
தரமானது .தன்னிகரில்லாதது..தொட்டு நக்கிப்பாருங்கள் .. நக்க.. நக்க.. நாவூறும்...
நக்கியவர்களிற்கு .. வாயூறும்.....வாயூறியவர்களிற்கு பதவி போதையூறும்.
இந்திய அரசியல் வியாபாரத்தில் இன்று ஈழத் தமிழனும்.. அவனது அவலவாழ்வும்தான் ஊறுகாய்...எதிர்கிறவன் ஆதரிக்கிறவன்.. உதவ வேண்டும் என்கிறவன்... உதைக்கவேண்டும் என்கிறவன்....ஆயுததத்தை அள்ளிக்கொடுத்து அழி...என்றுவிட்டு அகிம்சை தேசம் என்கிறவன்... அண்ணா நாமம் வாழ்க என்கிறவன்.. சிறுத்தை என்று விட்டு மியாவ்....என்பவன். ..பாட்டாளிகளிற்கு படம் காட்டுபவன்...குண்டு கோமளவல்லிக்கு குடை பிடித்தும் குறைந்த இடம் பிடித்தவன்..எல்லோருமே தொட்டுக்கொள்கிற ஊறுகாய்தான்.. ஈழத்தமிழன் வாழ்வு.... தமிழகத்தில் அரசியல் சாண(ந)க்கியங்களை அழகாகவே அரங்கேறுகின்றன...அதற்காக நாங்கள் அதிர்ந்து போகவோ .. ஆச்சரியப்படவோ இல்லை..பேசிப்பேசியே மரத்துவிட்ட உங்கள் நாக்குகளிற்கு எங்கள் இரத்தத்தை நக்கியாவது உணர்வு வந்தால் உண்மையில் நன்றிகள்..உங்களிற்கல்ல.. எங்கள் உறவுகளின் இரத்தத்திற்கு....

தொட்டு நக்கிக் கொள்ளுங்கள்..
.....
கண்கள் தவிர்க்க.. ஓரக்கண் உள்வாங்கிய காட்சி.. கொடூரத்திற்கு இது எல்லையா.. இதுவும் மீறுமா..தெரியவில்லை..
:(
sad
இந்தியா ஒரு வல்லரசு....வல்லர்சு என்பது கெட்ட வார்த்தை....இந்தியா தனது அயுதங்கள் கூர்மையானவை என்று,தமிழர்களை கொல்வதின் மூலம் நிறுபித்து உள்ளது!
நான் இந்தியன் என்று சொல்வது கேவலமக உள்ளது!
இந்திய அரசியல் வியாபாரத்தில் ஈழத்தமிழன்.. ஊறுகாய்... சரிதான், ஆனா ஊறுகாய் போட்டது பிரபாகரன் என அவன் உணர்ந்தால் போதும்...
தமிழக அரசியல்வாதிகளுக்கு நல்ல ஒரு செருப்படி .
ஈழத்தமிழன்.. ஊறுகாய்
இதற்க்கு என்னால் பதில் சொல்ல முடிய வில்லை
அழுகை மட்டுமே பதிலா வருகிறது ஆனால் அதே நேரத்தில்
நம் என அழா வேண்டும் நம் வெற்றி பெரும் காலம்
விரைவில் வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது
நன்றி வணக்கம்
சுரேஷ் பஹ்ரைன்
//ttpian @ 5:43 PM
இந்தியா ஒரு வல்லரசு....வல்லர்சு என்பது கெட்ட வார்த்தை....இந்தியா தனது அயுதங்கள் கூர்மையானவை என்று,தமிழர்களை கொல்வதின் மூலம் நிறுபித்து உள்ளது!
நான் இந்தியன் என்று சொல்வது கேவலமக உள்ளது!
//
உங்களிற்கு மட்டுமல்ல தமிழ்நாட்டில் தமிழன் என்கிற உணர்வுள்ள அதை்து தமிழர்களின் நிலையும் இதுதான் நண்பரே.. நன்றிகள்.
//Blogger உதயம் said...
தமிழக அரசியல்வாதிகளுக்கு நல்ல ஒரு செருப்படி .//
வரவிற்கு நன்றிகள் உதயம்.