Navigation


RSS : Articles / Comments


தமிழ்த் தேச விடுதலை இயக்கத்தின் ' முன்னாள் ' பொதுச் செயலாளரான தியாகு அவர்களின் உண்ணா விரதத்தின் பின்ணனி என்ன??

8:43 AM, Posted by sathiri, 2 Comments

தமிழ்த் தேச விடுதலை இயக்கத்தின் ' முன்னாள் ' பொதுச் செயலாளரான தியாகு , இலங்கையில் நடைபெற இருக்கும் காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்பதை வலியுறுத்தி சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டம் தொடங்கியிருக்கிறார்.  தமிழன் என்பதையும் தாண்டி , ஈழத் தமிழர்களின் இன்னல்கள் தீரக் குரல் கொடுப்பது மானுட தர்மம் !.    அதே சமயம் , ஈழப் பிரச்சினையை சுய லாபத்துக்காகக் கையிலெடுக்கும் தியாகு போன்றவர்களை அடையாளங் கண்டு புறக்கணிப்பது அரசியல் தர்மம் !.

                  சொந்த வாழ்க்கையில் எந்த அறநெறியையும் கடைப் பிடிக்காத தியாகு , அதனால் உண்டான சிக்கல்களிலிருந்து தப்பிப்பதற்காகவே (TACTIC) இந்தப் போராட்டத்தைக் கையிலெடுத்திருக்கிறார்.

                   நக்சல்பாரியாக வெளியுலக வெளிச்சத்திற்கு வந்த தியாகு ,பின்னர் நச்சு வியாபாரியாக மாறிப் போனது காலத்தின் கோலம் !. களையெடுத்தல் என்கிற ஆயுதப் புரட்சியில் ஈடுபட்டுக் கைதாகி ஆயுள் தண்டனை அனுபவித்து சிறை மீண்ட தியாகு , தன சபலப் புத்தியால்  லதா , தாமரை என்கிற இரண்டு பெண்கள் தங்கள் ஆயுள் முழுமைக்கும் தண்டனை அனுபவிக்கும் அவல நிலைக்குக் காரணமாகி விட்டார்.

                   முதல் மனைவி லதாவும் , அவருக்கு இரண்டு பெண் பிள்ளைகளும் இருக்கும்போதே , தனக்கு மண முறிவு கிடைக்க இருப்பதாகப் பொய் சொல்லி கவிஞர் தாமரையை வளைத்தார்.
50 வயது தியாகுவுக்கும் 35 வயது தாமரைக்கும் நடந்தேறிய திருமணம் அப்போதே ஊடகவியலாளர்களைப் புருவம் உயர்த்தச் செய்தது !.

                   தாமரைக்காவது  அவர் உண்மையாக நடந்து கொண்டாரா என்றால் அதுவும் இல்லை. அவரைப் பொருத்தவரை தாமரை , சம்பாதித்துப் போடும் இயந்திரம் !. தியாகு  பயன்படுத்தும் காலணியிலிருந்து  கைப்பேசி வரை , உல்லாசமாக ஊர் சுற்றும் ஸ்கூட்டர், கார் உள்பட, எல்லாமும் தாமரை பாட்டெழுதி ஈட்டும் வருமானத்தில்தான். மனைவியின் சம்பாத்தியத்தில் சுகவாசம் பழகிக் கொண்ட தியாகு, பெண் சகவாசங்களுக்காக மெனக்கெடுவதுதான் புரட்சியின் லட்சணமா ?.

                ஈரோட்டில் இருக்கும் தன கணவர் சன்முகசுந்தரத்தைக் கருத்து வேறுபாடுகளால் பிரிந்து வந்த விஜயலட்சுமி என்ற பெண்ணை , அவருக்கு உதவும் சாக்கில் தன்  வலையில் வீழ்த்தினார். இரண்டு பெண்குழந்தைகளின் தாயான விஜயலட்சுமியை நிரந்தரமாகத் தன்  கைப்பாவை ஆக்க நினைத்தார். அவருக்காக சென்ற ஆண்டு வீட்டை விட்டே வெளியேறினார். இந்த அசிங்கம் வெளிவந்ததால் குடும்பம், சுற்றம், இயக்கம், தோழர்கள், பள்ளி எல்லாம் உடைந்தன.  தியாகுவின் ' பெண் பித்தன்' முகம் முதல்முறையாக ஆதாரங்களோடு வெளிவந்தது.

              தியாகு மூலம் 'ஜி' தொலைக்காட்சியில் வேலைபெற்றுக் கொண்ட பிறகு , இவரது பாலியல் துன்புறுத்தல்களுக்கு அதற்கு மேலும் உடன்பட விருப்பம் இல்லாத விஜயலட்சுமி , ஊடகவியலாளர்களைக் கூட்டி தன்னை இவரிடமிருந்து காப்பாற்றும்படி இறைஞ்சினார். அந்தக் காணொளி  இப்போது இணையத்தில் உலவி  வருகிறது. தன்  செல்வாக்கால் காணொளி இதுவரை வெளிவராமல் தடுத்து வந்த தாமரையைப் ' பெண்ணியவாதி' என்று எப்படி ஏற்பது ?

             விஜயலட்சுமி பிடி நழுவிப் போன பின்பு , மலையக ஈழத் தமிழ்ப் பெண்ணான , திருச்சியைச் சேர்ந்த யோகராணி என்ற பாடகிக்கு வலைவீசினார். அகப்பட்டது மீன். தன்னை ' தேவர் ' இனப் பெண்ணாக பொய்கூறி வரும் யோகராணிதான் தியாகுவுக்கு இப்போது எல்லாமும் !

கற்றுக்குட்டிப் பாடகியான யோகராணியைக் குடும்பத்திலிருந்து கிளப்பி தற்சமயம் சென்னை கொண்டுவந்து தன் பாதுகாப்பில் ரகசியமாக வைத்திருக்கிறார்.
             விஜயலட்சுமி, யோகராணி போன்ற பெண்களெல்லாம் 65 வயது முதியவரான தியாகுவின் வலையில் வீழ்வதும் கலாசாரச் சீரழிவே !. தொலைக்காட்சியில் எப்படியாவது வாய்ப்புப் பெற்றுவிடவேண்டும் , அதற்காக எதை இழந்தாலும் பரவாயில்லை என்கிற மனப்போக்குக் கொண்ட இத்தகைய பெண்களையும் ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும் ' பெண்ணியம்' பேசும் பெருமேதாவிகள்.

            " இதுபோல் பெண்களை வேட்டையாடுவதை நிறுத்துங்கள், எனக்கு ஒழுங்கான கணவனாகவும் , மகன் சமரனுக்கு நல்ல தந்தையாகவும் வாழப் பழகுங்கள் " என்று அன்றாடம் வற்புறுத்துகிற தாமரையிடமிருந்து தப்பிக்க இப்போது அவர் தேர்ந்தெடுத்த தந்திரமே இந்தப் பட்டினிப் போராட்டம். தந்திரமாக இதில் வென்று விட்டால், தலைவன் என்கிற ஒளிவட்டம்  கிடைக்கும், தாமரையின் பேச்சை யாரும் நம்ப மாட்டார்கள் , தாமரையின் நெருக்குதலிலிருந்து தப்பித்து வீட்டை விட்டு வெளியேற வேறு வழியில்லை என்பதே அவரது நோக்கம் !.
               ' வீட்டை விட்டு வெளியேற வேண்டும்' என்ற சொந்த நோக்கம்தான் காமன்வெல்த் கோரிக்கையாகத் திரிந்து நிற்கிறது .

               சொந்த வாழ்வில் ஒழுக்க நெறி போற்றாதவர்கள் , பொதுவாழ்வில் தலைவராகப் போற்றப்படுவது நியாயம்தானா ? தன் குடும்பத்தின் நியாயத்துக்குப் பதிலளிக்க மறுக்கும் ஒருவர் , தன் இனத்தின் நியாயத்திற்குப் போராடுவது சரிதானா போன்ற கேள்விகளை மக்களின் மனச்சான்றுக்கு விட்டு விடுகிறோம்.

              நன்கொடை கேட்டு உலகத்தமிழர்களுக்கு மடல் எழுதியுள்ளார் தியாகு.  நல்ல காரியத்திற்கு நன்கொடை அளிப்பது நல்லதுதான் என்றாலும் , அதை ஒரு நல்லவரின் கைகளில் கொடுக்கிறோமா என்பது அதைவிட  முக்கியம் !. , தியாகுவுக்கு நிதியளிக்கக் காத்திருக்கும் அப்பாவி உலகத்தமிழர்கள் ஒருகணம் நினைத்துப்பார்ப்பது நன்று.
             இப்படியாக தமது  சொந்த  குடும்ப பிரச்சனைகளை திசை திருப்பவும்.தமது கட்சி பிரச்சனைகளை திசை திருப்பவும்.சமூகத்தில் கெட்டுப்போன தங்கள் பெயரை  சரி செய்யவும் கள்ள மட்டை போட்டுவிட்டு  சட்டத்திலிருந்து தப்பிக்க என  எல்லாருமே  கையில் எடுப்பது ஈழத்தமிழர் பிரச்சனை  என்றாகி விட்டது. ஈழத் தாமிழா உனக்கு மட்டும் ஏன் இப்படி???...

கீழே உள்ள காணொளிகள்  கவிஞர் தாமரையின் வீட்டில் நடந்தவற்றின் ஒளிப்பதிவு ஆகும்.


தோழர் தியாகுவின் லீலைகள்-part6

8:40 AM, Posted by sathiri, No Comment

தோழர் தியாகுவின் லீலைகள்-part5

8:40 AM, Posted by sathiri, No Comment

தோழர் தியாகுவின் லீலைகள் -part4

8:40 AM, Posted by sathiri, No Comment

தோழர் தியாகுவின் லீலைகள்--part3

8:39 AM, Posted by sathiri, No Comment

தோழர் தியாகுவின் லீலைகள்..part2

8:38 AM, Posted by sathiri, No Comment