Navigation


RSS : Articles / Comments


கிணறு தோண்ட கிழம்பிய பூதம் இறுதிப்பாகம்.

9:11 AM, Posted by Siva Sri, No Comment

கிணறு தோண்ட கிழம்பிய பூதம் இறுதிப்பாகம்.

ஒரு பேப்பர் சாத்திரி

இதுவரை  நான்கு தொடர்களில் ஸ்கந்தா  மற்றும் ரிசி  என்பவர்களது கூட்டணி எப்படி  புலம்பெயர் மக்களையும் தாயகத்தில் போரால் பாதிக்கப்பட்டவர்களையும்   திட்டமிட்டு எப்படி மோசடி செய்து பணம் சுருட்டினார்கள் என்பதோடு பின்னர் அவர்கள் இருவருக்குமிடையில் யாரையார் ஏமாற்றுவது என்று ஏற்பட்ட போட்டியில்   ஸகந்தாவே வெற்றி பெற்றார் என்பதனையும்  பார்திருந்தோம்.   இன்றைய நிலையில் ரிசி  இங்கிலாந்தில் தலைமறையு வாழ்க்கை  வாழ்க்கை  வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.  ஆனால் ஸ்கந்தா  இன்னமும் பந்தாவாக வலம் வந்து கொண்டிருக்கின்றார்.  இவர்கள் இருவராலும்   தாயகத்தில்  இவர்களது மோசடிகளிற்கு  பாவிக்கப்பட்டவர்களும் இவர்களால் கைவிடப்பட்டு நிற்கின்றார்கள்.   அவர்களை விடுவோம் ஏனெனில் அவர்களும் இவர்களது ஆசை வார்த்தைகளிற்கு மயங்கி  இவர்களின் மோசடிக்கு துணை போனவர்கள்தான்  ஆனால் இவர்களால் பாதிக்கபட்டவர்கள்  யுதத்தில் மோசமாக பாதிக்கபட்டும்  உடல் அவயவங்களை  இழந்த மக்களும்  முன்னை நாள் போராளிகளுமே. அவர்கள்  இனி அடுத்ததாக என்ன செய்ய வேண்டும்  அல்லது செய்ய முடியும் என்று எதுவுமே தெரியாமல் விதி விட்ட வழி என்று  வாழ்நாளை போக்கிக் கொண்டு இருக்கிறார்கள்.  அதே நேரம்  இந்த  மோசடிக்கு  முக்கியமாக பயன்படுத்தப் பட்ட உதயகலா மற்றும் கஸ்தூரி ஆகியோர் தங்கள் கைப்பட எனக்கு எழுதியிருந்த  கடிதத்தின்  விபரங்களை சுருக்கமாக இங்கு தந்து இத்தொடரை முடிவிற்கு கொண்டுவருகிறேன்.. முதலில் உதயகலா எழுதிய கடிதத்தின் சுருக்கம்..வன்னியில்  நடந்த இறுதி யுத்தத்தின் போது  சரணடைந்து   முகாமிலிருந் விடுதலையாகி வெளியே வந்து   குடும்பத்துடன்  இணைந்த பின்னர்  ஒரு தொழில் நிறுவனத்தில்  இணைந்து  பணியாற்றிக் கொண்டிருந்த வேளை  போரினால் பாதிக்கப்பட்டவர்களிற்கு  உதவுவதாக  சொல்லிக் கொண்டு  ஸ்கந்தா மற்றும்  ரிசி  ஆகியோர்  தனது  முகவர்கள்  மூலம் தன்னை தொடர்பு கொண்டு  பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களை  சேகரித்து தருமாறும்  பின்னர் தங்கள் உதவியினை  பாதிக்கப்பட்டவர்களிற்கு வழங்கி  உதவி வழங்கப்பட்டதற்கான  ஆதாரங்களை  தங்களிற்கு அனுப்பி வைக்குமாறும்.  இதனை சேவையாக செய்தாதலும்  அதற்கான  ஒரு கூலி வழங்கப்படும் என்பற்கிணங்க  அவர்களின் முகவரான  கஸ்தூரி முலம்  கோரிக்கை  விடுத்திருந்தனர். அதற்கிணங்கவே  பாதிக்கப்பட்டவர்களின்  விபரங்களை  நான் சேகரித்து  இலண்டனிற்கு அனுப்பிக்கொண்டிருந்தேன். 


ஆனால் நான் அனுப்பிய விபரங்களில்  உள்ளவர்களில்  உள்வர்கற்கான  உதவிகள்  கிடைத்தாலும்  அவர்களிற்கு கிடைத்த உதவியினை விட  இரண்டு மடங்கு எதவிகள் கிடைத்ததாக  உதாரணத்திற்கு   அவர்களிற்கு  5000 ரூபாய் கொடுத்திருந்தால் 10000 ரூபாய்  கொடுத்ததாக  ஆதாரகடிதங்களை பெற்று  அனுப்புமாறு  நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தேன் அது மட்டுமல்லாது  ஸ்கந்தா மற்றும் ரிசி ஆகியோரின் கோரிக்கைக்கு  இணங்கவே  பாதிக்கப்பட்டவர்களை வெளிநாட்டிற்கு அழைத்து செல்வதற்காக   பலரை தெரிவு செய்து  அவர்களிடம் ப ஒரு தொகை பணத்தினை பெற்று  ஸ்கந்தாவின் வழிகாட்டுதலின் அடிப்படையில் அவர்களை சில ஆசிய நாடுகளிற்கு அனுப்பியும் வைத்திருந்தேன்  அதன் பின்னர் அவர்களை வெளிநாட்டிற்கு அனுப்வேண்டியது  ஸகந்தாவின் கடைமை பயணிகளிடம் பெற்ற பணத்தினையும்  ஸகந்தாவின் முகவர்களின் பெயரில் வங்கிகளில் வைப்பு செய்து வி்டேன்.  ஆனால் ஸ்கந்தா ரிசி   ஆகியோர் கூட்டாக  ஏமாற்று வேலை செய்கிறார்கள் என்பதனை அறிச்ததும் யாழில் இயங்கி அலுவலகத்தினை மூடிவிட்டு  அவரின் முகர்களுடனான  கஸ்தூரி மற்றுஓம் ராதிகா ஆகியோரோடு  நான் பிரச்சனைப்பட்டதும் என்னை  துரோகியாக்கி ஏமாற்றுக்காரியாக்கி இணையங்களில் செய்தியினை வெளியிட்டுவிட்டனர்..   என்று இப்படியாக     உதயகலா   இரண்டு பக்கத்தில் கடிதம் எழுதியிருந்தார்.....
அடுத்ததாக கஸ்தூரி எழுதியவை......


 முள்ளியவளை கிரமத்திற்கு வந்திருந்த  உதயகலா அங்கு பாதிக்கப் பட்ட மக்களை அணுகி தான் சுவிசில் இருந்து ந்திரப்பதாகவும் புலிகள் அமைப்பின் வெளிநாட்டு பிரிவு  தன்னை  பாதிக்கப்பட்டவர்களிற்காக உதவும்படி அனுப்பியதாக கூறிக்கொண்டு  பிள்ளைகள்  கற்பதற்கான புத்தகங்கள்   சிடிக்கள்  எனபன விற்பனை செய்தார். பின்னர்  பாதிக்கப் பட்டவர்களை வெளிநாட்டிற்கு அனுப்புவதாக கூறி ஒரு குடும்பத்திற்கு  3 இலட்சம் வீதம் வாங்கி கொண்டவர் அவர்களை  கொழும்பிற்கு அழைத்துச்சென்று  நீர்கொழும்புப் பகுதியில் தங்க வைத்திருந்தார் சிலரை வெளிநாடுகளிற்கும் அனுப்பி வைத்திருந்தார்.  நீர் கொழும்பில் தங்கியிருந்தவர்கள் தங்களை வெளிநாட்டிற்கு  ஏன் இன்னமும் அழைத்து செல்லவில்லையென்று பிரச்சனை கொடுத்தபோது  அவர்களை  உல்லாச விடுதிகளிற்கு அழைத்து சென்று அவர்களிற்கு மது வாங்கி கொடுத்து தானும் அவர்களோடு மது அருந்தி உல்லாசமாக இருந்து அவர்களை  ஏமாற்றினார். அதுமட்டுமல்லாது  முகாம்களில்  அடைபட்டு கிடந்தவர்களையும் வெளியே எடுத்து விடுவதாக கூறி பலரிடம் பணத்தினை வாங்கி மோசடி செய்துள்ளார். பணத்தினை கொடுத்தவர்கள் உறவினர்களும் வெளியே வராததால் உதயகலாவிடம் போய் விபரம் கேட்டபொழுது உங்களை  புலி என்று சொல்லி 4ம் மாடிக்கு அனுப்பிவிடுவேன் என்று மிரட்டியதோடு மட்டுமல்லாது  அதில் சிலரை நீர் கொழும்பில் உள்ள விடு ஒன்றிவைத்து அடித்து தன்புறுத்தியும் இருக்கிறார். இதனால் பலர் மனநோயாளியாகியுள்ளனர்.  அது மட்டுமல்லாது பல கடை முதலாளிகளையும் சில சிங்களவர்மூலமாக  உளவு பிரிவினர் என்று சொல்லி மிரட்டி பணம் வாங்கியுள்ளார். இவரிற்கும்  ரிசிக்குமே தொடர்புகள் உள்ளது தமக்கும் ஸ்கந்தாவிற்கும்  எவ்வித தொடர்புகளும் இல்லையென்று  ஒரு கொலிவூட்படம் தயாரிக்கக் கூடிய ரேஞ்சிற்கு கஸ்தூரியின் கடிதம் 4 பக்கத்தில்  கிடைத்திருந்தது.


இங்கு கடிதம் எழுதிய உதயகலா  தான் பணத்தினை ஸ்கந்தா குழுவினரிற்கு பணம் வங்கிகளில் இட்டதற்கான  பல ஆதாரங்களை இணைத்திருந்தார். அதுமட்டு மல்லாது அவர் ஸ்கந்தா ரிசி ஆகியோருடன் இணைந்து வேலை செய்ததற்கான ஆதாரங்களும் அனுப்பியிருந்தார்.்்ஆனால் கஸ்தூரி உதயகலா பற்றிய குற்றச் சாட்டுகளிற்கு எவ்விதமான  ஆதரங்களும்  தரவில்லையென்பதுடன்.தமக்கும் உதயகலாவிற்கும் எவ்வித தொடர்பும் இல்யென்று எழுதியிருக்கிந்தார்.  தமக்கும் உதயகலாவிற்கும் எவ்வித தொடர்பும் இல்லாமல்  உதயகலா செய்த மோசடிகள் மட்டும் எப்படி அவரிற்கு தெரிந்திருக்கின்றது  என்பது  கேள்விக்குறி????உதயகலாவால் ஏமாற்றப் பட்டவர்களின் விபரங்களை அனுப்புவதாக கூறியவர்  பின்னர் எதனையும் அனுப்பவில்லையென்பதுடன். அவரின் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாது  இந்தத் தொடர் ஒரு பேப்பரில் வெளிவந்த நாள் முதல்  ஸ்கந்தா மற்றும்  ரிசி போன்றவர்கள் தங்கள் பக்க விளக்கங்களையும்  எம்முடன் தொடர்பு கொண்டு தாராளமாக தந்தால் அதனையும் நாங்கள் பிரசுரிப்போம் என  அவர்களிற்கு தனியாகவும் பகிரங்கமாகவும் தெரிவித்திருந்தோம்.  ஆனால் ஸ்கந்தா அவர்கள்  எம்மை மறைமுகமாக மிரட்டும் பாணியில் பலருடன் தொடர்பு கொண்டு  இந்த கட்டுரையை நிறுத்தும்படி எனக்கு ஒரு அழுதத்தினை  கொடுக்க மயற்சித்ததோடு  ஒரு பேப்பர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் பலர் மூலமாக  அறிவித்திருந்தார்.

அவர் இவ்வளவு சிரமப் பட்டிருக்கத் தேவையில்லை டின்னுடனோ அல்லது ஒரு பேப்பர் ஆசிரியர் குழுவினருடனோ  நேரடியாக தொடர்பகளை ஏற்படுத்தி தனது பக்க நியாயத்தினை தாராளமாக வைத்திருக்கலாம். எது எப்படியோ தேசியம் என்கிற போர்வையில் பாதிக்கப்பட்டவர்களிற்கு உதவுகின்றோம் என்று கூறிக்கொண்டு ஒரு கும்பல் செய்த மோசடியினை ஒரு பேப்பர் வெளிக்கொண்டு வந்து  அதனை தடுத்து நிறுத்தியுள்ளதோடு  அவ்களை  மக்களிற்கு அடையாளம் காட்டியுமுள்ளது. இனிவரும் காலங்களில் இவர்கள் போன்றவர்களிடம் மக்கள் அவதானமாக இருக்கும்படி வேண்டிக் கொள்வதோடு  யாராவது இவர்கள் போன்றவர்களிடம்  ஏமாற்றப்பட்டிருந்தால் தகுந்த ஆதாரங்களுடன் ஒரு பேப்பரை தொடர்பு கொண்டால்  அவற்றை உறுதிப்படுத்திய பின்னர் ஒரு பேப்பர் அதனை   பகிரங்கப்படுத்தும் என்பதனையும் தெரிவித்து கொள்கிறோம்.

No Comment