Navigation


RSS : Articles / Comments


திருகுதாளத் திருமாவும் திருந்தாத சில புலம்பெயர் தமிழரும்

1:43 PM, Posted by Siva Sri, 11 Comments


இந்த வார ஒரு பேப்பரிற்காக

சீறினால் சிறுத்தை..வாய் திறந்தால் வரிப்புலி..பார்த்தால் பாயும் புலி..கர்ச்சித்தால் கரும்புலி..செயலில் வெறும் பழப்புளியான..எங்கள் அண்ணன்திருமா அவர்கள் வன்னியில் அடைபட்டுக்கிடக்கும் மூன்று இலட்சம் தமிழர்களையும் இரட்சிப்பதற்காக ..இதோ இரண்டாவது தடைவையாக ஜரோப்பவிற்கும்.முதற் தடைவையாக இங்கிலாந்திற்கும் வருகிறார்..பராக் பராக்..பராக்..
பிராக்கு பாக்கிற தமிழரெல்லாரும் திரண்டு வாருங்கள்.. டம..டம..டம..டம...டம்.டம்..டம்...


நான் கட்டியம் கூறிட்டன்..கட்டுரையை படிக்கிற பலர் என்னைக் கட்டிவைச்சு இழவு கூறத்தயாராவார்கள் என்பதும் எனக்கு தெரியும் ஆனாலும்..சொல்ல வந்த விடயத்தை சொல்லிமுடிக்கிறேன்... இலண்டனில் புங்குடுதீவு நலன்புரிச்சங்கம்.இந்த 26ந் திகதி ஈழத்தில் யுத்தத்தால் பெற்றோரை இழந்த குழந்தைகளை பராமரிப்பதற்காக காற்றுவழிக்கிராமம் என்கிற ஒரு நிகழ்வினை செய்யவிருக்கிறார்கள்..இன்றைய காலகட்டத்தில் மிக மிக தேவையானதும் அவசியமானதுமான ஒரு நிகழ்வு. அதனை மனதார வரவேற்கிறேன்..ஆனால் இந்த நிகழ்விற்கு திருமாவளவனை சிறப்புரையாற்ற அழைத்திருப்பதுதான் இழவு வீட்டில் திருமண மந்திரம் ஓதுவதைப்போல இருக்கின்றது..

ஈழத்தமிழரின் இன்றைய இன்னல்கள் இழப்புக்கள் அனைத்திற்கும் காரணமான இந்திய காங்கிரஸ் கட்சியுடன் கூட்டுச்சேர்ந்து ஒரேயொரு கதிரைக்காக ஒட்டுமொத்த ஈழத்தமிழழர்களும் அவர் மீது கட்டிவைத்திருந்த நம்பிக்கைகளைத் தகர்த்தவர்தான் திருமா..பல்லாயிரம் தமிழரின் வாழ்வை அழித்த சோனியாவை சென்னைத் தீவுத்திடல் கூட்டத்து மேடையில் வைத்து சோனியா அம்மையாரை வாழ்க என்று கையுயர்த்தி கோசம் போட்டு தன் தமிழீழ மக்கள் மீது தான் கொண்டுள்ள அன்பின் வேடத்தை கலைத்துவிட்டவர்...சரி அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்று கவுண்டமணி பாணியில் சொல்லிவிட்டாலும்..வென்று கொடிபிடித்து கோட்டைக்குள் போனபின்னர் இன்று மானிலத்திலும் மத்தியிலும் ஆழும் கட்சி வரிசையில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார்..அதற்கு பிறகாவது ஈழத்தில் தினம் தினம் அல்லல் பட்டும் செத்து மடியும் தமிழரிற்காக உருப்படியாக ஏதாவது செய்தாரா என்றால் அதுவும் இல்லை ..

எங்காவது ஒரு மேடையில் பிரபாகரன் திரும்ப வருவான் ..5 ம்கட்ட ஈழப்போர் வெடிக்கும் ..தமிழீழம் மலரும்..அது மலர்ந்ததும் அதைப் பிடுங்கி நாங்கள் மாலையாபோட்டுக்கலாம் என்று.. வெறும் வெட்டிப்பேச்சுக்கள் மட்டுமல்ல.. அந்த மேடையில் வைத்துத்தான் அவர் சோனியாவை நோக்கி.."எங்கள் அன்னை ஈழத்தமிழரிற்காவும் உதவுங்கள் என்று மன்றாட்டமாய் வேண்டிக்கொள்கிறேன்" என்று ஏதோ மாதா கோயிலில் வாசலில் முட்டுக்காலில் மெழுகுதிரியுடன் நிற்பவனின் வேண்டுதலைப்போல ஒரு வேண்டுதலையும் வைப்பார்..கலைஞராவது ஈழத்தமிழரை காப்பாற்ற அடிக்கடி தந்தியடிப்பார் .. இவரால் ஒரு கடிதம் கூடவா எழுதமுடியாது..

இப்படித்தான் கடந்த மாதம் ஜெர்மனியில் றைனை என்கிற நகரில் நடந்த ஈழத்தமிழர் வாழ்வுரிமை மகாநாட்டில் வைத்து. கேக்கிறதற்கு கேனையர்கள் புலம்பெயர் தமிழர்கள் இருக்கிறார்கள் என்கிற துணிவில் இந்தியாவையும்..அவர் சார்ந்திருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எதிராகப் பேசியது மட்டுமல்ல 5ம் கட்ட ஈழப்போர் வெடிக்கும் என்கிற வீராவேசப் பேச்சுக்களை வீசியெறிந்து விட்டுப்போனார். ஆனால் இந்தியா விமான நிலையத்தில் இறங்கியதுமே மறுபடியும் அதே அன்னையிடம் மறுபடியும் மன்றாட்டம்..இவைகளையெல்லாம் விட்டு விடுவோம்..புலம்பெயர் தமிழரெல்லோரும் சேர்ந்து தங்கள் உறவுகளிற்காக மருந்தும் உணவுப்பொருட்களும் அனுப்பிய வணங்கா மண் கப்பலை இலங்கையரசு தடுத்து திருப்பியனுப்பியிருந்து..அப்
போது இலங்கையரசை கண்டித்து வீராவேசமாக கண்டன அறிக்கைகளை விட்ட திருமா அவர்கள்..

அதே வணங்காமண் கப்பல் இந்தியக்கடல் எல்லையில் நின்றபடி அந்த உணவுப்பொருட்களை இந்தியாவிலுள்ள ஈழத்து அகதிகளிற்காவது கொடுக்க உதவுங்கள் என்று ஒரு வேண்டு கோளை வைத்தனர்..அந்த வேண்டு கோள் திருமாவிடமும் வைக்கப்பட்டது..இது இரண்டு அரசுகள் சம்பத்தப்பட்ட விடயம் தன்னால் எதுவுமே செய்யமுடியாது எனகழண்டுகொண்டார்.பின்னர் அந்த விடயத்தை மனிதம் என்கிற மனிதவுரிமை அமைப்பு பொறுப்பெடுத்து பல சிரமங்களிற்கு மத்தியில் மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்புவதற்கான வேலைகளை செய்து அவை நிறைவடைந்து வணங்கா மண் கப்பல் இலங்கைக்கு திரும்ப செல்லப்போகின்றதென்பது உறுதியானதும்.. அந்தக் கப்பலை அனுப்பவதற்காக பின்நின்று உழைத்த சிலரிடம் தன்னுடைய ஆட்களை அனுப்பி ஆவணங்களை கைப்பற்றி அந்தக்கப்பல் தன்னுடைய முயற்சியினால்தான் இலங்கைக்கு அனுப்பப்பட்டது என்கிற தோற்றப்பாட்டை உருவாக்கி அறிக்கைவிட்டு கீழ்த்தரமான அரசியலை செய்ய நினைத்தவர் தான் இந்த ஆயுதமேந்தாத காகிதப்புலி.. ஆனால் மனிதம் அமைப்பினரின் கட்டுக்கோப்பான உறுதியான நடவடிக்கைளினால் இவரது தகிடுத்தனம் பலிக்கவில்லை...இன்னமும் இவர்போன்ற அரசியல் இலாபக்கணக்கு மட்டுமே போடத்தெரிந்த இந்திய இறக்குமதிகளை நம்பியா எமது வாழ்வாதாரப் போராட்டத்தை நடாத்தப் போகின்றோம்..இவர்களின் வீராவேப் பேச்சுக்களிற்கு உணர்ச்சிவசப்பட்டு வெறும் விசிலடிச்சான் குஞ்சுகளாகவா புலம்பெயர் இளையசமூகம் இருக்கப் போகின்றது..புலம்பெயர் இளைய சமூகமே உங்களிற்குள் உணர்வில்லையா?? உங்கள் உறவுகளிற்கு நீங்கள் உதவுவது உங்கள் உரிமையில்லையா??இவர் போன்ற காவடிகள் இந்தியாவிருந்,து வந்து சொல்லித்தான் நாம் எமது உறவுகளிற்கு உதவப்போகிறோமா. எனவே இவர்களைப்போன்றவர்கள் இன்னமும் தேவையா?? முடிவெடுங்கள்..

11 Comments

siva @ 3:11 PM

திருமா பற்றி நீங்கள் கொஞ்சம் காட்டமான வார்த்தைகளைப் பயன்படுத்தி இருந்தாலும் நீங்கள் சொல்வதில் தவறில்லை.ஒரு காலத்தில் இவர் மீது மிகவும் நம்பிக்கை வைத்திருந்தேன்,ஆனால் இப்போது எல்லாமே போய்விட்டது.வெறுமனே வாய்ப்பேச்சு மட்டும் பலன் தராது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இவருடைய நேர்காணலை இன்று ஜீடிவி தொலைக்காட்சியின் பார்த்தேன்,பேட்டி கண்ட தினேஷ் கேட்ட ஒரு நியாயமான கேள்விக்கு இவர் கோபப்பட்டு அளித்த பதிலைக் கண்டு திகைத்துவிட்டேன் ,இப்படி ஒரு நான் எதிர்பார்க்கவில்லை .
தமிழ் நாட்டின் மற்றைய அரசியல்வாதிகள் மாதிரியே தான் இவரும் என்று மனச்சலிப்புடன் நினைக்கிறேன் .

Anonymous @ 4:11 PM

kariyathila pazham puli thaanungo. avaru thannai oru uyarathirku kondu poga ippa ilichvaai pulam peyar thamilanga kidaichirukkanga.
ithula pulam peyar thamilargalilum nadakkum arasiyal kaliedukkap pada venum, muthalil.

antony @ 6:09 PM

thiruma -hw can i say abt him...a comedy piece of tamil politics...playing his wheels wt the help of poor thalith ppl...they don kno abt him....best shot man..

மா.குருபரன் @ 10:28 PM

இந்திய கோமாளிகள்.....வெறும் அரசில் சோற்றிற்காக பிச்சையெடுக்கும் பிசாசுகள் இவர்கள்... தமிழ் நாட்டை ஆழ்பவனே தமிழனல்ல இப்படியிருக்க எங்கே வரப்போகிறது தமிழ் உணர்வு... 3மனைவி அளவு தெரியாத வப்பாட்டியென இனம் பெருக்கி அரசனுக்கு மந்திரிகள் எப்படி இருப்பர்????

நல்ல கட்டுரை நண்பரே!!!!

arul @ 11:46 PM

நானும் திருமாவளவனின் பேட்டியைப் பார்த்தேன் ,ஒன்று மட்டும் புரிகிறது ,திருமா ஆழமான அரசியல் அறிவும் புத்திக்கூர்மையும் உள்ள ஒரு தலைவர்தான்,ஆனால் முழுநேர அரசியல்வாதியாக வந்த பிறகு ஏனோ அவரிடம் முன்பிருந்த துடிப்பும் நேர்மையும் குறைந்து விட்டது.அவரை பேட்டி கண்ட தினேஷ் தமிழ்த்தேசியத்தில் ஈடுபாடு கொண்ட ஒரு ஊடகவியலாளர் ,அர்ப்பணிப்புடன் ஊடகத்துறையில் செயல்படும் ஒரு இளைஞர் ,அவரின் ஒரு சாதாரண அரசியல் சம்பத்தப்பட்ட ஒரு கேள்விக்கு ஏன் திருமா இப்படி react பண்ணினார் என்று புரியவில்லை .
அதேசமயம் இலங்கை அரசிடம் காசு பெற்றுக்கொண்டோ அல்லது அரசியல் முதிர்ச்சி இல்லாமலோ எங்களுடைய மக்கள் கேள்வி கேட்கிறோம் என்ற பேரில் நேரலை நிகழ்ச்சிகளில் வந்து அட்டகாசம் செய்கிறார்கள் என்பதும் புரிகிறது.

Anonymous @ 6:47 PM

there is no cheaper bastard than this fellow who fell at sonia feet . instead of spending his all energy to throw sonia this selfish joined his hands with sonia. and thiruma will go down the history as a tamil dhurohiiii. never can any true tamil forgive him

சாத்திரி @ 4:11 AM

//Anonymous siva said...

திருமா பற்றி நீங்கள் கொஞ்சம் காட்டமான வார்த்தைகளைப் பயன்படுத்தி இருந்தாலும் நீங்கள் சொல்வதில் தவறில்லை.ஒரு காலத்தில் இவர் மீது மிகவும் நம்பிக்கை வைத்திருந்தேன்,ஆனால் இப்போது எல்லாமே போய்விட்டது.வெறுமனே வாய்ப்பேச்சு மட்டும் பலன் தராது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இவருடைய நேர்காணலை இன்று ஜீடிவி தொலைக்காட்சியின் பார்த்தேன்,பேட்டி கண்ட தினேஷ் கேட்ட ஒரு நியாயமான கேள்விக்கு இவர் கோபப்பட்டு அளித்த பதிலைக் கண்டு திகைத்துவிட்டேன் ,இப்படி ஒரு நான் எதிர்பார்க்கவில்லை .
தமிழ் நாட்டின் மற்றைய அரசியல்வாதிகள் மாதிரியே தான் இவரும் என்று மனச்சலிப்புடன் நினைக்கிறேன் .//
சிவா எங்களின் வலிகள்தான் காட்டமான வார்த்தைகளாக வந்து விழுந்துவிட்டது..உங்கள் கருத்திற்கு நன்றிகள்.

navamumaibalan @ 4:34 AM

அண்ணா அடுத்தவரை குறை சொல்லும் கலாசாரத்துக்குள் நீங்களுமா? என்ன செய்கிறார்கள் என நகைப்பதைவிட என்ன செய்ய வேண்டுமென உரைப்பது உங்களைப் போன்ற சிறந்த வீச்செல்லை உள்ள எழுத்தாளர்களின் பண்பென்பது என் கருத்து.

நவம் உமைபாலன்

இரவி சங்கர் @ 7:21 AM

நல்ல பதிவு. இப்படி காட்டமா எழுதினாலாவது யாருக்காச்சும் புரிஞ்சா சரி. முத்துகுமாரின் இறுதி ஊர்வலத்தின் போதே இவர் செஞ்ச அரசியலை அங்க போன நண்பரொருவர் சொன்னப்போ நான் முழுசா நம்பல.

"அன்னை சோனியா காந்தி வாழ்க, அன்னை சோனியா காந்தி வாழ்க"ன்னு கத்தினப்போதான் எல்லா மண்ணும் புரிஞ்சிச்சு. இத படிக்கும் தமிழீழ உறவுகளே தயவு செஞ்சு இந்த ஆளை புறக்கணியுங்க! தமிழ் நாட்டை தட்டி எழுப்புறது ரொம்ப சிரமம். அவங்களுக்கு சினிமா, சீரியல், கிரிக்கெட் பத்தி பேசுறதுக்கே நேரம் பத்தல. ஈழத்தின் துயரம் அவங்களை விட உங்களுக்கு நல்லாவே விளங்கும்ன்னு நம்புறேன். தொடர்ந்து போராடுவோம். நன்றி.

Jeba @ 4:20 AM

திருமா மட்டுமல்ல. தமிழகத்தில் இதுபோன்று பல அரசியல்வாதிகள் உள்ளனர்.
இவர்கள் தமிழனத்தை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து கொண்டிருக்கின்றனர்.

சாத்திரி @ 7:59 AM

உங்கள் கருத்துக்களை பதிந்த அனைவரிற்கும் நன்றிகள்..