Navigation


RSS : Articles / Comments


ஈழப்போராட்டத்தில் எனது(பொய்)சாட்சியம் 10

7:54 AM, Posted by Siva Sri, No Comment

ஈழப்போராட்டத்தில் எனது(பொய்) சாட்சியம் புஸ்பராசாவின் புத்தகம் பற்றிய பார்வை பாகம்.10

கடந்த பதிப்பில் ஈ பி ஆர் எல் எவ் வினரின் கரைநகர் கடற்படை தளத் தாக்குதல் பற்றிய விபரத்தை எழுதியிருந்தேரன் அதனை படித்த பலரும் அந்த கட்டுரையில் என் சோபா வை பற்றி ஒரு வசனம் கூட எழுதவில்லை என்று மின்னஞ்சலிலும் மற்றும் தொலை பேசியிலும் கேட்டு வாட்டி எடுத்து விட்டார்கள். காரணம் ஈபி இயக்கம் என்றால் காரை நகர் கடற் தளம் நினைவில் வருவது போல காரைநகர் கடற் தளம் என்றாலே சோபா நிச்சயம் எம்மவர்களிற்கு நிச்சயம் நினைவில் வருவார்.

ஈழத்தில் நடந்த அகிம்சை போராட்டங்களாயினும் சரி ஆயுதபோராட்டங்களாயினும் சரி அதில் தமிழீழ பெண்களின் பங்கு எப்பொழுதுமே முக்கியமானதாக இருந்திருக்கின்றது. அந்த வகையில் ஈழத்தில் ஒரு முகாம் தாக்குதலிற்கு சென்று அதில் இறந்து போன முதல் தமிழ் பெண் என்பதால் சோபாவின் பெயர் அனைவர் நினைவிலும் நிலைத்து நிற்கின்றது.இந்த முகாம் தாக்குதலில் ஈ பி யினரின் சொந்த தயாரிப்பான (மோட்டர்) குறுந்தூர எறிகணையை இயக்குகின்ற குழுவில் சோபாவும் இருந்தார் .

எறிகணையை (செல்) எறிகணை செலுத்தி குளாயினுள் இறக்கி விட்டு பின்னர் அதன் திரியை பற்றவைக்கவேண்டும்.அப்படி செய்த போது எறிகணை வெளியேறாமல் குளாயின் உள்ளேயே வெடித்ததால் அதனருகில் இருந்த பலருடன் சோபாவும் இறந்து போனார்.இவர் 15 வயதிலேயே ஈபிஆர்எல்எவ் இயக்கத்தில் இணைந்து 17 வயதில் இறந்து போனார். புஸ்பராசா அவர்கள் எழுதிய புத்தகத்தை சமர்ப்பணம் செய்தவர்களில் சோபாவும் ஒருவர்.

சரி இனி ஈழபிரச்சனையில் இந்திய தலையீடுகள் எங்கே ஏன் எப்படி ஆரம்பித்தது என்று அனேகமாக பலரும் அறிந்தது தான் எனவே அவற்றை நான் விரிவாக விபரிக்க தேவையில்லை ஆனாலும் அவற்றை சுருக்கமாக ஒரு பார்வை பார்த்து கொண்டு செல்வோம்.இலங்கை சுதந்திரடைந்த காலத்திலிருந்தே இன்று வரை இலங்கையரசானது இந்திய அரசை அவ்வப்போது தனது தேவைகளிற்குமட்டும் பாவித்து கொண்டதே தவிர எந்த காலத்திலும் இந்திய அரசுடன் மனந்திறந்த நட்புபேணியது கிடையாது. வங்காள தேசத்திறகான இந்தியா பாக்கிஸ்தான் யுத்தத்தின் போது பாகிஸ்தான் விமானங்களிற்கு சிறீமா அரசு இரத்மலானையில் எரி பொருள் நிரப்பிய அதே நேரம் பின்னர் ஜே வி பி கிளர்ச்சியை அடக்க இந்திய இராணுவத்தை நாடியது என்று பல உதாரணங்களை சொல்லிகொண்டே போகலாம்.

இப்படி இலங்கையரசு தனது அவசர தேவைகளிற்கு மட்டும் இந்தியாவை பாவித்து கொண்டு அதன் நட்பு எல்லாம் அமெரிக்க இஸ்ரேல் மற்றும் மேற்குலக நாடகளுடன்தான் இருந்து வந்தது.வந்துகொண்டிருக்கின்றது. ஆனாலும் இது எல்லாம் தெரிந்தும் இன்னமும் இந்திய அரசு இலங்கை கேட்பதையெல்லாம் ஓடியோடி எங்கையாவது தேடிபொறுக்கியாவது கொண்டு வந்து கொடுத்துகொண்டுதான் இருக்கின்றது.
ஏன்?? எல்லாம் ஒரு ஆசைதான் என்ன ஆசை?? ஆங்கிலேய அரசு இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்குகின்ற பத்திரத்தித்தில் இரவு கையெளுத்திட்ட நேரு அவர்கள் படுக்கைக்கு போனதும் நித்திரையில் ஒரு கனவுகண்டார்

அதுதான் வல்லரசுகனவு ஆங்கிலேயரை போல பெரிய சண்டினாக உலக வல்லரசாக முடியாவிட்டாலும் தென்கிழக்காசியாவில் குட்டி சண்டியனாக இந்தியா ஒரு வல்லரசாக வேண்டும் என்று கனவு கண்டார்.அதை செயல்படுத்தவும் தொடங்கினார்.இதனால் இந்தியாவின் சனாதிபதி தேர்தலிற்கு இலங்கை மக்களும் வாக்கு போடவேண்டிய ஒரு நிலை வந்து விடும் என்று இலங்கை ஆட்சியாளர்களிற்கு ஆரம்பத்தில் இருந்தே ஒரு கலக்கம் அப்படி ஒரு நிலை வந்தால் பவம் இலங்கையால் என்ன எதிர்க்கவா முடியும் அதனால்தான் இலங்கை திறந்த பொருளாதார கொள்கை என்கிற போர்வைக்குள் அமெரிக்காவுடன் கள்ள தொடர்பை ஏற்படுத்தி கொண்டது.

இந்த கள்ள தொடர்பினை இந்தியா அறிந்ததும் முறை மாப்பிள்ளை நானிருக்க மூன்றாவது மனிசன் எப்பிடி உள்ளை நுளையலாம் என்று கையை பிசைந்தபடி ஆத்திரத்துடனும் ஆதங்கத்துடனும் அங்குமிங்கும் நடந்து திரிந்தது.அப்போதுதான் இலங்கையில் சில தமிழ் இளைஞர்கள் அரசிற்கெதிராக ஆயுதபோராட்டத்தை தொடங்கியுள்ளனர் என்கிற செய்தி அல்வாவாக இனித்தது இந்தியாவிற்கு.பிறகென்ன ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு தானே கொண்டாட்டம் .

இந்தியா காத்திருந்த சந்தர்ப்பமும் கனிந்து வந்தது 83 யூலை கலவரத்தின் தமிழர் மீது சிங்களம் ஆடிய வெறியாட்டத்தை மற்றைய நாடுகளை விட இந்தியா சற்று அதிகமாகவே அதிகாரதோரணையுடன் கண்டித்தது இலங்கையில் அப்போது அரசுகட்டிலில் படுத்திருந்தத ஜே.ஆரை வெறுப்பேற்றியது அமெரிக்க காதலன் இருக்கின்ற தைரியத்தில் இது எங்கள்வீட்டு பிரச்சனை உங்கள் வேலையை நீங்கள் பாக்கலாம் சொல்லிவிட இந்தியாவிற்கு இன்னமும் கோபம் கழுத்துவரை வந்து மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல் தவித்தபோதுதான் இலங்கை அரசை அடிபணிய வைக்க இன்னொரு வழியை கையாள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

இந்திய அரசு மற்றும் புலனாய்வு அதிகாரிகள் சேர்ந்து சில திட்டங்களை வகுத்து செயல்படுத்த தொடங்கினார்கள்.அந்த திட்டத்தில் முக்கியமானதும் முதலாவதுமாக ஈழத்தில் உள்ள போராட்ட குழுக்களை பற்றிய விபரங்களை சேகரித்து அவற்றில் சிலவற்றை தெரிந்தெடுத்து பயிற்சியும் ஆலோசனை மற்றும் ஆயுதங்களும் வழங்குவது ஆகும். போராட்ட குழுக்கழுடன் தொடர்புகளை ஏற்படுத்தி திட்டத்தை செயல்படுத்த அவர்கள் தங்களிற்கு நன்கு பழக்கமான நம்பிக்கையுள்ள ஒரு ஈழதமிழரை நியமித்தார்கள் அவர் வேறு யாருமல்ல ஈழத்தமிழர்கள் எல்லோரும் அன்புடன் தந்தை செல்வா என்று அழைத்த எஸ்.யே.வி. செல்வநாயகத்தின் மகன் சந்திரகானே அவர்.

அவரது தலைமையிலேயே இந்த திட்டங்கள் யாவும் ஒழங்கு படுத்தபட்டன.சந்திர காசனும் தன்னுடய தலைமையில் அன்றை போராட்ட இயக்கங்களான ரெலோ ஈபிஆர்எல்எவ் மற்றும் ஈரோஸ் உறுப்பினர்களிற்கு இந்திய அரசின் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்த போதுதான் புலிகள் இயக்கத்திற்கும் இந்த இந்திய அரசின் திட்டம் பற்றி தெரிய வந்தது எனவே புலிகள் அமைப்பும் இந்தியாவிடம் உதவிகளை பெறமுயற்சி செய்தனர். இந்த முயற்சி பற்றிய விரிவான விபரங்களை ஓரளவு புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகர் திரு அன்ரன் பாலசிங்கம் அவர்கள் எழுதிய போரும் சமாதானமும் என்கிற புத்தகத்தில் விபரித்தள்ளார். புலிகளிற்கும் பயிற்சிவழங்க இந்திய அரசு முன்வந்தாலும் புலிகளின்தலைமை ஒருவிடயத்தில் தெளிவாக இருந்தது

இந்திய அரசு இலங்கையரசின் கொட்டத்தையடக்கி ஒரு குட்ட குட்டி ஈழத்தமிழர்களிற்கு சில அதிகாரங்களை இலங்கையரசிடம் இருந்து பெற்றுகொடுக்குமே தவிர எந்த சந்தர்ப்பத்திலும் தனி ஈழம் அமைவதை அனுமதிக்காது என்று தெரியும். இந்த விடயத்தில் மட்டும் புளொட் அமைப்பை பாராட்டலாம் அவர்களும் இதே சிந்தனையை தான் கொண்டிருந்தனர். எனவே புலிகள் இந்திய அதிகாரிகள் இழுத்த இழுப்பிற்கெல்லாம் ஆடாமல் தங்களது தனித்தன்மையை பேண விரும்பினர்.

அதனால் சந்திர காசனின் தலைமையில் மற்றைய இயக்கங்களுடன் பயிற்சி திட்டத்தில் இணையாமல் முடிந்தால் தங்களிற்கு நேரடியாகவும் தனியாகவும் பயிற்சிகளை வழங்கும் படி கேட்டு கொண்டனர் அவர்கள் கோரிக்கைக்கு றோ அதிகாரிகள் அரைமனதுடன் ஆனால் மட்டுபடுத்தபட்ட ஒரு பயிற்சியை வழங்க சம்மதித்தனர் . புலிகளும் தங்கள் உறுப்பினர்களை பயிற்சிக்கு தயார்படுத்தி முதலாவதாக நூறு பேர் கொண்ட ஒரு அணியை பொன்னம்மான் தலைமையிலும் இரண்டாவது நூறு பேர்கொண்ட இன்னொரு அணியை றஞ்சன்லாலா தலைமையிலும் இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் அமைந்திருந்த இந்திய இராணுவத்தின் பயிற்சி முகாமான டொக்ரா டண் முகாமிற்கு அனுப்பி வைத்தனர்.

இத்துடன் இந்தியா புலிகள் அமைப்பிற்கு வழங்கிய பயிற்சியும் முடிவிற்கு வந்தது. இதே நேரம் புலிகள் தவிர்ந்த வேறு இயக்கங்கள் வேறு நாடுகளிலும் பயிற்சிகளை பெற்றுகொண்டிருந்தனர். அவை அடுத்த பாகத்தில்

No Comment