Navigation


RSS : Articles / Comments


ஆயுத எழுத்து நூல் வெளியீட்டுக்கு வ.கவுதமன் என்கிறவரின் எதிர்ப்பு பத்திரிகை அறிக்கை

9:58 AM, Posted by sathiri, No Comment

என் உயிருக்கு நிகரான தமிழ் உறவுகளுக்கு வணக்கம்! எங்கேயாவது, எப்பொழுதாவது தமிழ் இனத்திற்கு ஒரு விடியல் பிறந்து விடாதா என உலக தமிழினம் காத்து கிடக்கின்ற வேளையில் எதிரிகள் இடைவிடாது துன்பங்களையும், துயரங்களையும் தந்து கொண்டேயிருப்பது ஒரு புறமென்றால், எம் இனத்தில் பிறந்து எம் மொழி பேசும் வேறு சிலரோ அதனினும் கொடிய நிகழ்வுகளில் ஈடுபடுவதுதான் துயரத்திலும் துயரமாக மனசெல்லாம் வலிக்கிறது. 2009 வரை எங்கள் ஈழ தலைமையையும், எங்கள் போராளிகளின் புனிதத்தையும் புகழ் பாடியவர்களும், அல்லது வாய்மூடி மவுனித்து கிடந்தவர்களும் இப்பொழுது மார்த்தட்டிக் கொண்டு படைப்புகள் செய்து நீதிமான்களாக காட்டிக்கொள்வது என்பது வெட்கத்திலும் வெட்கக்கேடான செயல். "ஆயுத எழுத்து" இந்த படைப்பு யாருக்கு சாதகமாக எழுதப்பட்டது. தமிழினத்திற்காகவா? தமிழினத்தை அழிக்க நினைக்கின்ற எதிராளிகளுக்காகவா? "சனல்4 "தயாரித்த ஆவணப்படத்தினை வெள்ளையர்களே அதுவும் ஐநா மன்றத்தில் பார்த்து கதறி கதறி அழுதார்களே, அதனைப்பற்றி தமிழ் இரத்தம் ஓடுகின்றவர்கள் எத்தனை பேர் எழுத்தில் ஆவணமாக்கினீர்கள்! எம் போராளி பெண்களை ஆடை களைந்து இறந்த நிலையில் சிங்கள காடையர்கள் வன்புணர்ச்சி செய்தார்களே... எத்தனை பேர் எழுத்தில் செதுக்கினீர்கள்! எங்கள் நிலம் இன்றும் பறிக்கப்படுகிறதே, எங்கள் சகோதரிகள் நான் எழுதி நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கும் இந்த நிமிடத்திலும் சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்களே இதனைப்பற்றி ஏன் உங்கள் விரல்கள் எழுதவில்லை? எழுதாது... உங்கள் விரல்கள் அடங்கி உள்ளங்கைகள் எங்கள் எதிரிகளிடம் "பலமாக" கைக்குலுக்கியிருக்கின்றன. என் மண்ணை, எங்கள் மக்களை, எம் உரிமைகளை - ஆளவந்த, அழிக்க வந்த,அபகரிக்க வந்தவர்களை எதிர்ப்பதற்க்குத்தான் எங்கள் தலைமை ஆயுதப்போராட்டத்தை கையிலெடுக்க நேர்ந்தது. அதற்காகத்தான் எங்கள் குடும்பத்திலிருந்தே எங்கள் பிள்ளைகளை தேர்ந்தெடுத்து போராடினார்கள். இவ்வளவு பேசும்,எழுதும் நீங்கள் சொல்லுங்கள் - எங்கள் போராளிகள் யாராவது ஒரு சிங்கள பெண்ணை சிதைத்ததாக ஆதாரம் காட்ட முடியுமா? ஒரேயொரு அப்பாவி சிங்கள குடும்பத்தையாவது கொண்று போட்டதாக ஆவணங்களை எடுத்து வைக்க முடியுமா? கிட்டத்தட்ட நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட எங்கள் போராளி தெய்வங்களை கொச்சைப்படுத்த உங்களுக்கு எப்படி மனம் வந்தது? என்னை திரைத்துறையில் அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் வி.சேகர் "ஆயுத எழுத்து" புத்தக விவாதத்தில் அவரும் பங்குபெறுவதாக அறிந்து சொல்ல முடியாத வேதனையோடு அவரை தொடர்பு கொண்டு நான் பேசிய போது "உன் உணர்வை புரிஞ்சுக்கிறேன், இரவு அந்த படைப்பை படித்துவிட்டு உன்னிடம் பேசுகிறேன்" என்றார்- நேற்று 6.01.2015 மதியம் 1.30க்கு நான் அந்த விழாவை புறக்கணிக்கின்றேன், தமிழர்களுக்கு எதிரான எந்த நிகழ்விலும் நான் பங்கெடுக்க மாட்டேனென்று உறுதியளித்தது- மனதுக்கு ஆறுதலாக இருந்தது, மகிழ்ச்சியாகவும் இருந்தது. யாருக்கும் இல்லாத அக்கறை இவனுக்கு மாட்டும் ஏன் என்று என் இனத்தில் எதிரிகளும் என் இனத்திற்குள்ளாகவே வாழும் விதண்டாவாதிகளும் கேட்கக்கூடும் . தமிழன் ஒருவனுக்கு இந்த உலகின் எந்த மூலையில் தீங்கு நேர்ந்தாலும் அதனை தட்டி கேட்கின்ற உரிமை ஒவ்வொரு தமிழனுக்கும் உண்டு என்கின்ற முறையிலும் , அதுவும் அந்த தவறு நாங்கள் வாழ்கிற தமிழ் மண்ணில் நடக்கும் போது கைக்கட்டிக் கொண்டு சும்மா வேடிக்கை பார்க்கமுடியாது என்கிற நிலையிலும், எல்லாவற்றிக்கும் மேலாக தாய்தமிழ் மண்ணில் "இனி என்ன செய்ய போகிறோம் " "இறுதி யுத்தம்" : விழவிழ எழுவோம்" எங்கள் அப்பா இப்படி எண்ணற்ற ஆவண படைப்புகளினுடாக தமிழர் மனங்களில் தணலாக எரியவிட்ட ஆவண படைப்பாளன் என்கின்ற உரிமையிலும் இதற்கு கண்டனம் தெரிவிப்பது எனது தார்மீக உரிமை என்று உறுதியோடு தெரிவித்துக்கொள்கின்றேன் 09-01-15 அன்று நிகழ்விக்கும் நிகழ்வில் பங்கு கொள்ளது மானத்தோடு வெளிவந்த இயக்குநர் வி.சேகர் அவர்களை போன்று -எம் மண்ணுக்காகவும் , மக்களுக்காகவும் வாழ்கின்றேன் என்று சொல்பவர்கள் அந்த விழாவினை புறக்கணித்து வெளிவரவேண்டும். இல்லையென்றால் காலம் அவர்களை வெளிச்சம் போட்டு காட்டும். "இவர்கள் எம் இனத்தின் துரோகிகள்" என்று. நன்றி இப்படிக்கு வ. கௌதமன்