Navigation


RSS : Articles / Comments


சினேகிதிகளும் சில சில்லெடுப்புக்களும்

2:11 PM, Posted by sathiri, 5 Comments




அண்மையில் நண்பி ஒருவர் மானுஸ்ய புத்திரனின் சினேகிதிகளின் கணவர்களுடனான சினேகிதங்கள் என்றொரு கவிதையொன்றினை அனுப்பிவைத்து இப்படியான சம்பவங்கள் உங்களிற்கும் ஏற்பட்டிருக்கா என்று கேட்டிருந்தார்..எனக்குத்தான் சினேகிதிகள் அதிகமாயிருக்கே அவர்களிற்கு திருமணமான பின்னர் அவர்களினுடனானதும் அவர்களின் கணவர்களினுடனானதுமான என்னுடைய உறவில் நான் நெளிந்த.வழிந்த சம்பவங்கள் பல... எங்கள் சிறுவயது அல்லது பாடசாலை சினேகிதிகள் வயது வந்து திருமணமாகிப் போன பின்னர்..அவர்களுடன் எங்கள் உறவு முற்றாக அறுந்து போய்விடுகின்றது..அல்லது பெரும்பாலும் குறைந்து போய்விடுகின்றது.ஆனாலும் திருமணமான பின்னர் தொடர்பில் இருக்கின்ற சினேகிதிகளுடனான எங்கள் உறவு என்பது உண்மையிலேயே ஒரு கம்பியில் நடக்கிற வித்தை மாதிரி..

நீ.. நான்..வாடி போடி என்கிற ஒருமைகள் அற்றுப்போய்..நீங்கள் நாங்கள் என்கிற ஒரு அன்னியத் தன்மையில்..அழைக்கவேண்டியிருக்கும்.எனக்கும் ஜரோப்பாவில் சிறுவயது தோழி ஒருத்தி இருக்கிறாள்..நிச்சயிக்கப்பட்ட திருமணம் மூலம் வெளிநாடு வந்தவள்..அவளது கணவன் நல்லவர்தான் ஆனால் ஊரில் வாழ்கின்ற ஒரு சராசரி குடும்பத் தலைவனைப்போன்ற கொஞ்சம் கண்டிப்பு கொஞ்சம் சந்தேகம்..வருடத்தில் ஒருதடைவைதான் அவர்களது வீட்டிற்கு போவேன்.. மற்றும்படி தொலைபேசியில் கதைப்பேன்..அவள் கணவர் இல்லாத நேரங்களில் தொலைபேசியடித்து பல விடயங்களையும் மனம்விட்டு பேசுவாள். சில நேரங்களில் அவள் கதைத்துக்கொண்டிருக்கும் பொழுது கணவன் வேலையால் வந்துவிட்டால்..உனையே ""அவர் வேலையாலை வந்திட்டார் அவரோடை கதையுங்கோ என்று தொலைபேசியை அவரிடம் திணித்து விட்டு போய்விடுவாள்..அதுவரை கலகலவென பல விடயங்களையும் கதைத்துக்கொண்டிருந்த எனக்கு அவரிடம் என்னகதைப்பது என்று தெரியாமல் திக்கித் திணறி " என்ன வேலையோ.?? இப்பதான் முடிஞ்சதோ??எப்ப லீவு??என்று உப்புச்சப்பில்லாத சில கேள்விகளுடன் சும்மாதான் சுகங்கள் விசாரிக்க போனடிச்சனான்.என்று ஒருமாதிரி கதைத்து போனை வைத்துவிட்டு பெருமூச்சு விட்ட சந்தர்ப்பங்கள் ஏராளம்..

அவளதும் பிள்ளைகளினதும் மற்றும்.கணவரினதும் . பிறந்தநாளிற்கு தவறாது வாழ்த்து மடல் அனுப்புவேன்..அதே நேரம் அவளிற்கான வாழ்த்து மடலில் மட்டும் இதயம்..அல்லது சிவப்பு றோசாப்பூ..இல்லையில்லை றோசாப்பூ படமே இல்லாத வாழ்த்து மட்டைதான் தெரிவு செய்து அனுப்புவேன்..மற்றும்படி அவளது வீட்டிற்கு போகும் பொழுது அவளது கணவரிற்கு ஒரு வைன் போத்தல். பிள்ளைகளிற்கு விழையாட்டுப்பொருள் என்று வாங்கிவிட்டு அவளிற்கும் ஏதாவது வாங்கலாமென்று யோசிப்பேன்..அவளிற்கு என்னநிற உடைபிடிக்கும்.என்னென்ன பொருட்கள் பிடிக்கும் என்கிறதெல்லாம் எனக்கு அத்துபடியாய் தெரிந்தாலும் அவளிற்கு பிடித்தமானவற்றை யெல்லாம் எடுத்து பலதடைவை புரட்டிப் புரட்டிப் பார்த்து விட்டு கடைசியில் எதுவுமே வாங்காமல் போவதுதான் வழைமையாகிவிட்டது..அவளிடம் ஏதாவது பொருளை கொடுக்கும் போதும்சரி வாங்கும் போதும் சரி தப்பித்தவறியாவது என் கைகள் அவள் மீது பட்டுவிடாமல் பத்திரமாக பார்த்துக்கொள்வேன்..சாதாரணமாக கதைத்துக்கொண்டிருக்கும் பொழுது சில சமயங்களில் நான் என்னை மறந்து போடி என்று சொல்லி விட்டாலும் ..நாக்கைக்கடித்து மன்னிப்பு கேட்டு அவளது கணவனைப்பார்த்து வழியவேண்டியிருக்கும்.

அவர்களுடன் உரையாடும் பொழுதும்.. எங்கள் ஊர் பற்றியதும்..எங்கள் சிறுவயது சமாச்சாரங்கள் உறவுகள் பற்றிய விடயங்களை பெரும்பாலும் தவிர்த்து ..அவர்களது பிள்ளைகள் பற்றியும்..அவளது கணவன் பற்றியுமே அதிகம் பேசுவோம்..ஆனாலும் அவள் கணவன் விடாக்கண்டன்.நான் கொண்டு போன வைன் போத்தலை உடைத்து கிளாசில் ஊற்றியபடி தொடங்கும் உரையாடலில் ""இவள் படிக்கேக்கை ஒருத்தரையும் காதலிக்கேல்லையோ""என்று கதையோடு கதையாய் சிரித்தபடி அடிக்கடி கேட்பார்..""சேச்சே அவள் நல்லபிள்ளை குனிஞ்சதலை நிமிரமாட்டாள்..ஒரு பெடியளோடையும் கதைக்க மாட்டாள்.நான் பக்கத்து வீடு அதோடை சின்னவயதிலையே பழக்கம் எண்டதாலை என்னோடை மட்டும்தான் கதைப்பாள்""..என்றொரு நற்சான்றிதழ் பத்திரத்தை கொடுத்த கையோடையே அடுத்த கேள்வி வந்து விழும்..இவள் காதலிக்காட்டிலும் இவளின்ரை கலருக்கும் வடிவுக்கும் பெடியள் யாராவது காதல் கடிதம் குடுத்திருப்பாங்கள்தானே??அப்பிடியும் நடக்கேல்லையோ ""என்று அவளைப் பார்த்து சிரித்தபடிகேட்பார்..இது கொஞ்சம் சிக்கலான கேள்விதான்..ஒருத்தருமே கொடுக்கவில்லையென்று பொய்யும் சொல்லமுடியாது..யாரும் நம்ப மாட்டார்கள்.

ஏனென்றால் பாடசாலை நாட்களில் அது நிச்சயமாக அனைவருக்குமே நடந்திருக்கக்கூடிய விடயம்..அதே நேரம் கடிதம் கொடுத்து..அல்லது அவள் படிக்கின்ற காலங்களில் ஒருத்தனை காதலித்து அவளிற்காக நானே கடிதம் பரிமாறியதை நிச்சயமாக இப்பொழுது அவள் கணவனிடம் சொல்லமுடியாது.. அப்படியான சந்தர்ப்பத்தில் சமாளிப்பதற்காக முன்னாலிருந்த வைனை எடுத்து ஒரே மடக்கில் குடித்துவிட்டு அவரது கேள்விக்கணைகளில் இருந்து தப்புவதற்காக ""படிக்கிற காலத்திலை நீங்கள் பல பெட்டையளிற்கு கடிதம் குடுத்து அடிவாங்கி அனுபவம் போலை "" என்று ஒரு ஏவுகணையை அவர்மீது ஏவி விட்டு அது உலகமகா படிகிடிபோல நான் வில்லங்கத்திற்கு விழுந்து விழுந்து சிரிக்க..அவரும் பதில் சொல்லாமல் அசடுவழிந்தபடி அடுத்த விடயத்திற்கு மாறிவிடுவார்..

அதே நேரம் நான் குடித்த போதை எந்த அளவில் நிற்கிறது என்பதையும் அளந்து பார்ப்பதற்காக அடிக்கடி கழிவறைக்கு போவது போல எழுந்து நின்று நிதானித்து நடந்து சுய பரிசோதனை செய்து பார்ப்பேன்.. நடக்கும் போது சாதுவாய் தலை கிறு கிறுத்து நடை தடுமாறுவது போலவோ.. அல்லது சொன்ன ஒரு விடயத்தை திரும்ப சொல்வது போலவோ தோன்றினால் அதற்கு மேல் அங்கிருந்தால் ஏதாவது உளறிவிவேன் என்கிற பயத்தில்.உடைனேயே ..சந்தித்தது மகிழ்ச்சி என்று நன்றி வணக்கங்கள் சொல்லிவிட்டு விடைபெற்று விடுவேன்.. நண்பர்களே உங்களிற்கும் இப்படியான சில்லெடுப்பு அனுபவங்கள் நடந்திருக்கிறதா??நடந்திருந்தால் எனக்கு மகிழ்ச்சியே..எனவே நன்றி வணக்கம்..

இத்தாலிய இந்துக்கள்.தமிழில் பூசை..

1:12 PM, Posted by sathiri, 8 Comments

இங்கிலாந்தில் வோல்ஸ் என்கிற இடத்தில் இந்துமதத்தினை பின்பற்றும் இங்கிலாந்து வெள்ளையர்களின் முருகன் கோவிலை பலரும் அறிந்திருப்பிர்கள்.. அதே போல இத்தாலி நாட்டில் altair என்கிற இடத்தில் இந்து மதத்தினை பின்பற்றும் இத்தாலிய நாட்டினர்கள் சிலர் இணைந்து ஆரம்பத்தில்84 ம் ஆண்டளவில் ஒரு யோகாசனம் மற்றும் தியானம் செய்கின்ற ஒரு மண்டபத்தினை அமைத்து அவர்கள் வழிபடுவதற்காக ஒரு அம்மன்சிலையை மட்டும் வைத்து சிறிய கோயிலையும் அமைத்திருந்தார்கள்..காலப்போக்கில் மன அமைதிக்காக தியானம் செய்கிற இத்தாலியர்களின் தொகையுடன் இத்தாலி மற்றும் பிரான்சில் இருக்கின்ற இந்துக்கள். பெரும்பாலான ஈழத்தமிழர்கள் கோயில் பற்றி கேள்விப்பட்டு வரத்தொடங்கிவிட்டார்கள்..அதனால் சிறிய கோயிலும் வளர்ச்சியடைந்து இந்தியாவின் கன்னியாகுமாரியிலிருந்து சிலைகளும் இந்தியாவிலிருந்து சிற்பிகளும் வருவிக்கப்பட்டு அழகிய ஆனால் அளவான கோயிலாக உருப்பெற்று நிற்கிறது..அதனை நிருவாகிக்கின்ற இத்தாலியர்கள் தமிழ்நாட்டிலேயே பெரும்பாலும் இந்துமதம் பற்றியும் தேவாரப்பாடல்களையும் தமிழிலேயே படித்திருப்பதால் பாடல்கள் தமிழில் பாடுவது மட்டுமல்ல பூசைகளும் தமிழிலும் சமஸ்கிருதம் இரண்டும் கலந்தே செய்கிறார்கள்..

அவர்கள் தங்கள் பெயர்களையும் தமிழிலேயே மாற்றியிருக்கிறார்கள்..இன்று பிள்ளையார் சதுர்த்தி விசேட பூசை என்று மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்கள்.. பிரான்சில் நான் இருக்குமிடத்திலிருந்து 250 கி.மீ தூரம் இரண்டு மணிநேரப்பயணம்..மலைப்பிரதேசத்தில் அமைதியான அடர்ந்த காட்டுப்பிரதேசத்தில் அமைந்திருந்த கோயிலுக்கு போய் வந்தது மட்டுமில்லை உங்களிற்காக சில படங்களையும் எடுத்து வந்தேன் இங்கு இணைக்கிறேன்..

கோயிலின் முகப்பு


பூசைகள் முடிந்தபின்னர் இடம்பெற்ற கலை நிகழ்வில் நடனமாடும் இரண்டு இத்தாலிய மற்றும் ஒரு தமிழ்பெண்

அங்கு பலரின் கவனத்தையும் கவர்ந்து சிறப்பாக நடனமாடிய மீனாச்சி என்கிற இத்தாலியப்பெண்மணி







எங்களுக்கும் கலையை இரசிக்கத்தெரியுமில்லை..

இந்தக் கோயில் பற்றிய மேலதிக விபரங்கள்

ஈழம்..இனி ஆயுதப்போர் சாத்தியமா??

11:23 AM, Posted by sathiri, 4 Comments


ஈழத்தில் இலங்கையரசின் அடக்குமுறைகளிற்கெதிரான அறவழிப்போராட்டங்கள் நடந்துகொண்டிருந்த காலகட்டத்தில் ஒரு திருப்புமுனையானயாக 1970 ம் ஆண்டு தமிழ் மாணவர் பேரவை என்கிற மாணவர் அமைப்பினை அமைத்து ஈழத்தமிழரிற்கு இனி ஆயுதப் போராட்டம்மூலமாகவே தீர்வு ஏற்படுமென்று தீர்மானமெடுத்தவர்களின் முக்கியமானவர்களில் சத்தியசீலனும் ஒருவர்..இவரது மாணவர் பேரவையிலிருந்தே பிற்காலங்களில் பிரபாகரன்உட்பட பலஇயக்கங்களையும் தொடங்கிய தலைவர்கள் அனைவரும் தோன்றியிருந்தனர்.இன்று ஈழத்தில் ஆயுதப் போர் முடிவிற்கு வந்துள்ள நிலையில் ஆயுதப்போர் மூலமே தீர்வு எனமுடிவெடுத்த சத்தியசீலனுடனான ஒரு நேர்காணல்..







ஈழம்.. முடிந்துபோன ஆயுதப்போராட்டமும்.. முடிவுறாத காமக்கதைகளும்..

12:40 PM, Posted by sathiri, 4 Comments



ஈழத்திலை ஆயுதப் போராட்டம் முடிசிச்சுதா ... புலிகளின் தலைமையும் இல்லையெண்டு அறிவிச்சிட்டாங்களா இங்கினை ..புலம்பெயர் தேசங்களின் புலிகளின் கட்டமைப்போ நேத்திக்கடனிற்கு(வேண்டுதலுக்கு)உடைச்ச சிதறு தேங்காய் மாதிரி ஆகிப்போய் அதை மீண்டும் கே.பி..என்கிறவர் அமைத்த நாடுகடந்த தமிழீழ அரசு என்கிற கட்டமைப்பில் மீண்டும் அனைவரும் இணைத்து பழையபடி தமிழர்தரப்பு பெரும் சக்தியாக மாற்றமடைந்து வந்துகொண்டிருக்கிறபோது ..இன்னமும் புலிகளினதும் பிரபாகரனினதும் பெயரை வைத்தே பிழைப்பு நடாத்த விரும்பும் சிலர்மட்டும் நெடியவன் தலைமையில் கே.பி தலைமையிலான அணியினரை துரோகிகள் விலை போய்விட்டார்கள் என்றபடி.. தலைவர் மீண்டும் வந்து தாட்டுவைத்த துவக்கை கிழறியெடுத்து போராட்டம் நடாத்துவார்..அதற்கு பணம் தாருங்கள் என்று பணம் சேர்ப்பதிலேயே குறியாய் இருக்கிறார்கள்..

அதுமட்டும் கிடையாதுங்கோ ஏதோ ஏருத்தரையொருத்தர் பார்த்து .காய் கலோ.. எண்டு சொல்லுறமாதிரி ஆளாளிற்கு காய் துரோகி என்கிற நிலைமையாய் போச்சு..ஆனால் கே.பி அணி பக்கம் நிற்கிறவங்களிற்கு மற்றவங்கள் சொல்கிற குற்றச்சாட்டு என்னவெண்டால்... புலிகள் இயக்கத்தில் இருந்து பணமோசடி .பாலியல் மோசடி செய்தார்கள்..என்று அதரப்பழசான அலுத்துப்போன குற்றச்சாட்டுக்களாக உள்ளது.. இனியாவது புதிசாய் ஏதாவது யோசிப்பாங்களா?? ஒரு பாரிய ஆயுத அமைப்பிலை இருந்து வெளியேற்றுறதுக்கு வேறை குற்றச்சாட்டுக்கள் எதுவுமே இல்லையா..என்ன கண்றாவி...இந்த குற்றச்சாட்டு கே.பி..யில்தொடங்கி.. வழுதி..வழியாய் வந்து.. இப்பொழுது என்மீதும் அதே குற்றசாட்டை சுமத்தி நானும் துரோகியாம்..

எல்லாரும் நல்லா கவனமாய் கேட்டுக்கொள்ளுங்கோ.. நான் இப்போ துரோகி..சரி..புலிகள் இயக்கமென்பது.. இதுவரை உலகில் இருந்த விடுதலை இயக்கங்களிலேயே மிகவும் கண்டிப்பான கட்டுக்கோப்பானதொரு ஆயுதஇயக்கம் என்பதை நான் இங்கு எழுதத் தேவையில்லை.. அப்படி அந்த இயக்கத்தில் பணம் களவெடுத்து பாலியல் மோசடியும் செய்தால் உடைனே தலைவர் மோசடி செய்தவரை இயக்கத்திலிருந்து வெளியேற்றி முடிந்தால் பத்திரமாக வெளிநாட்டிற்கும் அனுப்பிவைப்பாராக்கும்...அப்பிடியே வெளிநாடு வந்தவங்களும் புலியளிற்கு ஆதரவாய் இருக்கிறமாதிரி இருந்து கொண்டு வெளிநாட்டு உளவு நிறுவனங்களிற்கு விலை போயிடுவாங்களாம்..முக்கியமாய் றோவிற்கு..இங்கினை கவனியுங்க உலகத்திலையே உளவு நிறுவனமெண்டால் அது றோ மட்டும்தானாம்..

ஏனெண்றால் அதை எழுதிறவங்களிற்கு அதை விட்டால் வேறை உளவு நிறுவனங்களின்ரை பெயரே தெரியாது அதுதான் பிரச்சனை.சரி எங்களைத்தான் தலைவர் வெளியேத்த முதல்லை ஊரிலை ஒரு பெண்ணை பிடித்து கலியாணமும் பண்ணிவைத்து தான் வெளியேத்துவார்..அதுதான் வெளியேத்திட்டாரே..நாங்களும் இயக்கத்திலை சுருட்டின பணத்தோடை முதல்லை இந்திய வருவம்..ஏனெண்டால் அங்கினைதானே எங்களிற்கு புலிகள் இயக்கம் பயிற்சி தந்தது..அதாலை எங்களிற்கு தெரிந்த முதல் வெளிநாடு அதுதான்..அங்கை தமிழ்நாடு.. கன்னடா.. ஆந்திரா..கேரளா என்று முதல்லை மானில வாரியாய் எங்களோடை பாலியல் சேட்டைகளை ஆரம்பிப்போம்..பிறகு அப்பிடியே கொஞ்சம் வெளியாலை போய்

தாய்லாந்து.கம்போடியா..இந்தோனேசியா என்று நாடுவாரியாய் முடித்துக்கொண்டு.. இப்போ ஜரோப்பாவிலை பிரான்ஸ்.. ஜெர்மன்..சுவிஸ் எண்டு உலகலெவலிலை பாலியல் மோசடியள் செய்து கொண்டிருக்கிறம்..இப்போ உலகலெவலிலை நாங்கள் இயங்கத்தொடங்கின படியாலை பணமும் அதிகமா தேவைப்படுதா.. அதுதான் றோவிட்டை விலை போயிட்டம்...றோவிற்கும் என்ன கஸ்ரமோ??எங்கனை வாங்கிட்டு மொத்தமாய் பணத்தை தராமல் தவணை முறையிலை கே.பி..ஊடாக தாறாங்கள்..அதை வைச்சுக்கொண்டு நானும் பொழுது போகாமல் அப்பப்ப ஓசி பேப்பர் ஒண்டிலையும் இணையத்தளங்களிலையும்..ஊர்வம்பளக்கிறது அவங்களிற்கு குடையுதாம்..நாங்கள் றோவிட்டை வாங்கிறம் அதுக்கு எங்களாலை கணக்கு காட்ட ஏலும்.. ஏனெண்டால் ஒவ்வொரு பெட்டையளும் ஒவ்வொரு நாட்டிலை இருக்கிறபடியாலை போக்குவரத்துசெலவு..அங்கை போனால் ஊசார் ஏத்துறதுக்கு தண்ணிச்செலவு.. போகேக்கை வெறும் கையோடை போறது தமிழர் நாகரீகம் இல்லைத்தானே அதாலை ஏதாவது வாங்கிற செலவு இப்பிடி ஏகப்பட்டது இருக்கு தாராளமாய் கணக்கு காட்டலாம்..

ஆனால் நீ்ங்கள் திரும்பவும் ஆயுதப் போராட்டத்திற்கெண்டும்..இராணுவ முகாம்களிலை இருக்கிறவையை வெளியாலை எடுக்கிறமெண்டும்.. மருந்துக்கு எண்டும் சனத்திட்டை காசு சேர்க்கிறீங்களே.. அதிலை யாரையாவது வெளியிலை எடுத்ததை காட்டமுடியுமா?? இல்லாட்டி வாங்கின பணத்துக்குத்தான் அது எங்கை எவ்வளவு போனதெண்டு கணக்கு காட்டமுடியுமா???முடியாதே..
இதை நான் உங்களிட்டை நேரை கேட்டால் உடைனையே .. நான் புலிகள் இயக்கத்திலை எந்தப்பயிற்சி முகாமிலை எத்தனையாவது அணியிலை பயிற்சி எடுத்து எந்தெந்தப் பிரிவிலை எத்தினை வருசம் இருந்தனான் எண்டுகூடத்தெரியாமல்..என்னைப்பற்றி தெரிந்த அரைகுறை தகவல்களைவைத்துக்கொண்டு துரோகி கட்டுரை எழுதிறாங்கள்.. இனியாவது உங்களைப்போலவே அரைகுறை கட்டுரைகளை எழுதாமல்.. என்னுடைய விலாசம் தொ.பே இலக்கம் எல்லாம் பகிரங்கமாய் இருக்கு.. நேரிலை யாரவது வாங்கோ..அல்லது தொ.பே அடிச்சு என்னைப்பற்றிய முழு விபரத்தையும் கேளுங்கோ.. கேட்டுவிட்டு எழுதுங்கோ.. அப்பதான் ஒரு பரபரப்பாய் இருக்கும்...அப்போ வரட்டா????அவ்வ்வ்...........

காம சாத்திரி

2:19 PM, Posted by sathiri, 9 Comments

"ஊருக்கு உபதேசம் உனக்கில்லயடி"

நீங்கள் "சாத்திரி" அல்லது "சிறீ" என்றழைக்கும் சிறீரங்கநாதன் கெளரிபாலனை அறிந்திருப்பீர்கள். ஆனால் அவரின் மறுபக்கத்தை யாரும் அறிந்திருக்க நியாயம் இல்லை. ஒரு பேப்பரில் ஊருக்கு உபதேசம் செய்யும் இவருக்கு உபதேசம் செய்ய யாரும் இல்லை. அதனால், காம களியாட்டங்களுடன் கழிகின்றது இவரது வாழ்க்கை.

இவர் பிரான்சில், நீஸ் நகரில் உணவகம் ஒன்றை நடத்தி வருகின்றார். இவர் யாழ்ப்பாணத்தில் உள்ள சண்டிலிப்பாய் எனும் இடத்தைச் சேர்ந்தவர். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் 1984 முதல் 1986 வரை பயிற்சி முகாம் நான்கில் இருந்தவர். குறுகிய காலம் இயக்கத்தில் இருந்த இவர், இயக்கத்தில் இருந்தவர்களுடன் கண்டபடி முறண்பட்டதுடன், இயக்கத்தின் கொள்கைகளுக்கு முரணாக நடந்துகொண்டு ஒழுக்காற்று நடவடிக்கையில் இயக்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.


இயக்கதில் குறுகிய காலமே இருந்து ஒழுக்காற்று நடவடிக்கையில் வெளியேற்றபட்ட புலம்பித்திரியும் ஷோபா சக்தி என்பவர் போல்தான் இவரும் வெளியேற்றப்பட்டபின் புலி எதிர்ப்பு புராணங்களைப் பாடத் தொடங்கினார்.
ஆனால், வெளியேற்றப்பட்ட "சாத்திரி" இயக்கத்தின் விசுவாசி போல் காட்டிக் கொண்டாலும் இயக்கத்தைப்பற்றி விமர்சிப்பதை நிறுத்தவில்லை. அதற்கு ஒத்துழைப்பாக இருந்தது இலண்டனில் இருந்து வெளியாகும் 'ஒரு பேப்பர்'. நிதி நெருக்கடியால் நின்றுபோன இந்தப் பேப்பர் இப்போது கேப்பியின் நிதி உதவியுடன் மீண்டும் வலம்வரத் தொடங்கியுள்ளது.
சாத்திரி ஊரில் ஒருவரை திருமணம் செய்திருந்தார். பின்னர் புலம்பெயர்ந்த வந்தவுடன் அந்தத் திருமணத்தை மறைத்து அந்த மனைவியைக் கைவிட்டு பிரான்சில் வெள்ளைக்காரப் பெண் ஒருவருடன் உல்லாசமாக வாழ்க்கை நடத்தினார்.

காலப்போக்கில் அப்பெண்மணியும் கசத்துவிட இந்திய உளவு அமைப்பான "றோ"வின் அறிமுகத்துடன் வந்த கன்னடப் பெண்மணியை மணந்து கொண்டார். இவர்களுக்கு தற்போது ஒரு பெண்குழந்தையும் உண்டு. தற்போது கன்னடப் பெண்மணியுடன் "சாத்திரி" குடித்தனம் நடத்தினாலும், நாலாவதாக இப்போது சீனப் பெண்மணி ஒருவருடன் தொடர்பு இருப்பதை எமது வாசகர்களுக்கு நாம் ஆதாரத்துடன் உறுதிப்படுத்த முடியும். ஆனால் "சாத்திரியின்" குழந்தையின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அந்த விபரங்களை இங்கே தவிர்க்கின்றோம்.

இவர் இந்திய புலனாய்வு அமைப்பான "றோ"வுடன் இணைந்து வேலை செய்வதை தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை 2003ம் ஆண்டு தலைமைக்கு உறுதிப்படுத்தியிருந்தது. தற்போது "ஒரு பேப்பரின்" பிரான்சுக்குரிய தொடர்பாளராகவும் இவர் இருக்கின்றார். இப்படிப்பட்ட கோடாரிக்காம்புகளை நீங்கள் இனம் காணுங்கள்.

இந்தத் தகவல்களை நம்ப மறுப்பவர்கள் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள "சாத்திரியுடன்" கடிதம் மூலமாகவோ, தொலை, செல் பேசிகள் மூலமாகவோ நவீன இலத்திரனியல் ஊடாகவோ நீங்களே தொடர்பு கொண்டு கேளுங்கள்...
GOWRIPAL SRI
241, BOULEVARD DU MONT-BORON
06300 NICE
http://meivilampi.blogspot.com/2009/08/blog-post.ஹ்த்ம்ல்

TEL: 09 64 30 06 16
MOBILE: 06 11 14 94 70

என்னடா தன்னைப்பற்றியே எழுதியிருக்கிறானே என்று நினைப்பவர்களிற்கு
எனது குறிப்பு..ஒரு இனத்திற்கான விடுதலைக்காக ஒரு ஆயுதப் போராட்டத்தினை நடத்தி தன்னையும் தன்னுடைய குடும்பத்தையும் அர்ப்பணித்தவனின் வழியை தொடப்போவதாக சொல்லிக்கொண்டு பிரபாகரனின் படத்தையும் போட்டுக்கொண்டு அடுத்த கட்ட ஈழப்போரை நடத்துவதாக சொல்லிக்கொண்டு இப்படி என்னைமாதிரி சிலர் என்னென்ன மோசடி செய்தார்கள் எந்த பெண்களோடை தொடர்பு வைத்திருந்தார்கள் என்றும் யார் யாரோடை படுத்தார்கள் என்கிற ஆராச்சியில் ஈழப்போராட்டத்தை சுருக்கிவிட்ட சிலர் எழுதும் ஒரு இணையத்தில் வெளியானது..அவர்கள் ஒரு பத்திரிகையையும் சில இணையத்தளங்களையும் நடாத்துகிறார்கள்.. அப்படி அவர்கள் நடாத்துகின்ற ஒரு இணையத்தளத்தில் என்னைப்பற்றி எழுதிய உண்மைகள்தான் இவை..இவை பாதிதான் இன்னமும் மீதி அவர்களிற்கு தெரியாது..
எனவே அந்த இணைப்பினை பார்க்க


படித்து மகிழுங்கள் நன்றி
அத்துடன் பாகம் இரண்டினை மற்றவர்களிற்கு சிரமம் கொடுக்காமல் நானே எழுதவுள்ளேன் விரைவில் எதிர்பாருங்கள்..நன்றி

நாறிப்போன நாட்டுப்பற்றாளர் பட்டம்..

3:40 PM, Posted by sathiri, 6 Comments




நேற்று தமிழ் இணைய ஊடகங்களான புதினம்..பதிவு..சங்கதி.. ஆகியவற்றில் ஒரு செய்தி.. யேர்மனி சோலிங்கன் நகரில் புற்று நோயால் இறந்துபோன கந்தையா உதயகுமார் என்பவரிற்கு தமிழீழ விடுதலைப்புலிகளினால் நாட்டுப்பற்றாளர் பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டிருக்கின்றார்...என்கிற செய்தியுடன்.. இறந்து போனவரின் உடலிற்கு புலிக்கொடிபோர்த்தியபடங்களுடன்..இறந்து போனவரின் மனைவிகதறியழுது கொண்டிருக்கும் பொழுது அவரது கைகளில் புலிகளின் இலச்சினை பதித்த நாட்டுப்பற்றாளர் பட்டப் பத்திரத்தை நீட்டிய படமொன்றும் வெளியிடப்பட்டுள்ளது....இங்கு இறந்து போனவர் நாட்டுப்பற்றாளரா???அவர் நாட்டிற்காக உழைத்தாரா அல்லது அவரிற்கு அந்தப்பட்டம் ஏன் கொடுக்கப்பட்டது என்கிறதல்லஇங்கு பிரச்சனை..

இதுவரை காலமும் நாட்டுப்பற்றாளர்களை கெளரவித்து தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களால் அறிவிக்கப்பட்டு அதன்பின்னர் பிரபாகரன் அவர்களின் கையெழுத்துடனான பத்திரமொன்று நாட்டுப்பற்றாளரின் உறவினர்களிடம் கையளிக்கப்படுவதே மரபாக இருந்து வந்தது...எனவே புலிகள் இயக்கம் ஈழத்தில் செயலிழந்துபோய் அதன் தலைவர் பிரபாகரனும் இல்லையென்கிற நிலைமையில் இந்த நாட்டுப்பற்றாளர் அறிவிப்பை யார் செய்தது..அதேநேரம் அந்தப் பத்திரம் யாருடைய கையொப்பமும் இல்லாமல் வழங்கப்பட்டுள்ளது..இதனை வழங்கியது புலிகளின் அடுத்த தலைவராக தன்னை அறிவித்துள்ள கே.பி..என்பவராலா???..அல்லது புலிகளின் யெர்மன் பொறுப்பாளர் வாகீசனாலா??? கே.பி அறிவித்ததாக எந்த ஊடகமும் செய்தி வெளியிடவில்லை..

கே.பி யின் கையொப்பமும் அதிலில்லை..அதே நேரம் எந்தக் கையொப்பமும் அற்ற பத்திரம் செல்லுபடியாகுமா??அந்தப் பத்திரத்தில் அதை வழங்கியது புலிகளின் தலைமைச்செயலகம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால்.. புலிகளின் தலைமைச்செயலகம் எங்கு இயங்குகின்றது?? யெர்மனியிலா??யெர்மனியில் இயங்கினால் அதனை யெர்மன் பொறுப்பாளர் வாகீசனின் முடிவிற்கேற்ப வழங்கியிருந்தல்..இனி ஈழத்தமிழ் மக்களின் தேசியத் தலைவர் வாகீசனா??அல்லது இனிவரும் காலங்களில் எல்லா நாடுகளிலும் உள்ள புலிகள் அமைப்பு பொறுப்பாளர்களே இந்தப்பதவிகளை தங்களிற்கு விரும்பியபடி வழங்கலாமா?? புலிகள் அமைப்பில் இறுதிவரை போராடி வீரமரமடைந்த ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட போராளிகள் மற்றும் தளபதிகளான தீபன்..துர்க்கா.விதுசா..நடேசன்.புலித்தேவன்.. இப்படிப் பல தளபதிகளிற்கே இன்னமும் முறைப்படி அறிவிக்கப்பட்டு வீரவணக்கம் செலுத்தாத நிலையில்.. இப்படியான கேலிக்கூத்துக்கள் தேவையா??

அப்படி நாட்டுப்பற்றாளர் பதவி பெற்றுக்கொள்ள ஏதாவது வசதிகள் இருந்தால் என்னுடைய சித்தாப்புவம் ஒருவர் இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் இறந்து போனார்..அவர் யாழ்ப்பாணத்தில் வீடு காணி இருந்தும் தான் இராணுவத்தின்ரை கட்டுப்பாட்டிற்கை இருக்கமாட்மாட்டேன் என்று அடம்பிடித்து வன்னியில் புலிகளின்ரை கட்டுப்பாட்டிற்குள் போய் பிள்ளைகளையும் மாவீரர்களாக்கி வாழ்ந்த ஒரு நாட்டுப்பற்றாளர் ஆனால் சோகம் என்னவென்றால் இறுதி யுத்தத்தில் புலிகளின் துப்பாக்கி குண்டுகளினால் இறந்து போனார்.. அவரிற்கு யாராவது ஒரு நாட்டுப்பற்ளாளர் பதவி வாங்கி குடுப்பீங்களா??வாங்கித் தாறவங்களை யுரோவிலை கவனிக்கலாம்..

எமதர்மனின் வாகனம் எருமையா ஏயார்பஸ்சா??

2:03 AM, Posted by sathiri, 2 Comments


எமதர்மனின் வாகனம் எருமையா ஏயார்பஸ்சா??

(இந்தவார ஒரு பேப்பரிற்காக எழுதியது)
ஏயார் பஸ் நிறுவனத்தின் தயாரிப்பான இரண்டு விமானங்கள் கடந்த மாதம் விபத்துக்குள்ளானது பற்றிய செய்திகள் உலகமக்கள் அனைவரும் அறிந்ததே..அதனால்தான் எமதர்மன் இப்பொழுது ஏயார்பஸ் நிறுவன விமானங்களில் வருகின்றாரா என்கிற பயம் விமானப்பயணிகள் மத்தியில் எழுந்துள்ளது.. முதலாவதாக பிறேசிலின் றியோ நகரத்திலிருந்து பாரீஸ் நோக்கி வந்த ஏயார் பிரான்சிற்கு சொந்தமான விமானம் அத்திலாந்திக் சமூத்திரப் பகுதியில் காணமல் போனதாக அறிவிக்கப்பட்டு பின்னர் அது விபத்திற்குள்ளாகி அதில் பயணம் செய்த 228 பயணிகளுமே இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டது. நடந்த விபத்து தொழில்நுட்பக்கோளாறா.

அல்லது தீவிர வாதிகளில் நாசவேலைகளா என்கிற இரண்டு கோணத்திலும் பிரெஞ்சு அரசு விசாரணைகளை நடாத்தியது...விமானத்தில் பயணம் செய்த இரு பயணிகளின் பெயர்கள்: சர்வதேச காவல்துறையால் தேடப்படும் அல்கெய்தா தீவிரவாதிகளின் பெயரை ஒத்து இருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தாலும்..பின்னர் அப்படி ஏதும் இல்லை பெயர் குழப்பஙகளே காரணம் என்று பிரான்சின் பாதுகாப்புத்துறை அறிவித்தது...விமான விபத்து நடந்ததற்கான காரணங்களை அறிவதற்காக வழைமைபோல விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதோடு விசாரணைக்கு ஏதுவாக விமானத்தின் கறுப்புப் பெட்டியை தேடும் முயற்சியும் நடந்தது . விபத்து நடந்தது மிக ஆழமான சமூத்திரப்பகுதியென்பதால் கறுப்புப் பெட்டியை தேடியெடுப்பது சிரமமாக உள்ளதாக அதன் மீட்புகுழுவினர் அறிவித்திருந்தனர்..அதேநேரம் விமானத்தின் கறுப்புப்பெட்டியின் ஆயுட்காலம் ஒருமாதங்களே ..அதற்குள் அதனை தேடியெடுத்து அதில் பதிவாகியிருந்தவற்றை ஆய்விற்குட்படுத்தவேண்டும்..ஒருமாதமாக தேடியும் கறுப்புப் பெட்டி கிடைக்காததால் மீட்புக்குழுவினர்.

அதற்கும் சேர்த்து அஞ்சலிசெலுத்திவிட்டு..விசாரணைகளை விபத்து என்றே முடித்துக்கொண்டு விட்டனர்..தீவிரவாதிகளின் தாக்குதலை பிரான்ஸ் அரசு மூடி மறைக்கிறதா எனவும் சில பத்திரிகைகள் சந்தேகங்களை எழுப்பியிருந்தன..ஆனால் நடந்தது உண்மையிலேயே விபத்தா அல்லது தீவிரவாதிகளின் தாக்குதலா??என்கிற உண்மையை இந்தச் சம்பவத்தின் விசாரணை அதிகாரியாக இருப்பவர் வயசாகி பென்சன் எடுத்துக்கொண்டு வயோதிபர் மடத்தில் கடைசிக்காலத்தை கழிக்கும்போது பொழுது போறதிற்காக ஏதாவது புத்தகம் எழுதுவார்.அப்படி எழுதும் போது இந்த விபத்தைப்பற்றியும் ஏதாவது எழுதினால்தான் உண்மைகள் வெளியாகும்..

எனவே அதுவரை காத்திருப்போம்..அடுத்ததாக முதல் விபத்து நடந்து மூன்று வாரங்களில் பிரான்சிலிருந்து கொமர் நாட்டிற்கு சென்றுகொண்டிருந்த யமானியா என்கிற தனியார் நிறுவனத்தின் ஏயார்பஸ் விமானம் இந்துசமூத்திரப்பகுதியில் குதித்ததில்அதில் பயணம் செய்த 153 பேர் இறந்து போனார்கள். இந்த விமானத்தில் எனது மகளின் பள்ளித்தோழியும் அவளது சகோதரன் தாய் தந்தையர் உட்படஇறந்போயுள்ளனர்..இந்த விமானம் இயந்திரகோளாறு காரமாக விசாரணைகளில் முடிவாகியுள்ளது.. அதாவது சில தனியார் நிறுவனங்கள் பயணிகளை கவர்வதற்காக குறைந்தவிலையில் பயணசீட்டுக்களை விற்றுவிட்டு தங்கள் செலவுகளை குறைப்பதற்காக விமானங்களை சரியாக பாராமரிப்பதில்லை என்கிற குற்றச்சாட்டுக்களும் எழுந்துள்ளது..நடந்து முடிந்த இரண்டு விமான விபத்துக்களிலும் இரண்டு அதிசயமான சம்பவங்கள் நடந்துள்ளது..

ஒன்று சோகமானது மற்றது சுகமானது.. சோகமானது என்னவென்றால் முதலாவதாக நடந்த விமானவிபத்தில் இத்தாலி நாட்டைச்சேர்ந்த ஒரு வயதான தம்பதிகள் தங்கள் விமானத்தை தவறவிட்டுவிட்டதனால் உயிர் தப்பியிருந்தனர்..அவர்கள் றியோவிலிருந்தபடி தங்கள் உறவினரிடம் தொடர்புகொண்டு மகிழ்ச்சியையும் கடவுளிற்கு நன்றியும் தெரிவித்திருந்தது ஊடகங்களிலும் வெளியாகியிருந்தது.. அவர்கள் நான்கு நாட்கழித்து விமானத்தில் ஜெர்மனியில் வந்திறங்கி இத்தாலி செல்வதற்காக வாடைகை காரில் இத்தாலி நோக்கி பயணமாகிக் கொண்டிருந்தபொழுது வீதி விபத்தில் மனைவி இறந்துபோக கணவன் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்...அடுத்த சுகமான செய்தி என்னவென்றால் இரண்டாவதாக நடந்த விமான விபத்தில் அதிலிருந்த பயணிகள் அனைவருமே இந்துபோக 13 வயதான சிறுமி ஒருத்தி மட்டும் உயிர் தப்பியுள்ளார்..

அவர் பின்னர் விபத்துப்பற்றி தெரிவிக்கையில் '' ஒரு பெரிய வெளிச்சத்தை தொடர்ந்து ஒரே இருட்டாக இருந்தது நடந்ததை எனக்கு விபரிக்கத்தெரியவில்லை ஆனால் கையில் அகப்பட்ட ஏதோ ஒன்னை கட்டிப்பிடித்துக்கொண்டிருந்தேன் அதுமட்டும்தான் தெரியுமென்றார்.. இவர் உடைந்த விமானத்தின் பாகம் ஒன்றினை கட்டிப்பிடித்தபடி கடலில் மிதந்து கொண்டிருந்தபொழுது மீட்புபடையினரால் மீட்கப்பட்டிருந்தார்.. இந்த இரண்டு சம்பவங்களையும் பார்க்கும் போது தலைவிதி என்று ஏதோ சொல்லுறாங்களே அதை நம்பவேண்டித்தானுள்ளது.. ஆனால் உலகிலேயே மிகப்பெரியதும் நவீனமானதுமான விமானத்தயாரிப்பில் இறங்கிய ஏயார் பஸ் நிறுவனத்திற்கு 2000ம் ஆண்டிலிருந்தே சனிஉச்சத்தில் நிற்கிறது.ஏகப்பட்ட குளறுபடி நிருவாகத்தில் ஊழல் என பல குற்றச்சாட்டுகளுடன் காலத்தை கடத்திக்கொண்டிருப்பவர்களிற்கு இந்த விபத்துக்களும் நிச்சயம் புதிய தலையிடியாகத்தானிருக்கும்..

இனிவரும் காலங்களில் ஏயார் பஸ் விமாங்களின் முன்னால் சிறீலங்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கொஞ்ச செத்தல் மிளகாயை கட்டித்தொங்கவிட்டு விமானம் புறப்படும்பொழுது விமானச்சில்லுகளிற்கு அடியில் பச்சைத்தேசிக்காயை வைத்து நசித்து விமானம் புறப்படுமானால் விபத்துக்களை தவிர்க்கலாம்..இதனை ஏயார்பஸ் நிறுவன அதிகாரிகள் கவனத்திலெடுக்கவும்...இப்படி ஒருமாதத்நடந்த இந்த இரண்டுவிமான விபத்துக்களிலும் அதிகமாக இறந்து போனவர்கள் பிரான்ஸ் நாட்டினை சேர்ந்தவர்கள் என்கிற படியால் பிரெஞ்சு மக்கள் அதிர்ச்சியடைந்து போயுள்ளவேளை இந்தவருட கோடை விடுமுறைக்கு செல்வதற்கு ஏயார் பஸ் விமானங்களில் பதிவு செய்யவதனையும் தவிர்த்து வருகிறார்கள்.. அப்படி பயணம் செய்பவர்களும் தங்கள் குலதெய்வங்களிற்கு நிச்சயம் வேண்டுதல் வைத்துவிட்டுதான் விமானத்தில் வலதுகாலை எடுத்து வைப்பார்கள்..

நானும் ஒரு விடயமாக பாரிசிற்கு போவதற்கு மலிவாய் ஒரு றிகற்றை பதிந்துபணத்தை கட்டிவிட்டுதான் பார்த்தேன் அதுவும் ஏயார் பஸ்விமானம்.மலிவு விலை றிக்கற் என்பதால் கட்டின பணத்தையும் திருப்ப பெறமுடியாது..இனியென்ன செய்யிறது பத்திரமாய் பாரிசிற்கு போய்வரவேணும் என்றும் அப்பிடி போய் திரும்பி வந்தால் எனது குல தெய்வமான எங்கடை ஊர் புளிளியடிவைரவரிற்கு வடைமாலை சாத்தி பொங்கல் வைக்கிறது என்று நேத்திக்கடன் வைச்சிருக்கிறன். அப்படி திரும்பி வந்தால் அடுத்த பேப்பரிலை சந்திக்கிறேன்.. நன்றி சாத்திரி.

பாராளுமன்றில் பம்மியழுத பா.உ. பத்மினியக்காவுக்கு….ஓ..ஓ

9:37 AM, Posted by sathiri, 2 Comments



மேன்மை தங்கிய தமிழ்க்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் திருமதி.பத்மினி சிதம்பரநாதன் அவர்களுக்கு,

கடந்த பாராளுமன்றக் கூடலில் வவுனியா முகாம்களில் வாடும் தமிழ்மக்களின் அவலநிலைபற்றி உரையாற்றிய போது துயரம் தாழாமல் கதறியழுதார் பத்மினி சிதம்பரநாதன் என்ற செய்தி சகல ஊடகங்களிலும் இடம்பிடித்ததை யாரும் மறந்திருக்கமாட்டார்கள். கண்ணீர் விட்டு நீங்களும் மீண்டும் ஒரு தரம் உங்கள் இருப்பை உறுதி செய்திருந்தீர்கள்.

அக்கா ,

போரில் கொல்லப்பட்ட உறவுகளின் உறவினர்களின் துயரம் முதல் தமிழ்ப்பெண்கள், குழந்தைகள் பற்றி மேலும் உங்கள் பேச்சில் சுட்டிக்காட்டி உரைத்தீர்களாம். அந்தச் செய்தியைப் பார்த்தபோது உங்களுக்காக செவாலியர் விருதையே சிபார்சு செய்யவேண்டுமென்றுதான் விரும்பினேன். ஆனால் கேமகுமாரநாணயக்கார(Minister) சிங்களத்தில் நடித்து வந்த நடிகையான ‘ருக்மணிதேவிக்கு‘ நிகராக்கி உரையாற்றியதால் செவாலியர் விருதைவிட வேறு ஏதாவது சிறந்த விருதைத் தேடுகிறேன்.

ஐரோப்பிய நாடுகளில் வருடக்கணக்காக இருந்து தமிழ் தொலைக்காட்சிகளிலும் வானொலிகளிலும் வந்து புலம்பெயர் மக்களுக்கு ஆலோசனைகளை அள்ளி வளங்க மட்டுமே பாராளுமன்றப்பதவியென நீங்கள் ஐரோப்பாவெங்கும் உங்கள் சேவகர்களின் வீடுகளில் விருந்துண்டு மேலான வாழ்வு வாழ்ந்த போது வராத கண்ணீர் , முள்ளிவாய்க்கால் வரை தமிழினம் துரத்தப்பட்டு ஆயிரமாயிரமாய் பலிகொள்ளப்பட்ட உயிர்களுக்காக வராத கண்ணீர் , மூன்றுலட்சத்துக்கும் மேலாக இடம்பெயாந்து ஒரு நேர உணவுக்காக எம்மினம் கையேந்தி அகதி முகாம்களில் அடைபடும் வரை லண்டனில் அடைகாத்த போது கூட வராத கண்ணீர் எப்படி இந்தப்பாராளுமன்றக் கூட்டத்தில் ஊற்றெடுத்தது அக்கா….?

ஆயிரமாயிரம் அம்மாக்கள் தங்கள் மகள்களை , மகன்களைக் கடைசிக் களமுனையில் பலிகொடுத்ததும் பாதி மிஞ்சிய பிள்ளைகளில் இருப்போர் யார் இல்லாதோர் யார் என்று அகதி முகாம்களுக்குள் கிடந்து விடுகின்ற கண்ணீருக்காக எதை ஐரோப்பாவில் நின்ற போது செய்தீர்கள் ? கிடைத்த உங்களுக்கான மேடைகளில் தமிழில் தமிழர்களுக்காக வீரம் பேசியதைத் தவிர வேறெந்தப் பரப்புரையைச் செய்தீர்கள்?

புலத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் அவரவர் வாழும் நாட்டு மக்களுக்கு தமிழர் பிரச்சனையைச் சொல்லுங்கள் என்ற ஆலோசனையும் , ஆக மிஞ்சினால் லண்டனில் உங்கள் அடியாட்களாய் செயற்படும் உங்கள் நண்பர்கள் மூலம் உங்கள் பற்றி எழும் கேள்விகளுக்கு பூட்டுப்போட்டது தவிர வேறெதைச் செய்தீர்கள்?

லண்டனில் பரமேஸ்வரன் என்ற இளைஞன் தன்னையுருக்கி உண்ணா நோன்பிருந்து உலகத்திடம் நீதிகேட்டபோது நீங்கள் அதே லண்டனில் இருந்து கொண்டு ஒன்றையும் செய்யவில்லை. அந்த உண்ணாவிரத மேடைக்கு அடுத்திருந்த உணவங்களில் உங்களுக்கான சிறந்த வரவேற்பும் எங்கள் தமிழ் ஊடகங்களினால் சில கேள்விகளும் தான் கேட்கப்பட்டது. நீங்களும் உங்கள் பங்குக்கு முகத்தைக்காட்டிவிட்டுப் போயிருந்தீர்கள்.

2008 ஒக்ரோபர் 27 யேர்மனியின் பெரும்பான்மைக் கட்சியான (SPD) கட்சியின் இளையோர் அணியில் இயங்கும் தமிழ் மாணவியொருத்தியின் ஏற்பாட்டில் யேர்மனியர்களுக்காக நடாத்தப்பட்ட ‚‘இலங்கையில் மனிதவுரிமை மீறல்‘ என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்வில் உங்களையும் அழைத்திருந்தோம். ஞாபகமிருக்கிறதா அக்கா ? கடைசிவரை வருவதாய் சொன்ன நீங்கள் கடைசி நேரம் அந்த நிகழ்வுக்கு வரவுமில்லை , உங்களைத் தான் சிறப்பாக அழைத்துள்ளதாகவும் அவர் சொன்னால் நீங்கள் எமது நிகழ்ச்சிக்கு வருவீர்கள் என உங்களுக்கும் தனக்குமான நட்பின் இறுக்கத்தை எமக்குப் புழுகிய நண்பரின் வாக்கும் பொய்த்து நீங்கள் வரவேயில்லை. அன்று நீங்கள் அந்த நிகழ்வுக்கு வந்திருந்தால் நிகழ்வு நடைபெற்ற மானிலத்தின் முக்கிய பத்திரிகைகளில் உங்கள் மூஞ்சியும் வந்திருக்கும் எங்கள் பிரச்சனையும் பல்லாயிரம் யேர்மனியர்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டிருக்கும். அடுத்தடுத்து சில சமகால கருத்தரங்குகளுக்கு உங்களை அழைத்தோம். ஆனால் நீங்கள் நொண்டிச்சாட்டுகள் சொல்லி எல்லாவற்றையும் தட்டிக்களித்தீர்கள்.

இறுதியாக இவ்வருட ஏப்ரல் மாத இறுதியில் யேர்மனிய அபிவிருத்தியமைச்சருடனான சந்திப்பொன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சந்திப்புக்கு உங்களை அழைக்க நாம் எடுத்த முயற்சிகள் யாவும் தோல்வி. கடைசியாக உங்கள் நண்பர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கயேந்திரன் அவர்களை அழைப்பதற்கான முயற்சியும் தோற்றுப்போனது. அவர் எங்கள் அழைப்பை ஏற்று வருவதாக இருந்தால் கயேந்திரன் அவர்களை யேர்மனியில் மேய்க்கும் மேய்ப்பர்களிடம் அனுமதி பெற்றுச் சொல்லுங்கள் என்றார் கயேந்திரன். அவர் சொன்ன மேய்ப்பர்களோ நமது ஏற்பாட்டுக் குழுவினரால் தமிழீழம் தந்தாலும் வேண்டாம் என்ற தொனியில் அந்த அருமையான வாய்ப்பைத் தட்டிவிட்டார்கள்.

மேடைவைத்துப் பத்தாயிரம் பேர் கூடிநின்று கூவிக்கூப்பாடு போடுவதை விட இத்தகைய அரசியலாளர்களைச் சந்தித்து எங்கள் தரப்பு நியாயங்களை எடுத்துரைப்பது பத்தாயிரம் பேரால் சாதிக்க முடியாததை உங்கள் போன்ற பாராளுமன்ற உறுப்பினர்களால் சாதிக்கப்பட்டிருக்கும்.

யேர்மனிய நமது மேய்ப்பர்களால் இதுவரையில் யேர்மனிய அரசின் முக்கிய தரப்புகளுடனான சந்திப்புகளோ அதற்கான அனுமதியோ கிடைக்கவில்லை. ஏனெனில் அவர்கள் இவற்றுக்கெல்லாம் முயற்சிக்கவுமில்லை. எமது மக்களை வைத்து உண்டியல்களை நிரப்பி உழைக்காமல் சாப்பிடப் பழகிய அவர்களால் மக்களின் நலனில் எங்கே அக்கறையிருக்கப்போகிறது ?

சாமான்யர்களான எங்களால் உங்களுக்கான வெளித்தொடர்புகளைத் தான் எடுத்துத்தர முடியும். ஆனால் எமது மக்களால் தெரிவு செய்யப்பட்ட உங்களால் நமது பிரச்சனைகள் சொல்லப்பட்டால்தான் வெளியுலகால் ஓரளவு ஏற்றுக் கொள்ளப்படும். இங்கு தனித்த முயற்சிகளால் செய்யப்பட்ட பரப்புரைகள் உங்களை பலலட்சம் தந்து வெளிநாடுகளுக்கு அழைத்தவர்களால் செய்யப்படவில்லையென்பது ஒருவரும் அறியாத உண்மை. இந்தப் பொட்டுக்கேடுகள் பற்றி நிறையவே இருக்கிறது. அதைவிட்டு விடுகிறேன்.

மக்கள் பிரநிதிகளான உங்களால் சுதந்திரமாக சுயமாக முடிவெடுக்க முடியாவிடில் பிறனெ்ன மண்ணுக்கு மக்கள் பிரதிநிதிகள் ? நீங்களும் உங்கள் பதவியும் ?

அரசாங்கம் நிறுத்தப்போவதாக அறிவித்த உங்கள் வருமானம் , வசதிகள் , பதவியைப் பாதுகாத்துக் கொள்ள ஐரோப்பாவிலிருந்து அவசர அவசரமாக இலங்கை சென்றீர்கள். சென்றீர்கள் சரி மக்கள் அவலப்படும் எந்த இடத்திற்காவது சென்று மக்களின் துயரை நேரில் சென்று அறிந்தீர்களா ? அதற்கான ஏதாவது முயற்சிகளை எடுத்தீர்களா ?

முகாம்களுக்குச் செல்லத்தான் அரசு அனுமதிக்கவில்லை. சரி உங்கள் உறவினர்களில் ஒருவராவது அந்த முகாம்களில் நிச்சயம் இருப்பார்கள். அவர்களைப் பார்க்கவாவது வரிசையில் நின்று அனுமதி பெற்றுப் போயிருக்கிறீர்களா ? சரி அதுவும் போகட்டும். வவுனியாவில் பல மருத்துவமனைகளுக்கு நீங்கள் எந்த அனுமதியும் இல்லாமல் சென்று அவலமுறும் மக்களைப் பார்க்கலாம். அவர்களுக்கு ஒரு ஆறுதல் வார்த்தை கூறலாம் இல்லையா ?

நானறிந்த சில இடங்களை உங்களுக்கு சிபாரிசு செய்கிறேன். முடிந்தால் உங்கள் முட்டைக்கண்ணீரை அங்கே போய் சிந்துங்கள்.

நாலாங்கட்டை ஆயுர்வேத வைத்தியசாலை. இங்கு கால்கையிழந்த பலர் மருத்துவம் பெற்று வருகிறார்கள்.

பூவரசங்குளம் பொது வைத்தியசாலை. அம்மைநோயால் முகாம்களில் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவம் பெறுகிறார்கள்.

வவுனியா பொது வைத்தியசாலை. இங்கு அங்கவீனர்கள் முதல் பல பிரிவுகளில் வன்னிக்கள முனையிலிருந்து இராணுவத்தால் கொண்டு வரப்பட்டவர்கள் மருத்துவம் பெற்று வருகிறார்கள்.

அண்மையில் முகாம்களிலிருந்து நீதவான் பொறுப்பில் 129செஞ்சோலைச் சிறுவர்கள் கோவில்குளம் சிவன்கோவில் சிறுவர் இல்லத்தின் பராமரிப்பிற்காக அனுப்பப்பட்டுள்ளார்கள். இந்தக் குழந்தைகளுக்கான உடை , பாடசாலை உபகரங்கள் உட்பட தேவைகள் நிறைய உள்ளது. இவர்கள் எல்லாம் பெண் குழந்தைகள். நீங்கள் துன்பம் தாங்க முடியாமல் அழும் பெண்குழந்தைகள்.

இவர்களையெல்லாம் சந்திக்க உங்களுக்கு எந்த அனுமதியும் தேவையில்லை. உங்கள் உயிருக்கு பயமாகில் அதற்கும் அரசாங்கம் உங்களுக்குப் பாதுகாவலர்களைத் தந்திருக்கிறதே. இதற்கு மேலும் உங்களுக்கு என்ன பாதுகாப்பு தேவையோ ?

நான் குறிப்பிட்ட மருத்துவமனைகளில் மருத்துவம் பெறும் பலர் உங்களுக்கு முகமாலையில் காவலிருந்து உங்களுக்கு வாக்களித்தோரும் உள்ளார்கள். அவர்களில் ஒரு தாய் தனது இரு பெண் குழந்தைகளையும் கடைசிக் களமுனையில் தொலைத்துவிட்டாள். தானும் அங்கமிழந்துவிட்டாள். அந்த அம்மா உங்கள் அழுகைபற்றி அறிந்தது பற்றி தொலைபேசியில் சொன்னார்.

நாங்கள் பத்மினியென்ற பெண்ணை விரும்பியே தெரிவு செய்தோம். பெண்களின் பிரதிநிதியாக பெண்களுக்காக நன்மைகள் செய்வார் என்றே தேர்வு செய்தோம். எங்கள் பெண் குழந்தைகள் வயது வேறுபாடின்றிக் களமுனைக்குச் சென்ற போது ஏன் அவர்களுக்காகக் குரல் கொடுக்காமல் இருந்தார் பத்மினி ? எல்லாம் போகட்டும் இங்கு மருத்துவம் பெறுகின்றவர்களை ஒரு தரம் கூட வந்து பார்க்காமல் கொழும்பில் நின்று யாருக்காக கண்ணீர் விடுகிறார் ? எங்களுக்கு ஒன்றும் தர வேண்டாம். ஒரு ஆறுதலான வார்த்தை , ஒரு அன்பான விசாரிப்பு அதைக்கூட பத்மினியால் செய்ய முடியாவிடில் எதற்காக அழுகிறார்கள் ? இந்தக்கண்ணீரே அடுத்த தேர்தலில் அக்காவை அரசியலில் மீண்டும் தாளமிட வைக்கும் ஏற்பாடா ? ஒரு சாதாரண பெண்ணின் மனநிலையே உங்களைப்பற்றி இப்படி முடிவுடன் இருக்கிறது என்றால் யோசித்துப் பாருங்கள். உங்கள் பதவி உங்களைத் தேர்வு செய்த மக்களுக்காக எதைக்கொடுத்தது ?

ஒரு பருக்கை சோற்றுக்காக அல்லாடுபவனிடம் போய் சுதந்திரத்தின் பெறுமதியென்னவென்று கேட்டால் அவன் என்னத்தால் உதைப்பானோ அதே மனநிலையில்தான் இன்று போரால் பாதிக்கப்பட்ட மக்கள் தாயகம் , தேசியம் , சயநிர்ணயம் பேசுவோரை உதைக்கவும் காத்திருக்கிறார்கள். பசித்தவனுக்கு உணவைக் கொடுக்க வழியைவிடுங்கள் அவர்கள் சுதந்திரம் என்பதன் பொருளை உங்களுக்கே சொல்லித் தருவார்கள். வவுனியாவில் பல சமூகசேவகர்கள் , பொதுமக்கள் உங்கள் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். அவர்களிடம் ஆயிரமாயிரமாய் உங்களிடம் கேட்க கேள்விகளும் குவிந்து கிடக்கின்றன. ஒரு தரம் அந்த மருத்துவமனைகளைச் சென்று பாருங்கள்.

உங்கள் லண்டன் நண்பர்களால் வாரம் ஒரு சனிக்கிழமை வெள்ளையர்களுடனான சந்திப்புக்குச் செலவழிக்கப்படும் ஆறாயிரத்துக்கு மேலான பவுண்டுகளில் ஒரு சனிக்கிழமைக்கான தொகையை வாங்கி அந்த மக்களுக்கு ஒரு நேர உணவு ஒரு காற்செருப்பு வாங்கிக் கொடுத்து அவர்களை ஆதரவாய் ஒரு வார்த்தை கேட்டுவிட்டு வாருங்கள். உங்களை ஆயுள் உள்ளவரைக்கும் மறக்கமாட்டார்கள். இப்போது அந்த மக்களுக்குத் தேவை உயிர்வாழ உணவும் உடையும்தான்.

ஒரு பாராளுமன்ற உறுப்பினரால் அவரது தேவைகளுக்ககா 4வேலையாட்களை வைத்திருக்கலாம். அதற்கான சம்பளத்தை அரசாங்கம் தான் செய்கிறது. உங்களுக்காக உங்கள் கணவரின் சகோதரரை வாகன ஓட்டுனராகவும் , உங்களுக்குச் சேவகம் செய்ய ஒரு பெண்ணையும் , உங்கள் கணவரை உங்கள் உதவியாளராகவும் வைத்து நீங்கள் உங்களுக்குள் தானே அரசாங்கம் தரும் அத்தனை சலுகைகளையும் அனுபவிக்கிறீர்கள். இதில் ஒரு துளியை அவலப்படும் மக்களுக்காகக் கொடுப்பீர்களா?

கடந்த வருடம் வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் அவர்கள் தமிழ் தொலைக்காட்சியொன்றுக்குக் கொடுத்த பேட்டியைக் கேட்டு கொதிப்படைந்த நீங்கள் உங்கள் நண்பர் ஒருவரை வைத்து அவர் வேலைசெய்யும் பத்திரிகையிலேயே சிவநாதன் கிஷோர் அவர்களை எத்தனை மோசமாக எழுதுவித்தீர்கள் ? நினைவிருக்கும் அல்லவா

தனது மக்களுக்குத் தனது மண்ணிலிருந்து சேவை செய்வதாக சிவநாதன் கீஷோர் அவர்கள் சொன்னதற்காக , நீங்களும் கயேந்திரனும் தவிர மற்றைய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் யாவரும் மாற்று இயக்கம் , மாற்றுக் கொள்கையுடன் வந்தவர்கள் என்றும் , ஒற்றை அம்புக்குறியே சிவநாதன் கீஷோர் அவர்களை தமிழ்க்கூட்டமைப்பில் இணைத்ததாகவும் , இராணுவ அதிகாரிகளுடன் கூட்டு வைத்துப் பார்ட்டி வைத்து வவுனியாவுக்குள் பாதுகாப்பாக வாழ்கிறார் சிவநாதன் கீஷோர் என்ற உங்கள் தகவல் மூலம் எழுதப்பட்ட விமர்சனத்தையும் மறந்திருக்கமாட்டீர்கள். இன்று அதே சிவநாதன் கிஷோர் அவர்கள் முகாம்களில் வதையுறும் மக்களுக்காக எதையாவது செய்ய வேண்டும் என்ற முனைப்பில் கூட்டமைப்பிற்குள் இருந்தே தனது மக்களைச் சென்று பார்வையிட்டு வருகிறார். அந்த மக்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்து வருகிறார். இதுதான் செயல் வீரருக்கும் சொல்வீரருக்கும் உள்ள வேறுபாடு.

ஆனால் நீங்களோ அன்றும் உங்கள் நலனையே கவனித்தீர்கள். இன்றும் அடுத்த தேர்தலில் வெல்வதற்கு உங்கள் சொகுசுவாழ்வை நிரந்தரமாக்குவதற்கு ‘‘பாராளுமன்றில் பம்மியழுது‘‘ பரபரப்பாகியுள்ளீர்கள்.

20ஆண்பாராளுமன்ற உறுப்பினர்களில் நீங்களும் தங்கேஸ்வரி அவர்களும் தேர்வானதில் பெருமையடைந்த பலருள் நானும் ஒருத்தி. அரசியலில் பெண்களின் வரவு பெரிதாய் இல்லாத இடத்தில் நீங்கள் இடம்பிடிக்க வேண்டுமென்று எங்கள் நண்பர்கள் உறவுகளுக்கெல்லாம் தொலைபேசியில் தொடர்பெடுத்து உங்களுக்கே வாக்களிக்கச் சொன்னோம். இயன்றவரை மக்களுடன் பணியாற்றிவர்கள் ஊடாக மக்களிடம் உங்களுக்கு வாக்களிக்க வைக்கச் சொல்லி நிறையவே முயற்சிகள் செய்தோம். ஆனால் அரசியல் என்றால் சுயநலம் என்பதை உங்கள் செயலால் நிரூபணம் செய்துள்ளீர்கள்.

இவ்வருட ஏப்ரல் மாதத்தோடு உங்கள் பாராளுமன்றுப் பதவியிலிருந்து இனி நீங்கள் போனாலும் உங்களுக்கான ஓய்வூதியமும் பதிவாகிவிட்டது. அடுத்த ஐரோப்பியப் பயணத்தோடு ஈழம் உங்கள் நினைவிலிருந்து கரைந்து அகதித்தஞ்சம் உங்களை நிரந்தர ஐரோப்பிய வாழ்வையும் தரலாம். மீண்டும் ஐரோப்பிய தமிழ் ஊடகங்களில் உங்கள் தரிசனம் ஆலோசனைகளாக மந்தைகளான எங்களை நோக்கி வரலாம். அதற்கிடையில் ஏதாவது அல்லலுறும் மக்களுக்காக செய்யுங்கள்.

நன்றி.

அடுத்த உங்கள் ஐரோப்பிய வரவை எதிர்பார்க்கும் அகதி சாந்தி.

சமகால ஈழத்தமிழரின் நிலவரம் திரு.சிவநாதன் கிஷோர்

7:03 AM, Posted by sathiri, One Comment

வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திரு.சிவநாதன் கிஷோர் அவர்கள் தமிழ் இணைய வானொலிக்கு வழங்கிய சமகால நிலவரம்.
முகாம்களுக்குள்தற்போதைய தமிழர்கள் நிலமையும் தேவையும் விபரமாக விளக்குகிறார் சிவநாதன் கிஷோர்.


நிகழ்ச்சியை தரவிறக்கம் செய்து கேட்க இந்த இணைப்பில் அழுத்தவும்.



http://tamilwebradio.com/

அனைவருடனும் கைகோர்க்கும் புலிகளின் அனைத்துலகச் செயலகமும்..அடம்பிடிக்கும் ஜெர்மன் பணியகமும்..

2:39 PM, Posted by sathiri, 4 Comments



அனைத்துலகச் செயலகத்தின் ஜெர்மன் பொறுப்பாளர் வாகீசன்.


புலிகளின் ஆயுதப்போராட்டம் முள்ளிவாய்க்காலில் முடிவிற்கு வந்தவுடன் புலம் பெயர் தேசத்து ஈழத்தமிழர் மற்றும் உலகத்தமிழர்களிடமும் எழுந்து நின்ற ஒரோயொரு கேள்வி அதன் அடுத்த கட்டம் என்ன என்பதுதான்.(ஈழத்தில் வாழும் தமிழர்களிற்கு அடு்த்தகணம் உயிர்வாழ்தலும்...உணவும் உடுதுணியுமே பெரிய பிரச்சனையென்பதால் அவர்கள் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படுபவர்களாக இல்லையென்பதே உண்மை)

இப்படியான கட்டத்தில்தான் அடுத்த கட்டத்தினை அரசியல் ரீதியாக நகர்த்தப்போவதாகவும் அதற்கு உலகத்தமிழர் அனைவரினதும் ஆதரவினைத் தரும்படியும் புலிகளின் அமைப்பில் எஞ்சியிருந்த மத்தியகுழு உறுப்பினரான பத்மநாதனின் அறிக்கை வெளியானது..அவரது அறிக்கைகள் இரண்டு குழம்பி அல்லது குழப்பியிருந்தது உண்மைதான் ஆனாலும் .. அடுத்து ஆளாளிற்கு வந்த அறிக்கைகளோ ஜயோ.. போதுமடா சாமி என்கிற அளவிற்கு குழப்பிவிட்டிருந்தது.

இந்த அறிக்கைக் குழறுபடிகளில் புலிகளின் அனைத்துலகச் செயலகத்தினரே நெடுமாறன் மற்றும் வைகோ ஊடாக அறிக்கைகைகளை வெளியிட்டு மக்களை தலைவலி குளிசைகளை போட வைத்தார்களென்றால்..புலிகளின் புலனாய்வுத்துறையிலிருந்து வெளியேறி தற்சமயம் ஜரோப்பிய நாடொன்றில் வசித்துவரும் ஒருவர் வேறு பெயர்களால் விட்ட அறிக்கைகளால் நித்திரை குளிசையே போடவைத்துவிட்டார்.

புலிகள் அமைப்பின் அழிவிற்கு இந்தியா சீனா உட்பட மேற்குலக நாடுகள் பாதிப்பங்கினை வகித்தார்களென்றால்..மீதிப்பாதி பங்கினை புலிகள் அமைப்பின் அனைத்துலகச்செயலகத்தின் பொறுப்பாளர் கஸ்ரோவும் அவரது நேரடித் தொடர்பில் நோர்வேயிலிருந்து செயற்பட்ட நெடியவனும் ஜெர்மனியிலிருக்கும் வாகீசனும் கனடாவில் தமிழ் என்பவருமே அங்கம் வகித்தனர்.

இதுபற்றி நான் தனியாகவே ஒரு பதிவை பின்னர் எழுதுகின்றேன். ஆனால் தற்சமயம் புலிகள் அமைப்பின் அனைத்துலக செயலகத்திற்கு வெளிநாடுகளின் பொறுப்பாளரான நெடியவன் என்கிற பேரின்பநாயகம் சிவபரன் பத்மநாதன் அவர்களால் உருவாக்கப்படும் கட்டமைப்பில் இணைந்து செயற்படுவதற்கு கொள்கையளவில் இணங்கிருந்தாலும் புலிகளின் தலைவர் இறந்துவிட்ட செய்தியை வெளியிடுவதற்கு மறுப்புத் தெரிவித்திருந்திருக்கின்றார்.

நாடுகடந்த தமிழீழ அரசு என்கிற கட்டமைப்பில் இணைந்து செயற்படுவதா இல்லையா என்பது பற்றி அனைத்துலக செயலகத்தின் அனைத்து நாட்டுப் பொறுப்பாளர்களுடனும் இணைந்து நெடியவன் நோர்வேயிலிருந்து நேரடியாகவும் தொலைபேசியூடாகவும் நடாத்திய ஆலோசனைக்கூட்டத்தில் அனைத்து நாட்டு பொறுப்பாளர்களுமே நாடு கடந்த தமிழீழ அரசிற்கு ஆதரவு வழங்குவதென்று முடிவெடுத்துள்ள நிலையில்.ஜெர்மனிய பொறுப்பாளர் வாகீசன் மட்டும் தான் ஆதரவு வழங்கமுடியாதெனவும் தான் தனித்தே இயங்கப் போவதாக அறிவித்துள்ளார்.. அதற்கு அவர் கூறியுள்ள காரணம். தலைவர் இல்லையென்று அறிவித்துவிட்டு இனி மக்களிடம் நிதி சேகரிக்கமுடியாதென்பதே..இவரது வாதமாகும்..இவர் தொடர்ந்தும் மக்களை ஒரு மாயை உணர்வுத்தளத்தினுள் வைத்துக்கொண்டே தன்னுடைய சுயலாபநோக்கங்களிற்காக வேலை செய்கின்றாரே தவிர, இனியாவது மக்களிடம் உண்மை நிலையை விளக்கி இனியாவது திறந்த மனதுடன் அரசியல்ரீதியான எந்த வேலைகளையும் செய்யத் தயாரில்லையென்பதே உண்மை.

தற்சமயம் வாகீசனின் தலைமையை ஏற்று அவருடன் தொடர்ந்தும் செயற்பட மானிலப் பொறுப்பாளர்களான ஆனந்தராசா..சிவநாதன்..சங்கர்..அகிலன்(இவர் ஜெர்மன் பரப்புரைப் பொறுப்பாளர்)சிறிரவி..சிவம்..ஆகியோர் முடிவெடுத்துள்ளனர்.

இதே நேரம் முள்ளிவாய்க்கால் பகுதியில் நடந்து முடிந்த மனிதப்படுகொலையில் மனிதாபிமானமுள்ள உலகத்தவரும் உலகத்திலுள்ள அனைத்து தமிழருமே அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்ந்திருந்த சமயம்..ஜெர்மனிய தமிழ் இளையோரமைப்பினைச் சேர்ந்த ஒருவரின் திருமணத்தில் வாகீசன் என்பவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆடிப்பாடியதை பார்த்து மனம் கொதித்த சிலர் வாகீசன் தற்கொலை செய்து கொண்டதாக அஞ்சலிப் பிரசுரம் ஒன்றினை அடித்து அவரது இறுதிக் கிரியைகள் நடைபெறும் இடத்தின் முகவரியாக அவர் ஆடிப்பாடிய திருமண மண்டபத்தின் முகவரியையே போட்டு அச்சடித்து ஜெர்மனியில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் எசன் மற்றும் டோட்மண் பகுதிகளில் ஒட்டியிருந்தனர்.

அந்தப்பிரசுரம் ஒன்று எனக்கும் மின்னஞ்சலில் கிடைத்தது.. ஆனாலும் நாகரீகம் கருதி நான் இங்கு இணைக்கவில்லை. இப்படி இவரது ஈழவிடுதலைப் போராட்டத்திற்கான அர்ப்பணிப்பு எத்தனை உண்மையானதென்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன..அதிலொன்று..ஜெர்மனிய அரசின் சில அமைச்சர்கள் முக்கியமாக அபிவிருத்தி அமைச்சர்..இலங்கையரசின் சர்வாதிகாரப்போக்கினை கண்டித்து அறிக்கைகள் வெளியிட்டிருந்தது மட்டுமல்ல இலங்கையரசிற்கான நிதி உதவிகளை வளங்கப்போவதில்லையென அறிவித்திருந்ததும்...அனைவரும் அறிந்ததே.. அப்படி அறிக்கைகள் வெளியிட்ட ஜெர்மனிய அரசு அமைச்சர்களை சந்தித்து நன்றிகூறுவதோடு எமது போராட்டத்தின் நியாயங்களை அவகளிற்கும் புரியவைத்து மேலும் சில அழுத்தங்களை இலங்கையரசிற்கு கொடுப்பதுடன் இலங்கையரசு மீதான பொருளாதாரத் தடையினைக் கொண்டு வருவதற்காக ஜரோப்பிய கூட்டமைப்பில் விவாதங்களை முன்வைக்க வேண்டுகோள் விடுத் கூடிய நிலையில் சில ஜெர்மனிய தமிழர்கள் முயற்சிகளை மேற்கொண்டு அவர்களுடன் சந்திப்பதற்கான அனுமதிகளையும் பெற்றபின்னர்..வாகீசனுடன் தொடர்புகொண்டு எமது தரப்பில் எமதுசில தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை அனுப்பினால் எமது கருத்துக்களிற்கு மேலும் வலுவாக இருக்குமென்று கேட்கப்பட்டது.. அந்த முயற்சியில் நானும் ஈடுபட்டிருந்தேன்..


ஆனால் இதற்கு அவர்களிடமிருந்து கிடைத்த பதில்...தமிழீழம் என்பது எங்களைத்தவிர அது வேறை யார் எடுத்துத் தந்தாலும் அது எங்களிற்கு தேவையில்லை.. அது எங்களிற்கு தெரியும்..என்று, தொலைபேசி இணைப்பினைத் துண்டித்துவிட்டனர்.. இப்படி பல உதாரணங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்..ஆனால் . இப்படியான அறிவுகெட்ட லூசுத்தனமானவர்களையெல்லாம்.. அனைத்துலக பொறுப்பில் புலிகள் அமைப்பின் தலைமை நியமித்து வைத்திருந்ததே எமது அழிவிற்கு காரணம்.. எனவே ஜெர்மன் வாழ் தமிழர்களே இனிவரும் காலங்களிலும் இவர்களது வழிநடத்தலிலா நீங்கள் உங்கள் தாயகக்கனவுகளை சுமக்கப்போகின்றீர்கள்...முடிவெடுங்கள் நன்றி..

ஒரு நாடே இல்லாத தமிழனிற்கு பல அரசுகள்..

3:13 PM, Posted by sathiri, 16 Comments

எழுபதுகளில் ஈழத்தில் ஒற்றைக்குழல் துப்பாக்கிகள். ஒருசில கைத்துப்பாக்கிகள்..உள்ளுரில் தயாரித்த வெடிகுண்டுகள் என்பனவற்றுடன் திக்கொன்றாய் திரிந்த சில இளைஞர்களால் தொடங்கப்பட்ட சிறீலங்கா அரசிற்கெதிரான போராட்டம் பலவாகி பல்லாயிரம் பிரச்சனைகளாகி பின்னர் ஒன்றாகி. பலவித படையணிகளுடன் பலம்வாய்ந்த புலியாகி..முப்பத்தி நான்காண்டு காலப்போராட்டத்தின் பின்னர் முள்ளிவாயக்காலில் முடிவாகிப்போய்விட்டது...

முடிவாகிப்போன ஆயுதப் போராட்டத்தினைப்பற்றி விடைதெரியாத பல இலட்சம் கேள்விகள்..விடுபடமுடியாத பல புதிர்கள்..சந்திக்கும் ஒவ்வொருதமிழரிடமும் பேசப்படும் சந்தேகங்கள்..இவற்றிலிருந்து விடுபட முடியாமல் தவிக்கும் மனதின் சஞ்சலங்கள்.. அத்தனைக்கும் காலம் ஒருநாள் பதில் சொல்லிநிற்கும்..

எம்மண்ணில் தனியரசிற்காக நடந்த ஆயுதப்போராட்டம் முடிவிற்குவந்து எம் நிலத்தில் பல இலட்சம் உறவுகள் புலம்பெயர்ந்தும் புலன் பெயர்ந்தும் முட்கம்பிவேலிக்குள் முடங்கிப்போயிருக்கும் இந்நேரம்..புலம்பெயர்தேசத்திலிருந்து நாடுகடந்த தமிழீழத்தனியரசு என்றொரு அறிவிப்பு வெளியாகியிருக்கின்றது..பல குழுக்களாக இருந்த ஈழவிடுதலை இயக்கங்கள் இல்லாது போய் இறுதியில் ஒரு விடுதலைப்புலிகள் அமைப்பாகி அதன் ஆயுதப் போராட்டமும் முடிவிற்கு வந்த பின்னர்..தற்போதைக்கு ஈழத்திலுள்ள தமிழர்களால் ஆயுதப் போராட்டம் மட்டுமல்ல அரசியல் போராட்டத்தையும் முன்னெடுக்க முடியாத சூழலில் புலம்பெயர்ந்து தேசங்களில் வாழும் சிலர் தாமே ஈழத்தமிழினத்தின் அடுத்தகட்ட போராட்டத்தினை நகர்த்தப்போவதாகக்கூறிக்கொண்டு மீண்டும் பல குழுக்களாக பிரிந்து நின்று அறிக்கைகள் வெளியிட்டுக்கொண்டிருந்தார்கள்.

அவற்றில் விடுதலைப்புலிகளின் மத்திய குழுஉறுப்பினரான கே.பத்மநாதனால் அமெரிக்காவில் வசிக்கும் சட்டத்தரணி உருத்திரகுமார் தலைமையில் ஒருகுழு உருவாக்கப்பட்டு அது நாடு கடந்த தமிழீழ அரசு அமைக்கப்படும் என்றொரு அறிக்கையை விடுத்துள்ளது..அதே நேரம் இலண்டனில் தமிழீழ மக்களவை ஒன்றொரு அமைப்பின் பெயரில் அரசியல் பற்றிமாகரன் என்பவரும் ஒரு அறிக்கையை விட்டிருந்தார்..அதே நேரம் புலிகள் அமைப்பில் கஸ்ரோ என்பவர் தலைமையில் அனைத்துலகச் செயலகம் என்றொரு அமைப்பிடம்தான் புலிகளின் தலைமை நிதி மற்றும் பரப்புரை பொறுப்புக்களை ஒப்படைத்திருந்தது..இவற்றின் நேரடி தொடர்பாளராகவும் உலக நாடுகளில் உள்ள பணியகங்களின் பொறுப்பாளராகவுமிருக்கும் நெடியவன் எனப்படும் பேரின்பநாயகம் சிவபரன் (இந்த அமைப்பின் செயற்பாடுகள் பற்றி அதன் பொறுப்பாளராகவிருந்தவரிடம் முரண்பாடும்..வெளிநாட்டு பொறுப்பாளர்களிடம் விமர்சனங்கள் எனக்கு நிறையவே இருந்தாலும் அதனைப்பற்றிய விடயங்களை இங்கு தவிர்த்துக்கொள்கிறேன்)

பத்மநாதனின் கட்டமைப்பினை ஏற்க மறுத்து தமிழ்நாட்டு தலைவர்கள் நெடுமாறன் மற்றும் வை.கோபோன்றவர்களினுடாக சில அறிக்கைகளை வெளியிட்டு குழப்பிவிட.. அது போதாதென்று ஜரோப்பிய நாடொன்றில் தங்கியிருக்கும் புலிகளின் புலனாய்வுப் பிரிவை சேர்ந்த ஒருவர் தன்பங்கிற்கு வேறு வேறாய் அறிக்கைகளை இணையத்தளங்கள் ஊடாக வெளியிட்டு குழப்போ குழப்பென்று குழப்பிக்கொண்டிருக்க .. தற்சமயம் அனைத்துலகச் செயலகத்தினை சேர்ந்தவர்களைத் தவிர மற்றையவர்கள் அனைவரும்.. உருத்திரகுமாரின் தலையிலான நாடு கடந்த தமிழீழத் தனியரசிற்கு ஆதரவு வழங்கத் தொடங்கி ஓரணியில் திரளத் தொடங்கியிருப்பது கொஞ்சம் ஆறுதலைத் தந்தாலும்..இனிவரும் காலங்களில் இவர்களின் செயற்பாடுகளைப் பொறுத்தே மக்களின் ஆதரவும் அதனூடாக இத்திட்டத்தின் வெற்றியும் அமையும்.. எனவே இனிவரும் காலங்களில் இவர்கள் செயய்ய வேண்டியது..

1) இனிவரும் காலங்களில் இவர்களது அறிக்கைகள் செய்திகளை நிழல்மனிதர்களால் வெளியிடப்படாமல் பகிரங்கமாக மக்களினால் அறியப்பட்டவர்களினால் நேரடியாக மக்களைச்சென்றடையுமாறு வெளியிடப்படல் வேண்டும்.. ஏனெனில் எமது போராட்டம் முழுக்க முழுக்க அரசியல் போராட்டமாக தொடரப்பட வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருக்கும் பொழுது நிழல் மனிதர்களின் தலைமையின்கீழ் எதனையும் சாதித்துவிட முடியாது..

2)தற்சமயம் சில கலாநிதிகளை மட்டுமோ ஆலோசகர்களாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் இந்தக் கட்மைப்பில் என்னைப்போன்ற சாதாரண கல்லா..நிதிகளையும் அனைத்துமக்களையும் இவர்களது வேலைத்திட்டங்கள் சென்றடையும் விதத்தில் மக்களுடன் மக்களாய் வேலைசெய்யக்கூடிய இன்னொரு கட்டமைப்பு உருவாக்கப்படல் அவசியம்..

3)விடுதலைப்புலிகளின் சில செயற்பாடுகளை விமர்சித்தாலும் தமிழ் மக்களிற்கு நியாயமான ஒரு தீர்வு கிடைக்கவேண்டும் என்று தங்கள் சொந்த லாபநோக்கமற்று மனதார விரும்பும் அனைவரையும் உள்வாங்குதல் வேண்டும்..

4)இனிவருங்காலங்களில் இந்த அமைப்பு தமிழ்மக்கள் நலன் சார்ந்து நடாத்தப்படும் எந்த சந்திப்புக்கள் பற்றியதும் ஆலேசனைக் கூட்டங்கள் பற்றியதுமான விபரங்களை உடனுக்குடன் ஊடகங்கள் வாயிலாக தமிழ் மக்களிற்கு தெரியப்படுத்தவேண்டும்..

5)தமிழீழ விடுதலைப்புலிகளின் பெயரில் உலகநாடுகளால் கொண்டுவரப்பட்ட தடைகள்ஊடாக தமிழ்மக்களின் நியாயமான போராடத்தினை முடக்கிய நாடுகளில் அதன் தடைகள் நீங்குவதற்கு சட்ட ரீதியாகவும் மக்கள் போராட்டத்தினுடாகவும் அனைத்து நடவடிக்கைகளும் முடக்கி விடப்படவேண்டும்.

6)இனிவரும் காலங்களில் முழுக்க முழுக்க இந்திய மற்றும் மேற்கத்தைய அரசுககளை மட்டுமே நம்பி எமது அடுத்த கட்ட நகர்வுகளை மேற்கொள்ளாமல்.. இவைகளிற்கப்பாலும் இந்த உலகின் போக்கை நிர்ணயிக்கக்கூடிய சக்திமிக்க அரசுகள்இருக்கின்றதென்னபதனையும் கருத்திற்கொண்டு அவைகளின் உதவிகளையும் உறவுகளையும் வளர்த்தெடுப்பதோடு ...இந்திய அரசியல் வாதிகளையோ குறிப்பாக தமிழ்நாட்டு அரசியல் வாதிகளை நம்பி எந்தமுக்கிய முடிவுகளையும் எடுத்தல் தவிர்க்கப்படவேண்டும்.. (இதற்கு கடந்தகால உதாரணங்கள் பலவுண்டு)

இவையனைத்தும் உடனடியாக நடந்துவிடாது என்பதும் எனக்குத் தெரியும் ஆனாலும் பலவருடங்கள் சொன்றாலும் இவை முறையாக நடந்தேறின்.. நான் இக்கட்டுரைக்கு இட்ட தலைப்பான ..ஒரு நாடே இல்லாத தமிழனிற்கு பல அரசுகள்..என்கிற சொல் வலுவிழந்து தமிழனிற்கென்றொரு நாடும் தமிழனிற்கென்றொரு அரசும் நிச்சயம் உருவாகும்..நன்றி

ஜயா திருமா ஜயோ இது தகுமா??

1:45 PM, Posted by sathiri, 10 Comments




அண்ணன் திருமா அவர்களுக்கு,

அண்மையில் உலகத் தமிழர் பேரவை நடாத்திய கருத்தரங்கில் ஈழத்தில் 5 ம் கட்ட ஈழப்போர் வெடிக்கும் என்று முழங்கியுள்ளீர்கள். இதையே நீங்கள் ஒரு வருடத்திற்கு முன்னரோ, ஏன் ஒரு ஆறு மாதத்திற்கு முன்னரோ முழங்கியிருந்தால் நாங்களும் ஆ...வென்கிற வாயுடன் கைதட்டி அண்ணன் திருமா வாழ்க என்று வானதிரக் கத்தியிருப்போம்.

ஆனால் ஈழத்தமிழரிடமிருந்த இறுதி நம்பிக்கைகள் மட்டுமல்ல. எங்கள் உறவுகளையும் இருபத்தையாயிரத்திற்கு மேல் இழந்துபோய் மிகுதி மூன்று இலட்சம் உறவுகளையும் முட்கம்பி வேலிகளுக்குள் நாளுக்கு நாள் விசாரணையின் பெயராலும் வியாதிகளாலும் இழந்து கொண்டிருக்கும் இந்த நிலையில் 5 ம் கட்ட ஈழப்போர் என்கிற முழக்கம் மீதம் இருக்கின்ற ஈழத்தமிழர்களையும் கட்டம் கட்டமாக கொலை செய்யவழி வகுத்து விடுமோ என்கிற நியாயமான பயமே காரணமாகும்.

அண்ணா உங்களுக்கு ஒன்று தெரியுமா ! ஈழத்தில் நடந்த இறுதிப்போரில் இருபத்தையாயிரம் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதனை, ஆதாரங்களுடன் அதற்கான நீதி விசாரணை மேற்கொள்ள வேண்டுமென்று மனித உரிமை அமைப்புக்களும் , பிரான்ஸ் , இங்கிலாந்து , அமெரிக்கா உட்பட பல நாடுகள் ஜ.நா சபையில் கொண்டு வந்த தீர்மானத்தினை முன்நின்று முறியடித்ததே நீங்கள் மானிலத்தில் கூட்டுவைத்துள்ள தி.மு.க. அரசின் பலர் மத்திய அமைச்சரவையை அலங்கரித்துக் கொண்டுள்ளதும் , நீங்கள் மத்தியில் கூட்டுவைத்துள்ள காங்கிரஸ் கட்சியைக் கொண்ட அரசுமான இந்திய அரசுதான் என்கிற பரம பரகசியம் உங்களிற்குத் தெரியாமல் போனது சோகமானதுதான்.

அடடடா.. சொல்ல மறந்துவிட்டேன் கலைஞர் கருணாநிதிகூட இலங்கையரசிற்கு எதிராகப் பல நாடுகள் கொண்டுவரும் தீர்மானத்திற்கு இலங்கைக்கு ஆதரவளிக்கவேண்டாமென்று மத்திய அரசிற்கு ஒரு கடிதமும் எழுதியிருந்தார். அண்மைக் காலத்தில் கலைஞர் அவர்கள் அதிகமான கடதாசிகளை ஈழத்தமிழர்களிற்காகக் கடிதமெழுதியே வீணடித்திருப்பார் என எண்ணத் தோன்றுகின்றது. இது மட்டுமல்ல ஈழத்தில் இதுவரை இந்திய இந்திய அதிகாரத்திற்கெதிராக உறுமிக்கொண்டிருந்த புலிகள்தான் அழிக்கப்பட்டு விட்டார்களே இனியாவது அங்குள்ள மக்களிற்கு ஏதாவது ஒரு தீர்வினைப் பெற்றுக் கொடுங்கள் என்று இந்திய அதிகாரத்திடம் கையேந்தப்போயிருந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரையும் உங்கள் அன்னை சோனியாவோ தாத்தா மன்மோகனோ சந்திக்காதது மட்டுமல்ல இலங்கை அரசு எடுக்கும் எந்த முடிவிற்கு நாம் ஆதரவு வழங்குவோமென்று உங்கள் மலையாளத்து மச்சான் மேனன் அறிக்கை வேறு விட்டிருக்கிறார்...அஞ்சா நெஞ்சனே திருமா அண்ணா நாங்கள் உங்களிடம் கெஞ்சிக் கேட்பதெல்லாம் ஒன்றுதான்.. அதாவது எங்களிற்கு ஈழம் நீங்கள் பெற்றுத்தரத் தேவையில்லை.. எங்களது உரிமைகளையும் நீங்கள் பெற்றுத்தரத் தேவையில்லை படுகொலை செய்ப்பட்டவர்களிற்கான நியாயங்களையோ இழப்பீடுகளையோ பெற்றுத்தரத் தேவையில்லை.. உங்களால் முடிந்தால் இறுதியுத்தத்தில் தாய் தந்தையரை இழந்து எவருமற்று முகாம்களில் முடங்கிப் போயிருக்கும் 800 ற்கு மேற்பட்ட அந்தச் சிறுவர்களை சிறை மீட்டு அவர்களின் எதிர் காலத்திற்கு ஏதாவது வழிகாட்டுங்கள்.

தங்கள் உடல் உறுப்புக்களை இழந்து ஊனமான இருபதாயிரத்திற்கும் மேற்பட்டவர்களை வாழ்க்கையை நோக்கி நடக்க வையுங்கள்.. தினம் தினம் முகாம்களில் இரவுகளில் காணாமல் போகும் எங்கள் சகோதரிகளை காமுகர்களின் பசி தீர்ந்தபின்னராவது காப்பாற்ற முடியுமா எனப்பாருங்கள். அவர்கள் கருக்களைக் கலைத்துவிட்டாவது உயிர் வாழ்ந்துவிட்டுப் போகட்டும்..அடைபட்டுக் கிடக்கும் மூன்று இலட்சம் வன்னி மக்களும் வன்னியில் வயற்காணிகள் உள்ளவர்கள்தான்..அவர்களை வெளியே விட்டாலே போதும்..அவர்கள் தங்கள் ஏர்களில் தங்களைப்பூட்டி உழுதாவது நெல்விதை போட்டுப் பிழைத்துக் கொள்வார்கள். இவற்றில் எல்லாவற்றையும் உங்களால் செய்யச்சொல்லி கேட்கவில்லை..உங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஏதாவது ஒன்றைச் செய்தாலே உங்கள் படத்தை நாங்கள் பூசையறையில் வைத்து வணங்குவோம்..இவை எதுவுமே உங்களால் செய்ய முடியவில்லையா.. உங்களிற்கு ஓட்டுப்போட்டு உங்களை ஜெயிக்க வைத்த சனங்களிற்குள்ள பிரச்சனைகளையாவது தீர்த்து வைத்து உங்களை மணக்கோலத்தில் காணத்துடிக்கும் உங்களின் தாயாரின் கனவுகளையாவது நிறைவேற்றி உங்களிற்கு ஓட்டுப் போட்ட மக்களிற்கு ஒரு தலைவனாகவும் உங்கள் தாயாரிற்கு நல்ல மகனாவும் இருந்து விட்டுப்போங்கள்..இனியாவது ஈழம்.. போர் என்கிற வார்த்தைகளை தயவு செய்து உச்சரிக்காதீர்கள் என்று கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்.. நன்றி..வணக்கம்...

இப்படிக்கு ஈழத்து நாதியற்ற தமிழன்


இக்கடிதம் திருமா அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது

ஜயா திருமா ஜயோ இது தகுமா??

1:40 PM, Posted by sathiri, No Comment



அண்ணன் திருமா அவர்களுக்கு,

அண்மையில் உலகத் தமிழர் பேரவை நடாத்திய கருத்தரங்கில் ஈழத்தில் 5 ம் கட்ட ஈழப்போர் வெடிக்கும் என்று முழங்கியுள்ளீர்கள். இதையே அவர் ஒரு வருடத்திற்கு முன்னரோ, ஏன் ஒரு ஆறு மாதத்திற்கு முன்னரோ முழங்கியிருந்தால் நாங்களும் ஆ...வென்கிற வாயுடன் கைதட்டி அண்ணன் திருமா வாழ்க என்று வானதிரக் கத்தியிருப்போம்.

ஆனால் ஈழத்தமிழரிடமிருந்த இறுதி நம்பிக்கைகள் மட்டுமல்ல. எங்கள் உறவுகளையும் இருபத்தையாயிரத்திற்கு மேல் இழந்துபோய் மிகுதி மூன்று இலட்சம் உறவுகளையும் முட்கம்பி வேலிகளுக்குள் நாளுக்கு நாள் விசாரணையின் பெயராலும் வியாதிகளாலும் இழந்து கொண்டிருக்கும் இந்த நிலையில் 5 ம் கட்ட ஈழப்போர் என்கிற முழக்கம் மீதம் இருக்கின்ற ஈழத்தமிழர்களையும் கட்டம் கட்டமாக கொலை செய்யவழி வகுத்து விடுமோ என்கிற நியாயமான பயமே காரணமாகும்.

அண்ணா உங்களுக்கு ஒன்று தெரியுமா ! ஈழத்தில் நடந்த இறுதிப்போரில் இருபத்தையாயிரம் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதனை, ஆதாரங்களுடன் அதற்கான நீதி விசாரணை மேற்கொள்ள வேண்டுமென்று மனித உரிமை அமைப்புக்களும் , பிரான்ஸ் , இங்கிலாந்து , அமெரிக்கா உட்பட பல நாடுகள் ஜ.நா சபையில் கொண்டு வந்த தீர்மானத்தினை முன்நின்று முறியடித்ததே நீங்கள் மானிலத்தில் கூட்டுவைத்துள்ள தி.மு.க. அரசின் பலர் மத்திய அமைச்சரவையை அலங்கரித்துக் கொண்டுள்ளதும் , நீங்கள் மத்தியில் கூட்டுவைத்துள்ள காங்கிரஸ் கட்சியைக் கொண்ட அரசுமான இந்திய அரசுதான் என்கிற பரம பரகசியம் உங்களிற்குத் தெரியாமல் போனது சோகமானதுதான். அடடடா.. சொல்ல மறந்துவிட்டேன் கலைஞர் கருணாநிதிகூட இலங்கையரசிற்கு எதிராகப் பல நாடுகள் கொண்டுவரும் தீர்மானத்திற்கு இலங்கைக்கு ஆதரவளிக்கவேண்டாமென்று மத்திய அரசிற்கு ஒரு கடிதமும் எழுதியிருந்தார். அண்மைக் காலத்தில் கலைஞர் அவர்கள் அதிகமான கடதாசிகளை ஈழத்தமிழர்களிற்காகக் கடிதமெழுதியே வீணடித்திருப்பார் என எண்ணத் தோன்றுகின்றது. இது மட்டுமல்ல ஈழத்தில் இதுவரை இந்திய இந்திய அதிகாரத்திற்கெதிராக உறுமிக்கொண்டிருந்த புலிகள்தான் அழிக்கப்பட்டு விட்டார்களே இனியாவது அங்குள்ள மக்களிற்கு ஏதாவது ஒரு தீர்வினைப் பெற்றுக் கொடுங்கள் என்று இந்திய அதிகாரத்திடம் கையேந்தப்போயிருந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரையும் உங்கள் அன்னை சோனியாவோ தாத்தா மன்மோகனோ சந்திக்காதது மட்டுமல்ல இலங்கை அரசு எடுக்கும் எந்த முடிவிற்கு நாம் ஆதரவு வழங்குவோமென்று உங்கள் மலையாளத்து மச்சான் மேனன் அறிக்கை வேறு விட்டிருக்கிறார்...அஞ்சா நெஞ்சனே திருமா அண்ணா நாங்கள் உங்களிடம் கெஞ்சிக் கேட்பதெல்லாம் ஒன்றுதான்.. அதாவது எங்களிற்கு ஈழம் நீங்கள் பெற்றுத்தரத் தேவையில்லை.. எங்களது உரிமைகளையும் நீங்கள் பெற்றுத்தரத் தேவையில்லை படுகொலை செய்ப்பட்டவர்களிற்கான நியாயங்களையோ இழப்பீடுகளையோ பெற்றுத்தரத் தேவையில்லை.. உங்களால் முடிந்தால் இறுதியுத்தத்தில் தாய் தந்தையரை இழந்து எவருமற்று முகாம்களில் முடங்கிப் போயிருக்கும் 800 ற்கு மேற்பட்ட அந்தச் சிறுவர்களை சிறை மீட்டு அவர்களின் எதிர் காலத்திற்கு ஏதாவது வழிகாட்டுங்கள்.

தங்கள் உடல் உறுப்புக்களை இழந்து ஊனமான இருபதாயிரத்திற்கும் மேற்பட்டவர்களை வாழ்க்கையை நோக்கி நடக்க வையுங்கள்.. தினம் தினம் முகாம்களில் இரவுகளில் காணாமல் போகும் எங்கள் சகோதரிகளை காமுகர்களின் பசி தீர்ந்தபின்னராவது காப்பாற்ற முடியுமா எனப்பாருங்கள். அவர்கள் கருக்களைக் கலைத்துவிட்டாவது உயிர் வாழ்ந்துவிட்டுப் போகட்டும்..அடைபட்டுக் கிடக்கும் மூன்று இலட்சம் வன்னி மக்களும் வன்னியில் வயற்காணிகள் உள்ளவர்கள்தான்..அவர்களை வெளியே விட்டாலே போதும்..அவர்கள் தங்கள் ஏர்களில் தங்களைப்பூட்டி உழுதாவது நெல்விதை போட்டுப் பிழைத்துக் கொள்வார்கள். இவற்றில் எல்லாவற்றையும் உங்களால் செய்யச்சொல்லி கேட்கவில்லை..உங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஏதாவது ஒன்றைச் செய்தாலே உங்கள் படத்தை நாங்கள் பூசையறையில் வைத்து வணங்குவோம்..இவை எதுவுமே உங்களால் செய்ய முடியவில்லையா.. உங்களிற்கு ஓட்டுப்போட்டு உங்களை ஜெயிக்க வைத்த சனங்களிற்குள்ள பிரச்சனைகளையாவது தீர்த்து வைத்து உங்களை மணக்கோலத்தில் காணத்துடிக்கும் உங்களின் தாயாரின் கனவுகளையாவது நிறைவேற்றி உங்களிற்கு ஓட்டுப் போட்ட மக்களிற்கு ஒரு தலைவனாகவும் உங்கள் தாயாரிற்கு நல்ல மகனாவும் இருந்து விட்டுப்போங்கள்..இனியாவது ஈழம்.. போர் என்கிற வார்த்தைகளை தயவு செய்து உச்சரிக்காதீர்கள் என்று கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்.. நன்றி..வணக்கம்...

இப்படிக்கு ஈழத்து நாதியற்ற தமிழன்


இக்கடிதம் திருமா அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது






வியாபாரிகளால் வீழ்ந்த என்தலைவா... வீர வணக்கங்கள்..

11:49 AM, Posted by sathiri, 22 Comments



இந்த மாதமாதம்..17..18..19.. ந்திகளில் இரவும் பகலும் எனது வீட்டுத்தொலைபேசி மணிஅடிக்கும் பொழுதெல்லாம் அவை மரணத்தின் மணிச்சந்தங்களாகவே இருந்தது..19 ந்திகதி மதியத்துடன் தொலைபேசி சத்தங்கள் மட்டுமல்ல நானும் சேர்ந்தே சோர்ந்து போனேன்..எங்கள் கனவு..எங்கள் உழைப்பு..எங்கள் தியாகங்கள்..போராளிகளுடன் இறுதிவரை உறுதுணையாய் நின்ற மக்கள் அவர்களின் நம்பிக்கைகள்..கொஞ்சம் கொஞ்சமாய் கட்டி வளர்த்த இயக்கம்..தளபதிகள் போராளிகள். எல்லவற்றிற்கும் அவன் இருக்கிறான் என்று நாங்கள் இறுமாப்பாய் சொன்ன எங்கள் தலைவன்..அவனது குடும்பம்.. என்று அத்தனையையுமே இழந்துவிட்டோம்..இனியென்ன எல்லாம் முடிந்து விட்டது.. இனி பத்திரிகைகளில் மட்டுமல்ல இணையத்தளங்களிலும் எழுதுவதில்லை அகதிமுகாம்களில் தங்கியிருக்கும் மக்களிற்கு ஏதாவது செய்தாலே போதும் என்று முடிவெடுத்து மூடிக்கொண்டு இருந்துவிட்டேன்..

ஆனாலும் முடியவில்லை..காரணம்.. இப்பொழுது பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்று சர்ச்சையில் உலகமெங்கும் வாழும் தமிழர்கள் இரண்டாக பிரிந்து ஒரு சண்டை பிடித்துக்கொண்டு நிற்கிறார்கள்.. ஒருவர் மற்றவரை சாதாரணமாய் நலம் விசாரிப்பது போலவே அவர்களிற்குள் துரோகிகள் என்று கூறிவிட்டு போய்க்கொண்டிருக்கிறார்கள்.. புலிகளின் வெளிநாட்டு விவகாரங்களிற்கான பேச்சாளர் பத்மநாதன்.. 24ந்திகதி பிரபாகரனும்.. அவரது பிள்ளைகளும் யுத்தத்தில் இறந்து விட்டார்கள் என்கிற அறிவிப்பே..இத்தனைக்கும் காரணம்..அவரின் அறிவிப்பு வெளியான உடனேயே வெளிநாடுகளில் உள்ள ஒரு குழுவினர்..பத்மநாதன் விலைபோய்விட்டார் துரோகி என்றுவிட்டு அறிவிப்பு வெளியான ஒரு சில மணி நேரங்களிலேயே அவசரமாக நெடுமாறன் அவர்களுடனும் வைகோடனும் தொடர்பு கொண்டு பிரபகரன் இறக்கவில்லை உயிரோடதான் இருக்கிறார் என்று ஒரு அறிவிப்பை விடவைக்கின்றனர்.

வழைமை போலவே அதிகமாய் உணர்ச்சி வசப்படும் வை.கோ அவர்கள் இந்த விடயத்திலும் உணர்ச்சி வசப்பட்டு பத்மநாதனின் இந்த அறிவிப்பு துரோகத்தனமானது என்று ஒரு வசனத்தையும் சேர்த்தே சொல்லி விட்டார்.. இவர்கள் இருவரும் புலிகளின் ஆதரவாளர்களே தவிர புலிகளின் பேச்சாளர்களோ உறுப்பினர்களோ அல்ல..இவற்றுக்கிடையில்.. யாரென்று இதுவரையில் கேள்விப்பட்டே இருக்காத பெயர்களிலும்.. இல்லாத படையணியின் பெயரிலும் கூட பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்கிற அறிவிப்புக்கள் வெளியாகிக்கொண்டிருந்தபோது புலிகளின் அரசியல் பிரிவில் எஞ்சியிருக்கும் மட்டு..அம்பாறை மாவட்ட அரசியல் பிரிவின் பொறுப்பாளர் தயாமோகனும் பிரபாகரன் இல்லை என்பதனை ..பி.பி.சி. தமிழ் ஓசையூடாக உறுதி செய்தபொழுது தயாமோகனும் துரோகியாக்கப்பட்டார்..

பிரபாகரனிற்காக அஞசலிநிகழ்வு செய்த ஜி.ரி.வி. என்கிற தொலைக்காட்சி சேவையின் ஊழியர்கள் மிரட்டப்பட்டார்கள்..(அவர்கள் மிரட்டப்படுவது இது முதல்தடைவையல்ல)ஜி. ரி்வியும்..எதற்கு வம்பு என்று .. பிரபாரனிற்கான அஞ்சலி நிகழ்வினை இடைநிறுத்தியது..சரி இனி இவர்களிற்கு யார்தான் வந்து உறுதிப்படுத்தவேண்டும்.. இறந்து போன பிரபாகரனே திரும்பவந்து நான் இறந்துவிட்டேன் நம்புங்கடா.. என்று சொல்லவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களா??அப்படி நடந்தாலும் பிரபாகரனும் துரோகியாக்கப்படுவார்.. 34 ஆண்டுகள் ஒரு ஆயுத விடுதலைப்போராட்டத்தினைநடத்தி.. கொண்ட கொள்கைக்காக தன்னையே அர்ப்பணித்த ஒரு வீரனிற்கு ஒரு பூவினைப்போட்டு மனதார அஞ்சலி செலுத்தக்கூட விடாமல் மக்களை குழப்பியடித்து முரண்பாடான அறிக்கைகளை வெளியிடுபவர்கள் மாற்றுக்கருத்தாளர்களோ..இலங்கையரசோ அதன் கூலிகளோ அல்ல..

புலிகளின் வெளிநாட்டு பணியகங்களின் பொறுப்பாளர்களே இத்தனை அசிங்கங்களையும் நிறைவேற்றுகின்றனர்..காரணம் இறுதியாக அவசரகால நிதியென்று புலம்பெயர் தமிழர்களிடம் இவர்கள் சேகரித்த பல மில்லியன் யுரோக்கள் அந்தந்த நாட்டுப்பொறுப்பாளர்களிடமே முடங்கிப்போயுள்ளது. எதிர்பாராதவிதமாக புலிகளின் தலைமையில் அத்தனைபேருமே அழிக்கப்பட்டு விட்டதால்..இனி யாரிற்கும் கணக்கு காட்டத்தேவையில்லையென்று நினைத்து புலம்பெயர்தேசங்களில் உள்ள மக்களிற்கும் கடவுள் ஒருநாள் வருவார் என்பதைப்போல பிரபாகரன் இருக்கிறார்.. ஒருநாள் வருவார்..என்று கதைவிட்டுக்கொண்டே காலத்தை ஓட்டிவிடலாமென்று நினைத்தவர்களிற்கு. பத்மநாதன் மற்றும் தயாமோகனின் அறிக்கைகள் இடியாய் இறங்கியிருக்கும் என்பதில் ஆச்சரியமில்லை..புலிகள் இனி அரசியல் ரீதியான ஒரு போராட்டத்தினை முன்னெடுப்தற்கு வெளிநாடுகளில் அரசியல் கட்டமைப்பு ஒன்றினை உருவாக்கும் முயற்சிசியில் இறங்கிருக்கிறார்கள் என்கிற செய்தியாலும் இவர்கள் ஆடிப்போயிருக்கிறார்கள் அப்படி ஒரு கட்டமைப்பு உருவானால் அவர்களிடம் தங்கள் கணக்குகள் சொத்துக்கள் பற்றிய விபரங்களையும் கையளிக்கவேண்டிவிடும் என்பதே இவர்களது பயம்..

சரி ஒரு வாதத்திற்கு பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்றுவைத்தாலும்..புலிகளின் தளபதிகள் தங்கள் இறுதிக்கணம் வரையும் சட்டிலைற் தொலைபேசி வசதியுடன் உலகில்அத்தனை பகுதிகளிற்கும் தொடர்புகொண்டபடியேதான் இருந்தனர்..இது அனைவரிற்கும் தெரிந்த விடயம்...பத்மநாதன் மற்றும் தயா மோகனது அறிக்கைகளால் உலகத்தமிழர்களது நிலை குழப்பமடைந்து அது ஈழத்தமிழர்களின் அடுத்தகட்ட நடவடிக்கைகளிற்கு தடையாக அமைந்து அவர்கள் சோர்வடைந்து விடுவார்கள் என்றுகூட சிந்திக்கத்தெரியாமல் 34 ஆண்டுகால போராட்டத்தினை நடத்தியவரல்ல பிரபாகரன்...அவர் எங்கு மறைந்திருந்தாலும் சில நிமிட உரையையாவது பதிவு செய்து சட்டிலைற் தொ.பே மூலம் உலகத்தமிழர்களிற்கு தெரியப்படுத்தி தமது அடுத்தகட்ட நடவடிக்கை என்னவென்று நிச்சயம் அறியத் தந்திருப்பார்..

ஏனென்றால். 88ம் ஆண்டு இந்தியப்படை ஆக்கிரமிப்புக்காலத்தில் பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார் என்று இந்திய ஊடகங்கள் எழுதியதில் அது பொதுமக்களிடமும் குழப்பத்தை ஏற்படுத்தியபொழுது அன்று இந்தளவு தொழில் நுட்பவளங்கள் இல்லாதபொழுதும் பிரபாகரனின் 3 நிமிடங்கள் அடங்கிய பேச்சை பதிவுசெய்து போராளிகளால் மக்கள் கூடும் இடங்களில் சிறிய ரேப்றிக்காடர்களில் ஒலிக்கவிடப்பட்டு அவரது இருப்பு உறுதிசெய்யப்பட்டது..சரி் அவர் பத்மநாதனின் அறிக்கையை வெளியான பின்னர் பிரபாகரன்உயிருடன்இருந்தும் பதில் அறிக்கைகள் விடாமல் இருக்கிறார் என்றால் அவரும் பத்மநாதனின் அறிக்கையை ஏதோ காரணங்களிற்காக ஏற்றுக்கொள்கிறார் என்பதுதானே அர்த்தம்..

ஆனால் வெளிநாடுகளின் பொறுப்பாளர்கள் மட்டும் ஏற்கமறுப்பதற்கு அவர்கள் சொல்லும் சப்பைக்காரணம் வெளிநாடுகளில் உள்ள தமிழ்மக்கள் மனமுடைந்து விடுவார்களாம்..வெளிநாட்டு தமிழர்கள் மனமுடைந்து போனால் அதனை ஒட்டவைக்க ஆயிரம் வழிகளுண்டு இரண்டு நாள் அழுது விட்டு மூன்றாவது நாள் வழைமைக்கு திரும்பி விடுவார்கள்.ஆனால் இறந்து போன பிரபாகரனை இன்னமும் வாழ வைப்பதன் மூலம் மேலும் சட்டச்சிக்கல்களை உருவாக்கி வவுனியாவில் முட்கம்பிகளிற்கு பின்னால் நாளை என்ன நடக்குமென்றே தெரியாமல் எதிர் காலத்தை தொலைத்துவிட்டு நிற்கும் மூன்று இலட்சம் மக்களினது வாழ்வு மட்டுமல்ல இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த பத்தாயிரத்திற்கு மேற்பட்ட போராளிகள்..தனியாக சிறப்பு முகாம்களில் அடைக்கபட்டுள்ள 2300ற்கும் மேலான புலிகளின் இரண்டாம் மூன்றாம் கட்டத்தலைவர்கள் அரசியல் அமைப்பாளர்கள்.அவர்களது குடும்பங்கள் என்று நீளும் பட்டியலில் உள்ளவர்களின் எதிகாலம் என்ன???சிந்திப்பீர்களா??

இதற்குமேல் என்னால் வாழைப்பழத்தை உரித்து அவர்கள் வாயில்வைத்து.ஒரு தடியால் வயிற்றிலும் தள்ளிவிடமுடியாது..எம்தலைவனிற்கு அஞசலிசெய்யத்தடையாய் நிற்காதீர்கள் என்று கெஞ்சிக்கேட்டுக்கொண்டு துரோகமும் வஞ்சகமும். புலம்பெயர் நாடுகளில் உள்ள புலிகளின் பணியக பொறுப்பாளர்களினால் நடத்தைகளினாலும் அவர்களால் அள்ளிவீசப்பட்ட வாக்குறிதிகளினாலும்.உலகநாடுகளின் ஏமாற்று உறுதி மொழிகளினாலும் அழிக்கப்பட்ட ஈழப்போராட்டத்தின் இறுதிநாட்கள் பற்றிய விரிவான அடுத்த பதிவொன்றுடன் சந்திக்கிறேன் நன்றி.

3:15 PM, Posted by sathiri, No Comment

இப்ப சந்தோசமா??

தென்கிழக்காசியாசிவில் பிராந்திய அதிகாரப்போட்டி நடாத்திய உலக வல்லரசுகளிற்கும்.. அந்த நாடுகளில் அரசியல் நடாத்திய தேசிய அரசியல் கட்சிகளிலிருந்து உள்ளுர் அரசியல்நடத்தியவர்களிற்கும்.. இந்தியாவின் மத்திய மானில அரசியல் நடாததியவர்களிற்கும்.. ஏன் புதிதாய் தனிக்கட்சி தொடங்கியவர்களிற்கும்.. இலங்கையில் ஆட்சியை பிடிப்பவர்களிற்கும்.. ஆட்சியை பிடித்தவர்களின் வால்பிடித்து வாழ்ந்தவர்களிற்கும் ...இதுவரை மாற்றுக்கருத்தென்றும்..சனநாயக வாதிகள் என்றும் தங்களை இணைய புரட்ச்சியாளர்களாக்க உதவி இதுவரை ௩௪ஆண்டுகளாக ஒரு தனிமனிதனாய்விலைபோகது நின்று போராடி உலகத்தமிழனிற்கெல்லாம் முகவரி தேடித்தந்துவிட்டு தன்னுடைய முகவரியை தொலைத்து விட்ட பிரபாகரனிடம் ஒரு வேண்டுகோள் தயவு செய்து நீ திரும்ப வந்து விடாதே .. ஏனென்றால் இவர்கள் அத்தனைபேரின் பிழைப்பும் உன்னை நம்பித்தான் இருக்கிறது ...

நன்றி வணக்கங்களுடன்.விடைபெறுகின்றேன்..

9:41 AM, Posted by sathiri, 2 Comments




தமிழ் மணநிருவாகம் என்னை இந்தவார நட்சத்திரமாக தேர்தெடுத்ததற்கு முதலில் நன்றிகள்.. அதே நேரம் இந்தவாரம் என்னுடைய இடுகைகளிற்கு பின்னூட்டம் இட்டு தங்கள் கருத்துக்களையும் ஆதங்கங்களையும் பகிர்ந்து கொண்ட உள்ளங்களிற்கும்.. அனானிகளாகி தங்கள் கருத்தக்களை சென்னவர்களிற்கும் ..நன்றிகள்...ஆனால் ஒரு கவலை .. அனானிகளாக பினன்னுட்டமிடுபவர்கள் ..அது திட்டுவதாக இருந்தாலும் சரி.. வாழ்த்துவதாக இருந்தாலும்சரி.... தங்கள் அடையாளத்துடன் கருத்தக்களை முன்வைத்திருந்தால்....அந்தக் கருத்துக்களில் வீரியம் இருந்திருக்கும்...

அந்தக் கருத்துக்களால் ஒரு தாக்கம் இருந்திருக்கும்...அவர்களிற்கும் கவனமெடுத்து பதில் கருத்துக்களை எழுத வாய்ப்பாகவும் இருந்திருக்கும். இனி அது அவர்களது விருப்பம்..இயந்திர மயமாகி விட்ட வெளிநாட்டு வாழ்க்கையில் இயந்திர சங்கரங்களில் ஒன்றாக சுழன்றபடியே முடிந்தளவிற்கு இங்கு பதிவுகளையும் இட்டிருக்கிறேன்என நம்புகின்றேன்.. ஆனால் ஆரம்பத்தில் பலரும் அரசியல் மட்டும் எழுதாமல் பல விடயங்களையும் பதிவிடுங்கள் என்று கேட்டிருந்தனர்..ஆனாலும் ஈழத்தமிழினம் என்பது அரசியல் விழையாட்டுக்களில் சிக்கி சின்னாபின்னமாகி போய் விட்ட இன்றைய காலகட்டத்தில்..தமிழனின் வாசிப்பிலும் எழுத்திலும் உணர்விலும் உணவிலும்...அரசியலே முதலாவதாய் கலந்திருக்கின்றது...எனவே அரசியலை பெரியளவில் தவிர்த்து எழுதமுடியாமல் போய்விட்டது..அரசியல் இல்லாது கலகலப்பாக பொழுது போக்காக கதையும் .கவிதையும்..சினிமாவும் பொதுவிடயங்கள் பற்றியும் எழுதும் காலம் எமக்கும் ஒருநாள் வரும் என்கிற நம்பிக்கையுடனும்..

தமிழ்மணம் இனிவரும் காலங்களில் ஈழத்து பதிவாளர்களையும் நட்சத்திர பதிவாளர்களாக்குவதன் மூலம் எம்முடைய ஆதங்கங்கள் கருத்துக்களையும் தமிழ்நாட்டுஉறவுகளுடனும்..உலகெங்கும் வாழும் தமிழர்களுடனும் பகிர்ந்து கொள்ள வசதியாக இருக்குமென்று ஒரு அன்பான வேண்டுகோளுடனும்...எம் தேசத்தில் ஓடும் இரத்த ஆறு நின்று வெள்ளைப்பூக்கள் விரைவில் மலரும் என்கிற நம்பிக்கையுடன் ..விடைபெறுகின்றேன்..நன்றி வணக்கம்....

அழிக்கமுடியா அனுபவம்

2:40 PM, Posted by sathiri, 16 Comments



வணக்கம் உறவுகளே என்னுடைய வாழ்நாளில் மறக்கமுடியாத இழப்புக்கள் பல அதில் நண்பர்கள் உறவுகள் என்று தொடரும்...ஆனானும் இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யபட்ட எனது தந்தை மற்றும் எனது சகோதரியின் இழப்பிற்கு பின்னர் பல நண்பர்களின் இழப்புக்களும் என்னை பாதித்திருந்தது.. அந்த பாதிப்பின் வடுக்களில் இன்னமும் மறையாத ஒரு வடுவின் உண்மைக் கதை ...இந்தக்கதை ஏற்கனவே சிலபத்திரிகைகளிலும் இணையங்களிலும் வெளியாகியிருந்தாலும் மீண்டும் இங்கு இடுகின்றேன் .. கொஞ்சம் நீளமானதாகிவிட்டது பொறுமையாய் படியுங்கள் நன்றி..


1996ஆம் ஆண்டு ஆனி மாதம் மத்திய சென்னையில் ஒரு காலை நேரம் அவசர அவசர மாக வெளிக்கிட்டு சில பைகளில் நான் தயார் படுத்தி வைத்திருந்த பொருட்களையும் எடுத்துக் கொண்டு தயாராய் வீட்டு வாசலில் காத்து நின்ற ஓட்டோவில் போய் ஏறிய படி ஓட்டோக்காரனிடம் வரசளவாக்கம் போங்க என்றுவிட்டு அமர்கிறேன். எனக்குள் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி ராணியக்காவை பாக்க போறன். இன்றைக்கு சுமார் 8 ஆண்டுகளிற்குப் பிறகு ராணியக்காவை பார்க்க போகின்ற மகிழ்ச்சி எனக்குள்.

இப்ப எப்பிடி இருப்பார்? என்று எனக்குள் சில கற்பனைகள்!! எனது மனதில் 8 ஆண்டுகளிற்கு முன்பு பார்த்த ராணியக்காவின் உருவத்திற்கு ஏற்றதாய் சில உடுப்புகள் அவரிற்காக வாங்கியிருந்தேன். ராணியக்கா எனது சொந்த அக்கா இல்லை ஏன் சொந்தம் கூட இல்லை . ராணியக்காவின் தாய் தந்தை ஈழத்தில் வேறு ஒரு ஊரை சேர்ந்தவர்கள் அவர்கள் சாதி மாறி காதலித்து கலியாணம் செய்ததால் அவர்கள் உறவினர்களால் பிரச்சனை என்று ஒருவரின் உதவியுடன் எங்கள் ஊரில் இருந்த வெறும் காணி ஒன்றில் வந்து குடிசை போட்டு வாழத் தொடங்கினார்கள்.

தந்தை இலங்கை போக்குவரத்துச் சபையில் சாரதியாக இருந்தவர். அவர்களின் மூத்தமகள்தான் ராணியக்கா பின்னர் இரண்டு மகன்கள். நாட்டுப் பிரச்சனைகள் காரணமாக யாழ் குடாவில் இலங்கை போக்குவரத்துச் சபையின் சேவைகள் இல்லாது போனதால் ராணியக்காவின் தந்தையின் வேலையும் பறி போக அவர்களது குடும்பம் மிகவும் பொருளாதார பிரச்னையில் விழுந்தது. அப்போது பத்தாம் வகுப்பு படித்து கொண்டிருந்த ராணியக்காவும் தனது படிப்பை இடை நிறுத்தி விட்டு குடும்ப பாரத்தை சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

தந்தை பின்னர் தூர இடங்களிற்குப் போய் பொருள்கள் வாங்கி வந்து ஊர்ச் சந்தையில் விற்பார் .ராணியக்காவின் தாயர் துணிகள் தைத்து குடுப்பவர். ராணியக்காவும் தாயாரிடம் தையல் பழகிக் கொண்டு ஒரு தையல் இயந்திரமும் வாங்கி ஊரில் உள்ளவர்களிற்கு உடுப்புகள் தைத்து குடுத்தும் மற்றும் வீட்டை சுற்றியள்ள காணியில் தோட்டம் ..ஆடு ..மாடு.. கோழி வளர்த்தல் என்று என்னென்ன வகையில் பொருளாதாரத்தை பெறலாம் என்று யோசித்து யோசித்து செய்தார். அத்துடன் தம்பியர் இருவரையும் கவனமாகப் படிப்பித்து அவர்களை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வருவதும் அவரது எதிர் கால கனவில் ஒன்றாய் இருந்தது.

அவரது மூத்த தம்பி ரமணன் எனது பாடசாலை நண்பன். அவனுடன் அவர்களது வீட்டிற்குப் போய் வரத் தொடங்கிய எனது நட்பு காலப்போக்கில் என்னையும் அவர்களது குடும்பத்தின் ஒருவன் போல ஆக்கிவிட்டது... நான் எப்போதும் கத்திக் கல கலப்பாய் கதைப்பதால் ராணியக்கா எனக்கு செல்லமாய் வைத்த பட்ட பெயர் காகம். நானும் அவரை அவர் குள்ளமாய் இருந்ததால் உரல் குத்தி என்று கூப்பிடுவேன். மாலை வேளைகளில் நானும் ..ரமணனும் வெளியில் போகும் போது தோட்டத்தில் வேலை செய்து கொண்டு நின்றபடி ராணியக்கா கூப்பிடுவார்.

பெடியள் எங்கை போறியள் அந்த ஆலமரத்திலை ஏறி ஆடு மாட்டுக்கு கொஞ்சம் குளை வெட்டித் தந்திட்டு போங்கோடா....... என்பார் .

சரி போகும்போதே கூப்பிட்டிட்டாள் இனிப் போற காரியம் உருப்பட்ட மாதிரித்தான் என்று நான் சலித்துக் கொள்ள .

ஓமடா உங்கடை முக்கிய அலுவல் என்ன எண்டு எனக்குத் தெரியும் .. .. சந்தியிலை போய் நிண்டு போற வாற பெட்டையளை பார்த்து வீணிர் வடிக்கப் போறியள் அதை விட பிரயோசனமா குளையாவது வெட்டலாம் தானே என்பார்.

போடி உரல் குத்தி நீ பனையிலையே பாஞ்சு பாஞ்சு ஏறுவியே நீயே ஏறி வெட்டடி என்று விட்டு நாங்கள் சைக்கிழை மிதிக்கவும்.

நில்லடா காகம் என்ற படிதோட்டத்தில் உள்ள மண்ணாங்கட்டிகளை பொறுக்கி எங்களை நேக்கி எறிந்த படி.. பேரும் இனி வீட்டுப் பக்கம் வந்து பாருங்கோ இருக்கு இரண்டு பேருக்கும் சோறு தண்ணிகூடக்கிடையாது......

என்றபடி தனது வேலையைத் தொடர போய் விடுவார் . இப்படியே ஒவ்வொரு நாளும் எங்களுக்குள் சின்னச்சின்ன சீண்டல்கள் சண்டைகள் என்று தொடர்ந்து கொண்டேயிருக்கும். ஆனாலும் ஒரு நாள் கூட உண்மையாய் சண்டை பிடித்தது கிடையாது. ராணியக்கா குள்ளமாக இருப்பார். ஆனால் கடின உழைப்பினால் உருண்ட உறுதியான தேகம்

நீண்ட தலைமுடி. அவர் தனது தலை முடியை பாராமரிக்கவே ஒவ்வொரு நாளும் அரை மணித்தியாலமாவாவது செலவிடுவார். ஒவ்வொரு நாளும் சம்போ வைத்து கழுவி பின்னர் தலை முடியை ஒரு கதிரையில் பரப்பிவிட்டு அதற்கு சாம்பிராணி புகை போடுவார். அப்பொதும் சரி வேறு வேலைகள் செய்யும் போதும் சரி ராணியக்கா புதிய வார்ப்பு பட பாடலானஇதயம் போகுதே .....” என்கிற பாடலைப் பாடிக்கொண்டே வேலைகளை செய்வார். அவரிற்குள் ஒரு காதல் இருந்ததா? யாரையாவது காதலித்தாரா?? என்று ஏதும் எனக்குத் தெரியாது

அந்த பாடல் ஏன் அவருக்குப் பிடிக்கும் என்று நான் இது வரை கேட்டதில்லை. சரி இன்றுதான் அவரைப் பார்க்க போகிறோமே கேட்டால் போச்சு என்றபடி ராணியக்காவின் நினைவகளில் மூழ்கிப் போயிருந்த என்னை

சார் மணி குடுங்க ஆட்டோக்கு பெற்றோல் போடணும் எண்டு நினைவுகளைக் கலைத்தான். அவனிற்கு ஒரு அம்பது ருபாய் தாளை எடுத்து நீட்டி விட்டு ராணியக்காவை பற்றிய நினவகளில் மீண்டும் மூழ்கிப் போனேன்.


இப்படியே சிரிப்பும் சந்தோசமுமாய் இருந்த குடும்பத்தில்.. ஈழத்தின் பல குடும்பத்தில் விழுந்த இடியை போலவே இவர்களது குடும்பத்திலும் இந்தியப் படை காலத்தின் ஒரு நாள் 1988ஆம் ஆண்டு தை மாதம் ஒரு இரவு ஒரு இடி விழுந்தது.


அன்று இரவு வழமை போல ஊரடங்குச் சட்டம் வீதி ரோந்து வந்த இந்திய இராணுவம் என்ன நினைத்ததோ ராணியக்காவின் வீட்டிற்குள் புகுந்து படுத்திருந்த அவர்களை எழுப்பி எல் ரி ரி தெரியுமா?? என்று மிரட்டினார்கள் சுமார் பத்து பேரளவில் வீட்டிற்குள் புகுந்து சாமான்கள் எல்லாவற்றையும் கிழறிக்கொண்டிருக்க ஒரு சீக்கியன் ரமணனனை

யு ஆர் எல்ரி ரி என்று கேட்க அவனும் நோ சேர் நோ என்றவும் அவன் ரமணனை துப்பாக்கி பிடியால் தாக்கவே அதைப் பாத்துக் கொண்டிருந்த ராணியக்கா பொறுக்க முடியாமல் இருவருக்கும் இடையில் புகுந்து அந்த சீக்கியனிடம் தனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் அவன் எல் ரி ரி இல்லை படிக்கிற மாணவன் என்றவும்.

அந்த சீக்கியன் ராணியக்காவின் தலை மயிரை பிடித்து இழுத்து மறு பக்கம் தள்ளி விட்டு ரமணனனை தொடர்ந்து தாக்க ராணியக்கா வெறி கொண்டவராய் மீண்டும் பாய்ந்து அந்த சிக்கியனின் துப்பாக்கியை பிடித்து அடிக்க வேண்டாம் என்ற தடுக்க . இன்னொரு ஆமிக்காரன் வந்து அந்த சீக்கியனின் காதில் கிந்தியில் ஏதோ சொல்ல . அவன் உடனே நீதான் எல் ரி ரி .....வா உன்னை விசாரிக்க வேண்டும் என்று ஆங்கிலத்தில் கூறிய படி ராணியக்காவை வெளியே இழுத்து கொண்டு போக.... ராணியக்காவும் தம்பி ரமணணனை எப்படியாவது காப்பாற்றி விட வெண்டும் என்கிற துடிப்பில் அவர்களுடன் நாளை காலை கட்டாயம் உங்கள் முகாமிற்கு நானும் தம்பியும் வருகிறோம்

தயவு செய்து இப்போ தொந்தரவு தராதீர்கள் என்று கெஞ்சிப் பார்க்கிறார் ஆனால் அவர்களோ வீட்டில் உள்ளவர்கள் எல்லாரையும் ஒரு அறையில் இருத்தி விட்டு வெளியில் வந்தால் சுட்டுவிடவோம் என மிரட்டிவிட்டு ராணியக்காவை பலாத்காரமாக இழுத்துப் போகிறார்கள். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்திலுள்ளவர்களும் யாரும் வெளியே வரப் பயம் காரணம் ஊரடங்கு உத்தரவு இருந்தது வெளியே வந்தால் ராணுவம் சுட்டுவிடும். விடியும் வரையும் அழுதபடியே விழித்திருந்த ராணியக்காவின் தாயாரும் தந்தையும் விடிந்ததும் அருகிலுள்ள இந்திய இராணுவ முகாமில் போய்த் தங்கள் மகளைப் பாக்க வேணும் என்று அழுதபடியே விசாரித்தார்கள்

ஆனால் அங்கு காவல் கடைமையில் நின்ற இராணுவத்தினனோ அங்கு யாரையும் அப்படிக் கைது செய்து கொண்டு வரவில்லையென்று கூறிவிட்டான். அவர்களது சத்தம் கேட்டு அந்த முகாம் பொறுப்பதிகாரியோ தங்கள் முகாமிலிருந்து யாரும் யாரையும் கைது செய்யவில்லை வேண்டுமானால் வேறு அருகிலிருக்கும் முகாம்களில் போய் விசாரிக்கச் சொல்லி அனுப்பி விடுகிறான். அவர்களும் அருகிலிருந்த மற்றைய முகாம்கள் எல்லாம் போய் விசாரித்து கொண்டிருக்க ஊரில் ஒருவர் ஊரின் ஒதுக்குப் புறமாக வயற்பக்கம் ஒரு பாழடைந்த வீட்டில் ராணியக்காவின் உடல் கிடப்பதாக வந்து சொல்ல

ஊர் இளைஞர்கள் சிலருடன் நானும் சேர்ந்து அந்த வீட்டைநோக்கி ஓடினோம். அங்கு நான் கண்ட காட்சி.. ராணியக்காவின் உடலில் ஒரு துணிகூட இல்லாமல் அவரது சட்டையைக் கிழித்து வாயில் அடைத்தபடி கைகள் பின்புறமாக கட்டப்பட்டிருந்தது. இரத்த வெள்ளத்தில் ராணியக்கா கிடந்தார்\. எனக்கு உடனேயே புரிந்து விட்டது என்ன நடந்து விட்டதென்று. ராணியக்கா அந்த மிருகங்களுடன் முடிந்தவரை போராடியிருக்க வேண்டும் அதனால் அவர் தலையை கூட அசைக்க முடியாமல் ஒரு பெரிய கல்லை தலை பக்கமாக வைத்து அவரது நீண்ட தலை முடியை அதில் இறுக்கிக் கட்டிவிட்டு அமைதி காக்க காந்திய தேசத்திலிருந்து வந்த அகிம்சாவாதிகள் தங்கள் கருணை அன்பு சமாதானம் எல்லாவற்றையுமே காமக் கழிவுகளாய் அந்த அப்பாவிப் பெண்ணின் மீது வெளியேற்றி விட்டுச் சென்று விட்டார்கள்.

நல்ல வேளை அவரது அந்தக் கோலத்தை அவரது தாய் தந்தையர் கண்டிருந்தால் அந்த இடத்திலேயெ மாரடைப்பு வந்து இறந்து போயிருப்பார்கள். அவரருகில் போய் உடலை மெதுவாய் தொட்டுப் பார்த்தேன் உடல் சூடாகவே இருந்தது நாடித்துடிப்பும் இருந்தது. உடனடியாகவே அருகில் இருந்த வீட்டுக்காரர் ஒருவரிடம் ஒரு சேலையை வாங்கி ராணியக்காவை சுற்றி கொண்டு ஊரில் வீட்டில் வைத்தியம் செய்யும் வைத்தியரிடம் கொண்டு ஓடினோம். வைத்தியரும் தன்னால் முடிந்த முதலுதவிகளை செய்து விட்டு குளுக்கோஸ் ஏற்றி விட்டு என்னிடம் சொன்னார் தம்பி என்னட்டை உள்ள வசதியை வைச்சு இவ்வளவுதான் செய்யலாம்.

உடனை வசதியுள்ள ஏதாவது ஆஸ்பத்திரிக்கு உடனை கொண்டு போனீங்களெண்டாத்தான் ஆளை காப்பாற்றலாம் இல்லாட்டி கஸ்ரம் எண்டார். யாழ்ப்பாணம் வைத்திய சாலைக்கு கொண்டு போக ஏலாது ...காரணம் அந்த வைத்தியசாலையும் இந்திய இராணுவத்தின் வெறியாட்டத்திற்குள்ளாகி சரியாக இயங்க தொடங்கியிருக்கவில்லை. அடுத்ததாக மானிப்பாய் வைத்திய சாலைக்குத் தான் கொண்டு போகவேண்டும் ஆனால் அங்கும் சுற்றிவர இராணுவக் காவல் ...என்ன செய்யலாமெண்டு யோசித்த போதுதான்

மானிப்பாய் வைத்திய சாலையில் வேலை செய்கிற ஒரு தாதி எனக்கு நல்ல பழக்கம் உடனே அவரிடம் ஓடிப்போய் விடயத்தை சொல்ல அவரும் தாமதிக்காமல் உடைனேயே தனது தாதி உடைகளை அவசரமாக அணிந்து கொண்டு என்னுடன் வந்து ஒரு வாகனத்தில் ராணியக்காவை ஏற்றிக்கொண்டு யாரும் வர வேண்டாம் நான் எப்படியாவது வைத்திய சாலைக்குள் கொண்டு போய் விடுவேன் ஆனால் நான் செய்தி அனுப்பும் வரை யாரும் வைத்திய சாலை பக்கம் வர வேண்டாம் பிறகு பிரச்னையாயிடும் என்று கண்டிப்பாய்ச் சொல்லி விட்டு ஒரு வெள்ளை துணியை ஒரு தடியில் கட்டி அதனை வானின் முன்புறத்தில் கட்டிக் கொண்டு எப்படியோ வைத்திய சாலைக்குள் கொண்டு போய் .

அங்கு வைத்தியர்களின் ஒரு வார கால போராட்த்தின் பின்னர் கோமா நிலையிலிருந்த ராணியக்காவின் உயிரை மட்டும் அவர்களால் இழுத்து பிடித்து நிறுத்த முடிந்தது ஆனால் அவர்களால் ராணியக்காவின் உணர்வுகளையோ நினைவுகளைகயோ திருப்ப கொண்டுவர முடியாமல் போய் விட்டது. ராணியக்கா தனது ஞாபகங்களை இழந்து மன நோயாளியாகி விட்டார். அது மட்டுமல்ல அவரது அடி வயிற்றிலும் பலமாக துப்பாக்கிப் பிடியால் தாக்கியிருக்கிறார்கள் அதனால் இடுப்பிற்கு கீழே உணர்வுகளும் அற்றுப் போய் விட்டது என்று அந்த தாதி என்னிடம் கூறினார். அதன் பின்னர் எனக்கும் அவர்களுடனான தொடர்பு இல்லாமல் போய் விட்டாலும்


அவ்வப்போது தெரிந்தவர்களிடம் விசாரிப்பேன் சில காலத்தின் பின்னர் அவர்கள் குடும்பமாக வள்ளத்தில் இந்தியா போய் விட்டதாக அறிந்தேன். நானும் பின்னர் பிரான்சிற்கு வந்த பின்னர் ரமணன் கனடாவில் இருப்தாக ஒரு செய்தி கிடைத்தது எப்படியும் அவனை தொடர்பு கொள்ளலாம் என நினைத்து தெரிந்தவர்கள் மற்றும் ஐரோப்பிய கனடிய தமிழ் வானொலிகள் ஊடாகவும் பலதடைவைகள் தொடர்ச்சியான எனது தேடலில் ஒரு நாள் ரமணனின் தொலைபேசி அழைப்பு எனக்கு வந்தது.

அவனுடன் கதைத்த போது நான் முதல் கேட்ட கேள்வி ராணியக்கா எப்பிடி இருக்கிறார் என்பதுதான். கன கால போராட்டத்தின் பின்னர் இந்தியாவில் பெரிய பெரிய வைத்தியர்களிடம் எல்லாம் காட்டி இப்ப கொஞ்சம் பரவாயில்லை என்றான் . நானும் அந்த வருடம் இந்தியா போக வேண்டி இருந்ததால் ரமணனிடம் விலாசம் விபரம் எல்லாம் பெற்றுக் கொண்டு இதோ இப்போது ராணியக்கா வீட்டிற்கு வந்து விட்டேன். எனக்காக மதிய சமையல் செய்து விட்டு ராணியக்காவின் தந்தையும் தாயும் காத்திருந்தனர்

என்னை கண்டதும் தாயார் வந்து கட்டியணைத்து அழுதே விட்டார். அவர்களிடம் அக்கா எங்கை என்று கேட்க ஒரு அறையைக் காட்டினார்கள் உள்ளே போனேன். எனக்கோ பெரிய அதிர்ச்சி நான் தேடி வந்த ராணியக்கா இவர் இல்லை என் கற்பனையில் இருந்த ராணியக்கா இவர் இல்லை பார்ப்பதற்கு ஒரு 60 வயதிற்கும் மேற்பட்ட ஒரு கிழவியின் தோற்றம் பல மாதங்கள் பட்டினி கிடந்தது போல கண்கள் எல்லாம் உள்ளே போய் அவரது பற்கள் எல்லாம் வெளியே தெரிய தொடர்ச்சியான மருந்து பாவனைகளால் அவரது தலை முடியும் உதிர்ந்து போனதால் மொட்டை அடித்திருந்தனர். மெதுவாக அவரது அருகில் போய் அவரின் கைகளை பிடித்து பார்த்தேன்

தோட்ட வேலையெல்லாம் செய்து எவ்வளவு உறுதியாய் இருந்த அவரது கைகள் ஒரு பிறந்த குழந்தையின் கையை போல சூம்பி போய் மிருதுவாய் இருந்தது. ராணியக்கா நான் தான் காகம் வந்திருக்கிறன் என்னை ஞாபகம் இருக்கா என்றேன். அவரோ எந்த வித சலனமும் இல்லாமல் சுவரையே வெறித்துப் பாத்தபடி இருந்தார். நானும் சில பழைய கதைகளை சொல்லிச் நானே சிரித்தும் பார்த்தேன் அவர் எந்த வித உணர்ச்சிகளையும் காட்டிக் கொள்ளவில்லை. அதற்கு மேலும் அங்கு என்னால் நிற்க முடியாமல் அறையை விட்டு வெளியே வந்த போது தாயார் சொன்னார் .....தம்பி இப்ப வருத்தமெல்லாம்
மாறிட்டுது தானே தன்ரை வேலையள் எல்லாம் தனிய செய்ய தொடங்கிட்டா

இப்பிடித்தான் வெறிச்சுப் பாத்தபடி ஒருதரோடையும் ஒரு கதையும் இல்லை ஆனால் வைத்தியர்கள் .. சொல்லினம் இப்ப ஒரு பிரச்சனையும் இல்லை ஆனால் மனரீதியான தாக்கத்திலை இருந்து இனி அவாவே தான் கொஞ்சம் கொஞ்சமா வெளிலை வரவேணுமெண்டு . அதக்காக தான் இப்ப நாங்களும் கொஞ்சம் வெளியிலை கூட்டிக் கொண்டு திரிய வெளிக்கிட்டிருக்கிறம் அப்பிடியாவது கொஞ்சம் பழைய மாதிரி இல்லையெண்டாலும் கொஞ்சமாவது கதைச்சால் நிம்மதி என்றார்.

நானும் அவர்களுடன் மதியம் உணவருந்தி விட்டுப் புறப்பட தயாராகிறபடி மீண்டும் ராணியக்காவிடம் போய் ஏதோ எனக்கு அவரை முத்தமிடவேண்டும் போல் இருந்தது. குனிந்து அவரது கன்னத்தில் முத்தமிட்டு விட்டு ராணியக்கா நான் போகப் போறன் திரும்ப ஒரு சந்தர்ப்பம் கிடைச்சால் கட்டாயம் வருவேன் என்றபடி அவரை உற்று பார்க்க அவர் கைகளை மெதுவாய் உயர்ந்தி எனது கைகளை சில நிமிடங்கள் பிடித்தவர் பின்னர் விட்டு விட்டார் முகத்தில் எந்த வித உணர்ச்சியும் இல்லாமல் இருக்க அவரது கண்களில் இருந்து கண்ணிர் மட்டும் வடிந்துகொண்டிருந்தது.

என்னை அவருக்கு அடையாளம் தெரிகிறது நான் கதைப்பது எல்லாமே அவருக்கு புரிகிறது என்பது மட்டும் எனக்குப் புரிந்தது. ஆனாலும் தனக்குத் தானே ஒரு கூட்டை கட்டி அதற்கு ஒரு பூட்டும் போட்டு வாழ்ந்து கொண்டிருந்தார் ராணியக்கா. அவர் அப்படி இருந்ததும் எனக்கு சரியாகத்தான் பட்டது காரணம் அவர் அந்த கூட்டை விட்டு வெளியே வந்து கதைக்கத் தொடங்கினால் பலரின் பல நுறு கேள்விகளிற்கு பதில் சொல்லியே மீண்டும் மன நோயாளியாகி விடுவார்.

பின்னர் ஓராண்டுகள் கழித்து ரமணணின் தொலை பேசி அழைப்பு வந்தது.ராணியக்கா நேற்று தற்கொலை செய்திட்டா நான் இந்தியாவுக்கு வெளிக்கிடுறன் என்றான் . எப்பிடி?? என்றேன் வீட்டுக்காரர் கவனிக்காத நேரம் அவாக்கு இரவிலை வழமையா குடுக்கிற நித்திரைக் குளிசை எல்லாத்தையும் எடுத்து போட்டுட்டாவாம் வீட்டுக்காரரும் அவா நித்தரை கொள்ளுறா எண்டு கன நேரமா கவனிக்க வில்லையாம் என்றான்.

எனக்கு தற்கொலை செய்பவர்கள் மீது வாழ்க்கையில் போராட முடியாத கோழைகள் என்று கோபம் வரும் ஆனால் போராட்டமே வாழ்க்கையாய் அமைந்து விட்ட ராணியக்காவின் முடிவு எனக்கு கோபத்தை தரவில்லை. ஆனால் என்னிடம் இன்னமும் விடை தெரியாத ஒரு கேள்வி இந்த இளம் வயதில் இத்தனை கொடுமைகளை அனுபவிக்க ராணியக்கா செய்த பாவம் தான் என்ன ???? இந்தக் கேள்வி ஈழத்தில் பல ராணியக்காக்களினது கேள்வியும் இதுவே............................