
நாடு கடந்த தமிழீழ அரசின் பிரித்தானியப் பிரதிநியான வசந்தகுமார் அவர்களினுடனான செவ்வி
சாத்திரி
சாத்திரி. வணக்கம் தற்சமயம் நாடு கடந்த தமிழீழ அரசின் அடுத்த கட்ட நடவடிக்கைகள். அல்லது செயற்திட்டங்கள் என்னவாக இருக்கின்றது.
வசந்தகுமார்....தற்சமயம் தமிழர்கள் புலம்பெயர்ந்து வர்கின்ற தேசங்கள் எங்கும் நாடுகடந்த தமிழீழ அரசின் கட்டைமைப்பினை உருவாக்குவதற்காக பிரதிநிதிகளை தேர்தெடுப்பதற்கான தேர்தல் ஒன்றினை வருகின்ற வருடம் சித்திரை மாதமளவில் நடாத்துவதற்காக வேலைகளில் இறங்கியிருக்கிறோம்..என்ன காரணங்களை அடிப்படையாக வைத்து அந்தத் தேர்தல்கள் நடை பெறப்போகின்றதென்பது பற்றி அதற்கான அறிவித்தலும் வெளியாகியிருக்கின்றது.
சாத்திரி....நாடு கடந்த தமிழீழ அரசின் கட்டைமைப்பினை உருவாக்கும் தேர்தல் வருகின்ற சித்திரை மாதம் நடைபெறும் என்று அறிவித்தல் வெளியாகியுள்ள நிலையில்..பிரித்தானியாவில் வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான மீள் வாக்கெடுப்பு ஒன்றினை நடாத்த வேறு சில அமைப்புக்கள் முயற்சி செய்து வருகின்றார்கள் அதற்கான திகதிகளும் விளம்பரங்களும் வெளியாகி விவாதங்களும் நடந்து வருகின்றது. அந்த அமைப்புக்களுடன் நாடு கடந்த தமிழீழ அரசு குழுவினரும் இணைந்தே அந்த வாக்கெடுப்பினை நடாத்துவதாக சில செய்திகளும் மறுத்து சில செய்திகளும் வெளிவருகின்றது.அதனைப்பற்றி விளக்கமாக சொல்லுங்கள்.
வசந்தகுமார்...இதைப்பற்றி நான் தீர்மானிக்க முடியாது.. அதே நேரம் எங்கள் அமைப்பின் ஆலேசனைக்குழு வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பினை மற்றைய அமைப்புக்களுடன் இணைந்து நடத்துவதற்கான தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை.ஆனால் எமது அமைப்பின் பிரித்தானியக் கிளையினருடன் மற்றைய அமைப்புக்கள் தொர்பு கொண்டு பேச்சு வார்த்தைகளை நடாத்தியுள்ளனர்..வேண்டுமானால் அதுபற்றிய சில விபரங்களை நான் உங்களிற்கு தெரிவிக்கலாம்..
சாத்திரி.. அதாவது நா.க..தமிழீழ.அரசின் பிரித்தானியக் கிளையினர் வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான மீள் வாக்கெடுப்பை நடாத்தும் மற்றைய அமைப்பினருக்கு உங்கள் ஆதரவினை வழங்கியோ அல்லது அவர்களுடன் இணைந்து செயற்படுகிறீர்களா..
வசந்தகுமார்..இந்த வட்டுக்கோட்டை தீர்மானம் என்பது ஈத்தமிழர்களின் அரசியல் போராட்டத்தின் அரசியல் அடித்தளம் போன்றது. அந்தத் தீர்மான நிறைவேற்றலின் பின்னர்தான் எங்கள் போராட்டம் வேகமெடுத்தது.அதனை அன்று 77ம் ஆண்டு தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைவர்கள் அவர்களது கட்சிகள் இணைந்து தான் அந்தத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை நடத்தியிருந்தனர்.ஆனால் இன்று இங்கு பிரித்தானியாவில் அந்தத் தீர்மானத்தின் மீதான மீள் வாக்கெடுப்பை தாங்களகவே சிலர் சேர்ந்து செய்யப் புறப்பட்டவேளை நாங்கள் அவர்களை தொடர்பு கொண்டு அதனை தற்சமயம் அவசரமாக செய்யவேண்டாம்..இது ஒரு முக்கியமான வாக்கெடுப்பு எனவே இங்கு மட்டுமல்லாது உலகளாவிய ரீதியில் தமிழ் சங்கங்கள் அமைப்புக்கள் எல்லோரையும் ஒன்றிணைத்து அனைத்து நாடுகளிலும் இதனை நடாத்தினால் அது பெரிய பயனைத் தரும். எனவே இதுபற்றி தொடர்ந்து ஆலேசனைக்கூட்டங்களை வைத்து முடிவு செய்யலாமென்று கூறியிருந்தோம்..ஆனால் அவர்கள் தாங்களாகவே திடீரென ஒரு திகதியினை அறிவித்திருக்கிறார்கள். எனவே அவர்கள் எங்களுடன் இணைந்து செயற்பட விரும்பவில்லையென்றே நினைக்கிறேன்.
.சாத்திரி..நாடுகடந்த தமிழீழ அரசு சில நாடுகளிற்கு அதாவது கனடா அமெரிக்கா பிரித்தானி போன்ற நாடுகளிற்கு தங்கள் ஆலோசனைக்குழு பிரதிநிதிகளை நியமித்துள்ளனர். அதே நேரம் தமிழர்கள் அதிகமாக வாழும் மற்றைய நாடுகளிற்கான பிரதிநிதிகளை இன்னமும் அறிவிக்கவில்லை அதற்கான காரணம் என்ன...
வசந்தகுமார்....மற்றைய நாடுகளில் இன்னமும் ஆலோசனைக்குழு பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் வேலைகள் முழுமையாக முடிவடையவில்லை..அதனால் குறிப்பிட்ட திகதிக்குள் அந்த அறிவிப்பு வெளியாகாமல் தள்ளிப்போயுள்ளது..ஆனால் வெகு விரைவில் அவை வெளியாகும்
சாத்திரி..நல்லது ஆனால் இந்த நாடு கடந்த தமீழ அரசு கட்டமைப்பு பிரதிநிதிகள் மீது ஒரு பொதுவான அபிப்பிராயம் ஒன்றுள்ளது அவர்கள் இன்னமும் வந்து மக்களிடம் இறங்கி அல்லது அவர்களை அணுகி இன்னமும் சரியாக வேலைசெய்யத் தொடங்கவில்லை என்று அதனை பலர் குற்றச்சாட்டகவே வைக்கின்றனர்..அதைப்பற்றி..
வசந்தகுமார்..அந்தக்குறைபாடு உள்ளதுதான் ஒத்துக்கொள்கிறோம்..இப்பொழுதுதான் பல சிக்கல்களிற்கு மத்தியில் ஒரு ஆலேசனைக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. தற்சமயம்தான் நாங்கள் பிரித்தானியாவில் மக்களிடம் சந்திப்புக்களை மேற்கொண்டு கலந்துரையாடலகளை நடத்தத்தொங்கியுள்ளோம்..அவைகளை வேகப் படுத்துவோம்..
சாத்திரி...அடுத்த சித்திரை மாதம் நடக்கவிருக்கும் தேர்தலின் நோக்கம் என்ன
வசந்தகுமார்..தற்சமயம் எங்கள் அமைப்பின் கட்டமைப்பு ஒரு தற்காலிக ஆலேசனைக்குழுவைக் கொண்ட அமைப்பு மட்டுமே. அடுத்த தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள்தான் எங்கள் அமைப்பின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை தீர்மானிப்பார்கள்
சாத்திரி...நா.க.தமிழீழஅரசின் திட்டங்கள் ஒரு நீண்டகாலத்திட்டங்கள் அல்லது நீண்ட காலத்தின் பின்னர் நிறைவேற்ற முயற்சிக்கும் திட்டங்கள்.ஆனால் தற்சமயம்.இன்றைக்கு அந்த முகாம்களில் வாழும் மக்களிற்கான அந்த இலங்கையரசின் ஒடுக்குமுறைக்குள் வாழும் தமிழீழ மக்களிற்கான உதவும் திட்டங்கள் ஏதாவது உங்களிடம் இருக்கின்றதா..
வசந்தகுமார்...இறுதியாக நோர்வேயில் நடந்த கூட்டத்தில் இதுபற்றிய விடயங்கள்தான் பெரும்பாலும் ஆராய்ந்தோம்..ஆனால் நாங்கள் நேரடியாக அவர்களிற்கு எதுவும் செய்யமுடியாத நிலைமையிலேயே இன்று இருக்கின்றோம்..அதே நேரம் அவர்களிற்கு உதவக்கூடிய நிலையிலுள்ள அமைப்புக்கள் நிறுவனங்களின் உதவிகளை நாடி அவர்கள் ஊடாக உதவிகளை செய்வதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கின்றோம்..
சாத்திரி...இறுதியாக ஒரு கேள்வி என்னவென்றால் பிரித்தானியாவில் உங்கள் அமைப்பில் தற்காலிக ஆலேசனைக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் யார் யாரென்று பிரித்தானிய வாழ் தமிழர்களிற்கு இன்னமும் தெரியது..எனவே அவர்கள் பற்றிய அறிமுகம் விபரங்களை அவர்களது படங்களுடன் ஊடகங்களிலாவது வெளியிட்டால்தான் மக்கள் அவர்களை அடையாளம் கண்டு தொடர்புகளை ஏற்படுத்த முடியும்..அப்பொழுதானே மக்கள் தங்கள் சந்தேகங்கள் ஆலோசனைகள் என்று கேட்டு தெளிவுபெற முடியும். அதற்கான வழிவகைகளை ஏற்படுத்துவீர்களா
வசந்தகுமார்..லண்டனில் தற்சமயம்தான் நாங்கள் ஒரு அலுவலகத்தினை திறந்து அங்கு முழுநேர ஊழியர்கள் அமர்த்தப்பட்டுளர்..அதே நேரம் எங்கள் அமைப்பு பற்றிய விபரங்கள்..அமைப்பு ஆலோசகர்குழு பிரதிநிதிகள் பற்றிய விபரங்கள் அடங்கிய பிரசுரங்கள்..புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு வருகின்றது..அவை வெளியிடப்படும் அதே நேரம் வேறு ஊடகங்கள் ஊடாகவும் அவர்களது விபரங்கள் வெளியிடப்படும்.இவை அனைத்தும் இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் வெளியிடப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்..