அனைத்துலகச் செயலகத்தின் ஜெர்மன் பொறுப்பாளர் வாகீசன்.
புலிகளின் ஆயுதப்போராட்டம் முள்ளிவாய்க்காலில் முடிவிற்கு வந்தவுடன் புலம் பெயர் தேசத்து ஈழத்தமிழர் மற்றும் உலகத்தமிழர்களிடமும் எழுந்து நின்ற ஒரோயொரு கேள்வி அதன் அடுத்த கட்டம் என்ன என்பதுதான்.(ஈழத்தில் வாழும் தமிழர்களிற்கு அடு்த்தகணம் உயிர்வாழ்தலும்...உணவும் உடுதுணியுமே பெரிய பிரச்சனையென்பதால் அவர்கள் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படுபவர்களாக இல்லையென்பதே உண்மை)
இப்படியான கட்டத்தில்தான் அடுத்த கட்டத்தினை அரசியல் ரீதியாக நகர்த்தப்போவதாகவும் அதற்கு உலகத்தமிழர் அனைவரினதும் ஆதரவினைத் தரும்படியும் புலிகளின் அமைப்பில் எஞ்சியிருந்த மத்தியகுழு உறுப்பினரான பத்மநாதனின் அறிக்கை வெளியானது..அவரது அறிக்கைகள் இரண்டு குழம்பி அல்லது குழப்பியிருந்தது உண்மைதான் ஆனாலும் .. அடுத்து ஆளாளிற்கு வந்த அறிக்கைகளோ ஜயோ.. போதுமடா சாமி என்கிற அளவிற்கு குழப்பிவிட்டிருந்தது.
இந்த அறிக்கைக் குழறுபடிகளில் புலிகளின் அனைத்துலகச் செயலகத்தினரே நெடுமாறன் மற்றும் வைகோ ஊடாக அறிக்கைகைகளை வெளியிட்டு மக்களை தலைவலி குளிசைகளை போட வைத்தார்களென்றால்..புலிகளின் புலனாய்வுத்துறையிலிருந்து வெளியேறி தற்சமயம் ஜரோப்பிய நாடொன்றில் வசித்துவரும் ஒருவர் வேறு பெயர்களால் விட்ட அறிக்கைகளால் நித்திரை குளிசையே போடவைத்துவிட்டார்.
புலிகள் அமைப்பின் அழிவிற்கு இந்தியா சீனா உட்பட மேற்குலக நாடுகள் பாதிப்பங்கினை வகித்தார்களென்றால்..மீதிப்பாதி பங்கினை புலிகள் அமைப்பின் அனைத்துலகச்செயலகத்தின் பொறுப்பாளர் கஸ்ரோவும் அவரது நேரடித் தொடர்பில் நோர்வேயிலிருந்து செயற்பட்ட நெடியவனும் ஜெர்மனியிலிருக்கும் வாகீசனும் கனடாவில் தமிழ் என்பவருமே அங்கம் வகித்தனர்.
இதுபற்றி நான் தனியாகவே ஒரு பதிவை பின்னர் எழுதுகின்றேன். ஆனால் தற்சமயம் புலிகள் அமைப்பின் அனைத்துலக செயலகத்திற்கு வெளிநாடுகளின் பொறுப்பாளரான நெடியவன் என்கிற பேரின்பநாயகம் சிவபரன் பத்மநாதன் அவர்களால் உருவாக்கப்படும் கட்டமைப்பில் இணைந்து செயற்படுவதற்கு கொள்கையளவில் இணங்கிருந்தாலும் புலிகளின் தலைவர் இறந்துவிட்ட செய்தியை வெளியிடுவதற்கு மறுப்புத் தெரிவித்திருந்திருக்கின்றார்.
நாடுகடந்த தமிழீழ அரசு என்கிற கட்டமைப்பில் இணைந்து செயற்படுவதா இல்லையா என்பது பற்றி அனைத்துலக செயலகத்தின் அனைத்து நாட்டுப் பொறுப்பாளர்களுடனும் இணைந்து நெடியவன் நோர்வேயிலிருந்து நேரடியாகவும் தொலைபேசியூடாகவும் நடாத்திய ஆலோசனைக்கூட்டத்தில் அனைத்து நாட்டு பொறுப்பாளர்களுமே நாடு கடந்த தமிழீழ அரசிற்கு ஆதரவு வழங்குவதென்று முடிவெடுத்துள்ள நிலையில்.ஜெர்மனிய பொறுப்பாளர் வாகீசன் மட்டும் தான் ஆதரவு வழங்கமுடியாதெனவும் தான் தனித்தே இயங்கப் போவதாக அறிவித்துள்ளார்.. அதற்கு அவர் கூறியுள்ள காரணம். தலைவர் இல்லையென்று அறிவித்துவிட்டு இனி மக்களிடம் நிதி சேகரிக்கமுடியாதென்பதே..இவரது வாதமாகும்..இவர் தொடர்ந்தும் மக்களை ஒரு மாயை உணர்வுத்தளத்தினுள் வைத்துக்கொண்டே தன்னுடைய சுயலாபநோக்கங்களிற்காக வேலை செய்கின்றாரே தவிர, இனியாவது மக்களிடம் உண்மை நிலையை விளக்கி இனியாவது திறந்த மனதுடன் அரசியல்ரீதியான எந்த வேலைகளையும் செய்யத் தயாரில்லையென்பதே உண்மை.
தற்சமயம் வாகீசனின் தலைமையை ஏற்று அவருடன் தொடர்ந்தும் செயற்பட மானிலப் பொறுப்பாளர்களான ஆனந்தராசா..சிவநாதன்..சங்கர்..அகிலன்(இவர் ஜெர்மன் பரப்புரைப் பொறுப்பாளர்)சிறிரவி..சிவம்..ஆகியோர் முடிவெடுத்துள்ளனர்.
இதே நேரம் முள்ளிவாய்க்கால் பகுதியில் நடந்து முடிந்த மனிதப்படுகொலையில் மனிதாபிமானமுள்ள உலகத்தவரும் உலகத்திலுள்ள அனைத்து தமிழருமே அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்ந்திருந்த சமயம்..ஜெர்மனிய தமிழ் இளையோரமைப்பினைச் சேர்ந்த ஒருவரின் திருமணத்தில் வாகீசன் என்பவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆடிப்பாடியதை பார்த்து மனம் கொதித்த சிலர் வாகீசன் தற்கொலை செய்து கொண்டதாக அஞ்சலிப் பிரசுரம் ஒன்றினை அடித்து அவரது இறுதிக் கிரியைகள் நடைபெறும் இடத்தின் முகவரியாக அவர் ஆடிப்பாடிய திருமண மண்டபத்தின் முகவரியையே போட்டு அச்சடித்து ஜெர்மனியில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் எசன் மற்றும் டோட்மண் பகுதிகளில் ஒட்டியிருந்தனர்.
அந்தப்பிரசுரம் ஒன்று எனக்கும் மின்னஞ்சலில் கிடைத்தது.. ஆனாலும் நாகரீகம் கருதி நான் இங்கு இணைக்கவில்லை. இப்படி இவரது ஈழவிடுதலைப் போராட்டத்திற்கான அர்ப்பணிப்பு எத்தனை உண்மையானதென்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன..அதிலொன்று..ஜெர்மனிய அரசின் சில அமைச்சர்கள் முக்கியமாக அபிவிருத்தி அமைச்சர்..இலங்கையரசின் சர்வாதிகாரப்போக்கினை கண்டித்து அறிக்கைகள் வெளியிட்டிருந்தது மட்டுமல்ல இலங்கையரசிற்கான நிதி உதவிகளை வளங்கப்போவதில்லையென அறிவித்திருந்ததும்...அனைவரும் அறிந்ததே.. அப்படி அறிக்கைகள் வெளியிட்ட ஜெர்மனிய அரசு அமைச்சர்களை சந்தித்து நன்றிகூறுவதோடு எமது போராட்டத்தின் நியாயங்களை அவகளிற்கும் புரியவைத்து மேலும் சில அழுத்தங்களை இலங்கையரசிற்கு கொடுப்பதுடன் இலங்கையரசு மீதான பொருளாதாரத் தடையினைக் கொண்டு வருவதற்காக ஜரோப்பிய கூட்டமைப்பில் விவாதங்களை முன்வைக்க வேண்டுகோள் விடுத் கூடிய நிலையில் சில ஜெர்மனிய தமிழர்கள் முயற்சிகளை மேற்கொண்டு அவர்களுடன் சந்திப்பதற்கான அனுமதிகளையும் பெற்றபின்னர்..வாகீசனுடன் தொடர்புகொண்டு எமது தரப்பில் எமதுசில தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை அனுப்பினால் எமது கருத்துக்களிற்கு மேலும் வலுவாக இருக்குமென்று கேட்கப்பட்டது.. அந்த முயற்சியில் நானும் ஈடுபட்டிருந்தேன்..
ஆனால் இதற்கு அவர்களிடமிருந்து கிடைத்த பதில்...தமிழீழம் என்பது எங்களைத்தவிர அது வேறை யார் எடுத்துத் தந்தாலும் அது எங்களிற்கு தேவையில்லை.. அது எங்களிற்கு தெரியும்..என்று, தொலைபேசி இணைப்பினைத் துண்டித்துவிட்டனர்.. இப்படி பல உதாரணங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்..ஆனால் . இப்படியான அறிவுகெட்ட லூசுத்தனமானவர்களையெல்லாம்.. அனைத்துலக பொறுப்பில் புலிகள் அமைப்பின் தலைமை நியமித்து வைத்திருந்ததே எமது அழிவிற்கு காரணம்.. எனவே ஜெர்மன் வாழ் தமிழர்களே இனிவரும் காலங்களிலும் இவர்களது வழிநடத்தலிலா நீங்கள் உங்கள் தாயகக்கனவுகளை சுமக்கப்போகின்றீர்கள்...முடிவெடுங்கள் நன்றி..
இவர்களது செயற்பாட்டால் தமிழ் மக்களை அரசியல் அனாதைகளாக்கி விட்டார்கள் . தொடர்ந்தும்
தனி வழியில் செல்லும் தீர்மானம் இம்மக்களை அரசியல் தற்கொலைக்கு கொண்டு செல்லும் .வன்னி முகாம்களில் வாடும் மக்கள் இவர்களுக்கு வேண்டியவர்கள் இல்லையா? புலம்பெயர் நாடுகளில் பரப்புரை தோல்விகள் இவர்கள் அணுகுமுறையின் வெளிப்பாடுகளே. நீங்கள் பெயர் குறிப்பிட்டிருக்கும் அனைவரும் இதற்கு பொறுப்பை ஏற்று பதவி விலக வேண்டும். இதுவே அரசியல் நாகரீகம். நீங்கள் குறிப்பிட்டுள்ளது உண்மையாகவிருந்தால் தேசியத் தலைவரின் நியமனக்கடிதத்தை ( கேபி ) இவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லையா? அப்படியானால் இவர்கள் செய்த சத்தியப்பிரமானத்துக்கு என்ன மதிப்பு? அதற்கு இவர்கள் மதிப்பளிக்கவில்லையானால் தமிழ் மக்கள் ஏன் இவர்கள் பின்னால் அணி திரள வேண்டும் ?
மக்களின் அறியாமையை பயன்படுத்தியே இப்படி அரசியல் களைகள் வளர்கின்றன.
-டேவிட்
இந்தப்புலியள் திருந்தமாட்டீனம். நீங்கள் என்னத்தை கத்தினாலும் இதுகள் எப்போதும் சனத்தை ஏய்ச்சுப்பிழைக்கிறதை கைவிடப்போறதில்லை.
//பரப்புரை தோல்விகள் இவர்கள் அணுகுமுறையின் வெளிப்பாடுகளே. நீங்கள் பெயர் குறிப்பிட்டிருக்கும் அனைவரும் இதற்கு பொறுப்பை ஏற்று பதவி விலக வேண்டும். இதுவே அரசியல் நாகரீகம். நீங்கள் குறிப்பிட்டுள்ளது உண்மையாகவிருந்தால் தேசியத் தலைவரின் நியமனக்கடிதத்தை ( கேபி ) இவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லையா? அப்படியானால் இவர்கள் செய்த சத்தியப்பிரமானத்துக்கு என்ன மதிப்பு? அதற்கு இவர்கள் மதிப்பளிக்கவில்லையானால் தமிழ் மக்கள் ஏன் இவர்கள் பின்னால் அணி திரள வேண்டும் ?
மக்களின் அறியாமையை பயன்படுத்தியே இப்படி அரசியல் களைகள் வளர்கின்றன.
-டேவிட்//
இவர்களிற்கு தேசியமாவது தலைவராவது..எதைப்பற்றியும் கவலையில்லை.. இப்போதைக்கு பதவி விலகவும் மாட்டார்கள்...இருக்கின்ற பணத்தை ஒருவழி பண்ணிவிட்டு தாங்களே தலைமறைவாகிவிடுவார்கள்.. காத்திருங்கள் நிச்சயம் நடக்கும்..
//Anonymous @ 12:41 AM
இந்தப்புலியள் திருந்தமாட்டீனம். நீங்கள் என்னத்தை கத்தினாலும் இதுகள் எப்போதும் சனத்தை ஏய்ச்சுப்பிழைக்கிறதை கைவிடப்போறதில்லை.
//
அனானி நானும் திருத்தலாம் என்றுதான்: முயற்சிக்கிறேன் முடியுதா பார்க்கலாம்...