Navigation


RSS : Articles / Comments


ராஜீவ் காந்திக்கு செருப்பு திடுக்கிடும் திருப்பம் தினமலரின் டக்காலக்கடி

11:42 PM, Posted by Siva Sri, 9 Comments


தினமலர் நிருபர் ராமசாமி, அவரது சகோதரர் ராஜா


புதுச்சேரி ராஜீவ்காந்தி சிலை அவமதிப்பு விவகாரத்தில் திடுக்கிடும் திருப்பமாக தினமலர் நாளிதழ் நிருபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

புதுவை தட்டாஞ்சாவடியில் உள்ள ராஜீவ் சிலையில் செருப்பு மாலை அணிவிக்கப்பட்ட இலங்கை அதிபரின் உருவ பொம்மையை சிலர் கடந்த 19ம் தேதி கட்டிவிட்டு சென்றுவிட்டனர். இதை அறிந்த காங்கிரஸ் தொண்டர்கள் கொதிப்படைந்தனர். ராஜீவ் சிலையை அவமதித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கும் விடுதலை சிறுத்தைகளுக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் 4 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் ராஜீவ் சிலை அவமதிப்பு வழக்கில் புதுவையை அடுத்த குருவிநத்தத்தை சேர்ந்த ராமசாமி(25) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் தினமலர் பத்திரிகையின் பாகூர் நிருபர். அவரிடம் நடந்த விசாரணைக்கு பின்னர் ராஜா(29) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இது குறித்து சீனியர் எஸ்.பி. அகர்வால் கூறியதாவது:

ராஜீவ் சிலை அவமதிப்பு தொடர்பாக நடத்திய தீவிர விசாரணையில் செல்போன் எண் உதவியுடன் குற்றவாளிகளை கைது செய்துள்ளோம். 19ம் தேதி அதிகாலை 2.45 மணிக்கு ராஜீவ் சிலை அருகில் உள்ள செல்போன் டவரில் பதிவான எண்ணை தொடர்பு கொண்டபோது பாகூர் குருவிநத்தத்தை சேர்ந்த ராமசாமி(25) என்பது தெரியவந்தது. விசாரணையின் போது முன்னுக்கு பின் முரணாக இவர் கூறினார். தீவிர விசாரணையில் சிலை அவமதிப்பு செய்ததை ஒப்புக்கொண்டார். ராமசாமியின் சித்தப்பா மகன் ராஜா(29) என்பவர் உதவியாக உடன் இருந்து இருக்கிறார். பைக்கில் உருவ பொம்மையை கொண்டு வந்து இருக்கின்றனர். உருவ பொம்மையை ராஜா தூக்கிவிட ராமசாமி, சிலையில் கட்டியிருக்கிறார்.

இவ்வாறு அகர்வால் கூறினார்.

கைதான தினமலர் நிருபர் ராமசாமி, ராஜா ஆகியோரை புதுச்சேரி குற்றவியல் நீதிபதி சுதா முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் புதுவையில் நேற்று அளித்த பேட்டி:

ராஜீவ் சிலை அவமதிப்பு நிகழ்வு தொடர்பாக குற்றவாளி யார் என அடையாளம் காணும் முன் விடுதலை சிறுத்தைகளை அத்துடன் இணைத்து தினமலர் நாளிதழ் அவதூறு பரப்பியது. இப்போது கைதாகி உள்ள ராமசாமி, ராஜா ஆகிய இருவரும் தலித் அல்லாதவர்கள் என்பதும், அதில் ராமசாமி என்பவர் தினமலர் நிருபர் என்பதும் தெரியவந்துள்ளது.

இதில் நிருபர் மட்டும் பொறுப்பாக இருக்க மாட்டார். தினமலர் ஆசிரியரும், வெளியீட்டாளரும் இதன் பின்னணியில் இருப்பதாக ஐயப்படுகிறோம். இதை தீவிரமாக விசாரிக்கவேண்டும். காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் இடையே கடுமையான முரண்பாட்டை உருவாக்கி, புதுவை - தமிழகத்தில் மிக மோசமான வன்முறையை தூண்ட வேண்டும் என்பதும், அதன்மூலம் தமிழக அரசுக்கு நெருக்கடி தரவேண்டும் என்பதும் அவர்களது உள்நோக்கமாக உள்ளது.

இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

http://www.dinakaran.com

9 Comments

வாக்காளன் @ 12:10 AM

தினமலத்தை புனிதம் என வழிப்படும் டோண்டு தலைமையில் ஒரு கூட்டம் இருக்குமே.. எங்கே எங்கே எங்கே?
சஞ்சய்காந்தி - தினமலத்தை எதிர்த்து ஒரு பதிவு போடுங்களேன்.

Anonymous @ 5:31 AM

eandaa ungalai dinamalarkaran oru kusuvukku kooda thirumbi paarkirathillai. appuran eandaa dinamum andha naayai pidithukondu thongukireerkal.

Anonymous @ 12:41 PM

இதற்கு இலங்கை அரசின் முதலீடு(ஈழத்தமிழர் பற்றி தவறான பரப்புரை) 100கோடியில்

எவ்வளவு தினமலருக்கு கொடுக்கப்பட்டதோ.

சுந்தரவடிவேல் @ 1:08 PM

People should garland Dinamalar with shoes!

மோகன் கந்தசாமி @ 2:27 PM

என்னா இது? ராஜீவ் ஆன்மாவிற்கு சாம்பிராணி போடும் அடிவருடிகளின் சத்தத்தையே காணோம்!

////ராஜீவ் காந்திக்கு செருப்பு திடுக்கிடும் திருப்பம் தினமலரின் டக்காலக்கடி////

அண்ணே! அது டக்காலக்கடி இல்ல, டகால்டி! எங்கள் சென்னைத்தமிழை பிழையாக பயன்படுத்தி ஈழத்தமிழர்கள் கொச்சை படுத்துவதை நிறுத்திக்கொள்ளவேண்டும். :-))))) (ச்சும்மா ட்டமாஷ்...)

Anonymous @ 8:43 PM

காங்கிரசு பிடுங்கிகள் இப்போது
தினமலத்தின் உச்சிக் குடுமியைப்
பிடுங்கப் போகிறார்களா?
இல்லை மலத்தை ரசிக்கப் போகிறார்களா?
அத்தனைத் தமிழரும் சேர்ந்து செருப்பாலடித்தால் தான் மல நாற்றம் நீங்கும்.

சாத்திரி @ 12:11 AM

//
மோகன் கந்தசாமி @ 2:27 PM

என்னா இது? ராஜீவ் ஆன்மாவிற்கு சாம்பிராணி போடும் அடிவருடிகளின் சத்தத்தையே காணோம்!

////ராஜீவ் காந்திக்கு செருப்பு திடுக்கிடும் திருப்பம் தினமலரின் டக்காலக்கடி////

அண்ணே! அது டக்காலக்கடி இல்ல, டகால்டி! எங்கள் சென்னைத்தமிழை பிழையாக பயன்படுத்தி ஈழத்தமிழர்கள் கொச்சை படுத்துவதை நிறுத்திக்கொள்ளவேண்டும். :-))))) (ச்சும்மா ட்டமாஷ்...)//

டகால்டி திருத்திவிட்டேன் எப்பதான் எனக்கு சென்னைத்தமிழ் ஒழுங்கா எழுதவரப்போகுதோ தெரியாது????

சாத்திரி @ 12:13 AM

//Blogger வாக்காளன் said...

தினமலத்தை புனிதம் என வழிப்படும் டோண்டு தலைமையில் ஒரு கூட்டம் இருக்குமே.. எங்கே எங்கே எங்கே?
சஞ்சய்காந்தி - தினமலத்தை எதிர்த்து ஒரு பதிவு போடுங்களேன்.//

போட மாட்டாங்க....போட மாட்டாங்க....போட மாட்டாங்க..

SanjaiGandhi @ 1:12 AM

அட.. இப்போ தான் இதைப் பார்க்கிறேன். வேறு தகவல் தேடும் போது கண்ணில் பட்டது.

வாக்காளன், ஒரு நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் செய்யும் தவறுக்காக அந்த நிறுவனத்தையே தாக்க வேண்டியதில்லை. இங்கே ஒரு பன்னாடை சொல்லி இருப்பது போல் எல்லாவற்றிற்கும் வேலை மசிரில்லாமல் எதிர்வினை ஆற்றத் தேவையில்லை. பிறகு அந்த நாதாரிக்கும் எனக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்.

சாத்திரி சொல்வது சரி தான். இதுக்கு பதிவு போட மாட்டேன். இந்த வலைப்பூ கன்றாவிகளைத் தாண்டி ஏகப் பட்ட வேலை இருக்கு. மேலும் , சாத்திரியின் ராஜிவ் பாசத்தைக் கண்டு மெய்சிலிர்க்கிறது. :))

இன்னொரு மேலும்.. நான் தினமலர், தட்ஸ்தமிழ் வகையறாக்களை சீரியசாக எடுத்துக் கொள்வதில்லை.

அனானியாக பின்னூட்டமிட்டிருக்கும் சில பொட்டைகளை விட நான் வன்மையாக எதும் எழுதவில்லை என்பதால் இந்த பின்னூட்டம் வெளியிடுவீர்கள் என நம்புகிறேன்.