அநியாயம் ஆனால் உண்மை
6:46 AM, Posted by sathiri, 2 Comments
மேலே படத்தில் தாயாருடன் உள்ள பெண்ணின் பெயர் சமந்தா சிய்லர் வயது 21 .நான் வசிக்கும் நகரத்தில் வசிக்கின்ற ஒரு மாணவி.கடந்தவாரம் எங்கள் பிராந்தியப்பத்திரிகையான (nice matin) இவரது படத்துடன் வந்த செய்தி எங்கள் நகர மக்களை பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய அந்தச் செய்தியினை தேவை கருதி தமிழில் தருகிறேன்.சிய்லர் ஒருநாள் பொழுது போக்காக இணையத்தில் வலம் வந்து கொண்டிருந்த பொழுது இணையத்தில் ஒரு விளம்பரத்தினை பார்க்கிறார். அது ஒரு இணையத்தின் மூலமான பயண முகவர் நிலையமொன்றின் ஒரு விழையாட்டு .அதில் வெற்றி பெற்றால் உலகின் பல இடங்களிற்கு ஒரு வார காலம் உல்லாசப் பயணம் போய் வருவதற்கான பயணச் சீட்டும் தங்குவதற்கான விடுதியும் பரிசாக அறிவிக்கப்பட்டு. பரிசு பெற்றால் போவதற்காக தெரிவு செய்வதங்காக சில நாடுகளின் பெயர் விபரங்களும் அதில் இருந்தது. போட்டிக்கான விதி முறைகள் சுலபமானதுதான். அதில் நீங்கள் ஆணா பெண்ணா.முழுப்பெயர் வயது மற்றும் மின்னஞ்சல் முகவரி இவற்றை பதிவு செய்து அனுப்பி விட வேண்டியதுதான்.இதனைப்பார்த்த சிய்லரும் சிலநேரம் அதிஸ்ரம் அடித்தால் இந்தக்கோடை விடுமுறையை குதூகலமாகக்களிக்கலாமென நினைத்து அதில் கேட்டிருந்த விபரங்களை பதிவுசெய்து அனுப்பிவிட்டார்.
ஒரு வாரத்தின் பின்னர் சிய்லருக்கு ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது.அதனைத் திறந்து பார்த்தவரிற்கு மகிழ்ச்சி அவர் நினைத்தது போலவே கோடை விடுமுறையை கொண்டாட்டமாக களிப்பதற்காக நீங்கள் போட்டியின் பரிசாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிbr />?ீர்கள் என்று அவர் விபரங்கள் அனுப்பிய அந்த பயண முகவர் நிலையம் மின்னஞ்சல் அனுப்பியிருந்தது. அத்துடன்சில ஆசிய மற்றும் தென்அமெரிக்க நாடுகளின் பெயர்ப்பட்டியலைப்போட்டு நீங்கள் செல்ல விரும்பும் ஒரு நாட்டினை தெரிவு செய்யும்படியும் கேட்டிருந்தனர்.சிய்லரும் தாய்லாந்தின் பத்தையா கடற்கரையோரம் கால் நனைக்கும் கனவுகளுடன் தாய்லாந்தினை தெரிவுசெய்து அனுப்பியிருந்தார்.ஆனால் அவருக்கு மீண்டும் ஒரு மின்னஞ்சல் வந்தது அதில் தற்சமயம் தாய்லாந்திற்கான ஒழுங்குகளை எங்களால் செய்யமுடியாமல் உள்ளது எனவே எங்கள் முகவர் ஒருவர் உங்களை நேரடியாக சந்தித்து நீங்கள் பயணம் செய்யக்கூடிய வகையில் மேலும் சில நாடுகளின் பெயர்ப்பட்டியலையும் காண்பித்து மேலதிக விபரங்களையும் தருவாரென்றும் .தொடர்புகொள்ளும்படி அதில் ஒரு கைத்தொலைபேசி இலக்கத்தினை வழங்கியிருந்தனர்.சியலரும் உடனே அந்த இலக்கங்களை அழுத்தினார். மறுமுனையில் ஒரு பிரெஞ்சுக்காரர் அல்லாத ஒரு ஆணின்குரல். தான்தான் அந்த பயணஏற்பாடுகளை செய்பவர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு நகரமத்தியில் ஏதாவது ஒரு சிற்றுண்டிச்சாலையில் சந்திக்கலாமென ஒரு நேரமும் ஒதுக்கப்பட்டு ஒரு சிற்றுண்டிச்சாலையில் சந்தித்தனர்.வந்தவரும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு தென்அமெரிக்கா நாடுகளான வெனிசுலா.சிலி.பொரு. கொலம்பியா மற்றும்ஆஜென்ரீனா ஆகிய நாடுகளிற்கே தற்சமயம் ஒழுங்குகள் செய்யமுடியுமென்றும் அந்த நாடுகளின் விபரங்கள் சில படங்கள் என்று காடடியபடியே கதைக்கவும்.சிய்லர் ஆஜென்ரீனாவை தெரிவு செய்தார்.
ஆனால் அந்த முகவரோ ஆஜென்ரினாவிற்கு செல்வதற்கு பிறேசில் விமான சேவையிலேயே இடம் இருக்கிறது ஆனால் பிறேசிலில் இருந்து ஆஜென்ரீனாவிற்கான விமானத்திற்காக நீண்ட நேரக்காத்திருப்பு எனவே கொலம்பியாவை தெரிவு செய்யலாம் இங்கிருந்தே நேரடிவிமானத்தில் இலகுவான பயணம்.என்று கதைத்து சிய்லரை அந்த முகவர் சம்மதிக்க வைத்து விட்டார்.பிறகென்ன சில நாட்களில் மீண்டும் சிய்லரை நேரில் அழைத்த அந்த நபர் அவரிற்கான விமானசீட்டும் தயார் என்று கூறி விமானச்சீட்டையும் அவரின் செலவுகளிற்காக ஒரு உறையில் 1000 யுரோ பணத்தையும் கொடுத்து கொலம்பியா போனோ விமான நிலையத்தில் உங்களை எங்கள் முகவர் ஒருவர் வரவேற்று மேலதிக உதவிகளை செய்வாரென்று வழியனுப்பிவைத்தார்.சிய்லரும?? கொலம்பியா போனோ விமானநிலையத்தில் இறங்கியதும் திட்டமிட்டிருந்தபடியே அங்கு ஒரு முகவர் சிய்லரை அழைத்துப்போய் ஒரு விடுதியில் தங்கவைத்து சிய்லரிற்கு ஒருவாரகாலத்திற்கு அவர் சுற்றிப் பார்ப்பதற்காக உதவியாக ஒரு வழிகாட்டியையும் ஏற்பாடு பண்ணிவிட்டு போய் விட்டார்.ஒரு வார காலம் சிய்லரின் பயணம் நன்றாகமுடிந்தது. மீண்டும் பிரான்சிற்கு திரும்பவேண்டிய நாள் வந்தது . கொலம்பியாவில் வரவேற்ற அதே நபரே வழியனுப்பிவைக்க வந்திருந்தார்.ஒரு வாடைகைக்காரில்( taxi ) சிய்லரையும் ஏற்றிக்கொண்டு விமான நிலையம் நோக்கிப் போய்க்கொண்டிருந்த பொழுது ஒரு இடத்தில் அவர்களது வாடைகைக்கார் நின்றுவிட அதில் ஏதோ கோளாறு எனவே வேறொரு வாடைகைக்காரில் போகலாமென இன்னொரு காரில் மாறி விமான நிலையம் வந்தடைந்தனர்.
விமான நிலையத்தின் உள்ளே இடப்பதிவுசெய்யும்( bording ) இடம்வரை சிய்லரின் பொதிகளை கொண்டுவந்து கொடுத்து விட்டு அந்த முகவர் நல்ல பயணமாக அமையட்டும் என்று கூறி விடைபெற்றார். சிய்லரும் தன்னுடைய பொதிகளை பதிவுசெய்து விட்டு தன்னுடைய இருக்கைப் பதிவினைபெற்றுக்கொண்டு புறப்படும் பொழுது ஒரு விமான நிலைய அதிகாரி ஒருவர் வந்து சிய்லரை சில கேள்விகள் கேட்கவேண்டும் ஒரு நிமிடம் ஒத்துழைக்கமுடியுமா எனக் கேட்டுள்ளனர்.சிய்லரும் இது ஏதோ சாதாரண விமான நிலைய சம்பிரதாய விசாரணை என நினைத்து தாராளமாக ஒத்துளைக்கிறென் என்று கூறவும். அவர்கள் விமான நிலையத்தில் இருந்த ஒரு அறைக்கு அழைத்து செல்ல அங்கு கொலம்பிய விமான நிலைய காவல்துறையினரும் சிய்லரின் பயணப்பொதியும் இருந்தது.அங்கிருந்த காவல்துறை அதிகாரி சிய்லரைப்பார்த்து இது உங்கள் பொதிதானே என்று கேட்கவும். சிய்லரும் சாதாரணமாக தன்னுடையதுதான் என ஒத்துக்கொள்ள அவரது பொதியினை காவல்த்துறையினர் திறந்தனர். பொதியை திறந்ததும் செய்லரிற்கு ஆச்சரியம் காரணம் உள்ளே இருந்தவை அவருடைய துணிகள் அல்ல. அதற்கடுத்ததாய் அதிர்ச்சி உள்ளே ஒரு பாசல் அதில் 14 கிலோ நிறையுள்ள கொக்கெயின் போதைமருந்து. சிய்லர் இப்பொழுது போனோ சிறையில் இருக்கிறார். பிரெஞ்சுத் தூதரகம் இவரின் நலன் மற்றும் வழக்குகளை கவனித்து வருகின்றது.ஆனால் பிரான்சில் இது இரண்டாவது சம்பவம். சுமார் மூன்று ஆண்டுகளிற்கு முன்னரும் பாரிஸ் புற நகர்பகுதியில் வசிக்கும் ஒரு மாணவி இதே பாணியில் கொலம்பியாவிற்கு சென்று போதை மருந்துகளுடன் பிடிபட்டு அவர் நேரடிக் குற்றவாளி அல்ல ஏமாற்றப்பட்டிருக்கிறார் என்று தெரிந்திருந்தாலும் அவருடைய பயணப்பொதியில் போதை மருந்துகள் இருந்ததற்காக 5 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து வருகின்றார். எனவே எம்முடைய தமிழ் இளம் சமுதாயமும் காலையும் மாலையும் கணணியிலேயே கடலை போட்டுக்கொண்டு கவிண்டு கிடப்பதால் இதுபோன்ற கணணி விளம்பபரம் மற்றும் விழையாட்டுக்களில் கவனமாக இருக்கவேண்டியே இந்தச் செய்தியை தமிழில் தருகின்றேன் இல்லா விட்டால் களி சாப்பிட்டபடி கம்பி எண்ணப்போறம் எண்டு அடம்பிடிச்சால் உடைனையே கொலம்பியாவிற்கு ஒரு றிக்கற்..எடுங்கோ .............................
Good Msg Tanz
good message