
மனிதம் ! மனிதம் என்கிற அமைப்பு. இது மனிதவுரிமை மக்கள் நலன் மற்றும்சுற்றுப்புறச்சூழல் ஆகியவற்றுக்குஆதரவாகக் குரல் கொடுத்தும் அதற்கானநடவடிக்கைகளை எடுத்துவரும் ஒர்அமைப்பு. அந்த வகையில்நீண்டகாலமாக ஈழத்தமிழரின்உரிமைகளுக்கு ஆதரவாகமட்டுமல்லபல உதவிகளையும் செய்துவருகின்றனர். அண்மையில் புலம்பெயர் தேசத்தமிழ் மக்களால் தமதுஉறவுகளுக்காக உதவும் வகையில் அனுப்பப்பட்ட வணங்காமண் கப்பலைஇலங்கையரசு தடுத்து திருப்பியனுப்பியதும், அதனைப் பல சிரமங்களுக்குமத்தியில் மீண்டும் ஈழத்தமிழரிற்குப் போய்ச் சேரும் வழிவகைகளைச் செய்துமுடித்துள்ளனர் . அந்த அமைப்பின் அமைப்பாளரும் நிர்வாக இயக்குனருமானதிரு.அக்கினி சுப்பிரமணியத்துடனான ஒரு கலந்துரையாடல்.
இந்நிகழ்ச்சியை தரவிறக்கம் செய்து கேட்க இங்கே அழுத்துங்கள்.

பிராபாகரன் ஒரு மாபெரும் வீரன். ஆனால் அவர் இப்போது நம்மிடம் இல்லை. இதை புலிகளின் அமைப்பே உறுதிசெய்துள்ளது. அதை விடுத்து இந்த சீமான் போன்றோர் தன் சுயலாபத்திற்காக ஈழ மக்களை ஏமாற்றிப் பிழைக்க இது போன்று கூறுகிறார்கள்.
அதை விட பிரபாகரன் அவர்கள் வடிவேலுவை கேட்டார் விஜயை கேட்டார் என இவர் கபடா விடுவது மேதகு.பிரகாகரனை கேவளப்படுத்துவது போன்ற செயலாகும். ஒரு விடுதலை போராட்டத்தினுடைய தலைவர் இது போன்றவற்றை கண்டிப்பாக கேட்டிருக்க மாட்டார்.. இது சினிமா காரான சிமானை காட்டுகிறது. மேலும் சீமான் 4வருடங்களில் தமிழீத்தை வெல்வோம் என்று கூறுகிறார். இதுவும் தேசிய தலைவரை இழிவுபடுத்துவதாகவே உள்ளது. 30 வருடங்களுக்கும் மேலாக போராடிய போராட்டாமே முடிந்து விட்ட நிலையில் சீமான் இவ்வாறு கூறுவது அவர்கள் சரியான முறையில் செய்யவில்லை என்னால் முடியும் என்பது போல உள்ளது. சீமான் தேசியதலைவரை பார்த்தாரா இல்லை சும்மா சொல்லிட்டு திரிகிறாரா என தெரியவில்லை. சீமான் இனிமேலும் இவ்வாறு பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
உலகெங்கும் பரந்துகிடக்கும் எம் தமிழ் சொந்தங்களே சீமானிடம் கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள். அவர் ஏதாகிலும் சென்டிமெண்ட்டாக பேசி நம்மை கவுக்க பார்க்கிறார். இவர்களுக்கு நாம் கொடுக்கும் பணத்தை பல்வேறு நாடுகளில் அகதிகளாக இருக்கும் நம் தாயக உறவுகளுக்கு கொடுத்து உதவினாலும் பயனாக இருக்கும்.
சிந்திப்பீர் ..செயல்படுவீர்.