Navigation


RSS : Articles / Comments


ஈழம்.. முடிந்துபோன ஆயுதப்போராட்டமும்.. முடிவுறாத காமக்கதைகளும்..

12:40 PM, Posted by sathiri, 5 Commentsஈழத்திலை ஆயுதப் போராட்டம் முடிசிச்சுதா ... புலிகளின் தலைமையும் இல்லையெண்டு அறிவிச்சிட்டாங்களா இங்கினை ..புலம்பெயர் தேசங்களின் புலிகளின் கட்டமைப்போ நேத்திக்கடனிற்கு(வேண்டுதலுக்கு)உடைச்ச சிதறு தேங்காய் மாதிரி ஆகிப்போய் அதை மீண்டும் கே.பி..என்கிறவர் அமைத்த நாடுகடந்த தமிழீழ அரசு என்கிற கட்டமைப்பில் மீண்டும் அனைவரும் இணைத்து பழையபடி தமிழர்தரப்பு பெரும் சக்தியாக மாற்றமடைந்து வந்துகொண்டிருக்கிறபோது ..இன்னமும் புலிகளினதும் பிரபாகரனினதும் பெயரை வைத்தே பிழைப்பு நடாத்த விரும்பும் சிலர்மட்டும் நெடியவன் தலைமையில் கே.பி தலைமையிலான அணியினரை துரோகிகள் விலை போய்விட்டார்கள் என்றபடி.. தலைவர் மீண்டும் வந்து தாட்டுவைத்த துவக்கை கிழறியெடுத்து போராட்டம் நடாத்துவார்..அதற்கு பணம் தாருங்கள் என்று பணம் சேர்ப்பதிலேயே குறியாய் இருக்கிறார்கள்..

அதுமட்டும் கிடையாதுங்கோ ஏதோ ஏருத்தரையொருத்தர் பார்த்து .காய் கலோ.. எண்டு சொல்லுறமாதிரி ஆளாளிற்கு காய் துரோகி என்கிற நிலைமையாய் போச்சு..ஆனால் கே.பி அணி பக்கம் நிற்கிறவங்களிற்கு மற்றவங்கள் சொல்கிற குற்றச்சாட்டு என்னவெண்டால்... புலிகள் இயக்கத்தில் இருந்து பணமோசடி .பாலியல் மோசடி செய்தார்கள்..என்று அதரப்பழசான அலுத்துப்போன குற்றச்சாட்டுக்களாக உள்ளது.. இனியாவது புதிசாய் ஏதாவது யோசிப்பாங்களா?? ஒரு பாரிய ஆயுத அமைப்பிலை இருந்து வெளியேற்றுறதுக்கு வேறை குற்றச்சாட்டுக்கள் எதுவுமே இல்லையா..என்ன கண்றாவி...இந்த குற்றச்சாட்டு கே.பி..யில்தொடங்கி.. வழுதி..வழியாய் வந்து.. இப்பொழுது என்மீதும் அதே குற்றசாட்டை சுமத்தி நானும் துரோகியாம்..

எல்லாரும் நல்லா கவனமாய் கேட்டுக்கொள்ளுங்கோ.. நான் இப்போ துரோகி..சரி..புலிகள் இயக்கமென்பது.. இதுவரை உலகில் இருந்த விடுதலை இயக்கங்களிலேயே மிகவும் கண்டிப்பான கட்டுக்கோப்பானதொரு ஆயுதஇயக்கம் என்பதை நான் இங்கு எழுதத் தேவையில்லை.. அப்படி அந்த இயக்கத்தில் பணம் களவெடுத்து பாலியல் மோசடியும் செய்தால் உடைனே தலைவர் மோசடி செய்தவரை இயக்கத்திலிருந்து வெளியேற்றி முடிந்தால் பத்திரமாக வெளிநாட்டிற்கும் அனுப்பிவைப்பாராக்கும்...அப்பிடியே வெளிநாடு வந்தவங்களும் புலியளிற்கு ஆதரவாய் இருக்கிறமாதிரி இருந்து கொண்டு வெளிநாட்டு உளவு நிறுவனங்களிற்கு விலை போயிடுவாங்களாம்..முக்கியமாய் றோவிற்கு..இங்கினை கவனியுங்க உலகத்திலையே உளவு நிறுவனமெண்டால் அது றோ மட்டும்தானாம்..

ஏனெண்றால் அதை எழுதிறவங்களிற்கு அதை விட்டால் வேறை உளவு நிறுவனங்களின்ரை பெயரே தெரியாது அதுதான் பிரச்சனை.சரி எங்களைத்தான் தலைவர் வெளியேத்த முதல்லை ஊரிலை ஒரு பெண்ணை பிடித்து கலியாணமும் பண்ணிவைத்து தான் வெளியேத்துவார்..அதுதான் வெளியேத்திட்டாரே..நாங்களும் இயக்கத்திலை சுருட்டின பணத்தோடை முதல்லை இந்திய வருவம்..ஏனெண்டால் அங்கினைதானே எங்களிற்கு புலிகள் இயக்கம் பயிற்சி தந்தது..அதாலை எங்களிற்கு தெரிந்த முதல் வெளிநாடு அதுதான்..அங்கை தமிழ்நாடு.. கன்னடா.. ஆந்திரா..கேரளா என்று முதல்லை மானில வாரியாய் எங்களோடை பாலியல் சேட்டைகளை ஆரம்பிப்போம்..பிறகு அப்பிடியே கொஞ்சம் வெளியாலை போய்

தாய்லாந்து.கம்போடியா..இந்தோனேசியா என்று நாடுவாரியாய் முடித்துக்கொண்டு.. இப்போ ஜரோப்பாவிலை பிரான்ஸ்.. ஜெர்மன்..சுவிஸ் எண்டு உலகலெவலிலை பாலியல் மோசடியள் செய்து கொண்டிருக்கிறம்..இப்போ உலகலெவலிலை நாங்கள் இயங்கத்தொடங்கின படியாலை பணமும் அதிகமா தேவைப்படுதா.. அதுதான் றோவிட்டை விலை போயிட்டம்...றோவிற்கும் என்ன கஸ்ரமோ??எங்கனை வாங்கிட்டு மொத்தமாய் பணத்தை தராமல் தவணை முறையிலை கே.பி..ஊடாக தாறாங்கள்..அதை வைச்சுக்கொண்டு நானும் பொழுது போகாமல் அப்பப்ப ஓசி பேப்பர் ஒண்டிலையும் இணையத்தளங்களிலையும்..ஊர்வம்பளக்கிறது அவங்களிற்கு குடையுதாம்..நாங்கள் றோவிட்டை வாங்கிறம் அதுக்கு எங்களாலை கணக்கு காட்ட ஏலும்.. ஏனெண்டால் ஒவ்வொரு பெட்டையளும் ஒவ்வொரு நாட்டிலை இருக்கிறபடியாலை போக்குவரத்துசெலவு..அங்கை போனால் ஊசார் ஏத்துறதுக்கு தண்ணிச்செலவு.. போகேக்கை வெறும் கையோடை போறது தமிழர் நாகரீகம் இல்லைத்தானே அதாலை ஏதாவது வாங்கிற செலவு இப்பிடி ஏகப்பட்டது இருக்கு தாராளமாய் கணக்கு காட்டலாம்..

ஆனால் நீ்ங்கள் திரும்பவும் ஆயுதப் போராட்டத்திற்கெண்டும்..இராணுவ முகாம்களிலை இருக்கிறவையை வெளியாலை எடுக்கிறமெண்டும்.. மருந்துக்கு எண்டும் சனத்திட்டை காசு சேர்க்கிறீங்களே.. அதிலை யாரையாவது வெளியிலை எடுத்ததை காட்டமுடியுமா?? இல்லாட்டி வாங்கின பணத்துக்குத்தான் அது எங்கை எவ்வளவு போனதெண்டு கணக்கு காட்டமுடியுமா???முடியாதே..
இதை நான் உங்களிட்டை நேரை கேட்டால் உடைனையே .. நான் புலிகள் இயக்கத்திலை எந்தப்பயிற்சி முகாமிலை எத்தனையாவது அணியிலை பயிற்சி எடுத்து எந்தெந்தப் பிரிவிலை எத்தினை வருசம் இருந்தனான் எண்டுகூடத்தெரியாமல்..என்னைப்பற்றி தெரிந்த அரைகுறை தகவல்களைவைத்துக்கொண்டு துரோகி கட்டுரை எழுதிறாங்கள்.. இனியாவது உங்களைப்போலவே அரைகுறை கட்டுரைகளை எழுதாமல்.. என்னுடைய விலாசம் தொ.பே இலக்கம் எல்லாம் பகிரங்கமாய் இருக்கு.. நேரிலை யாரவது வாங்கோ..அல்லது தொ.பே அடிச்சு என்னைப்பற்றிய முழு விபரத்தையும் கேளுங்கோ.. கேட்டுவிட்டு எழுதுங்கோ.. அப்பதான் ஒரு பரபரப்பாய் இருக்கும்...அப்போ வரட்டா????அவ்வ்வ்...........

5 Comments

Anonymous @ 1:41 PM

நான் நினைக்கிறேன் உங்கள் எல்லோரையும் பொறுத்தவரை இராணுவரீதியாகப்
போராட முடியாதென்ற நிலை வந்தவுடன் உங்களில் பலபேருக்கு போராட்டம் என்ற டிரென்ட் முடிஞ்சுது போல.சந்தோசம். ஒதுங்கி நில்லுங்கோ .வழியை விடுங்கோ .தமிழ் மக்கள் தங்களுக்கு விரும்பிய வழியில் போராடட்டும். இணையத்தில் ஆளாளுக்கு உங்கள் சேறடிப்புகளை நிறுத்துங்கள். முடிந்தால் உருப்படியான வேலைகளை செய்யுங்கள் . உங்களை எல்லாம் நம்பிய எங்களை சொல்லவேணும்.
அது சரி ரெஸ்டோரன்ட் பக்கம் வந்தால் விசேட கவனிப்பு உண்டா?
அரிச்சந்திரன்

செந்தழல் ரவி @ 1:33 AM

சாத்திரி, சாத்து சாத்துன்னு சாத்திட்டீங்களே சாத்திரி.

:))))

சாத்திரி @ 8:19 AM

//Blogger செந்தழல் ரவி said...

சாத்திரி, சாத்து சாத்துன்னு சாத்திட்டீங்களே சாத்திரி.

:))))//
அதாலைதான் பெயரை அப்பிடி வைச்சிருக்கிறமாக்கும்..

Anonymous @ 11:43 AM

Test

Anonymous @ 10:42 AM

நான் நினைக்கிறேன் உங்கள் எல்லோரையும் பொறுத்தவரை இராணுவரீதியாகப்
போராட முடியாதென்ற நிலை வந்தவுடன் உங்களில் பலபேருக்கு போராட்டம் என்ற டிரென்ட் முடிஞ்சுது போல.சந்தோசம். ஒதுங்கி நில்லுங்கோ .வழியை விடுங்கோ .தமிழ் மக்கள் தங்களுக்கு விரும்பிய வழியில் போராடட்டும். இணையத்தில் ஆளாளுக்கு உங்கள் சேறடிப்புகளை நிறுத்துங்கள். முடிந்தால் உருப்படியான வேலைகளை செய்யுங்கள் .

மருதடியான்