Navigation


RSS : Articles / Comments


நிழலாடும் நினைவுகள்

10:42 AM, Posted by sathiri, One Comment

நிழலாடும் நினைவுகள்

கப்ரன் கோணேஸ் (R.P.G.கோணேஸ்)

16.05.87.அன்று பிறபகல் ஒரு இரண்டுமணியளவில் வல்லைவெளியில் வடமராட்சியிவிருந்து ஒரு வாகனம் அச்சுவேலி நோக்கி வந்து கொண்டிருந்தது.அந்த வாகனம் வல்லை பாலத்தை அணமித்துகொண்டிருந்த பொழுது அப்போ பலாலி படைத்தளம்நோக்கி போய் கொண்டிருந்த உலங்கு வானுர்தியொன்று அந்த வாகனத்தை கவனித்தவிட்டு அதன் மீது தாக்குதலை தொடுக்கவும்.

அச்சு வேலியில் வல்லைவெளியின் முடிவில் இருந்த தெனங்காணி ஒன்றினுள் இருந்த காவலரணில் காவல் கடைமையில் இருந்த இரண்டு போராளிகள் அந்த உலங்குவானுர்தி மீது தாக்குதலை தொடுக்க உலங்கு வானுர்தி திரும்பி பலாலி படைத்தளத்துனுள் சென்று மறைந்து கொள்கிறது. உலங்கு வானுர்தி நடாத்திய தாக்குதலில் வாகனத்தில் வந்த ஒருவர் காயமடைந்திருந்தார் அவரிற்கு முதலுதவி வழங்கி அவரை அந்த வாகனத்திலேயே வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துவிட்டு அவர்கள் தங்கள் காவலரணினுள் மீண்டும் போகவும் பலாலியில் இருந்து ஒரு கடல் விமானம் மேலெழுந்து வட்டமடிக்க தொடங்க (இந்த விமானம் தான் 80 களின் இறுதியிக் காலங்களில் இலங்கை இராணுவம் உளவு பார்க்க பயன்படுத்தியது)இரண்டு உலங்கு வானுர்திகள் மேலெழுந்து போராளிகள் இருந்த அந்த காவலரணை தாக்கதொடங்கின.

உடனடியாக அந்த போராளிகளிற்கு உதவ அச்சுவேலி வசாவிளான் வீதியில் ஒட்டகப்புலத்தில் அமைந்திருந்த புலிகளின் முகாமில் இருந்து சில போராளிகள் ஒரு வாகனத்தில் விரைகின்றனர்.அவர்கள் அச்சுவேலி நோக்கி போய்கொண்டிருந்த வாகனம் பட்டுபூச்சி பண்ணையை கடக்கும் போது மூண்றாவதாக ஒரு உலங்கு வானூர்தி அந்த வாகனத்தை கலைத்து தாக்குதல் நடாத்ததொடங்கியது.தோப்பு சந்தியை வாகனம் அண்மித்ததும் உலங்கு வானுர்திஏவிய ஒரு குண்டென்று வாகனத்தின் அருகில் வீழ்ந்து வெடிக்கவும் நிலை தடுமாறிய வாகனம் அங்கிருந்த சிறிய மதகில் மோதிநின்றது.

வாகனத்தினுள் இருந்த கோணேசிற்கும் இன்னொரு போராளிக்கும் வாகன கண்ணாடிகள் உடைந்ததில் காயங்கள் ஏற்படவே வாகனத்தை மீண்டும் இயக்கிய போராளிகள் அச்சுவேலி சந்தியில் அமைந்திருந்த ஒரு தனியார் வைத்திய சாலையில் கோணெசையும் மற்ற போராளியையும் இறக்கிவிட்டு வல்லை சந்தியை அடைந்து அங்கு உலங்கு வானுர்திகள் மீது தாக்குதலை தொடுக்கவும் சில நிமிட நேர சண்டையின் பின்னர் உலங்கு வானூர்தியும் கடல் விமானமும் பலாலி தளத்தினுள் சென்று மறைய அந்த சண்டை முடிவுக்கு வருகிறது. வைத்திய சாலையில் கோணேஸ் காயமடைந்து அனுமதிக்கபட்ட செய்தி கெள்விப்படதும் அவள் அழுதபடி பதறியடித்து கொண்டு ஓடோடி வந்தாள் என்ன நடந்தது பெரிய காயமா ஆழுக்கு ஒண்டும் இல்லையா என்று அங்கு நின்ற தாதியை கேள்விகளால் துளைத்தவளை.

ஒண்டும் இல்லை சின்னகாயங்கள்தான் வான் அடிபட்டடு கண்ணாடி உடைஞ்சதாலை கன்னத்திலையும் நெஞ்சிலையும் கண்ணாடியள் குத்தி போட்டுது காலும் அடிபட்டிருக்கு அவ்வளவுதான் இப்ப டொக்ரர் உள்ளை பாத்தகொண்டு நிக்கிறார் அவசரபடாதை என்று அவளிற்கு ஆறுதல் சொன்ன அந்த தாதியின் தோள்களில் சாய்ந்தபடி குழந்தையை போல விம்மியழ தொடங்கி விட்டாள். அவள்யார்?? அவள் ஏன் அழுகிறாள்?? அவளிற்கும் கோணேசிற்கும் என்ன சம்பந்தம்??? பார்ப்போம். கோணெசின் கிராமமான அச்சுவேலிதான் அவளின் சொந்த கிராமமும் எனவே கோணேசை அவளிற்கு பல வருடங்களாக படிக்கும் காலங்களில் இருந்தே தெரியும் அந்த வைத்தியசாலையில் அவளும் ஒரு தாதியாக வேலை செய்கிறாள்.

அவள் கொணேசை பலவருடங்களாக காதலிக்கிறாள். கோணேஸ் புலிகள் இயக்கத்தில் இணைந்து பயிற்சிகள் முடித்து விட்டு வேறு இடங்களில் அவனது பணிகளை முடித்துவிட்டு அவனது சொந்த கிராமத்திற்கு திரும்பி வந்தபோதுதான் அவள் கோணேசிடம் தனது காதலை தெரிவித்திருந்தாள்.கோணேஸ் தனது நிலையை விளக்கி அவளது காதலை மறுத்து அவளிடம் பேசுவதையே நிறுத்திவிட்டான். ஆனாலும் அவள் விடுவதாய் இல்லை அவனை சுத்தி சுத்தியே வந்தாள் இதுதான் இவளிற்கும் கோணேசிற்கும் உள்ள தொடர்பு. கோணேஸ் அந்த வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து வைத்தியரிடம் விசேட அனுமதி பெற்று தனது பொறுப்பின்கீழ் இரவு பகலாய் கோணேசை கவனித்துவந்தாள்.

மறுநாள் கொணேசை பார்க்க ஒரு போராளி சென்றபொழுது அவள் கோணேசின் காயங்களை சுத்தம் செய்து மருந்து கட்டிகொண்டிருந்தாள். சென்ற போராளி கோணேசை நலம் விசாரித்துவிட்டு அவனிற்கு தேவையானவற்றை விசாரித்து கொண்டே அருகிலிருந்த மேசையை பார்த்தான். ஒரு சாப்பாட்டுபெட்டி இருந்ததை கவனித்தவன் கோணேசை பார்த்து அட நான் சாப்பாடு வாங்கி தரத்தான் வந்தனான் பிறகென்ன உனக்கு யாரோ கொண்டந்து தந்திட்டினம் என்றவும். அவள் கோபமாக யாரோ இல்லை நான் தான் கொண்டுவந்தனான் ஆனால் உங்கடை சினேதனுக்கு பசி இல்லையாம் நான் குடுத்தா சாப்பிட மாட்டாராம் என்றவும் அந்த போராளி ஓ பசி இல்லையாமே சரி என்ன சாப்பாடு எனறவாறு சாப்பாட்டு பெட்டியை திறந்து பாத்த்தவன்.

ம்.......புட்டும் முட்டை கத்தரிக்காய் எலாம் பொரிச்சு போட்டிருக்குவாசம் அந்தமாதிரியிருக்கு சரி உனக்கு வேண்டாம் எண்டா ஏன் வீணா கொட்டுவான் நானே சாப்பிடறன் எண்றவாறுஅந்த போராளி அதை சாப்பிட தொடங்கவும் மருந்து கட்டி முடிந்ததும் அவள் கோபமாக கவனம் சாப்பாட்டு பெட்டியையும் சேத்து விழுங்கிடாமல் அதை கழுவிதந்திட்டு போங்கோ என்றவாறு அந்த அறையை விட்டு வெளியேறிவிட்டாள்.அவள் போனதும் கட்டிலில் இருந்த போராளியை எட்டிஉதைந்த கோணேஸ் நான் பசிகொதியிலை இருக்கிறன் நீ ரசிச்சு சாப்பிடுறியா? கெதியா போய் சாப்பாடு கட்டிகொண்டுவா என்று என்று சொல்லவும் சிரித்தவாறே உனக்கு குடுத்துவைச்சது அவ்வளவும்தான் சரி நான் போய் சாப்பாடு கட்டிகொண்டு வாறன் எனறவாறே

அந்த போராளி வெளியே சென்று சாப்பாடு எடுத்து கொண்டு திரும்பி வருகையில் வழிமறித்த அவள் என்ன சாப்பாடு கட்டிகொண்டு பொறிங்கள் போலை நாங்கள் ஆசையா செய்து குடுத்தா அவரக்கு பிடிக்காது கடையிலை சாப்பிடட்டும் அப்பதான் கொழுப்பு குறையும் எனறபடி கையில் வைத்திருந்த ஒரு பையை அவனிடம் கொடுத்து. அண்டைக்கு அவர் காயப்படேக்கை அவர் போட்டிருந்த சேட்டு கிழிஞ்சுபோச்சுது ஒரே ரத்தமும் அதை எறிஞ்சாச்சு அதாலை அவர் அவர் நெடுக விரும்பி போடுற சிவப்பிலை செக்(கட்டம்) போட்ட சேட் ஒண்டு வாங்கினனான் நான் குடுத்தா வாங்க மாட்டார் அதாலை நீங்களே இதை அவரிட்டை குடுத்து விடுங்கோ என்று அவனிடம் நீட்டினாள்.

சிறிது யோசித்த அந்த போராளி சரி தாங்கோ குடுக்கிறன் எனறவாறு வாங்கி கொண்டு போனவன். கோணேசிடம் சாப்பாட்டை கொடுத்துவிட்டு டேய் இந்தா உனக்கொரு சேட்டும் வாங்கினனான் போட்டுபார் என்று அந்த சேட்டை நீட்டினான்.அவனை நிமிர்ந்து பார்த்த கோணேஸ் நீ எனக்கு இப்ப சேட்டுவாங்கினனி இதை என்னை நம்பசொல்லுறாய்?? எனக்கு தெரியும் யார் வாங்கி தந்திரு்பினம் எண்டு பேசாமல் அவையிட்டையே அதை கொண்டு போய் குடுத்திட்டு காம்பிலை என்ரை உடுப்பு பையிலை ஒரு சேட்டும் சாரமும் எடுத்துகொண்டுவாஎன்று அந்த போராளி அனுப்பிவைத்தான்.அந்த போராளியும் திரும்ப அவளிடமே அந்த சேட்டை கொடுத்துவிட்டு சென்றுவிட்டான்.

நான்கு நாட்கள் கழித்து 20.05.87 அன்று வழைமை போல விடிந்த காலை 7.மணியளவில் இலக்கம்3 என்று அடைமெழியில் அழைக்கப்படும் ஒட்கப்புலம் புலிகளின் முகாமின் நடைபேசியில்(வோக்கி ரோக்கி) பலாலி தொண்டைமானாறு வீதியில் வழளாய் என்கிற கிராமத்தின் காவல் கடைமையில் இருந்த ஒரு போராளியின் அழைப்பு

நம்பர்3..... நம்பர் 3... குட்டி......... ஓவர்.........

குட்டி.... குட்டி .......நம்பர் 3....சொல்லுங்கோ ஓவர்.......

தொண்டைமானாறிலை இருந்து வந்த ஆமி குறூப் ஒண்டு ஒரு அம்பது பேரளவிலை றோட்டை விட்டு கீழை இறங்கிது என்ன செய்ய ஒவர்.......

வடிவா பாருங்கோ திரும்பி றோட்டிலை ஏறி பலாலி பக்கம் போனால் பேசாமல் விடுங்கோ கூடுதலா உள்ளை இறங்கினா உதவிக்கு மற்ற சென்றிலை உள்ளவையையும் எடுத்து அடியுங்கோ நாங்கள் உடைனை வாறம் உடைனைக்குடைனை தொடர்பிலை இருங்கோ ஓவர்.....

என்று வோக்கியில் முகாமிலிருந்த போராளி கதைத்துகொண்டே மற்றைய போராளிகளிற்கு அறிவித்தல் கொடத்ததும் சில வினாடிகளிலேயெ அனைத்து போராளிகளும் ஆயுதங்களுடன் ஒரு யுத்தத்திற்கு தயாராய் வாகனங்களில் பாய்ந்து ஏறவும் வாகனங்கள் வளளாய் பகுதிக்கு செல்வதற்காக அச்சுவேலி சந்தியை நோக்கி விரைந்தன.அவர்கள் புறப்பட்டதுமே வழளாய் பக்கமிருந்து துப்பாக்கி சூட்டு சத்தங்கள் கேட்டன. இராணுவம் குடியிருப்பு பகுதிகள் நோக்கி முன்னேற தொடங்கியதால் அங்கு காவல் கடைமையில் நின்ற போராளிகள் தாக்குதலை தொடங்கிவிட்டிருந்தனர்.

போராளிகளின் வாகனங்கள் அச்சுவேலி சந்தியை அண்மித்து கொண்டிருக்கவும் எதிரே வந்த ஒருவரின் சைக்கிளில் கொணேஸ் தனது முகாம் நோக்கி வந்துகொண்டிருந்தான்.கோணேச
கண்ட போராளிகள் வாகனத்தை நிறுத்தவும் ஒரு போராளி கோணேசை பார்த்து எங்கை போறாய் உன்னை யார் ஆஸ்பத்திரியை விட்டு வர சொன்னது என்று கடிந்து கொள்ளவும். அவன் போராளிகளிடம் துப்பாக்கி சூட்டு சத்தம் கேட்டது அதுதான் தான் வெளிக்கிட்டு வந்தனான் என்றவன் விபரம் அறிந்து கொண்டதும் தானும் வருவதாக அடம் பிடித்து வாகனத்தில் ஏறிக்கொண்டான்.

வாகனங்கள் வளளாய்கிராமத்தில் நுளைந்து கொண்டிருக்கும் போதே இராணுவம் உள்நுளைந்து விட்டதை உணர்ந்த மக்கள்அங்கிருந்து வெளியெறிகொண்டிருந்தனர். பொதமக்களை பாதுகாப்பாக அச்சு வேலி சந்தியை தாண்டி போகும்படியும் தாங்கள் அறிவிக்கும் வரை யாரும் திரும்ப வரவேண்டாம் என அறிவுறித்தியபடி போராளிகள் மறைவாக தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு வளளாய் தோட்டவெளிகளை நோக்கி முன்னேறுகின்றனர்.

தாங்கள் ஒரு பொறிக்குள் அகப்பட்டு விட்டோம் என்று உணர்ந்த இராணுவத்தினர் பலாலியில் இருந்தும் தொண்டை மானாற்றில் இருந்தும் மேலதிக உதவிகள் கிடைக்கும் வரை தோட்டங்களில் புகுந்து நன்றாக உருமறைப்பு செய்து கொண்டு பதுங்கிவிட்டிரந்தனர். அங்கு வந்த பொராளிகளிற்கு இராணுவம் எங்கு மறைந்திருக்கின்றது என்று கண்டு பிடிப்பது சிரமமாகவும் இருந்த அதேவேளை அந்த இடம் ஒரு சிக்கலான பகுதி காரணம் அனைத்து வளங்களையும் கொண்ட பலாலித்தளம் ஒரு பக்கமாகவும் தொண்டைமானாறு முகாமை மறுபக்கமாகவும் கடற்கரையையும் கொண்ட ஒரு பகுதி எனவே இராணுவத்திற்கு வேண்டிய அனைத்து உதவிகளும் சுலபமாக கிடைக்கும் எனவே குறைந்தளவு நேரத்தில் எதிரிக்கு கூடதலான இழப்பை ஏற்படுத்தி அந்த இடத்தை விட்டு அகற்றாவிட்டால் நேரம் செல்ல செல்ல கள நிலை பாதகமாக அமையும்

எனவே போராளிகள் விரைந்து தோட்டங்களினுடாக பதுங்கியவாறு முன்னேறிகொண்டிருக்கவும் ஒரு இராணுவத்தினனின் துப்பாக்கி சட சடத்தது துப்பாக்கி குண்டொன்று ஒரு போராளியின் நெற்றியை உரசிசெல்ல சிறிய காயத்தடன் அந்த போராளி அவ்விடத்திலிரந்து அகற்றபட்டு சண்டை தொடங்கியது. எதிர் பார்த்ததை போலவே பலாலிமகாமிலிருந்து நான்கு உலங்குவானுர்திகளும் மூன்று குண்டு வீச்சு விமானங்களும் உதவிக்கு வர பலாலியில் இருந்தும் தொண்டைமானாற்றில் இருந்தும் அச்சு வேலி சந்தியை இலக்கு வைத்து எறிகணை களும் சீறி வர தொடங்கின.அதே போல பலாலி முகாமிலிருந்து மேலதிகமாக சுமார் இருநுறுபடையினரளவில் சுற்றிவழைப்பில் சிக்குபட்ட படையினரை மீட்க முன்னேற தொடங்கிருந்தனர். அவர்களை எதிர்த்து மறிப்பு சண்டையையும் போராளிகள் தொடுத்திருந்தனர்.

நேரம் செல்ல செல்ல சண்டை உக்கிரமடைந்தது நேரம் மதியத்தை தாண்டியும் இராணுவத்தினரால் தங்கள் இரண்டு பெரிய இராணுவ முகாம்களிற்கு சில கிலோமீற்றர்கள் தொலைவிலேயே சிக்குப்பட்டுள்ள தங்கள் சகஇராணுவத்தை மீட்கமுடியாத நிலையில் தொண்டைமானாற்றில் இருந்தும் மேலதிகமா இருனூறு பேரளவில் அச்சுவேலி சந்தியை நோக்கி முன்னேற தொடங்கினர். இதேவேளை உலங்கு வானுர்திகள் மற்றும் எறிகணைகள் அச்சுவேலி பிரதான வீதிகளை நோக்கி தாக்குதலை தொடுத்து போராளிகளிற்கு மேலதிக வழங்கல்கள் உதவிகள் வருவதை தடைசெய்த கொண்டிருந்தன.

அதேநேரம் போராளிகளிடம் இருந்த ஒரேயொரு விமான எதிர்ப்பு துப்பாக்கியான 50 கலிபரும் விமானதாக்குதலிற்கு உள்ளாகி அதனை இயக்கிய போராளிகளும் காயங்களிற்குள்ளாகி யுத்தகளத்திலிருந்து அப்புறபடத்தபடவும் தொண்டைமானாற்றிலிருந்து மேலதிக இராணுவத்தினரின் முன்னேற்றம் என்பன இராணுவத்தை முற்கைக்குள் வைத்திருந்த போராளிகள் முற்றுகைக்குள் உள்ளாகும் நிலை அதே நேரம் இராணுவம் இந்த சண்டையை திசை திருப்பும் முயற்சியாக பலாலியிலிருந்து தெற்கு பக்கமாக கட்டுவன் மற்றும் குப்பிளான் பக்கமாகவும் ஒரு முன்னேற்றத்தை ஆரம்பிக்க அந்த பகுதிகளில் போராளிகளின் எதிர் தாக்குதல்களை அன்றை யாழ் மாவட்ட தளபதி லெப்.கெணல்.ராதா வழிநடத்திகொண்டிருந்தார்.

அப்போது தான் வளளாய் தோட்டவெளியில் நடந்தகொண்டிரந்த சண்டையில் கோணேசின் துப்பாக்கியும் எதிரிகளை தேடி தேடி இயங்கி கொண்டிருந்தவேளை தான் கவனித்தான் ஒரு பூவரச மரத்திற்கு அருகுவரம்பில் நிலையெடுத்து இருந்த இரு இராணுவத்தினரிடமிருந்து ஒரு பதில் தாக்குதலும் வரவில்லையென்பதை . அவனிற்கு புரிந்து விட்டது அந்த இராணுவத்தினரிடம் துப்பாக்கி இரவைகள் முடிந்துவிட்டிருக்கும் என நினைத்தவன். அருகிலிரந்த போராளியை பார்த்து சொன்னான் டேய் அங்கை பார் பூவரசிற்கு பக்கத்திலை படுத்திருக்கிஆமிகாரரிட்டை ரவுண்ஸ் இல்லை போலை திருப்பி அடிக்காமல் படுத்திருக்கிறாங்கள் அவங்களை உயிரோடை பிடிப்பம் என்றவன் மற்றைய இரு போராளிகளிடம் நீங்கள் அவங்களை குறி வைச்சபடி இருங்கொ நான் எழும்பிபோய் பிடிச்சுகொண்டு வாறன் என்றவன்

மறைவில் இருந்து எழுந்து அந்த அந்த இராணுவத்தினரை நோக்கி சரண்டர் என்று கத்தியவாறு கைகளை ஆட்டினான் சில வினாடிகளின் பின் ஒரு இராணுவத்தினன் மெதுவாக ஒரு கையை உயர்த்தி சரணடைவதற்கான அறிகுறியை காட்டினான்.

கொணேஸ் தன்னுடைய கைகளை மீண்டும் அவர்களை நோக்கி ஆட்டிவிட்டு மெதுவாக அவர்களை நொக்கி பதுங்கிய படி முன்னேறுகிறான் மற்றை இரு போராளிகளும் அந்த இராணுவத்தினர் மறைந்திருந்த பகுதியை நோக்கி குறிவைத்தபடி கோணெசிடம் டேய் கவனம் ஓரளவுதூரத்திலை போனதும் அவங்களை வெளியாலை வரச்சொல்லு நீ கிட்ட போகாதைஎன எச்சரிக்க ஓமென்றவன் முன்னேறி அவர்களை அண்மித்ததும் அவர்களை வெளியெ வர சொல்லி கத்தி கைகளை காட்டினான்.அதை வேறு பக்கங்களில் பதுங்கியிருந்த இராணுவத்தினர் கவனித்து விட கோணெசை நோக்கி சர மாரியாக சுட்டார்கள்

கோணேசும் வேகமாக பாய்ந்து சென்று அந்த இராணுவத்தினர் நிலையெடுத்து மறைந்திருந்த பகுதிக்குள் பாய்ந்து பதுங்கி கொள்ளவும் கீழேயிருந்த இராணுவத்தினரிடம் இருந்து தகவல் அனுப்பபட்டிரக்கவேண்டும் அந்த பூவரசு மரம் இருந்த இடத்தை நோக்கி வேகமாக இரண்டு உலங்கு வானுர்திகள் நெருங்கி இரண்டும் நான்கு செல்களை ஏவின அவை வெடித்து அந்த இடம் ஒரே புகையும் தூசியுமாய் எழுந்து அடங்கிபோனது அந்த இடத்திலிருந்து கொணேசின் சத்தமோ அல்லது மற்றைய இரு இராணுவத்தினரின் சத்தமோ வரவில்லை. முவருமே இறந்து போய்விட்டனர்.

இதே நேரம் பாலியிலிருந்து முன்னெறிய இராணுவத்தினரும் அவ்விடத்தை நெருங்க அங்கு கள நிலைமையும் போராளிகளிற்கு உதவிகள் கிடைக்காமல் இராணுவத்திற்கு சாதகமாக மாறிக்கொண்டிருந்தது எனவே அவசரமாக போராளிகள் தங்கள் குழுவை மறுசீரமைத்து இருக்கின்ற குறைந்தளவு வசதிகளை பகிர்ந்து மீண்டும் ஒரு மூர்க்கமான தாக்குதலை தொடுத்து கோணேசின் உடலை எப்படியாவது எடுத்துகொண்டு சண்டையை அத்துடன் முடிவுக்கு கொண்டுவர எண்ணினர் அதன்படி மீண்டும் மூர்கமாக நானுறிற்கும் மேற்பட்ட இராணுவத்துடன் ஆகாய மற்றும் எறிகணை தாக்குதல்களிற்கு முகம் கொடுத்தபடி அறுபதிற்கும் குறைவான போராளிகளே அந்த சண்டையில் ஈடுபட்டிருந்தனர்.

சுமார் பிற்பகல் ஒரு மணியளவில் கோணேசின் உடலை மீட்ட பொராளிகள் சண்டையை நிறுத்தி பத்தைமேனி இடைக்காட்டு பகுதிக்கு பின்நகர்ந்து தங்கள் பாதுகாப்பு அரணமைக்க தங்கள் இறந்த மற்றும் காயப்பட்ட இராணுத்தினரை எடுத்து கொண்டு தங்கள் முகாம்களிற்கு திரும்பினார்கள்.அன்றைய சண்டையில் பன்னிரண்டு இராணுவத்தினர் கொல்லபட்டிருந்தனர். அதே நேரம் மறுபக்கம் குப்பிளான் சமாதி கோயிலடியில் லெப். கேணல் ராதாவும் இறந்து போனதாக வந்த செய்தியுடன் தனது விடுதலைக்காய் போராடிய இரண்டு போராளிகளை இழந்து விட்ட சோகத்தில் தமிழீழ தாயும் அன்றைய பொழுதை இருள் போர்வையை போர்த்திகொண்டு உறங்கி போனாள்.

மறுநாள் அச்சுவேலியிலிருந்த கோணேசின் வீட்டில் அவனது இறுதி சடங்குகள் நடந்து கொண்டிருந்தது அவளும் செய்திகேட்டு கையில் ஒரு பையுடன் அழுதபடி ஓடிவந்தாள் அங்கிருந்த ஒரு போராளியிடம் அய்யோ அண்ணை கடைசியாவாவது இந்த சேட்டை அவருக்கு போட்டுவிடுங்கோ என்று சொல்லி அவள் வாங்கி வைத்திருந்த அந்த சிவப்பு செக் சேட்டை கொடுத்து விட்டு அங்கேயே அழுதபடி நின்றிருந்தாள்.

கோணேசிற்கு அந்த சேட் அணிவிக்கபட்டு அதுவரை விடுதலை தீயாய் ஒளிர்ந்தவன் வல்லை சந்தியிலிருந்த மயானத்தில் தீயுடன் தீயாய் போனான். மறுநாள் அந்த ஒட்டகபுல புலிகளின் முகாமில் கோணேசின் உடுப்பு பையை எடுத்து பாத்த ஒரு போராளி அதில் கோணேசின் நாட்குறிப்பை எடுத்து புரட்டிப்பார்த்தான் அதில் கோணேஸ் அவளை நினைத்து எழுதிய கவிதைகளும் சில சினிமா பாடல்களும் கடிதங்கள் என்று எழுதியிருந்தான் அவனிற்குள்ளும் காதல் இருந்திருக்கிறது ஆனால் அவன் அதை காட்டிகொள்ளாமலேயே கரைந்து போய்விட்டான்.எம் தேசத்தின் விடுதலைக்காய் விதையாகி போன பல்லாயிரம் மாவீரர்களினுன் கொணேசும் வளளாயின் சிவந்த செம் மண்ணினை மேலும் தன் குருதியால் சிவப்பாக்கி போனான் அவனிற்கும் எமது வணக்கங்கள்.

One Comment

மாதவராஜ் @ 12:07 PM

தீபாவளி வாழ்த்துக்கள் !