Navigation


RSS : Articles / Comments


2:46 AM, Posted by sathiri, No Comment

ஈழபோராட்டத்தில் எனது (பொய்)சாட்சியம் பாகம் 3


சத்தியசீலன் மகாஉத்தமன் மற்றும் ஞானம் ஆகியோர் 1971ம் அண்ட ஆவவணி மாதமளவில் இந்தியா சென்று தமிழ் நாட்டில் சுயமரியாதை கொள்கையின் தந்தையும் திராவிடர் கழக தலைவருமான ஈ.வே.ரா. பெரியார் இந்தியாவின் விஞ்ஞானியும் அறிஞருமான ஜு.டி நாயுடு மற்றும் மா.பொ.சி ஆகியொரை சந்தித்து சிங்கள அரசின் ஏமாற்று வேலைகளை விளக்கி தங்கள் கொள்கைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் என்பனவற்றை விளக்கியும் அதற்கான முன்னெடுப்புகளிற்கு அவர்களின் உதவியை வேண்டி நின்றனர்.அதற்கு அவர்களும் தங்களால் முடிந்த உதவிகள் வழங்குவதாக கூறி வாழ்த்தி வழியனுப்பி வைத்ததுடன் ஈ. வே.ரா. பெரியார் சத்திய சீலனிடம் சுருக்கமாக ஒரு கட்டுரையும் எழுதிவாங்கி தனது விடுதலை பத்திரிகையில் வெளியிட்டார்
. இந்த மாணவர் பேரவையின் வேகத்தை தடுத்து நிறுத்த உடனடியாகவே கூட்டணிதலைமை இதற்கான ஒரு மாற்று திட்டம் ஒன்றை தீட்ட வேண்டிய அவசியத்திற்கு தள்ளப்பட்டது.இளையதலைமுறையின் வேகத்தையும் ஆற்றலையும் தங்கள் பக்கம் இழுக்கவும் தங்கள் தங்கள் வீராவேச மேடை பேச்சுகளில் இவர்களால் பேச மட்டுமே முடியும் என அவர்களில் நம்பிக்கையிழந்து வேறு வழிகளில் வேறு திசைநோக்கி பயணிக்க புறப்பட்ட இளைஞர்களையும் தங்கள் பக்கம் இழுப்பதோடு அத்தோடு தமிழ் மக்களின் இனஉணர்வுகளின் எழுச்சி பலாபலன்களை ஒட்டுமொத்தமாய் தாங்களே அறுவடை செய்து அதன் விளைச்லை காட்டி சிங்களத்திடம் தங்கள் பேரங்களையும் பாராளுமன்ற கதிரைகளையும் பலமாக வைக்கலாம் என்பதே கூட்டணியின் கணக்காக இருந்தது.அதற்காக அவர்களும் ஒரு இளையவர் அமைப்பை உருவாக்க திட்டம் போட்டனர் அவர்கள் திட்டபடி அதன் அமைப்பாளர்கள் தங்கள் நூலிலேயே ஆடும்பொம்மைகளாகவும் இருக்க வேண்டும் அதன் மற்றைய உறுப்பினர்களிற்கோ பொது மக்களிற்கோ இது கூட்டணியின் கூட்டுவேலை என்று என்று தெரியவும் கூடாது .
அப்படி ஒரு தீவிரவாத போக்கை கொள்கையாக கொண்டஅமைப்பை உருவாக்கி மாணவர்கள் மத்தியிலும் இளைஞர் மத்தியிலும் வேகமாக வளர்ந்துவரும் சிங்களத்திற்கெதிரான தீவிர போக்கையெல்லாம் ஒன்று சேர்த்து இந்த அமைப்பின் மூலமே தங்களிற்கு ஒரு தீர்வு கிடைக்கும் என அதன் பால் நாட்டம் கொள்ள வைத்து அதனை இயக்கி கொண்டே கூட்டணிதலைவர்கள் மட்டும் தாங்கள் வன்முறையின் பால் அக்றை கொண்டவர்கள் அல்ல அகிம்சையே எங்கள் போராட்டவழி என்று சொல்லிக்கொண்டு கதர் உடுத்தி கறுப்புகொடி காட்டி கொண்டு வன்முறையின் பால் அக்கறையற்ற நாட்டமற்ற தமிழ் மக்களையும் தன்பக்கமே இழுத்துவைத்திருப்பதென ஒரேகல்லில் பல விழாங்காய் (பலமாங்காய் அடிப்பது சுலபம்) அடிக்க திட்டம் தயார்.
இப்போ அந்த விளாங்காய்களை அடிப்பதற்கான நம்பிக்கையான ஒரு கல்லை தேடினார்கள். அவர்கள் கல்லை தேடிகொண்டிருக்க எறிந்த இலக்கை அடித்துவிட்டு எசமானின் காலடிக்கே திரும்பும் பூமாராங்குகளாக தமிழரசு கட்சியின் வாலிப முண்ணனியிலிருந்து புஸ்பராசாவும். தமிழ் மாணவர் பேரவையிலிருந்து வெளியேறிய சபாலிங்கம் போன்றவர்கள் கிடைத்தார்கள். இப்போ கூட்டணியின் திட்டம் என்ன?? அதாவது ஒரு கோட்டை அழிக்காமலேயெ அதைசின்னாக்க எப்படி பக்கத்தில் ஒரு கோட்டைகீறுகின்ற வித்தை தான் இதுவும்.திட்டமும் தயார் அதை செயல்படுத்த ஆட்களும் தயார் அடுத்தது என்ன. 1973ம் ஆண்டு தைமாதம் கூட்டணி சார்பு மற்றும் எதிர்ப்பு தீவிரபேக்கின் மீது நாட்முடைய வேறு பல இளைஞர்கள் என்று பலரை ஒண்றிணைத்து யாழ் தமிழர் விடுதலை கூட்டணியினரின் காரியாலயத்தில் பெரும் எடுப்புடன் ஆர்ப்பாட்டமாய் ஒரு கூட்டம் கூட்டப்பட்டு அதற்கு தமிழ் இளைஞர் பேரவை என்று பெயரும் வைக்கப்பட்டது.அன்றும் சரி அதன் பின்னரும் சரி இந்த அமைப்பால் நடத்த பட்ட கூட்டங்களிற்கு வேண்டி நிதியுதவி மற்றும் இடவசதிகள் யாவும் கூட்டணியினராலேயெ வழங்கபட்டது.
ஆனால் மணவறையில் அமர்ந்து மணபெண்ணிற்கு தாலியும் கட்டிவிட்டு நான் மாப்பிள்ளை இல்லை என்பது போல புஸ்பராசாவே அந்த அமைப்பிற்கும் கூட்டணியினருக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்றே அடித்து கூறி வந்தார்.அனால் கால போக்கில் உண்மையை உணந்துகொண்ட அதன் உறுப்பினர்கள் பலரும் அந்த அமைப்பில் இருந்து வெளியெறிவிட அந்த அமைப்பு செயலிழந்து போனது.அந்த அமைப்பும் இயங்கிய காலத்தில் கறுப்புகொடி காட்டி கோசம் போட்டதோடு அதன் இயக்கமும் நின்று போனது.பின்னர் துரையப்பா கொலை நடந்தபோது சந்தேகத்தின் பெயரில் புஸ்பராசா கைதாகி சிறை சென்றுவிட சபாலிங்கத்தின் சத்தமும் காணாமல் போனது.இந்த புத்கத்தில் புஸ்பராசாவும் சரி இன்று புலத்தில் சிலர் தாங்களே சனநாயகத்தின் ஒட்டுமொத்த காவலர்கள் என்றும் மாற்று கருத்து மாணிக்கங்கள் என்றும் கூறிக்கொண்டு ஈழவிடுதலை போராட்டத்திற்கு எதிராகவும் விடுதலை புலிகளிற்கு எதிராகவும் கருத்துகளை முன்வைத்தும் செயற்பட்டு கொண்டும் இருக்கும் பலரும் இந்த சபாலிங்கம் என்கிற பெயரை அடிக்கடி உச்சரித்தபடிதான் இருக்கிறார்கள்.காரணம் காலப் போக்கில் புலம் பெயர்ந்து வந்து பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்துகொண்டிருந்த சமயம் இந்த சபாலிங்கம் கொலை செய்யப்பட்டார். யாரால்??? ஏன்??? எதற்காக ???? அடுத்த பாகத்தில் பார்ப்போம்

தொலைவில்

7:15 AM, Posted by sathiri, No Commentபாரீஸ் நகரிற்கு ஒரு அலுவலாக நான் போக வேண்டியிருந்தது போய் எனது அலுவல்களை முடித்து கொண்டு அன்று எனது நகரத்திற்கு திரும்ப முன்ன பாரீசில் தமிழர் வர்த்தக நிலையங்கள் அதிகமாக அமைந்திருக்கும் லா சப்பல் என்கிற இடத்திற்கு போனபோது தான் இவ்வனவு தூரம் வந்தனான் சில நிமிடம் வாசனையும் சந்தித்து விட்டு போகலாம் என்று அவனது அலுவலகத்தில் நுளைந்தேன் பலவருடங்களின் பின்னர் மீண்டும் கண்டாலும் உடனே அடையாளம் கண்டு எப்பிடி இருக்கிறாய் எங்கே இரக்கிறாய் என்று வழைமையான விசாரிப்புகள் ஒரு பத்து நிமிட சந்திப்பு அதன் இடையில்தான் பகட்டேன் என்னடா நீ ஏதோ புத்தகம் ஏதோ வெளியிட்தாய் எங்கோ வலைப்பூக்களில் படித்த ஞாபகம் என்ன புத்தகம் என்றேன். ஒரு புத்தகத்தை எடுத்து (வாழ்வின் சில தடயங்களாய்) என்று எழுதி கையெழுத்து போட்டு தந்துவிட்டு படித்துபார்த்து கருத்தை சொல் என்று தந்தான் அவனிடம் விடை பெற்று கொண்டு நான் இருக்கும் நகருக்கு திரும்புவதற்காக விமானநிலையம் வந்து விமானத்தில் ஏறி அமர்ந்ததும் அந்த ஒண்றரை மணி நெர பயணத்தில் அந்த புத்தகத்தை படித்து விடலாம் என தீர்மானித்து புத்தகத்தை திறந்தேன்.புத்தகத்திற்கு முன்னுரை கி.பி. அரவிந்தன் என்று போட்டிருந்தது முன்னுரையை படிக்கவில்லை காரணம் அதை படித்துதான் வாசு தேவனையோ அவனது படைப்புக்களையொ நான் தெரிந்து கொள்ளவேண்டும் என்கிற அவசியம் எனக்கில்லை என்பதால்தான்.பக்கங்களை புரட்டினேன் முதல் கவிதை "எ(வ்)வடம் எ(வ்)வடம் புளியடி புளியடி என்று தொடங்கியது என்ன இது சின்னபிள்ளை தனமாய் எழுதியிருக்கிறான் என நினைத்தவாறே தொடர்ந்து படித்தேன். மீண்டும் திருப்பவும் படித்தேன். எவ்விடம் எவ்விடம் ?
புளியடி புளியடி
எவ்விடம் போகினும்
போக்கிடம் நமக்கினி
புளியடி புளியடி

கண்மூடிகொண்டே நாம்
கையிருந்த மண்ணிழந்தோம்
எவ்விடம் போகினும்
போக்கிடம் நமக்கினி
புளியடி புளியடி

திசைகளையிழந்த நாம்
திரும்புவோம் என்பதும்
புளியடி புளியடி
என்றுதொடங்கி கைவிட்ட மண்ணை கண்டடையோம் இனி என்று ஒரு புலம்பெயர்ந்த தமிழனின் ஏக்கங்களை அவன் மன உணர்வுகளை இதைவிட இலகுவாகவும் உண்மையாகவும் சிறு வயதில் நாங்கள் விழையாடுகின்ற சாதாரண விழையாட்டின் உவமையுடன் எழுதியிருந்ததை நினைத்த வியந்து போனேன்.சிறு வயதில் ஒருவர் கையில் ஒருபிடி மண்ணை குடுத்து அதில் ஒரு குச்சியை நட்டு மற்றவர் அவரின் கண்ணை பொத்தியபடி எவடம் எவடம் என கேட்டபடி அவரை வேறு இடத்திற்கு அழைத்து செல்ல சுற்றியிருக்கும் மற்றவர்களும் கண்மூடபட்டவரும் புளியடி புளியடி எனகத்துவார்கள். எங்காவது ஓரிடத்தில் அந்த கண்மூடபட்டவரை அந்த கைப்பிடி மண்ணை போட வைத்து மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே அவரை கொண்டு வந்து விட்டு கண்களை அவிழ்த்து விடுவார்கள். அவர் அந்த பிடி மண்ணை தேடிப்பிடிக்கவேண்டும் . தேடிப்பிடித்தால் தான் அவர் வெற்றியாளர்.ஆனால் அந்த மண்ணை இன்னமும் தேடிபிடிக்காத அகதிகளாகவே நாம் இன்னமும் அலைந்து திரிகின்றோம்.


அதேபோலவே இன்னொரு கவிதையிலும் புலம் பெயர் தமிழனின் நிலையை அழகாக அப்புத்தகத்தில் ஆணியடிக்கிறார்.
ஊரின்றி ஒதுக்கப் பட்டவர்கள்
ஊரைவிட்டு தப்பி போனவர்கள்
தன்னுர் இன்றி வேறூர் போனவர்கள்
அடைக்கலம் புகுந்த ஊரில் நின்று
ஆர்ப்பரித்தனர்
யாதும் ஊரே யாவரும் கேளீர்
ஊர்களெல்லாம் உள்ளுர நகைத்து கொண்டன
என்று தம்ஊரை தேசத்தை மறந்து விட்டு புலம் பெயர் தேசங்களையெ தம் ஊராக நாடாக நினைத்து தம்பட்டம் அடிப்பவர் தலையில் ஓங்கி ஒரு குட்டு என்று கூட சொல்லலாம்.

அடுத்தபடியாக இப்புத்தகத்தில் வாசு தேவன் வேறு மொழிகளில் வருகின்ற இலக்கியங்களினதும் படைப்பாளிகளினதும் கற்பனை பாத்திரங்களை தனது கவிதைகளிலும் பாவித்திருப்பதால் . அந்த பாத்திரங்கள் அல்லது அந்த படைப்பாளிகள் பற்றிய சிறு விழக்கங்களையும் அந்தந்த கவிதைகளின் கீழ் விபரித்திருந்தால் மற்றை மொழி இலக்கியங்களையொ படைப்புகளையொ அறியாத எம்மவர்களிற்கு இவரின் கவிதைகளை இன்னமும் இலகுவாய் புரிந்து கொள்ள உதவியாய் இருந்திருக்கும் உதாரணத்திற்கு. பதினேழுவயதாயிருந்தவேளை
ஷரத்தூசா தனது வீட்டையும்
அருகிருந்த வண்ணான் குளத்தையும்
வாற் பேத்தைகளையும் துறந்து தூரத்து
தலை நகரமொன்றிற்கு புறப்பட்டான்


என்கிற கவிதையில் தன்னை `ஷரத்தூசா என்கிற பாரசீக நாடோடி பாத்திரத்துடன் ஒப்பிட்டவர் ஷரத்தூசா என்பது யார் ?? என்ன என்றும் கோடேபோன்ற கற்பனை பாத்திரங்களிற்கும் சில விழக்கங்களை அளித்திருந்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும். இந்த கவிதையில்தான் வருகின்ற வண்ணான் குளம் என்கிற ஒரு குளத்தின் காரண பெயரை வாசுதேவன் பயன்படுத்தியிருந்தமைக்கு சோபா சத்தியின் சத்தியகடதாசி (மொட்டை கடதாசி)யில் அவரது நண்பன் சுகனின் விமர்சனத்தில் புகலிடத்தில் புலவர்களிடம் விஞ்சி நிப்பது கவிமனமா?? சாதிமனமா?? என்று வழைமை போல புலம்பி தள்ளியிருந்ததையும் படிக்க நேர்ந்தது. இதில் மொத்தமாக புத்தகத்தை பற்றி விமர்சித்து விட்டு அதில் அந்த கவிதையையும் சுட்டி காட்டியிருந்தால் அதனை விமர்சனமாக ஏற்றுகொண்டிருக்கலாம் ஆனால் அந்த கவிதையில் வருகின்ற ஒரு வசனத்தை மட்டும் விமர்சித்து தள்ளியிருப்பதால் அது சுகனின் விமர்சன பார்வை அல்ல வழைமை போல விசமப்பார்வையே என்று புரிகிறது. பலகாலமாக புழக்கத்தில் இருந்து வரும் ஒருபெயரை ஒரு கவிதை வரிகளிலேயெ வாசு தேவனால் மாற்றிவிட முடியாது. வ" க்கு பதிலாக க" வையோ ம" வையோ போட்டு எழுதினால் யாருக்கு புரியும்???முடிந்தால் சுகன் போய் அந்த குளத்தின் பெரை மாற்றியமைத்து விட்டு வந்து இந்த விமர்சனத்தை எழுதினால் அதில் நியாயம் உண்டு.

இதை போன்ற விமர்சகர்களிற்கும் இறுதியில் பதில் சொல்லி போகிறார் எனக்கு தெரியும்
யாரும் எதிர்பாராத
ஒருகணத்தில்
எந்த றாடருக்கும்
அகப்படாத
ஒருபுனைவு வெளியில்
நான் உடைந்து
நொருங்கி
வீழ்ந்தபின்னர்
நீங்கள் எல்லோருமாக
சேர்ந்து
எனது கறுப்பு
பெட்டிகளை
தேடுவீர்கள்

அராலி வெளியின்
தாளம் பூ பற்றைக்குள்
அவற்றை நான்
கழற்றி எறிந்து
பல வருடங்களாகி விட்டன
என்பதை இப்போதே
சொல்லி விடுகிறேன்

நேரத்தை
விரயம் செய்யாது
பாதையை பார்த்து
பயணத்தை தொடருங்கள்............

12:47 PM, Posted by sathiri, 2 Comments

சி. புஸ்பராசாவின் ஈழ போராட்டத்தில் எனது (பொய்) சாட்சியம் பாகம் 2

இந்தவாரம் தமிழ் மாணவர் பேரவை மற்றும் தமிழ் இளைஞர் பேரவையின் தோற்றம் பற்றியும் அவைகளின் நடவடிக்கைகள் பற்றியும் சிலவற்றை பார்க்கலாம். இங்கு தனது புத்தகத்தில் தானும் தான் சார்ந்த சிலரும் 1973ஆம் ஆண்டு தொடக்கிய தமிழ் இளைஞர் பேரவையே முதன் முதல் ஈழவிடுதலையை வென்றெடுக்க ஆயுதப் போராட்டத்தை அறிமுகப் படுத்தியதாக எழுதுகிறார் ஆனால் உண்மையில் அதற்கு முதலே 1970ம் ஆண்டு கார்த்திகை மாதம் 13ஆம் திகதி அந்தக் காலத்தில் யாழ்ப்பாணநகரத்தில் மசால் வடைக்குப் பெயர் போன மலயன் கபே என்கிற உணவு விடுதியின் மேல் மாடியில் உரும்பிராயை சேர்ந்த சத்திய சீலனால் அப்போது இலங்கையரசிற்கு எதிரான தீவிரவாத போக்கு கொண்ட சில இளைஞர்களை ஒன்று சேர்த்து ஒரு கூட்டம் கூட்டபடுகிறது அந்த கூட்டத்தில் இருந்தவர்கள் 1.திரு பொன். சிவகுமாரன்(உரும்பிராய்). 2.முத்துகுவார சுவாமி 3. அரியரட்ணம் ஏழாலை 4.வில்வராயா (நல்லூர்) 5 இலங்கை மன்னன் 6. மகா உத்தமன் (யாழ்.சென்யோன்ஸ் கல்லூரி மாணவன்) 7. சிவராசா(கல்வியங்காடு) 8. தவராசா(இவர்தான் இன்று ஈ.பி.டி.பி யின் முக்கிய உறுப்பினராக உள்ளவர்.).9.சேயோன் (சென்பக்றிஸ் கல்லுரி மாணவன்)10. ஆனந்தன் (சென்யோன்ஸ் மாணவன்) 11. ஞானம் அண்ணா(மண்டைதீவு .)ஆகியோரோடு இன்னும் சிலருடனும் கிட்டத்தட்ட பதினைந்து பேரளவில் அந்த கூட்டத்தில் சமூகமளித்திருந்தனர்.

இதில் ஞானம் அண்ணா என்பர் சிறீலங்கா காவல் துறையில் கடைமையாற்றியவர் இலங்கையரசின் சிங்களம் மட்டும் என்கிற சட்டத்தால் சிங்களம் படிக்க முடியாது என தனது வேலையை உதறி எறிந்து விட்டு யாழ்நகரில் உள்ள ராணி திரையரங்கில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த இளைஞர்களின் கூட்டத்திற்கும் வேறு பல திட்டங்களிற்கும் அவர்களிற்கு ஒர் உந்து சக்தியாகவும் ஊக்கம் அழிப்பவராகவும் செயற்பட்டு வந்தவர் என்பதும் குறிப்பிட வேண்டும். இந்தக் கூட்டத்தில் அந்த இளைஞர்களால் 1970ஆம் ஆண்டு இலங்கையரசின் கல்வியமைச்சர் பதியுதீன் முகமது அவர்களால் கொண்டுவரப்பட்ட கல்வி தரப்படுத்துதல் சட்டம் மற்றும் தமிழர்களை ஒடுக்குவதற்காக சிங்கள ஆட்சியாளர்களின் பல்வேறு சட்டங்களை எதிர்த்தும் மற்றும் அதன் நிறைவேற்று அதிகாரிகளை எதிர்க்கவும் தமிழர் மத்தியில் ஒரு அமைப்பு தேவை என சத்தியசீலனால் முன்மொழியப்பட்டது.

அத்துடன் இலங்கையரசிற்கு தமிழர் மற்றும் தமிழ் மாணவர்களின் எதிர்ப்பைக் காட்டுவதற்காக மாபெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்றை நடத்த தீர்மானிக்கப்பட்டு அதற்காக வடக்கிலுள்ள அத்தனை பாடசாலை உயர் வகுப்பு மாணவர்கள் மற்றும் மாணவத்லைவர்களை அணுகி அந்த அரச எதிர்ப்பு பேரணிக்கு ஆதரவு திரட்டுவது என தீர்மானிக்கப் படுகிறது .அந்த தீர்மானத்தின் படியே அங்கிருந்தவர்கள் வடக்கிலுள்ள அத்தனை பாடசாலைகளிற்கும் சென்று மாணவர்களை சத்தித்து விழக்கம் கொடுக்கப்டுகிறது மீண்டும் அதே மாதம் 17ந் திகதி அதே இடத்தில் வடகிழக்கின் பல்வேறுபட்ட இடங்களிலில் இருந்தும் வந்திருந்த சுமார் நூற்றியம்பது இளைஞர்கள் மற்றும் உயர் வகுப்பு மாணவர்களை ஒன்றிணைத்துத் தமிழ் மாணவர் பேரவை தலைவர் செயலாளர் பொருளாளர் என்று எவரிற்கும் எவ்வித பதவிகளுமற்ற ஒரு அமைப்பாகவும் அந்த அமைப்பின் அமைப்பாளர் என்கிற ரீதியில் சத்தியசிலன் அவர்கள் இருப்பார் எனவும் முடிவுகள் எடுக்கபட்டது (முன்னைய கட்டுரையில் இந்த அமைப்பின் தலைவர் என்று நான் குறிப்பிட்டிருந்தேன் பின்னர் அது சத்தியசீலன் அவர்களால் தலைவர் என்கிற பதவி இல்லை அமைப்பாளர் மட்டுமே என்று சுட்டிக்காட்டப்பட்டது) சத்தியசீலன் அவர்களால் தமிழ் மாணவர் பேரவை என்று அந்த அமைப்பிற்கு பெயர் சூட்டப்பட்டு இனி வருங்காலங்களில் அந்த அமைப்பின் செயல்த் திட்டங்கள் பற்றியும் விவாதிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்திலேயே தமிழ் மக்கள் இனியும் சிங்கள ஆட்சியாளர்களின் கீழ் வாழ முடியாது என்றும் தமிழர்கள் ஒரு தனியரைசை அமைக்க வேண்டிய கட்டாயத்தை வலியுறுத்தி அந்த தனியரசை அமைக்க வன்முறையிலான ஆயுதப் போராட்டமே ஒரேயொரு வழியென தீர்மானம் எடுக்கப்பட்டு அதற்கான ஆரம்பக் கட்ட வேலைகளான மாணவர்கள் மற்றும் பொது மக்களிற்கு தமிழ் தனியரசு பற்றிய விளக்கங்களையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்த அங்கிருந்தவர்கள் பகுதி பகுதியாகப் பிரிக்கப் பட்டு தமிழ் பிரதேசத்தின் அனைத்து கிராமங்களிற்கும் மற்றும் அனைத்து பாடசாலைகளிற்கும் செல்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது. இந்த இரண்டு கூட்டங்களிலுமே புஸ்பராசா அவர்கள் இருந்திருக்கவில்லை என்பதும் இங்கு கவனிக்கப்படவேண்டும். அவர்கள் திட்டப்படி கார்த்திகை மாதம் 24ந்திகதி மிக குறுகிய காலத்திலேயெ ஒழுங்கு செய்யப்பட்டாலும் வடக்கின் அனைத்து பாடசாலை மாணவ மாணவியர் மற்றும் பொது மக்கள் என எதிர்பார்த்ததற்கும் மேலாக பல்லாயிரக்கணக்காணவர்கள் பங்கு பற்றி தங்கள் எதிர்ப்பை இலங்கை அரசிற்கு காட்டினர்.

இலங்கையில் முதலாவது மிகப்பெரும் தமிழ் மாணவர்களின் எழுச்சி என்று இந்த ஊர்வலத்தை சொல்லலாம்.இறுதியாக யாழ் முற்றவெளியில் நடந்த பொது கூட்டத்துடன் இந்த ஊர்வலம் நிறைவு பெற்றது. இந்த மாணவர் பேரவையின் தோற்றமும் அதன் திடீர் வளர்ச்சி பெருமளவான மாணவர்கள் மற்றும் பொது மக்களிடையே அதன் பிரச்சாரமும் செல்வாக்கும் அதிகரித்ததைக் கண்டு அன்றைய தமிழர் விடுதலை கூட்டணியின் தலைமை கொஞ்சம் அதிர்ந்து போனது. இந்த இளைஞர்களின் திடீர் வழர்ச்சி தங்களின் தமிழ் மக்கள் மீதான இருப்பையே கேள்விக்குறியாக்கி பாராளுமன்ற கதிரைகளின் கால்களை முறித்துவிடுமோ என்று பயந்தனர் http://www.orupaper.com/issue50/pages_K__Sec3_32.pdf