Navigation


RSS : Articles / Comments


இத்தாலிய இந்துக்கள்.தமிழில் பூசை..

1:12 PM, Posted by sathiri, 8 Comments

இங்கிலாந்தில் வோல்ஸ் என்கிற இடத்தில் இந்துமதத்தினை பின்பற்றும் இங்கிலாந்து வெள்ளையர்களின் முருகன் கோவிலை பலரும் அறிந்திருப்பிர்கள்.. அதே போல இத்தாலி நாட்டில் altair என்கிற இடத்தில் இந்து மதத்தினை பின்பற்றும் இத்தாலிய நாட்டினர்கள் சிலர் இணைந்து ஆரம்பத்தில்84 ம் ஆண்டளவில் ஒரு யோகாசனம் மற்றும் தியானம் செய்கின்ற ஒரு மண்டபத்தினை அமைத்து அவர்கள் வழிபடுவதற்காக ஒரு அம்மன்சிலையை மட்டும் வைத்து சிறிய கோயிலையும் அமைத்திருந்தார்கள்..காலப்போக்கில் மன அமைதிக்காக தியானம் செய்கிற இத்தாலியர்களின் தொகையுடன் இத்தாலி மற்றும் பிரான்சில் இருக்கின்ற இந்துக்கள். பெரும்பாலான ஈழத்தமிழர்கள் கோயில் பற்றி கேள்விப்பட்டு வரத்தொடங்கிவிட்டார்கள்..அதனால் சிறிய கோயிலும் வளர்ச்சியடைந்து இந்தியாவின் கன்னியாகுமாரியிலிருந்து சிலைகளும் இந்தியாவிலிருந்து சிற்பிகளும் வருவிக்கப்பட்டு அழகிய ஆனால் அளவான கோயிலாக உருப்பெற்று நிற்கிறது..அதனை நிருவாகிக்கின்ற இத்தாலியர்கள் தமிழ்நாட்டிலேயே பெரும்பாலும் இந்துமதம் பற்றியும் தேவாரப்பாடல்களையும் தமிழிலேயே படித்திருப்பதால் பாடல்கள் தமிழில் பாடுவது மட்டுமல்ல பூசைகளும் தமிழிலும் சமஸ்கிருதம் இரண்டும் கலந்தே செய்கிறார்கள்..

அவர்கள் தங்கள் பெயர்களையும் தமிழிலேயே மாற்றியிருக்கிறார்கள்..இன்று பிள்ளையார் சதுர்த்தி விசேட பூசை என்று மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்கள்.. பிரான்சில் நான் இருக்குமிடத்திலிருந்து 250 கி.மீ தூரம் இரண்டு மணிநேரப்பயணம்..மலைப்பிரதேசத்தில் அமைதியான அடர்ந்த காட்டுப்பிரதேசத்தில் அமைந்திருந்த கோயிலுக்கு போய் வந்தது மட்டுமில்லை உங்களிற்காக சில படங்களையும் எடுத்து வந்தேன் இங்கு இணைக்கிறேன்..

கோயிலின் முகப்பு


பூசைகள் முடிந்தபின்னர் இடம்பெற்ற கலை நிகழ்வில் நடனமாடும் இரண்டு இத்தாலிய மற்றும் ஒரு தமிழ்பெண்

அங்கு பலரின் கவனத்தையும் கவர்ந்து சிறப்பாக நடனமாடிய மீனாச்சி என்கிற இத்தாலியப்பெண்மணி







எங்களுக்கும் கலையை இரசிக்கத்தெரியுமில்லை..

இந்தக் கோயில் பற்றிய மேலதிக விபரங்கள்

8 Comments

Anonymous @ 4:19 PM

அருமை... அனுபவப்பகிர்வுக்கு நன்றி!

வடுவூர் குமார் @ 6:48 AM

அட! இத்தாலியிலுமா?

sathiri @ 11:03 AM

//Blogger தமிழன் said...

அருமை... அனுபவப்பகிர்வுக்கு நன்றி!:://

வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்..

sathiri @ 1:42 PM

//வடுவூர் குமார் @ 6:48 AM

அட! இத்தாலியிலுமா?//

இத்தாலி என்ன உலகத்திலை எந்த மூலையானாலும்..

நிலாமதி @ 12:38 PM

படங்களிற்கும் கட்டுரைப பகிர்வுக்கும் நன்றி ........நட்புடன் நிலாமதி

sathiri @ 12:43 PM

//நிலாமதி @ 12:38 PM

படங்களிற்கும் கட்டுரைப பகிர்வுக்கும் நன்றி ........நட்புடன் நிலாமதி//

வருகைக்கு நன்றிகள் நிலாமதி.. நீங்கள் யாழ்கள நிலாமதிதானே??

குடுகுடுப்பை @ 12:59 PM

ஆச்சர்யம், புலம் பெயர்ந்த தமிழர்கள் நினைத்தால் சாதிக்கலாம்.

Anonymous @ 6:36 PM

Itaaliya Hindukkaly Kannmun Niruthiyadharkku Nandri