Navigation


RSS : Articles / Comments


பாகிஸ்தான் தூதரகத்திற்கு முன்னால் திரண்ட பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள்

12:35 PM, Posted by sathiri, 2 Comments




இன்று பரிசின் முக்கிய பகுதியான எத்தவால் பகுதியில் அமைந்துள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு முன்பாக இடம்பெற்ற கண்ட ஒன்றுகூடலில் பெரும் எழுச்சியுடன் கலந்துகொண்டனர். சுமார் பத்தாயிரம் வரையான மக்கள் கலந்துகொண்டு சிறிலங்கா அரசிற்கு பாகிஸ்தான் வழங்கிவரும் ஆயுத உதவிகளுக்கும் ஆதரவுகளுக்கும் எதிராக தமது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

இன்று பிற்பகல் 2 மணியளவில் ஆரம்பமான இந்தக் கண்டன ஒன்றுகூலில் ஒதுக்கப்பட்ட இடத்திற்கும் அதிகமான இடத்தில் மக்கள் குவிந்திருந்தனர்.
சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உருவப்பொம்மையுடன் கூடியிருந்த மக்கள் சிறிலங்கா அரசின் தமிழ் இனப்படுகொலைக்கு எதிராக கண்டனங்களை எழுப்பினார்கள்.

இறுதியாக பாகிஸ்தான் தூதரகத்திடம் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் மனு ஒன்றும் கையளிக்கப்பட்டது. மனுவைப் பெற்றுக்கொண்ட தூதரகத்தின் முக்கிய அதிகாரி இது தொடர்பாக தமது நாட்டு அரசுக்கு தெரியப்படுத்துவதாகத் தெரிவித்தார்.

2 Comments

Unknown @ 1:10 PM

எத்தவால்???????????????????

Anonymous @ 1:18 PM

ஐநா ஜெனிவா சபை முன்னே எத்தனை முறை ஆர்ப்பரித்தும் பலன் இல்லை.அதனை விட இந்த முறை சிறந்தது.