Navigation


RSS : Articles / Comments


நாட்களைக் கடத்தும் தமிழீழ அரசு (நா.க.த.அ)

4:50 AM, Posted by sathiri, No Comment

நாட்களைக் கடத்தும் தமிழீழ அரசு (நா.க.த.அ)
சாத்திரி (ஒரு பேப்பர்)

புலிகள் அமைப்பானது ஆயுதங்களை மௌனிப்பதாக விடுத்த அறிக்கையினை அடுத்து அந்த அமைப்பும் செயலிழந்து போனதன் பின்னர். உலகத் தமிழர்கள் அனைவருமே மிகுந்த எதிர் பார்ப்போடும் . நம்பிக்கைகளோடும் எதிர்பார்த்திருந்த நாடு கடந்த தமிழீழ அரசு தோற்றம் பெற்று இரண்டு ஆண்டுகள் கழிந்ததோடு மட்டுமல்லாது .அதன் மூன்று பாராளுமன்ற அமர்வுகளும் நடைபெற்று முடிந்துவிட்டன. இலங்கைத் தீவில் ஆயுதப் போர் முடிவிற்கு வந்ததுமே தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுக்கவும், சாத்வீக வழியிலான போராட்டங்களை நடாத்தி தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்க ஒரு அமைப்பு அவசியமானது அது நாடுகடந்த தமிழீழ அரசே என வலியுறுத்தி அந்த அமைப்பு உருவாகுவதற்கு மட்டுமல்லாது. அதன் நோக்கங்கள் அதன் தேவைகள் என்ன என்பதோடு அதன் அவசியத்தையும் புலம்பெயர்ந்து வாழும் தழிழர்களிடம் கொண்டு சென்று சேர்ப்பதற்கு ஒரு பேப்பர் குழுவினரோடு இணைந்தும், தனியாகவும். பரப்புரைகளையும் பல வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்திருந்தேன். அதன் ஆரம்ப காலகட்டத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பின் அனைத்துலகத் தொடர்பகம் நாடுகடந்த அரசை பகிரங்கமாக எதிர்த்தவேளைகளில். நாடுகடந்த அரசிற்கு ஆதரவாக அதன் பிரச்சாரப் பத்திரிகை போன்று ஒரு பேப்பர் செயற்பட்டது என்பதையும் இங்கு சுட்டிக்காட்டவேண்டும். ஆனால் நாடுகடந்த அரசின் தேர்தல்கள் நடைபெற்று அதன் முதலாவது பாராளுமன்ற அமர்வும் நடந்து முடிந்த பின்னர். மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் செயற்பாடுகளில் உள்ள குறைகளையும். இன்று ஈழத்தமிழினம் உள்ள நிலையில் இந்த உறுப்பினர்களின் செயற்பாட்டு வேகம் போதவில்லையென்பதையும். ஒரு பேப்பர் சுட்டிக்காட்டத் தவறியதில்லை.


அதே நேரம் நாடுகடந்த அரசால் தாயகத்தில் உள்ளவர்களிற்கு பெரிதாக ஒன்றும் செய்யமுடியாது என்பதனை அனைவராலும் ஏற்றுக்கொள்ளமுடியும். ஆனால் சர்வதேச நாடுகளில் அதனால் எத்தனையோ பணிகளை செய்யமுடியும். இலங்கையரசின் போர்குற்றங்களை வெளிக்கொண்டு வரலாம். இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களின் வாக்கு மூலங்களை வைத்து இலங்கையரசின் மீது வழக்குகள் தொடுக்கலாம். வழக்கு என்றதும் தான் ஞாபகத்திற்கு வருகின்றது. இலங்கையரசு மீது வழக்கு தொடர்வது பற்றி உருத்திரகுமார் மற்றும் மதியுரைஞர் குழுவினைச் சேரந்த சிறிஸ்கந்தராசா (சிறீயண்ணா, சுவீடன்) ஆகியோரோடு உரையாடிக்கொண்டிருந்தபொழுது நான் சொன்ன விடயம். அதிகாரத்திலிருக்கும் ராஜபக்சமீது வழக்கு தொடர முடியாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் ராஜபக்சவிற்கு கொஞ்சமும் குறையாத இனப்டுகொலையை செய்த சந்திரிக்கா மீதாவது ஒரு வழக்கை பதிவு செய்யுங்கள். அதற்கான ஆதாரங்கள் உள்ளன குறைந்தபட்சம் பதவியில் இல்லாத ஒருவரையாவது சர்வதேச குற்றவியல் நீதிமன்னறத்தில் நிறுத்துவன் மூலம் தற்சமயம் பதவியில் இருப்பவர்களாவது தங்கள் பார்வையை மாற்ற சந்தர்ப்பம் உண்டுடென்று கூறியிருந்தேன். பார்க்கலாம் என்கிற பதில்தான் கிடைத்தது. இன்றுவரை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். அடுத்தடுத்து அறிக்கைகள் மட்டுமே வெளியாகின. கொசாவோவிலும். தென் சூடானிலும் தூதரகம் திறப்பதாக கூட செய்திகள் வெளியாகின. தூதரகம் திறக்கத் தேவையில்லை ஒரு அறையை வாடைகைக்கு எடுத்து அலுவலகமாக்கியிருக்கலாம். ஏன் ஒரு கொட்டிலையாவது போட்டு கொடியை ஏத்தியிருந்தாலும். அதன் படத்தை அண்ணாந்து பார்த்தாவது ஆசுவாசப்பட்டிருப்போமே. அதை விடுவோம், நா.க.த. அரசின் மூன்றாவவது பாராழுமன்ற அமர்வின் கூட்டத் தொடர் அண்மையில் நடைபெற்றது. அதன் முதலாவது நாள் அமர்வில் இலங்கையரசை கிடுகிடுக்க, கலங்கடிக்க அதிரடியான தீர்மானங்களாவது ஏதாவது நிறைவேறும் என அதன் நேரலை ஒளிபரப்பை ஆவலுடன் இணையத்தில் பார்த்துக்கொண்டிருந்த பல உசார் மடையர்களில் நானுமொருவன். ஆனால் கூட்டத்தின் இறுதியில் எல்லாருக்கும் பசிக்கிறது எட்டுமணிக்குத்தான் சாப்பாடு வரும் என்கிற தீர்மானத்துடன் முதலாம்நாள் அமர்வுகள் முடிவடைந்திருந்தது. நானும் கொட்டாவி விட்டபடி போய்சாப்பிட்டு விட்டு படுத்துவிட்டேன்.


கடந்த மாவீரர் தினத்தில் கூட நா.க. த. அரசு ஒரு தவறான முடிவெடுத்திருந்தது; அதாவது இறுதி யுத்தத்தில் வன்னியில் தலைவருடன் இருந்து தப்பி வந்தவர்கள் என்பவர்களுடன் கூட்டுச் சேர்ந்து ஜரோப்பா எங்கும் மாவீரர்தின நிகழ்வுகளை இரண்டாக்கியிருந்தனர். இரண்டு வருடத்தில் இவர்களின் சாதனை என்று இதனைத்தான் சொல்லலாம். புதியதாய் வந்தவர்கள் பற்றியும் அதனை பின்நின்று இயக்கும் வினாயகம், சுபன் போன்றவர்கள் பற்றியும் போதுமான விபரங்கள் நா.க.த. அரசின் பிரதமரிற்கு எம்மால் வழங்கப்பட்டிருந்தது என்பதனையும் குறிப்பிட வேண்டும்.
கடைசியாய் வந்த செய்தி இலங்கைக்கு குண்டு போட்ட உருத்திரகுமார். உள்ளே போய் செய்தியை படித்தால். ஆபிரிக்க நாடுகளில் எமது உறவை வளர்த்துள்ளோம்.தென்னாபிரிக்காவில் உள்ள பல நாடுகளுடன் தமது தூதரகங்களை திறந்து தமது நட்புறவை பேணும் நிலையில் இவை முனைந்துள்ளனவாம்.தென்னாபிரிக்காவின் ஆழும் தேசிய காங்கிரசின் 100 வது ஆண்டு கொண்டாட்டத்திற்கே நாடுகடந்த அரசு அழைக்கப்படவில்லை என்பது சோகமான விடையம். ஆனால் அதே கொண்டாட்டத்திற்கு உலகத்தமிழர் பேரவைக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் அழைப்பிதழ் போனது மட்டுமல்லாமல் அவர்களும் கலந்து கொண்டுள்ளார்கள். இது தொடர்பாக நாடு கடந்த தமிழீழ அரசு பிரதிநிதிகளுடன் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது தனிப்படட்ட காரணங்களிற்காக தென்னாபிரிக்கா போகவில்லையாம். உள்நாட்டு பாதுகாப்பென்றால் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெளிநாட்டு பாதுகாப்பென்றால் உலகத்தமிழர் பேரவை இமானுவேல் அடிகளார். இரண்டு அமைப்பில் உள்ளவர்களிற்கும் பாதுகாப்பு பிரச்சனை உள்ளதுதான். அண்மையில் கூட இந்தியாவிற்கு முறையாக விசா பெற்று சென்றிருந்த இமானுவேல் அடிகளார் இந்தியாவிற்குள் நுளைய முடியாமல் திருப்பியனுப்பப்பட்டு அவமானப்படுத்தப்பட்டிருந்தார். இப்படி பல அச்சுறுத்தல்களிற்கு மத்தியில்தான் இந்த அமைப்புக்கள் தங்களாலான பணிகளை முன்னெடுக்கின்றனர். ஆனால் உருத்திர குமார் அவர்கள் பாதுகாப்பை காரணம் காட்டி அமெரிக்காவிற்குள் மட்டுமே மாறி மாறி பயணம் மேற்கொள்வதால் உலகம் முழுவதும் நாடுகடந்த தமிழீழ அரசினை பலப்படுத்தி அதனை சரியான பாதையில் இட்டுச்செல்ல முடியாது.


அது மட்டுமல்லாது நாடுகடந்த தமிழீழ அரசின் உறுப்பினர்கள் என்பவர்கள் ஒவ்வாரு தேர்தலின் போதும் மக்காளால் மாற்றப்படுவார்கள் மாற்றப்படவேண்டும். அதன் பிரதமர் கூட மாற்றப்படுவார். ஆனால் நாடுகடந்த தமிழீழ அரசு என்பது நிலையாக இருக்கும்.இருக்கவேண்டும். எனவே நாடுகடந்த தமிழீழ அரசு உறுப்பினர்கள் மீதான எமது விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியாமல் உடனடியாகவே அது நா. க. த. அரசின் மீதான எதிர்ப்பு அல்லது அதன்மீதான காழ்ப்பை நாம் காட்டுகின்றோம் என நினைப்பது தவறு. வுpமர்சனங்களை ஏற்றுக்கொண்டு நா.க.த.அசின் பிரதிநிதிகள். தங்களை திருத்திக்கொண்டு சரியான பாதையில் அந்த அமைப்பினை வழிநடாத்தவேண்டும். இல்லையேல் காலப்போக்கில் இதுவும் தனிநபர் துதிபாடும் அமைப்பாக மாறுவதோடு இறுதியில் தலைவனும் நானே தொண்டனும் நானே என்கிற இந்தியவின் சுப்பிரமணிய சுவாமியின் கட்சி மற்றும் இலங்கையில் ஆனந்தசங்கரியின் கட்சி போன்றதொரு நிலைக்கே நாடுகடந்த தமிழீழ அரசும் தள்ளப்படும்.

இறுதியாக நாடுகடந்த தமிழீழ அரசின் ஆரோக்கியமான செயற்பாடுகளை தட்டிக்கொடுப்பதோடு மட்டுமல்லாமல். அதன் தவறான பக்கங்களை தட்டிக்கேட்பதற்கும் ஒரு பேப்பர் குழுமம் தயங்காது என்பததை தெரிவித்துக்கொளகிறேன்;.

சாத்தானின் குழந்தை.

1:06 PM, Posted by sathiri, One Comment

சாத்தானின் குழந்தை.

ஆயிரத்தி தொள்ளாயிரத்து அறுபத்தியேழாம் ஆண்டு . தை மாதம். யாழ்குடாநாடு எங்கும் இரவும் பகலும் இடைவிடாத புயலுடன் கூடிய பெருமழை.மழை வெள்ளத்தில் மிதந்துகொண்டிருந்த கிராமங்களில் ஒன்றுதான் மானிப்பாய் கிராமமும். அன்று பத்தாம் திகதி அதிகாலை நான்கு மணி நாற்பத்தியொரு நிமிடம். இருபது வினாடிகள். வானைக்கிழித்ததொரு பெரு மின்னல் தோன்றி மானிப்பாய் வைத்தியசாலையின் பின்னே மண்ணைத்தொட்டது. அங்கு காணியொன்றில் மழையில் நனைந்தபடி தலையை தொங்கப் போட்டுகொண்டுக்கொண்டிருந்த மாடு ஒன்று ம்மா...........என்ற சத்தத்துடன் கருகி இறந்து போனதோடு மின்கம்பிகளும் அறுந்து விழ எங்கும் கும்மிருட்டு.ஒருசில வினாடிகளில் பெருத்த இடியோசை ஆழ்ந்தஉறக்கத்திலிருந்த அனைவரையுமே திடுக்கிட்டு எழவைக்க . மானிப்பாய் வைத்தியசாலையின் பத்தாம் இலக்க அறையில். பத்தாம் இலக்க கட்டிலில். இருந்து அம்மா...என்றொரு பெரும் அலறல். பின்னர் க்குவா....குவா...குவா....என்ற குழந்தையின் அழுகை . ஆம் அவன் பிறந்துவிட்டான்.

கையில் ரோச்லைற் வெளிச்சத்துடன் அவசரமாய் ஓடிய தாதி குழந்தையின் மீது வெளிச்சத்தை பாச்சினாள். என்ன அதிசயம் அதன் தலையின் பின்னால் ஒளி வட்டம் மினுமினுத்தது. அவள் வீல்.....என்று அலறியபடி மயங்கிச்சாய ஓடிவந்த மற்றையவர்கள்.மயங்கியவளை ஒரு வீல் கதிரையில் வைத்து தள்ளிக்கொண்டு போக அங்கேயே தங்கியிருந்த குழந்தையின் தந்தையும் ஓடிவந்து பார்தார் ரோச்லைற் வெளிச்சத்தில் ஒளிவட்டம் மின்னியது. அவசரமாய் தொப்புள் கொடியை அறுதெறிந்துவிட்டு குழந்தையை ஒரு துணியில் சுருட்டிக்கொண்டு சண்டிலிப்பாயில் அமைந்திருந்த நாகபூசணி அம்மன் ஆலயத்தை நோக்கி ஓடியவர் கோயில் வீதியில் குடியிருந்த சடாமுடிச்சாமியரின் கதவில் அவசரமாய் தட்டவே சோம்பல் முறித்தபடி நித்திரையால் எழுந்து வந்த சாமியாரின் காலடியில் குழந்தையை கிடத்தி விட்டு சாமி நீங்கள்தான் எங்களை காப்பாத்தவேணும் இந்த குழந்தை பிறந்ததும் அதுகின்ரை தலையிலை ஒளிவட்டம் தெரிஞ்சது அதுதான் பயத்திலை உங்களிட்டை தூக்கிக் கொண்டு ஓடியந்தனான்.என்று மூச்சிரைக்க கூறி முடித்தார்.

குழந்தையை குளிந்து பார்த்த சாமியார் திடுக்கிட்டவராய் ஆ..இது சாத்தானின் குழந்தை என்றார்.. ஜயோ சாமியார் இது என்ரை குழந்தை நாலாவது நாயாய் அலையவைக்கப் போகுது .அழுதார் அந்த தந்தை.
இன்று பத்தாம் திகதி குழந்தை பத்தாம் இலக்க வார்ட்டில் பத்தாம் இலக்க கட்டிலிலா பிறந்தது

ஓம் சாமியார்.

சாமியார் கள்களை மூடினார் அம்மா தாயே நாகபூசணி எந்த குழந்தை பிறக்கக்கூடாதென்று இத்தனை நாளாய் கடும் தவம் செய்தனோ அந்த சாத்தானின் குழந்தை பிறந்து விட்டது. இனி நீதான் இந்த உலகத்தை காப்பாற்றவேண்டும். பலபேரின் நிம்மதியை கெடுக்கப்போகிறானே என்று மனதில் துதித்தவர்.

அவரைப் பார்த்து ஓன்றும் பயப்படாதே அம்மா துணையிருப்பார் .இந்தக் குழந்தை சாத்தானின் குழந்தையாக இருந்தாலும் வினை தீர்க்கும் வேல் முருகனின் பெயரை இவனிற்கு சூட்டுகிறேன். அந்த பெயரால் அனைவரும் இவனை அழைக்கும் பொழுது இவனது தீய குணங்கள் மாறி இவனிற்கு கடவுள் அருள் கிடைக்கும்.என்று கூறியவர் குழந்தையின் காதில் ஸ்ரீ கொளரி பாலகன் என்று மூன்றுமூறை சொன்னதும் குழந்தை வீரிட்டு அழத்தொடங்கியது. சிறிது விபூதியை எடுத்து குழந்தையின் நெற்றியில் தடவிவிட்டு எல்லாம் நன்றாக நடக்கும் போய்வாருங்கள் என வழியனுப்பிவைத்துவிட்டு. இந்தக் குழந்தையின் பத்தாவது வயதின் எனக்கல்லவா ஆபத்து என்றபடி கவலையுடன் கடவுளை தியானிக்கத் தொடங்கினார் சாமியார்.

வைத்தியசாலையில் காலை மயக்கத்திலிருந்து விழித்த குழந்தையின் தாயார் காலடியில் அவரிற்கு முதல்நாளிரவு வைத்தியசாலையில் உணவு கொடுத்த அலுமினியத் தட்டு கிடந்ததை கவனித்தார். அந்த தட்டைத்தான் ரோச்லைற் வெளிச்சத்தில் எல்லோரும் ஒளிவட்டம் எண்டு தவறாய் நினைச்சிட்டினம் என்பது அவரிற்கு புரிந்தது. உடைனையே அவசரமாய் அந்த அலுமினிய தட்டை களவெடுத்துக்கொண்டு வீட்டிற்கு போய்விட்டார். களவெடுத்த அலுமினியத் தட்டிலேயே குழந்தை உணவு உண்டு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நோஞ்சானாய் வளர்ந்தது.
0000000000000000

இப்பொழுது அந்தக் குழந்தைக்கு வயது பத்து அந்த வருடம் அதே நாகபூசணி அம்மன் கோயில் திருவிழா கோலாகலமாய் நடந்து கொண்டிருந்தவேளை கச்சான் கடலை வாங்குவதற்காக கோயிலிற்கு போனவன் கோயில் வீதியில் அந்த சாமியாரை கண்டுவிட்டான். உடனேயே சாமியார் முன்னால் போய் நின்றவன்.

சாமீ.............எனக்கொரு உண்மை தெரிஞ்சகணும் சாமீ........என்றான்.

அவனை குனிந்து பார்த்த சாமியார் யாராப்பா நீ உனக்கென்ன உண்மை தெரியவேண்டும்.

சாமீ..நீங்கள் நல்லவரா கெட்டவரா??

கோயில் கோபுரத்தை நிமிர்ந்து பார்த்தவர் பின்னர் அவனை பார்த்து இரண்டு கைகளையும் விரித்து உதட்டை பிதுக்கியபடி தெரியலையேப்பா என்றார். ( இந்தக் காலகட்டங்களில் சிவாஜியின் முதல் மரியாதை படம் மற்றும் கமலின் நாயகன் படம் வெளியாகியிருக்கவில்லை என்பதனை அறியத்தருகின்றேன்.)

அப்ப எதுக்கு சாமி எனக்கு அப்பிடியொரு பேரை வைச்சனி சாமி??

என்ன பெயரப்பா ??

ஸ்ரீ கொளரி பாலகன் ..அதற்கு அர்த்தம் என்ன சாமீ

அதுவா திருகைலாய மலையில் வீற்றிருக்கும் பெருமானின் திருவாட்டி கொளரி அம்மையின் அழகுமகன் முருகன் என்று அர்த்தம்.

நல்லவேளை இந்த அர்தத்தையே எனக்கு பெயரா வைக்கமல் விட்டியே .கந்தன் கடம்பன்.வேலன் இப்பிடி அவருக்கு எத்தினை பேர் இருக்கு. ஆனால் எதுகய்யா இப்பிடி ஒரு பெயர்.உனக்குத் தெரியுமா ஒவ்வொருதடைவையும் வகுப்பிலை வாத்தியார் டாப்பு கூப்பிடேக்குள்ளை என்ரை பெயரை கூப்பிடும்போது அவர் பாட்டுபாடுறார் என்று நினைச்சு நான் நித்திரையாய் போயிடுறன் சாமி.என்றபடி அவன் கீழே குனிய. அய்யோ அம்மா தாயே காப்பாற்று சாத்தனின் குழந்தை பத்து வயதாகிவிட்டது காப்பாத்து என்றபடி அவர் கோயில் உள்ளே ஓடிக்கொண்டிருக்க அவன் எறிந்த கல்லு சாமியாரின் பின்மண்டையில் பட்டுத்தெறிக்க சாமியார் மயங்கி விழுந்தார்.
00000000000000
திரும்பிப் பார்க்காமல் அவன் ஓடினான்..ஓடினான்..ஓடினான்..(பராசக்க்தி படம் வெளிவந்துவிட்டிருந்தது) பத்துவருடங்களாக ஓடி யெர்மன் எல்வைவரை ஓடி ஒற்றைகள் கிழிக்கப்பட்ட பாஸ்போட்டுடன் பிராங்போட் விமான நிலையத்தில் நின்றான். அதை வாங்கிப் போன ஒரு யேர்மன் காரன் சிறிது நேரத்தில் திரும்ப வந்து சிரி கொரி பலகான் என்று கூப்பிட்டான். அதை அவன் கவனிக்கமல் அங்கு நடந்து போய்கொண்டிருந்த விமானப் பணிப்பெண்களின் பின்னழகில் மயங்கி நிற்க அந்த யெர்மன் காரன் வந்து அவனை கையில் பிடித்து சிரி கொரி பலகான் கம் என்று அழைத்துப் போனான்.அன்றே அந்த சாமியார் சொன்து போல் பலரது நிம்மதியை கெடுத்தபடியேதான் இருக்கின்றான். சாத்தானின் குழந்தை..சாத்திரி என்கிற பெயரில் :lol: :lol: :lol:

பி.கு...நான் ஒரு கட்டுரை எழுதியதற்காக ஒருவர் என்னை நீ சாத்தான் என்று முன்பொருதரம் திட்டியிருந்தார். இன்று கொஞ்சம் நேரம் கிடைத்து உண்மையில் அப்பிடி இருந்தால் எப்பிடியிருக்கும் எண்டு கற்பனையா நினைச்சு பார்த்தன் அதோடை அந்த பெயர் தான் எனதுமுழுப்பெயர். அந்த சாமியாரேதான் அதனை எனக்கு வைத்திருந்தார்.

இலவ(ஈழ)ம் காத்தவர்கள்

12:05 AM, Posted by sathiri, 2 Comments

இலவ(ஈழ)ம் காத்தவர்கள்

Posted Image

முற் குறிப்பு . இந்தக் கதையை புலிகள் அமைப்பின் தீவிர விசுவாசிகளோ கலாச்சாரத்தினை கண்களாக மதிப்பவர்களோ தவிர்துவிடுவது நன்று


சீறா லியோனின் லுங்கி விமான நிலையம்..நையீரியாவிலிருந்து வந்த விமானம் தரைதட்டுகின்றது. றோகன். சோம்பல் முறித்தபடி பக்கத்தேயிருந்த தாய்லாந்து அழகி நுயும் மை பார்த்து வந்துவிட்டோம். உனக்கு இந்தத் தடைவை புதுவிதமான அனுபவங்களாக இருக்கப்போகின்றது. எந்தச் சந்தர்ப்பத்திலும். சோர்வோ கோபமோ அடைந்து விடாதே எனக்காக எல்லாத்தையும் அனுசரித்துநடந்துகொள் என்றான்.மெல்லிதாக புன்னகைத்தவள் றோகனின் தோளில் சாய்ந்தபடி உனக்கொன்று தெரியுமா நான் எத்தனையோ ஆண்களுடன் உறவு வைத்திருக்கிறேன எத்தனை பேர் என்கிற கணக்குக்கூடத் தெரியாது ஆனால் உன்னை மட்டும்தான் நம்பி இப்படி தனியாக நாடு விட்டு வந்திருக்கிறேன். உனக்காக நான் மரணம்வரை வரவும்தயார். என்றவளின் கன்னங்களை மெதுவாக தடவிய றோகான். என்னுடைய ஒவ்வொரு பயணமுமே மரணம் வரையிலானதுதான் என்றவன் . சிரித்தபடியே இதுவும் மரணம் வரையிலான பயணம்தான் நியும். நான் ஒவ்வொரு தடைவையும் மரணத்தின் கதவை எனது திறமையால் திறக்கும் பொழுது அதிஸ்ரமும் உன்னைப்போல ஒரு அழகான பெண்ணும் கூடவே நிற்பதால் தப்பித்துக் கொள்கிறேன். ..

விமானம் நின்று பயணிகள் எழுந்து தங்கள் பொருட்களை அவசர அவசரமாக எடுத்துக்கொண்டு இறங்கத் தயாரானார்கள். பலமணிநேரம் விமானத்தில் பொறுமையாக பயணிப்பவர்களால் விமானத்தை நிறுத்தி சரியாக கதவு திறக்கப்படும் வரை ஒருசிலநிமிடங்கள் பொறுக்கமுடியவதில்லை எவ்வளவு அவசரம் ஏதோ பலமில்லியன் வியாபரம் பேசப்போகிறவர்களைப்போல ஓடுகிறார்கள் என மனதில் நினைத்தபடி பொறுமையாக இருந்து ஆறுதலாக தனது உடைகளை சரி செய்துவிட்டு நியும்மின் கைகளை கோர்த்துக்கொண்டு விமானத்திலிருந்து இறங்கிப்போய் குடிவரவுப்பகுதியில் அதிகாரியிடம் தன்னுடையதும் நியும்மினதும் கடவுச்சீட்டை நீட்டினான். அவனுடைய மலேசியக் கடவுச் சீட்டையும் அவளுடைய தாய்லாந்து கடவுச் சீட்டையும் அதிகாரி புரட்டிக்கொண்டிருக்க நியும்மை இழுத்து அவள் உதட்டில் இச்..வைத்துக்கொண்டிருக்கும் பொழுதே கடவுச் சீட்டில் ஓங்கி இறப்பர் முத்திரை குத்தும் சத்தம் கேட்டது. கடவுச் சீட்டுகளை வாங்கிக் கொண்டு பொதிகளை எடுத்தபடி வெளியே வந்தான். அங்கு வாசலில் பெயர் மட்டைகளை கைகளில் தாங்கிப் பிடித்தபடி நின்றவர்களை நோட்டம் விட்டான்
ஒருவன் மட்டையில் பன்னிச் செல்வம் எழுதி தூக்கிப் பிடித்தபடி நின்றிருந்தான். அதைப்பார்த்தும் கழுக்கென சிரித்தவன் அவனை நோக்கிப் போய் அவனிடம் அறிமுகம் செய்து விட்டு அவனது பெயர் எழுதியிருந்த மட்டையை வாங்கி தனது பொக்கற்றினுள் இருந்த பேனாவை எடுத்துபன்னீர்செல்வம்எனமாற்றிஎழுதிஅவனிடம்கொடுத்துவிட்டு அவனைப்பின்தொடந்து விடுதிக்குபோவதற்காக அவன் கொண்டுவந்திருந்த வாகனத்தில் ஏறி அமர்ந்தார்கள்.

இந்தத் தடைவை நீண்டபயணமாகிவிட்டது தாய்லாந்து தென்னாபிரிக்கா.நைஜீரியா என்று சுற்றியடித்து இறுதி இடத்திற்கு வந்து விட்ட பயணக்களைப்பு. பொதிகளை அறையில் போட்டுவிட்டு நல்ல வெத வெதப்பான நீரில் குளித்துவிட்டு வந்த றோகான் துடைத்த துவாய் துண்டை இடுப்பில் அணிந்தபடியே தனது சிறிய பிறீவ்கேசை திறந்து சில ஆவணங்களையும் வேறொரு கடவுச்சீட்டையும் எடுத்து மேசையில் வைத்துவிட்டு அன்றிரவு நடக்கவிருக்கும் சந்திப்பை மனதில் ஒத்திகை பார்த்தபடி இருந்தபொழுது குளிக்கப் போயிருந்த நியும்.மழையில் நனைந்த செவ்வரளிப்பூவைப்போல நீர் சொட்டச் சொட்ட இடையில் குறுக்கே கட்டியிருந்த துவாயுடன் இன்னொரு துவாயால் தலையை துவட்டியபடி வெளியே வந்தவளை அப்படியே அகல விரிந்த கண்களால் அடியிலிருந்து முடிவரை அங்கமங்கமாக அசைபோட்டு பார்த்தபடி கண்ணதாசன் அனுபவித்துத்தான் கவிதை எழுதியிருக்கிறான் என்று மனதில் நினைத்தான்

என்ன இப்பொழுதுதான் புதிதாய் புசிப்பது போலவே பார்க்கின்றாயே ...

உனக்கொன்று சொல்லட்டுமா என்வாழ்வில் எத்தனையோ பெண்களில் புகுந்திருக்கின்றேன். மறுதடைவை அவர்கள் புது முதுகைக்கூட தொட்டதில்லை ஆனால் நீ மட்டும்தான் எனக்கு புதிது புதிதாய் பிறந்தவள் போல் தெரிகின்றாய் அதன் மர்மம்தான் எனக்கு மனதில் தோன்றவில்லை.

அதுவா அவர்களைப்போல அன்னியமாய் உடலோடுமட்டும் உறவாடுவதில்லை உளஅன்போடு உறவாடுவது காரணமாயிருக்கலாம்.

என்னவோ போ உன்னை அப்படியே தின்னவேணும்போல் உள்ளது.

பார்த்தாயா ஆபிரிக்கா வந்ததுமே நீ நரமாமிச பட்சணியாகிவிட்டாயோ?

இல்லை நான் சைவப்புலி உன்னை கொல்லாமலேயே உண்ணப்போகின்றேன்.

இங்கேயும் புலிதானா??

நான் எங்கேயும் புலிதான். புலி வேட்டைக்குத்தயாராகி விட்டது

என்று பற்களை வெளியே காட்டி உர்..என்று உறுமியபடி கைகள் இரண்டையும் புலியின் கால்களைப்போல முன்னே நீட்டி விரல்களை பிராண்டுவது போல் அவளது மார்புகளை நோக்கி நகர்ந்தவனை அவள் செல்லமாய் தள்ளிவிட .அவனோ அவளை கட்டிலில் இழுத்து சரித்து அவள்மீது படர்ந்து அவன் இயங்க அவளோ அகம்மயங்க புறம்கயங்க ஈருடலும்ஓருயிராய்முயங்கியமுடிவில் மான் புலியை வேட்டையாடி விட்டது என்றபடி அவனின் மூச்சு மேலும் கீழுமாய் முட்டிமோத அவள் அவனிற்கு முத்தங்கள் இட்டுக்கொண்டிருந்தாள்.

முத்தமாரி பெய்துவிட்டெளுந்தவள் இரண்டு சிகரற்றுக்களை எடுத்து இரண்டையும் ஒரேதடைவை உதட்டில் புகுத்தி பற்றவைத்தவள் ஒன்றை அவனின் உதட்டில் பொருத்திவிட்டு ஜன்னல் ஓரமாக வந்துநின்று புகையை உள்ளிழுத்து ஊதியவள் இரவு நிகழ்வுகள் எல்லாம் ஏற்பாடாகிவிட்டதா என்றாள்.நீ சிறிது ஓய்வெடுத்துக்கொள் நான் மீண்டும் குளித்துவிட்டு வெளியே போய் வாடைகைக்கார் ஒன்றை எடுத்துக்கொண்டு தகவலும் அனுப்பிவிட்டு வருகிறேன் என்றவன் அவசரமாய் குளித்து உடைமாற்றிக்கொண்டு தயாராய் வைத்திருந்த கடவுச்சீட்டை எடுத்தக்கொண்டு வெளியேறியவன் விலை உயர்ந்த வாடைகைக்கார் என்றினை எடுத்துவிட்டு நேரத்தை பார்த்தான் . இப்பொழுது நேரம் சரியானதாயிருந்தது இப்பொழுது அவன் காத்திருப்பான் போனடிக்கலாமென நினைத்தவன் அங்கிருந்த வீதியோர தொலைபேசிக் கூண்டு ஒன்றில் புகுந்து ஒரு கிறெடிட்காட்டை செருகிவிட்டு இலக்கங்களை அழுத்தினான்.

இந்தோனிசியாவின் யலாங்பாரு பகுதியில் வீதியோரத்தில் இருந்த ஒரு தொலைபேசிக்கூண்டின் மணி அடித்தது அதனருகே தயாராய் நின்றிருந்த றிசி தொலைபேசியை எடுத்ததும்

என்ன பயணம் எல்லாம் நல்லபடியாய் முடிஞ்சதா என்றவும்.

ஓம் அதெல்லாம் நல்லபடி முடிஞ்சுது இரவு சந்திப்பு முடிஞ்சதும் காலைமை உன்னுடைய நேரம் ஆறுமணிக்கெல்லாம் இதே நம்பருக்கு திரும்ப அடிக்கிறன்.

இந்த முறை நீ சந்திக்கிறவன்தான் பெரிய ஆள் இப்பதான் முதன் முதலாய் நாங்கள் அவனை சந்திக்கிறம். அவனோடை கதைக்கிற ஒவ்வொரு வசனமும் கவனமாய் கதைக்கவேணும் அதுக்காகத்தான் உன்னை அனுப்பியிருக்கு கொஞ்சம் கதை பிழைச்சு அவங்களுக்கு சந்தேகம் வந்தாலும் உன்னை அங்கையே புதைச்சிடுவாங்கள் கவனம்.

அதெல்லாம் பிரச்சனையில்லை மச்சான் நான் கதைச்சே கவித்திடுவன்.

அது தெரியும் ஆனால் இந்தமுறை கட்டாயம் பெரிய சாமான் ஒரு இரண்டு மூண்டாவது எடுக்கிறதுக்கு றைபண்ணு அதுக்காக எவ்வளவு றிஸ்க்எடுக்கவும் தயாரெண்டு சொல்லு

கட்டாயம் முயற்சி செய்யிறன்.


இவனாலை ஏலும் எண்டுதான் நினைக்கிறன் பாக்கலாம்.
நட்சத்திர நாய்களும் மணந்து கொண்டு திரியிறாங்கள் உடைஞ்ச நாட்டிலை இப்ப அவங்களே தரகரா மாறியிருக்கிறாங்கள். எண்டு அறிஞ்சனான் எதுக்கும் கவனம்


நானும் அறிஞ்சனான் நான் பாத்துக்கொள்ளுறன்.

சரி நியும் எப்பிடி இருக்கிறாள் ஒண்டும் பயப்பிடேல்லைத்தானே கடைசி நேரத்திலை ஒண்டும் சொதப்பிப் போடாமல் பாத்துக்கொள்.

அவள் பிரச்சனையில்லை அவளுக்கென்ன ஊர் சுத்துற சந்தேசம். தனக்கு பிரான்சும் இங்கிலாந்தும் பாக்கவேணுமாம் ஒரே நச்சரிப்பு அவ்வளவுதான்


சரி நாளைக்கு நல்ல செய்தியோடை திரும்ப தொடர்பிலை வா
தெலைபேசி துண்டிக்கப் படுகின்றது.

000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
றோகன் வெள்ளை நிற நீளக்காற்சட்டையும் வெள்ளை நிற மேற்சட்யையும் அணிந்தவன் அதற்கு சிகப்புநிற கழுத்து கோவணத்தினை எடுத்து அணிந்து சரி பார்த்தவன் தயாராய் வைத்திருந்த சிகப்பு நிற மேலாடை(கோட்) அணிந்தபடி எப்படி இருக்கிறேன் என நியும்மை பார்த்துக் கேட்டான். களுக்கென சிரித்தவள். இதென்ன நிறக்கலவை ஆனாலும் பரவாயில்லையன்றாள். அவள் ஒரு விமானப் பணிப்பெண்ணைப்போல கறுப்பு நிறத்தில் குட்டை பாவாடை சட்டையோடு தயாராகியிருந்தவள் நான் எப்படி இருக்கிறேன் என்றாள். உண்மையை சொல்லட்டுமா?? மீண்டும் ஒருதடைவை அப்படியே ..உன்னை ஆனால் ஆடைகள் கசங்கிவிடும். வேண்டாம் போகலாம் என்றான்.

இருவரும் விடுதியை விட்டு வெளியே வந்ததும் அங்கு ராக்சியில் நின்றிருந்த ஒருவன் தன்னுடைய ராக்சியை பின்தொடருமாறு சைகை செய்தான். றோகன் தன்னுடைய வாடைகைக்காரில் அவனைப்பின்தொடர அது கடற்கரையோரமாக இருந்த பெரிய ஆடம்பர பங்களா ஒன்றின் முன்னால் போய் நின்றதும். ராக்சியை ஓட்டிவந்தவன் இதுதான் இடமென சைகையிலேயே காட்டிவிட்டு தொடர்ந்து போய்க்கொண்டிருந்தான். றோகானின் கார் பங்களாவினுள் நுழைய முற்படும்பொழுது வாசலில் நின்ற காவற்காறன் மறித்து அவர்களை இறங்க சொல்லி பணிவாய் கேட்டுக்கொண்டான். நான் மெமேயை (முகமட்) சந்திக்க வநதிருப்பதாக சொல்லி சட்டைப்பையிலிருந்த ஒரு கடதாசியை எடுத்து காவற்காரனிடம் நீட்டவே. அதை வாங்கியவன் நீங்கள் மெமேயை சந்திக்க வந்திருப்பது எனக்கு தெரியும் ஆனால் சிறிது நேரம் பொறுங்கள் என்றவன் இன்னொருத்தனை அழைத்து அந்தக்கடதாசியை கொடுத்தனுப்பினான்.

கடதாசியுடன் போயிருந்தவன் இன்னொரு பெண்ணுடன் திரும்பவும் வந்து அவர்களை பரிசோதித்துவிட்டு உள்ளே அனுப்பச்சொன்னதும். வந்த பெண் நியும்மையும் காவற்காரன் றோகனையும் காலில் இருந்து தலைவரை தடவிப்பார்த்து ஆயுதம் எதுவும் இல்லையென்று உறுதிசெய்தபின்னர். அவர்களது கைப்பையையும் பரிசோதித்து விட்டு அந்த பிரமாண்டமான சொகுசு பங்களாவினுள் அழைத்துச்சென்றனர். உள்ளே போகும் போதே றோகன் அந்த பங்களாவின் சுற்றாடலை நோட்டம் விட்டான் விறைப்பான காவலர்கள் சுற்றிவந்துகொண்டிருந்தனர் கைகளில் ஆயுதங்கள் எதுவும் இல்லை அவற்றை அவங்கள் மறைத்து வைத்திருந்திருக்கலாம். பங்களாவின் நடுவில் பிரமாண்டமான நீச்சல்தடாகம் எவளையும் காணவில்லை. காவலர்கள் அவர்கள்இருவரிடமும் ஒரு அறையை காண்பித்து அதற்குள் தங்கியிருக்குமாறும் மொமே வந்ததும் அழைப்பதாக பவ்வியமாககூறி விடைபெற்றனர். அறைக்குள் பலவகையான குடிபானங்கள் சிற்றுண்டி என்பன அழகாக அடுக்கிவைக்கப்பட்டு மொமேயினது நல்வரவு இவை உங்களிற்கானவை என ஒரு வரவேற்பு அட்டையும் வைக்கப்பட்டிருந்தது..அறையில் நுளைந்ததுமே அதன் ஜன்னலை திறந்து அந்த பங்களாவின் பிற்பகுதியை கவனித்தான் பங்களாவின் பிற்பகுதி கடற்கரை கடலில் இருந்து பெரியதாய் கால்வாய் வெட்டி பங்களாவரை வள்ளங்கள் வந்து போக வசதி செய்யப்பட்டிருந்தததோடு ஒரு ஆடம்பர வள்ளமும் நின்றிருந்தது.

ஜன்னலை சாத்திவிட்டு அங்கிருந்து பெரிய கண்ணாடியில் தன்னை ஒருதடைவை பார்த்தவன் ரையை சரி செய்தபடி என்ன நியும் எதுவும் பேசாமல் இருக்கின்றாய் பயமாக இருக்கிறதா?? என்றான். பயமா எனக்கா நீ அருகில் இருக்கும் பொழுது என்னையே எனக்கு ஞாபம் இருக்காது பயம் என்னுள் எப்படிவரும் இந்த புது சப்பாத்து வலிக்கிறது என்றபடி தன்னுடைய குதிக்கால் சப்பாத்துக்களை காலால் தட்டி கழற்றிவிட்டு அமர்ந்துகொண்டாள் நியும்.சிறிது நேரத்தில் அவர்களது அறை கதவு தட்டப்பட்டது..ஒருத்தன் பணிவாக மோமே வந்துவிட்டார் நீங்கள் மட்டும் வாருங்கள் என றோகனை அழைத்தான்.எப்படி மெமேக்கு வணக்கம் சொல்வதென மனதில் ஒத்திகை பார்தபடியே அறையை விட்டு வரவேற்பறைக்குள் நுழைந்தான் நன்கு உடற்பயிற்சி செய்து முறுக்கேற்றி உடல் அதனை காண்பிற்பதற்காகவே அரைக்கை பனியன் ஜீன்ஸ் அணிந்த சாராசரி உயரத்துடன் ஒருவன் அமர்ந்திருந்தான் அவன்தான் மெமேயாக இருக்குமோ என றோகன் நினைத்தமாத்திரமே எழுந்த அவன் வணக்கம் வாருங்கள் இந்த மொமே உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறான்.என்படி றோகனின் கைகளை குலுக்கும் பொழுதே எனக்கும்தான் உங்களை சந்தித்தில் மகிழ்ச்சி என்படி மெமேயின் தோளோடு தோள் மற்றி அணைத்து அறிமுகத்தை முடித்துக்கொண்ட பின்னர் அங்கு அமர்ந்து பேசத் தொடங்கினார்கள் அவர்கள் இருவரைத்தவிர வேறு யாரும் அங்கு இல்லை.மெமேயே பேசத் தொடங்கினான்

உங்கள் பொருட்களின் பட்டியல்கள் எனக்கு கிடைத்தது அதில் நீங்கள் திரும்ப திரும்ப கேட்கின்ற இலகு ஏவுகணைகள் மட்டும் பெற்றுக்கொள்ள முடியாது அது தவிர்ந்த அனைத்தும் ஒழுங்கு செய்யலாம்.

மொமே நீங்கள் முயற்சித்தால் முடியாதது என்று இல்லை அந்த நம்பிக்கை எமக்குள்ளது

ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள் எதிரெதிரான வல்லரசு நாடுகளே எழுதப்படாத ஒரு ஒப்பந்தத்தில் ஒன்று பட்டுநிற்கின்றனர் .எந்த போராட்டக் குழுக்களோ அல்லது ஆயுத குழுக்களின் கைகளில் ஆகாய எதிர்ப்பு ஏவுகணைகளை கொடுப்பதில்லையென்பதுதான் அது
ஆனால் யுத்தம் நடைபெறும் இடங்களில் அவர்களின் இரகசிய முகவர்களேதான் அதனை பயன்படுத்துவார்கள். உதாரணத்திற்கு வியட்நாமில் பாவிக்கபட்ட ஏவுகணைகளை இரஸ்யா கே.ஜி.பி முகவர்களும் ஆப்கானில் சி.ஜ.ஏ முகவர்களுமே கையாண்டனர் கியுபாவிலும் அதுவே நடந்தது. இங்கெல்லாம் யுத்தம் முடிவிற்கு வந்ததுமே முதல் வேலையாக அவர்கள் ஏவுகணைகளை திருப்ப பெற்றுக்கொண்டு விட்டனர்.


ஏன்??

அவை தீவிரவாத குழுக்களின் கிடைத்து தங்கள் பயணிகளின் விமானங்களின் மீது பயன்படுத்தப்படலாம் என்கிற அச்சம் காரணமாக இருக்கலாம். பயணிகள் விமனம் மீது இலகுவாக அவற்றை கொண்டு தாக்கலாம்.
உங்களிடமிருந்து முன்னர் நாங்கள் பெற்றுக்கொண்டிருக்கிறோமே??

அவை சாம் பழைய தயாரிப்புக்கள்தானே உடைந்த இரஸ்சியாவில் எம்மால் முடிந்தது அவ்வளவுதான். அதனால் நவீன குண்டு வீச்சு விமானங்களை ஒன்றும் செய்திருக்க முடியாதே உங்களால். அங்கேயும் நீங்கள் தவறிளைத்திருக்கிறீர்கள். ஒரு பயணிகள் விமானத்தை விழுத்திய செய்தி


அது ஏதே தவறாக நடந்துவிட்டது

அதேதான் அதுதான் தவறு இனிமேலும் அதற்கு முயற்சிக்காதீர்கள் அப்படி முயற்சித்தால் நீங்கள் உளவமைப்பு முகர்களிடம் மாட்டிவிடும் அபாயம் உள்ளது. அடுத்த விடயங்களிற்கு வருவோம். இந்தத் தடைவை பணத்தைவிட பொருட்களாகவே எதிர் பார்க்கிறோம். என்னதான் தென்அமெரிக்கா கெக்கெயின் கிடைத்தாலும் ஆசியா கெறோயினிற்கும் கஞ்சாவிற்கும் உள்ள மதிப்பே தனியானது. அதோடு ஒரு உதவியும் வேண்டும் எங்கள் பொருட்கள் சிலவற்றை வடஅமெரிக்க கரையொன்றில் நீங்கள் இறக்கிவிடவேண்டும் அவ்வளவுதான் நீங்கள் சரி சொன்னால் மிகுதி சரி


பொருட்கள் சரி ஆனால் உங்கள் பொருட்களை இறக்குவது நான் முடிவெடுக்க முடியாது அதனை கேட்டுத்தான் சொல்லவேண்டும். ஆபிரிக்காவின் பாதாள அரசனால் அங்கு போக முடியாதா?

நான் என்னதான் பாதாள அரசனாயிருந்தாலும் உங்கள் கடல் வலையமைப்பு என்பது பிரமாண்டமானது . உலக நாடுகளிற்கே தலைவலியை கொடுக்கின்றது அந்தளவிற்கு இன்னமும் என்னால் முடியவில்லை அது எப்படி உங்களால் சாத்தியம்.

எல்லாம் எங்கள் தவைனின் திறமை அதற்கென தேர்ந்தெடுத்து திறமையானவர்களை நியமித்திருக்கிறார்.


இப்பொழுது எங்கள் பேரம் முடிந்துவிட்டது சாவகாசமாக பேசலாமா? உங்கள் கட்டுப்பாட்டு பகுதிகளில் நீங்களே உற்பத்தி செய்யலாமே ஏன் வேறு நாடுகளில் இருந்து கடத்தவேண்டும்.
எங்களது தேசம் உன்னதமான தேசமாக உருவாக்குகின்றோம். அங்கு போதைப்பொருட்கள் கிடையாது விலைமாந்தர் கிடையாது பிச்சையெடுப்பவர் கிடையாது அனாதைகள் கிடையாது

மெமே சத்தமாய் சிரித்தபடி.. என்ன சொல்கிறாய் உங்கள் தேசம் உருவானால் அதில் முதலில் பாதிக்கப்படபோவது நீதான்.


அது எனக்கும் தெரியும் எனது தேசம் உருவாகின்ற அந்தப் பொழுதே நான் தற்கொலை செய்து கொள்வேன் அங்கு என்போன்றவர்கள வாழமாட்டார்கள்.

சரி எதற்கு இப்படி .. மிகுதி முடிவை பின்னர் சொல் இனி நாங்கள் வாழ்க்கையை அனுபவிக்கலாம். அடுத்த பகுதியில் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றது உங்கள் நண்பியையும் அழைத்து வாருங்கள் போகலாம்.


அந்த அறையில் விருந்து ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது தேவைக்கு அதிகமானதாகவே உணவும் குடிவகைகளும் அடுக்கிவைக்கப்பட்டிருந்தது நியும் முடன் உள்ளே நுளைந்த றோகனிடம் என்ன குடிக்கிறாய் சம்பெயினா??கொக்ரெயிலா? என்றான் மெமே சம்பெயின் என்றதும். சம்பெயினோடு உனக்கு ஒரு அழகையும் சேர்த்து தருகிறேன். இதோ அந்த அழகி மக்கும்பா இவள் உனக்காக என்று ஒருத்தியை நோக்கி கையை காட்டிய மொமே. கறுப்பழகிகளை உரித்துப்பார்த்திருக்கின்றாயா என்றான்.அதெல்லாம் சர்வதேச ரீதியிலேயே உரித்திருக்கிறேன். ஆனால் இவள் பேரழகியாக தெரிகின்றாள்.


மேடையில் வலம்வரும் மொடல் அழகியை போல ஒருத்தி சம்பெயினை கையில் ஏந்தியபடி றோகனை நோக்கி வந்து கொண்டிருந்தாள். அவளைப்பார்த்தால் பிறந்து வளர்ந்தவள் பேல தெரியவில்லை அங்கங்கள் எல்லாம் அளந்து செய்து அச்சில் வார்த்தெடுக்கப் பட்டவள் போல இருந்தாள்.இதோ என்னுடைய பரிசு என்று நியும்மை மொமேக்கு அறிமுகம் செய்த றோகன். நீ எப்படி ?? .எனக்கு ஆசிய அழகி இதுதான் முதற்தடைவை நன்றிகள் என்றான் மெமே .மதுக்கிண்ணங்கள் ஒன்றோடென்று உரசிக் கொண்டன. ஒருவன் சிறிய பொட்டலம் ஒன்றினை கொண்டுவந்து அங்கிருந்த கண்ணாடி மேசையில் பிரித்து பரப்பி பின்னர் அதனை மெல்லிய நீள் கோடாக்கிவிட்டு கொக்ரெயில் கிண்ணத்திலிருந்த ஒரு ஸ்றோ(குளாய்) வை எடுத்து அதை இரண்டாக வெட்டி ஒன்றை றோகனிடமும் மற்றையதை மொமேயிடமும் நீட்டிவிட்டு போனான். நேராக உறுஞ்சிய இரு குளாய்களும் ஒரு புள்ளியில் வந்து முட்டி நின்று கொண்டது.

ஒரு அழகிய சுருட்டு பெட்டி ஒன்றினை திறந்து றோகனிடம் நீட்டிய மொமே இவை கியூப விசேட சுருட்டுகள் ஒன்றை பிடித்துப்பார் என்றதும் சிந்துபோயிருந்த கண்களுடன் ஒரு சுருட்டை எடுத்து மூக்கின் குறுக்கே வைத்து கண்களை மூடி ஆழமாய் அதன் வாசனையை உள்ளேயிழுத்தான். அவனின் தந்தையின் மார்பில் தவழ்ந்தது போலவே ஒரு உணர்வு
00000000000000000000000000000000000000000000000000000000000000000

குகநாதன் அதிகம் படிக்காதவர் யாழ்ப்பாணம் தாவடியில் சாதாரண வியாபாரி ஊரில் வியாபாரம் செய்து கொண்டிருந்தவர் வாழ்க்கையில் எதையாவது சாதிக்கலாமென நினைத்து சுடுட்டு கட்டுகளோடு இரயிலேறியவர். தலவாக்கலையில் சுருட்டுக்கடை முதலாளியாகியிருந்தார். லயத்தில் வாழ்ந்த வேலம்மாள் காதலியாகி மனைவியானாள். ஒரு ஆண் குழந்தை பிறந்தது றோகன் என பெயர் வைத்தார் தான் அதிகம் படிக்கவில்லை மகனை பெரிய படிப்பு படிக்கவைத்து சாதாரண யாழ்ப்பாணத்து மக்களின் மனங்களில் உறைந்து போன வைத்தியர் அல்லது பொறியிலாளர் அதுதான் அவரது கனவு. அவரது கனவும் மகனும் வளர்ந்தது. தொண்டமானிக்கு எலக்சன் வேலை செய்து தொண்டமானும் வெற்றி பெற்றுவிட அவரிடம் மகனிற்கு கொழும்பின் றோயல் கல்லூரியில் இடமும் வாங்கி விடுதியிலும் சேர்த்துவிட்டிருந்தார்.றோகனும் உயர்தரம் படித்துக்கொண்டிருந்த ஜீலை 23 ம் நாள் அவனைச்சுற்றி என்னவோ எல்லாம் நடந்து கொண்டிருந்தது. தமிழில் ஓலச்சத்தங்களும் சிங்களத்தில் பிடி .வெட்டு .கொலை செய் எக்கிற சத்தம் மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது சிலர் சிங்களத்தில் கெஞ்சிக் கொண்டிருந்தார்கள். போலிசும் இராணுவமும் அவனது விடுதிக்கு முன்னால் காவல் நின்றனர். றோகனிற்கு ஒன்றுமே புரியவில்லை. அவனுடன் கூட இருந்த சிங்கள மாணவர்கள் அவனை வெளியே போகவேண்டாம் என தடுத்தனர். சின்ன வயதிலிருந்தே சிங்களத்தில் மட்டுமே பேசிப்பழகிய றோகனிற்கு அப்பொழுதுதான் தான் ஒரு தமிழன் என்று உறைத்தது.அப்பா அம்மாவை பார்க்கவேண்டும் என தவித்தான் ஒரு கிழைமை கழித்து சிங்கள நண்பன் ஒருவனுடன் ஊருக்கு போயிருந்தான் அவனது வீடும் தந்தையின் கடையும் இருந்த இடத்தில் சூடு அடங்கியிருக்காத சாம்பல் மட்டுமே இருந்தது.

தாயை ஒரு அகதி முகாமில் தேடி கண்டு பிடித்தபொழுது ஓடிவந்து கட்டிப்பிடித்து அழுதவர் அப்பவிட்டை சுருட்டு கடன்வாங்கிற றோகித்தான் கத்தியாலை குத்தி கடையோடை சேர்த்து கெழுத்தினவன் என்று சொல்லி புரண்டு அழுதார். அதுதான் சாம்பலின் சூடு அடங்கவில்லையென அவனிற்கு புரிந்தது. அடுத்தது என்ன எல்லாமே சூனியமாக தெரிந்தது. தோட்டக்காட்டாளை கலியாணம் செய்திட்டான் என்கிற காரணத்திற்காக ஒட்டு உறவு வைத்திராத தந்தையின் குடும்பத்திலிருந்து ஒரு சகோதரியை மட்டும் அவர் ஊர் கோயில் திருவிழாவில் போய் பார்த்துவிட்டு முருங்கைக்காயும் மாம்பழமும் கொண்டுவருவார்.

உன்ரை மாமி நல்லவா இந்தா உனக்கு உடுப்பு வாங்கி தந்திருக்கிறாரெண்டு றோகனிற்கு அதை போட்டுவிட்டு கட்டிப்பிடித்துக்கொள்வார். அவர் சொன்ன தகவல்களை மட்டுமே வைத்துக்கொண்டு யாழ்ப்பாணம் பயணமானார்கள்.
அவனது மாமி உண்மையிலேயே நல்லவர்தான் இளவயதில் சாதி மாறி ஒருத்தரை காதலித்திருந்தாராம் அவர் காதலித்தவரை அவரது உறவுகள் வெட்டி கொலை செய்து தாவடிசுடலையில் போட்டிருந்தார்களாம். அதையறிந்த மாமிக்கு மன பிறள்வு ஏற்படவே அவரை சுதுமலை அண்ணாமலை பரியாரியின்ரை இடத்திலை கொண்டு போய் விட்டிட்டனமாம். அதை கேள்விப்பட்டு றொகனின் தந்தைதான் அவரிற்கு வைத்தியம் பார்த்தது மட்டுமில்லாமல் மாதா மாதம் செலவிற்கு பணமும் அனுப்பியிருக்கிறார் அவர் இப்பொழுது சுதுமலை சிம்மையா பாரதி பாடசாலையில் ஒரு ஆசிரியை பிறகு திருமணமே செய்து கொள்ளவில்லையென்தை நேரில் தேடி கண்டு பிடித்தபொழுது றோகன் அறிந்து கொண்டான். இவனின் கொச்சைத்தமிழ் ஊரில் இவனிற்கு சிங்களவன் என்கிற பட்டத்தை வாங்கிக் கொடுத்தது அவனை தொடர்ந்து படிப்பதற்காக இந்தியா அனுப்பிவிட்டிருந்தனர். மிகுதி படிப்பினை இந்தியாவில் படித்து முடித்தவன் மும்பையில் கப்பல் தெழில்நுட்பம் படித்தவன் அப்பொழுதே புலிகளின் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டான். மிகுதி படிப்பினை அயர்லாந்தில் பூர்த்தி செய்ததும் அப்படியே புலிகளுடன் இணைந்து கொண்டான். இவனது பலமொழியறிவு பேச்சு திறைமை இன்று பேரம் பேசுபவனாகியிருக்கிறான்.
00000000000000000000000
என்ன சுருட்டை உருட்டி உருட்டிப்பார்த்துக்கொண்டிருக்கிறாய் என்றபடி மக்கும்பா சுருட்டின் நுனியை வெட்டி அதில் நெருப்பை மூட்டிவிட்டாள்.அன்றிரவு அளவுக்கதிகமாக போதையேறிவிட்டதனால் ஏதோ ஒப்பிற்காக கொஞ்சம் சாப்பிட்ட றோகன் கறுப்பழகியை அழைத்துக்கொண்டு அறைக்குள் நுளைந்ததும் பேரங்கள் நல்லபடியாய் முடிந்த விடயத்தை றிசிக்கு தெரியப்படுத்தவேண்டும் தூங்கிவிடக்கூடாது என்று நினைத்தவன் தன்னுடைய கைக்கடிகாரத்தில் ஒரு இருபது நிமிடங்கள் கழித்து அலாரம் வைக்கலாமா என யோசித்தான். சே இப்படியொரு பேரழகியுடன் வெறும் இருபது நிமிடங்களா இன்னொரு இருபது நிமிடங்கள் என்று நாற்பது நிமிடங்கள் கழித்து அலாரத்தை வைத்தான்.அலாரம் அடிக்கமுதலேயே அவன் வியர்த்து களைத்து ஓய்ந்து போனவன் எழுந்து உடைகளை அள்ளி அணிந்து கொண்டான் கொஞ்சம் போதையும் இறங்கியதுபோல இருந்தது.சிறிது நேரத்தில வருகிறேன் என்று அவளிடம் சொல்லிவிட்டு வெளியேறியவன். மீண்டும் விடுதிக்கு வந்து போனடிக்க வேண்டிய நேரம் வருமவரை காத்திருந்து. இலக்கங்களை அழுத்தினான் இந்தோனேசியா யலாங்பாரு வீதியோரத்து தொலைபேசி கூண்டு மணி அடித்தது. றிசி தொலைபேசியை எடுத்தான்.
என்னமாதிரி

எல்லாம் நல்படியா முடிஞ்சுது ஆனால் ஒரு புது டீலை போடுறான். அது சரியெண்டால் மிச்சம் சரி

என்னது புது டீல்

ஆபிரிக்கா நாடு ஒண்டிலை உள்ள அவனது பொருட்களை வட அமெரிக்கா கரை ஒன்றில் இறக்கிவிடவேணுமாம்.
அது முடியாதெண்டால்
அதைத்தான் அவன் முதலாவதாக எங்களிட்டை எதிர்பார்க்கிறான். சரியெண்டால் எல்லாம் சுலபமாகும். உடைஞ்ச கிழக்கு நாட்டிலை பாதியும் மிச்சம் வழைமையான கறுப்பு நாட்டிலையும் போய் ஏத்தவேண்டியதுதான்.

சரி பெரியது கிடைச்சதா??

அதைப்பற்றி கதைக்கவேண்டாம் எண்டிட்டான். முடியாதாம்.

சரி நான் முடிவு சொல்ல முடியாது அங்கை கேட்டு சொல்லுறன் ஒரு பதினைஞ்சு நிமிசம் கழிச்சு திரும்ப எடு
மீண்டும் தொடர்பை ஏற்படுத்தியவன்
என்னவாம்

டீல் ஓகேயாம். ஏத்தி இறக்கிற இடம் விபரங்களை அனுப்பிவிடு

சரி மச்சான் அதோடை இந்தமுறை நானும் ஒருக்கா ஊருக்கு போயிட்டு வரலாமெண்டு நினைக்கிறன். அம்மாவை பாத்து கனகாலமாகுது நான் எங்கை எப்பிடி இருக்கிறன் எண்டு கலைப்பட்டுக்கொண்டிருப்பா நான் வாறன் எண்டு அங்கை அறிவிச்சுவிடு

சரி நியும்மை பத்திரமா திருப்பி அனுப்பிட்டு நீ வழமையான தீவுக்கு போய் நில். அங்கை வண்டிவாற நேரம் நான் உனக்கு செய்தியனுப்பிறன்.

மிச்சம் குடுக்க வேண்டியது எங்கையாம்.

மொறிசியசில் ஒரு பாங்கிலை போட்டால் சரி அந்த விபரமும் அனுப்பி விடுறன். சரி மச்சான் சந்திப்பம் ..


புலிகளின் இரண்டு கப்பல்கள் முல்லைத்தீவு கடலில் சிலநாட்கள் நங்கூரமிட்டுவிட்டு திரும்பவும் சர்வதேச கடலில் இறங்கிப் போய்க்கொண்டிருந்தன.
றோகனிற்கு என்னென்ன சாப்பாடுகள் பிடிக்குமோ அத்தனையும் அவனிற்கு தாயாரும் மாமியும் செய்து அவனை திக்குமுக்காடவைத்துக்கொண்டிருந்தனர். வன்னியில் ஓயாதஅலை 3 சுழன்றடித்துக்கொண்டிருந்தது
00000000000000000000000000
2001 ம் ஆண்டின் இறுதியில் புலிகள் அமைப்பின் அதிகார நிருவாக மாற்றங்கள் நடந்தேறியது அதில் றோகனின் நண்பர்கள் பலரும் விலக்கப்பட்டு தனிவாழ்க்கைக்கு திரும்பி விட்டிருந்தனர். றொகனையும் பேரம் பேசலில் இருந்து திரும்பவும் கப்பலிற்கேமாற்றிவிட்டிருந்தார்கள். பேரம் பேசும் காலங்களில் அவனது போதை பழக்கம் மற்றும் அவனிற்கு பிடித்திருந்த ஆஸ்மா என்பவற்றால் அவனால் தாக்குப் பிடிக்கமுடியவில்லை அவனையும் வெளியேறுமாறு 2003 ல் உத்தரவுவந்தது,ஏதாவது நாட்டில் அகதி தஞ்சம் கோரலாமென நினைத்தவன் அதற்கு முன்னர் நியும் அடிக்கடி நச்சரிக்கும் பிரான்சை சுற்றி காட்டிவிடலாமென நினைத்து அவளை அழைத்துவந்து மூன்று வாரங்கள் பாரிஸ் நகரெங்கும் சுற்றி காட்டினான். அந்த மூன்று வாரங்கள் அத்தனையையும் மறந்து மகிழ்ச்சியாக கழித்தவன் மீண்டும் நியும்மை தாய்லாந்திற்கு திருப்பியனுப்பிவிட்டு அவனிற்கு பிடித்த சுவிஸ் நாட்டில் அகதியாக தஞ்சம் புகுந்தான்.அப்பொழுதுதான் அவன் வாழ்க்கையில் சூனியத்தை உணர்ந்தான் ஒரு முறை தற்கொலை செய்து கொள்ளலாமா எனவும் யோசித்திருந்தான் ஆனால் இதுவரை நான் அம்மாவிற்கு என்று எதுவுமே செய்ததில்லை நாடு நாடு என்று ஓடியே நாட்கள் போய்விட்டிருந்தது.

நானும் இறந்துவிட்டால் அவரின் இறுதிக்காலங்கள் கவலையிலேயே கழிந்துவிடும் எனவே இனி முடிந்தளவு அவரை நல்லபடியாக பார்க்கவேண்டும் என நினைத்து தற்கொலை முடிவைமாற்றிவிட்டடிருந்தான். சுவிஸ் அகதிமுகாம் வாழ்க்கை வைத்திய ஆலேசனைகள் அவனை போதைப்பழக்கத்திலிருந்தும் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே கொண்டுவந்திருந்தது. காலமும் மனதைமாற்றியது .தமிழர்கள் அதிகமற்ற ஒரு அழகிய கிராமத்தில் அவனிற்கு வீடும் கிடைத்தது உருண்டோடிய வருடங்களில் நாட்டு நிலைமைகளை செய்திகளில் மட்டுமே படித்துக்கொண்டிருந்தான். தாயாரைத்தவிர வேறு எந்த தொடர்புகளையும் அவன் வைத்திருக்கவில்லை அதன் காரணம் ஒன்று அவன் விரும்பவில்லை அடுத்தது சுவிஸ் பொலிஸ் அவன் யாரென்று எப்படியாவது மணந்து பிடித்துவிடுவார்களோ என்கிற பயம். அப்படியான தொரு காலத்தில் 2005 ம் ஆண்டு ஒருநாள் பிரான்சில் இருந்து ஒலிபரப்பாகும் வனொலியை கேட்டுக்கொண்டிருந்தபொழுது அதில் கலந்துகொண்டிருந்த ஒரு குரல் அவனிற்கு பழக்கமானது வானொலி நிலையத்திற்கு போனடித்து அவனது இலக்கத்தை வாங்கி அதனை அழுத்தியவன்.

கலோ என்கிற சத்தத்திற்கு
றோயர் றோயர் றிசி என்றான்.

றிசிக்கு ஒரே ஆச்சரியம்எப்பிடி மச்சான் இருக்கிறாய் எப்பிடி என்ரை நம்பரை கண்டு பிடிச்சனி??

நீதான் கையையும் வாயையும் வைச்சுக் கொண்டு சும்மாயிருக்க மாட்டியே கண்டு பிடிக்கிறது பெரியகஸ்ரமோ??

சரி சுவிஸ் நம்பர் விழுது ஆனால் நீ எங்கை நிக்கிறாய்

சுவிசிலைதான் இருக்கிறன் மூண்டு வருசமாய்

ஓ ஏன் உன்னையும் கழட்டி விட்டிட்டாங்களா?

ஓம் மச்சான் இப்பதான் வீடு தந்து ஒரு வேலையும் கிடைச்சிருக்கு

நியுமோடை தொடர்பு இருக்கோ இப்பவும்.

ஓமடா கதைக்கிறனான் எனக்கொரு மகனும் இருக்கிறான்.

ஓ உன்னோடையா இருக்கிறாள் .

இல்லை கடைசியா எல்லாம் விட்டிட்டு வரேக்கை அவளை பாரிசிற்கு கூட்டியந்து ஒரு மூண்டு கிழைமை நிண்டனாங்கள். பிறகு அங்கை அனுப்பிட்டு அவளையும் அந்த தொழிலை கைவிட்டிட்டு கடைசியாய் என்னட்டை கையிலை இருந்த காசை அனுப்பி அவளின்ரை கிராமத்திலை ஒரு கடைபோட்டு குடுத்தனான். ஒருநாள் போனடிச்சு தான் சுகமில்லாமல் இருக்கிறதாய் சொன்னாள். எனக்கு விருப்பம் இல்லை ஆனால் நானும் இல்லை தனக்கெண்டும் ஒருத்தரும் இல்லை அதாலை தனக்கொரு பிள்ளையாவது வேண்டும் எண்டு அழுது அடம் பிடிச்சாள். பிறகு என்னத்தை சொல்லுறது.

என்ன செய்யப் போறாய் கூப்பிடுற யோசனை ஏதும் இருக்குதோ??

நானும் அவளளோடை எல்லாம் முடிஞ்சுது எண்டுதான் நினைச்சனான் ஆனால் நான்தான் நல்லதொரு மகனாய் இருக்கேல்லை ஆனால் நல்லதொரு அப்பாவாய் இருக்க முயற்சிக்கிறன். இங்கை பதியேக்கை கலியாணம் செய்யேல்லையெண்டு சொல்லிட்டன். அதாலை நான் அங்கைபோய் அவளை எழுதிட்டுதான் கூட்டியரலாம்

நல்லது அதை செய்யவேண்டியதுதானே

இப்பதான் வீடு தந்திருக்கிறாங்கள் இன்னமும் விசா கைக்கு வரேல்லையடா அதை தந்தால்தான் நான் எதுவும் செய்யலாம் அது கையிலை கிடைச்சதும் அதுதான் முதல் வேலை அம்மாட்டையும் சொல்லிட்டன்


மகனுக்கு என்ன பெயர்

நான் தான் வைச்சனான் திலீபன்.


இப்படியாக அவர்களது உரையாடல் பழைய நினைவுகளை மீட்டியதாகவே அதிகாலைவரை தொடந்து கொண்டேபோனது...

2008 ம் ஆண்டு தாயகத்தின் நிலைமை மேசமானதாய் மாறிக்கொண்டேயிருந்தது பழைய வெளிநாட்டு கட்டமைப்பினரை உதவுமாறு தொடர்புகளை தேடியெடுத்து திரும்ப திரும்ப அழைப்பு விடுத்தக்கொண்டிருந்தார்கள். அப்படியானதொரு காலத்தில் மீண்டும் றோகனிடமிருந்து றிசிக்கு ஒரு அழைப்பு

என்னமச்சான் நிலைமை மேசமாய் போகுது

ஓமடா பாத்துக்கொண்டுதான் இருக்கிறன் என்ன செய்யிறது

என்னை எப்பிடியோ தேடிப்பிடிச்சு எஸ்.ஓ தொடர்பெடுத்தது

என்னவாம்

வண்டியொண்டு சமானோடை வெளிக்கிடுதாம் வரட்டாம்.

என்ன செய்யப் போறாய்

போறதெண்டு முடிவெடுத்திருக்கிறன்

உனக்கென்ன விசரோ??

இருக்கலாம் மச்சான் ஆனால் இப்ப நடக்கிறது விடுதலைப் போராட்டம் இல்லை. வாழ்வா சாவா எண்டிறது இப்ப போகமல் இருந்திட்டு பிறகு கவலைபட்டு பிரயோசனம் இல்லை.

எனக்கென்னவோ புத்திசாலித்தனமாய் தெரியேல்லை

உன்னட்டையிருந்து இப்பிடியொரு பதிலை நான் எதிர் பார்க்கேல்லையடா எத்தனைதரம் முடியாதெண்டு தெரிஞ்சே முட்டி மோதியிருக்கிறம். விதியை மாத்தியிருக்கிறம்.


இது விதியில்லை பல நாடுகளின்ரை மதி. சதியெண்டும் சொல்லாம்.கொஞ்சம் கஸ்ரம். இந்தனோசியாவிலை ஸ்ரிபன் பிடிபட்டதோடையே சர்வதேச வலையமைப்பு நட்சத்திர நாயளிட்டையும் பக்கத்து நாயளிட்டையும் போயிட்டுது. இனி என்ன செய்தாலும் கஸ்ரமடா. வடிவா கவனிச்சு பார் குறிப்பிட்ட இடத்தை தாண்டினதுமே அடிக்கிறாங்கள். தொடந்து ..ஒண்டு இரண்டில்லை ஒன்பது அடிபட்டிட்டுது இனியும் நம்பிக்கை இருக்கா உனக்கு

இருக்கடா மாத்தலாம் பாதையை மாத்தலாமெண்டு இருக்கிறன் அதுக்குத்தான் என்னை கேட்டிருக்கினம். ஏன் உன்னை கூப்பிடேல்லையா
என்னை கேட்டவைதான் ஆனா யோசிச்சுபார் எட்டுவருசம் எந்த தொடர்பும் இல்லை திரும்ப ஆரம்பத்திலையிருந்து தொடங்க முடியாது அது உதவாது அதாலை மாட்டன்எண்டிட்டன்.

நீ ஒரு சுயநலவாதியடா இப்ப குடும்பம் பிள்ளையை விட்டிட்டு போக உனக்கு மனசில்லை
அப்பிடி நீ நினைச்சாலும் பரவாயில்லையடா ஆனால் எனக்கென்னவோ அவன் பிடிபட்டதுமே எல்லா கப்பல்லையும் அவனை வைச்சே ஏதாவது ஜி.பி.எஸ் பொருத்தியிருப்பாங்களோ எண்டு நினைக்கிறன் காரணம் அவன் பிடிபட்ட ஒருமாதம் அவன் எங்கையெண்ட விபரமே தெரியாமல் இருந்தது


நான் போறதெண்டு முடிவெடுத்திட்டன் ஆனால் ஒரு உதவி உன்னட்டை கேக்கிறன்

என்னது

நான் சிலநேரம் திரும்பி வராமல் போனால் என்ரை மகனின்ரை பிறந்தநாளுக்கு மட்டும் ஒரு உடுப்பு பாசல் பண்ணிவிடு மச்சான் .அப்பாவின்ரை இழப்பெண்டால் எனக்கு என்னவெண்டு தெரியும் அதை அவனும் அனுபவிக்கவேண்டாம். அவனின்ரை பிறந்தநாள் வருசம் பிறந்த முதலாம் திகதிதான் விலாசம் அனுப்பி விடுறன்.


அப்பிடியெல்லாம் நடக்காது போயிட்டுவாடா.

துருக்கி நாட்டில் இருந்து போய் வருகிறேன்என்று றோகனின் ஒரு எஸ் எம் எஸ் றிசிக்கு வந்திருந்தது
ஒரு மாதம் கழித்து 20 ந்திகதி மார்கழி மாதம் 2008 ம் ஆண்டுவேலையில் நின்றிருந்த அவனிற்கு ஒரு தொபேசி அழைப்பு ..செய்தி பாத்தியா.
இல்லை என்ன நடந்தது
செய்தியை பார்

அவசரமாக வேலைடயிடத்து கணணியில் செய்திகளை தேடுகிறான்.


இன்று அதிகாலை 2.00 மணியளவில் முல்லைத்தீவுக் கடற்பரப்பில் புலிகளின் ஆயுதக்கப்பல் ஒன்று மூழ்கடிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. அச்செய்தியில் மேலும் முல்லைத்தீவு கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமான கப்பலொன்றை அவதானித்த ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் கப்பலில் உள்ளவர்களை தமது அடயாளங்களை உறுதிப்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்த போது கப்பலில் இருந்து படையினைரை நோக்கி தாக்குதல் நாடாத்தப்பட்டதாகவும் கடற்படையினர் எதிர்தாக்குதல் நாடாத்தியபோது அக்கப்பலில் இருந்து பாரிய வெடிச்சத்ங்களுடனான தீச்சுவாலை வெளிவந்ததாகவும் தெரிவிக்கின்றது.

அத்துடன் அக்கப்பல் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதுடன் அக்கப்பலுக்கு உதவிக்கு வந்த புலிகளின் நான்கு படகுகளும் அழிக்கப்பட்டுள்ளதாக அச்செய்தி மேலும் தெரிவிக்கின்றது.
000000000000

மூன்று வருடங்கள் உருண்டோடி விட்டிருந்த வருடக் கடைசியின் ஒரு காலையில் றிசியின் கைத்தொலைபேசி யில் ஒரு செய்தி வந்திருந்தது திறந்து பார்த்தான் நன்றிகள் சகோதரா இந்தவருடமும் உங்கள் பரிசுப் பொதி கிடைத்தது மகனிற்கு மகிழ்ச்சி நன்றாக படிக்கிறான் அப்பா எப்போ வருவார் எனக் கேட்டான். வளர்ந்து விட்டான் இனி அவனது தந்தைபற்றிய விடயத்தை அவனிற்கு சொல்லாமென நினைக்கிறேன் உங்கள் ஆலோசனை தேவை.. செய்தியை படித்த றிசி பதிலொன்றினை எழுதி அனுப்பிவிட்டிருந்தான் அது ' இப்பொழு எதுவும் சொல்லவேண்டாம் அவன் படிப்பை குழப்பிவிடுவான் இன்னும் சில வருடங்கள் போகட்டும். அதுவரை அவனது பிறந்தநாளிற்கு பரிசுகள் வந்தபடி இருக்கும் நன்றிகள்.

யாவும் உண்மை


கதையை இலகுவாக புரிந்து கொள்ள சில குறிப்புக்கள்.
நட்சத்திர நாடு.. அமெரிக்கா
நட்சத்திர நாய்கள் .அமெரிக்கா சி.ஜ.ஏ உளவமைப்பு மற்றும் அவர்களிற்காக பணத்திற்கு வேலை செய்பவர்கள்
உடைந்த கிழக்கு நாடு. உக்ரேய்ன்.
கீழ் கறுப்பு நாடு ..எரித்தியா
எஸ்.ஓ . புலிகளின் கடற்படை தளபதி சூசை
நட்சத்திர நாய்களின் பக்கத்து நாய்கள். கனடா உளவமைப்பு
வழைமையான தீவு .சீசெல்ஸ்.

அனைத்துலகச் செயலகம் vs தலைமைச்செயலகம்.

8:50 AM, Posted by sathiri, No Comment

அனைத்துலகச் செயலகம் vs தலைமைச்செயலகம்.

சாத்திரி ஒரு பேப்பரிற்காக


இந்த வருடம் மாவீரர் தினம் ஜரோப்பாவிலை பெரும்பாலான நாடுகளிலை அனைத்துலகம் தலைமைச்செயலகம் இரண்டு பிரிவாக இரண்டுமே வேறு வேறு அமைப்பின் செயலகங்கள்: என்பதைப்போல போட்டி போட்டு ஒரு மாதிரி நடந்தேறிவிட்டது. யாராக இருந்தாலும்ஒரே இடத்தில் ஒற்றுமையாக மாவீரர்களை நினைவு கூரவேண்டும் என்பதே பலரினதும் ஒரு பேப்பர் குழுமத்தினரதும் அங்கலாய்ப்பாக இருந்தது ஒரு பேப்பர் குழுமமும் அதனைத்தான் வலியுறுத்தியிருந்தோம். ஆனால் சம்பந்தப் பட்டவர்கள் அடம்பிடித்ததனால் யாருடைய நிகழ்வெள்றாலும் பரவாயில்லை மாவீரர்களை நினைவு கூரவேண்டியது எமது கடைமையென்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்து இடங்களிலும் கலந்து கொண்டிருந்தனர்.மாவீரர் தினத்தன்று பெரும் அசம்பாவிதங்கள் எதுவும் நடக்கலாமென பொதுவானதொரு அச்சம் இருந்திருந்ததும் உண்மை ஆனால் சிறு சிறு அசம்பாவிதங்கள் மட்டுமே சில நாடுகளில் நடந்ததோடு மாவீரர் வாரம் முடிவடைந்தது .

அந்தளவிற்காவது இரு குழுவினரும் மாவீரர்களை மதித்தது மகிழ்ச்சியே .
ஆனால் நாங்கள் தூய்மையானவர்கள்.கணக்குவழக்கு சரியாக காட்டுவோம் என்றபடி புதிதாகப் புறப்பட்ட தலைமைச்செயலகத்தினர் நடாத்திய நிகழ்வுகளை விட வழைமைபோல வருடாவருடம் கடைகளும் கொத்துறொட்டியும் போட்டபடி .மாவீரர்களிற்காக விற்ற பூக்களையே மீண்டும் எடுத்து மறுபடி விற்று காசு பார்த்த அனைத்துலகச் செயலக்தின் நிகழ்வுகளிலேயே மக்கள் அதிகளவு கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. அதற்கு காரணம். தலைமைச்செயலகத்தினரிடம் ஒரு பேப்பர் எழுப்பியிருந்த சந்தேகங்களே பலரது மனங்களிலும் இருந்திருக்கின்றது. அதே நேரம் இவர்கள் பிரிந்து நின்றுஅடிபட்டாலும் நாம் மாவீரர்களை பிரிக்கக்கூடாது என்கிற காரணத்திற்காகவும். புதிதாக வந்தவர்கள் அப்படி என்னதான் செய்கிறார் பார்க்கலாமென விடுப்புப் பார்ப்பதற்கெனவும்.கடந்தகாலத்தில் அனைத்துலகச் செலயக்கதினரிர் நிதி மோசடிகாளால் பாதிக்கப் பட்டவர்களுமே தலைமைச்செயலகத்தின் நிகழ்வுலுகளில் கலந்து கொண்டிருந்தனர்.
மாவீரர் தினம் முடிவடைந்ததும் தலைமைச்செயலகம் நட்டக் கணக்கு காட்டினார்கள். இலண்டனில் இவர்கள் காட்டிய நட்டமோ இருபத்தி மூவாயிரம் பவுண்சுகள்.இதனை யார்?? எப்படி ??ஈடுகட்டப் போகிறார்கள் என்பது பற்றிய எந்த விபரமும் கிடையாது.அனைத்துலகச் செயலகத்திடம் கணக்கு என்கிற வார்த்தையே அவர்களது அகராதியில் கிடையாது. அதையாரும் கேட்கவும் முடியாது. கேட்டாலும் வராது. ஆனால் அவர்கள் சாதாரணமாக ஒரு பதிலை சொல்லியிருந்தனர் அது பார்த்தீர்களா புதிதாய் நிகழ்வு செய்தவர்களே நட்டக்கணக்கு காட்டுகிறார்கள். நாங்கள் இதைத்தானே வருடாவருடம் சொல்லுறம் எங்களிற்கும் நட்டம்தான்.


கணக்கு வழக்கு விடையங்களை விட்டுவிடுவோம். காரணம் மாவீரர்கள் வருடாவருடம் நினைவுகூரப்படவேண்டும். மக்களின் பங்களிப்பும் தொடர்ந்து இருக்கவேண்டும். இந்த இரு அமைப்பும் மாவீரர் தினத்தை கொண்டாடுவதற்காக எப்படி மோதிக்கொண்டார்களோ...வானொலி தொலைக்காட்சி இணையங்களில் எப்படி மாறி மாறி குற்றச்சாட்டுக்களை வைத்தார்களோ அதே போல இனிவரும் காலங்களில் இலங்கையரசின் போர் குற்றங்களை வெளிக்கொண்டு வருவதிலும் போட்டி போட்டுக்கொண்டு செயல்ப்படவேண்டும். சம்பந்தப் பட்டவர்கள் மீது வழக்கு தொடரவேண்டும். சர்வதேச நீதி மன்றத்தில் அவர்களை நிறுத்தவேண்டும். யுத்தத்தில் பாதிப்படைந்த மக்களிற்கு உதவிகள் புரிந்தது போதாது என்று ஒருவரையொருவர் குற்றம் சாட்டியபடியே அந்த மக்களிற்கான உதவிகளை செய்யவேண்டும்.


மக்களிற்கு கிடைத்த உதவிகளில் போர் குற்றம் தொடர்பான விடையங்களில் ஒருகுழு விட்ட தவறை மற்றைய குழு இணையங்களிலும் .பத்திரிகைகளிலும் பகிரங்கமாக சுட்டிக்காட்டி விவாதிக்கவேண்டும்.அதற்கும் ஒரு படி மேலே போய் இரண்டு தரப்பிலுமே அடுத்த போர் வெடிக்கும் தமிழீழமே தீர்வு என இணையங்களில் ஈழத்திற்கான இணையப் புரட்சி செய்யும் இளைஞர்கள் போரினால் பாதிப்படைந்து இன்று தங்கள் சமூகத்தாலும் சொந்த உறவுகளாலும் கைவிடப்பட்டு எந்த உதவிகளுமற்று ஏதிலிகளாகி வாழ்க்கையின் விரக்தியின் விளிம்பில் பலநூறு முன்னைநாள் பெண் போராளிகள் இருக்கின்றார்கள். இவர்களது வாழ்வின் ஆதாரங்களாக மாறி அவர்களின் வாழ்விற்கும் ஒரு அர்த்தத்தினை கொடுக்கலாம். அது முடியாதவர்கள் அவர்களின் வாழ்வாதாரத்திற்காவது ஏதாவது வழிவகைகளை செய்யது கொடுக்கலாம்.
இவற்றையெல்லாம் விட்டுவிட்டு மீண்மு; மீண்டும் மாவீரர் தின்தை கொண்டாடவும். மாவீரர்களின் நினைவுநாளை கொண்டாடவும். கோடை தொடங்கியதும் விழையாட்டு போட்டியை நடாத்தமட்டுமே இவர்கள் போட்டிபோட்டு அடிபட்டுக்கொண்டும். விற்ற பூவையே விற்றபடி நட்டக்கணக்கை காட்டிக்கொண்டேயிருப்பார்களாயின் இவர்களை ஒரு தலைவர் பிரபாகரன் என்ன ஆயிரம் பிரபாகரன்கள் வந்தாலும் இவர்களை திருத்தமுடியாது.
அதே நேரம் நாடு கடந்த அரசு என்பது வெறும் நாட்கள் கடத்தும் அரசாக மாறிக்கொண்டிருக்கின்றது. நாட்கள் கடத்தும் அரசு பற்றிய பதிவொன்றுடன் அடுத்த பேப்பரில் சந்திக்கின்றென் நன்றி வணக்கம் சாத்திரி

பேச்சு மட்டும்தான் தான் தேசியம் மிச்சமெல்லாம்.....

2:43 PM, Posted by sathiri, No Comment

கடந்த இரண்டு நாள்களிற்கு முன்னர் தமிழ் பாராளுமன்ற  உறுப்பினர் சிறிதரனின் பின்னணியில் அவரது  சகோதரரால் நடாத்தப்படும்  லங்காசிறீ. தமிழ்வின் மற்றும் மனிதன் இணையத்தளங்கள் பற்றியதொரு சர்ச்சை  கிளம்பியிருந்தது. கூடவே இன்னொரு பெரும்  சர்ச்சை கிளம்பியிருக்கின்றது  அது என்னவெனில்  லங்கா சிறி இணையத்தினரால் நடாத்தப்படும் hi 2 world    தமிழ் அரட்டை சேவை பற்றியது. அந்த  காணொளி அரட்டையூடாக பலநூறு  தமிழர்கள் தமிழிச்சிகள்  ஆடைகளை கழற்றி ஆபாச அரட்டையடித்துள்ளதோடு தங்கள் நிர்வாண படங்களையும் பரிமாறியுள்ளது தெரியவந்துள்ளது.  அதைப்பற்றி அறியலாமென நினைத்து  அரட்டையில்  அரட்டையடிக்கும் ஒரு இளைஞரை இனம் கண்டு தொடர்புகொண்டபொழுது  அவர் அண்ணை  என்னட்டை மட்டும் 56 தமிழ் பெட்டையளின்ரை  நிர்வாணப்படம் இருக்குதென்று பெருமையாக சொன்து மட்டுமில்லாமல். அவற்றை  அனுப்பியும் வைத்திருந்தார்.  அவற்றை பார்தால் இளம் பெண்கள் மட்டுமில்லாமல் திருமணமான வயதான பெண்களின் படங்களும்  இருந்தது. பலரது திறந்த மார்பில் தாலிதொங்கிக்கொண்டிருந்தது. இப்படி ஒருவரிடம் மட்டுமே 50ற்கு  மேற்பட்ட படங்கள் என்றால்  இதுவரை மொத்தமாக  அங்கு அரட்டை அடிப்பவர்களிடம் எத்தனை  படங்கள் பரிமாறப்பட்டிருக்கும்.நினைத்துப் பாருங்கள்.. தனிப்பட ஒருவன் ஒருத்தி  அரட்டையடிப்பதும். ஆடையை  கழற்றுவதும்  அவரவர் தனிப்பட்ட விடயம். ஆனால். யாழ்ப்பாணத்தில் கலாச்சாரம்  கெடுகின்றது என்று  புலம்பும்  தமிழ்வின்  லங்காசிறி இணையமும். தமிழினத்தின் அடுத்த தலைவர்களில் ஒருவர் என சொல்லிக்கொள்ளும்  சிறிதரனின் பின்னணியில் இயங்கும்  இணையத்தளத்தில்  பெரும் கலாச்சார சீரழிவே நடைபெறுவதோடு அதற:;கு அவர்களும் உடைந்தையாக இருப்பதும் தான் கேள்விக்குள்ளாகின்றது

அதே நேரம்  இங்கு அரட்டையடிப்பவர்களிற்கு தெரியாமலேயே  அவர்களிற்கு பின்னால் உள்ள பெரும் ஆபத்து என்னவென்றால்.  இப்படியான அரட்டை இணைய வழங்கிகளை  பெரும்பாலும்  90 வீதம்  பாகிஸ்தானிலிருந்து  இயங்கும் நிறுவனங்களே  குறைந்த விலையில் வழங்குகின்றார்கள்.   இவர்களின் உரிமங்கள் பதிவுகள் திருட்டு பெயர்களில் இருப்பதனால் சட்ட நடவடிக்கைகளும் எடுக்கமுடியாது.  இவர்கள் தங்கள் இணைய வளங்கியினுடாக பரிமாறப்படும்  நிர்வாண   காணொளிகள் மற்றும் படங்களை பதிவுசெய்து  ஆபாச இணையத்தளங்களை நடத்தி பெரும் பணம்  சம்பாதிப்பதோடு மட்டுமல்லாமல்.  இந்தியா பாகிஸ்த்தான்.மலேசியா.சிங்கப்பூர் போன்ற  நாடுகளில் கைத்தொலைபேசி ஊடாகவும்  விற்பனை செய்கிறார்கள்.  அதாவது புலம்பெயர் தமிழர்களின் நிர்வாணப்படங்கள்  வியாபாரமாகின்றது. அந்த வகையில் நாம் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.






தன்னுடைய மகனோ  மகளோ தனியறையில் கணணியில்  பாடம் சம்பந்தமாக அவர்களது நண்பர்களுடன் ஏதோ கதைக்கிறார்கள் என நினைக்கும் பெற்றோர்கள்.  சிலவேளைகளில் அவர்கள் எந்தெந்த தளங்களில்  உலாவுகிறார்கள்  கண்காணித்தாலும் பிள்ளை தமிழ் தளத்திலைதானே  உலாவுது  அதுகின்ரை  தமிழ் ஆர்வத்தை பாராட்டவேணும் என  நினைக்கும் பெற்றோர்கள்  தமிழ் தளத்தினுடாக பிள்ளை எங்கே போகின்றது என்பதையும் கண்காணிக்க வேண்டும். .அதே நேரம் கணவன் மனைவியை மனைவி கணவனை  கண்காணிக் வேண்டிய நிலைக்கு தள்ளிய  இது போன்ற  தமிழ் இணையத்தளங்கள் தேவைதான  என்பதனையும்  தமிழர்கள் தீர்மானிக்கவேண்டும்.



அதே நேரம் இங்கு தங்கள் படத்தை பரிமாறிய  ஆணோ பெண்ணோ நாளை திருமணம் என வரும் பொழுது அரட்டையில் இரண்டு பேருமே பார்த்திருக்கலாம்.  அல்லது அவங்கடை அம்மா அப்பாவை திருமணம் செய்யப் போகின்றவர்கள் பார்த்திருக்கலாம். இதனால் எத்தனை குடும்பங்கள் பிரியப் போகின்றது.



யாராவது ஓடிவந்து ஆதாரம் கேட்பார்கள்


கிணறு வெட்ட கிழம்பிய பூதம்

2:59 PM, Posted by sathiri, 2 Comments


பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுகிறோம் என்ற பெயரில் நடந்தேறும் நாடகம்!சாத்திரி (ஒரு பேப்பர்)

அண்மையில்  சில இணையதளங்களில்  ஒரு செய்தி வெளியாகியிருந்தது  அதவாது இறுதிப் போரின்போது காயமடைந்த  பல போராளிகளை ஒரு பெண்  வெளிநாடு அழைத்து செல்வதாக கூறி அவர்களிடம்  பெருமளவு பணத்தினை வாங்கிவிட்டு அவர்களை ஆசிய நாடு  ஒன்றில்  கைவிட்டு விட்டு  தலைமறைவாகிவிட்டார் என்கிற செய்தி புகைப்படத்துடன் வெளியாகியிருந்தது. அந்தப் பெண்ணின் படத்தைப் பார்த்ததும்  இவரை எங்கேயோ  பார்த்தமாதிரி அல்லது  அவரைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன் என தோன்றவே அவரைப்பற்றிய  மேலதிக தேடல்களை   தொடங்கிவிட்டிருந்தேன்.

                                          வன்னிரெக்  தயாபரன் மற்றும்  உதயகலா


கிணறு வெட்டப் பூதம் கிழம்பியது போல  தோண்டத் தோண்ட   தமிழ் மாணவர் அமைப்பை நடாத்திய  ரிசி என்;கிற சிவானந்தன் ரிசாந்தன் அல்லது ரிசாந்தன் சிவராசா (இதில் எந்தப்பெயர் உண்மையானது என்பது தெரியவில்லை).

                                                                   இவர்தான் ரிசி


 பிரித்தானியத் தமிழர் பேரவையின்  முக்கிய உறுப்பினராக இருந்து அண்மையில் அவ்வமைப்பிலிருந்து விலகிய  ஸ்கந்தா  என்கிற சுப்பிரமணியம் ஸ்கந்ததேவா ஆகியோரின்  தொடர்புகள் தெரியவரத் தொடங்கியது.  ஆனால் தேடலின் இறுதியில் இந்த வலைப்பின்னலை பின்நின்று இயக்குபவர் ஸ்கந்தாவே என்றும் அறிய முடிந்தது.

ஊரை அடித்து உலையில் போடும் இந்தக்கும்பலைப்பற்றி இனி கொஞ்சம் விபரமாக பார்க்கலாம்.
உதயகலா என்கிற பெண்  வன்னிப் பெருநிலம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சமயம்  அவர்களால் நடாத்தப்பட்ட வன்னி ரெக் என்கிற தொழில் நுட்பக் கல்லூரியில் படித்துள்ளார். அங்கு அவர் படிக்கசென்ற காலங்களில்  அந்த பாடசாலையின் பொறுப்பாளராக இருந்த தயாபரன் அல்லது தயாபரராஜ் என்பவரிற்குமிடையில் காதல் தொடர்பு ஏற்பட்டிருந்தது. உதயகலா ஏற்கனவே ஒரு போராளியை  திருமணமுடித்திருந்தவர். விழுப்புண் அடைந்திருந்த அவரது  போராளிக்கணவர் தமிழ்நாட்டில் மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பட்டடிருந்தார். அங்கு அவர் புலிகளின் உறுப்பினர் என அடையாளம் காணப்பட்டு  சிறைவைக்கப்பட்டிருந்தார்.   அதற்கு பின்னர் தயாபரனுடன் தொடர்பு ஏற்படவே வன்னி ரெக்கின்  நிதியிலிருந்து  பணத்தினை மோசடி செய்த தயாபரன் உதயகலாவிடம் கொடுத்துள்ளார். இவ்விடயம் விடுதலைப்புலிகளின் நிர்வாகத்துக்கு  தெரியவரவே தயாபரன் அவர்களால் இடைநிறுத்தப்பட்டு தண்டனையும்  கொடுத்திருந்தனர். அநே நேரம் இறுதியுத்தம் தொடங்கிவிடவே இவர்கள் இருவருமாக இராணுவத்திடம் சணைடைந்து பின்னர' விடுதலையானார்கள்.  கொழும்பில் தங்கியிருந்படி முகாம்களில் அடைபட்டிருந்த  மற்றும் காயமடைந்திருந்த போராளிகளை வெளியே எடுத்து விடுவதாக  அவர்களின் உறவினர்களிடம் பெருமளவு பணத்தினை பெற்று மோசடி செய்தவர்கள் அங்கிருந்து இந்தியாவிற்கு தப்பி சென்றுவிட்டனர். தப்பிச் சென்றவர்கள் தங்களை யாரும் தேடாதிருப்பதற்காக  தயாபரன் இறந்து விட்டாரென  ஒரு செய்தியை  உதயகலா பரப்பினார். அதிலும்  பணம் சம்பாதிக்க நினைத்தவர்  சமாதான காலத்தில் வன்னிக்கு  சென்று வன்னி ரெக்கில்  தயாபரனை  சந்தித்த அனைவரது விபரங்களையும் திரட்டி அவர்களிடம் தொடர்புகொண்டு  தயாபரன் இறந்து விட்டார்  எனவே அவரது மரணச்சடங்கிற்கு பணம் வேண்டுமென கேட்டபொழுது பலர் அனுப்பியிருந்தனர். ஆனால் ஒருவர் சந்தேகப்பட்டு  அவர் இறந்ததற்கான ஆதாரம் கேட்டபொழுது  தயாபரன் கண்ணை மூடியபடி படுத்திருந்த ஒரு படத்தினை அனுப்பிருந்தார்...

                                         தயாபரன் இறந்தது போன்றதொரு படம்









இது இப்படியிருக்க,  2008ம் ஆண்டில் ரிசி என்கிற ரிசாந்தன்  இலண்டனிற்குள் மாணவர் விசாவில் நுளைகிறார். மாணவர் விசாவில் நுளைந்த ரிசியை வைத்து  ஸ்கந்தா (ITSO)  அனைத்துலக தமிழ் மாணவர் அமைப்பு என்கிற தொரு அமைப்பினை  ரிசியியையும் தனது மகளையும் இணைந்து  பதிவு செய்கிறார். (பதிவிலக்கம்: 6993075 பதிவு செய்த திகதி: 20.08.2009)


. இந்த அமைப்பு  உதவி அமைப்பு என  வெளியில் சொல்லப்பட்டாலும்   அது வியாபார நிறுவனமாகவே பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.  அதாவது இந்த அமைப்பிற்கு கிடைக்கும் நிதியை அதன் நிர்வாக இயக்குனர்கள் பகிர்ந்து கொள்ளலாம்.  அது மட்டுமல்லாது  ஸ்கந்தாவே  ரிசியை  இங்கிலாந்தின்  தமிழ்  இளையோரமைப்பு.  தமிழ் ஊடகங்கள்.. பிரித்தானிய தமிழர் பேரவை. மற்றும் தமிழ்  வியாபாரிகள் பிரபலங்கள் என அனைவரிடமும் அறிமுகம் செய்து வைத்தார்.
இதையடுத்து  ரிசி  தாயகத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களிற்கான உதவி. வடகிழக்கு  பல்கலைக்கழக  மாணவர்களிற்கான உதவி என  தமிழ் இணையத்தளங்கள்,  ஊடகங்கள், facebook என  விளம்பரம் செய்யத் தொடங்கினார். ஸ்கந்தா - ரிசி கூட்டணி எதிர்பார்தத்தை போலவே பலர் மனமிரங்கி பணம் கொடுக்கத் தொங்கினார்கள். இவர்களிற்கு ஊரில் இருந்து  உதயகலா .கஸ்தூரி என்கிற  இருபெண்களே  பாதிக்கப்பட்டவர்களின் படங்களை  அனுப்பிவைத்துக்கொண்டிருந்தனர். இவர்கள் பாதிக்கப் பட்டவர்களின் படங்களை வைத்து  பணம் சம்பாதிக்கிறார்கள் என அறிந்த கஸ்தூரி இவர்களை விட்டு விலகிவிட்டார்.

இவர்கள்  தங்கள் ஏமாற்று வியாபாரத்தினை  விருத்தி செய்ய நினைத்து  விடுதலைப்புலிகளின் காலத்தில் முல்லைத்தீவில் பெண்கள் பராமரிப்பு  இல்லமாக இருந்த பாரதி இல்லத்தினை  மீண்டும் தாங்கள் பொறுப்பெடுத்து பாரிஜாதம் என்கிற பெயரில் இயக்கவிருப்பதாக  பிரச்சாரம் செய்து பல வியாபாரிகளிடம் பெரும்  தொகை பணத்தினை  சுருட்டியிருக்கிறார்கள்.


மறுபுறம் உதயகலாவை வைத்து  முன்னைநாள் போராளிகள்  காயமடைந்தவர்கள்  எனப்பலரையும் வெளிநாடு அழைத்து செல்வதாக அவர்களிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு   அவர்களை  மலேசியாவிலும். தாய்லாந்திலும் கொண்டு சென்று கைவிட்டுள்ளார்கள். அதே நேரம் காயமடைந்த போராளிகளிற்கு நல்வாழ்வளிப்பதற்கு  வெளிநாடு அழைத்து வருகிறோம் என்று வெளிநாடுகளிலும்  பணம் சேகரித்துள்ளனர். ITSO     அமைப்பின் நடவடிக்கை இப்படியிருக்க,  இதே ஸ்கந்தா நம்பிக்கை ஒளி (RAY OF HOPE)   என்கிற இன்னொரு அமைப்பையும் பதிவு செய்தார். இவ்வமைப்பிலும் ஒரு இயக்குனராக தனது மனைவியையும் இணைத்துக் கொண்டார். (பதிவிலக்கம் 7192725 பதிவுத் திகதி 17.03.2010)



இதன் மூலமாக லண்டனில் வாழ்ந்த பல முன்னை நாள் போராளிகளை  தொடர்புகொண்டு  அவர்களின் ஊடாக  பாதிக்கப்பட்ட முன்னைநாள் போராளிகளிற்கென  நிதி சேகரிக்கத் தொடங்கினார். சிறையிலிருந்து விடுதலையான பல போராளிகளின் தேவைகளை நேரடியாகவே வீடியோ  காட்சிகளாக படமெடுத்து அதனை  வெளிநாடுகளில் உள்ளவர்களிடம் போட்டுக்காட்டி பணம் சேகரிக்கப் பட்டது. ஆனால் இந்த அமைப்பினை உருவாக்கி  அதற்காக தன்னலமற்று பல முன்னைநாள் போராளிகள்  உதவிசெய்திருந்தனர். ஆனால் காலப் போக்கில் ஸ்கந்தாவின் குளறுபடி சரியான  கணக்கு வழக்கு காட்டாமை என்பவற்றால்  பலரும் அதிலிருந்து விலகிப் போய்விட்டனர். ஸ்கந்தாவும்  அவருடன் சேர்ந்து சிலரும் தொடர்ந்தும்  இந்த நம்பிக்கையொளியை  தொடர்ந்தும் இயக்குகின்றனர். (மற்றயவர்களது விபரங்கள் என்னிடமிருந்தாலும் அவர்களது நலன் கருதி அவற்றை இணைக்கவில்லை)

சிறிலங்கா அரசுடன் சேரந்தியங்கும் கே.பி.  வன்னியில் தொடக்கியிருக்கும்  'அன்பு இல்லம்' என்னும் சிறுவர் இல்லத்திற்கும்  ஸ்கந்தா அவர்கள்  ஒரு தொகை நிதியுதவி செய்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. இவரது அண்மைக்கால நடவடிக்கையாக   இறுதி யுத்தத்தின் போது தலைவருடன் நின்று தப்பிவந்தவர்கள் எனக்கூறிக்கொண்டு  தாங்களே தலைமைச்செயலகம்  எனவே நாங்களே  மாவீரர்நாள் செய்யும் உரிமையுள்ளவர்கள் என கூறிக்கொண்டு  புதிதாக இரண்டாவது மாவீரர் நாளை ஜரோப்பா எங்கும் அரங்கேற்றியவர்களிற்கு  பின்னாலிருந்து இயக்கியது மட்டுமல்ல அவர்களிற்கு  ஆதரவு கொடுக்கும்படி அனைவரையும் ஸ்கந்தா  வேண்டியிருந்தார்.

இனி ITSOஅமைப்புப்பற்றிய அண்மைய தகவல்கள். வருடாவருடம் Company House  க்கு அனுப்பப்படவேண்டிய கணக்குவிபரங்கள் அனுப்பப்படாமையால். இந்த நிறுவனத்தின் பதிவினை Company House இரத்துச் செய்துள்ளது. இதற்கான இறுதி அறிவுறுத்தல் கடந்தவருடம் டிசம்பர் மாதம் 14ம் திகதி வழங்கப்பட்டிருந்தது. நிறுவனத்தை கலைத்தவிட்டதான அறிவிப்பினை இவ்வருடம் மார்ச் மாதம் 29ம் திகதி அனுப்பப்பட்டது. ஒரு கணக்காளரான ஸ்கந்தா ஏன் இந்த அமைப்பின் கணக்கு அறிக்ககையை சமர்ப்பிக்கவில்லை என்பதை அவர்தான் விளக்க வேண்டும். இதுவிடயமாக அவரைத் தொடர்புகொள்ள மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. Company House  இனால் ITSO கலைக்கப்பட்டபோதிலும் இவ்வருடம் ஒகஸ்ட் மாதம் வரை இவ்வமைப்பு செயற்பட்டு வந்துள்ளதாகத் தெரியவருகிறது.

இறுதியாக குழப்பமடைய வைக்கும் சிலகேள்விகள்.  இதுவரை இவர்கள் வழங்கிய உதவிகளிற்கான சரியான தரவுகளோ வரவு செலவு கணக்குகளோ எங்குமே காண்பிக்கப்படதாது ஏன்? உதவிதேவைப்படும் எத்தனையோ ஆயிரம் பேர் தாயகத்தில் காத்துக்கிடக்க ..பல உதவிகளையும் பெற்றுக்கொள்ளும் வசதியுள்ள  கே.பி அவர்களின் அன்பு இல்லத்திற்கு  நிதியுதவி செய்யவேண்டிதன் அவசியம் என்ன?  ரிசி   தன்னை மற்றையவர்களிற்கு   அறிமுகம்  செய்யும் பொழுது  தன்னைப்பற்றிய தகவல்களை  மாற்றி மாற்றிக் கொடுப்பது ஏன்? இத்தனை   குழப்பங்களும்  மோசடிகளும் கொண்டதொரு வலைப்பின்னலை பின்னாலிருந்து இயக்கும் BOSS யாரென்று ஆராய்ந்தால் அவர்தான்  மொட்டை BOSS   என்கிற  ஸ்கந்தா.



புலி போராளி என்று சொல்லி

11:24 PM, Posted by sathiri, No Comment

புலம்பெயர் தேசமெங்கும் வினாயகம் தலைமையில் புதியதாக மாவீரர் விழா அண்மையில் கொண்டாடப்பட்டது. அந்தக் குழுவில் முக்கிய நபரான ,லண்டனில் வசிக்கும் மயூரன்.(தேள்வடிவத் தாக்குதல் புகழ் வன்னியன்) தன்னை ஒரு புலிப் போராளி என கூறி மலேசியாவில வாழும் புலிகள் அமைப்பு ஆதரவாளரான ஒரு பெண்ணை திருமணம் செய்வதாக சொல்லி ஏமாற்றி அவரது அரைகுறை ஆபாச படங்களை வாங்கி நண்பர்களிடம் பகிர்ந்துள்ளார். சிங்களவன் செய்தால் ஜயோ தமிழ் தேசியம் என கத்துபவர்கள் ?இ,வர்களே அதை செய்யலாமா?? http://youtu.be/X3aFq9eBRCo

http://youtu.be/X3aFq9eBRCo 

தலைவணங்குகிறேன் அண்ணை

11:11 AM, Posted by sathiri, One Comment

இன்று என் வீட்டுத் தோட்டத்திலேயே மாவீரர்களிற்காக விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினேன்


மண்ணிற்காகவும் மாவீரர்களிற்காகவும்  மரணித்த தலைவனிற்றும் ஆயிரமாயிரம் மாவீர்களிற்கும்.மக்களிற்கும் அஞ்சலிகள்.


அன்றைய காலத்தில்
அனைவரிற்கும் தம்பி
அடுத்து வந்தவர்களிற்கெல்லாம்
அண்ணன்.
அன்பான கணவன்
அற்புதமான தந்தை
அலையாய் எழுந்த தமிழினத்திற்கு
தலைவன்.
தன்மானத்தை விற்றவர்களின்
தலை வலி
எதிரிக்கு எட்டாத சூரியன்
சுற்றியிருந்த சுயநலக்கூட்டத்திற்கு
புகழ்பாடும் கடவுள்.
தமிழினத்தின்
குறியீடு
தலைவணங்குகிறேன்
அண்ணை

கடிகாரம் ஓடுமுன் ஓடு

11:51 AM, Posted by sathiri, No Comment

ஊரிலை சின்னவயிசிலை பள்ளிக்கூடத்திலை பாரதிதாசனின்ரை தலைவாரிப் பூச்சூடி உன்னை பாடசாலைக்கு போவென்று சொன்னாள் உன் அன்னை எண்டொரு பாட்டுச் சொல்லித் தருவினம். அது உண்மையிலை பெண்குழந்தையளிற்கான பாட்டு அதையேன் பெடியளிற்கும் படிப்பிச்சவையெண்டு தெரியாது ??..ஆனால் அதிலை ஒரு வரி வரும் கடிகாரம் ஓடுமுன் ஓடு எண்டு. அதற்கான அர்த்தம் அண்டைக்கு எனக்கு உண்மையா விளங்கேல்லை ஆனால் வெளிநாடு வந்தால் பிறகுதான் அதன் உண்மையான அர்த்தம் புரிந்தது இங்கு தமிழாக்களின்ரை நிகழ்வுகளைத் தவிர மற்றையபடி எல்லாமே நேரம்..நேரம்.. நேரம்.. நேரத்தை பிடிக்க ஓடிக்கொண்டிருக்கின்றோம்..


ஊரிலையெண்டால் வீடுகளிலை வரவேற்பறையிலை மட்டும் ஒரு மணிக்கூடு இருக்கும்.அப்பிடி எங்கை வீட்டிலையும் ஊரிலை ஒரு பெரிய மணிக்கூடு ஒண்டு வரவேற்பறையிலை இருந்தது பாக்கிறதுக்கு ஒரு அலுமாரி மாதிரி இருக்கும். ஒரு ஆள்அளவு உயரம். மேலை மணிக்கூடு கீழை தோசைத்தட்டு மாதிரி ஒரு வட்டம் ஆடிக்கொண்டிருக்கும். ஒவ்வொரு நாளும் அதுக்கு சாவி குடுக்கவேணும் நான் சின்னவயசிலை ஒரு கதிரை வைச்சு ஓறித்தான் அதுக்கு சாவி குடுக்கிறனான். ஒவ்வொரு மணித்தியாலமும் அது அடிக்கிற சத்தம் கோயில் மணி அடிச்சமாதிரி இருக்கும். அதை முன்னேறி பாச்சல் நடவடிக்கை நேரம் சந்திரிக்கா அனுப்பின குரங்குகள் உடைச்சு போட்டுதுகள் எண்டு அம்மா கவலையோடை சொன்னா.. இஞ்சை வெளிநாட்டிலை பாத்தமெண்டால் கழிவறையிலை குளியலறையிலை படுக்கையறையிலை வரவேற்பறையிலை எல்லா இடமும் மணிக்கூடுதான். பத்தாததுக்கு கைத்தொலைபேசியிலை கணணியிலை பாக்கிற ரிவியிலை எண்டு நேரம் ஓடிக்கொண்டிருக்கும் காத்தாலை அலாரச்சத்தத்தோடை எழும்பி கழிவறைக்கு போறத்திலையிருந்து பல்லுத்தீட்டிறது குளிக்கிறது (இதுகள் செய்யாதவைக்கு பிரச்சனையில்லை ) உடுப்பு போடுறது எண்டு தொடங்கி வேலைக்குப் போய் வந்துஇரவு ரி.வி பாக்கிறது. குடும்ப காரர் எண்டால் பிள்ளையளோடை குடும்பத்தோடை மினக்கெடுறது. ஏன் கணவன் மனைவி உறவு கூட எல்லாத்தையுமே நேரம் பாத்துப் பாத்துத்தான் செய்யவேண்டியிருக்கும்.


ஒரு நாள் இப்பிடித்தான் நான் தண்ணியடிச்சிட்டு நல்லாயிருக்கெண்டு பொரிச்ச மிளகாயை கனக்க அள்ளித் திண்டிட்டன் அடுத்தநாள் காத்தலை கழிவறைக்குள்ளை அஞ்சு நிமிசம் கூடுதலாயிருக்கவேண்டி வந்திட்டு பிறகு அந் அஞ்சு நிமிசத்தை குளிக்கேக்குள்ளை அவசர அவசரமாய் சவுக்காரம் போடாமல் குளிச்சு நிவர்த்தி பண்ணிட்டன். ஜரோப்பாவிலை ஒருநாள் ஞாயிறு மட்டும் அலாரசத்தம் இல்லாமல் நிம்மதியாய் விரும்பின நேரத்திற்கு எழும்பி விரும்பினதை செய்யலாம். அனால் இந்த லண்டனிலை இருக்கிறவையள் போன பிறப்பிலை பாவம் செய்த பிறவியள். அதுகளிற்கு ஞாயிறும் நிம்மதியில்லை கிழைமையிலைஏழுநாளும் ஓட்டம்மதான். இப்பிடித்தான் ஒருக்கால் லண்டனிலை உள்ள என்ரை சினேகிதன் ஒருத்தனுக்கு பிறந்தநாள் அவனுக்கு வாழ்த்தும் சொல்லிட்டு. கொஞ்சம் ஊர்கதையளும் கதைப்பம் எண்டு இரவு போனடிச்சன் . போனை எடுத்தவன் மச்சான் ஓடிக்கொண்டிருக்கிறன் கொஞ்சம் பொறுத்து எடு எண்டான். கார் ஓடிக்கொண்டிருக்கிறான் எண்டு விளங்கிச்சிது. கொஞ்சத்தாலை திருப்ப அடிச்சன் அவனின்ரை மனிசி எடுத்து அவர்இப்பதான் வந்தவர் குளிக்கிறார் கொஞ்சத்தாலை அடியுங்கோ எண்டா. திரும்ப ஒரு அரை மணித்தியாலம் கழிச்சு எடுத்தன். அவன் போனை எடுத்து மச்சான் என்ன அலு....வ்......வ்.....வ்...வல் எண்டான். சாப்பிட்டுக்கொண்டிருந்தான். எண்டு விளங்கிச்சுது அவசரமில்லை ஆறுதலாய் அடிக்கிறன் எண்டிட்டு நான் நித்திரையாய் போயிட்டன்.

பிறகு அடுத்தநாள் அவனுக்கு வாழ்த்தாவது எஸ். எம். எஸ் அனுப்புவம் எண்டு நினைச்சு உனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் எண்டதை முழுசா எழுத எனக்கு நேரமில்லை.வேலைக்கு போற நேரம் கார் சிவப்பு சிக்னல்லை நிக்கிற நேரமாய் பாத்து அவசரமாய் W...U... H....B.....DAY எண்டு வாழ்த்து சொல்லி ஒரு எஸ் எம்.எஸ் சை போட்டிட்டு வேலைக்குபோயிட்டன் . அதை அவன் வாசிச்சு விளங்கி T.K.S எண்டு பதிலும் போட்டிருந்தான். இது இப்பிடி அண்டாட வாழ்க்கை போய்க்கொண்டிருக்க என்னை தினமும் நித்திரையாலை எழுப்பிற என்ரை அலார மணிக்கூடு ஒருநாள் பழுதாய் போயிட்டுது. பதினைஞ்சு வருசத்துக்கு முதல் பாரிசிலை ஒரு அறையிலை நாலு தனிக்கட்டையள் (பெடியள்) சேந்து கூட்டுக்குடும்பமாய் இருக்கேக்குள்ளை வாங்கினது. பிறகு ஒவ்வொருத்தராய் கலியணம் கட்டி தனிக்குடித்தனம் போய் அறையிலை இருந்த ஒவ்வொரு பொருளாய் பாகப் பிரிவினை செய்யேக்குள்ளை நான் இந்த அலார மணிக்கூட்டை தூக்கிக் கொண்டு வந்திட்டன். காரணம் இது நான் தான் தேடி வாங்கினனான். ஓடுற டிக்..டிக்.. சத்தம் கேக்காது மணிக்கூடு ஓடுற சத்தம் கேட்டால் எனக்கு நித்திரை வாராது எரிச்சலதான் வரும் ஆனால் அது அலாரம் அடிக்கிற சத்தம் அந்த ஏரியாவுக்கே கேட்கும். பதினைஞ்சு வருசம் ஓடி ஓய்ந்து போன மணிக்கூட்டை திருத்தலாம் எண்டு நான் கடை தேடி அலைய மனிசி சொல்லிச்சிது உந்த பழசை கொண்டு அலையாதையுங்கே இப்பதானே விதம் விதமாய் புது எலெக்றோனிக் அலாம் மணிக்கூடுகள் வாங்கலாம். சத்தமும் வராது உதை குப்பையிலை எறியுங்கோ நான் புதுசு வாங்கியாறன் எண்டாள்.

பழசுகளை எறியிறதெண்டால் உன்னையும் தான் எறியவேணும் எண்டு முணு முணுத்தபடி கவலையோடை அதை குப்பை வாளிக்குள்ளை போட்டிட்டு நான் மணிக்கூடு வாங்க வெளிக்கிட திரும்பவும் மனிசின்ரை சத்தம் ''எங்கை மணிக்கூடு வாங்கவே போறியள் நீங்கள் போனால் நிண்டு நிதானிச்சு வடிவாய் பாத்து ஒண்டையும் வாங்கமாட்டியள் கையிலை அம்பிட்டதை தூக்கிக் கொண்டு வந்துடுவியள் .பக்கத்திலை சீனா சாமான் கடையொண்டு இருக்கு நான் போய் நல்லதாய் பாத்து வாங்கியாறன்'' எண்டாள். எடியேய் நிண்டு நிதானிச்சு எல்லாத்தையும் செய்யிறதெண்டால் உன்னையுமல்லோ செய்திருக்கமாட்டன் எண்டு சத்தமாவே சொன்னன். மசினி முறைச்சு பாத்திட்டு போயிட்டுது.. போய் சீனாக்கடையிலை எலெக்றோனிக் மணிக்கூடு ஒண்டை வாங்கியந்து தந்திட்டு இந்தாங்கோ எதுவும் உருப்படியாய் செய்யத் தெரியாது நேரத்தை யாவதுஒழுங்கா பிடிச்சு விடுங்கோ என்று,விட்டு போய்விட்டாள் எனக்கென்னவோ அது உள் குத்துமாதிரி தெரிஞ்சது. ஆனாலும் சரி எதையோ நான் ஒழுங்கா பிடிச்சு விடேல்லை போலை கிடக்கு எண்டு நினைச்சபடி பேசாமல் மணிக்கூட்டு பெட்டியை பிரிச்சன் . மணிக்கூடு பாவிப்பது எப்படி எண்டொரு விளக்கக் கடுதாசி இருந்திச்சிது. ஊரிலை முத்தத்திலை விழுகிற நிழலை வைச்சே எத்தனை மணி எண்டு சரியா சொல்லுற எங்களுக்கு இவங்கள் மணிக்கூடு எப்பிடி பாவிக்கிறதெண்டு சொல்லித்தாறாங்கள் எண்டு கொவத்திலை அதை எடுத்து முதல் வேலையா கிழிச்சு குப்பையிலை போட்டிட்டு வந்து மணிக்கூட்டை எடுத்து கறண்டை குடுத்தன். மணிக்கூடு 88 மணி88 நிமிசம் எண்டு காட்டிச்சிது. சீனாக்கடைக்காரன் மனிசியை பேய்க்காட்டிப் போட்டான் எண்டு விளங்கிச்சிது. மனிசிட்டை எடியேய் பாத்தியோ அப்பவும் சொன்னனான் சீனாக்கடைக்காரனிட்டை போகாதையெண்டு அவன் உன்னை சுத்திப்போட்டான் வந்துபார் மணிக்கூடு 88:88 எண்டு காட்டுது எண்டன் . ஜயோ அது எலெக்றோணிக் மணிக்கூடு அப்பிடித்தான் காட்டும் அதுக்குத்தான் நேரத்தை பிடிச்சு விடச்சொன்னனான் எண்டு பதில் வந்தது .

சாதாரணமாய் உலகம் முழுக்க 24 மணித்தியாலமும் 60 நிமிசமும்தானே அதெப்பிடி சீனாக்காரனின்ரை மணிக்கூடு மட்டும் கூடுதலாய் 88.88 நிமிசம் காட்டும் .மணிக்கூடு எப்பிடி பாக்கிறதெண்ட செய்முறை கடிதாசியைவேறை கிழிச்செறிஞ்சு போட்டன் மணிக்கூட்டிலைவேறை நாலைஞ்சு பட்டின் கிடக்கு எப்பிடி நேரம் பிடிக்கிறதெண்டு புலம்பிக்கொண்டிருக்க அதுவரைக்கும் எங்கடை சண்டையை கண்டும் காணாதபடி கணணியிலை விழையாடிக்கொண்டிருந்த மகள் எழும்பி வந்து என்னட்டை மணிக்கூட்டை பிடுங்கி நேரத்தை பிடிச்சு விட்டிட்டு அப்பா காத்தாலை எத்தனை மணிக்கு அலாம் வேணுமெண்டாள். ஆறு மணிக்கெண்டன். அலார சத்தம் மியூசிக் வேணுமா இல்லை றேடியோ ஏதாவது வேணுமா எண்டாள்..ஓ அதெல்லாம் இருக்கா சரி காலங்காத்தாலை எழும்பேக்குள்ளை எங்களை சுத்தி என்ன நடக்கிதெண்டு அறியிறது நல்லது தானே அதாலை 24 மணி நேர செய்தி றேடியோவிலை விடு எண்டன்.எல்லாம் சரி செய்திட்டு இனி இரண்டு பேரும் சத்தம் போடக்கூடாது எண்டிட்டு போயிட்டாள். அடுத்தநாள் காலை ஆறு மணிக்கு அலாரம் றேடியோ வேலை செய்தது..துருக்கியில் நிலநடுக்கம்.பலநூறுபேர் பலி ஆயிரக்கணக்கானோரை காணவில்லை. தாய்லாந்தில் மழைவெள்ளம். இதுவரை இருநூறுபேர் பலி. ஆப்கானிஸ்தானில் தற்கொலைக் குண்டு வெடிப்பு முப்பது பேர் பலி இருபது பேர் காயம் எண்டு தொடர .. இதென்ன காலங்காத்தாலை ஒரே இழவு எண்டு றேடியோ மணிக்கூட்டு வயரை இழுத்து பிடிங்கிப் போட்டு வேலைக்கு தயாரானேன். கடைசியாய் ஒரு கேள்வி. சீனாக்காரனின்ரை எலெக்றோணிக் மணிக்கூடு ஏன் அடிக்கடி 88:88 நிமிசம் காட்டுதெண்டு யாருக்காவது தெரியுமோ

அமிர்தராஸ் பொற்கோயிலும் சுதுமலை அம்மன் கோயிலும்.2

1:47 AM, Posted by sathiri, 2 Comments

கடந்த ஒரு பேப்பரி இந்தப் பதிவினை ஒரு நிஞாபகப்பதிவாகவே மேலோட்டமாக எழுதியிருந்தேன். அதனை படித்த பலரும் இந்திய இராணுவகாலத்தில் தெய்வேந்திர சர்மா தலைமையில் நடந்த hடுகொலைகளைகளை ஏன் எழுதவில்லையென்றும் இனி வருங்காலத்தில் யாரும் புத்தகங்களையோ பதிவுகளையோ தேடி எடுத்து மினக்கெட்டு படிக்கப்பது அரிழதாகவே இருக்கும் எனவே அவற்றை கணணி பதிவுகளாக்குவது அவசியம் இன்று இல்லாவிட்டாலும் எதிர்வரும் காலத்தில் எமது மக்கள் எதிர்கொண்ட அழிவுகளை எமது சந்ததி அறியவேண்டிய தேவை உள்ளதால் அவற்றை முடிச்தளவு கட்டாயம் எழுதும் படி கேட்டிருந்தனர் எனவேதான் அதன் தொடராக இந்தப் பதிவினை எழுதுகின்றேன்.


இந்திய இராணுவம் சுதுமலையம்மன் கோயிலை பெரும் எதிர் பார்ப்புடன் முற்றுகையிட்டு அங்கு புலிகள் இல்லாத காரணத்தால் ஆத்திரமடைந்து போயிருந்தனர். ஆனால் புலிகள் நவாலி. சண்டிலிப்பாய் அளவெட்டி மூளாய் அராலி மற்றும் வடலியடைப்பு பகுதிகளில் சிறு சிறு குழுக்களாக பிரிந்து தாக்குதல்களை தொடுத்துக்கொண்டிருந்தார்கள். அது இந்திய இராணுவத்திற்கு பெரும் இழப்பையும் கொடுத்தது. கெரில்லாக்களிற்கு பொதுவாக காடுகளும் மலைகளுமே பதுங்கும் பாதுகாப்பரணாக விளங்குவது வழைமை. ஆனால் இவையிரண்டுமே இல்லாத யாழ்ப்பாணக்குடாநாட்டில் புலிகளிற்கு பாதுகாப்பாக விழங்கியது யாழ்ப்பாணத்தின் ஒழுங்கையமைப்புக்கள்தான்.. இந்திய இராணுவம் தங்கள் படை நடவடிக்கைக்கு ஏதுவாக இலங்கையரசின் சுற்றுலாத் துறையினரால் 80 ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட வரைபடத்தைதே வைத்துக்கொண்டு தாக்குதல்களை வழிநடத்தினார்கள். அதில் யாழ் குடாவின் ஒழுங்கைகள் எதுவுமே வரையப்பட்டிருக்கவில்லை.

புலிகள் ஒழுங்கைகளால் வந்து தாக்கியது அவர்களிற்கு பெரும் தலையிடியை கொடுத்தது. மருதனாமடம் சந்தியிலிருந்து முன்னேறி உடுவில் அரிசி ஆலையில் முகாம் அமைத்திருந்த சர்மா புலிகளின் நடமாட்டத்தை அறிய ஜேர் பரமேஸ்வரன் என்கிற தமிழ் அதிகாரி ஒருவரின் கீழ் ஒரு பட்டாலியன் இராணுவத்தை தயார்ப்படுத்தி ஊர்பொதுமக்களிடம் விபரம் கேட்டறிந்து புலிகளை தேடித்தாக்கியழிக்கும்படி கட்டளையிட்டிருந்தார். அதன்படி பரமேஸ்வரனும் சண்டிலிப்பாய் பகுதியில் பெருமளவில் நின்றிருந்த புலிகளை தாக்குவதற்காக உடுவில் சண்டிலிப்பாய் டச்சுவீதி ஊடாக நகர்வை மேற்கொண்டார். அவரது வரைபத்தில் டச்சுவீதியில் மானிப்பாயிலிருந்து குறுக்காக கந்தரோடை செல்லும் இரண்டு சிறிய வீதிகள் இல்லை அவரது படைகள் சண்டிலிப்பாயை அண்மித்ததும் கந்தரோடையிலிருந்தும் மானிப்பாய் கட்டுடைப் பகுதியிலிருந்தும் புலிகள் இடையே புகுந்து தாக்கியதில் பரமேஸவரன் உட்பட நாற்பதிற்கு மேற்பட்ட இந்திய இராணுவம் இறந்து போனார்கள்.புலிகளின் முதலாவது ஊடறுப்பு தாக்குலாகவும்இதை எடுக்கலாம்.


இதனால் கோபமடைந்த சர்மா பொதுமக்களை கேடயங்களாக்கியபடி முன்னேற்றத்தை தொடர்ந்தார். அதன்படி முன்னேறி முக்கிய இடங்களை அடைந்ததும் பிடித்து வந்தவர்களை ஓடச்சொல்லிவிட்டு பின்னாலிருந்து சுட்டுவிடுவார்கள். பெரும்பாலனவர்கள் இறந்து போக சிலர் மட்டும் தப்பியோடிய சம்பவங்கள் ஏராளம்.அது மட்டுமில்லாமல் புலிகளின் இலக்கு என்றோ அல்லது புலிகள் தாக்குதல்கள் நடத்தாமலேயே பல இடங்களில் பொதுமக்களை படுகொலை செய்தார்கள் அதில் சில.

21.10.1987 யாழ் வைத்தியசாலைப் படுகொலைகள் சுமார் 60 பொதுமக்கள்.
10.10.1987 பிரம்படி (கொக்குவில்)படுகொலைகள் சுமார் 40 பொதுமக்கள். இவர்களை ராங்கிகளாலும் ஏற்றிக் கொல்லப்பட்டார்கள்.
10.10.1987 கொக்குவில் இந்துக்கல்லூரி படுகொலைகள் சுமார் 35 பொதுமக்கள்.
26.10.1987 அளவெட்டி இந்து ஆச்சிரம படுகொலைகள் சுமார் 17 பொதுமக்கள்.
27.10.87 சாவகச்சேரி படுகொலைகள் சுமார் 67 பொதுமக்கள்.
19.01.1989 வல்வைமற்றும் ஊறணி வைத்தியசாலைப் படுகொலைகள்.சுமார் 65 பொதுமக்கள்
மற்றும் கிழக்கு மாகாணத்தில் பெருமளவான முஸ்லீம்கள்
இப்படி பல படுகொலைகளை நடாத்தி முடித்திருந்தனர்.


மேலே நான் குறிப்பிட்டவையனைத்தும் முறைப்படி ஆவணப்படுத்தபட்டவைகளே .
இவை இப்படி நடந்துகொண்டிருக்கமற்றப்பபக்கம் எங்கடை சனத்தின்ரை கூத்துக்கள்; தொடர்ச்சியான ஊரடங்குச்சட்டத்தால் கடைகள் எதுவும் திறக்காமல் பொதுமக்களிற்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டது புலிகள் முதலில் சங்கக்கடைகளை உடைத்து உணவை எடுக்கவிட்டிருந்தனர். மானிப்பாய் சங்கக் கடையையு உடைத்து சாமாகளை அள்ளிக்ககொண்டு போனவர்வகள் அங்கை அடிக்கி வைச்சிருந்த வெறும் சாக்குகளையும் அள்ளிக்கொண்டு போனார்கள். கடைசியாய் வந்த இருவர் பொருள் ஏதும் இல்லாததால் ஒருத்தர் தராசை கழட்ட மற்றவன் படிக்கல்லை தூக்கிக் கொண்டுஓடினான். படிக்கல்லை தந்திட்டுபோடா எண்டு தராசை கழட்டினவர் கலைக்க படிக்கல்லு பாரம் தாங்காமல் அவன் போட்டிட்டு ஓடிப்போயிட்டான். தாராசோடை படிக்கல்லுகளும் கிடைச்ச சந்தோசத்திலை அவர் நடந்து போனார்.

அதே மாதிரி மானிப்பாயிலை பிரபல றோஸ் பிறாண்ட் ரொபி புளுட்டோ கொம்பனி இருந்தது அங்கை தார் பரல்கள் மாதிரி பெரிய பரல்களிலை சீனிப்பாணி அடுக்கி வைச்சிருந்தவங்கள் சனங்கள் பரல்களை உருட்டிக்கொண்டு போனார்கள். கட்டாயம் அவைக்கு சீனி வருத்தம் வந்திருக்கும்.. மிச்ச பரல்களை இந்தியனாமி காவலரணிலை பாதுகாப்பிற்கு அடுக்கி வைச்சிருந்தாங்கள். அதே மாதிரி சண்டிலிப்பாயிலை வடிசாராய நிலையம் ஒண்டு இருந்தது பனங்கள்ளை காச்சி வடிச்சு சாராயம் தயாரிப்பினம். பாதி பதப்படுத்தப் பட்ட கள்ளை தண்ணீர் ராங்குகள் மாதிரி உயரத்திலை கட்டியிருந்த பல ராங்குகளிலை சேமிச்சு வைச்சிருந்தவை.

இந்தியனாமி அடிச்ச செல் ஒண்டு அங்கையிருந்த ராங்கிலை பட்டு அது உடைஞ்சு புளிச்ச கள்ளு ஒழுகிக் கொண்டிருந்தது அதை பலபேர் ஓடிப்போய் வாளி குடம் எண்டு அம்பிட்டதிலை ஏந்திக் கொண்டு ஓட எதுவுமே கிடைக்காதவை ராங்கிற்றக கீழை போய் அண்ணாந்து ஆவெண்டு வாயை திறந்து குடிச்சுக் கொண்டிருந்திச்சினம். அப்பிடி குடிச்ச சிலர் கோமாவாகி அங்கையே விழுந்து கிடக்க பிறகு அங்கை வந்த இந்தியனாமி போட்டுத் தள்ளிட்டு போயிட்டான்.

மேலதிக சில குறிப்புக்கள்.


இந்திய இராணுவத்துடனான மோதல் பற்றி . பலர் கேட்டிருப்பதால் கொஞ்சம் விரிவாகவே எழுதுகிறேன். அதில் முதலாவது இராஜீவ் காந்தி கொல்லப் பட்டிருக்காவிட்டாலும் புலிகளின் தலைமை இந்தியா தருணம் கிடைத்த சந்தர்ப்பத்தில் தீர்துவிடுவதே கொள்கையாக இயங்கியது. பின்னர் இராஜீவ் கொலைநடந்து விட்டிருந்ததால் அது முக்கிய காரணமாக்கப் பட்டது. இந்தியாவுடனான மோதல்கள் தொடங்கியதற்கான காரணங்களை இங்கு தருகிறேன்.
இலங்கை ஒப்பிரேசன் லிபரேசனை 87 தொடங்குகின்றது; அன்றைய காலத்தில் புலிகளிடம் போதிய ஆயுத ஆள்பலம் இல்லாததால் பின்வாங்கியிருந்தாலும் மில்லரின் தற்கொலை தாக்குதலில் கலங்கிபோனது இலங்கை மட்டுமல்ல இந்தியாவும்தான். இங்கு வடமராச்சியை விட்டு புலிகள்பின் வாங்கிய பொழுதே
அதன் நரிவிழையாட்டு தொடங்குகின்றது.

1)புலிகளிடம் தொடர்புகொண்டு புலிகளிற்கு தேவையான நவீன ஆயுதங்களை தருவதாகவும் புலிகளின் தலைவரின் கடிதமாக அது உறுதிப்படுத்தப் பட்டிருக்கவேண்டும் என கேட்கின்றனர். அப்படி புலிகள் கொடுத்த பட்டியலை இலங்கையரசிடம் காட்டி புலிகளிற்கு இந்த ஆயுதங்களை கொடுக்கப் போகின்றோம் என மிரட்டுகின்றனர். ஆனால் புலிகளிற்கு ஆயுதம் கொடுக்கவில்லை.

2)ஒப்பந்தத்தின் பின்னர் அவற்றை துரிதமாக நடைமுறைப்படுத்தும்படி 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து திலீபனின் உண்ணாவிரதம். அவனும் இறந்து போகிறான் எந்த முன்னேற்றமும் இல்லை

3)ஆனால் புலிகள் தொடர்ந்தும் வடகிழக்கில் வேறு உறுப்பினர்களை தொடர்ந்தும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடாத்தியபடியே இருந்தனர். அப்பொழுதுதான் மட்டுவின் பூபதியம்மாள இறந்து போகிறார். அதனை டிக்சித்தின் கவனத்திற்கு புலிகள் கொண்டு சென்றபொழுது டிக்சித் சொன்னது கொஞ்சநாளில் தானாக செத்திருக்கவேண்டிய கிழவி கொஞ்சம் முதலேயே போயிட்டுது;

4)குமரப்பா புலேந்திரன் உட்பட பதினொரு புலிகள் இயக்கத்தவர்கள் ஆயுதங்களோ சயனைற்றோ இன்றி ஒப்பந்தத்திற்கு மாறாக இலங்கையரசால் கைது செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்தபொழுது இந்தியாவால் அதனை தடுத்து நிறுத்தி அவர்களை விடுவித்திருக்க முடிந்திருக்கும். அதனையும் கண்டும் காணாமல் விட்டுவிட்டனர்.

5)இதற்கு பின்னரும் புலிகளின் இந்தியாவுடன் மோதும் எண்ணத்துடன் இருக்கவில்லை. ஒக்ரோபர் 9 ந்திகதி டெல்லியும் கொழும்பிற்கும் நடந்த தகவல் பரிமாற்றத்தில் பிரபாகரனை கைது செய்வது என்று நடந்த உரையாடல் புலிகளினால் ஒட்டுக்கேட்கபட்டதோடு மட்டுமல்ல புலிகளோடு நெருக்கமாக இருந்த இந்திய இராணுவ அதிகாரி ஒருத்தரும் புலிகளிடம் இதனை உறுதிப்படுத்தியிருந்தார். அன்றிரவே 9 மணியளவில் பிறவுண் வீதியில் பிரபாகரன் தங்கிருந்ததாக கருதப்பட்ட வீட்டினுள் இந்திய அதிரடிப்படையினர் புகுந்து சுற்றிவளைத்து தேடினார்கள் அங்கு யாரும் இருக்கவில்லை.


6)10 ம் திகதி காலை மராட்டிய ரெஜிமெண்ட் யாழ்ப்பாணத்தின் பிரபல பிராந்திய பத்திரிகை நிலையங்களை குண்டு வைத்து தகர்த்ததோடு அதன் ஊழியர்களையும் கைது செய்து கோட்டையில் சிறை வைக்கின்றனர். அதே நேரம் வேறு புலிஉறுப்பினர்களும் கைது செய்யப் படுகின்றனர்.
அன்றே இலங்கையில் புலிகளிற்கெதிரான நடவடிக்கைகளை இந்தியப் படை ஆரம்பித்துவிட்டதாக இந்திய வானொலி மலைச்செய்தியின் பின்னர் அதிகார பூர்வமாக அறிவிக்கின்றது


7)நவம்பர் 12 ந்திகதி இரவு இலங்கையின் இந்திய கட்டளைத் தளபதிக்கே தெரியாமல் இந்திய உளவுப் பிரிவினர்.இந்தியாவின் குவாலியர் (மத்தியப் பிரதேசம்) இராணுவ அதிரடிப்படை முகாமிலிருந்து 70 பேரடங்கிய பாரா கொமாண்டோ படையணி ஒன்றை கொண்டுவந்து பிறவுண் வீதியும் திருநெல்வேலி வீதியும் இடத்திற்கு அருகில் உள்ள கொக்குவில் கிராம சபைக்கு அருகில் நற்ளிரவு 1 மணியளவில் தரையிறக்காப்பட்டு தயார் நிலையில் இருக்கின்றனர். அதன் பின்னர் அதிகாலையளவில் இன்னொரு
படையணி சீக்கிய காலாட்படையின் 13 வது சிறப்பு டையினர் 30 பேர் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கருகில் இறக்கப்படுகின்றனர். இவர்களிற்கு றோ அதிகாரிகள் இட்ட கட்டளை பிரபாகனை முடிந்தால் கைது செய்யுங்கள் அல்லது சுட்டுக்கொன்று விடுங்கள் என்றதுதான்.

இவை இப்படி நடந்து கொண்டிருக்க பிரபாகரன் இரக்கின்ற வீடு என இந்தியா குறிவைத்த வீட்டில் அவர் இருந்திருக்கவில்லை அங்கு அவர் இந்திய அதிகாரிகளை சந்திப்பதை மட்டுமே நடத்தியிருந்தார். ஆனால் அவர் உடுவில் பகுதியில் ஒரு வீட்டிலேயே தங்கிருந்தார். ஆனால் இந்திய இராணுவம் இறங்கிய பகுதியில் மாத்தையா மற்றும் அன்ரன் வாத்தி ஆகியோரது முகாம்கள் இருந்தது முதலாவது கெலி அதிகாலை 1 மணிக்கு இறங்கியதுமே அவர்கள் ஊசாராகி யாழ் பல்கலைகழக கட்டிடம் மற்றும் மரங்களில் நிலையெடுத்து விட்டிருந்தனர். அதிகாலை இரண்டாவது சீக்கிய காலாட்படையணி இறங்க தொடங்கியதும் தாக்குதலை நடத்தத் தொங்கியிருந்தனர். தரையிறங்கிய 30 பேரில் 29 பேர் இந்து போக ஒருவர் கைது செய்யப் பட்டார். மறுபுறம். தரையிறங்கிய 70 பேரில் 40 பேர் இறந்து போக யாழ் கோட்டையிலிருந்து இன்னொரு மீட்பு அணி வந்து மற்றையவர்களை மீட்டுக்கொண்டு போனார்கள்.

அப்பொழுது தான் நான் முன்னர் ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தது போல் 10 ம் திகதி பிரபாகரனும் மற்றையவர்களும் கைது செய்யப்படலாம் என்பது உறுதியாகி விட்டிருந்தது அதன் போதே பிரபாகரன் அனைவரையும் அழைத்து கேட்டிருந்தார் கைதாகி அவமானப்பட்டு சிறையில் அடிவாங்கி சாவதா?? அல்லது அகப்படாமல் சயனைற் அடிப்பதா??? அல்லது போராளிக்கேயுரிய போர்குணத்துடன் இறுதி வரை போராடிச்சாவதா??நான் போராடிச்சாவதென முடிவெடுத்துவிட்டேன். நீங்கள் உங்கள் முடிவுகளையும் சொல்லாம். மற்றையவர்கள் போய்விடலாம் எண்டார். அப்பொழுதுதான் சாகும்வரை போடுவதென முடிவெடுக்கப்பட்டது.

அமிர்தராஸ் பொற்கோயிலும் சுதுமலை அம்மன் கோயிலும்.

11:41 AM, Posted by sathiri, No Comment

அமிர்தராஸ் பொற்கோயிலும் சுதுமலை அம்மன் கோயிலும்.
ஒரு பேப்பரிற்காக நினைவுப்பதிவு சாத்திரி

இலங்கைத்தீவில் தமிழர்களிற்கு தீர்வும் சமாதானமும் வாங்கித் தருவதாக சொல்லியபடி இந்திய இராணுவம் அமைதிப்படை என்கிற பெயரில் வந்திறங்கி தமிழர்களின் அமைதியை பறித்து அவலங்களை மட்டுமே கொடுத்து இருபத்தி முன்று ஆண்டுகள் .ஆகிவிட்டது 10.10 1987 ம் ஆண்டுஆண்டு யாழ் கோட்டையிலிருந்த இந்திய இராணுவத்தின் மராட்டிய பட்டாலியன் (First Battalion of Maharatta Light Infantry)யாழ் பிரந்திய பத்திரிகைளான ஈழமுரசு முரசொலி ஈழநாடு பத்திகை அலுவலகங்களை குண்டு வைத்து தகர்த்ததிலிருந்து யுத்தத்தை தொடங்கி விட்டிருந்தனர்.அதைனைத் தொடர்ந்து புலிகளும் வேறு தெரிவுகள் எதுவும் இன்றி இந்திய இராணுவத்துடன் மோதிப்பார்த்து விடுவது என்கிற முடிவை எடுத்திருந்தனர்.

மோதல் தொடங்கி பதினைந்து நாட்களை கடந்து நீட்டுகொண்டு போனது. ஒரு 24 நாலு மணித்தியத்திலேயோ மிஞ்சி மிஞ்சிப் போனால் 48 மணித்தியாலத்தில் புலிகள் அனைவரையும் பிரபாகரன் உட்பட கைது செய்து ஆயுதங்களை பறித்துவிடலாமென நினைத்திருந்த இந்திய அரசியல் தலைமைகளிற்கும் அதிகாரிகளிற்கும் ஏமாற்றமாகி போனது மட்டுமல்ல அவர்களிற்கு புலிகளினுடனான யுத்தம் கௌரவப் பிரச்சனையாக மாறிவிட்டிருந்தது.அதே நேரம் இலங்கையிலிருந்த இந்தியப்படைகளின் கட்டளை யதிகாரி திபீந்தர் சிங்கிற்கு புலிகளை அழக்கும் நோக்கம் இருக்கவில்லை முடிந்தளவு அவர்களை கைது செய்து ஆயுதங்களை பறிமுதல் செய்யவே விரும்பியிருந்தார். இதனால் இவரிற்கும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த டிக்சித்திற்கும் முரண்பாடுகளும் தோன்றியிருந்தது. காரணம் டிக்சித்திற்கு புலிகளை விரைவாக அழித்து முடித்துவிடவேண்டும் என்பதே நோக்கமாக இருந்தது.


சமாதான காலத்தில் இந்திய இராணுவ அதிகாரிகள் புலிகளுடன் நல்லதொரு நட்போடு பழகியதாலும் தென்னிந்தி பட்டாலியன்கள் குறிப்பாக மெட்ராஸ் பட்டாலியன்களும் (தமிழ்நாட்டு இராணுவத்தினர்) முன்னணி நகர்வு படைகளில் இருப்பதால் தான் புலிகளை அழிப்தற்கு தாமதமாகின்றது என நினைத்த இந்திய உளவுத்துறையும் அரசியல் தலைமையும் இன்னொரு கட்டளை அதிகாரியை இலங்கைக்கு அனுப்பி மாற்றங்களை கொண்டுவர எண்ணினர் அதன்படி சீங்கியர்களின் காலிஸ்தான் போராட்டத்தில் இறுதியாக பொற்கோயில் தாக்குதலில் கட்டளையிடும் அதிகாரியாக திறைமையாக பணியாற்றிய தெய்வேந்திர சர்மாவை இலங்கைக்கு அனுப்பி வைத்திருந்தனர்.
இவர் திபீங்தர் சிங்கின் கட்டளைகளிற்கு கீழ்படியாமல் தன்னிச்சையாகவே நடவடிக்கைகளை எடுக்கும் சுதந்திரம் அவரிற்கு கொடுக்கப்பட்டிருந்தது. நேரடியாக பலாலியில் வந்திறங்கிய தெய்வேந்திர சம்மா உடனடியாகவே முன்னணி படையணிகளில் மாற்றங்களை கொண்டுவந்தார். புலிகளுடன் நெருக்கமாக இருந்த அதிகாரிகளை மாற்றியவர். தென்னிந்திய பட்டாலியன்களை பின்நகர்த்திவிட்டு (முக்கியமாக தமிழ்நாட்டு இராணுவத்தினர்) வட இந்திய பட்டாலியன்களான சீக்கிய. மராட்டிய.குர்கா படையணிகளை முன்னணிக்கு நகர்த்தினார். அத்தோடு மட்டுமல்லாது அவர் ..காலாட் படையணிகளிற்கு இட்ட கட்டளை என்னென்ன பொருள்கள் அசைகின்றதோ அத்தனையையும் சுட்டுத்தள்ளியவாறு முன்னேறுங்கள் என்றதுதான்.


அதே நேரம் புலிகளின் மோசமான கண்ணி வெடித் தாக்குதலில் இருந்து தப்பிக்க முன்னேறும் இராணுவத்தினரிற்கு கனரக ராங்கி படையணியினர் பாதைகளின் தடைகளை அகற்றி கொடுக்குமாறும் எந்தத் தடைகள் வந்தாலும் தாங்கிளால் தகர்த்தபடி முன்னேறும்படி கட்டளையிட்டிருந்தார். சர்மாவின் கட்டளைகளின் படி இந்திய இராணும் தமிழர் பகுதிகளில் பல அழிவுகளை கொடுத்தபடியே முன்னேறியது. அசைந்த பெருள்களான நாய் பூனை ஆடு மாடு.மனிதர்களையெல்லாம் காலாட்படை சுட்டுத்தள்ள. அசையாது நின்ற கட்டிடங்கள் மரம் செடியெல்லாவற்றையும் ராங்கிகள் தகர்த்தபடி முன்னேறினர். யாழ்குடாவின் பிரதான சாலைகளை சில நாட்களிற்குள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்த இந்திய இராணுவத்தினரின் அடுத்த இலக்கு சுதுமலையம்மன் கோயில் ஆகும்.

அதற்கு காரணம் இலங்கை இந்திய ஓப்பந்தத்தின் பொழுது பிரபாகரன் முதன் முதலாக மக்கள் முன் தோன்றி உரையாற்றியது சுதுமலையம்மன் கோயிலில்தான். அதே நேரம்.இந்திய இராணுவ அதிகாரிகள் புலிகளை சந்திக்க வந்திறங்கியது இந்தியாவிலிருந்து பிரபாகரன் வந்திறங்கியது எல்லாமே சுதுமலையம்மன் கோயில் சுற்றாடலில்தான். அது மட்டுமல்ல அதே சுற்றாடலில் புலிகளின் இரண்டு பெரிய ஆயுத தொழிற்சாலைகளும் அப்பையா அண்ணை தலைமையில் இயங்கியது. இந்த விடையங்கள் இந்திய உளவுத்துறையினரிற்கு தெரியும்.

எனவேதான் காலிஸ்தான் அமைப்பினர் பொற்கோயிலை தலைமையிடமாக வைத்து அங்கு பெருமளவு ஆயுதங்களையும் குவித்து இந்திய இராணுவத்துடன் போரிட்டனரோ அதே போலவே புலிகளின் முக்கிய தலைவர்கள் சுதுமலையம்மன் கோயிலில் பெருமளவு ஆயுதங்களுடன் பதுங்கியிருக்கலாமென இந்திய இராணுவம் நினைத்தது. சர்மா தலைமையில் ஏழு முனைகளில் இந்திய இராணுவம் சுதுமலையம்மன் கோயிலை நோக்கி நகர்ந்தது. 21 ந் திகதி நற்றிரவு சுதுமலை மானிப்பாய் பகுதி முழுவதையும் சுற்றி வளைத்த இராணுவத்தினர் அனைவரது வீடுகளிலும் புகுந்து அங்கிருந்தவர்களை ஒரு அறைகளில் போட்டு பூட்டிவிட்டு அந்தப் பகுதி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தவர்கள் அம்மன் கோயிலிற்குள் தாக்குதலை நடத்தி புகுந்து கொள்ள காலை புலரும்வரை காத்திருந்தனர்.

அதிகாலையானதும் மெல்ல நகர்ந்த டாங்கி படையணியினர் அம்மன் கோயிலை சுற்றி வழைத்து நிறுத்தப்பட்டனர். காலை 5.30 மணியளவில் டாங்கிகளின் குண்டுகள் அம்மன் கோயிலை நோக்கி சீறிப்பாய்ந்தது. கோயிலின் வடக்கு கோபுரம். மணிக்கூண்டு கோபுரம்.தெற்கு மதில் சுவர். எல்லாம் சிதறியது. கோயிலின் பின்னாலிருந்த நூற்றாண்டு கடந்து பரந்து விரிந்திருந்த ஆலமரத்தின் கிளைகளும் முறிந்து விழுந்தது. அதுவரை காலமும் சனி விதரத்திற்கு போடும் சோத்தையு ம் பலிபீடத்து புக்கையையும் கொத்தி சாப்பிட்டு விட் சந்தோசமாய் அந்த ஆலமரத்தில் கூடுகட்டி வாழ்ந்த காகங்கள் பலதும் செத்துவிழ மீதி காகங்களோ காலங்காத்தாலை எந்தச் சனியன்கள் எங்கடை கூட்டை பிரிச்சது எண்டு நினைத்தபடி கா கா எண்டு திட்டியபடியே பறந்து போனதே தவிர கோயிலிற்குள் இருந்து எந்த பதில் தாக்குதலும் வரவில்லை.

சில நிமிட இடைவெளி விட்டு மீண்டும் ஒரு தாக்குதலை நடத்தியவர்கள் ஆச்சரியத்தோடு கோயிலின் உள்ளே நுளைந்து தேடினார்கள் யாரும் அங்கிருக்கவில்லை. சர்மாவுக்கு சரியான கோபம்.யாரடா இந்த கோயிலின்ரை பூசாரி தேடிப்பிடிச்சு இழுத்து வாங்கோ என்று கட்டளையிட்டார். அந்தக் கோயில் ஜயர் பக்கத்திலேயே தான் குடியிருந்தார். அவர் சின்ன வயதிலை போலியோ நோயாலை தாக்கப்பட்டு கால்கள் சூம்பிப் போய் சரியாக நடக்க முடியாதவர். அவரை தேடிப்பிடிந்து இரண்டு இராணுவத்தினர் தூக்கிக் கொண்டுவந்து சர்மாக்கு முன்னாலை போட்டார்கள். சர்மா ஜயரிட்டை எங்கை எல் டி டி ..எங்கை ஆயுதம்.. எண்டு ஆங்கிலத்திலை கத்த ஜயருக்கு ஒண்டும் விழங்கேல்லை உடைனை ஒரு தமிழ் ஆமி ஓடிவந்து எல் டி டி எங்கை ஆயுதம் எங்கை ஆயுதம் எண்டு கேட்டார். ஜயரும் எல் டி டியை. நீங்க ளும் அவைய அவையளும் இந்த கோயிலுக்கு முன்னாலை சந்திச்சு கதைக்கேக்குள்ளைதான் கடைசியாய் கண்டனான் என்றவர்

ஆயுதம் அங்கையிருக்கு எண்டு அம்மனின்ரை கையிலை இருந்த வாளையும் முருகனின்ரை கையிலை இருந்த வேலையும் காட்டினார். அதோடை அவர் நிப்பாட்டியிருக்கலாம் ஆனால் பக்கத்திலை பிள்ளையார் இருக்கிறார் அவரிட்டை ஆயுதம் இல்லை கையிலை மோதகம்தான் இருக்கு எண்டதும் நக்கலா....என்றபடி ஜயருக்கு நாலைஞ்சு அடி போட்டு கலைச்சு விட்டிட்டாங்கள். இயக்கத்தையும் ஆயுதத்தையும் காட்டிக் குடுக்க நான் என்ன விசரனோ எண்டு புறு புறுத்தபடி ஜயர் போயிட்டார். இந்திய இராணுவமும் கோயில் வீதியிலை பலஇடத்திலை கிடங்கு தோண்டிப்பாத்திட்டு போய் விட்டார்கள்.

கண்ணை கட்டி விட்டதைப்போல்.. கார்த்திகை 27

8:24 AM, Posted by sathiri, No Comment


இந்தவார ஒரு பேப்பரிற்காக
சாத்திரி

கண்ணை கட்டி விட்டதைப்போல்.. கார்த்திகை 27
இந்த வருட மாவீரர் நாள் பற்றிய கட்டுரை ஒன்றினை கடந்த பேப்பரிலும் உங்களுடன் பகிர்ந்திருந்தேன்.புலம் பெயர் தேசமெங்கும் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து நின்று இந்த வருட மாவீரர் நாள் ஏற்பாடுகள் நடைபெறுகின்றது. அனைவரும் கலந்து பேசி ஒரு ஒற்றுமையுடன் மாவீரர்களிற்கான அஞசலியை செலுத்துவதே நாம் அவர்களிற்கு செய்யும் மரியாதையும் ஆகும் என்றும். என்றொரு வேண்டு கோளும் விடுக்கப்பட்டிருந்தது. பல இடங்களில் பேச்சு வார்த்தைகள் நடந்தது ஆனால் ஆக்கபூர்வமான எந்த முடிவுகளும் எடுக்கப்படால் இரு குழுக்கள்தனித்தனியே இந்த வருட மாவீரர் நாள் ஏற்பாட்டினை செய்யத் தொடங்கியதோடு மட்டுமல்லாது. ஆளாறிற்கு தாங்களே உண்மையானவர்கள் மற்றையவர்கள் விலை போனவர்கள் இலங்கை இந்திய உளவாளிகள் என மாறி மாறி அறிக்கைப் போரும் தொடங்கி விட்டனர்.

இதில் ஒரு பிரிவினர் புலிகள் அமைப்பில் இருந்து மே 2009 ம் ஆண்டிற்கு பின்னர் இறுதி யுத்தத்தின் போது இலங்கைப் படைகளிடம் சரணடைந்தும் வேறு விதங்களில் தப்பியோடி ஜரேப்பாவிற்குள் நுளைந்தவர்கள். இவர்களின் வாதமென்னவென்றால் கடந்த காலங்களில் புலிகளின் வெளிநாட்டு பிரிவினர் பல தவறுகளை விட்டுவிட்டார்கள் அதுதான் புலிகளின் அழிவிற்கும் புலிகள் மீதான தடைக்கும் காரணம். பெருமளவான நிதியினையும் இவர்கள் முடக்கி வைத்திருக்கிறார்கள்
எனவே அந்த நிதி மற்றும் சொத்துக்களை தாங்கள் பொறுப்பெடுத்து விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்டத்தினை தாமே நகர்த்தப் போவதாகவும். இனி வருங்காலங்களில் தாமே புலம்பெயர் தேசங்களில் மாவீரர் நாள் உட்பட அனைத்து நிகழ்வுகளும் ஒழுங்கமைக்கப் போவதாக கூறுகிறார்கள்.. இவர்கள் சொல்வதிலும் நியாயம் இருக்கின்றது கடந்த காலங்களில் புலிகளின் அனைத்துலகச்செயலகத்தினரில் பலர் நிதி மோசடி. தங்கள் பதவி நிலைகளை தக்கவைப்பதற்காக மற்றைய உறுப்பினரை காட்டிக்கொடுத்தல்.

மாவீரர் நாள் நிகழ்வுகளை வியாபாரமாக மாற்றியது என பலவிடையங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். அவை எல்லாவற்றிலும் மாற்றம் வரவேண்டும் மாவீரர் நாள் புலம் பெயர் தேசங்களில் புனிதமாக நடைபெற வேண்டுமென மாவீரர் குடும்பங்கள் அங்கலாய்க்கின்றார்கள். ஆனால் புதிதாய் வந்திறங்கியவர்கள். பழைய நிருவாக சீர் கேடுகளை மாற்றியமைப்பவர்களாகத் தெரியவில்லை.
அதற்கான காரணங்கள். புலிகள் அமைப்பானது ஆயுதங்களை மௌனிக்கிறோம் என பகிரங்கமாக அறிவித்து விட்ட பிறகு இனி வரும் காலங்களில் அனைத்து போராட்டங்களும் ஆயுதமற்ற வன்முறையற்ற அரசியல் மற்றும் சனநாயக ரீதியிலான மென்முறைப்போராட்டங்களே. இதனை யாரும் ஒழித்திருந்து பலபெயர்களில் செய்ய வேண்டிய தேவையில்லை. பகிரங்கமாவே செய்யலாம் கைகளில் புலிக்கொடி ஏந்தி தலைக்கு மேலே தலைவர் பிரபாகரனின் படத்தை உயர்த்திப் பிடித்தபடியே செய்யலாம் எவ்வித தடையும் இல்லை.


ஆனால் புதிதாக வந்தவர்களோ ஒவ்வொரு நாடுகளில் வேறு வேறு பெயர்களில் அதுவும் புலிகளின் அமைப்பில் இருந்த தளபதிகள் அல்லது பழைய உறுப்பினர்களின் பெயர்களான வினாயகம்.சங்கீதன்.அல்லது தயாபரன். ஜேம்ஸ். தும்பன்.கரிகாலன். தமிழரசன்.சுரேஸ். சீர்மாறன். என்கிற பெயர்களில் நடமாடுவதோடு. பல இரகசியக் கூட்டங்களை மட்டுமே இதுவரை ஜரோப்பிய நாடுகளில் நடத்தியுள்ளனர். தாங்களே இறுதிவரை தலைவருடன் முள்ளி வாய்காலில் நின்றதாக கூறிக்கொண்டு புதியதொரு கட்மைப்பினை கட்டியமைத்து போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தப் போவதாக கூறும் இவர்கள்.முதலில் பொதுக்கூட்டங்களை கூட்டி மக்கள் முன் தோன்றியோ .அல்லது ஊடகங்களான வானொலி தொலைக்காட்சிகளில் பங்கு பற்றியோ இறுதி யுத்தத்தின் போது நடந்த சம்பவங்கள் பற்றி புலம்பெயர் தேசத்து தமிழர்களிள் மனங்களில் தத்தளிக்கு பலநூறு கேள்விகளிற்கு பதில் கொடுத்து முதலில் அவர்களிற்கு தெளிவைக் கொடுக்கவேண்டும். அதன் பின்னர் அடுத்த கட்டத்திற்கு போராட்டத்தினை எப்படி நகர்த்துவது அல்லது நகர்த்தலாம் எக்கிற ஆலோசனைகள் பகிரங்கமாக கலந்துரையாடப்படல் வேண்டும்.

அதே நேரம் ஜரோப்பிய நாடுகளில் இவர்களது அகதி தஞ்சக் கோரிக்கைகள் இன்னமும் அனுமதிக்படாமலேயே சரியான ஆவணங்கள் கடவுச்சீட்டு இன்றி இவர்களால் எப்படி எல்லைப் பாதுகாப்பு கூடிய இங்கிலாந்து சுவிஸ்.நோர்வே . டென்மார்க் போனற நாடுகளிற்கொல்லாம் சுதந்திரமாக போய் இரகசியக் கூட்டங்கள் நடாத்த முடிகின்றது என்பதனையும் மக்களிற்கு புரியவைக்கவேண்டும்.விடுதலைப் புலிகள் தடைசெய்யப் பட்டுள்ள ஜரோப்பிய நாடுகளில். தாங்கள் அந்த அமைப்பின் அசல் பிரதிநிதிகள் என சொல்லித் திரியும் பொழுது இவர்களை இயங்கவிட்டு பார்த்துக்கொண்டிருக்கும் இந்த நாட்டு உளவுத்துறையினர் இவர்கள் விடயத்தில் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கிறார்கள் என நாம் எடுத்துக்கொள்லாமா?? அல்லது தீவிரவாத எதிர்ப்பு அணுகு முறையின்(counter insurgency) அடிப்படையில் அவர்களது ஆதரவும் உள்ளது என எடுத்துக்கொள்லாமா??அல்லது எல்லாமே இந்த நாட்டு உளவமைப்புக்களிற்கு தெரியாமல் நடக்கின்றது என சொல்ல வருகின்றார்களா?? இது பற்றிய விளக்கங்கள் கொடுக்கப்படும் வரை இவர்கள் மீதான சந்தேகங்கள் தொடரும்.அதுவரை இவர்கள் மீதான சந்தேகங்கங் தொடரும்.


அடுத்து மாவீரர் நாளிற்கு சிறப்பு விருந்தினராக யாரோ ஒரு கடைசிவாங்கு வெள்ளைக்கார எம்.பி ஒருத்தர் வரவளைக்கப் படுவார் . அவர் வந்ததுமே தான் ஒரு அரசியல் கட்சியை சேர்ந்தவன் எனவே புலிக்கொடி தனக்கு சங்கடமாய் இருக்கு அதை எடுங்கோ என்பார்.எம்.பி யே சொல்லிட்டார் எண்டு ஒருத்தர் ஓடிப்போய் அதை கழட்டி சுருட்டி வைப்பார்.அவரிற்கும் மாவீரர்களிற்கும் சம்பந்தம் இருக்காதென்பது வேறு விடையம் ஆனால் அவர் மேடையில் மாவீரர் பற்றியே அல்லது மாவீரர் நாள் பற்றியோ பேசமாட்டார். பேசத் தொடங்கும் போது வணக்கம் என்று தமிழில் சொன்னதும் கைதட்டி விசில் பறக்கும். பிறகு அவர் தன்னுடைய மொழியில் ..தமிழர்கள் அன்பானவர்கள் .பண்பானவர்கள். பயிற்பானவர்கள்.நன்றாக உபசரிப்பார்கள். அவர்கள் சுடும் தோசை இருக்கிறதே சூப்பர்..தமிழர்களின் வடை இருக்கிறதே சூப்பரோ சூப்பர்.என்னை இங்கு அழைத்தற்கு நன்றி அடுத்த எலெக்சன் வருது என்னையும் கவனிச்சுக் கொள்ளுங்கோ என்று விட்டு கடைசியாய் தமிழில் நன்றி வணக்கம் என்று விட்டு போய் விடுவார்.

எனவே மாவீரர் வணக்க நிகழ்வினை யார் ஒழுங்கு செய்தாலும். கொத்துறொட்டிக்கடை புடைவைக்கடை ஏசியன் சாமான் கடை என்று எதுவுமில்லாமல் வியாபார நோக்கமற்றும் ஜரோப்பாவின் யாரோ ஒரு கடைசி வாங்கு பாராளுமன்ற உறுப்பினர் வரவழைக்கப் பட்டு அவர் வடைக்கதை சொல்லாமலும்..இந்தியாவிலிருந்து உணர்ச்சிகர மேடைப் பேச்சாளர்கள்சிறப்பு விருந்தினராக அழைக்கப் பட்டு வீண் சச்சரவுகளையும் சண்டைகளையும் உருவாக்காமல் அனைத்தையும் தவிர்த்து .. பல்லாயிரம் போராளிகளின் குருதியில் நனைந்து மென் மேலும் சிவப்பாகிப் போன தமிழீழ தேசியக்கொடி மாவீரர் நாள் மண்டப வாயிலில் பட்டெளி வீசிப்பறக்க மாவீரர்களின் நினைவுகளை சுமந்து மண்டபத்தில் நுளையும் போது மாவீரன் எங்கள் தலைவனின் புன்னகை படங்கள் வரவேற்க ஆண்டு தோறும் வழைமை போல கார்த்திகை 27 மதியம் கடக்கும் நேரம் "தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தணப் பேழைகளே "என்கிற பாடல் ஒலிக்க மண்டபத்தில் மாவீரர்களது படங்கள் மீதும் அவர்களது நினைவிடங்களின் மீதும் மலர்களை அள்ளித் தூவி மனம் விட்டு அழுது அவர்களிற்கு அஞ்சலி செலுத்த நாங்கள் வரவேண்டும்.இது தவிர்ந்து எதோவெரு எம்.பிக்காகவோ. மேடைப் பேச்சிற்காகவோ கொத்து றொட்டிக்காவவோ நடாத்தப் படும் எந்தவொரு மாவீரர் நாளும் மாவீரரை மதிக்கும் நாள் அல்ல.....மக்களும் வரமாட்டார்கள்.