Navigation


RSS : Articles / Comments


படமெடுக்கும் புலிகள்

12:08 PM, Posted by sathiri, 10 Comments

பாம்பு படமெடுக்கும் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் புலி படமெடுக்கிது என்று சொல்லியிருப்பவர் வேறு யாருமல்ல விகடன் பத்திரிகைக்காக ஒரு தடாலடி ஸ்டேட்மென்டைத் தூக்கிப் போட்டிருக்கிறார் காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம். அவரது ஸ்டேட்மெனற்

'விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் தமிழ் சினிமாவில் ஏகத்துக்கும் முதலீடு செய்கிறார்கள். அவர்கள் மூலம் தமிழ் சினிமாவை இப்போது ஆட்டிப்படைப்பது புலிகள்தான்!'' - வருஷத்துக்கு முன்னாடி மலேசியா, சிங்கப்பூர்லதான் தமிழ் சினிமாவுக்கு வரவேற்பும் ஆதரவும் இருந்துச்சு. இப்போ ஐரோப்பிய நாடுகளிலேயும், கனடா உள்ளிட்ட அமெரிக்க நாடுகளிலேயும் தமிழ் சினிமாவுக்கு செல்வாக்கு பெருகியிருக்கு. காரணம், இலங்கைத் தமிழர்கள் பல பேரு இந்த நாடுகள்ல செல்வச் செழிப்போட இருக்காங்க. இவங்கள்ல சிலரின் முக்கிய வேலையே விடுதலைப்புலிகளுக்காக வேண்டிக் கேட்டோ மிரட்டியோ பணம் வசூலிக்கிறதுதான். அவர்கள் நேரடியாவும், மறைமுகமாகவும் தமிழ் சினிமாவைத் தயாரிப்பது,விநியோகம் பண்றது போன்ற வேலைகளையும் பார்க்கிறாங்க. தமிழ் சினிமா உலகத்துல விடுதலைப்புலி ஆதரவாளர்களோட பணம் கோடி கோடியாப் புரளுது. குறிப்பிட்டுச் சொல்லணும்னா, மூன்றில் ஒரு பங்கு இந்த நபர்களின் பணம்தான்னு தகவல் வந்திருக்குது. அதாவது ஒரு வருஷத்துக்கு நாலாயிரம் கோடி ரூபாய். பணம் போடுறவனுக்கு ஒரு பிரச்னை வந்தா, பலன் அடையுறவங்களெல்லாம் ஆதரவாக் கொடி பிடிச்சு தானே ஆகணும். அதனாலதான் இப்போ தமிழ்சினிமா உலகத்துல இருந்து கொத்துக் கொத்தா விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான குரல் எழுந்திருக்கு. விடுதலைப்புலிகளுக்கு ஆதரவுக் குரல் கொடுக்காத ஹீரோக்களோட படங்கள் ஓடும் வெளிநாடு தியேட்டர்கள் துவம்சம் செய்யப்படுது. இதுக்கு பயந்து நடுங்கி நிற்கவேண்டிய சூழல் நம்ம ஊர் ஹீரோக்களுக்கு வந்தது பெரிய பரிதாபம்!''
மேலே பாலசுப்பிரமணியம் காட்டிய படத்தின் கதை வசனம் இயக்கம் காங்கிரஸ்.


10 Comments

Anonymous @ 12:23 PM

இன்னும் ரமேஷ் வைத்யா பதிவு பின்னூட்டம் படிக்கலையா நீங்க? குமுதம் ஆவி ரெண்டுக்கும் இலங்கை தமிழரு பேரை கேவலமா சொல்லி பொழக்குறதுல லடாய். ரிப்போட்டர்ல பாராவை வெச்சு கேவலமா எழுதுரதுல சென்னை ஸ்ரீலங்கா தூதுவரு அம்சாவுக்கும் ஒரு மடிப்பு இருக்காமே. இதுக்கு பதிலா விகடன் பாலசுப்ரமணியத்த சூப்புன்னு கொடுத்திருக்காங்கோ. புலி அடிக்குமுன்னு பாத்தப்ப சூப்பர்ன்னு நியூஸ் போட்டானுவ. கிளிநொச்சி விழுந்தப்புறம் காங்கிரசுகைல வாங்கிட்டானுவ. காசுக்கு எதையும் போடுவானுங்கோ பரதேசிங்க. இத்தன நாளு இவனுகல வாசிக்கலயா? இவனுகள நம்புற இலங்கைதமிழருங்கதாம் பாவம்

தேவன் @ 12:26 PM

இந்தப் பண்ணிகளின் கருத்துக்கு பதிலாக இதற்க்கான உங்கள் பதிலை போடலாம் அல்லவா கையில் காஞ்சோண்டி இலையுடனே திரிகின்றீர்களா சாத்திரி!

சாத்திரி @ 12:32 PM

தேவன் மற்றும் அனானி எனக்கொரு சந்தேகம் இங்கு பிரான்சில் நகைச்சுவை மன்றம் என்று எல்லா இடங்களிலும் உண்டு அங்கு நகைச்சுவையாக பேசுவது அல்லது நடந்து கொள்வது எப்படியென்று பாடம் நடாத்துவார்கள் அதுபோல தமிழநாடு காங்கிரஸ்காரிற்கும் காங்கிரஸ் தலைமை அப்படி ஏதும் பாடம் நடாத்துகிறார்களோ என்னமோ?? யாருக்கு தெரியும்.

தேவன் @ 1:11 PM

இது நகைச்சுவையாகவா இருக்கு உடம்புக்கு சொறிதரும் நோயாக அல்லவா இருக்கி்ன்றது?
இவர்கள் கதைப்பதைக் கேட்க ஆள் இல்லாத குறை அதனால் பொறுப்பற்ற கதைப்பழக்கத்திற்க்கு பழகிவிட்டார்கள்.

Anonymous @ 1:32 PM

இவர்கள் கதைப்பதைக் கேட்க கேனையன்கள் இருக்கிற குறை அதனால் பொறுப்பற்ற கதைப்பழக்கத்திற்கு பழகிவிட்டார்கள்.

Anonymous @ 2:02 PM

Please do not let the nonconfirmed rumors spread through your comment box however they are convenient for us. Then there is no difference between you and Balasubramaniam.

Hope you understand my sincere suggestion and take it in the right mode/mood.

thanks.
-/.

கந்தப்பு @ 10:19 PM

எஸ்.ஆர்.பி இன்னுமொரு சுப்பிரமண்யசுவாமி.

Anonymous @ 10:33 AM
This comment has been removed by a blog administrator.
காத்து @ 3:27 PM

இலங்கை தூதர் ஹம்சா நல்லா உத்தி குடுத்து எலும்பு துண்டையும் எடுத்து போட்டு ஏத்தி விட்டு இருப்பார்.. மாப்பு மப்பு தெளியாமல் அப்பிடியே வந்து உளறி இருக்கும்...

ஐங்கரன் நிறுவனம் ஒண்றுதான் அங்கை படம் எடுக்கும் ஒரே ஈழத்தமிழர் பெரிய நிறுவனம்... அன் நிறுவனம் வட இந்திய EROS நிறுவனத்தின் பங்காளிகள்..

நாளைக்கு EROS நிறுவனம் புலிகளுக்கு சொந்தமான நிறுவனம் எண்று மாப்பு மப்பிலை உளறுவதும் நடக்கத்தான் போகிறது...

பொது அறிவே இல்லாதவன் என்பதுதான் காங்கிரஸ் தலைவனாக இருக்க பொதுவான தகுதி போல...

ஹஜன் @ 4:07 PM

காங்கிரஸ் கட்சி என்பது இலங்கை ஜனதிபதி யின் கோதரரது கட்சியா
http://nallurrannallur.blogspot.com/