Navigation


RSS : Articles / Comments


தமிழர் நிகழ்வை தடுக்க முயற்சித்த சிறீலங்கா

11:39 AM, Posted by sathiri, One Comment

யேர்மனியில் தமிழர்களின் கலந்துரையாடலை தடுக்க முயற்சித்த சிறிலங்கா
[செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2009, [ஜேர்மனியிலிருந்து தேவிகா கங்காதரன்

யேர்மனியில் உள்ள ஈடார் ஒபஸ்ரைன் நகரில் 'சமகால இலங்கை நிலவரமும் மனித உரிமை மீறல்களும்' எனும் தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடலை நிறுத்த சிறிலங்கா அரசாங்கத்தின் தூதரகம் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

கடந்த சனிக்கிழமை (28.03.09) நடைபெற்ற இக்கலந்துரையாடலில் சுவீடனில் இருந்து பேராசிரியர் பீற்றர் சால்க், ஜி.ஜே.மோகன், யேர்மனியில் இருந்து பேராசிரியர் டாக்மா கெல்மன் இராஜநாயகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பேராசிரியர் பீற்றர் சால்க் சவீடன்
இந்நிகழ்வினைத் தடுக்க ஜேர்மனியில் உள்ள சிறிலங்கா தூதரகம் கடும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தது. அவர்களின் தூண்டுதலினால், இக்கலந்துரையாடல் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரை ஜேர்மனிய குற்றத்தடுப்பு புலனாய்வுத்துறையின் மூன்று உயர்தர அதிகாரிகள் சந்தித்து நிகழ்வின் நோக்கம், கலந்துகொள்வோர் விபரம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டனர்.

பேராசிரியர் டாக்மா கெல்மன்
ஜெனீவாவில் தமிழர் ஒருவர் தீக்குளித்ததுபோல் இங்கும் ஒரு தமிழர் தீக்குளிக்க இருப்பதாக தமக்கு முறைப்பாடு வந்துள்ளதாக தெரிவித்த அவர்கள், நிகழ்வினைத் தடுக்குமாறு கோரி தமக்கு வந்த மின்னஞ்சல், தொலைநகல் அடங்கிய கோவையினையும் காட்டினர்.

ஜி.ஜே.மோகன் சுவீடன்
விசாரணையின் பின் ஜேர்மனிய சட்டத்தின்படி இதனை நடத்த உங்களுக்கு முழு உரிமை உள்ளது. விசாரிக்க வேண்டியது எமது கடமை எனக் கூறிச்சென்றனர்.

ஆயினும், நிகழ்வு நடைபெற்ற அன்று மோப்ப நாய் சகிதம் வந்த ஜேர்மன் காவல்துறை மண்டபம் முழுவதையும் சோதனையிட்ட பின்னரே நிகழ்வினை தொடங்க அனுமதித்தனர்.

சாந்தி ரமேஸ் வவுனியன்.யெர்மனி.
ஆனால், ஜேர்மனியில் உள்ள சிறிலங்கா தூதரகத்தினரின் தலையீட்டால் ஈடார் ஒபஸ்ரைன் நகர பிதா நிகழ்வினை புறக்கணித்தார்.

சிறிலங்கா தூதரகத்தின் மிகுந்த அழுத்தத்தையும் மீறி, சுமார் மூன்றரை மணித்தியாலம் வரையில் குற்றப் புலனாய்வுத்துறை காவல்துறையினரின் காவலுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் நூற்றுக்கும் அதிகமான யேர்மனிய மக்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் சமகால வன்னிக்களமுனையும் மக்களின் அவலங்களும் தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.

வன்னி அவலங்களை எடுத்துக்காட்டும் ஜேர்மன் மொழியிலான 9 நிமிட விவரணப்படமும் காண்பிக்கப்பட்டது.

'இலங்கைப் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க எடுத்த முயற்சிகள் ஏன் பயனின்றிப் போயின?' எனும் தலைப்பில் உரையாற்றிய டொக்டர் திருமதி டாக்மா இராஜநாயகம் இனப்பிரச்சினை தீர்க்கப்படாமல் இன்னும் தொடர்வதின் காரணங்களை விளக்கினார். ஊடகங்கள் செய்தியை வெளியிடாது மறைப்பதையும் அவர் கண்டித்து உரையாற்றினார்.

இவரது உரை இலங்கை சுதந்திரமடைந்தபின் தமிழர் இனப்பிரச்சனை தொடங்கிய காலம் முதல் தற்போது நடைபெறும் வன்னி அவலம் வரை உள்ளடக்கிய விரிவுரையாக இருந்தது.

நிகழ்வினை ஈடார் ஒபஸ்ரைன் நகர பிதா, ஜேர்மனியில் உள்ள சிறிலங்கா தூதரகத்தின் தலையீட்டால் புறக்கணித்ததையும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் குற்றப் புலனாய்வுத்துறையினரால் விசாரிக்கப்பட்டதையும் கண்டித்தார்.

சுவீடன் தமிழர் பேரவையின் சார்பில் கலந்துகொண்ட ஜி.ஜே.மோகன் 'இலங்கைத் தமிழரின் உண்மையான பாதுகாவலர் யார்' என்ற தலைப்பில் உருக்கமான உரையாற்றினார்.


மண்டபத்திலிருந்து அனைவரையும்வெளியேற்றி விட்டு மோப்ப நாயுடன் எதையோ தேடும் ஜெர்மனிய காவல்துறையினர்.
நாளாந்தம் 50-100 வரையான பொதுமக்கள் கொல்லப்படுகின்றனர். வன்னி மண்ணில் ஒவ்வொரு அங்குலமும் மனிதக்குருதியால் நனைந்துள்ளது. இந்த மண்ணின் காற்றில் வெடிமருந்து வாசம் வீசுகின்றது. ஏரிகளும் குளங்களும் மாசுபடுத்தப்பட்டு சுத்தமான குடிநீர் பெறவும் வழியில்லை எனக்குறிப்பிட்டார்.

சிறிலங்கா அரசு தமிழர்களின் இறைமையை மறுதலிப்பதுடன் அவர்கள் மீது இன அழிப்பு போரை நடத்துகின்றது. நீங்கள் சிறிலங்காவுக்கு நன்கொடையாக வழங்கும் ஒவ்வொரு சதமும் உங்கள் கரங்களில் இரத்தக்கறையை விட்டுச் செல்கிறது.

இந்நாட்டுடன் உங்கள் நாடு செய்யும் ஒவ்வொரு வணிகமும் அப்பாவித் தமிழரின் அவலங்களை அதிகரிக்கச் செய்கின்றது.

ஜேர்மனி வழங்கிய ஆழிப்பேரலை நிதிகூட தவறான கைகளுக்கு சென்று விட்டது. தமிழ் மக்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. இந்திய அரசு குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கின்றது. உங்கள் அரசாங்கங்களை விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி கேளுங்கள் என்றும் தெரிவித்தார்.

'சிறிலங்காவில் நடைபெறும் போர் தொடர்பான ஜேர்மனியின் பார்வை' என்ற தலைப்பில் பேராசிரியர் பீற்றர் சால்க் ஆற்றிய உரையில், இடம்பெற்று வரும் போரில் அகதிகளாக அல்லலுறும் பொதுமக்களின் நிலைமை கவலைக்கு உரியது.

தமிழருக்குத் தேவையானது உரிமையுடன் கூடிய விடுதலையே, தமது உரிமைகளை தாமே தீர்மானிக்கும் சுதந்திரமே, மனித உரிமை மீறல்களை சகிக்க முடியாத சில தமிழ்மக்கள் தம்மைத்தாமே தீயூட்டி தமதுயிரை துறந்துள்ளனர். அவர்களில் சிலர் கடிதம் மூலம் தமது உணர்வுகளைப் பதிவு செய்திருந்தனர் எனவும் குறிப்பிட்டார்.

நான் அயன் பார்த்திட்டேன்....

2:13 PM, Posted by sathiri, 20 Comments


எங்கள் ஊரில் இதைத்தான் அயன் என்று சுருக்கமாய் சொல்வோம்.......

வீர வணக்க மகாநாடு

1:12 PM, Posted by sathiri, No Commentஈழம் சகோதர யுத்தம் இறுதிப்பாகம்

12:16 AM, Posted by sathiri, 13 Comments

இனி இறுதியாக சகோதர யுத்தம் பற்றி கருணாநிதி அவர்கள் அடிக்கடி அறிக்கையாக புலம்புவதன் நோக்கம் என்னவென்று பார்த்தால். அவரிற்கு உண்மையாகவே ஈழத்தமிழர் போராட்டத்தில் உண்மையான உணர்வுள்ள பற்று என்றுமே இருந்ததில்லை.உதாரணமாக ஈழ விடுதலைப்போராட்டத்தின் ஆரம்பகாலப் போராளிகளில் ஒருவரான குட்டிமணி என்பவர் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் பகுதியில் தலைமறைவாக இருந்த 1973 ம் ஆண்டு காலத்தில் இலங்கையரசின் வேண்டுகேளிற்கிணங்க குட்டிமணியை கைதுசெய்து இலங்கைக்கு நாடு கடத்த உத்தரவிட்டிருந்தார்.அதேபோல அவரும் நாடு கடத்தப்பட்டு சிறீலங்கா காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவர் சிறையிலிருந்து வெளிவந்து மீண்டும் இலங்கையரசிற்கு எதிரான போராட்டங்களை தொடர்ந்து கொண்டுடிருந்தபொழுது மீண்டும் கைது செய்யப்பட்டு சிறீலங்கா அரசினால் தூக்குதண்டனை வழங்கப்பட்டது. தூக்குத்தண்டனை வழங்கப்பட்ட அன்று அவர் நீதிமன்றத்தில் சில நிமிடங்கள் ஆற்றிய உரை அன்று ஈழத்தமிழ் இளைஞர்கள் மத்தியில் போராட்ட உணர்வலைகளை தோற்றுவித்திருந்தது.

அவர் ஆற்றிய உரையில் "" குட்டிமணியை தூக்கில் போடுங்கள் கவலையில்லை ஏனென்றால் என்னைப்போல ஈழத்தில் ஆயிரம் குட்டிமணிகள் உருவாகுவார்கள். அதேநேரம் எனது இறுதி ஆசை என்னவென்றால் என்னை தூக்கில் போட்டபின்னர் என்னுடைய கண்களை எடுத்து பார்வையற்ற ஒரு தமிழனுக்கு பொருத்தி விடுங்கள்.அந்தக் கண்கள் நாளை மலரப்போகும் தமிழீழத்தினை பார்த்து மகிழட்டும் ""என்று கூறியதற்காகவே 83ம் ஆண்டு யூலை 25 ந்திகதி சிங்கள இனவெறிக்கும்பல் அவர் இருந்த சிறை அறையை உடைத்து அவரது கண்களை தோண்டியெடுத்து ""தமிழீழமா பார்க்கப்போகிறாய் "" என்றபடி சிறைவளாகத்தில் இருந்த அன்புசெய் என்ற புத்தனின் சிலையில் ஒட்டவைத்து ஆனந்தக்கூத்தாடினார்கள்.

அடுத்ததாக 1999 ம் ஆண்டு சிறீலங்காவில் சந்திரிக்கா வின் ஆட்சியில் ஆலோசகராக இருந்த நீலன் திருச்செல்வம் என்பவரின் கொலை சம்பந்தமாக சந்தேகத்தின் பெயரில் சிறிலங்கா அரசால் தேடப்பட்டஒருவர் தமிழ்நாட்டில் சட்டப்படி எவ்வித பிரச்சனைகளும் இன்றி தகுந்த அனுமதிகளுடன் தங்கியிருந்த பொழுது சி .பி.ஜ அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டபின்னர். அவரை நாடு கடத்துவதற்கான எவ்விதசட்ட ரீதியான காரணங்களும் இல்லாத நிலையில்.அவரை இலங்கைக்கு நாடு கடத்த கருணாநிதியிடம் அனுமதி கோரப்பட்டது. கருணாநிதியும் உடனடியாக சட்டத்திற்கு புறம்பான அனுமதியினை நேரடியாகவே கடிதமூலம் வழங்கியிருந்தார்.அதன் பின்னர் இரண்டு சி.பி.ஜ அதிகாரிகள் நேரடியாகவே அவரை சிறீலங்காவிற்கு அழைத்துச்சென்று இலங்கை புலனாய்வு பிரிவினரிடம் கையளித்தனர்.

இங்கு கவனிக்கப்படவேண்டிய விடயம் என்னவெனில் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் குற்றவாளிகளை பரிமாறும் அல்லது நாடு கடத்தும் உடன்படிக்கைகள் எதுவும் சட்டப்படி இல்லை. ஆனாலும் இன்றுவரை பிரபாகரனை பிடித்தால் இந்தியாவிடம் தரவேண்டும் என்று காங்கிரஸ் காரரும் ... பிரபாகரனை பிடித்து இந்தியாவிடம் தருவோம் என்று இலங்கையரசும் எதனடிப்படையில் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள் என்று புரியவில்லை.

இந்தியா... ஈழப்போராட்ட இயக்கங்களிற்கு தன்னுடைய சுயநலத்திற்காக உதவிகள் செய்து கொண்டிருந்த பொழுது. உண்மையாகவே உணர்வுடன் அதுவும் புலிகள் இயக்கத்திற்கு அதிக உதவிகள் செய்தவர் எம்.ஜி.ஆர் அவர்கள். அவர் எவ்வித விளம்பரங்களோ ஆர்ப்பாட்டங்களோ அறிக்கைகளோ எதுவுமின்றி புலிகள் இயக்கத்திற்கு பலகோடி ரூபாய்கள்கொடுத்து உதவியது மட்டுமல்ல புலிகள் தங்கள் போராட்டத்திற்காக வேறு நாடுகளில் வாங்கும் ஆயுதங்களை பத்திரமாய் ஈழத்திற்கு எடுத்துபோவதற்கும் மறைத்து வைக்கவும் தமிழ்நாட்டின் கரையோர பகுதிகளை பாவிக்க பல உதவிகளையும் செய்துவந்தார்.

இதனையறிந்த கருணாநிதியோ தன்னுடைய அரசியல் எதிரியான எம்.ஜி.ஆரை கவிழ்க்கவும் இன்று போலவே தமிழ் நாட்டில் எழுந்திருந்த ஈழத் தமிழர் ஆதரவினை தன்பக்கம் திருப்பி ஈழத்தமிழர் அவலத்தினை தனது வாக்குவங்கியாக மாற்றத் திட்டமிட்டு தமிழீழ ஆதரவு அமைப்பு என்கிற ஒரு அமைப்பினை உருவாக்கி அனைத்து மேடைகளும் ஈழத்தமிழரிற்கு ஆதரவான அவரது அனல் கக்கும் பேச்சுக்களால் அதிரவைத்தார். அவருடைய அன்றைய அந்த அனல் கக்கும் பேச்சுக்களுடன் ஒப்பிடுகையில் இன்றை சீமானின் பேச்சுக்கள் எல்லாம் சீ இதுக்குப்போய் குண்டர் சட்டமா?? என எண்ணத்தோன்றும்.

ஆனால் எம்.ஜி.ஆரோ அன்று கருணாநியை கடைமைக்காகக்கூட கருணாநிதியை கைது செய்யவில்லை. இன்று எப்படி ஈழத்தமிழர் பிரச்சனையை தன்னுடைய சுயநலத்திறகாக பயன்படுத்துவது போலவே 1984 ம் ஆண்டு கருணாநிதி தன்னுடைய பிறந்தநாளையொட்டி ஒரு விளம்பர அரசியலிற்கு திட்டமிட்டு ஈழப்போராட்டக்குழுக்களான ரெலோ .ஈ.பி.ஆர்.எல்.எவ்.ஈரோஸ் .புளொட்.மற்றும் புலிகள் இயக்கம் ஆகியவற்றிற்கு 50 இலட்சம் ரூபாய்கள் நிதியுதவிசெய்யப்போவதாக அறிவித்துவிட்டு பத்திரிகையாளர்களையும் அழைத்துவைத்துக்கொண்டு காவலிருந்தார்.இதில் ரெலோ...ஈ.பி.ஆர்.எல்.எவ்.ஈரோஸ் என்பன ஒன்றாகவும் .புளொட் தனியாகவும் சென்று பணத்தை பெற்றுக்கொண்டனர்.புலிகள் இயக்கம் பணம் வாங்க செல்லாமல் தங்களிற்கு பண உதவிகள் தேவையில்லை உங்களின் ஆதரவே போதும்என்கிற செய்தியை மாத்திரம் கருணாநிதிக்கு அனுப்பியிருந்தனர்.அந்தச் சம்பவம் கருணாநிதிக்கு பெரும் ஏமாற்றமாகவே இருந்தது.

படத்தில் ரெலோ.சிறிசபாரத்தினம். ஈ.பி பத்மநாபா..ஈரோஸ் பாலகுமார் ஆகியோர்.

அடுத்து 1989ம் அண்டு இந்தியாவின் பொதுத் தேர்தலில் காங்கிரஸ் தோற்றகடிக்கப்பட்டு வி.பி சிங் பிரதமரானதும். இந்தியப்படைகள் இலங்கையை விட்டு வெளியேத்தொடங்கின. அதே நேரம் ராஜீவ் அரசின் கைப்புள்ளையாய் இருந்த வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜபெருமாள் இந்தியப் படைவெளியேற்றத்துடன் தன்னுடைய பதவிக்கும் அழகான ஆப்பு ஒன்று சீவப்படும் என்று தெரிந்து டெல்லிக்கும் சென்னைக்குமாய் பறந்து திரிந்து அரசியல் தவைர்களிடம் ஈழத்திலிருந்து இந்தியபடைகள்வெளியேறுவதை தடுத்து நிறுத்த முயற்சித்தார். அனால் வி.பி சிங் அவர்கள் பெருமாளின் கோரிக்கையை நிராகரித்தார்.அடுத்ததாய் கருணாநிதியிடம் ஓடியவர் இலங்கையில் புலிகளிற்கும் பிரேமதாசா அரசிற்கும் நடக்கும் பேச்சு வார்த்தையில் புலிகளிற்கு மாகாணசபை ஆட்சியதிகாரம் கிடைக்கப் போகிறது. அதில் தன்னுடைய கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சிக்கும் சரி பாதி இருக்கைகள் வாங்கித்தருமாறு கோரிக்கையை வைத்தார். அதன்படி கருணாநிதியும் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தை அவசரமாக சென்னைக்கு அழைத்து சென்னை துறைமுக விருந்தினர் இல்லத்தில் பேச்சு வார்த்தைகள் நடந்தது.

அந்தப் பேச்சு வார்த்தையில் கருணாநிதியுடன் முரசொலிமாறனும். அன்னரன் பாலசிங்கத்துடன் அவரது துணைவியார் அடேலும். யோகியும் பங்கேற்றிருந்தனர்.புலிகள் வரதராஜப்பெருமாளுடன் மாகாண சபை அதிகாரத்தினை பகிர்ந்து கொள்ளவேண்டுமென கருணாநிதிஅவர்கள் அன்ரன் பாலசிங்கத்திடம் வைத்த கோரிக்கைக்கு விளக்கமாக பதில் அளிக்கபட்டது.அதாவது மகாணசபை அதிகாரங்கள் வழங்கும் நிலைவந்தால் வடக்கு கிழக்கில் ஒரு தேர்தல் ஒன்றின் மூலமே மக்கள் தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பார்கள். அப்படியான ஒரு தேர்தலிற்கு புலிகள் இயக்கம் தயாராகி வருகின்றது்.எனவே அதனை வடக்கு கிழக்கு மக்களே முடிவுசெய்வார்கள் இந்த விடயத்தில் புலிகளால் ஒன்றும் செய்யமுடியாது என்று நிலைமையை திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.

(அதனைக்கேட்ட கருணாநிதி மிகவும் குளப்பமடைந்திருந்தார் என்று அன்ரன் பாலசிங்கம் அவர்கள் எழுதிய போரும் சமாதானமும் புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.)

இப்படி தான் சொன்னவற்றிற்கெல்லாம் புலிகள் தலையாட்டாதது கருணாநிதிக்கு கசப்பான அனுபவங்களாகவே இருந்திருக்கும்.எனவேதான் அன்று இந்திய புலனாய்வு பிரிவான றோ அதிகாரிகளின் சூழ்ச்சியினால் புலிகளுடன் முரண்பட்டு நின்றவர்களான ரெலோ. ஈ.பி.ஆர்.எல்.எவ். ..ஈரோஸ் அகிய அமைப்புக்கள் ஈழத் தமிழர்களின் எதிர் காலத்தின் நலனையும். அதற்காக போராடுகின்ற புலிகளையும் ஆதரித்து அரவணைத்து இன்று ஓரணியில் திரண்டு நிற்கின்ற இன்றைய காகட்டத்தில் கருணாநிதிமட்டும் மீண்டும் மீண்டும் சகோதரயுத்தம் செய்தார்கள் என்று திரும்ப திரும்ப சொல்லி ஓரணியில் திரண்டு நிற்பவர்களை மீண்டும் பிரித்து வைத்து மோதவிடலாமென கனவு கண்டபடி எரிந்து கொண்டிருக்கும் ஈழத்தமிழினத்தின் மீது எண்ணெய் ஊற்றிக்கொண்டிருக்கின்றார்.

ஈழம் சகோதர யுத்தம் முதற்பாகம்
ஈழம் சகோதர யுத்தம் இரண்டாம் பாகம்.

இந்தக்கட்டுரை அனைத்து உறவுகளையும் சென்றடைய உங்கள் ஓட்டின் முலம் உதவிடுங்கள் நன்றிகள்..

ஏப்றல் 14 ற்கு முதல் புலிகள் அழிக்கப்படுவார்களா??

3:25 PM, Posted by sathiri, 6 Comments

புலிகளை எப்படியும் ஏப்றல் 14 ற்கு முதல் அழிந்துவிடுமாறு இலங்கையரசிற்கு இந்தியா உத்தரவிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன...

மிஸ்ரர் பக்சே எப்பிடியாவது எல்.டி.டி.யை நிம்மள் ஒழிச்சாத்தான் நாமள் வெற்றி பெறும்


கவலை... படாதிங்கோ... கருவாய் நிதி.... எல்.டி.டி.யை ஒளிச்சிடலாம்... அதுக்கப்புறம் நானும் நீங்களும்தான்......அது வரைக்கும் உடன் பறப்பிற்கு ...கடிதம் எலுதுங்கொ..

இன்னாத்தை ஜடிவாவும் கொடுத்து ஆயுதத்தையும் அள்ளி அள்ளி குடுத்தாலும் இவங்கள் இதுவரைக்கும் பிரபாகரன் போட்ட சட்டையைத்தானே புடிச்சிருக்கினானுகள்.
அவ்வ்வ்வ்வ்வவ்வ்வ்வ்வ்வவ்வ்வ்வ்...........................................................

பார்த்து ரசித்தீர்களா???? ஒரு ஓட்டு பிச்சை போட்டிட்டு போங்க சார்ஏப்றல் 14 ற்கு முன்னர் புலிகள் அழிக்கப்படவேண்டும்

3:18 PM, Posted by sathiri, No Comment


ஏப்றல் 14 ற்கு முன்னர் புலிகள் அழிக்கப்படவேண்டும் மிஸ்ரர் பக்சே .. அதிலைதான் நம்மவெற்றியே தங்கியிருக்குசீனாவிடம் விடுதலைப் புலிகள் கோரிக்கை

3:11 PM, Posted by sathiri, One Comment

சீனா அரசாங்கத்திடம் தமிழ் மக்களின் நிலை தொடர்பில் ஐநாவின் பாதுகாப்புசபை கூட்டத்தில் இரண்டாவது தடைவை விவாதிக்கப்படுவதை சீனா அரசாங்கம் நிறுத்தப்போவதை பரீசீலிக்குமாறு விடுதலை புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பி.நடேசன் அவர்கள் இன்று வெள்ளிக்கிழமை கேட்டுக்கொண்டுள்ளார்.சிறீலங்கா தமிழர்களின் இறையாண்மையை மறுப்பதோடு மட்டுமல்லாது இனஅழிவு நடவடிக்கையில் பலவேறு வடிவங்களில் முன்னெடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.நாங்கள் சீனா, ரஸ்சியா மற்றும் உலகின் வல்லாதிக்க நாடுகள் சிறீலங்கா அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் இனஅழிவு நடவடிக்கையை அசட்டை செய்ய வேண்டாம் எனவும் கோருவதாகவும் தெரிவித்துள்ளார்.முதலில் ரஸ்சியாh பாதுகாப்புசபையில் இதுதொடர்பில் விவாதிக்க விரும்பவில்லை எனவும் பின்னர் பாதுகாப்புசபையில் சுருக்கமாக பேசப்பட்டமையும் சுட்டிக்காட்டத்தக்கது.மருத்துவப்பொருட்கள், மனிதநேய விநியோகங்களை தடுத்தல் மற்றும் பொதுமக்கள் வாழும் வதிவிடங்களை வேண்டுமென்றே தாக்குதல் போன்றன யுத்;த குற்றச் செயல்களாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
70 மில்லியனுக்கு மேற்பட்ட தமிழ் மக்கள் தமது சொந்தங்களுக்கு ஏற்பட்டுள்ள இந்நிலைகொண்டு ஆழ்ந்த கவலை கொண்டுள்ளனர்.விடுதலைப்புலிகள் பிரதிநிதிகள் தமிழ்மக்களின் இந்நிலை தொடர்பில் சீனா அதிகாரிகளுக்க விளக்க விருப்பமுடையர்களாக உள்ளதாகவும் சீனாவிடம் ஐநாவில் தமிழ்மக்களின்நிலை தொடர்பில் விவாதிக்கவேண்டும் எனவும் கோரியுள்ளனர்.

ராஜீவ் காந்திக்கு பிரபாகரன் எழுதிய இறுதிக்கடிதம்

2:47 PM, Posted by sathiri, 4 Comments

ராஜீவ் காந்திக்கு பிரபாகரன் எழுதிய இறுதிக்கடிதம்


ஈழத்தில் புலிகள் மீதான யுத்தத்தினை இந்தியப் படைகள் தொடங்கிய பின்னர் அன்றை இந்தியப் பிரதமரான ராஜீவ்காந்திக்கு புலிகள் இயக்கத் தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் இரண்டு கடிதங்களை எழுதி அவை இரண்டிற்கும் புதுடெல்லியின் பிரதமர் அலுவலகத்திலிருந்து எவ்வித பதிலும் கிடைக்காததினால் மூன்றாவதாகவும் இறுதியாகவும் ஒரு கடிதத்தினை எழுதியிருந்தார்.அந்தக் கடிதத்தினை இங்கு இணைக்கிறேன்.


தலைமைச்செயலகம்
தமிழீழவிடுதலைப்புலிகள்
யாழ்ப்பாணம்
13.01.1988
கனம் ராஜீவ் காந்தி
இந்தியப் பிரதமர்
புதுடில்லி


கனம் பிரதம மந்திரி அவர்களே.
தமிழ் பகுதிகளில் தொடர்ந்தும் சமாதானம் சீர்குலைந்து வன்முறை தாண்டவமாடுவதனாலும் எமது மக்கள் தாங்கொணாத் துன்பத்திற்கு இலக்காகி இன்னல்படுவதனாலும் இராணுவ நடவடிக்கையை . சமாதானமும் இயல்பு நிலையும் திரும்பும் வகையில் சமரச முயற்சிகளை மேற்கொள்ளுமாறு நான் அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்.

போர்நிறுத்தம் செய்து கொள்ளப்பட்டு யுத்தம் ஆரம்பமாதற்கு முந்திய நிலைகளிற்கு இந்திய சமாதானப்படையினர் திரும்புவதே சமாதானத்திற்கும் இயல்பு நிலைக்கும் வழிகோலுமென நாம் கருதுகிறோம்.தமிழீழ மக்களும் இந்தக் கருத்தையே கொண்டிருக்கின்றனர்.சமாதான முயற்சியின் ஆரம்ப நடவடிக்கையாக தமிழீழ விடுதலைப்புலிகளிற்கு பொது மன்னிப்பு வழங்கும்படி இலங்கை அரசை கேட்டுக்கொள்ளுமாறு நான் உங்களை வேண்டிக் கொள்கிறேன்.அத்துடன் இந்திய சமாதானப்படையினரால் கைது செய்து காவலில் வைக்கப்பட்டிருக்கும் எமது இயக்க உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் விடுதலை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

விடுதலைப்புலிகளிற்கும் இந்திய அரசிற்கும் மத்தியில் புதுடில்லியில் ஏற்கனவே இணக்கம் காணப்பட்டஉடன்பாட்டின் பிரகாரம்.விடுதலைப்புலிகளை பெரும்பான்மையாகக்கொண்ட இடைக்கால நிர்வாக அரசு அமையப்பெற்றதும்
நாம் எமது ஆயுதங்களை ஒப்படைப்போமென உறுதி தருகின்றோம்.நான் உங்களிற்கு மீண்டும் மீண்டும் வலியுறுத்திக்கூறியது போல தமிழ் மக்களின் உயிரிற்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு தமிழ் மக்களின் நலன் பேணப்படுமாயின் இந்திய --இலங்கை ஒப்பந்தத்தை செயற்படுத்துவதற்கு எமது இயக்கம் ஒத்துழைக்கத்தயாராக உள்ளதுஎன்பதனையும் உங்களிற்கு தெரிவிக்க விரும்புகின்றோம்.

இந்த ஒப்பந்தம் பரிந்துரைக்கும் மாகாணசபைத்திட்டமானது தமிழ்மக்களின் அபிலாசைகளைப் பூர்த்திசெய்யவில்லை என்பதே எமது நிலைப்பாடாகும்.ஆகவே தமிழ் மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யும் அதிகாரம் கொண்டதான தமிழ்பிரதேச மானில ஆட்சியமைப்பை உருவாக்கும் எதிர்காலப்பேச்சுக்களில் விடுதலைப்புலிகளிற்கு முக்கிய பங்களிக்கப்பட வேண்டும் என்பதையும் நாம் இங்கு வலியுறுத்த விரும்புகின்றோம்.எமது யோசனைகளிற்கு முக்கியத்துவம் கொடுத்து சீரிய முறையில் பரிசீலனை செய்து தமிழீழத்தில் சமாதானம் நிலவவும் எமது மக்களின் துயரை துடைக்கவும் போர் நிறுத்தம் செய்து பேச்சுக்களை தொடங்க உடன் நடவடிக்கை எடுப்பீர்களென நான் மனதார நம்புகிறேன்.

வே.பிரபாகரன்
தலைவர்
தமிழீழ விடுதலைப்புலிகள்.மேலேயுள்ள மூன்றாவது கடிதத்திற்கும் ராஜீவ் காத்தியிடமிருந்து எவ்வித பதிலும் புலிகளிற்கு அனுப்பப்படவில்லை. விடுதலைப்புலிகள் அமைப்பு இந்தியாவிடம் ஒவ்வொருதடைவையும் தங்கள் நேசக்கரத்தினை நீட்டியபொழுதெல்லாம் புலிகள் பலமிழந்து பயத்திலேயே தங்களை நோக்கி நேச்சக்கரத்தினை நீட்டுவதாக இந்தியா தப்புக்கணக்கு போடிருந்தது. அதுதான் இன்றுவரை தொடர்கின்றது.அதே நேரம் இந்தியப் படை தளபதியான ஜெனரல் திபேந்தர் சிங் என்பவர் தான் எழுதிய புத்தகத்தில்.. ராஜீவ் காந்தியிடம்.. புலிகள் பலமிழந்து பேச்சுவார்தைக்கு அழைப்பு விடுக்கவில்லையெனவும். எனவே அவர்களது கோரிக்கையை பரிசீலிக்குமாறு தான் அனுப்பிய செய்தி ஊதாசீனப்படுத்தப் பட்டதாகவும்.அதே நேரம்.இலங்கையிலிருந்த இந்திய இராணுவத் தரப்பு தளகர்த்தா சுத்தர்ஜீ ஈழத்தின் கள நிலைமைகள் பற்றியும் புலிகள் பலம் பற்றியும் ராஜீவிற்கு எடுத்து சொன்னவைகள்கூட பலனற்று போய்விட்டது என்று எழுதியுள்ளார்.

ராஜீவ்காந்திக்கு பிரபாகரன் எழுதிய முதலாவது கடிதம்

ராஜீவ்காந்திக்கு பிரபாகரன் எழுதிய இரண்டாவது கடிதம்

கர்ப்பிணிப் பெண்

9:44 AM, Posted by sathiri, 6 Commentsஇன்று (17/03/2009)வன்னி பாதுகாப்பு வலயத்தில் இராணுவத்தினர் நடத்தியுள்ள அகோர எறிகணை ஒரு ஓலை வீட்டில் வீழ்ந்து வெடித்ததில், அங்கு உறங்கிக் கொண்டிருந்த நிறைமாத கற்பினி பெண்ணின் வயிறு பிளவுற்று சிசுவும் தாயும் துடிதுடித்து இறந்துள்ளனர்.
நன்றி அதிர்வு இணையத்தளம்.

என்ன கொடுமை இது..........

12:05 PM, Posted by sathiri, No Comment

வன்னி தேராவில் ஆட்லெறி தளத்தினை தகர்த்த கரும்புலிகள்

8:55 AM, Posted by sathiri, 2 Comments

கடந்த 10 ந்திகதி வன்னி விசுவமடு தேராவில் பகுதியில் அமைந்திருந்த சிறீ லங்கா இராணுவத்தின் எறிகணை(ஆட்லெறி)தளத்தில் இருந்த 6எறிகணை செலுத்திகளையும் ஆயிரக்கணக்கான எறிகணைகள் மற்றும் வெடிபொருட்களையும் அழித்த கரும்புலிகள்


ஈழத்தமிழருக்கு உதவிட இங்கிலாந்திலிருந்து கப்பல்

11:16 AM, Posted by sathiri, 7 Comments

தினம் தினம் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கும் ஈழத்தமிழினத்தினை சர்வதேசமும் கைவிட்டுள்ள நிலையில் வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் ஒன்று சேர்ந்து ஒரு கப்பலில் ஒரு மருத்தவர்கள் அடங்கிய குழு ஒன்றுடன் அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் . உலர் உணவுப்பொருட்கள்.மற்றும் உடைகள் என்பவற்றினை சேகரித்து ஈழம் நோக்கி புறப்படதயாராகி வருகின்றனர்.

இந்த நடவடிக்கைக்கு ஒப்பரேஷன் "வணங்கா மண்" என பெயரிடப்பட்டுள்ளது. சட்டச் சிக்கல்கள், கடல் வழிப்பயண அனுமதி, பயணிப்பவர்கள், மாலுமிகள் மற்றும் சர்வதேச அங்கிகாரத்துடனான பாதுகாப்பு என்பன பூர்த்தியாகியுள்ள நிலையில் இக்கப்பலில் கொண்டு செல்ல உலர் உணவுப் பொருட்களை ஏற்பாட்டாளர்கள் புலம் பெயர் மக்களிடம் கோரி நிற்கின்றனர்.
மக்களிடம் என்னென்ன பொருட்களை எற்பாட்டாளர்கள் எதிர் பார்க்கின்றார்கள் என்கிற விபரம்.இலண்டனில் வெளியிடப்பட்டுள்ளது.

விபரங்கள் கிடைக்காதவர்கள் வெண்புறா அலவலகத்துடன் தொடர்பு கொண்டு விபரங்களை பெற்றுக் கொள்ளலாம். சேகரிக்கப் படும் பொருட்களின் விபரங்கள் பற்றிய பட்டியல் எனக்கு கிடைத்ததும் இங்கும் இணைக்கிறேன். கப்பல் இலங்கையை நோக்கி பறப்படும் என்பது தீர்மானமாகி விட்டது.. ஆனால் இலங்கையரசு இலங்கை கடல் எல்லைக்குள் அனுமதிக்குமா?? இல்லையா?? அல்லது தாக்குமா??என்பதனை காலமும் சந்தர்ப்ப சூழ்நிலைகளும் முடிவு செய்யட்டும்...நன்றி.

யேர்மனியில் சைவம் - கத்தோலிக்க கிறிஸ்தவம் இணைந்த சிறப்பு வழிபாடு

12:06 AM, Posted by sathiri, No Comment

யேர்மனியில் சைவம் - கத்தோலிக்க கிறிஸ்தவம் இணைந்த சிறப்பு வழிபாடு

ஈழத் தமிழரின் பேரவலம் கண்டு தம்முயிர்களை தற்கொடையாக்கி தீக்குளித்த வீரத் தமிழர்களுக்கான, சைவம் - கத்தோலிக்க கிறிஸ்தவம் இணைந்த சிறப்பு வழிபாடு யேர்மனியில் நடைபெற்றது.

யேர்மனி றைனெ வெற்றிங்கன் நகரில் வாழும் சைவ - கத்தோலிக்க தமிழ் மக்கள் இணைந்து நேற்று முன்நாள் ஞாயிற்றுக்கிழமை (08.03.2009) காலை 10:00 மணியளவில் இந்த சிறப்பு வழிபாட்டை நடத்தினர்.

முதலில் இறைனீச்சுரம் சிவன் கோவிலில் சைவ சமய வழிபாட்டு முறைகளுடன் தமிழ்மொழி மூலம் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதனை பூசகர் சபாநாத சர்மா சிறப்பாக நடத்தி வைத்து உரையாற்றினார்.

இந்த இறைனீச்சுரம் சிவன் கோவில் தாயகத்தில் வயல் வெளிகளின் நடுவே அமைதியான சூழலில் அமைந்துள்ள சைவக் கோயில்களை நினைவுபடுத்துவதாக இருந்தது.

இக்கோயிலில் தமிழ்மொழி மூலம் திருமண நிகழ்வுகள், சடங்குகள், வழிபாடுகள் நடைபெறுவதுடன் யார் வேண்டுமானாலும் வழிபாட்டை நடத்தலாம் என்றும் கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, அதே கட்டடத்தின் மேல்மாடியில் அமைந்துள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் அருட்திரு இமானுவேல் அடிகளாருடன், தமிழகத்தைச் சேர்ந்த தற்போது பெல்ஜியத்தில் பணிபுரியும் அருட்திரு ஜீவா லூர்துவும் இணைந்து இலங்கைத் தீவில் சமாதானம் வேண்டியும், தீயில் சங்கமித்தோருக்கான ஆன்ம இளைப்பாற்றிற்காகவும் பிரார்த்தனை செய்தனர்.

ஏறத்தாழ 100 பேர் வரை கலந்து கொண்ட இந்த வழிபாட்டில் உரையாற்றிய இமானுவேல் அடிகளார் இறை வழிபாட்டுடன் நின்று விடாமல் விடுதலைப் பயணத்தின் நீண்ட பாதையில் தமிழ் மக்கள் தொடர்ந்து தமது பங்கை ஆற்ற வேண்டும் என்றும் அவர்
கேட்டுக்கொண்டார்.

"போதும் சகோதரரே உங்கள் தற்கொடை. திருப்பித்தர எம்மிடம் ஒன்றுமில்லை எம் பிரார்த்தனையைத்தவிர" என்பதாக அமைந்திருந்தது இந்நிகழ்வு.

காங்கிரசு கூட்டணிக்கு ஓட்டு போடாதீர்..பிரச்சார சி.டி.பாருங்கள்

10:12 AM, Posted by sathiri, 9 Comments

ராஜீவ் காந்திக்கு பிரபாகரன் எழுதிய இரண்டாவது கடிதம்.

2:11 PM, Posted by sathiri, 5 Comments

ராஜீவ் காந்திக்கு பிரபாகரன் எழுதிய இரண்டாவது கடிதம்.

இந்திய இராணுவத்திற்கும் புலிகளிற்கும் யுத்தம் தொடங்கியதும் பிரபாகரன் அவர்கள் அன்றைய இந்தியப்பிரதமர் ராஜீவ்காந்திக்கு 12.10.1987 அன்று முதலாவது கடிதத்தினைஎழுதியிருந்தார்.அதற்கு ராஜீவ் காந்தியிடமிருந்து எவ்வித பதிலும் வராத காரணத்தினால் மீண்டும் இரண்டு நாட்களின் பின்னர் நீண்டதொரு விளக்கக் கடிதத்தினை பிரபாகரன் அவர்கள் மீண்டும் ராஜீவ் காந்திக்கு எழுதியிருந்தார். அக்கடிதம் கீழே தருகிறேன்.


தலைமைச்செயலகம்
தமிழீழ விடுதலைப்புலிகள்
யாழ்ப்பாணம்.
14.10.1987கனம் ராஜீவ் காந்தி அவர்கள்
இந்தியப் பிரதமர்
புதுடில்லி

கனம் பிரதம மந்திரி அவர்களே
தமிழ்ப்பகுதிகளில் சாவும் அழிவுமாக நிலைமை படு மோசமடைந்து வருவதனால் நான் மீண்டும் உங்களுடன் தொடர்பு கொள்ள விரும்புகிறேன்.இந்திய அமைதி காக்கும் படையினர் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகளினால் நெருக்கடி நிமைமை தீவிரமடைந்து வருவதுடன் யாழ்ப்பாணக்குடாநாட்டில் பொதுசன உயிரிழப்பும் பொருந்தொகையில் அதிகரித்துள்ளது.கண்மூடித்தனமான பீரங்கித்தாக்குதல்கள்.மோட்டார் எறிகணை வீச்சு. விமானக்குண்டுவீச்சு காரணமாக இதுவரை 150 அப்பாவிப் பெர்துமக்கள் அனியாயமாகக் கொல்லப்பட்டதுடன் 500 பேர்வரை காயமடைந்துள்ளனர்.அத்துடன் விடுதலைப்புலிகள் இயக்க போராளிகள் பலரும் கொல்லப்பட்டுள்ளனர்.போர்க்கைதிகளாக 18 அமைதிப்படைச் சிப்பாய்கள் எம்மது பாதுகாப்பில் உள்ளனர்.

போர் மிகவும் உக்கிரமடைந்து தீவிரமடைவதால் பல்லாயிரக்கணக்கான அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர்.காவரையற்ற ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்து வருவதால்அத்தியாவசிய உணவுப்பொருட்களிற்கு பெரும் தட்டுப்பாடு எழுந்துள்ளது.இதனால் எமது மக்கள் தாங்கொணாத்துன்பத்திற்கு இலக்காகியுள்ளனர். எமது மக்களின் பாதுகாப்பைப் பேணி சமாதானத்தையும் இயல்பு நிலையையும் நிலைநாட்டுவதற்காக எமது தாயகம் வந்த இந்திய அமைதிப்படையினர் ஒரு மூழு அளவிலான யுத்தத்தினை ஆரம்பித்து எமது மக்கள் மீது மனிதாபிமானமற்ற கொடுமைகளை புரிவது மிகவும் வேதனைக்குரிய துன்பியல் நிகழ்வாகும்.

11 ம் நாள் காலை இந்திய அதிரடிப்படையினர் யாழ்ப்பாண நகருக்கு சமீபமாகவுள்ள பிரம்படியில் பல்கலைக்கழக மாணவர்கள் .பெண்கள் குழந்தைகளென 40 அப்பாவிப் பொதுமக்களை படுகொலை செய்துள்ளனர்.மக்களிற்கு சேவை செய்யும் பொது நிறுவனங்கள் மீதும் இந்திய அமைதிப்படைகள் தாக்குதல் நடத்தியமை எமக்கு அதிர்ச்சியை தந்திருக்கின்றது.ஈழமுரசு . முரசொலி ஆகிய இரு தினசரிதமிழ்ப் பத்திரிகை காரியாலயத்தினுள் புகுந்துஅமைதிப்படை சிப்பாய்கள் வெடிகுண்டுகளை வைத்து அச்சு இயந்திரங்களை தகர்த்துள்ளனர்.12 நாளன்று வடமாகாணத்தின் ஒரேயொரு வைத்திய நிறுவனமான யாழ்ப்பாண மருத்துவ மனைமீது கோட்டையிலுள்ள இந்தியப்படையினர் பீரங்கித்தாக்குதலை நடத்திபெரும் சேதம் விழைவித்துள்ளனர். நேற்று விமானக்குண்டு வீச்சு காரணமாக யாழ்ப்பாண பல்கலைக்கழக கட்டிடங்கள் பலத்த சேதத்திற்கு உள்ளாகி இருக்கின்றன.

இந்தப் போரில் கனரக ஆயுதங்களையோ விமானங்களையோ பாவிக்கவில்லையென இந்திய அரசாங்கம் பரப்புரை செய்து வருகின்றது.ஆனால்.அதேவேளை இலங்கை இந்திய விமானங்களும் உலங்குவானூர்திகளும் குடியிருப்புப் பகுதிமீது கண்மூடித்தனமான தாக்குதலை நடாத்தி வருகின்றது. இந்தியாவின் இந்த நடவடிக்கையானது எமது மக்களிற்கு அதிர்ச்சியையும் ஆழ்ந்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்திய இலங்கை ஒப்பந்த விதிகளின் பிரகாரம் அமைதிப்படையினர் அமைதியை பேணவேண்டும்.பொது மக்களிற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். இதுவே அவர்களிற்கு வழங்கப்பட்ட ஆணையாகும். மக்கள் ஆணைபெற்ற ஒரு அரசியல் இயக்கத்திற்கு எதிராக ஒரு முழுஅளவிலான யுத்தத்தை தொடுப்பதற்கு அமைதிப்படைக்கு சட்டரீதியான அதிகாரம் எதுவும் இல்லை.அமைதிப்படையின் அட்டுளியங்கள் பற்றி நாம் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை விசாரித்து அறிவதற்கும்.உண்மையை உலகிற்கு எடுத்து சொல்வதற்கும் வழிசெய்யும் வகையில் சர்வதேசப்பத்திரிகையாளர்கள். மனிதஉரிமை நிறுவனப்பிரதிநிதிகள். இந்திய எதிர்க்கட்சி பிரமுகர்கள் ஆகியோரைக்கொண்ட ஒரு பார்வையாளர் குழு யாழ்ப்பாணம் வர அனுமதிக்குமாறு உங்களை வேண்டிக்கொள்கிறேன்.

வடக்கு கிழக்கு மாகாணத்தில் ஒரு இடைக்கால அரசை அமைக்குமாறு இந்திய சிறீலங்கா அரசுகள் எமது இயக்கத்தை கேட்டுக்கொண்டன என்பதை அறிவீர்கள். தமிழ் மானிலத்தில் விடுதலைப்புலிகள் இயக்கமே மக்கள் ஆதரவு பெற்ற முதன்மையான அரசியல் அமைப்பு என்பதை இரு அரசுகளும் அங்கீகாரம் வழங்கியமைக்கு இது ஒப்பாகும்.இடைக்கால அரசு அமைக்கப்பெற்றதும் எம்மிடம் எஞ்சியுள்ள ஆயுதங்களை கையளித்து விடுவதாக நாம் வாக்குறுதி அளித்திருந்தோம். ஆனால் கிழக்கு மாகாணத்தில் தலைதூக்கிய வன்முறைச்சம்பவங்களை சாக்காகக் காட்டி இந்திய அரசாங்கம் எமமீது ஒரு யுத்தத்தை கட்டவிழ்த்துவிட தீர்மானித்துள்ளது.இது மிகவும் துரதிஸ்டவசமானதாகும். கிழக்கு மாகாணத்தில் தலைதூக்கிய வன்முறைச்சம்பவங்களிற்கும் எமக்கும் எவ்வித தொடர்புமில்லை. இதனை நாம் திட்டமிட்டு செயற்படுத்தியதாகக் கூறுவதும் தவறானதாகும்.எமது இயக்கத்தின் திருகொணமலைத் தளபதி புலேந்திரன். முன்னாள் மட்டக்களப்பு தளபதி குமரப்பா ஆகியோரின் மரணத்தின் விளைவாகவே தன்னிச்சையாக இவ்வன்முறைசம்பவங்கள் தலைதூக்கின.

எமது தளபதிகளின் மரணத்தால் பாரதூரமான விளைவுகள் ஏற்படலாமென நாம் ஏற்கனவே இந்தியத் தூதுவர் திரு.டிக்சித்திடம் கூறியிருந்தோம்.இதன் விளைவுகள் பற்றி திரு.டிக்சித்தும் ஜனாதிபதி ஜெயவர்த்தனாவிற்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். எமது மக்களிற்கு தமது அரசியல் தலைவிதியை தாமே நிர்ணயித்துக்கொள்ளும் சனநாயக உரிமை இருக்கிறது. இந்த உரிமையை மீறும் வகையில் இந்தியா போன்ற ஒரு சனநாயக நாடு தனது சொந்த அபிலாசைகளை ஆயுத முனையில் எமது மக்கள் மீது திணித்துவிட முயல்வது நியாயம் ஆகாது.இந்த ஒப்பந்தம் பற்றி எமக்கு தனித்ததொரு நிலைப்பாடு இருந்தபொழுதும். எமது மக்களின் நலன் பேணப்படுமானால் அதனை அமுல்படுத்துவதில் இந்தியாவிற்கு ஒத்துளைப்பு வழங்க நாம் முன்வந்தோம்.அப்படியிரந்தும் தமிழ்மக்களின் உண்மையான பிரதிநிதிகளான எம்மை பூண்டோடு அழித்து விடுவதற்கு நீங்கள் மேற்கொண்டுள்ள ?ராணுவ நடவடிக்கை நியாயமற்றது. ஆகவே இந்த இராணுவ நடவடிக்கையை நிறுத்தி சமாதானத்தையும் இயல்பு நிலைமையையும். இன ஐக்கியத்தையும் உருவாக்க வழிகோலும் வகையில் விடுதலைப்புலிகள் இயக்த்துடன் பேச்சு வார்ததைகளை நடத்துமாறு உங்களை பணிவன்புடன் வேண்டிக் கொள்கிறேன்.

வே.பிரபாகரன்
தலைவர்
தமிழீழ விடுதலைப்புலிகள்.

அன்ரன் பாலசிங்கம் அவர்கள் எழுதிய போரும் சமாதானமும் புத்தகத்திலிருந்து. ,இறுதியாகவும் மூன்றாவதாகவும் ஒரு கடிதத்தினையும் பிரபாகரன் அவர்கள் ராஜீவ் காந்திக்கு எழுதியிருந்தார் அதனை பின்னர் பதிவிடுகிறேன் நன்றி வணக்கம்.

இலங்கை கிறிக்கெற் அணியின் புதிய பயிற்சியாளர்.

2:20 PM, Posted by sathiri, 2 Comments
இலங்கையின் துடுப்பாட்ட அணியின் பயிற்சியாளரும் மற்றும் துடுப்பாட்ட அணியினரும் இனிவரும் காலங்களில் இதுபோன்ற தற்காப்பு மற்றும் உரு மறைப்பு உடைகளை சீருடையாக அணிவது நல்லது. ஏதோ நம்மாலான ஆலோசனை..கேக்கவா போறாங்கள்.

ஆனந்த விகடன் விற்பனையாளர் கைது

10:46 PM, Posted by sathiri, No Comment

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் இயங்கும் பிரபல புத்தக விற்பனை நிலையமான 'பூபாலசிங்கம்' புத்தகசாலை உரிமையாளர் சிறீதரசிங் நேற்று மாலை பயங்கரவாத தடுப்பு காவல்துறையால் கொழும்பில் கைது செய்யப்பட்டு கல்கிசை காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் கொழும்பில் நடத்திய வான் தாக்குதல் தொடர்பான கட்டுரையும் அது தொடர்பான படங்களும் பிரசுரிக்கப்பட்டிருந்த 'ஆனந்த விகடன்' வார இதழை விற்பனை செய்தமை தொடர்பாகவே சிறீதரசிங் கைது செய்யப்பட்டதாக உறவினர்கள் பிரதியமைச்சர் இராதாகிருஸ்ணனிடம் முறையிட்டுள்ளனர்.

'ஆனந்த விகடன்' வார இதழை யாழ்ப்பாணத்தில் உள்ள 'பூபாலசிங்கம்' புத்தகசாலைக்கும் மற்றும் விற்பனை நிலையங்களுக்கும் அனுப்புவதற்கான பொதியை இரத்மலானை வானூர்தி நிலையத்திற்கு அனுப்பியபோது அதனை சோதனையிட்ட காவல்துறையினர் குறித்த விடயங்கள் தொடர்பான கட்டுரைகள் மற்றும் படங்கள் இருப்பதை கண்டு பணியாளர்களிடம் விசாரணை நடத்தினர்.

அதனை அடுத்து, நேற்று வியாழக்கிழமை மாலை இறக்குமதியாளரான சிறீதரசிங்கின் வெள்ளவத்தை வீட்டுக்கு சென்ற பயங்கரவாத தடுப்பு காவல்துறையினர் அவரை கைது செய்து கல்கிசை காவல் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இவர் கைது செய்யப்பட்டமை தொடர்பாக உறவினர்கள் பிரதி அமைச்சர் இராகிருஸ்ணனிடம் முறையிட்டுள்ளனர்.

'ஆனந்த விகடன்' வார இதழை 'பூபாலசிங்கம்' புத்தகசாலை கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் இருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

1981 ஆம் ஆண்டு ஆவணி மாதம் யாழ். நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள், யாழ். பொது நூல் நிலையம் ஆகியவை சிங்கள காடையர்களாலும் படையினராலும் திட்டமிடப்பட்டு தீயிட்டு எரிக்கப்பட்டபோது யாழ். நகரின் மத்தியில் இருந்த 'பூபாலசிங்கம்' புத்தகசாலையும் பெருந்தொகையான நூல்களுடன் தீயிட்டு எரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நன்றி புதினம்.

சகோதர யுத்தம் பாகம் இரண்டு

1:34 PM, Posted by sathiri, 13 Comments

சகோதர யுத்தம் பாகம் இரண்டு

ரெலோ இயக்கம் புலிகளால் தடை செய்யப்பட்டதும் ரெலோ அமைப்பிலிருந்த பலர் வெளிநாடுகளிற்கும் இந்தியாவிற்கும் தப்பிச்சென்றிருந்தனர். ஈழத்தில் ரெலோ அமைப்பு இல்லாதொழிக்கப்பட்டது இந்திய உளவு அமைப்பான றோ அதிகாரிகளிற்கு பெரும் ஏமாற்றத்தையும் ஆத்திரத்தையும் கொடுத்திருந்தது. அவர்கள் இந்தியாவில் மீதமிருந்த ரெலோ உறுப்பினர்களை மீண்டும் ஒன்று திரட்டி நவீன ஆயுதங்களுடன் விசேட பயிற்சிகளும் கொடுத்து புலிகளிற்கெதிராக இன்னொரு நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான ஆயத்தங்களை செய்தனர்.அவர்களின் அடுத்த முக்கிய இலக்குகளாக அன்றைய புலிகளின் தளபதிகளே குறிவைக்கப்பட்டிருந்தனர்.மிக முக்கியமாக யாழ் மாவட்டத் தளபதி கிட்டு குறிவைக்கப்பட்டார்.

அதற்கு முன்னேற்பாடாக ரெலோவின் விசேட பயிற்சி பெற்ற சிலர் கடல் வழியாக ஈழத்திற்கு அனுப்பிவைக்கட்டனர். அவர்கள் திட்டப்படி புலிகளின்முக்கிய தளபதிகளின் நடமாட்டங்கள் மற்றும் புலிகளின் முகாம்கள் பற்றிய விபரங்களை திரட்டி வைத்திருப்பார்கள் சரியான சந்தர்ப்பம் வந்ததும் தமிழ்நாட்டில் தயாராக இருந்த தங்கள் சகாக்களிற்கு தகவல் அனுப்பியதும் அவர்கள் மன்னார் வழியாக தமிழீழத்தில் வந்திறங்கி சிறு குழுக்களாக பிரிந்து சென்று ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் உதவியுடன் புலிகளின் முக்கிய தளபதிகள் மற்றும் முகாம்கள் மீது தாக்குதல் நடாத்தி அழிப்பது.இதுவே திட்டம். இப்படி உளவு பார்ப்பதற்காக ஈழத்திற்கு வந்திருந்த ரெலோ உறுப்பினர்கள் தங்கியிருக்கவும் மற்றும் வேண்டிய அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கச்சொல்லி ஈ.பி.ஆர்.எல்.எவ்.அமைப்பிற்கு றோ அதிகாரிகள் கட்டளையிட்டிருந்தனர்.அப்படி ஈழத்தில் புலிகளை உளவு பார்க்க வந்தவர்களில் ஒருவர் யாழ்..நவாலியிலும் மற்றொருவர் அசு்சுவேலியிலும் புலிகளிடம் பிடிபட்டனர்.அவர்களிடம் புலிகள் மேற்கொண்ட விசாரணையிலேயே மேற்சொன்ன விபரங்கள் யாவும் புலிகளிற்கு தெரியவந்தது.

அதே நேரம் அவர்கள் ஈ.பி.ஆர்.எல்.எவ். முகாம்களிலேயே தந்கியிருந்த விடயமும் தெரியவந்தது.முதலில் நவாலியில் பிடிபட்டவர் சொன்ன தகவல்களை வைத்து புலிகள் மன்னார் மற்றும் மட்டக்கிளப்பிலும் பலரை கைது செய்தனர்.அப்பொழுதுதான் ரெலோ அமைப்பில் ஆயுதம் தாங்கிய 60 பேர் கொண்ட குழுவொன்று மன்னாரில் வந்திறங்கப்போகின்ற முழு விபரங்களும் புலிகளிற்கு கிடைத்தது. அவர்கள் கொடுத்திருந்த தகவலினடிப்படையில் புலிகளின் அன்றைய மன்னார் மாவட்டத்தின் தளபதி ராதா மன்னார் கடற்கரை பகுதிகளில் காவலை தீவிரப்படுத்தியிருந்தார்.பிடிபட்ட ரெலோ உறுப்பினர்கள் கொடுத்திருந்த தகவல்கள் பொய்க்கவில்லை அவர்கள் சொன்னது போலவே ஒரு பின்னிரவு வேளையில் 3 மீன்பிடி றோலர்களில் வந்த ரெலோ குழுவின் மீது புலிகள் கடற்கரையிலிருந்து தாக்குதலை நடத்தினர். முதலாவதாய் வந்த றோலர் ஆர்.பி.ஜி தாக்குதலில் முழுவதுமாய் அழிந்துபோக பின்னால் வந்து கொண்டிருந்த றோலர்களிலிருந்து ரெலோ உறுப்பினர்கள் தாக்குதல் நடத்தியபடியே மீண்டும் கடலிற்குள் சென்று மறைந்து விட்டார்கள்.

அவர்கள் தமிழ்நாட்டிற்கே போயிருப்பார்கள்.அதற்குப் பின்னர் ரொலே அமைப்பு புலிகள் மீதான நேரடித்தாக்குதல் எதனையும் நடத்த முயற்சிக்கவில்லை..இனி அப்படியானதொரு முயற்சியை மேற்கொள்வதில் பயனில்லையென்று றோ அதிகாரிகளிற்கும் புரிந்து போயிருக்கும்.மீதமாய் ஈழத்திலிருந்த பெரிய அமைப்புக்கள் புளொட்டும். ஈ.பி.ஆர்.எல்.எவ்.வும்தான் புளொட் அமைப்பு நிறைய உறுப்பினர்களை மட்டுமே சேர்த்து வைத்திருந்தது. அவர்களிடம் ஆயுதங்கள் எதுவும் இல்லை. உதாரணமாய் சொல்லப்போனால் அவர்களது இராணுவ அமைப்பின் முகாமில் 50 பேர் இருந்தால் அவர்களிடம் இரண்டு கைக்குண்டுகளே அல்லது ஒரு 303 ரக துப்பாக்கியோதான் இருக்கும். அது மட்டுமல்ல அவர்களிற்குள்ளேயே குழுசண்டைகளும் தலைமைக்கெதிரான போராட்டங்களும் வலுத்திருந்தது.அதன் உறுப்பினர்களிற்கு ஒரு நேர உணவே பெரிய பிரச்சனையாய் இருந்த காலகட்டம் அது...எனவே அடுத்ததாய் புலிகளிற்கெதிராக கிழப்பி விடுவதற்கு ஈழத்தில் ஓரளவு ஆயுதபலத்துடனும் அதிகளவு உறுப்பினர்களையும் கொண்டிருந்த அமைப்பு ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்புத்தான்.ஆனால் அவர்கள் மார்க்சிய கொள்கைகளை தங்களது இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளாக கொண்டிருந்ததால்.

றோ அதிகாரிகள் ஈ.பி.ஆர்.எல்.எவ்.அமைப்பின் மீது பெரிய பற்றுதலைக் கொண்டிருக்கவில்லை.ஆனாலும் அப்பொழுது றோ அதிகாரிகளிற்கு வேறு வழியிருக்கவில்லை.அதே நேரம் ரெலோவின் உளவு அமைப்பினர் புலிகளால் கைது செய்யப்பட்டிருந்ததும் அவர்கள் தங்கள் முகாமிலேயே தங்கியிருந்த விபரங்கள் தாக்குதல் நடத்துவதற்கு வேண்டிய உதவிகள் அனைத்தையும் ஒழுங்கு படுத்திக் கொடுத்தது போன்ற விபரங்கள் புலிகளிற்கு தெரிந்திருக்கும் எனவே புலி தங்கள்மீதும் பாயலாம் எனவே அதற்கு முன்னரே தாங்கள் புலிகளின் மீது ஒரு தாக்குதலை நடத்தவேண்டும் என்கிற தயாரிப்பில் ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பினர் தீவிரமாய் இருந்தனர்.

தவளையும் தன் வாயால் கெடும் என்றொரு பழமொழி உண்டு (சில இடங்களில் நுணலும் என்பார்கள்)அந்தப் பழமொழி நூறு வீதம் ஈ.பி அமைப்பினர்களிற்கு பொருந்தும். ஒரு கெரில்லா இயக்கத்திற்கு வேண்டிய முக்கியமான இரகசியம் காத்தல் என்கிற பழக்கம் கட்டுப்பாடு அவர்களிடம் அறவே கிடையாது. வெறும் வாய்சவாடல் அடிப்பதில் கெட்டிக்காரர்கள்.வாயாலேயே கரைநகர் கடற்படை முகாமையும் . கிளி நொச்சி இராணுவ முகாமையும் தகர்த்தவர்கள்..அதே பேலவே புலிகளையும் இன்னும் கொஞ்சக்காலங்களில் அழித்து விடுவோம் புலிகளிடம் போய் சொல்லுங்கள் என்று பொது மக்களிடம் சொல்லித் திரிந்தது மட்டுமல்ல ஆர்வக் கோளாறில் சில இடங்களில் பாசிசப் புலிகளின் அழிவு நெருங்கி விட்டது என்று சுவரொட்டிகளும் ஒட்டியிருந்தனர்.இந்தக் காலகட்டத்தில் ஒரு சுவாரசியமான சம்பவமும் நடந்தது யாழ்..நவாலி கிராமத்தில் புலிகளின் உறுப்பினர் ஒருவர் மீது தாக்குதல் நடாத்தத் திட்டமிட்டு ஈ.பி.ஆர்.எல்.எவ். உறுப்பினர்கள் இருவர் மறைந்திருந்தனர். புலி உறுப்பினரும் சைக்கிளில் அந்தவழியால் வரவேவே மறைந்திருந்தவர்கள் கைக்குண்டினை புலி உறுப்பினரை நோக்கி எறிந்திருக்கிறார்கள் குண்டு வெடிக்கவில்லை. இரவு நேரமாகையால் புலி உறுப்பினரும் கைக்குண்டு வந்து விழுந்ததை கவனிக்காமல் தன்பாட்டில் போய் விட்டார். குண்டினை எறிந்தவர்களினுள் ஒருவர் குண்டு ஏன்வெடிக்கவில்லையென்று போய் பார்த்தபொழுதுதான் அந்தக் குண்டு வெடித்தது படு காயங்களிற்குள்ளானவர் பின்னர் இறந்து போனார்.

இப்படி நிறைய இவர்களைப்பற்றி எழுதலாம். அனால் விடயத்திற்கு வருவோம்.இவர்கள் பாசிசப்புலிகளை அழிப்போம் என்று சொல்லித்திரிந்து கொண்டிருக்கும் பொழுதே அவர்களின் யாழ்மாவட்டத்தின் இராணுவ பொறுப்பிலிருந்த டக்லஸ்தேவானந்தாவிற்கும் (இன்றைய ஈ.பி.டி.பி. தலைவர்) ஈ.பி. தலைமைக்கும் பிரச்சனை உருவாகி உச்சத்தை அடைந்திருந்தது. அதே நேரம் அந்த அமைப்பின் அரசியல் பிரிவு பொறுப்பாளராயிருந்த டேவிற்சனும்(ஈழமணி) ஈ.பி.ஆர்.எல்.எவ்.தலைமையுடன் முரண்பட்டு வெளியேறியிருந்தார். இதனால் அவர்களின் புலிகள் மீதான தாக்குதலும் வாயளவிலேயே இருந்து கொண்டிருந்த நிலையில் 86ம் ஆண்டு மார்கழி மாதம் புலிகள் வடக்கு கிழக்கெங்கும் ஒரு நள்ளிரவு ஈ.பி.ஆர்.எல்.எவ். முகாம்கள் மீது தாக்குதலை தொடுத்து காலை விடிவதற்குள்ளாகவே அனைத்து முகாம்களையும் தங்கள் கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்தனர். இவை இரண்டும்தான் புலிகளின் மீது சுமத்தப்படுகின்ற சகோதர யுத்தம் என்கிற சொலாடல். யுத்தகளத்தில் நிற்கும் வீரன் அது யாராகஇருந்தாலும். அவனிற்கு தெரிந்தது இரண்டேயிரண்டுதான். அதாவது கொல் அல்லது கொல்லப்படுவாய். எனவே செய் அல்லது செத்துமடி.புலிகளிற்கும் அன்று அதே நிலைமைதான் கொல்லாவிடில் கொல்லப்பட்டிருப்பார்கள்.

ஏனெனில் அதற்கு வேண்டிய அத்தனை முயற்சிகளையும் இந்திய அதிகாரம் இலங்கையரசுடன் சேர்ந்து செய்தது. இன்னமும் செய்து கொண்டுதானிருக்கின்றது. ஆனாலும் தமிழர் உரிமைப்போர் செத்து மடியாது செய்துகொண்டுதானிருக்கும்........

நான் இரண்டு பாகமாக இதனை எழுதி முடிக்கலாமென திட்டமிட்டிருந்தேன் ஆனாலும் அது இன்னம் கொஞ்சம் நீண்டுவிட்டது. எனவே அடுத்த பாகத்துடன் நிறைவு செய்கிறேன்....

முதற் பாகத்தினை படிக்க இங்கு அழுத்தவும்