74 வது உலக தேசிக்காய் திருவிழா
வருடா வருடம் கொண்டாடப்படும் உலக தேசிக்காய்த்திருவிழா பிரான்சின் மொந்தோன் நகரில் 17 ந் திகதி மாசி மாதம் ஆரம்பமாகியுள்ளது. இது பங்குனி 4ந் திகதி வரை நடைபெறும் இந்த திருவிழாஒவ்வெரு ஆண்டும் ஒரு நாட்டின் கலை கலாச்சாரங்களை சிறப்பாக பிரதிநிதித்துவ படுத்துவது வழைமை. அந்த வரிசையில் இந்த ஆண்டு இந்திய கலை கலாச்சாரங்களை பிரதிநிதித்துவ படுத்தி கெளரவிக்கபட்டது. இந்த நிகழ்வின் சிறப்பே அங்கு அமைக்கபடும் அந்தனை அலங்காரங்களும் முழுக்க முழுக்க தேசிக்காய் மற்றும் ஒரேஞ்சு( ) பழங்களாலேயே அமைக்கபடும். இந்த அரங்காரங்களிற்காக அந்த பகுதி^களில் கிடைக்கும் தேசிக்காய் மற்றும் ஒரேஞ்ச் பழங்கள் தவிர்ந்து ஸ்பெயின் நாட்டில் இருந்தும் தொன் கணக்காக வருவிக்க படுவது வழைமை. இந்த ஆண்டு இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிப்பதான முழுக்க முழுக்க தேசிக்காய் மற்றும் ஒரேஞ்சு பழங்களால் அமைக்கபட்டிருந்த பிரமாண்டமான் தாஜ்மகால். பெரிய பிள்ளையார் உருவம்.நான்முகன் உருவம் .புத்தர்ரின் உருவங்கள் பெரும்பாலான மக்களை கவர்ந்தது.அது மட்டுமல்ல இந்தியாவில் இருந்து விசேடமாக பரதநாட்டிய மற்றும் ராஜஸ்தானிய நடன குழுவினரும் அழைக்கபட்டு அவர்களது நடனங்களும் நடைபெற்றன
சாத்திரியார்
நல்லாயிருக்கு, கறிக்கு மட்டும் தான் உபயோகிக்கலாம் எண்டு இதுவரை நினைத்திருந்தேன்.
நன்றி பிரபா நீங்கள் தேசிக்காய் கறிக்கு மட்டும்தான் விடுறனீங்களா?? நான் காலையிலை எழும்பினதும் கரைச்சும் குடிக்கிறனான் . பித்தத்திற்கு நல்லதாம்
சாத்திரி!
சில தினங்களுக்கு முன் நீசில் உணவகம் வைத்திருக்கும் என் நண்பர் இது பற்றிக் கூறிய போது; சில படங்கள் அனுப்பு;நான் பதிவில் போட எனக் கூறி வைத்தேன். நீங்கள் முந்திவிட்டீர்கள்.
ஓரேஞ்சைத் தோடை எனப் போடலாம்.
அடுத்து அழகான படங்கள்!கொடுத்து வைத்தவர் நீங்கள் அழகான ,அருமையான சுவாத்தியமான; கோலாகலமான நகரில் வசிக்கிறீர்கள்.(பல தடவை வந்துள்ளேன்) வசந்த காலத்தில் "மலர்த் திருவிழாவும்" அருமையாக இருக்கும்.
அது சரி உலகத்திலே எனக்குப் பித்தம் இருக்கென ஒப்புக் கொண்டவர் நீங்களாகத் தான் இருப்பீர்கள்!
இதையெல்லாம் வெளியே சொல்லக்கூடாது கண்டியளோ (பகிடி...கோவிக்கக்கூடாது)
"நீசைப் பற்றியும் அதன் சுற்றுப் புறம் பற்றியும் எழுதுங்கள்.
உங்கள் பதிவிற்கு நன்றி யோகன் நீஸ் நகரில் உணவகம் வைத்திருப்பவர் உங்கள் நண்பரா?? யாரது ?? எனக்கு கட்டாயம் தெரிந்திருக்கும் அப்படியானால் அடுத்த தடைவை நீஸ் பக்கம் வந்தால் என்னை சந்திக்கலாம். பித்தம் காலையிலை தலையிடி உலகத்திலை 90 வீதமான ஆண்களிற்கு இருக்கிற பிரச்சனை தான் ஆனால் எல்லாரும் ஒத்து கொள்ளுறேல்லை கிகிகி