Navigation


RSS : Articles / Comments


செருப்புப் பூசை

12:55 PM, Posted by sathiri, 2 Comments




செருப்புப் பூசை
அண்மையில் ஒரு நண்பர் மின்னஞ்சலில் கனடிய பத்திரிகையில் வந்த ஒரு விளம்பரத்தினை அனுப்பியிருந்தார்.விளம்பரத்தில் இருந்த படத்தினை உற்றுப்பார்த்தேன். அட நம்மடை டென்மார்க் லலிதா. அவர் வேறுயாருமல்ல இதே ஒரு பேப்பரில் மூண்று ஆண்டுகளிற்கு முன்னர் நான் அந்த லலிதா தன்னை ஒரு அம்மனின் அவதாரம் என்று தனக்குத்தானே அபிராமி அம்மன் என்று பெயரையும் வைத்து மக்களை ஏமாற்றும் ஒரு போலி பெண்சாமியார் என்று கட்டுரையை எழுதியிருந்தேன்.
அந்தக் கட்டுரையின் பின்னர் எனக்கும் அந்த லலிதாவின் கணவர் மற்றும் அவரது ஆதராவளார்களிற்கும் பலதொலைபேசி உரையாடல்கள் வாக்குவாதங்கள் என்பன மட்டுமல்ல எனக்கு மிரட்டல்களும் மிரட்டலின் உச்சமாய் அம்மன் அவதாரமெடுத்து என்னை பழிவாங்குவார் என்று ஜெர்மனியில் இருந்து அவரது ஒரு பக்கதர் கடைசி எச்சரிக்கையும் தந்து .இரண்டாண்டுகள் ஓடி ஓய்ந்து போன நிலைமையில்.இந்த விளம்பரத்தில் இருந்த ஒரு வசனம் என்னை மீண்டும் எழுதத்தூண்டியது. அதாவது அபிராமி என்கிற லலிதாவின் பிறந்தநாளன்று (29.03.2008)அவரின் திருப்பாதுகைகளிற்கு விசேட அபிசேகமும் ஆராதனையும்.
அவர் சாமியாடினாரா அவதாரமெடுத்தாரா.என்பதெல்லாம் வேறு பிரச்சனை அனால் அவரின் செருப்பிற்கு அபிசேகம் செய்து பூசை செய்கிற அளவிற்கு எம்மவர் நிலைமை வந்து விட்டதா என்று நினைத்த பொழுது நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்து விட்டால் என்று பாரதியின் வரிகள் நினைவிற்கு வந்து.இந்தச் சம்பவம் நடந்தது அதீத மத நம்பிக்கையே மூட நம்பிக்கையாகி அறிவியல் வளர்ச்சியோ கல்லியறிவோ அற்று ஏதோ முலையில் இருக்கின்ற ஒரு இந்தியக் குக்கிராமத்தில் அல்ல.
கனடாவில் மொன்றியலில் days inn hotal( விளம்பரத்தில் பார்க்கவும்) என்கிற ஒரு விடுதியில் நடந்ததுள்ளது அதற்கு அங்:குள்ள ஒரு பத்திரிகையில் விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது மட்டுமல்ல எல்லாவற்றிற்கும் ஒரு படி மேலேபோய் கனடாவில் உள்ள ஒரு வானொலியில் அந்நத நிகழ்வு நேரடிஒலிபரப்பு வேறை நடந்தது.விளம்பரத்தினைப்பார்த்ததும் நான் அதில் உள்ள ஒரு இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அந்தப் பூசை பற்றிய விபரங்கள் பற்றிக் கேட்டேன்.
அன்று அபிராமி அன்னையின் படத்திற்கு பூசையும் பஜனையும் இடம்பெறும் என்றார்கள். சரி ஏதோ திருப்பாதுகைகளிற்கு ஏதோ அபிசேகமும் பூசையும் என்று விளம்பரத்திலை இருக்கே அது புரியவில்லை அப்படியென்றால் என்ன என்று கேட்டதற்கு. அவை அம்மா அணிந்த பாதுகைகள் டென்மார்க்கில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளது அதற்குத்தான் பூசை என்றார்.திருப்பாதுகை என்றால் அது செருப்பா?? அல்லது சப்பாத்தா??என்கிற எனது அடுத்த கேள்வியை கேட்டதும் பதில் தந்தவர் பதறியவராய் அப்பிடியெல்லாம் சொல்லக்கூடாது.
திருப்பாதுகை எண்றுதான் சொல்லவேண்டும் என்று சொன்னது மட்டுமல்லாமல் இராமாயணத்தில் இராமனின் பாதுகைகளை பரதன் அரியணையில் வைத்து பூசை செய்து ஆட்சி செய்தது போல தாங்களும் கனடாவில் அம்மனின் பாதுகைகளை வைத்து பூசை செய்கிறோம் என்று பரதன் பூசை செய்ததை பக்கத்தில் நின்று பார்த்தவரைப்போல எனக்கு ஒரு உதாரணமும் தந்து மேலதிகமாக டென்மார்க்கில் இருந்து கொண்டுவரப்பட்ட விபூதியும் பஞ்சாமிர்தமும் தேசிக்காயும் கொடுக்கப்படும் என்று சொல்லி தொடர்பினை துண்டித்து விட்டார். சரி டென்மார்க் குளிருக்கு லலிதாவால் செருப்பு போட இயலாது எனவே அந்த திருப்பாதுகை சப்பாத்தாகத்தான் இருக்கவேண்டும் என்று நானே முடிவுசெய்தாலும் எனக்கு இன்னொரு சந்தேகம்.
அந்தச் சப்பாத்து NIKE காய் இருக்குமா அல்லது ADIDAS சா?? இல்லாட்டி ஊர்ப்பழக்கத்திலை இன்னமும் BATA தானா??? பஞ்சாமிர்தத்தை டென்மார்க்கில் இருந்தா கொண்டுவரவேண்டும் கனடாவில் பழங்கள் கிடையாதா?? அதுதான் போகட்டும் தேசிக்காய் என்னத்திற்கு என்று ஏகப்பட்ட சந்தேகங்கள் தோன்றினாலும்.அதில் இருந்த மற்றைய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அந்த பூசை பற்றிய ஏதாவது படங்கள் கிடைக்குமா என்று விசாரித்தேன்.
படங்கள் அந்த நிகழ்வினை ஒழங்கு பண்ணியவர்களின் அனுமதி தந்தால் தரமுடியும் என்றார்கள் அந்த நிகழ்வினை ஒழுங்கு பண்ணியவர் யாரென்று விசாரித்தப் பார்த்தால் அவர் எனக்கு எற்கனவே இந்த டென்மார்க் லலிதா பற்றிய கட்டுரை சம்பந்தமாக என்னுடன் தொலைபேசியில் வாக்குவாதப்பட்டவர்தான். இவர் சுவிஸ் நாட்டில் இருக்கின்ற லலிதாவின் ஏழாலை கிராமத்தை சேர்ந்த ஒரு ஆசிரியை இவர் எற்கனவே சுவிசில் லலிதாவிற்கு கிளைகளை ஆரம்பித்தள்ளார். அதன் விரிவாக்கம் தான் இந்த கனடாவில் செருப்புப் பூசை என்று தெரியவந்தது. எங்கள் ஊரில் சைவத்திற்கும் தமிழிற்கும் மிகப்பெரிய தொண்டு செய்த விபுலானந்த அடிகள் யோகர் சுவாமிகள் ஆறுமுக நாவலர் போன்றவர்களே தாங்கள் கடவுளின் அவதாரம் என்று மக்களை ஒரு போதும் ஏமாற்றிது இல்லை
பாதணிகளையோ ஏன் பாதடிகளையோ கூட யாரும் பூசை செய்தது கிடையாது.ஆனால் சிலர் தாங்கள் அவதாரம் என்றும் அற்புதம் செய்கிறோம் என்று ஊரில் வித்தை காட்டிய அனைவரும் கம்பங்களில் கட்டிவைத்து அடித்த அடியில் அவர்களது அற்புதங்களும் மறைந்து அந்த அவதாரங்களும் காணமல்போனதை நானறிவேன். தான் பராசக்தியின் அவதாரம் என்று கதைவிடும் லலிதாவிற்கு உண்மையிலேயே கடவுளின் அவதாரம் என்றால் என்னவென்று உண்மையான அர்த்தம் தெரியுமா என்று சந்தேகமே.
புராணக் கதைகளிலும் இதிகாசங்களிலும் கடவுளின் அவதாரம் என்பது பூவுலகில் அனியாயமும் அக்கரமமும் அதிகரிக்கும் பொழுது நியாயத்தை நிலைநாட்டவும் எவ்வித பாவமும் செய்யாது துன்பப்படும் மக்களை காப்பாற்றவே கடவுளின் அவதாரங்கள் சித்திகரிக்கப் பட்டுள்ளது.புராணங்களில் எந்தக் கடவுளின் அவதாரமும் நாடுநாடாய் மக்களிடம் உண்டியல் குலுக்கியதாகஎழுதப்பட்டிருக்கவும் இல்லை நான் படிக்கவும் இல்லை.
லலிதா கடவுளின் அவதாரமாக இருந்தால் தினம் தினம் துன்பப்பட்டும் வேதனைகள் சோதனைகளிற்கு மத்தியிலும் படுகொலை செய்யப்பட்டுக்கொண்டும் இருக்கும் அவரின் இனமாகிய தமிழினத்தை முதலில் காப்பாற்றலாமே.தினம் தினம் எமது மக்களின் மீதும் எந்தப் பாவமும் அறியாத சிறுவர்கள் மீதும் விழுகின்ற விமானக் குண்டுகளை தன்னுடைய அற்புத சக்தியால் அதனை போட்டவன் வீட்டிலேயே விழ வைக்கலாமே.அவதாரம் என்பதே அனியாயத்தை அழிக்கத்தானே வடிவெடுக்கின்றது அப்படியானால் சிறீலங்கா இராணுவமுகாம்கள் அனைத்தையும் ஒரு நொடியில் அழித்து சாம்பலாக்கலாமே.
அதை விட்டு விட்டு அவதாரமெடுத்தது நாடு நாடாய்: உண்டியல் குலுக்கி ஏன் தன்னுடைய சக்தியை வீணடிக்கிறார்.அதுமட்டுமா பெண்தெய்வங்களின் உருவப்படங்களில் தன்னுடையை படத்தை ஒட்டி கிராபிக் விழையாட்டுகள் செய்தும் (வெளிநாடு வருவதற்காக கள்ள பாஸ்போட்டில் தலை மாத்தின பழக்கதோசமாய் இருக்கலாம்) அரை மி.மீ அளவு மாணிக்கக்கல்லை வாயாலை எடுத்து அற்புதம் செய்கிராராம். மனிதன் மனிதனின் காலில் விழுவதையே மிகப்பெரும் கேவலமாக நினைக்கின்ற ஈழத்தவர்கள் இன்று புலம்பெயர்ந்து வந்த தேசத்தில் அறிவியல் உலகில் நின்று கொண்டு கடவுள் நம்பிக்கைக்கும் அப்பாற்பட்டு மூட நம்பிக்கைக்குள் வீழ்ந்து ஒரு போலி பெண்சாமியாரின் பாதடிகளை வணங்குவதை நினைத்தும் மக்களிற்கு வழிகாட்டியாய் இருந்து வழிநடாத்தவேண்டிய ஊடகங்களான் பத்திரிகைகள் மற்றும் வானொலிகளும் லலிதான் ஏமாற்றிற்கு துணைபோய் மக்களையும் மூட நம்பிக்கைக்கு துணைபோகத்தூண்டுவதை நினைத்தும் என்னுடய திருப்பாதுகையை கழற்றி( சப்பாத்தைத்தான்) எனக்கு நானே அடித்துகொள்கிறேன்.

2 Comments

Anonymous @ 12:34 PM

mk;kdpd; jpUg;ghJifapd; msT vd;dNth? xz;Zkpy;y xU NrhL thq;fpaDg;gj;jhd;. ePq;fs; mtupd; jPtpu gf;jdhf khwf;$Lk; vdg; gl;rp
nrhy;fpwJ.
-rpd;df;fh

Anonymous @ 12:39 PM

அம்மனின் திருப்பாதுகையின் அளவு என்னவோ? ஒண்ணுமில்ல ஒரு சோடு வாங்கியனுப்பத்தான். நீங்கள் அவரின் தீவிர பக்தனாக மாறக்கூடும் எனப் பட்சி
சொல்கிறது.
-சின்னக்கா