Navigation


RSS : Articles / Comments


12:17 PM, Posted by Siva Sri, No Comment

ஈழப்போராட்டத்தில் எனது (பொய்)சாட்சியம் பாகம் 8


இந்தவாரத்தொடர் நிர்மலா பற்றியது புஸ்பராசாவின் புத்தகம் பற்றிய விமர்சனத்தில் இருந்து சிறிது விலகிசென்றாலும் இன்றைய காலத்தின் மற்றும் இன்றைய இளம் புலம் பெயர் சந்ததியினரிற்கு சில விடயங்களையும் தெழிவு படும்தும் நோக்கத்திற்காகவும் எழுதப்படுகிறது ராஜினியின் சகோதரி நிர்மலா இவரது கணவர்பெயர் நித்தியானந்தன் நிர்மலா நித்தியானந்தன் என்கிற பெயர் 82 களில் இலங்கையில் பத்திரிகைகளில் பிரபல்யமாக அடிபட்ட பெயர் போராளிகளிற்கு உதவினார்கள் என்பதாலும் ஆயுதபோராட்டத்திற்கு ஆதரவளித்தவர்கள் என்கிற காரணத்ததால் இலங்கையரசால் சிறையிலடைக்கப்பட்டு 83 யூலை படுகொலைகளில் வெலிக்கடை சிறையில் இருந்து உயிர் தப்பி பின்னர் அங்கு உயிர் தப்பியவர்கள் மட்டகளப்பு சிறைக்கு மாற்றபட்ட பொழுது இவர்களையும் மட்களப்பு சிறைக்கு மாற்றினார்கள்

அங்கு 23ந்திகதி செப்ரெம்பர் மாதம் 83 ஆண்டு உள்ளிருந்த பல இயக்கங்களையும் சார்ந்தவர்களால் மட்டகளப்பு சிறை உடைக்கபட்டு பலர் தப்பியோடினார்கள் அதில் நித்தியானந்தனும் தப்பிக்கொள்ள இந்நத சிறையுடைப்பு சிறையிலிருந்த ஆண்கள் தாங்கள் மட்டும் தப்பியோடும் நோக்கில் உடைக்கபட்டதால் சிறையின் பெண்கள் பகுதியிலிருந்த பெண்களையோ நிர்மலாவையோ அவர்களால் மீட்க முடியவில்லை தப்பியோடி வெளியில் வந்தவர்களிற்கு அந்த நேரம் புளொட் மற்றும் ஈபிஆர்எல் எவ் அமைப்பினர் உதவி செய்து அவர்களை இந்தியா தமிழ் நாட்டிற்கு தப்பிசெல்ல உதவினார்கள். பின்னர் தாங்கள் தான் அந்த சிறையை உடைத்தது என புளொட்டும் ஈபி யும் பின்னர் மாறி மாறி உரிமை கோரி கொண்டனர்.

இது இப்படியிருக்க 84ம் புலிகள் மட்டகளப்பு சிறையை உடைத்து நிர்மலா மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் ஊடாக தமிழ் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரிற்கு புலிகள் அமைப்பினரே உதவிகள் செய்து புலிகள் அமைப்பின் ஆதரவு ஏடான விடுதலைப்புலிகள் என்கிற பத்திரிகையை நிருவகிக்கும் பொறுப்பும் இவரது கணவன் நித்தியானந்தத்துடன் இணைத்து வழங்கப்பட்டது. இதே காலகட்டத்தில் புலிகள் அமைப்பு பெண்கள் படைப்பிரிவை கட்டியமைக்கும் பணியை ஆரம்பித்திருந்தனர் அப்போது புலிகள் இயக்கத்தில் அதிகளவு பெண்கள் இணைந்திருக்காத காலகட்டம் எனவே புதிதாய் போராளிகளை இணைக்கவும் ஏற்கனவே இணைந்த போராளிகளிற்கு அரசியல் மற்றும் போராட்டம் பற்றிய தெளிவூட்டல்கள் என்பனவற்றை வழங்க புலிகளின் தலைமை முடிவுசெய்து

அதற்கான பொறுப்பை திருமதி அடேல் பாலசிங்கத்திடம் அந்த பொறுப்பு கையளிக்கப்பட்டது.இது நிர்மலாவிற்கு வெறுப்பை உண்டு பண்ணியது.தானே பெண்ணியவாதியெனவும் படித்தஇலக்கியவாதி ஈழப்பெண்களில் போராட்டத்திறகாக சிறைசென்றபெண் நானிருக்க எப்படி அடேல் பாலசிங்கத்திற்கு அந்த பொறுப்பை கொடுக்கலாமென்று இயக்கத்தினுள் ஒரு குழப்பத்தை உண்டுபண்ணி இயக்கத்தை விமர்சிக்க தொடங்கினார். இவரை பற்றி அடேல் பாலசிங்கம் அவர்கள் எழுதிய சுதந்திர வேட்கை என்கிற நூலில் பக்கம்115ல் இவ்வாறு கூறுகிறார் " விடுதலைப்புலிகள் இயக்கத்தில் நிர்மலாவை இணைப்பதற்கு பிரபாகரன் அவர்கள் ஆர்வமாக இருக்கவில்லை

பெண்ணிய எண்ணக்கரு தொடர்பான தெளிவான முரண்பாடு இருவரது எண்ணப்போக்கிலும் காணப்பட்டது.பிரபாரகரனுடைய சித்தார்ந்த பார்வையில் நிர்மலாவினது பெண்விடுதலைப்பார்வை ஒர் அச்சடித்த மேற்குல பெண்விடுதலைப் பார்வையாக இருந்ததேயன்றி உண்மையாக விடுதலை வேண்டி நின்ற தமிழ்பெணகளை இனம்கண்டு தழுவக்கூடிய பெண்விடுதலை இலட்சியமாக இருக்கவில்லை. எனவே பெண்கள் பிரிவை கட்டியெழுப்பும் எந்தவொரு பொறுப்பையும் நிர்மலாவிடம் கொடுக்கும் திட்டம் பிரபாகரனிடம் இருக்கவில்லை" . இப்படி எழுதியிருக்கிறார்.அதைவிட புலிகள் அமைப்பில் ஆயுதம் தாங்கிய முதல் பெண் போராளி என்று பார்த்தாலும் கூட அது திருமதி அடேல் பாலசிங்கம் அவர்களே.

தனக்கு பதவிகள் பொறுப்புக்கள் தராததால் நிர்மலா வெறுப்படைந்து புலிகள் இயக்கத்தை விமர்சிக்க தொடங்கினார் அதே நேரம் புலிகள் அமைப்பின் ஆரம்பகால உறுப்பினரும் புலிகளின் தலைமைக்கு மிகநெருங்கியவராகவும் இருந்த வடக்கு புன்னாலைகட்டுவனைச்சேர்ந்த சின்னையா சிவகுமார் (ராகவன்) என்பரிற்கும் இவரிற்கும் காதல் பூத்து கனிந்தது இதனை அறிந்த நித்தியானந்தன் புலிகளின் தொடர்புகள் மற்றும் அவர் நடாத்திய பத்திரிகையின் பொறுப்புகளை விட்டு வெளியேறி வெளிநாடொன்றிக்கு சென்றுவிட நிர்மலா ராகவனைப் பயன் படுத்தி புலிகளின் தலைமைக்கு எதிராகவும் அதே நேரம் புலிகள் அமைப்பை உடைத்து அதனை கைப்பற்றும் நோக்குடன் காய்கள் பழங்கள் எல்லாத்தையும் நகர்த்திப்பார்த்தார்.

ஊகூம் ஒண்றும் நடக்கவில்லை அதுமட்டுமல்ல ஒரு விடுதலைப்போராட்டத்தை கட்டுக்கோப்புடன் உறுதியாக கொண்டு நடாத்தகூடிய வல்லமை ராகவனிடம் இல்லையென்பது ராகவனுக்கே தெரியும் அதுமட்டுமல்ல நிர்மலாவின் பேச்சைகேட்டு யாரும் அவரை நம்பி பின்னால் போகிற நிலைமையிலும் இருக்கவில்லையென்பதும் உண்மையே . எனவே இவர்கள் இருவரும் இயக்கத்திலிருந்து வெளியேறி அவர்கள் விரும்பிய படி விரும்பிய இடத்திற்கு சென்று அவர்களின் சொந்த வாழ்க்கை தொடர இயக்கத்தின் தலைமை வழியனுப்பி வைத்தது.

இவர்கள் இருவரும் புலத்து பெண்ணியம் பேசும் ராயேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் உதவியுடன் இங்கிலாந்து வந்து குடியேறி எங்கிருந்து என்ன செய்கிறார்கள் என்றே பல ஆண்டுகள் சத்தமில்லாமல் இருந்தவர்கள் தற்சமயம் புலிகள் இலங்கை அரசுடன் செய்து கொண்ட போர் நிறுத்த உடன்படிக்கையின்பின்னர் பழைய குருடியின் வீட்டுகதவை தட்டதொடங்கியிருந்தாலும் தமிழர்கள் யாரும் இவர்கள் கதை கேட்கும் குருடர்களாய் இல்லை என்பது மட்டுமல்ல ராஜினியுடன் அவர் உயிருடன் இருந்த காலத்திலேயே தொடர்புகள் ஏதும் இல்லாதிருந்த திரணகமவும் மற்றும் மனைவின் நடத்தைகளால் அவரைவிட்டு பிரிந்த நித்தியானந்தனும் இவர்களுடன் சேர்ந்து புலியெதிர்ப்பு கதைப்பது வேடிக்கை.

கூடவே சேர்ந்து வேறு பலபுலத்து புலியெதிர்பு காரர்களையும் நிர்மலா ஒண்றிணைத்து மனிதவுரிமைவாதிகள் என்கிற பெயரில் புலிக்கு புல்லு தீத்த முடியாவிட்டாலும் பரவாயில்லை புண்ணாக்காவது தீத்தியே தீருவது என்று புலம்பி திரிகிறார்கள். மீண்டும் புஸ்பராசாவின் புத்தகத்தை தட்டுவோம்.அதில் பத்மநாபாவை மட்டுமல்ல இந்திய படை காலத்தில் வடகிழக்கு மாகாண முதலமைச்சராய் இருந்த வரதராயபெருமாள்பற்றி பக்கம் 326 ல் இப்படி சொல்கிறார் வடகிழக்கிற்கு முதலமைச்சராக வரும் எல்லா தகுதியும் கொண்ட ஒரவரையே பத்மநாபா முதலமைச்சராக்கினார்்

இப்போது இருக்கும் அத்தனை அரசியல் வாதிகளிற்கும் சவால்விட கூடிய கூர்மையான அறிவுத்திறண் கொண்டஒரு இளம் அரசியல் வாதியாக அவரைப்பார்த்தேன் எங்களது மக்களிற்காக ஜெனரல் கல்கத்தடன் அவர் எவ்வளவோ வாதாடினார். சந்தேகம் கொள்பவர்கள் ஒரு சுதந்திரமான சூழலில் அவரை அரசியல் களத்தில் விட்டுப்பாருங்கள் என்று சவால் விடுகிறேன் என்று சவாடல் விட்டு அவர் சார்ந்திருந்த ஈ பி அர் எல் எவ் இயக்கத்தை பற்றி அவர் வைக்கின்ற புழுகு பூக்களை வைக்க எமது காதின் அளவு போதாது. அதேநேரம் ஒரு கணிசமான தொகை உறுப்பினர்களையும் பலத்தையும் கொண்டிருந்த அதே நேரம் எண்பதுகளின் முக்கியமான 5 இயக்கங்களின் வரிசையில் இருந்த ஈபிஆர் எல் எவ் இயக்கத்தை பற்றி ஆகா ஓகொ என்று புகழ்ந்தவரால்

அந்த இயக்கம் இயங்கிய காலத்தில் இலங்கை அரசபடைகளிற்கெதிராக உருப்படியாக செய்த ஒரு தாக்குதலை கூட அவரது புத்கத்தில் விபரிக்க முடியவில்லை காரணம் அப்படி எந்த தாக்குதல்களுமே அந்த இயக்கத்தால் செய்யப்பட்டிருக்கவில்லை.ஆனாலும் ஈபிஆர்எல்எவ் இயக்கம் என்றதும் ஈழத்துமக்கள் அனைவரினதும் ஞாபகத்திற்கு வருவது கரைநகர் கடற்படைத்தளமே. காரணம் அவர்கள் அந்த தளத்தை தாக்கி அது தோல்வியில் முடிந்ததே காரணம் . யுத்தம் என்பதில் வெற்றிதோல்விகள் சாதாரணமானவைதான் . புலிகள் இயக்கம் கூட தங்கள் தோல்விகளைத்தான் தங்கள் அடுத்த வெற்றியின் பாடமாக்கினார்கள்.

ஆகவே ஈபி யினர் காரை நகர் தளத்தை தாக்கியதை நான் விமர்சிக்கவில்லை அந்த தாக்குதலை நெறிப்படுத்திய விதம் தான் விமர்சனத்திற்கும் நகைப்பிற்கும் வழி கோலியது.அந்த தாக்குதல் நடந்து முடிந்த பின்னர் அந்த காலகட்டத்தில் இளையவர்கள் நக்கலாக ஒரு பாடலை பாடுவார்கள் காத்தடிக்குது கலகலக்குது காரை நகரை ஈபி அடிக்குது சோத்து பாசலுக்கு புளொட் அடிக்கிது தூரத்திலை ஈரோஸ் அடிக்கிது விட்டு விட்டு ரெலோ அடிக்கிது இடைவிடாமல் புலி அடிக்கிது என்று பாடுவது ஞாபகத்தில் இருக்கிறது. இந்த தாக்குதலுக்கு அனேகமான தயாரிப்பு வேலைகள் மானிப்பாயிலேயே நடந்தேறின. எனக்கு ஈபிஆர்எல்எவ்வின் அரசியல் பிரிவில் பொறுப்பாய் இருந்த மானிப்பாயை சேர்ந்தவர்களான் டேவிற்சன் மற்றும் ஜோர்ச் போன்றவர்கள் பாடசாலைகாலத்திலேயே நன்கு பழக்கமானவர்களாக் இருந்ததனால் அவர்களின் காரை நகர் முகாம் தாக்குதல் பற்றிய விபரங்கள் மற்றும் தயாரிப்புவெலைகளையும் பார்வையிட கூடிய சந்தர்ப்பங்களும் கிடைத்தது எனவே காரை நகர் அடித்த கதையுடன் அடுத்த பாகத்தில் சந்திப்போம்

No Comment