Navigation


RSS : Articles / Comments


நாறிப்போன நாட்டுப்பற்றாளர் பட்டம்..

3:40 PM, Posted by sathiri, 6 Comments




நேற்று தமிழ் இணைய ஊடகங்களான புதினம்..பதிவு..சங்கதி.. ஆகியவற்றில் ஒரு செய்தி.. யேர்மனி சோலிங்கன் நகரில் புற்று நோயால் இறந்துபோன கந்தையா உதயகுமார் என்பவரிற்கு தமிழீழ விடுதலைப்புலிகளினால் நாட்டுப்பற்றாளர் பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டிருக்கின்றார்...என்கிற செய்தியுடன்.. இறந்து போனவரின் உடலிற்கு புலிக்கொடிபோர்த்தியபடங்களுடன்..இறந்து போனவரின் மனைவிகதறியழுது கொண்டிருக்கும் பொழுது அவரது கைகளில் புலிகளின் இலச்சினை பதித்த நாட்டுப்பற்றாளர் பட்டப் பத்திரத்தை நீட்டிய படமொன்றும் வெளியிடப்பட்டுள்ளது....இங்கு இறந்து போனவர் நாட்டுப்பற்றாளரா???அவர் நாட்டிற்காக உழைத்தாரா அல்லது அவரிற்கு அந்தப்பட்டம் ஏன் கொடுக்கப்பட்டது என்கிறதல்லஇங்கு பிரச்சனை..

இதுவரை காலமும் நாட்டுப்பற்றாளர்களை கெளரவித்து தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களால் அறிவிக்கப்பட்டு அதன்பின்னர் பிரபாகரன் அவர்களின் கையெழுத்துடனான பத்திரமொன்று நாட்டுப்பற்றாளரின் உறவினர்களிடம் கையளிக்கப்படுவதே மரபாக இருந்து வந்தது...எனவே புலிகள் இயக்கம் ஈழத்தில் செயலிழந்துபோய் அதன் தலைவர் பிரபாகரனும் இல்லையென்கிற நிலைமையில் இந்த நாட்டுப்பற்றாளர் அறிவிப்பை யார் செய்தது..அதேநேரம் அந்தப் பத்திரம் யாருடைய கையொப்பமும் இல்லாமல் வழங்கப்பட்டுள்ளது..இதனை வழங்கியது புலிகளின் அடுத்த தலைவராக தன்னை அறிவித்துள்ள கே.பி..என்பவராலா???..அல்லது புலிகளின் யெர்மன் பொறுப்பாளர் வாகீசனாலா??? கே.பி அறிவித்ததாக எந்த ஊடகமும் செய்தி வெளியிடவில்லை..

கே.பி யின் கையொப்பமும் அதிலில்லை..அதே நேரம் எந்தக் கையொப்பமும் அற்ற பத்திரம் செல்லுபடியாகுமா??அந்தப் பத்திரத்தில் அதை வழங்கியது புலிகளின் தலைமைச்செயலகம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால்.. புலிகளின் தலைமைச்செயலகம் எங்கு இயங்குகின்றது?? யெர்மனியிலா??யெர்மனியில் இயங்கினால் அதனை யெர்மன் பொறுப்பாளர் வாகீசனின் முடிவிற்கேற்ப வழங்கியிருந்தல்..இனி ஈழத்தமிழ் மக்களின் தேசியத் தலைவர் வாகீசனா??அல்லது இனிவரும் காலங்களில் எல்லா நாடுகளிலும் உள்ள புலிகள் அமைப்பு பொறுப்பாளர்களே இந்தப்பதவிகளை தங்களிற்கு விரும்பியபடி வழங்கலாமா?? புலிகள் அமைப்பில் இறுதிவரை போராடி வீரமரமடைந்த ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட போராளிகள் மற்றும் தளபதிகளான தீபன்..துர்க்கா.விதுசா..நடேசன்.புலித்தேவன்.. இப்படிப் பல தளபதிகளிற்கே இன்னமும் முறைப்படி அறிவிக்கப்பட்டு வீரவணக்கம் செலுத்தாத நிலையில்.. இப்படியான கேலிக்கூத்துக்கள் தேவையா??

அப்படி நாட்டுப்பற்றாளர் பதவி பெற்றுக்கொள்ள ஏதாவது வசதிகள் இருந்தால் என்னுடைய சித்தாப்புவம் ஒருவர் இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் இறந்து போனார்..அவர் யாழ்ப்பாணத்தில் வீடு காணி இருந்தும் தான் இராணுவத்தின்ரை கட்டுப்பாட்டிற்கை இருக்கமாட்மாட்டேன் என்று அடம்பிடித்து வன்னியில் புலிகளின்ரை கட்டுப்பாட்டிற்குள் போய் பிள்ளைகளையும் மாவீரர்களாக்கி வாழ்ந்த ஒரு நாட்டுப்பற்றாளர் ஆனால் சோகம் என்னவென்றால் இறுதி யுத்தத்தில் புலிகளின் துப்பாக்கி குண்டுகளினால் இறந்து போனார்.. அவரிற்கு யாராவது ஒரு நாட்டுப்பற்ளாளர் பதவி வாங்கி குடுப்பீங்களா??வாங்கித் தாறவங்களை யுரோவிலை கவனிக்கலாம்..

6 Comments

Anonymous @ 9:13 PM

Sabash Srinna... I small request... can u get rid off the veera vanakam for thalaivar. cos I know for certain extend that he is alive. It disturbs to see it on ur site...

Hope u would consider. Pls & Thnx

P.S:- KP is a JERK. He will rot & die!!!!!!!!

சாந்தி நேசக்கரம் @ 5:48 AM

//என்னுடைய சித்தாப்புவம் ஒருவர் இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் இறந்து போனார்..அவர் யாழ்ப்பாணத்தில் வீடு காணி இருந்தும் தான் இராணுவத்தின்ரை கட்டுப்பாட்டிற்கை இருக்கமாட்மாட்டேன் என்று அடம்பிடித்து வன்னியில் புலிகளின்ரை கட்டுப்பாட்டிற்குள் போய் பிள்ளைகளையும் மாவீரர்களாக்கி வாழ்ந்த ஒரு நாட்டுப்பற்றாளர் ஆனால் சோகம் என்னவென்றால் இறுதி யுத்தத்தில் புலிகளின் துப்பாக்கி குண்டுகளினால் இறந்து போனார்.. அவரிற்கு யாராவது ஒரு நாட்டுப்பற்ளாளர் பதவி வாங்கி குடுப்பீங்களா??//

இப்ப பற்றாளர்கள் பட்டம் வழங்குவது ஐரோப்பாவின் ஏகபிரதிநிதிகளான பிரமுகர்கள் வரிசையில் திரு.வாகீசன் அவர்கள் விளங்குகிறார் என்பது அனைவரும் அறிந்த உண்மை.
இப்ப வாகீசன் இன்னொரு பட்டத்தையும் யேர்மனியில் உள்ள தனது அடிதடி வசூல்ராசாக்கள் மூலம் வழங்கிக் கொண்டிருக்கிறார். அதுதான் துரோகிகள் பட்டம்.

வாகீசன் ஒரு போராளியாக வந்த போது எல்லாருக்குள்ளும் இருந்த நம்பிக்கையானது அவரது நடவடிக்கைகளால் அவர் மீதிருந்த மதிப்பு எல்லாம் இல்லாது போய்விட்டது.

வாகீசனின் சகாக்களால் குமரன் பத்மநாதனும் துரோகியாகவே அறிவிக்கப்பட்டுள்ளார். இப்படி எல்லாரையும் துரோகியாக்கி வாகீசன் மட்டும் அடுத்த தலைவராகி தமிழினத்து விதியை மாற்றுவார் என்று நம்புவோம்.

சாந்தி

மாசிலன் @ 7:28 AM

இவர்களைத்தான் பிணம் தின்னி கழுகு என்பதோ? தங்களை விளம்பரப் படுத்திக்கொள்ள எந்த சந்தர்பத்தையும் நழுவ விடாமல் எழவு விழுந்த வீட்டிலும் ஒப்பாரிகளுக்கிடையில் தங்கள் சுய வியாபார போக்கினை கொஞ்சமும் கூச்சப்படாமல் செய்வது அசிங்கம்தான். மற்றவர்களின் வெந்த மனதினை மேலும் நோகடிக்கிறோமே என்கிற உணர்வற்று நடந்துகொள்வது மிகவும் கேவலமான மிருகச் செயலே.

இறந்தோரின் சூழல் மற்றும் சுற்றத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

Anonymous @ 12:24 PM

காலமான அந்த நண்பரின் ஆத்மா சாந்தியடையவேண்டிக்கொள்கிறேன்.
அவர் குடும்பத்தவர்க்கும் எனது அனுதாபங்கள்.
மனைவி கதறி அழுது கொண்டிருந்த வேளையில் கையெழுத்து இல்லாத பத்திரத்தை நீட்டிய வாகீசன் கையில் ஒரு பிடிலை கொடுங்கள்.
வாசித்துக்கொண்டே தொடர்ந்து பத்திரம் வழங்கட்டும். இலங்கை அரசு பல முனைகளிலும் தமிழ் மக்களை ஒடுக்கி வரும் வேளையில் அது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி காரியம் ஆற்றாமல் இப்படியே உசுப்பேத்திக்கொண்டு
இருக்கட்டும்.போராட்டத்தின் பெயரால் நடந்த மனித அவலங்களை நாம் வெறுப்பவர்களாக இருந்தால் இது போன்ற பட்டமளிக்கும் கேலிக்கூத்துக்கள் தொடர்வதையும்
கண்டித்து வெறுத்தொதுக்க வேண்டும்.
-அறிவழகி

Anonymous @ 3:09 AM

அன்பர்களே,
ஆதரவாளர்களே!
மாபெரும் மலிவு விற்பனை!
GRAND SUMMER SALES IN OBERHAUSEN !!
நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த அல்லது ஏங்கியிருந்த
பட்டங்கள் !!

qualifications : கேள்வி கேட்காமல் ஓடித்திரிந்தால் மட்டும் போதும்.

SPECIAL CONCESSIONS. முந்திக்கொள்ளுங்கள். FIRST COME FIRST SERVED BASIS.
ONLY FOR A SHORT PERIOD! ( A CLOSE DOWN SALES) ????
PS. NO AFTER SALES SERVICE !
எம் கடன் மக்களை ஏமாற்றிக்கிடப்பதே !


***துரோகி பட்டங்கள் இலவசம் - no qualifications ! no certificates !

-அரிச்சந்திரன்

Anonymous @ 3:11 AM
This comment has been removed by a blog administrator.