து சுருட்டி கொண்டு தனது வானொலியில் வேலை செய்தவர்களிற்கோ இது பொது சேவைதானே எனவே பணத்தை எதிர் பார்காதீர்கள் என்று அவர்களிற்கு போக்கு வரத்து செலவு கூட கொடுத்ததில்லை.ஒரு காலத்தில் வானொலியென்றால் ஒரு உயர்வாக ஒரு உன்னத பொழுது போக்காக நினைத்த புலத்து தமிழர்கள் இன்று வானொலியென்றாலே வெண்டா வெறுப்பாகவும் உதை கேட்டாலே தலைவலி என்று நினைக்கின்ற அளவிற்கு ஒரு மாற்றிய பெருமை இவரையே சாரும்.இது மட்டுமல்ல உங்களிற்கு ஆறு அலைவரிசையில் படம் காட்டுகிறேன் என்று ஒரு தொலைகாட்சியை தொடங்கி இப்போ ஒரு அலைவரிசையில் அதில் மூன்று மதங்களின் கூட்டு பிரார்த்தனை போய்கொண்டிருக்கிறது
அதிலும் சுருட்டி வில்லங்கத்தில் மாட்டுபட்டு நிப்பவரால் பத்திரிகை கூட ஒழங்காக அடிக்க முடியாமல் அடித்த பத்திரிகைகளும் விற்காமல் போகின்ற வேகத்திலேயெ திரும்பி வந்து விடுகிற நிலையில்தான். இவர் பிரான்சிலிருக்கின்ற தன்னுடைய இரண்டு வீடுகளையும் விற்று விட்டு மலேசியாவில் போய் குடியேற திட்டமிட்டு அதற்கான வேலைகளில் இறங்கியிருந்தபோதுதான் இவர் நாட்டை விட்டு ஓட போகிறார் என்கிற செய்தி கசிய தொடங்கி விடவே கடன் காரர்களை சமாளிப்பதற்காக உடனே தான் நாட்டை விட்டு ஓடவில்லை தனக்கு புலிகளால் ஆபத்து எனவே சில காலம் வேறொரு நாட்டில் தங்க யொசித்திருக்கிறேன் என்று சொல்லி சமாளித்து அதற்கு ஆதாரமாக இரண்டு இந்திய தமிழர்களான சக்தி மற்றும் அமீன் ஆகியோரை காவல் நிலையத்திற்கு அழைத்து போய் சாட்சியாக்கி தனக்கு புலிளால் மிரட்டல் வருகிறதென்று ஒரு புகாரையும் கொடுத்திருக்கிறார்.
எற்கனவே இவருக்கு சாதுவாய் பிடித்திருந்த புலிக்காச்சல் இப்போ சன்னியாக்கி விட்டிருக்கிறது. இப்படி தங்களின் சய நலங்களிற்காகவும் சுருட்டல்களிற்காகவும் ஏன் சிலர் தங்கள் பெயர் பரபரப்பாக அடிபட்டாலே போதும் என்கிறதற்காகவும் இந்த காச்சலை தாங்களாகவே மன்வந்து எற்று கொள்கிறார்கள் எனவே இது உடல் சம்பத்த பட்டாத மனம் சம்பத்த பட்ட காச்சல் என்பதனால் இதை அவர்களாகவே குணப்படுத்தாமல் விட்டால் அது அவர்கள் இறக்கும் வரை இருந்து கொண்டேதான் இருக்கும் நன்றி சாத்திரி
சாத்திரியின் ஜரோப்பிய அவலம் நாடகம் அங்கம் 8 http://www.tamilnews24.com/twr/audio/sathiri/avalam8.ram
10:10 AM, Posted by sathiri, No Comment
சுவிஸ் மே ஊர்வலம் தாக்குதல் நடாத்தியது யார்????
10:39 AM, Posted by sathiri, No Comment
சுவிஸ் மே ஊர்வலம் அதில் புலிகள் சிலரை தாக்கினார்கள் என்று சிறீலங்கா மற்றும் வெளிநாட்டு புலனாய்வு பிரிவுகளிடமும் விலைபோன சில இணையதளங்கள் பொய் செய்தியொன்றை மிக அக்கறையெடுத்து பரப்பிகொண்டிருக்கின்றன.ஆனால் நடந்த உண்மையென்ன என்பதனை சுவிஸ்வாழ் தமிழர்களிற்கு தெரியும் ஆனாலும் உலகெங்கும் வாழும் தமிழர்களும் அறிந்து கொள்வதற்காக நடந்த உண்மையை இங்கு எழுதுகிறேன். மற்றைய நாடுகளை போலவே சுவிசில் வருடாவருடம் மே தின கூட்டங்கள் சூரிச் மானிலத்தில் நடைபெறுவது வழைமை இதனை ஒரு அமைப்பு காவல் துறையின் உதவியுடன் ஒழுங்கு செய்கின்றது . இந்த ஊர்வலத்தில் அங்கு வசிக்கின்ற சகல நாட்டு மக்களும் பல சங்கங்கள் மற்றும் அமைப்புக்கள் ஊடாகவும் இதனை ஒழுங்கு படுத்தி அதில் கலந்து கொள்கின்றனர்.
ஆனால் அதிக அளவு மக்கள் கலந்து கொள்கின்ற அமைப்புகளிற்கே சுவிஸ்அரசும் காவல் துறையினரும் அவர்கள் நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்களை செய்வதற்கு இட வசதி செய்து கொடுக்கின்றது.சிறிய அளவு தொகை மக்களை கொண்ட அமைப்பினர் மே தின பேரணி நடந்து முடிந்ததும் கலைந்து சென்று விடுவார்கள். அதன்படி சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரால் ஒழுங்கு செய்யப்படும் ஊர்வலத்திலேயே சுவிஸ் வாழ் ஈழத்தமிழர்கள் வருடா வருடம் கலந்து கொண்டு தொழிலாளர் உரிமைக்காகவும் மற்றும் தமிழர் உரிமைக்காகவும் தங்கள் போராட்ட நியாயத்தினையும் சுவிஸ் மக்களிற்கும் உலகிற்கும் எடுத்து சொல்வது வழைமை.இதில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொள்வதால் தமிழர்களிற்கும் கூட்டமும் மற்றும் நிகழ்ச்சிகழ் நடாத்தவும் அதற்கு வசதியாக மேதினத்தினை ஒழுங்கு செய்யும் அமைப்பினால் ஒரு இடம் அதுவும் எல் ரி ரி அமைப்பு என்கிற பெயரிலேயெ பதிந்து வழைமை போல இட வசதி ஒதுக்கி கொடுக்கப்பட்டது.இந்த ஆண்டு பிரான்ஸ் ஒஸ்ரேலியா மற்றும் இங்கிலாந்திலும் ஈழ போராட்ட ஆதரவாளர்களிற்கு சில நெருக்கடிகள் அந்த நாட்டு அரசால் ஏற்பட்டது.
அதே போல சுவிசிலும் ஈழ போராட்ட ஆதரவாளர்கள் மீது ஒரு நெருக்கடியை கொடுக்க சுவிசில் சிறீலங்கா அரசின் புலனாய்வு பிரிவுடன் இணைந்து பகிரங்கமாகவே இயங்கி வருபவரான புளொட் அமைப்பின் றஞ்சன் என்பவர் திட்டத்தை போட்டார் றஞ்சனின் திட்டத்திற்கு இரு மட்டக்களப்பை சேர்ந்தவர்கள் கருணா அமைப்பின் ஆதரவாளர்கள் அவர்கள் அண்மையில் தான் சுவிசிற்கு வந்து றஞ்சனுடன் இணைந்து இயங்குகின்றவர்கள் உதவ முன்வந்தனர்.றஞ்சனின் திட்டப்படி கூட்டத்தில் வருபவர்களை கோபப் படுத்துவது அவர்கள் ஆத்திரமடைந்து தனது கூட்டத்தினரை தாக்குவார்கள் அதுவும் பல்லாயிரம் பேர் சேர்ந்து ஆவேசமாக உணர்ச்சி வசப்பட்டு தாக்கும் போது சிலர் இறந்து போக கூடிய சந்தர்ப்பமும் உண்டு.
அப்போது தான் எப்படியும் தப்பியோடி காவல் துறையினரிடம் போய் புலிகள் தன்னை கொல்ல வருகிறார்கள் என்றும் அதற்கு சுவிஸ் ஒருங்கிணைப்பு பொறுப்பாளர் பணம் கொடுத்து இருவரை அனுப்பியிருப்பதாக முன்னரே தன்னால் தயார் செய்யபட்டிருந்த அந்த இரு கருணா குழுவினரின் பெயைரை சொல்லி முறையிடுவார். உடனே அவர்களை கைது செய்து சுவிஸ் காவல் துறையினர் விசாரிக்கும் அப்போது அவர்கள் தாங்கள் புலிகள் அமைப்பினர் என்றும் புலிகள் சுவிஸ் பொறுப்பாளர்தான் பணம் தந்து றஞ்சனை கொலை செய்ய சொன்னதாக வாக்கு மூலம் கொடுப்பார்கள். இதை வைத்து சுவிசில் ஈழபோராட்ட ஆதரவினருக்கும் ஒரு நெருக்கடியை கொடுக்கலாமென்று ஏதோ தென்னிந்திய திரைப்படங்களை அதிகம் பார்த்த பாதிப்பில் றஞ்சன் திட்டம் போட்டார்.
அன்று ஈழ போராட்டத்திற்கு எதிராக இயங்குபவர்கள் சுமார் இருபத்தைந்து பேரளவில் அழைத்து கொண்டு இல்லாத ஒரு அமைப்பான புளொட் அமைப்பின் கொடியுடன் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவிற்கு ஒதுக்க பட்ட இடத்திற்கு போய் நின்று கொண்டனர்.அங்கு கூட்டத்திற்கான ஒழுங்குகளில் ஈடுபட்டிருந்த தமிழர்கள் இது எங்கள் அமைப்பிற்கென ஒதுக்கபட்ட இடம் எனவே நீங்கள் வேறு இடத்தில் போய் நில்லுங்கள் என்று றஞ்சனிடம் சொல்லவும். றஞ்சன் இது என்ன பிரபாகரன் வீட்டு காணியா என்று தொடங்கி மிக கேவலமான கெட்ட வார்த்தைகளால் திட்டவும் அங்கு நின்றவர்களிற்கு றஞ்சன் குழுவினர் வந்த நோக்கம் புரிந்து போனது. அவர்கள் உடனடியாக மே தின கூட்டத்தை ஒழுங்கு செய்யும் அமைப்பிற்கும் காவல் துறையினரிற்கும் தகவல் சொல்லிவிட்டு அமைதியாய் இருந்து விட்டனர்.
தங்கள் திட்டம் நிறைவேறாத றஞ்சன் குழுவினர் ஊர்வலம் அந்த இடத்தை வந்தடையும் வரை காத்திருந்து விட்டு ஊர்வலம் அங்கு வந்து சேர தொடங்கியதும் ஊர்வலத்தில் புலிகொடியுடன் வந்து கொண்டிருந்த வயதான ஒரவரிடம் கொடியை பறித்து அந்த கொடியால் அந்த வயோதிபரை தூசண வார்த்தைகளால் திட்டியபடி தாக்க தொடங்கினார்கள்.உடனே ஊர்வலத்தில் வந்த இளைஞர்கள் அவர்களைதிருப்பி தாக்க தொடங்கி விட்டனர்.ஆனால் சுமார் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டிருந்ததால் தழிழர் ஒருங்கிணைப்பு குழவினரால் அவர்களை கட்டுபடுத்த முடியாமல் போய்விட்டது.றஞ்சன் உட்பட அவர்கள் குழுவினர் தப்பியோடிவிட ஆறு பேர் மட்டும் மக்களிடம் அகப்பட்டு கொண்டனர். உண்மையில் மூவாயிரம் பேரளவில் நின்ற அந்த கூட்டத்தில் ஒருவர் ஒரு அடி அடித்திருந்தாலே இந்த அரசாங்க அடிவருடிகள் இறந்து போயிருப்பார்கள்.
அப்படி ஒரு நிகழ்ச்சிதான் றஞ்சனிற்கும் தேவையாயிருந்தது.ஆனால் தமிழர் ஒருங்கிணைப்பு குழு பொறுப்பாளரும் அதன் பணியாளர்களும் தலையிட்டு அடிக்க விடாமல் தடுத்து அவர்களை காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.தனது திட்டம் ஓரளவு நிறைவேறிய றஞ்சன் அங்கிருந்து வேகமாக ஓடிப்போய் காவல் நிலையத்தினுள் புகுந்து புலிகள் அமைப்பினர் தன்னை கொலை செய்ய துரத்தி வருகிறார்கள் என்றும் இருவர் பெயரை சொல்லி அவர்களையே தன்னை கொலை செய்ய புலிகள் பொறுப்பாளர் அனுப்பியுள்ளார் என்றும் முறையிட்டார்.காவல்துறையினரும் றஞ்சன் சொன்ன இருவரையும் கைது செய்து விசாரிக்க ஆரம்பித்தனர். றஞ்சனின் திட்டப்படி அதுவரை எல்லாம் நன்றாகதான் நடந்தது ஆனால் நடந்து முடிந்ததோ வேறாக இருந்தது.
அந்த இருவரையும் காவல் துறை விசாரித்தபோது அவர்களும் றஞ்சன்: சொல்லிகொடுத்தபடி ஏதோ இலங்கை காவல் துறைக்கு கதை விடுவது போல சுவிஸ் பொலிசிற்கு கதை அளந்து கொண்டிருக்கும் போதே சுவிஸ் காவல்துறை அவர்களின் சாதகத்தை புரட்டி கொண்டிருந்தது. அவர்கள் சுவிசில் அகதி அந்தஸ்த்து கோரும் பொழுது அவர்களது வாக்கு மூலத்தில் தாங்கள் கருணா அமைப்பை சேர்ந்தவர்கள் என்றும் புலிகளால் தங்கள் உயிரிற்கு ஆபத்து என்றும் சொல்லியிருந்தனர்.அந்த வாக்மூலத்தை காவல் துறையினர் அவர்கள் முன்னால் தூக்கி போட்டபோதுதான் அவர்கள் திருவிழாவில் தொலைந்த குழந்தைகளை போல திரு திரு வென முழித்தபடி எல்லாவற்றிக்கும் றஞ்சன் தான் காரணம் என்று உண்மையை ஒரு வரி விடாமல் சொல்லி விட்டனர்.அதுமட்டுமல்ல தன்னுடன் வந்தவர்களை பலி கொடுத்தாவது புலிகள் மீது பழி போட நினைத்த றஞ்சன் மீது இப்பொழுது வழக்கு பதிவாகியுள்ளது.இது மட்டுமல்ல றஞ்சன் மீது எற்கனவே சுவிஸ் காவல் துறையில் பல வழக்குகள் பதிவாகியுள்ளது ஆனால் அவற்றில் ஆறு வழக்குகளில் இவர் கைதாகி தண்டனையும் பெற்றுள்ளார். அந்த வழக்குகளின் விபரம் இதோ
1).2002 சுவிஸ் அரசாங்கம் தனது நல்லெண்ண முயற்சியின் பயனாக பேர்ண் மாநிலத்தில் அமைந்திருக்கும் குரிசால் அரினா அரசவிருந்தினர் விடுதியில் விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளுக்கும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் பேச்சு வார்த்தை ஒன்றை ஏற்பாடு செய்தபோது, அதனைக் குழப்புவதற்கு திரு.ரஞ்சனும் அவரது குழுவினரும் முற்சித்தார்கள். மாநாட்டு மண்;டபத்திற்குள் எதேச்சதிகாரமாக நுழைந்து நல்லெண்ண முயற்சியை குழப்ப முயன்றது. இச்செயலை சுவிஷ் அரச ஏற்பாட்டாளர்கள் நன்கு அறிந்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
2)2004 உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஜெனீவாவில் நடாத்திய எழுச்சிநிகழ்ச்சியையும் திரு. ரஞ்சனும் அவருடைய சகாக்களும் குழப்புவதற்கு முயன்றார்கள்.
3)2005 - சூரிக்கில் தமிழர் புனர்வாழ்வுக் கழத்தினரால் நடாத்தப்பட்ட கலாச்சார நிகழ்ச்சியையும் திரு. ரஞ்சனும் அவருடைய சகாக்களும் குழப்புவதற்கு முயன்றார்கள்.
4)2005 பேர்ன் நகரில் உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு நடாத்திய வணக்க நிகழ்ச்சியையும் திரு. ரஞ்சனும் அவருடைய சகாக்களும் குழப்புவதற்கு முயன்றார்கள்.
5)2006 படுகொலை செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களுடைய நினைவு தினத்தை முன்னிட்டு புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் பேர்ணில் நடத்திய நினைவு தினத்தை திரு. ரஞ்சனும் அவருடைய சகாக்களும் குழப்பியதோடு கண்ணீர் புகையை மண்டபத்திற்குள் பிரயோகித்து அங்கிருந்தவர்களை பாதிப்புக்குள்ளாக்கிய அதேவேளை காவல்துறையினரின் வருகையினால் இவர்கள் அவ்விடத்தை விட்டு அப்புறப்படுத்தப்பட்டார்கள்.
6)2006 மார்ச் மாதத்தில் உலக தமிழர் ஒருங்கிணைப்பு குழு பிரிபேர்க் மாநிலத்தில் விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளுக்கும் புலம் பெயர் தமிழ் மக்களுக்கும் இடையில் ஏற்பாடு செய்த கலந்துரையாடல்களை திரு. ரஞ்சனும் அவருடைய சகாக்களும் குழப்புவதற்கு முயன்றார்கள்.
நன்றி சாத்திரி
நிழலாடும் நினைவுகள்
9:10 AM, Posted by sathiri, No Comment
ஒரு மே மாத நினைவு
எண்பதுகளின் ஆரம்பம் ஊரில் தமிழ் இளையதலைமுறையினர் இலங்கை அரசிற்கெதிராக வன்முறை போராட்டங்களை ஆரம்பித்திருந்த நேரம் வட கிழக்கில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் பொலிசார் மற்றும் அரசாங்கத்திற்கு வால்பிடிக்கிறவை மீது தாக்குதல்களும் நடக்க தொடங்கியிருந்தது. ஆனாலும் எனக்கு அந்த காலகட்டத்தில் இந்த பேராட்டங்கள் பற்றி அறிந்து கொள்ள பெரிதாக ஆர்வம் இருக்கவில்லை அது மட்டுமல்ல எனது ஊரில் இந்த போராட்டங்களில் ஈடுபட்ட தெரிந்த ஒரு சில இளைஞரை காவல் துறை அடிக்கடி தேடிதிரிந்ததால் அவர்களுடன் பேசவோ பழகவோ கூடாது என்கிற எனது வீட்டு காரரின் கண்டிப்பு வேறை சும்மா கோயிலடியிலை கொஞ்சநேரம் சினேகிதங்களோடை மாலையிலை போய் கதைசிட்டு வாறதுக்கே எனக்கு உதவாக்கரை என்கிற மாபெரும் பட்டத்தை அடிக்கடி வழங்கி கெளரவிப்பார்கள் இதுக்கை இப்படியான தொடர்புகளும் என்றால் வீட்டிலை சேறும் கிடைக்காது பிறகு கோயில் வாசலிலை நிண்டு அய்யர் பலிபீடத்துக்கு நெய்வேத்தியம் வைச்சிட்டு காகத்துக்கு எறியிற வெள்ளை புக்கையைதான் பொறுக்கி தின்னவேணும்.
அது மட்டுமல்ல பொலிசில் எனது உறவினர்களும் சிலர் இருந்தனர் அவங்கள் வேறை என்னை கொண்டு போய் அடிச்சு முறிச்சு போடுவார்கள் என்கிற பயம் இப்படி பல விடயங்களால் எனக்கு இந்த போராட்ட இளைஞர்கள் விடயத்தில் கொஞ்சம் தூரவே நின்று கொண்டேன் என்று சொல்லலாம். படிப்புவிசயத்தில் மட்டுமே எனது கவனத்தை செலுத்தியபடி எனக்கென்றொரு நாளாந்த நிகழ்ச்சி நிரல் இருந்தது அது காலையில் பாடசாலைக்கு போய் வருவது என்கிற பெரிய வேலையுடன் மாலை பாடசாலை விட்டு வீடு திரும்பியதும் சாப்பிட்டு விட்டு ஏதாவது ஒரு கதைப்புத்தகத்தை எடுத்து கொண்டு எங்கள் தோட்டத்திற்கு சென்று அங்கு இருக்கும் காவல் கொட்டிலினுள் போய் சாக்கு கட்டிலில் படுத்தபடி கொஞ்சம் கதையை படித்துவிட்டு ஒரு குட்டி தூக்கம்.
மாலை 6 மணி கோயில் மணி அடிக்கிற சத்தத்திலை எழும்பி முகத்தை கழவிவிட்டு கோயிலடியிலை போய் பிள்ளையாருக்கு ஒரு வணக்கம் போட்டு அன்று நான் ஏதாவது தவறு செய்திருந்தால் அதற்கு மூண்று தோப்புகரணமும் போட்டுவிட்டு ஒரு விபூதிகுறி ஒன்று இழுத்து அங்கிருக்கிற சந்தண கட்டையை கல்லில் தேய்த்து ஒரு பொட்டும் வைத்து கொண்டு அங்கு தேர் முட்டியில்(தேர் நிறுத்தும் இடம்)அரட்டைக்காக வந்து கூடும் எனது நண்பர்களுடன் சிறிது அரட்டை 7 மணியளவில் வீடு பின்னர் படிப்பு . இதுதான் வழைமையான நிகழ்ச்சி நிரல்.இப்பிடியே போய் கொண்டிருந்த காலத்தில். எனது நண்பர்கள் சிலரும் இந்த போராட்டங்களின் பக்கம் இழுக்கபட்டவர்களாய் இருந்தனர். அதில் சிலர் கம்யூனிச தத்துவங்களால் கவரப்பட்டு அதுபற்றியே அதிகம் பேசினார்கள் எனக்கோ இந்த கம்யூனிம் மாக்சிசம் எல்லாம் புதிதாகஇருந்தது. அதில் ஒரு பல்கலை களகத்தில் படிக்கிற ஒரு நண்பன் அதிகமாக இந்த சித்தந்தகள் பற்றி கதைப்பான் இப்பிடி இவங்கள் தொடர்ந்து கதைக்க கதைக்க எனக்கும் கம்யூனிசம் எண்டா என்னவென்று அறியும் ஒரு ஆவல் வந்து அந்த நண்பனை கம்யூனிம் பற்றி விளக்கமா ஒருக்கா சொல்லு எண்டன்.
அவனும் கார்ல்மாக்கசிலை தொடங்கி இந்த கம்யூனிசத்திலை வர்க்கம் இல்லை தொழிலாளி முதலாளி இல்லை சாதி இல்லை சாமி இல்லை சமயம் இல்லையெண்டு எங்கடை ஊரிலை இருக்கிறதையெல்லாம் இல்லை இல்லையெண்டாண்டான் . நான்அவனிட்டை சொன்னன் நிப்பாட்டு எனக்கு ஒண்டும் விழங்கேல்லையெண்டன். அவன் என்னை விடுறமாதிரியில்லை சரி சுருக்கமா உனக்கு விளங்கிறமாதிரி சொல்லுறன் எண்டிட்டு இப்ப நீ சாமிக்கு கற்பூரம் கொழுத்துறாய் அதாலை என்ன பிரயோசனம் எண்டான் நான் தட்டு தடுமாறி அது பாவமெல்லாம் அந்த கற்பூரம் மாதிரி கரையும் எண்டன். அவன் சிரித்தபடி நீ பாவத்தை செய்து கொண்டு கற்பூரத்தை கொழுத்தி என்ன பலன் அதாலை பேசாமல் அந்த காசிற்கு கடலை வாங்கி தின்னலாமல்லோ உன்ரை ஆசையாவது நிறைவேறும் என்றான். ஆகா என்ன தத்துவம் இதை முதலே யாராவது சொல்லியிருந்தால் எவ்வளவு காசுக்கு நான் கடலை வாங்கி திண்டிருப்பன் என்று நினைத்து. அன்றிலிருந்து நானும் கடலை தின்பதற்காக கம்யூனிசவாதியாகிய நிலையில்.
1981ம் ஆண்டு முதல் தவணை பரீட்சை முடிந்து மீண்டும் பாடசாலை ஆரம்பமாகியது அலுப்புடன் பாடசாலைக்கு போய் வந்து கொண்டிருந்த சித்திரை மாத இறுதி ஒருநாள் மாலை பாடசாலை விட்டு வெளியெ வந்ததும் மானிப்பாய் சந்தியில் பலர் கூடி நின்றபடி கதைத்து கொண்டிருந்:தார்கள் கூடிகதைப்பது அதுவும் சந்திகளில் ஒன்றும் புதிதான விடயம் இல்லை ஆனால் அவர்கள் கதைதத்தது புதிதான விடயம் . என்னவென்றால் சற்று மன்பு மானிப்பாய் நவாலி வீதியில் வயல்வெளி பக்கமாக முருகமூர்த்தி கோயிலடியிலை ரோந்து போய்கொண்டிருந்த விசேட பொலிசார் சைக்கிளிலை வந்த இரண்டு பெடியங்களை மறிச்சவையாம் பெடியள் நிக்காமல் ஒடவெளிக்கிட பொலிஸ் சுட்டதாம் . ஒரு சிலர் . பொலிசுக்கும் பெடியளுக்கும் துவக்கு சண்டை நடந்ததாம்...இப்படி சிலர் பொலிஸ் சுட்டு ஒரு பெடியன் சரியாம். இல்லை பெடியள் சுட்டு ஒரு பொலிஸ் சரியாம். இப்படி செய்திகள்.
இந்த காலகட்டம் தமிழ் இளைஞர்களின் ஆயுத போராட்டத்தின் ஆரம்ப கட்டங்கள் என்பதால் இப்படியான சில நிகழ்வுகளும் ஆனால் பல வதந்திகளும் உலாவிய கால கட்டம்.ஒரு சம்பவம் பத்து செக்கனிலேயே பலவடிவத்தில் பரவி விடும். ஆனால் உண்மையை சம்பவ இடத்தில் போய் யாரிடமாவது கேட்டறிந்தால் அல்லது மறுநாள் உள்ளுர் பத்திரிகையில் தான் உண்மையை அறியலாம். பாடசாலையில் வகுப்பறையில் இருந்த எனக்கும் ஏன் மற்றைய மாணவர்களிற்கும் கூட எவ்வித சத்தமும் கேட்கவில்லை ஆனாலும் அப்படியே அந்த வதத்திகளையும் காதில் வாங்கி போட்டு கொண்டு முடிந்தால் பின்னேரமளவிலை நவாலி பக்கம் போய் பாப்பம் இல்லாட்டி அந்த பக்கம் இருக்கிற நண்பர்கள் யாராவது பின்னேரம் கோயிலடிக்கு அரட்டையடிக்க வரேக்கை சொல்லுவாங்கள் தானே என்று நினைத்தபடி வீட்டை நோக்கி சைக்கிளை மிதித்தேன்.வீட்டிற்கு போய்எனது வழைமையான நிகழ்ச்சி நிரலை செய்ய தொடங்கினேன். அதன்படி சாப்பிட்டு விட்டு கையில் ஒரு கதைப்புத்தகத்தடன் அருகில் இருக்கும் எங்கள் தோட்டத்திற்கு போய் காவல் கொட்டிலினுள் நுளைந்ததும் உள்ளே இருந்த சாக்கு கட்டிலில் ஒரு 25 வயது மதிக்க தக்கஒரு இளைஞன் படுத்திருந்தான்.யாரவன் எங்கடை கொட்டிலுக்கை என்று நினைத்தபடி கிட்ட போய் பார்த்தேன்.
அவன் தன் சாரத்தை கழற்றிதனது வலது தோள்பட்டையை சுற்றிகட்டியபடி உள்ளாடையுடன் படுத்திருந்தான்.அவனது உடை உடல் எல்லாம் இரத்தம் ஊறியிருந்தது பாதிமயக்கத்தில் முனகியபடி இருந்தவனை பதட்டத்துடன் அருகில் போய் விசாரித்தேன். அன்று மாலை நவாலி வீதியில் பொலிசார் சுட்டதில் காயமடைந்தவன் என்று தெரிய வந்தது அவரிடம் அண்ணை உங்களுக்கு சொந்த காரர் யாரும் இஞ்சை இல்லையோ என்றவும் .இல்லை தம்பி நான் திருகோணமலை எனக்கு யாழ்ப்பாணம் வடிவா தெரியாது. என்னொடை வந்த மற்றவருக்கு ஓரளவு இங்கை இடங்கள் தெரியும் பொலிஸ் சுடேக்கை மற்றவர் எங்கையோ ஓடிட்டார் என்றும் தாங்கள் இலங்கை அரசிற்கு எதிராகவும் தொழிலாளர் தினத்தில் மக்களை இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடாத்த சொல்லி நோட்டீஸ் அடிச்சு அதை றோட்டு றோட்டா குடுத்து கொண்டு வரேக்கைதான் பொலிஸ் மறிச்சதெண்டும் .தாங்கள் ஓடவெளிக்கிட சுட்டிட்டாங்கள் என்று கொஞ்ச விபரம் .மட்டும் சொன்னான்.
முடிஞ்சா மருத்துகட்ட உதவிசெய்யும்படியும் வெளியே யாரிடமும் தெரியபடுத்த வேண்டாமென்றும் கெஞ்சலாய் கேட்டான்.எனக்கு பயமாவும் படபடப்பாகவும் இருந்தது. வீட்டிலை போய் சொல்லவும் ஏலாது . உடனே அருகில் இருந்த நண்பன் ஒருவனின் வீட்டிற்கு போய் விபரத்தை சொல்லி அவனையும் துணைக்கு கூட்டிகொண்டு அந்த இளைஞனிற்கு ஒரு சாரத்தையும் மாற்றி கொண்டு எங்கள் ஊரில் வீட்டில் வைத்து வைத்தியம் செய்யும் ஒரு வைத்தியரிடம் கொண்டு போனோம்.அவரிற்கு விபரத்தை சொல்ல அவர் தம்பி இரத்தம் கனக்க போயிருக்கு என்றபடி ஒரு குளுக்கோசை எற்றிவிட்டு காயத்தைபார்த்தார் துப்பாக்கி குண்டு பின்புறமாக நுளைந்து தோள் விலா எலும்பைஉடைத்து கொண்டு வெளியேறியிருக்கு காயத்திக்கு வெளியாலை உடைஞ்ச எலும்பு துண்டு வந்திருக்கு இதுக்கு என்னாலை பெருசா ஒண்டும் செய்யஏலாது உடைனை யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரிக்கு கொண்டு போங்கோ நான் இப்ப இரத்தம் ஓடாமல் கட்டு போட்டுவிடறன் என்றார்.பெரியாஸ்பத்திரிக்கா என்று நானும் நண்பனும் வாயை பிழந்தோம்.ஏனென்றால் யாழ்பெரியாஸ்பத்திரிக்கு போனால் அங்கை பொலிஸ் விசாரனை எண்டு வரும் பிறகு நாங்கள் யார்?? அவர் யார்?? என்கிற பிரச்சனைகள் இதுக்கை வேறை வீட்டிலை தெரிஞ்சா துலைஞ்சம்.
என்ன செய்யலாமெண்டு யொசிச்ச நான் அந்த வைத்தியரையெ கேட்டன் அய்யா நீங்களே பெரியாஸ்பத்திரிக்கு கொண்டு போய்....எண்டு இழுக்கவும் அவர் சொன்னார் தம்பி இது வில்லங்கமான கேஸ் நான் இவ்வளவு செய்ததே பெரிசு . அதெல்லாம் என்னாலை ஏலாது யாராவது ஊரிலை பெரியாக்களிட்டை சொல்லி அவையளோடை அனுப்புங்கோ நீங்கள் சின்ன பெடியள் உங்களுக்கு ஏன் வீண் பிரச்சனை என்று புத்திமதி சொல்லவும் தவறவில்லை. இதையெல்லாம் கேட்டு கொண்டிருந்த அந்த இளைஞன் வைத்தியரிட்டை . அய்யா ஏதாவது வலிகுறைக்கிற மாதிரி குழிசை இருந்தா தாங்கோ வலி குறைய நானே போறன் என்றான். வைத்தியர் அவனிடம் தம்பி இது விழையாட்டு இல்லை எலும்பு உடைஞ்சிருக்கு வலி குறையாது உடைனை வைத்தியம் செய்யவேணும் எண்டு சொல்லி சில வலிகுறைக்கிற குழிசைகளையும் தந்து கட்டு போட்டு அனுப்பிவிட்டார். திரும்ப காவல் கொட்டிலிலை கொண்டு போய் விட ஏலாது மறுநாள் பக்கத்து தோட்டகாரர் பாத்தாலும் பிரச்சனை என்ன செய்யலாமென யோசித்த எனக்கு திடீரென ஒரு யொசனை தோன்றியது சண்டிலிப்பாயில் எனக்கு தெரிந்த ஒரு நண்பனின்குடும்பம் இருந்தது அவர்கள் அன்றைய காலகட்டத்தில் விடுதலை கூட்டணிஆதரவாளர்கள் . அதுமட்டுமல்ல தீவிரபோக்கு கொண்ட இளைஞர்களும் அங்கு வந்து போவது எனக்கு தெரியும்.அவர்களிடம் கொண்டு போய் விட்டால் கட்டாயம் உதவுவார்கள் என்று நினைத்து அவர்கள் வீட்டிற்கு கூட்டிபோய் விபரத்தை சொன்னேன்.
அவர்களும் தாங்கள் பாத்து கொள்ளுறதாய் சொன்னதும் தான் எனக்கு நிம்மதியாய் இருந்தது. மறு நாள் மாலை அந்த வீட்டிற்கு போய் விபரம் கேட்டேன் சின்ன ஒப்பிறெசன் ஒண்டு செய்தவங்கள் எங்களுக்கு தெரிஞ்ச டொக்ரர் மார் அங்கை இருக்கிறதாலை எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது போய் பாக்கிறதெண்டா பாக்கலாம் என்றார்கள். விபரம் அறிந்து கொண்டு யாழ் வைத்தியசாலைக்கு பேனேன் அதுக்கை தெரிஞ்சவங்கள் யாரும் கண்டாலும் எண்டிற பயம் வேறை . அவன் சிரித்தபடி தம்பி உங்கடை உதவிக்கு நன்றி நான் இன்னும் இரண்டு மூண்டு நாளிலை வெளியிலை வந்திடுவன் பிரச்சனையில்லை எண்டான் . சரி அப்ப நிங்கள் திரும்ப திருகொணமலைக்கே போகபோறியள் எண்டன் .தம்பி நான் அங்கை போக ஏலாது பிறகு யோசிப்பம் எண்டான். நானும் மறுநாள் என்னிடம் இருந்த பணத்தில்அவனிற்கு ஒரு சாறம் சேட்டு உள்ளாடை என்று ஒரு சோடி வாங்கி கொண்டு போய் குடுத்தது மட்டுமல்ல ஒரு நான்கு நாட்கள் என நினைக்கிறேன் ஒவ்வொரு நாளும் பாடசாலை விட்டதும் வீட்டிற்கு வந்து சாப்பிட்டு விட்டு எனது வழைமையான நிகழ்ச்சி நிரலை மாற்றி வைத்தியசாலைக்கு போய் அவனுடன் சில மணிநேரம் இருந்து கதைத்து விட்டு வருவேன். இப்படியே ஒரு நாள் அவனை தேடிபோனபோது அங்கு அவனை காணவில்லை.
கடைமையில் இருந்த ஒரு தாதி என்னிடம் ஒரு கடிதத்தை தந்தாள் அதில் தம்பி எனக்கு நிறைய வேலைகள் இருக்கின்றது நான் போகிறேன் இதுவரை நீங்கள் எனக்கு செய்த உதவியை மறக்க மாட்டேன் முடிந்தால் நான் உயிருடன் இருந்தால் மீண்டும் எங்காவது எப்போதாவது சந்தித்து கொள்வோம் அன்புடன் உங்கள் உறவு என்று அவ்வளவு தான் எழுதியிருந்தது. ஆனாலும் அவனுடன் பழகிய நாட்கள் எனக்கு இனிமையானது அவனே எனக்கு கம்யூசம் என்றால் கடலை தின்பது மட்டுமல்ல அதனால் மக்களிடம் அலை கடலைப்போன்ற மாற்றத்தைஏற்படுத்த முடியும் என்று கம்யூனிசம் மாக்சிசம் என்று பல இசங்களை இதமாய் புரிய வைத்ததோடு விடுதலை. போராட்டம். சுதந்திரம்.உலக விடுதலை இயகங்கள் என்றும் தெரியவைத்து எனக்குள் மாற்றத்தை ஒரு தேடலை உருவாக்கி போனான் .அன்று அவனிற்காக மாற்றிய எனது வழைமையான நிகழ்ச்சி நிரல் மீண்டும் வழைமைக்கு திரும்பவேயில்லை.ஆனால் அவன் யார்?? சொந்த பெயர் என்ன?? ஏதாவது விடுதலை இயக்கத்தை சார்ந்தவனா??அல்லது தனியாகவே சில நண்பர்களுடனோ சேர்ந்து இலங்கை அரசிற்கு எதிராக இயங்கியவனா??என்று எந்த விபரத்தையும் எனக்கு சொல்லவில்லை நானும் நச்சரித்து கேட்கவும் இல்லை அதன்பின்னர் அவனை சந்திக்கவும் இல்லை....................
படலைக்கு படலை
2:08 AM, Posted by sathiri, 2 Comments







இந்தவாரம் ஒருபேப்பரில் வெளிவந்தது
படலைக்கு படலை என்கிற தொடர் நகைச்சுவை நாடகம் அதன் 5வது ஆண்டில் தொர்ந்தும் புலத்துவாழ் தமிழர்களின் படலைகளை தட்டஇருக்கின்றது. உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்களின் சம்பவங்களை எங்கள் பிரச்சனைகளை எங்களின் கவலைகளை .மகிழ்ச்சிகளை .நிகழ்வுகளை என்று அன்றாட வாழ்வினை எங்கள் வீட்டு கண்ணாடியாய் இருந்து அதனை எங்களிற்கே பிரதிபலித்து அதன் மூலம் எங்களை சிரிக்வும் சிந்திக்கவும் செயற்படவும் வைக்கின்றது.
அதுமட்டுமல்ல ஒரு கற்பனை கதைகளையோ புராண இதிகாச கதைகளையோ நாடமாக்குவதென்றாலே சிரமம் அதற்கென தனிப்பட்ட பலரின் உழைப்பு மிக அவசியமாகின்றது.ஆனால் படைக்கு படலை நாடகம் வெறும் நகைசுவை நடிப்பு என்று நின்று விடாமல் எம்மவர் மத்தியில் இன்னமும் புதைந்து போயிருக்கும் சில சம்பிரதாயங்கள்.சடங்குகள் .சமயவிடயங்கள் என்று எம்மவர்களின் அன்றாட வாழ்வியலில் இன்னமும் படிந்திருக்கும் சில கறைகளை படம்பிடித்து அவற்றை கழுவும் நோக்கத்தையும் கொண்டிருப்பதால். இந்த கலைஞர்கள் அவர்களது வசன. நடிப்பு. படபிடிப்பு.மற்றும் தொழில் நுட்ப பிரச்சனைகளை எதிர்கொள்வதோடு மட்டுமன்றி அதற்கு மேலாக எம்மவர்சிலரின் விசனங்கள். விமர்சனங்களையும் எதிர்கொள்ள வேண்டியவர்களாகின்றனர். ஆனால் அதுவே அவர்களது வெற்றியும் ஆகும்.அதன் வெற்றிக்கு அதுமட்டும் காரணமல்ல.நடிப்பதற்கு அதுவும் திரையில் தோன்றுவதென்றாலே அழகான முகம் அதற்கு மேலும் அரிதாரம் பூசி அலங்கரித்து அடுக்கடுக்காய் வசனங்கள் இடையிடை எதுகைமோனையையும் எடுத்துவிடல் என்று நாடக தமிழில் இல்லாமல். எல்லா சம்பிரதாயங்களையும் உடைத்து.அனைவருக்கும் புரியும்படி அழகான பேச்சுதமிழ்.தமிழே அழகு அதை பேச எதற்கு முகஅழகு என்று தமிழை தமிழாக கதைத்து அரிதாரம் பூசி அன்னியபட்டு போகாமல் அடுத்தவீட்டுஉறவுகள் போனறதொரு உணர்வை ஏற்படுத்தும் அதன் நடிகர்களும் அதன் வெற்றிதான். ஒரு வீட்டில் ஒரு இளம் தம்பதியினரின் குடும்பத்தை பின்னணியாய் வைத்து தொடங்கப்பட்ட இந்த தொடர் காலப்போக்கில் பலரையும் இணைத்து பல குடும்பங்களாக வளர்ந்துஅதன் தேவைக்கேற்ப இன்று வெளிப்புறங்களிலும் படப்பிடிப்பக்களை நடாத்தி வளர்ந்து வருகின்றது. எனவே இந்த தொடர் நடிகர்களிற்கும் மற்றும் அதன் தயாரிப்பாளர் சுதன் ராச்சிற்கும் தொழில் நுட்ப கலைஞர்களிற்கும் பாராட்டுகளை தெரிவித்து கொள்ளுவேம். அடுத்ததாய் மேலே படலைக்கு படலை பற்றியும் அதன் வெற்றிகள் பற்றியதுமான கருத்துக்கள் ஆனாலும் அதில் சில குறைகளும் இருக்கதானே செய்யும் அவை தேவை கருதி புதிதாக இணைக்கபடும் நடிகளின் நடிப்பில் இன்னம் கொஞசம் கவனமெடுத்து அவர்களை பயிற்றுவித்த பின்னர் நடிக்க வைப்பது நலம் ஏனெனில் அவர்கள் ஒளிப்பதிவு(கமறாவை)கருவியை அடிக்கடி பார்ப்பது அல்லது பார்த்து கதைப்பது இயற்கை தன்மையை குறைத்து கொஞ்சம் உறுத்தலாக உள்ளது. அடுத்ததாக வெளிப்புற படப்பிடிப்புகளின் போது சில நேரம் ஒலி ஒளிப்பதிவு தரம் குறைந்ததாகவே இருக்கின்றது அதற்கான வசதிகள் இன்னமும் இல்லாதிருக்கலாம் ஆனாலும் ஒலிப்பதிவின் தரத்தில் வேறு வழிமுறைகள் மூலம் அதாவது ஒலிவடிவத்தை தனியாக பதிவு செய்து இணைப்பதால் அதன் தரத்தை கூட்டலாம். அதேபோல ஒளி ஒலிப்பதிவு முறையில் இன்னமும் நவீன முறைகளை கையாள்வதன் மூலம் எங்கள் படலையை மினுமினுபாக்கி கொள்ளவேண்டும் என்பதே எங்கள் விருப்பமும். யாரோ படலையிலை தட்டினம் பொறுங்கோ யாரெண்டு பார்த்து விட்டு தொடருகிறேன் நன்றி சாத்திரி
ஒரு றேடியோவில் கடந்த திங்கள் இடம்பெற்ற வட்டமேசை அரசியல் கலந்துரையாடல்.
2:24 AM, Posted by sathiri, No Comment
முட்டாள்தி(த)ன கைதுகள்.
11:59 AM, Posted by sathiri, No Comment
முட்டாள்தி(த)ன கைதுகள்.
சித்திரை முதலாம் திகதி உலக முட்டாள்கள் தினம். அன்று ஞாயிற்று கிழைமை காலை எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு மறு முனையின் பாரிசில் உள்ள எனது நண்பனொருவன் என்னிடம் டேய் என்ன நித்திரையா?? பாஞ்சு எல்லாரையும் அள்ளிட்டாங்களாம். என்றான் எனக்கு ஒன்றும் புரியவில்லை யார் பாஞ்சது ?? என்னத்தை அள்ளினது என்றேன். பிரெஞ்சு காவல் துறையினர் ஞாயிறு அதிகாலையளவில் பிரான்சில் உள்ள தமிழர் ஒருங்கிணைப்பு குழு மற்றும் தமிழர் புனர்வாழ்வு கழக பணியாளர்கள் 17 பேரை கைது செய்து விட்டார்கள் என்றான். நானும் முதலில் அவன் என்னை முட்டாள் ஆக்ககின்றான் என நினைத்தேன். ஆனால் அவனது பேச்சில் இருந்த பதட்டம் அவன் சொல்வது உண்மையாக இருக்கலாம் என நினைத்து. வேறு அது சம்பந்தப்பட்டவர்கள் யாரிடமாவது கேட்கலாமென நினைத்து சில தொலைபேசி இலக்கங்களை அழுத்தினேன். ஆனால் எவருமே இணைப்பில் வரவில்லை. அன்று மாலை பிரான்சின் ஒரு தொலைக்காட்சி செய்தியிலும் மற்றும் வானொலி செய்தியிலும் தமிழீழ விடுதலை புலிகளிற்கு சட்ட விரோத நிதி சேகரிப்பில் ஈடுபட்ட 17 பேர் கைது செய்யபட்டிருப்பதாகவும் அவர்கள் நிதி சேகரிப்பின் போது பொது மக்களை பலவந்தபடுத்தியதால் கைது செய்யபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்கள்.
அதன் பின்னர் மெல்ல மெல்ல யார் யார் கைது செய்யப்பட்டனர், எங்கெங்கு வைத்து கைது செய்யபட்டனர் என்கிற விபரங்கள் வெளியாக தொடங்கின. ஆட்கள் கைது செய்யப்பட்டது மட்டுமல்லாமல் தங்கள் வருமானத்தில் பெரும்பகுதியை அல்லல்படும் ஈழதமிழர்களிற்காக அனுப்பிவைக்கும் சில வர்த்தக நிலையங்கள் கோவில் என்பனவும் காவல் துறையினரால் சோதனைக்குள்ளாக்கபட்டு அங்கிருந்த ஆவணங்கள் எடுத்து செல்லபட்டது. புலம் பெயர்ந்து வாழும் ஈழ தமிழர்கள் தங்கள் தாய் நாட்டிற்காகவும் அங்கு யுத்தத்தால் உறவுகளை இழந்து போன குழந்தைகள் மற்றும் உறவுகளிற்காக தங்கள் உழைப்பின் ஒரு பகுதியை அனுப்புவதும் அதற்குதவியாக தமிழர் புனர்வாழ்வு கழகமும் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவும் உதவுவதும் அவர்களிற்கான வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதுவும் இன்று நேற்றல்ல ஈழத்தமிழன் யுத்தத்தால் புலம்பெயர தொடங்கிய காலந்தொட்டு 20 ஆண்டுகளிற்கு மேலாகவே நடை பெறுகின்ற ஒரு நிகழ்ச்சி.
இது ஒன்றும் இரகசியமல்ல தமிழர்கள் வாழுகின்ற நாடுகளில் உள்ள அரசுகளிற்கும் அந்த நாட்டு புலனாய்யவு துறையினரிற்கும் தெரிந்த விடயங்கள் தான். அதுமட்டுமல்ல ஜரோப்பிய ஒன்றியத்தின் புலிகள் மீதான தடை வந்தவுடன் இப்படியான சில நடவடிக்கைகள் நடக்கும் என பலர் எதிர் பார்த்த போதும் கூட அப்படி எதுவும் பிரான்சில் நடைபெறவில்லை. பின்னர் பணம் கடத்தியதாக பிரான்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் வேலை செய்த சில தமிழர்கள் கைது செய்யபட்ட போதும் இவர்களிற்கும் புலிகளிற்கும் தொடர்பு இருக்குமா? என்கிற விதத்திலும் விசாரணைகள் நடாத்தபட்டு அவைகூட ஆதாரங்கழுடன் நிரூபிக்கப்படாமல் அப்படியே அந்த செய்தியும் அமுங்கி போன நேரத்தில் தான் திடீரென இந்த கைது பிரான்ஸ் வாழ் மக்களிடம் பல கேள்விகள் சந்தேகங்கள் குழப்பம், பயம், கோபம் (ஒரு சிலரிற்கு மகிழ்ச்சி) என்று பலவிதமான உணர்வலைகளையும் ஏற்படுத்தியிருந்தது. காரணம் என்ன?? வேறொன்றும் இல்லை பிரான்சின் உள்நாட்டு அரசியல் தான் காரணமே தவிர வேறொன்றுமில்லை.
பிரான்ஸ் உள்நாட்டு அரசியலிற்கு இவர்கள் கைதினால் என்ன லாபம் இப்படியொரு கேள்வி எழுகிறதா? இருக்கின்றது அதுவும் பிரான்ஸ் நாட்டின் அதிபர் தேர்தலிற்கு இன்னமும் மூன்று வாரங்களே இருக்கின்ற நிலைமையில் ஆழும் கட்சிக்கு லாபம் இருக்கிறது அதுதான் அவர்கள் போட்ட கணக்கு . தற்சமயம் ஆளும் வலது சாரி கட்சியின் பிரதான வேட்பாளர் அதன் உள்துறை அமைச்சராக இருந்த நிக்கோலா சார்கோசி என்பவர். இவர் அதிரடி அரசியல் நடாத்தி கடும் போக்காளர் என்று பெயரெடுத்தவர் அது மட்டுமல்ல இவரது அதிரடி அரசியலால் ஏற்கனவே பிரான்ஸ் வாழ் ஆபிரிக்க அரேபிய இனங்களின் வெறுப்பை தாராளமாகவே சம்பாதித்து விட்டார். அனால் பிரான்சின் வெளிநாட்டவர் வருகையை கட்டுபடுத்தியவர் என்கிற பெயர் புகழ் இவைகள் பிரான்சின் இன மற்றும் நிற கொள்கை கடும்போக்காளர்கள் மத்தியில் இவரது மதிப்பை உயர்த்தியிருந்தாலும் பொது தேர்தல் கருத்து கணிப்புக்கள் இவரை சிறிது குழப்பியிருக்கலாம். காரணம் சோசலிச கட்சி பெண் வேட்பாளரான செகொலனிற்கு வெற்றி வாய்ப்புக்கள் இருப்பதாக கணிப்புகள் காட்டுகின்றன. செகொலனின் தேர்தல் வாக்குறுதிகளில் பிரான்சின் எதிர்காலம் பற்றிய பொருளாதார கொள்கைகள் தெளிவற்றனவாக இருக்கின்றது என்கிற குற்றசாட்டு இருந்தாலும், பிரெஞ்சு குடியுரிமை பெற்ற வெளிநாட்டவர்களின் ஆதரவு இவருக்கே இருக்கும் என்பது தெளிவு. ஆழும் கட்சிக்கு ஏற்கனவே பிரான்சில் உள்ள வேவையில்லா திண்டாட்டம் மற்றும் வீடற்றவர்கள் பிரச்சனை என்பற்றுடன் மீண்டும் தேர்தல் காலங்களில் நாட்டின் பாதுகாப்பு பிரச்சனை என்பதும் முக்கியமானதொரு பிரச்சனையாக விவாதிக்கப்படுவது வழமை. எனவே தங்கள் ஆட்சியில் நாட்டின் பாதுகாப்பில் அதிக கவனம் எடுப்பதாக காட்டவேண்டிய நிலை ஆனால் அதற்காக அதர பழசாகிவிட்ட அல்கெய்தா பிரச்சனைகளை புது பூச்சு பூசி காட்ட முடியாது. அதைவிட முஸ்லிம் போராட்ட இயக்கங்களின் செயற்பாடுகளை இழுத்து இன்னமும் அராபிய இனத்தவர்களின் எதிர்ப்பை இன்னமும் தேடிகொள்ளவும் விரும்பாது. எனவேதான் புதிதாக புலி தீவிரவாதம் என்கிற ஒன்றை என்கிற ஒன்றை பிரெஞ்சு மக்களிற்கு திரையிட திட்டம் போடப்பட்டிருக்கலாம். அது மட்டுமல்ல இது பிரெஞ்சு மக்களிற்கும் புதிது எனவே அவர்களும் இதனை பற்றி அறிய ஆர்வம் காட்டுவார்கள்.அது மட்டுமல்ல இந்த நடவடிக்கை மூலம் இங்கு வாழும் ஈழத்தமிழர்களின் எதிர்ப்பை சம்பாதித்தாலும். தேர்தலை பொறுத்தவரை இதனால் எந்த வித பாதிப்பும் வர போவதில்லை.
காரணம் பிரான்சில் ஒரு இலட்சத்தும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் வசித்தாலும் அதில் 80 வீதமானவர்கள் அகதிகளாக ஆனால் அனைத்து சலுகைகளையும் பெற்று இங்கு வாழ உரிமையுடையவர்களாகவே உள்ளனர். இவர்களிற்கு அரச அதிபர் தேர்தலில் வாக்களிக்க உரிமை இல்லை. 20 வீதமானவர்களே நிரந்தர குடியுரிமை பெற்று வாக்களிக்கும் உரிமை பெற்றவர்கள். ஆனால் நிரந்தர குடியுரிமையை பெற்றவர்கள் தங்கள் ஆங்கில மோகத்தால் அதிகமானவர்கள் இங்கிலாந்திற்கும் கொஞ்சம் கனடாவிற்கும் மீதம் பேர் அவுஸ்ரேலியா என்று சென்று ஆங்கிலம் பேசுகின்ற நாடுகளில் குடிபெயர்ந்துவிட, மீதமாக உள்ளவர்களை கூட்டிப்பார்த்தால் எப்படியும் ஒரு எட்டாயிரம் பேரை தாண்டுமா?? என்பது சந்தேகமே. அவர்களும் குடியுரிமையை எடுத்ததும் நாலு நண்பர்கள் உறவினர்களிற்கு சொல்லி பெருமை பட்டுகொள்வதோடு ஊரில் பிரச்சனை குறைந்த காலத்தில் ஊருக்கும் ஒருக்கா போய் வந்து விடுவதோடு சரி. தேர்தல் காலத்தில் வாக்கு போட ஒரு பத்து பேராவது போவார்களா?? என்றால் அதுவும் சந்தேகமே. அந்த பத்து வாக்குகள் பிரான்ஸ் அரசியலில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்திவிடப் போவதில்லையென்று நன்றாக தெரிந்தே இந்த கைதுகள் அரங்கேறியது. அதே நேரம் நன்கு திட்டமிடப்பட்ட முறையில் முன்னரே ஊடகங்களிற்கும் அழைப்பு விடுத்து அவர்களையும் இந்த நடவடிக்கைக்கு அழைத்து சென்றிருந்தனர். காரணம் அதிலும் விடயம் இருக்கின்றது.
பிரான்சில் ஈழ தமிழர்களின் அனைத்து நடவடிக்கைகளும் பிரெஞ்சு புலனாய்து துறையினரிற்கு அத்துபடி. அதில் சில அவர்களது சொந்த தேடல்கள் மீதம் இங்கும் மானத்தை விற்று உடை வாங்கும் ஒரு சில தமிழர். அவர்களின் கணக்குபடி ஆனையிறவு தளவீழ்ச்சியை அடுத்து மகிழ்ச்சியில் அதை திருவிழாவாக கொண்டாடிய பிரான்ஸ் வாழ் தமிழர்கள் தாங்களாகவே முன்வந்து தாயகத்திற்கான பங்களிப்பை வாரி வழங்கினர். அது போன்றே அண்மையில் கட்டுநாயக்கா விமானபடை தளத்தின் மீதான தாக்குதலும் தமிழர்களால் கொண்டாடப்பட்டது. எனவே இப்பொழுதும் அந்த மகிழ்ச்சியில் பணத்தை வாரி வழங்கியிருப்பார்கள் எனவே இப்பொழுது ஒரு தேடுதலை பரவலாக தமிழர் உதவி நிறுவனங்கள் மீதும் சில வர்த்தக நிலையங்கள் மீதும் நடாத்தினால் பெட்டி பெட்டியாக பணம் கிடைக்கும் அதை வைத்தே மீதி பிரச்சாரத்தை முடித்து விடாமென நினைத்திருப்பார்கள். ஆனால் நடந்ததென்னவோ வேறு. பெட்டி பெட்டியாக ஏற்றியதை தொலை காட்சியில் காட்டினார்கள் ஆனால் அவையெல்லாம் அந்த வியாபார நிலையங்களின் ஆவணங்கள். ஆனாலும் இது சாதாரண விடயமல்ல சில எம்மவர்கள் சொன்னார்கள் இந்த கைதுகள் அநியாயம் அக்கிரமம் என்று. ஆனால் இந்த பேச்சுக்கள் வெறும் இயலாமையே எந்த ஒரு நாட்டிலும் நாம் போய் குடியிருந்து கொண்டு அந்த நாட்டின் சட்டம் சரியில்லை, அது கூடாது என்று வாதாட முடியாது. வாதாடவும் கூடாது முடிந்தவரை எமது பக்க நியாயத்தை எடுத்து கூறலாம்.அதற்கு என்ன செய்யலாம். எமது பக்கதற்திற்கான எமது பக்க நியாயத்தை எடுத்து கூற ஒரு அரசியல் பலத்தை கட்டியெழுப்பவேண்டிய கட்டாய கடைமை எம்முன்னால் உள்ளது .
அது மட்டுமல்ல இந்த கைதுகள் நியாயமற்றவை என்பதை இன்றைய அரசிற்கு தெரிவிக்க வேண்டிய கடமையும் எம் முன்னால் உள்ளது. அது யாரால்முடியும் இன்றைய இளையவரால் முடியும் இளையோர் அமைப்பால் முடியும் அவர்களே இனி அடுத்த கட்டத்தை நகர்த்த வேண்டியராகவுள்ளனர். அது மட்டுமல்ல பிரான்சின் ஏனைய தமிழ் அமைப்புக்கள் ஏன் ஊடகங்கள் கூட உறை பனியில் உள்ளே புகுந்தது போலவே உள்ளனர். வெளியே வருவார்களா??
நிழலாடும் நினைவுகள்
11:47 PM, Posted by sathiri, No Comment

கப்ரன் வாசு (கண்ணாடி வாசு.ஜடியா வாசு)வல்வெட்டிதுறை
1985 ம் ஆண்டு ஒரு கோடைகாலத்தின் மாலை நேரத்தில் யாழ் அராலி வீதி கல்லுண்டாய் வெளியில் ஒருவர் மட்டுமே அமரகூடிய ஒரு சிறிய விமானம் உள்ளே அதனை இயக்க தயாராய் வாசு அமர்ந்திருக்கிறான். அதனருகே மாவீரர்களான லெப்.கேணல்அப்பையா அண்ணை குட்டிசிறி. கப்ரன் பாரத் மேஜர் சுபாஸ் இவர்களுடன் மேலும் பல போராளிகள் நிற்கிறார்கள். வாசு மற்யை போராளிகளை பார்த்து எல்லாம் சரி எல்லாரும் சேர்ந்து வேகமா தள்ளுங்கோ இந்த முறையாவது பிளேன் பறக்கவேணும் என்று சொல்லவும் எல்லா போராளிகளும் சேர்ந்த்து விமானத்தை தள்ள அது வீதியில் உருள ஆரம்பிக்கவும் வாசு மற்றவர்களிடம் இன்னும் இன்னும் வேகமா என்று கத்தியபடி அந்த விமானம் மேலே கிழம்ப வசதியாய் அதன் இறக்கைகளை இயக்குகிறான்.அந்த நேரம் பார்த்து ஒரு போராளி ஏலேலோ அய்லசா என்று பாடவும் விமானத்தை தள்ளிய மற்றறைய போராளிகள் தள்ளுவதை நிறுத்தி விட்டு சிரிக்க ஆரம்பித்து விட்டனர். வாசு அவர்களை பார்த்து கோபமாய் கத்துகிறான் மேலை எழும்பினா காணும் நான் எப்பிடியாவது கோட்டைக்குள்ளை கொண்டு போய் இரண்டு ஆமிகாரன்ரை தலையிலையாவது விழுத்துவமெண்டா இவங்களோடைஒண்டும் செய்ய ஏலாது பகிடியை விட்டிட்டு தள்ளுங்கோடா என்கிறான்.
போராளிகள் தொடர்ந்து விமானத்தை தள்ள விமானம் சில அடிகள் மேலே எழுவதும் கீழே விழுவதுமாய் கடைசியில் அந்த வீதியோரத்தில் நின்ற ஒரு பூவரசு மரத்துடன் மோதி ஒரு பக்க இறக்கை உடைந்து போக வாசு சில சிராய்ப்பு காயங்களுடன் விமானத்தை விட்டு இறங்குகிறான். ஆனாலும் விமானம் செய்கின்ற முயற்சி தொடர்ந்து கொண்டுதான் இருந்தது.
வாசு எப்பவுமே தன்னைபற்றியோ தன்னுயுரிரைபற்றியோ கவலைபடாமல் எப்படியாவது எங்கேயாவது எதிரிக்கு இழப்பை ஏற்படுத்துவதை பற்றியே சிந்திப்பவன். அது மட்டுமல்ல கண்ணிவெடிகள் தயாரிப்பது ரவைகட்டுவது(ஆரம்பகாலத்தில் 9 மி.மீ.துப்பாக்கி ரவைகூடுகளை சேகரித்து திரும்ப அவைகளை ரவைகளாக தாயாரிப்பார்கள்) அன்றைய காலகட்டத்தில் புலிகள் இயக்கத்தின் பழுதடைந்த ஆயுதங்கள் அனைத்தையும் திருத்துபவனாகவும் இருந்தான். ஈழத்தில் இருந்த போராட்ட குழுக்களிற்கு இந்தியா அன்று ஆயுதங்கள் வழங்கிய போது புலிகள் இயக்கத்திற்கும் ஒரு தொகுதி ஆயுதங்களை வழங்கியது ஆனால் அவை பெரும்பாலும் ஏன் 80 வீதம் பாவிக்க முடியாத ஆயுதங்களையே கொடுத்திருந்தது.
அவற்றையெல்லாம் வாசு இரவு பகலாக இருந்து முடிந்தவரை திருத்தி போராளிகளிடம் கொடுப்பான். அந்த ஆயுதங்கள் யுத்த களத்தில் சில நெரங்களில் இயங்க மறுக்கும்.யுத்தகளத்தில் ஒரு போராளியின் ஆயுதம் இயங்கா விட்டால் அது எவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அனைவரிற்கும் தெரியும். அந்த போராளிகள் வாசுவை திட்டியபடியே அந்த ஆயுதங்களை அவனிடம் கொண்டு போய் கொடுப்பார்கள்.அவன் சிரித்தபடியே என்ன மச்சான் செய்யிறது இந்தியா ஆயுதத்தை தந்த நேரம் அதை இரும்பா தந்திருந்தா நான் அதை உருக்கி ஒரு நல்ல ஆயுதமா செய்து தந்திருப்பன்.ஆனால் என்ன செய்ய அவங்கள் இப்பிடி தந்திட்டாங்கள் நானும் முடிஞ்சவரை திருத்திறன் எனறவாறே மீண்டும் அவற்றை திருத்த தொடங்கிவிடுவான்.அப்போது 1987ம் ஆண்டு தொடக்கத்தில் யாழ் நாவற்குழி இராணுவ முகாம் மீது புலிகள் ஒரு தாக்குதலை நடாத்த திட்டமிட்டனர்.
அந்த இராணுவ முகாமிற்கு தண்ணீர் வெளியில் இருந்து ஒரு பெளசர் முலமே எடுத்து செல்லபடுவது வழைமை எனவே அதே போல ஒரு பெளசரை தயாரித்து அதன் உள்ளே வெடிமருந்தை நிரப்பி அதனை முகாம் உள்ளே அனுப்பி வெடிக்க வைப்பது பின்னர் அது வெடித்ததும் அதிர்ச்சியில் இருக்கும் இராணுவத்தினரை தாக்குவது என்று திட்டம் தீட்டப்பட்டு.அதற்கான அந்த முகாம் மீதான வேவுபார்த்தல் மற்றும் இராணுவ நடமாட்டங்கள் பற்றிய தகவல்களை சேகரிக்கும் பொறுப்பு அன்றைய சாவகச்சேரி பொறுப்பாளராக இருந்த கேடில்சிடமும். வெடிமருந்து நிரப்பிய பெளசரை தயாரிக்கும் பொறுப்பு வாசுவிடமும் ஒப்படைக்க பட்டது. அதுவும் எதிரிக்கு எந்தவித சந்தேகமும் வந்து விடாதபடி தண்ணீர் கொண்டு போகின்ற அதேபோன்றதொரு அச்சுஅசலாக இன்னொரு பெளசரை தயாரிக்க வேண்டும்.சிரமமானதும் சவாலானதமான ஒரு பணி ஆனால் வாசு ரஞ்சன் என்கிற ஒரு பொறியியலாளரின் உதவியோடு ஆர்வத்துடன் செயற்பட்டான். அசல் தண்ணி பெளசரில் எங்கெங்கு கறள் பிடித்திருக்கின்றது.
எங்கெங்கு நெளிந்திருன்றது என்று பார்த்து பார்த்து நகலை அசல் போல ஒரு மாதங்களிற்கு மேலாக செய்து முடித்தான்.அது மட்டுமல்ல தண்ணீர் பெளசர் இராணுவ முகாமிற்கு உள்ளே போகும் போது இராணுவத்தினர் பெளசரின் உள்ளெ தண்ணீர் தானா உள்ளது என்று பரிசோதித்து தான்அனுப்புவார்கள்.அதனால் அந்த பெளசரின் மேல் பாதியில் தண்ணீரும் கீழ் பாதியில் வெடிமருந்தும் நிரப்பி தயாரிக்கப்பட்டது.தாக்குதலுக༢r />??கான நாளாக 14.02.87 அன்று மாலை தீர்மானிக்கபட்டது.அந்த தாக்குதலிற்கு பொறுப்பாக அன்றைய யாழ் மாவட்ட தளபதி கிட்டு பொறுப்பேற்றிருந்தார்.அவர் போராளிகளிற்கு அன்று காலை தாக்குதல் பற்றிய விழக்கங்களை அளித்து மாலை 6.30 மணியளவில் முகாமின் உள்ளே அந்த பெளசர் வெடிக்கும் அதை தொடர்ந்து தொலைதொடர்பின் ஊடாககட்டளை வந்ததும் முகாம் மீதான தாக்குதலை தொடங்கும்படி வழியனுப்பி வைத்தார்.
அதன்படி போராளிகள் எல்லோரும் அன்று மாலை 4 மணியளவிலேயே தயாராய் நாவற்குழி முகாம் தாக்குதலிற்காக அவரவர் இடங்களில் நிலையெடுத்து காத்திருந்தனர்.இறுதியாக அந்த பெளசரை வெடிக்க வைப்பதற்காக நேர கணிப்பு பொறியை லெப். கேணல் பொன்னம்மானும் வாசுவும் இணைத்து முடித்திருந்தனர். எல்லா போராளிகளும் தங்களிற்கு தந்தவிடயங்களையும் எதிரியை எப்படியெல்லாம் தாக்கலாம் என்று தங்கள் மனங்களிலேயே ஒத்திகை பார்த்தபடி அந்த வெடி வெடிக்க போகும் 6.30 மணி எப்போவரும் என தங்கள் கை கடிகாரங்களை அடிக்கடி ஒரு பரபரப்புடன் பார்த்து கொண்டிருந்த வேளை 5.30 மணியவில் அந் பகுதியையே அதிர வைக்கும் ஒரு வெடியொசை கேட்டது. எல்லா போராளிகளின் முகங்களிலும் ஒரு வித கேள்வி குறி யுடன் தொலை தொடர்பு கருவி வைத்திரந்தவர்களை பார்த்தனர்.
தொலை தொடர்பில் எல்லோரும் கிட்டுவை அழைத்தபடி இருந்தனர்.அண்ணை என்ன நடந்தது. அங்கை வாசு பென்னம்மான் ஒரதரின்ரை தொடர்பும் கிடைக்கேல்லை என்ன நடந்ததெண்டு தெரியேல்லை எல்லாரும் அப்பியே நில்லுங்கோ நான் இடத்திற்கு போய் பாத்திட்டு உங்களை தொடர்பு கொள்ளுறன்கிட்டுவின் குரல் ஒலித்தது. அரை மணி நெரத்தின் பின்னர் அனைவரையும் தங்கள் முகாம்களிற்கு திரும்பும்படி கிட்டுவின் கட்டளை கிடைத்தது. ஆம் 5.30 மணிக்கே அந்த பெளசர் வெடித்து சிதறிவிட்டது. எப்படி எங்கே தவறு நடந்தது என்று யாருக்கும் தெரியாது காரணம் அதனருகில் நின்றிருந்த பொன்னம்மான் கேடில்ஸ் ரஞ்சன் அகியோருடன் வாசுவும் கந்தக காற்றுடன் கலந்து எங்கள் தேசத்தில் வீசும் காற்றாகி போனான். வாசு மட்டுமல்ல அவனது குடும்பத்தில் அவனது சகோதரன் மேஜர் ஜேம்ஸ். சகோதரி கப்ரன் சுந்தரி ஆகியோரும் எங்கள் மண்ணிற்காய் மாவீரர்களாகி போனார்கள். அவர்களிற்காய் எனது தலை தாழ்த்தி வணக்கத்தை தெரிவித்து கொண்டு நினைவுகளை தொடர்வேன்...
மேலே நான் இணைத்த கட்டுரை சுவிசில் இருந்து வெளியாகும் நிலவரம் பத்திரிகைக்காக எழுதியது அந்த கட்டுரையை எழுதி பத்திரிகைக்கு அனுப்பிய பின்னர் புலிகளின் வான்படை நடாத்திய தாக்குதல் செய்திகள் வெளிவந்தபோது ஒருகணம் புலிகளிற்கு ஒரு வான் படை உருவாக்கும் கனவுகளுடன் அயராது உழைத்த வாசு.அப்பையா அண்ணை .குட்டிசிறி .பாரத். போன்றவர்களுயும் பின்னர் சங்கரண்ணாவும் ஒரு கணம் நினைவில் வந்து போயினர்
வந்துவிட்டது சாத்திரியின் ஐரோப்பிய அவலம் அங்கம் - 3,
1:43 PM, Posted by sathiri, One Comment
ஐரோப்பிய அவலம் அங்கம் - 3
நிழலாடும் நினைவுகள்
10:41 AM, Posted by sathiri, No Comment

லெப்.கேணல் ஜொனி(விக்கினேஸ்வரன்: விஜயகுமார்)
பருத்திதுறை(குட்டலை)
இவர் பேராதனை பல்கலை கழகத்தில் பெளதீக விஞ்ஞான மாணவகாய் கல்வி கற்று கொண்டிருந்த காலத்தில் தன்னை விடுதலை போராட்டத்திற்காய் இணைத்த ஒரு போராளி.இந்தியா விடுதலை புலிகளிற்கும் பயிற்சி வழங்க முன்வந்த போது தலைவர் தொலை தொடர்பு மற்றும் அது சம்பந்தமான தொழில்நுட்ப பயிற்சிகளிற்கு ஜொனியை தெரிவு செய்து அனுப்பிருந்தார்.
அப்போது புலிகளிடம் தொலை தொடர்பு வசதிகள் அவ்வளவாக இல்லாத கால கட்டம் யாராவது மிக நம்பிக்கையான ஒருவர்தான் செய்திகளை காவிசென்று மற்றைய போராளிகளிற்கு தெரிவிப்பது வழைமை அப்படி புலிகளின் ஆரம்பகாலத்தில் இருந்தே பல இரகசிய செய்திகளைதாங்கி எடுத்து செல்பராக இருந்தவர்களில் முக்கியமானவர் ஜெனி.
1984ம் ஆண்டு ஆவணி மாதம் பொலிகண்டி பகுதியில் ஒரு எதிர்பாராத விதமாகமோதல் புலிகளிற்கும் இலங்கை இராணுவத்திற்கும் எற்படுகின்றது இராணுவத்திற்கு துணையாக பருத்தி துறை முகாம் இலங்கை கடற்படையும் இணைந்து கொள்ள அந்த மோல் ஒரு தொடர் சண்டையாக மாறிவிட்டது அது இரண்டாம் நாளும் தொடர்ந்தது அந்த காலகட்டதில் புலிகள் அமைப்பில் இருந்த அனேகமான போராளிகள் அந்த சண்டைநடந்த இடத்திற்கு போய் சேர்ந்திருந்தனர்.அவர் வழைமை போல பொலிகண்டி பகுதியில் சண்டையில் ஈடுபட்டிருந்த போராளிகளிற்கு சில செய்திகளை எடுத்து செல்லவும் அங்கு கள நிலைமைகளை அறிந்து வரவும் பண்டிதரின் முகாமில் இருந்து தயாராகிறார்.
அனால் சண்டைக்காக ஆயுதங்கள் அனைத்தையும் மற்றைய போராளிகள் எடுத்து சென்றுவிட்டதால். பாவனைக்கு உதவாது என்று கைவிடபட்ட ஒரு 4.5 வகை றீற்றா கைத்துப்பாக்கிறை எடுத்து இயக்கி பார்க்கிறார். அது பலதடைவை இயக்கினால் ஒரு தடைவை தான் அதன் விசை இயங்கும்.அதில் குண்டுகளை நிரப்பி இடுப்பில் செருகி கொண்டு கட்டியிருந்த சாரத்தினை மடித்து கட்டிகொண்டு புறப்படுகிறார்.
பருத்தி துறை கெருடாவில் பகுதியில் ஒரு ஒழுங்கையில் இவர் போய்க்கொண்டிருக்கும் போது அங்கு மறைந்திருந்த ஒரு இராணுத்தினன் திடீரென ஜொனியை நோக்கி தனது தப்பாக்கியை நீட்டியபடி அருகில் வரும்படி அழைக்கிறான் உடனே ஜொனி சைக்கிளை விட்டு இறங்கி அதை உருட்டியபடி அவனருகில் சென்று அய்யா நான் தோட்டதாலை வாறன் என்றபடி சைக்கிழை நிறுத்திவிட்டு கட்டியிருந்த சாரத்தை சரி செய்வது போல பாவனை செய்தபடி இடுப்பில் இருந்த துப்பாக்கியை திடீரென எடுத்து அவனை நோக்கி இயக்குகிறான். துப்பாகி இயங்கிவிட்டது அந்த இராணுவத்தினன் சுருண்டுவிழ ஜொனி முதல் தடைவையாக தப்பித்து கொள்கிறான்.
பின்னர் 1987ம் ஆண்டு பங்குனி மாதம் பலாலியை அண்மித்த கட்டுவன் பகுதியில் ஒரு மோதல் சம்பவம் அதில் தனது குழுவினருடன் சென்று ஜொனி சண்டையில் ஈடுபட்டு கொண்டிருந்த நேரம் எங்கிருந்தோ எதிரியின் துப்பாக்கி குண்டு ஒன்று ஜொனியின் இடது பக்க கண்ணிற்கு மேலே நெற்றியில் புகுந்து அது வெளியெறாமல் நல்ல வேளையாக மூளையை தாக்காமல் பின்பக்க மண்டையோட்டில் முட்டியபடி உள்ளேயே நின்று விட்டது.பின்னர் சிகிச்சைக்காக தமிழ்நாடு சென்ற ஜொனிக்கு அப்போதைய தமிழ் நாட்டில் முதலமைச்சராக இருந்த திரு எம்.ஜி.ஆர் அவர்கள் தன்னுடைய உதவியாளர் மூலம் ஜொனிக்கு சத்திர சிகிச்சைக்கு வேண்டிய உதவிகளை செய்து கொடுக்குமாறு உத்தவிட்டிருந்தார்.
இந்தியாவின் பிரபல வைத்தியர்கள் பலர் சேர்ந்து செய்த சத்திர சிகிச்சை மூலம் தலையில் இரந்த கண்டினை அகற்றி இரண்டாவது தடைவையாக ஜொனி சாவை சுகம்விசாரித்து விட்டு திரும்பியிருந்தான்.இந்தியாவhல் ஜொனி தங்கியிருந்த காலகட்டத்தில் ஈழத்தில்மணலாறு பகுதியில் இந்தியபடைகளுடனான மோதல் தீவிரமடைந்து தலைவரை எப்படியாவது பிடித்துவிடுவது என்று இந்திய இராணுவம் போரிட்டு கொண்டிருக்க இந்திய உளவு படையும் தன்னாலான தகிடுதன வேலைகளையும் செய்து கொண்டிருந்தது
அதில் ஒன்றுதான் சண்டையை முடிவுக்கு கொண்டுவர சில யோசனைகள் என்று ஜொனியிடம் சில செய்திகளை சொல்லி அதை தலைவரிடம் கொண்டு போய் சேர்க்க சொல்லிவிட்டு இந்தியாவிற்கு விசுவாசமான ஒட்டு குழுக்களின் உதவியுடன் ஜொனியை பின் தொடர்ந்து சென்று தலைவரின் இருப்பிடத்தை அறிந்து அதை அழிப்பதே இந்திய உளவுபடையின் நோக்கமாகும். அதன்படி ஜொனிவவுனியாவில் கொண்டுவந்து விடப்பட்டு தலைவரைபோய் சந்தித்துவரும்படி வழியனுப்பிவைத்தனர்.
ஜொனிக்கும் இவர்களது திட்டம் புரிந்தது ஆனால் போராட்டத்தின் ஆரம்பகாலந் தொட்டே எதிரிகளை ஏமாளிகளாக்கி செய்திகளை உரிய இடங்களிற்கு எடுத்த சென்ற ஜொனிக்கு இந்திய உளவுபடையையையும் அதன் ஒட்டு குழுக்களையும் ஏமாற்றி தன்னை பின் தெடரமுடியாதவாறு சென்று தலைவரை சந்திப்பது ஒன்றும் பெரிய விடயமாய் இருக்கவில்லை. அதன்படியே தலைவரை சென்று சந்தித்து விட்டு திரும்பிவந்தான். தங்களை ஏமாற்றி தலைவரின் இருப்பிடத்தை அறியமுடியாதவாறு செய்துவிட்டான் என்கிற ஆத்திரத்தில் தூதுவனான நிராயுதபாணியாய் சென்றுவந்த ஜொனியை இந்திய இராணுவம் கொலைசெய்து வீதியிலே வீசி விட்டு சென்று விட்டனர்.,இந்திய வைத்தியர்களால் காப்பாற்ற பட்ட உயிரை இந்திய இராணுவம் நயவஞ்சகமாக பறித்து கொண்டது.
ஐரோப்பிய அவலம் நாடகம் அங்கம் - 2
1:43 PM, Posted by sathiri, No Comment
புலத்துவாழ் பெரியார் பேராண்டிகளே வணக்கம்.
7:37 AM, Posted by sathiri, 5 Comments
புலத்துவாழ் பெரியார் பேராண்டிகளே வணக்கம்.
பேனா என்பது அதனின்றும் வெளிப்படும் எழுத்து என்பது ஒரு மாபெரும் சக்தி. அறிவுள்ள ஆழுமையுள்ள ஒருவனின் பேனாவால் இந்த உலகையெ புரட்டி போடலாம். ஆனால் இன்று தொழில் நுட்ப வளர்ச்சிகாரணமாக எத்தனை பேர் பேனா பிடித்து எழுதுகிறார்கள் என்னபது சந்தேகமே ஆனால் எழுதுபவர்களின் தொகை கூடியுள்ளது என்பது மட்டும் உண்மை.அது தொழில் நுட்பம் எமக்கு தந்த நல்லதொரு பயன்பாடு.காரணம் முன்னர் எல்லாம் சாதாரணமாக ஒரு சிறு கதையை எழுதி அதை பலபேரிடம் கொண்டு போய் சேர்ப்பதென்றாலே எழுதியவன் பாடு பெரும்பாடு. சில நேரங்களில் எழுதியவனே அலுத்து போய் விரக்தியில் அதை கிழித்து எறிந்து விட்டு போவதும் நடப்பதுண்டு .
எனக்கும் அப்படி அனுபவங்கள் உண்டு அனால் இப்பொழுது அப்படியல்ல .வீட்டிலிருந்த படியே எழுதியதை இந்த உலகில் குறைந்தது ஒலு நூறு பேராவது படிக்க கிடைக்க செய்யமுடியும். அதனால் எல்லோருமே எழதுகிறார்கள் என்னவெல்லாமோ எழுதுகிறார்கள்.என்ன சாத்திரி புலம்பகிறான் எண்டு நினைக்கிறீர்கள் உண்மைதான் புலம்புகிறேன் காரணம். ஈழதமிழரை பொறுத்தவரை சா(தீ) யம்என்பது மெல்ல மெல்ல மறக்க பட்டு அதன் கூர்கள் மழுங்கடிக்கபட்டு அது புலத்திலும் நிலத்திலும் மறைந்து கொண்டிருக்கின்ற நேரம்.
புலத்தில் உள்ள சிலரோ தற்சமயம் தங்கள் புலைமைகளை எழுத்தில் காட்டுவதற்கு என்று சிலரும். இந்த சாதியை எதிர்க்கிறேன் என்கிற பெயரில் மீண்டும் அந்த சாதிஆயுதத்தை கூர்தீட்டி அதை எம்மவர் கைகளில் கொடுத்து எமக்குள் நாங்களே அடிபட்டு மடிந்து போகஎன்று ஒரு பெரிய சதியை தீட்டி சிலர் தலித்துகளிற்காக பேராடுகிறோம் என்றும் பறப்பட்டு இருக்கின்றனர்.அந்த போலி தலித்துகளிற்கான போராட்டத்தில் பிரான்சில் தானும் ஒரு எழுத்தாளன் என்று அடையாளபடுத்தி கொண்டு சோபாசக்தி என்பவர் எழுதிதள்ழுகிறார்.ஈழத்தில் தலித்துகள் என்கிற சொற்பதம் இருந்ததாக இவர்எழுத்துக்கள் மூலமாக தான் தெரிந்து கொண்டேன்.இவர் எதிர்ப்பது உண்மையில் ஈழத்து மண்ணின் மேல்சாதியினரையல்ல அந்த போர்வையில் எல்லாவற்றிற்கும் மேலான எமது விடுதலை போராட்டத்தையே என்பது இவரது எழுத்தக்களை படித்தவர்களிற்கு நன்கு புரியும்.இதற்கு மேல் இவரை பற்றி எழுதி இவரை ஒரு பெரியவராக்க நான் விரும்பவில்லை.அடுத்ததாக சாதிகள் இந்து மதத்தாலும் அதன்வருண வேதத்தால்தாலும் தான் வந்தது எனவே இந்து மதத்தை எதிர்ப்போம் என்று பெரியார் பாதையில் சிலர்.
சரி இந்துமதத்தின் வரண வேதத்தால் தான் சாதிவந்ததாகவே இருக்கட்டும். இதை எழுதுபவர்கள் எத்தனை பேரிற்கு இந்த வருண வேதத்தை பற்றி தெரியும் அல்லது எத்தனை பேரிற்கு அது எழுதபட்டிருக்கும் மொழியான சமஸ்கிருதம் தெரியும் என்று பார்த்தால் எவருக்குமே சுத்தமாக தெரியாது. எப்போதோ செத்து போன சமஸ்கிருத மொழியில் எழுதபட்டதாக சொல்லபடுகின்றகின்ற சாதியத்தை மட்டும் சாக விடாமல் அதை எதிர்க்கிறேன் பேர்வழியென்று நீறூற்றிவழர்க்கிறீர்கள்.இந்༢r />?? சாதியை எதிர்ப்பதாக சொல்லிகொண்டு சைவ மதத்தை எதிர்ப்பவர்களிடம் ஒரு கேள்வி? உலகில் உள்ள எல்லாமதங்களின் மூல நூல்களிலும் மதசடங்குகளிலுமே தற்காலத்திற்கு உதவாத பலவிடயங்களும் பல மூடநம்பிக்கைகளும் இருக்கதான் செய்கிறது.
அவற்றை நாங்கள் தான் காலத்திற்கு ஏற்றவிடயங்களை ஆராய்ந்து அதன் மூடபழக்கவழக்கங்களை அறிவியல் தொழில் நுட்பத்தின் உதவிகளுடன் அகற்றி மதத்தை தூய்மையாக்க வேண்டுமே தவிற தூற்றுவது புத்திசாலித்தனம் அல்ல.ஆரியன் சாதியை தோற்றுவித்தான் என்பதற்காக மதத்தை வெறுப்பது அசிரியர் சரியில்லையென்பதற்காக படிக்கவே மாட்டேன் என்பது போல.சரி ஆரியன் சாதியை தோற்றுவித்தான். அதில் சூத்திரனிற்குள் ஆயிரம் சாதியை தோற்றுவித்தது யார்?? நாம்தானே.ஆகவே ஆரியன் தோற்றுவித்த சாதியை அழிப்போம் அழிப்போம் என்று கத்துவதை விட நாம் தோற்றுவித்ததை முதலில் நாமே அழிக்கலாமே.அடுத்ததாய் இந்த புலத்தில் நாத்திகம் புரட்சி பேசுபவர்களை நான் நீண்டகாலமாகவே கவனித்ததில் தனிப்பட்டவாழ்க்கையில் எவருமே அதை கடைப்பிடித்தவர்களை காணவில்லை.புரட்சிபேசி தாலியும் பொட்டும் பெண்களிற்கு வேலி அதை அழிப்போம் என்று சொன்னவர்களின் மனைவிமார்கள் அனைவருமே விழா காலங்களில்தாலியுடனும் பொட்டுடனும் தான் உலா வருகின்றனர்.
அதைவிட நாத்திகம் பேசுகின்றவர்களின் மனைவி பிள்ளைகள் கோவிலுக்கு தவறாமல் போய் வருகிறார்கள். அதற்கு அவர்கள் தரும் விழக்கம் அது அவர்களின் தனிப்பட்டவிருப்பு அதில் நான் தலையிட முடியாது என்பார்கள். ஒரு கணவனுடன் அவனைபற்றி எல்லாவற்றையுமே தெளிவாக புரிந்து எல்லாகருத்துகளுடனும் ஒத்து போய் இறுதிவரை சேர்ந்திருக்கும் மனைவியையே தன்னுடையை நாத்திக கருத்துடன் ஒத்து போக வைக்க முடியாதவர்கள் எப்படி மற்றவர்கள் தன்னுடைய கருத்தை கேட்டு அதன்படி நடக்கவேண்டும் எதிர்பார்க்கலாம்.ஊருக்கு சொல்ல முதல் உங்கள் வீட்டில் சொல்லி திருத்த பாருங்கள்.அது மட்டுமல்ல கோவிலுக்கு போகும் மனைவியிடம் " அப்பிடியே என்ரை அவிட்ட நட்சத்திரத்திற்கு ஒரு அருச்சனை பண்ணிகொண்டுவா"என்று சொல்லிவிட்டு கடவுள் எதிர்ப்பு எழுதிகொண்டிருப்பார்கள்.சரி அதை எதிர்த்து எழுதியும் பேசியும் வந்தசில புரட்சி பெண்கள் கூட தாலியை கட்டிகொண்டு தலைமறைவாகிவிட்டனர்.(பெயர்கள்
குறிப்பிட விரும்பவில்லை)இறுதியாக ஒன்று எழுதவிரும்புகிறேன் பெரியார் சாதியை எதிர்த்தார் கடவுள் சிலையை செருப்பால் அடித்தார் காரணம் கடவுளின் பெயரால் அந்த காலங்களில் சிலர் மற்றவர்களை அடிமை படுத்தியதன் காரணத்தால் நான் சாமி சிலையையே செருப்பால் அடிக்கிறேன் சாமி என்னை ஒன்றும் செய்யவில்லை எனவே சாமிபெயரால்உங்களை அடிமைபடுத்த முடியாது எனவே பயபடாதீர்கள் என்று படிப்பறிவு மற்றும் வெளியுலக அறிவு அற்ற மக்களை நம்பவைக்கவே.அனால் இன்று அதுவும் புலத்தில் சாமியை காரணம் காட்டிதான் சாதியை ஒழிக்கவேண்டிய அவசியம் இல்லை.
அதுமட்டுமல்ல இன்று புலத்தில் சாதிகள் என்றால் என்னவென்றே தெரியமல் நாம் எல்லோரும் மனித சாதி என்று நினைத்து கொண்டிருக்கும் இளையசமுதாயத்தினரிடம் .மெல்ல செத்துகொண்டிருக்கும் சாதியை அதை எதிர்க்கிறேன் என்று சொல்லி கொண்டேஅதற்குள் மதத்தையும் இழுத்து அவற்றை இளையசமுதாயத்திடம் அறிமுகபடுத்தி அவர்கள் கைகளிலும் ஆயுதத்தை கொடுக்காதீர்கள்.காரணம் எமது இனவிடுதலையுடன் இந்த சாதிவிடுதலைக்காகவும் நாம் கொடுத்த விலை அதிகம் நன்றி சாத்திரி
74 வது உலக தேசிக்காய் திருவிழா
12:18 AM, Posted by sathiri, 5 Comments








74 வது உலக தேசிக்காய் திருவிழா
வருடா வருடம் கொண்டாடப்படும் உலக தேசிக்காய்த்திருவிழா பிரான்சின் மொந்தோன் நகரில் 17 ந் திகதி மாசி மாதம் ஆரம்பமாகியுள்ளது. இது பங்குனி 4ந் திகதி வரை நடைபெறும் இந்த திருவிழாஒவ்வெரு ஆண்டும் ஒரு நாட்டின் கலை கலாச்சாரங்களை சிறப்பாக பிரதிநிதித்துவ படுத்துவது வழைமை. அந்த வரிசையில் இந்த ஆண்டு இந்திய கலை கலாச்சாரங்களை பிரதிநிதித்துவ படுத்தி கெளரவிக்கபட்டது. இந்த நிகழ்வின் சிறப்பே அங்கு அமைக்கபடும் அந்தனை அலங்காரங்களும் முழுக்க முழுக்க தேசிக்காய் மற்றும் ஒரேஞ்சு( ) பழங்களாலேயே அமைக்கபடும். இந்த அரங்காரங்களிற்காக அந்த பகுதி^களில் கிடைக்கும் தேசிக்காய் மற்றும் ஒரேஞ்ச் பழங்கள் தவிர்ந்து ஸ்பெயின் நாட்டில் இருந்தும் தொன் கணக்காக வருவிக்க படுவது வழைமை. இந்த ஆண்டு இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிப்பதான முழுக்க முழுக்க தேசிக்காய் மற்றும் ஒரேஞ்சு பழங்களால் அமைக்கபட்டிருந்த பிரமாண்டமான் தாஜ்மகால். பெரிய பிள்ளையார் உருவம்.நான்முகன் உருவம் .புத்தர்ரின் உருவங்கள் பெரும்பாலான மக்களை கவர்ந்தது.அது மட்டுமல்ல இந்தியாவில் இருந்து விசேடமாக பரதநாட்டிய மற்றும் ராஜஸ்தானிய நடன குழுவினரும் அழைக்கபட்டு அவர்களது நடனங்களும் நடைபெற்றன

ஐரோப்பிய அவலம் அங்கம் நான்கு கேட்க இங்கே அழுத்துங்கள்.
