Navigation


RSS : Articles / Comments


புலத்துவாழ் பெரியார் பேராண்டிகளே வணக்கம்.

7:37 AM, Posted by sathiri, 5 Comments

இந்தவார ஒரு பேப்பரிற்காக எழுதிய கட்டுரை

புலத்துவாழ் பெரியார் பேராண்டிகளே வணக்கம்.

பேனா என்பது அதனின்றும் வெளிப்படும் எழுத்து என்பது ஒரு மாபெரும் சக்தி. அறிவுள்ள ஆழுமையுள்ள ஒருவனின் பேனாவால் இந்த உலகையெ புரட்டி போடலாம். ஆனால் இன்று தொழில் நுட்ப வளர்ச்சிகாரணமாக எத்தனை பேர் பேனா பிடித்து எழுதுகிறார்கள் என்னபது சந்தேகமே ஆனால் எழுதுபவர்களின் தொகை கூடியுள்ளது என்பது மட்டும் உண்மை.அது தொழில் நுட்பம் எமக்கு தந்த நல்லதொரு பயன்பாடு.காரணம் முன்னர் எல்லாம் சாதாரணமாக ஒரு சிறு கதையை எழுதி அதை பலபேரிடம் கொண்டு போய் சேர்ப்பதென்றாலே எழுதியவன் பாடு பெரும்பாடு. சில நேரங்களில் எழுதியவனே அலுத்து போய் விரக்தியில் அதை கிழித்து எறிந்து விட்டு போவதும் நடப்பதுண்டு .

எனக்கும் அப்படி அனுபவங்கள் உண்டு அனால் இப்பொழுது அப்படியல்ல .வீட்டிலிருந்த படியே எழுதியதை இந்த உலகில் குறைந்தது ஒலு நூறு பேராவது படிக்க கிடைக்க செய்யமுடியும். அதனால் எல்லோருமே எழதுகிறார்கள் என்னவெல்லாமோ எழுதுகிறார்கள்.என்ன சாத்திரி புலம்பகிறான் எண்டு நினைக்கிறீர்கள் உண்மைதான் புலம்புகிறேன் காரணம். ஈழதமிழரை பொறுத்தவரை சா(தீ) யம்என்பது மெல்ல மெல்ல மறக்க பட்டு அதன் கூர்கள் மழுங்கடிக்கபட்டு அது புலத்திலும் நிலத்திலும் மறைந்து கொண்டிருக்கின்ற நேரம்.

புலத்தில் உள்ள சிலரோ தற்சமயம் தங்கள் புலைமைகளை எழுத்தில் காட்டுவதற்கு என்று சிலரும். இந்த சாதியை எதிர்க்கிறேன் என்கிற பெயரில் மீண்டும் அந்த சாதிஆயுதத்தை கூர்தீட்டி அதை எம்மவர் கைகளில் கொடுத்து எமக்குள் நாங்களே அடிபட்டு மடிந்து போகஎன்று ஒரு பெரிய சதியை தீட்டி சிலர் தலித்துகளிற்காக பேராடுகிறோம் என்றும் பறப்பட்டு இருக்கின்றனர்.அந்த போலி தலித்துகளிற்கான போராட்டத்தில் பிரான்சில் தானும் ஒரு எழுத்தாளன் என்று அடையாளபடுத்தி கொண்டு சோபாசக்தி என்பவர் எழுதிதள்ழுகிறார்.ஈழத்தில் தலித்துகள் என்கிற சொற்பதம் இருந்ததாக இவர்எழுத்துக்கள் மூலமாக தான் தெரிந்து கொண்டேன்.இவர் எதிர்ப்பது உண்மையில் ஈழத்து மண்ணின் மேல்சாதியினரையல்ல அந்த போர்வையில் எல்லாவற்றிற்கும் மேலான எமது விடுதலை போராட்டத்தையே என்பது இவரது எழுத்தக்களை படித்தவர்களிற்கு நன்கு புரியும்.இதற்கு மேல் இவரை பற்றி எழுதி இவரை ஒரு பெரியவராக்க நான் விரும்பவில்லை.அடுத்ததாக சாதிகள் இந்து மதத்தாலும் அதன்வருண வேதத்தால்தாலும் தான் வந்தது எனவே இந்து மதத்தை எதிர்ப்போம் என்று பெரியார் பாதையில் சிலர்.

சரி இந்துமதத்தின் வரண வேதத்தால் தான் சாதிவந்ததாகவே இருக்கட்டும். இதை எழுதுபவர்கள் எத்தனை பேரிற்கு இந்த வருண வேதத்தை பற்றி தெரியும் அல்லது எத்தனை பேரிற்கு அது எழுதபட்டிருக்கும் மொழியான சமஸ்கிருதம் தெரியும் என்று பார்த்தால் எவருக்குமே சுத்தமாக தெரியாது. எப்போதோ செத்து போன சமஸ்கிருத மொழியில் எழுதபட்டதாக சொல்லபடுகின்றகின்ற சாதியத்தை மட்டும் சாக விடாமல் அதை எதிர்க்கிறேன் பேர்வழியென்று நீறூற்றிவழர்க்கிறீர்கள்.இந்༢r />?? சாதியை எதிர்ப்பதாக சொல்லிகொண்டு சைவ மதத்தை எதிர்ப்பவர்களிடம் ஒரு கேள்வி? உலகில் உள்ள எல்லாமதங்களின் மூல நூல்களிலும் மதசடங்குகளிலுமே தற்காலத்திற்கு உதவாத பலவிடயங்களும் பல மூடநம்பிக்கைகளும் இருக்கதான் செய்கிறது.

அவற்றை நாங்கள் தான் காலத்திற்கு ஏற்றவிடயங்களை ஆராய்ந்து அதன் மூடபழக்கவழக்கங்களை அறிவியல் தொழில் நுட்பத்தின் உதவிகளுடன் அகற்றி மதத்தை தூய்மையாக்க வேண்டுமே தவிற தூற்றுவது புத்திசாலித்தனம் அல்ல.ஆரியன் சாதியை தோற்றுவித்தான் என்பதற்காக மதத்தை வெறுப்பது அசிரியர் சரியில்லையென்பதற்காக படிக்கவே மாட்டேன் என்பது போல.சரி ஆரியன் சாதியை தோற்றுவித்தான். அதில் சூத்திரனிற்குள் ஆயிரம் சாதியை தோற்றுவித்தது யார்?? நாம்தானே.ஆகவே ஆரியன் தோற்றுவித்த சாதியை அழிப்போம் அழிப்போம் என்று கத்துவதை விட நாம் தோற்றுவித்ததை முதலில் நாமே அழிக்கலாமே.அடுத்ததாய் இந்த புலத்தில் நாத்திகம் புரட்சி பேசுபவர்களை நான் நீண்டகாலமாகவே கவனித்ததில் தனிப்பட்டவாழ்க்கையில் எவருமே அதை கடைப்பிடித்தவர்களை காணவில்லை.புரட்சிபேசி தாலியும் பொட்டும் பெண்களிற்கு வேலி அதை அழிப்போம் என்று சொன்னவர்களின் மனைவிமார்கள் அனைவருமே விழா காலங்களில்தாலியுடனும் பொட்டுடனும் தான் உலா வருகின்றனர்.

அதைவிட நாத்திகம் பேசுகின்றவர்களின் மனைவி பிள்ளைகள் கோவிலுக்கு தவறாமல் போய் வருகிறார்கள். அதற்கு அவர்கள் தரும் விழக்கம் அது அவர்களின் தனிப்பட்டவிருப்பு அதில் நான் தலையிட முடியாது என்பார்கள். ஒரு கணவனுடன் அவனைபற்றி எல்லாவற்றையுமே தெளிவாக புரிந்து எல்லாகருத்துகளுடனும் ஒத்து போய் இறுதிவரை சேர்ந்திருக்கும் மனைவியையே தன்னுடையை நாத்திக கருத்துடன் ஒத்து போக வைக்க முடியாதவர்கள் எப்படி மற்றவர்கள் தன்னுடைய கருத்தை கேட்டு அதன்படி நடக்கவேண்டும் எதிர்பார்க்கலாம்.ஊருக்கு சொல்ல முதல் உங்கள் வீட்டில் சொல்லி திருத்த பாருங்கள்.அது மட்டுமல்ல கோவிலுக்கு போகும் மனைவியிடம் " அப்பிடியே என்ரை அவிட்ட நட்சத்திரத்திற்கு ஒரு அருச்சனை பண்ணிகொண்டுவா"என்று சொல்லிவிட்டு கடவுள் எதிர்ப்பு எழுதிகொண்டிருப்பார்கள்.சரி அதை எதிர்த்து எழுதியும் பேசியும் வந்தசில புரட்சி பெண்கள் கூட தாலியை கட்டிகொண்டு தலைமறைவாகிவிட்டனர்.(பெயர்கள்
குறிப்பிட விரும்பவில்லை)இறுதியாக ஒன்று எழுதவிரும்புகிறேன் பெரியார் சாதியை எதிர்த்தார் கடவுள் சிலையை செருப்பால் அடித்தார் காரணம் கடவுளின் பெயரால் அந்த காலங்களில் சிலர் மற்றவர்களை அடிமை படுத்தியதன் காரணத்தால் நான் சாமி சிலையையே செருப்பால் அடிக்கிறேன் சாமி என்னை ஒன்றும் செய்யவில்லை எனவே சாமிபெயரால்உங்களை அடிமைபடுத்த முடியாது எனவே பயபடாதீர்கள் என்று படிப்பறிவு மற்றும் வெளியுலக அறிவு அற்ற மக்களை நம்பவைக்கவே.அனால் இன்று அதுவும் புலத்தில் சாமியை காரணம் காட்டிதான் சாதியை ஒழிக்கவேண்டிய அவசியம் இல்லை.

அதுமட்டுமல்ல இன்று புலத்தில் சாதிகள் என்றால் என்னவென்றே தெரியமல் நாம் எல்லோரும் மனித சாதி என்று நினைத்து கொண்டிருக்கும் இளையசமுதாயத்தினரிடம் .மெல்ல செத்துகொண்டிருக்கும் சாதியை அதை எதிர்க்கிறேன் என்று சொல்லி கொண்டேஅதற்குள் மதத்தையும் இழுத்து அவற்றை இளையசமுதாயத்திடம் அறிமுகபடுத்தி அவர்கள் கைகளிலும் ஆயுதத்தை கொடுக்காதீர்கள்.காரணம் எமது இனவிடுதலையுடன் இந்த சாதிவிடுதலைக்காகவும் நாம் கொடுத்த விலை அதிகம் நன்றி சாத்திரி

5 Comments

யோகன் பாரிஸ்(Johan-Paris) @ 9:37 AM

//இன்று புலத்தில் சாதிகள் என்றால் என்னவென்றே தெரியமல் நாம் எல்லோரும் மனித சாதி என்று நினைத்து கொண்டிருக்கும் இளையசமுதாயத்தினரிடம் .மெல்ல செத்துகொண்டிருக்கும் சாதியை அதை எதிர்க்கிறேன் என்று சொல்லி கொண்டேஅதற்குள் மதத்தையும் இழுத்து அவற்றை இளையசமுதாயத்திடம் அறிமுகபடுத்தி அவர்கள் கைகளிலும் ஆயுதத்தை கொடுக்காதீர்கள்.காரணம் எமது இனவிடுதலையுடன் இந்த சாதிவிடுதலைக்காகவும் நாம் கொடுத்த விலை அதிகம்//

சாத்திரி!
இவை மிகச் சரியான கூற்று!! சிந்திக்க வேண்டியவை!!!
"பிள்ளையார் பிடிப்பதெனப் குரங்கு ஆக்குவோர்"
சொல்ல வந்ததை நன்கு சொல்லியுள்ளீர். சற்று எழுத்துப் பிழை
தூக்கலாக இருக்கிறது. கவனிக்கவும்

ஈழபாரதி @ 12:19 PM

நல்ல கட்டுரை வாழ்த்துக்கள்.

Unknown @ 6:32 AM

வணக்கம் சாஸ்த்திரியாரே.
நன்றாகஇருக்குஉங்கள் கட்டுரை.
ஆனால்சிலபிழைகளும்உண்டு.
அவை 1

மனைவியையே தன்னுடையை நாத்திக கருத்துடன் ஒத்து போக வைக்க முடியாதவர்கள் எப்படி மற்றவர்கள்
தன்னுடைய கருத்தை கேட்டு அதன்படி நடக்கவேண்டும் எதிர்பார்க்கலாம்?
பெரியார் யார்என்றுஉமக்குத்துதெரியுமா?
அவருடையகொள்கை என்ன என்றாவது தெரியுமா?
அதாவது
"சுயமரியாதைசித்தாந்தம்"
நாத்திகம்என்பது தினிக்கப்படுவதுஇல்லை.
"எனதுமதம்இந்துமதம்"
நான் இன்னதிகதி
இத்தனைமணிக்கு நாத்திகன்ஆகவுள்ளேன்.
எனதுமனைவியாகியநீயும்
மற்றும் எமதுபிள்ளைகளும்
நாளையிலிருந்து
நாத்திகர்கள்ஆகிறோம்என்று
அறிவித்துவிட்டுவருவதில்லை நாத்திகம்.
ஒவ்வொருவர்வாழ்விலும்
நடக்கும்
சமுதாயச்சீர்கேடுகளை
வைத்துதான்
வரும்.
அல்லது
நல்லபலநூல்களைபடிப்பதால்
வரலாம்.
பெரியாரேமுதலில்இந்துமதகடவுள் பக்தர்தான்.
இந்துமதம்என்னும்பெயரில்
கடவுள்தான்
எல்லாம்என்றுகூறிமனிதனை
மனிதனே
அடிமையாக்குவதைத்தான் அவர்எதிர்த்தார்.
பெரியாரேமேடைபோட்டு என்னத்தைசொல்லிவந்தார்?
கடவுள் இல்லை என்றும் அதற்கானவிளக்கத்தையும்.
அவர்தனதுகருத்துக்களை
கட்டாயப்படுத்தியார்மீதும்
தினிக்கவில்லை.
காரணம்அதுதான்
"சுயமரியாதைசித்தாந்தம்"
நன்றி இத்துடன்முடிக்கவில்லை.
மீண்டும் வருவேன்.
(இன்னும்எழுதநிறைய்இருக்கு)
இப்படிக்கு
>மதுமிதா<

sathiri @ 9:38 AM

வணக்கம் மதுமிதா உங்கள் கருத்துக்களிற்கு நன்றிகள் இந்த கட்டுரையை படித்த பலரும் பல்வேறு பகுதிகளிலும் உங்களை போலவே நான் பெரியாரிற்கு எதிராகவோ அல்லது அவரது கரத்துக்கள் சிந்தனைகளிற்கோ எதிராக எழுதியதாக ஒரு அபிப்பிராயத்தில் பதில்கள் எழுதியுள்ளனனர். கட்டுரையை இன்னொரு முறை படித்து பாருங்கள் நான் பெரியாரை பற்றியோ அவரது கொள்கைகள் பற்றியோ விமர்சிக்கவில்லை நானும் பெரியார் கொள்கைகள் மீது பற்றும் பெரியார் மீது மதிப்பும் வைத்திருப்பவன் தான் அதே போல நானும் சாத்திர சம்பிரதாயங்களை நம்பாதவன் இதுவரை அதை பின்பற்றியதுமில்லை ஆனால் இன்று புலத்தில் சிலர் தங்களை மற்றவர்களிடமிருந்து வித்தியாச படுத்தி காட்டி தங்களிற்கு எல்லாம் தெரியும் தங்களைபற்றி மற்றவர்கள் பேசவேண்டும் என்கிற ஒரேயொரு காரணத்திற்காக சுயமரியாதை சாதீயம் சம்பிரதாயம் என்று பேசி அதற்குள் எங்கள் விடுதலை போராட்டத்தையும் இழுத்து அதையும் கொச்சை படுத்தி பெரியாரிற்கே அவமரியாதையை ஏற்படுத்தும் வேலைகளில் இறங்கியுள்ளனர்.இது அவர்களை இனம் காட்டவும் அவர்கள் தாங்கள் எழுத்துகளில் மட்டுமே தான் இவற்றை செய்கின்றனர் ஆனால் அவர்கள் செய்கைகள் எல்லாம் அதற்கெதிரானசெய்கைகள் என்று காட்டவும் எழுதிய கட்டுரைதான் மற்றபடி நான்பெரியார் கொள்கைகள் அவரை பற்றியும் நிறையவேபடித்திருக்கிறேன்

Anonymous @ 11:11 AM

Mathumitha....

மனைவியையே தன்னுடையை நாத்திக கருத்துடன் ஒத்து போக வைக்க முடியாதவர்கள் எப்படி மற்றவர்கள்
தன்னுடைய கருத்தை கேட்டு அதன்படி நடக்கவேண்டும் எதிர்பார்க்கலாம்?

Please correct your family....Same human rights for your wife and others too...

பெரியார் என்றுஉமக்குத்துதெரியுமா?
We are understanding meaning of பெரியார் but Vengathans never think about others feelings...

What they need...Other than hinduism (any kind of) any religion is good. Jigathi also good bcos of its humanity. This is what பெரியார் said....

For any more examples...Please read all anti hindu Tamil blogs.