Navigation


RSS : Articles / Comments


மச்சாங் மகிந்த வெண்டது சோரு சாப்புங்கலாம்..வாங்க

12:01 PM, Posted by sathiri, No Comment

தமிழர் பகுதியில் உள்ள ஒரு உணவு விடுதியின் விளம்பரப் பலகை
Bold Italic

தலைப்பை படிச்சிட்டு கனக்க மண்டையை குழப்பிக் கொள்ளவேண்டாம். தமிழ்நாட்டில் எப்படி தமிழ் தமிங்கிலமாக மாறிக்கொண்டிருக்கோ ..அதைப்போலதான் இலங்கையிலும் இனி தமிழ் தசிங்களமாக மாறத்தொடங்கப் போகிற அபாயத்துக்கான ஆரம்ப அறிகுறிகள் தொடங்கிட்டுது...இலங்கையின்ரை சனாதிபதித் தேர்தலை உலகமே உத்து பாத்துக்கொண்டிருந்த நேரம் புலம்பெயர் தமிழர் இன்னும் அதிகமாய் உத்து உத்து பாத்துக்கொண்டிருந்தநாங்கள்..முடிவுகள் வெளியாயிட்டுது..அடுத்த தரமும் மகிந்த மாத்தையாவே அமோக வெற்றியோடை சனாதிபதியாயிட்டார்..இந்தத் தேர்தலாலை இவ்வளவு காலமும் இலங்கை சனாதிபதியை தீர்மானிக்கிற வாக்குகள் தமிழரிட்டையே இருக்கு எண்டிற மாயையும் உடைஞ்சு போச்சு..தமிழர்களே போங்கடா நீங்களும் உங்கடை ஒட்டும் நீங்கள் ஓட்டு போட்டாலென்ன போடாட்டிலென்ன இலங்கையின் சனாதிபதி சனநாயக முறையிலை தேர்தெடுக்கப்படுவார் எண்டு பெரிய அபாயகரமான உண்மையையும் இந்தத் தேர்தல் தமிழருக்கு பாடம் புகட்டியிருக்கு..


இது இப்பிடியிருக்க தமிழ் மக்கள் ஒரு மாற்றத்தை கொண்டு வர முயற்சித்திருக்கினம்..தமிழர்களின்ரை ஓட்டு பெரும்பாலானது பொன்ணண்ணைக்கே விழுந்திருக்கு..ஆனாலும் என்ன பொன்னண்ணை விழுந்து போனார்..முக்கியமாய் மட்டக்களப்பு மாவட்டத்தில் கருணா.பிள்ளையான் இனியபாரதி எண்டிற மூன்று ஆயுதக்குழுக்களின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலையும்..அவங்களையும் மகிந்தாவைவும் சேர்த்து தூக்கி எறிஞ்சது மட்டுமில்லை கருணாவின்ரை பிரிவுக்கு பிறகு மட்டக்கிளப்பான் எண்டாலே எல்லாரும் துரோகியள் எண்டு நினைத்த யாழ்ப்பாணியளிற்கும்..குறிப்பாக புறணி சொன்ன புலம்பெயர் யாழ்ப்பாணியளிற்கும் மட்டக்கிளப்பு மக்கள் தங்கடை வாக்குச் சீட்டாலை ஓங்கி உச்சி மண்டையிலை அடிச்சு நாங்கள் சோரம் போகிற துரோகியள் இல்லை எப்பவும் தன்மான தமிழராய்தான் இருப்பம் எண்டு உரத்து சொல்லியிருக்கினம்..இனியாவது உறைக்குதா பாப்பம்..அடுத்ததாய் மன்னார்.. வவுனியா.திருகோணமலை ..மலையகம் எண்டு எல்லா இடத்திலையுமே 50 வீதத்துக்கும் மேலான மக்கள் வாக்களிச்சிருக்கினம்..தேர்தல் நிலவரம் இங்குஅழுத்தவும்


யர்ப்பாணத்திலை மட்டும் காலங்காத்தாலை நடந்த குண்டு வெடிப்பு ..போக்குவரத்து தடங்கல்..எண்டது மட்டுமில்லாமல்.. புலம்பெயர் தேசத்து போலி புலிகளின்ரை புறக்கணிப்பு அறிக்கைகளும்..யாப்பாணத்திலை புலிகளின்ரை பெயரிலை ஒட்டின போலி நோட்டிசுகள்களாலையும் சனம் குழம்பி..பயந்து..அக்கறையில்லாமல்..20 வீத வாக்களிப்பு மட்டுமே நடந்தது..அது மட்டுமில்லால் யாழ்ப்பாணத்திலை வாக்காளர் எண்ணிக்கைப்படி 721,359 வாக்காளர்..அதிலை 300.000 வாக்காளர் அட்டைகளே வழங்கப்பட்டிருந்தது..இதுபற்றி கூட்டமைப்பும் தேர்தல் ஆணையத்திட்டை புகார் குடுத்திருந்தவை.அதிலையும் 168,583
வாக்குகள் விழுந்திருக்கு..மிச்ச வாக்காளர்கள் பலர் வேறை இடங்களிலையோ வெளிநாடுகளிலையோ வாழலாம்.அப்பிடிப் பாத்தாலும் 50 வீதம் வாக்குகள் யர்ப்பாணத்திலை விழுந்திருக்கு..இலங்கையின் ஒட்டுமொத்த தேர்தல் நிலவரம் இங்குஅழுத்தவும்

இந்த யாப்பாண மாவட்ட வாக்களிப்பு விபரத்தை மட்டுமே வைச்சு புலம்பெயர் தேசத்திலை தமிழ்தேசியத்தை தாங்களே தாங்கிப் பிடிக்கிறதாய் நினைக்கிற இணைய ஊடகங்களிலை இங்கு அழுத்தவும் யாரோ சேரமான் எண்டிற ஒரு டுபுக்கு கட்டுரை ஒண்டை எழுதியிருக்கிறார்..இவரின்ரை பார்வையிலையும் யாழ்ப்பாணம் மட்டுமதான் தமிழீழம்..அங்கை வாழுற மக்கள் மட்டும்தான் தமிழர்..எண்டிற நினைப்பிலை மற்றைய தமிழர் வாழுற மாவட்டங்களின்ரை வாக்கெடுப்பு வீதத்தை பாக்காமல் எழுதியிருக்கிறார்..அங்கை மக்கள் தேர்தலை புறக்கணிச்சதாலை இஞ்சை இவரின்ரைஇதயத்திலை பட்டாம்பூச்சி வேறை பறக்குதாம்..மானாட மயிலாவிலை நமீதாவை பாத்திட்டு கட்டுரையை எழுதியிருப்பார் போலை..அதுதான் பட்டாம் பூச்சி பறந்திருக்கு... அதை பிடிச்சு நச்செண்டு நசிக்க...அதென்னமே தெரியேல்லை வெளிநாடுகளிலை வட்டுக்கோட்டைக்கு 20 வீதம் மக்கள் வாக்களிச்சால் மட்டும்.99.9 வீதம் வெற்றி எண்டு எழுதுவாங்கள்..அதே 20 வீதம் மக்கள் யர்ப்பாணத்திலை வாக்களிச்சால்..மக்கள் புறக்கணிச்சிட்டினம்..வாக்கெடுப்பு தோல்வி ..பட்டாம் பூச்சி பறக்குதெண்டு எழுத எப்பிடித்தான் இவங்களுக்கு மனசு வருகுதோ.. தமிழனுக்கு அரசியல்தான் சுத்த சூனியம் எண்டால் இவங்கள் கணக்கிலையுமல்லோ சுத்தசூனியமாய் இருக்கிறாங்கள் எண்டு இதுகளை பாத்து வெளிநாட்டுக்காரன் நினைக்கப் போறான்.....சாமி நீதான் இவங்களுக்கு நல்ல புத்தியை ..குடுக்கவேணும்..

















தேர்தல் முடிவுகள் நீலம்.மகிந்தா...பச்சை.பொன்சேகா

இந்தமுறை தேர்தல் நடந்த முடிஞ்ச இடங்களின்லை விபரங்களை இலைங்கை வரைபடத்திலை பாத்தவுடைனை எனக்கு இரண்டு விசயம் சட்டெண்டு நினைவுக்கு வந்திச்சிது..
1)கொஞ்சக் காலத்துக்கு முதல் மஞ்சள் சிவப்பிலை இருந்த இடங்கள் எல்லாம் பச்சையாய் மாறிப்போயிருக்கு..ஒவ்வொரு தமிழ் இளையவர்களும் ஆயுதத்தை கையிலை தூக்கேக்குள்ளை கனவிலையும் நினைச்சு பாத்திருக்க முடியாத மாற்றம்..இது அடுத்த தேர்தலிலை நீலமும் பச்சையுமாய் மாறிப்போகலாம்..இல்லாட்டி முழுக்க நீலமாகவே மாறியும் போகலாம்.. எனவே இனிமேலாவது இப்படி வெறும் உணர்ச்சி வசப்பட்டு கட்டுரைகளை எழுதாமல் உண்மையை எழுதுங்கோ..இதை எழுதினதுக்காக என்னைப் போட்டு திட்டாமல் இதக்கான காரணம் என்ன??ஏன் இப்படியெல்லாம்.நடந்தது..இனி என்ன செய்யலாம் எண்டதை தயவு செய்து யோசியுங்கோ..இல்லாட்டி அங்கை மிச்சமிருக்கிற சோரு சாப்புங்குற தமிழர்களும் றபான் அடித்து கிரிபத் கிண்டி சாப்புடுகின்ற நிலைமைக்கு தள்ளப் படுவினம்..
2) ஆயுதப் போராட்டம் தொடங்கின எழுபதுகளிலை ஈரோஸ் இயக்கம் மலையகத்தையும் இணைச்சு இதுதான் தமிழீழம் எண்டு கீறிக்காட்டின படம்..அந்த நேரம் நான் சின்னப்பெடியன் நானும் நினைச்சன் ஆகா மலையகமும் எங்களுக்குத்தானாம்..தமிழீம் கிடைச்சால் அங்கை போய் தேயிலைத் தோட்டத்துக்குள்ளை ஒழிச்சுப் பிடிச்சு விழையாடலாமெண்டெல்லாம் நினைச்சன் (எனது நண்பர்களான ஈரோஸ் தோழர்கள் மன்னிக்கவும்) கன காலத்துக்குப் பிறகு அதே மலையகத்திலை நான் ஒழிச்சிருந்த நேரம் பொலி்ஸ் வந்து என்னைப் பிடிச்சுக்கொண்டு போன கதையும் நடந்தது.
ஆனையிறவில் பிரமாண்டமான படையினரின்வெற்றிச் சின்னம்


தேர்தல் முடிவுகள் வந்தால் பிறகு த.தே.கூட்டமைப்பு தனிய நிண்டிருக்கலாம் விசர் வேலை பாத்திட்டினம் எண்டு எல்லாரும் திட்டித்தீர்க்கினம்..வெண்டிருந்தால் ஆகா ஓகோ எண்டு புகழ்ந்து தள்ளியிருப்பினம்..கூட்டமைப்பு காரர் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்க முடிவெடுத்த நேரம் அவையள் சில பேரோடை நான் கதைச்சு தனிய நிக்கேலாதோ எண்டு கேட்டிருந்தனான்..அதுக்கு அவை சொன்ன பதில்.. புலியளின்ரை பின் பலம் இல்லாமல் போனால் பிறகு எங்களாலை இரண்டு பெரிய எதிரிகளையும் ஒட்டுக்குழுக்களையும் ஒரே நேரத்திலை எதிர்க ஏலாது அப்பிடி எதிர்த்தால்..எங்கடை படங்களுக்கு நீங்கள் மாலை போடவேண்டியிருக்கும்..ஆழையாள் மாறி மாறி போட்டிட்டு தங்களுக்குத் தெரியாண்டிட்டு போய் கொண்டிருப்பாகங்கள் .இல்லாட்டி நாங்களும் மொத்தமாய் வெளிநாடுகளிலை வந்து அசேலம்..அடிக்கவேண்டியதுதான்..எனவே எங்களிட்டை வேறை தெரிவு இருக்கவில்லை என்று தெளிவாய் சொல்லியிருந்தவை..

வெற்றி பெற்றால் வரலாறு தோற்றால் வெறும் சம்பவம்..எண்டு தேசியத்தலைவர் சொன்தாய் தமிழ்தாய் நாள் காட்டியிலை படிச்சிருக்கிறன்..நாங்கள் தொடந்து சம்பவங்களையே சந்திச்சு வாறதாலை..இனிமேலாவது சிந்திச்சு..வீராவேச அரசியலை விட்டிட்டு இரண்டு பேரினவாதக் கட்சிகளிடையே விலாங்கு அரசியல் செய்தால் மட்டும்தான் தமிழனின் இருப்பு இலங்கையிலை காப்பாத்தப்படும்..இல்லாட்டி விலங்குகளை விட மேசமாகவே வாழவேண்டிவரும்.. நன்றி
மீள் குடியேற்றப் பட்ட மக்கள் (புளியங்குளம்)



அன்பார்ந்த சிலோன் தமிழ் மக்க(ர்க)ளே

2:11 PM, Posted by sathiri, 4 Comments

அன்பார்ந்த சிலோன் தமிழ் மக்க(ர்க)ளே

...என்னாடா இது ஈழத்தமிர் எண்டும் எழுதாமல் சிறீலங்கா தமிழர் எண்டும் எழுதாமல் சிலோன் தமிழர் எண்டு எழுதிறனெண்டு யோசிக்க வேண்டாம்..அது ஏனெண்டால்..சிறீ லங்கா என்கிற சேத்தில் இன்னமும் வாழுகின்ற முட்டாள் தமிழர்கள் நீங்கள்..வெளிநாடுகளில் அந்தந்ந நாட்டு குடியுரிமையையோ அகதி அந்தஸ்த்தையோ வாங்கி வைத்துவிட்டு ஈழத்தமிழர் என்று பெருமை பேசுகிறவர்கள் நாங்கள்..எனவே உங்களை நான் சிறீலங்கா தமிழர் என்று அழைத்தால் நான் இங்கு துரோகியாகி விடுவேன். உயிரிற்கு உத்தரவாம் உண்டு .அதே போல நீங்கள் உங்களை ஈழத் தமிழர் என்றழைத்தால் உங்கள் உயிரிற்கு உத்தரவாம் இருக்குமா என்பது சந்தேகமே. .எனவேதான் பொதுவாக ஒரு காலத்தில் வெள்ளைக்காரன் ஆட்சியிலும்..பின்னர் 70கள் வரை சிலோன் தமிழர் என்று சொல்லிக் கொண்டு வெள்ளைக்காரன் காலை தடவி கல்வியை பெற்றுக்கொண்டு சிங்களவனை மடையன் என்றும் ..மட்டக்களப்பாரை மந்திரம் செய்யிறவங்கள் எண்டும்.வன்னி மக்களை காட்டான்கள் என்றும்.. மலையகத்தவரை வடக்கத்தையாணென்டும்.. அதே நேரம் உள்ஊரிலே பல்வேறு சாதிகளின் பிரிவினைகளிற்குள்ளும் என்னை முதன்மையானவனாக காட்டிக்கொண்டு புலம் பெயர் தேசத்தில் ஒரு புத்தி ஜீவியான யாழ்ப்பாணத்தான் நான் சொல்வது என்னவெனில்..

பிழைக்கத் தெரியாத புறம்போக்குகள்தான் இனியும் வன்னியில் வாழ்வார்கள்..முப்பத்தைஞ்சு லச்சத்துக்கும் மேலான தமிழ்மக்களிற்கு வன்னியிலையிருந்த வெறும் மூண்டு லச்சம் மக்கள் உங்களை பலி குடுத்தாவது தமிழீழத்தை எடுத்திடலாமெண்டு கனவுகண்டம்..அந்த கனவை நீங்கள் கலைச்சுப் போட்டியள்..நாங்கள் உங்களிற்கு என்ன குறை விட்டம்..ஆனையிறவு விழுந்த கையோடையே 50 யுரோவை இயக்கத்திற்கு குடுத்துப் போட்டு அரைப் போத்தல் வி்ஸ்கியை யையும் அடிச்சுப்போட்டு விசிலடிச்து மகிழ்ந்தனாங்கள்..அடுத்ததாய்யாழ்ப்பாணமும் பிடிக்கவேணுமெண்டுதானே காசை காசெண்டும் பாராமல் ஆயிரம் இண்டாயிரம் எண்டு வட்டிக்கும் கிரெடிட்டும் எடுத்து குடுத்தனாங்கள்...இப்ப அந்த வட்டி கட்டேலாமல் நாங்கள் ஓடித்திரியிறம்..ஆனால் அதை வாங்கினவை AUDI காரிலை ஓடித்திரியினம் எண்டிறது வேறை கதை...இப்பிடியெல்லாம் செய்து போட்டு யாழ்ப்பாணம் விழேக்குள்ளை அடிக்கிறதுக்கெண்டு விலை கூடின சிவாஸ்..விஸ்க்கியையும் வாங்கி வைச்சிட்டு..கிளாலியிலை அடி தொடங்கேக்குள்ளை கிளாசை கழுவினால் கெக்குவில் கோண்டாவில் தாண்டேக்குள்ளை கோழிப் பொரியல் ..பலாலி விழேக்குள்ளை பாதிப் போத்தல் முடிஞ்சிடும்..காரைநகர் கடற்படைத்தளம் அடிக்கேக்குள்ளை கோமாவுக்கு போனால் காத்தாலை எழும்பி தலையிடியோடை தமிழ் தேசிய ஊடகங்களை பாத்தால் யாழ்ப்பாணம் விழுந்திட்டுது தமிழீழம் கிடைச்சிட்டுதெண்டு ( எங்களிற்கு யாழ்ப்பாணம் மட்டும்தானே தமிழீழம்)செய்தியள் வருமெண்டு நாங்கள் போட்டு வைச்சிருந்த திட்டமெல்லாம் அடிச்ச தண்ணி மாதிரியே முறிஞ்சு போச்சுது..ஆனாலும் என்ன செய்ய வாங்கி வைச்சிருந்த விலை கூடின சிவாசை முள்ளி வாய்க்கால் முடிஞ்ச கவலையை நினைச்சு அடிச்சாச்சு..வாங்கின போத்தல் வீண் போகேல்லை.. இப்பிடியே எங்களை நீங்கள் பேக்காட்டி போட்டீங்கள்..பரவாயில்லை ஆனால் இனியாவது நீங்கள் எங்கடை ஆக்கினையளிற்கு ஆளாகாமல் நிம்மதியாய் இருந்கிறதெண்டால் என்னாலை முடிஞ்ச சில யோசனையளை மட்டும்தான் சொல்ல முடியும்..

ஆலோசனை 1)
ஒட்டுமொத்தமாக நீங்கள் எல்லாரும் வெளிநாடுகளிற்கு அகதியாய் வந்து குடியேறுங்கோ.பிரச்சனை தீர்ந்திடும்..அதுக்கு உங்களிட்டை பணவசதி இருக்காது எனவே

ஆலோசனை 2)

நீங்கள் திரும்பவும் வட்டுக் கோட்டையிலையோ அல்லது அதுக்கடுத்த அராலியிலையோ ஒரு மேடையை போட்டு இரண்டு தீர்மானங்களை நிறைவேத்தலாம்..


தீர்மாம் 1)

புலம்பெயர் தமிழ் மக்களே எங்கள் எதிர் காலத்தை நாங்களே தீர்மானிக்கிறம்..எங்கடை வாழ்க்கையை நாங்களே பாக்கிறம்..எங்களிற்கு எது தேவையோ அதை நாங்களே தீர்மானிக்கிறம் எனவே நீங்கள் பொத்திக்கொண்டிருங்கோ..முடிஞ்சால் உதவி செய்யுங்கோ உபத்திரவம் தராதையுங்கோ


தீர்மானம் 2)

புலம் பெயர் தமிழ் மக்களே வட்டுக் கோட்டை தீர்மானத்துக்கு வாக்கெடுப்பு நடத்தாமல் புலம்பெயர் தமிழர்கள் அனைத்து நாடுகளிலிருந்தும் அனைத்து தமிழர்களும் அந்ததந்த நாட்டு குடியுமை வைச்சிருக்கிறவை உட்பட அனைவருமே உடனடியாக ஊருக்கு திரும்புங்கோ அல்லது திருப்பியனுப்பும்படி அந்தந்த நாடுகளை கேட்டுக்கொள்கிறோம். எல்லாரும் வாருங்கள் இஞ்சையிருந்து போராடுவம் என்று இரண்டு தீர்மானத்தை நிறைவேத்துங்கோ ….

.கப் சிப்..சத்தம் வாராது


அப்பிடியும் சின்ன சத்தம் ஏதாவது வந்தால் நீங்கள் நிறைவேத்தின தீர்மானத்தை வடக்கு கிழக்கு எல்லா ஊரிலையும் மறுவாக்கெடுப்பு நடந்துங்கோ..வாக்கெடுப்பிலை எத்தினை ஓட்டு விழுகிறதெண்டெல்லாம் கவலை வேண்டாம்..வாக்கெடுப்பிலை 99.9 வீத வாக்குகளால் வெற்றி எண்டொரு அறிக்கையையும் விட்டுப்பாருங்கோ..அதுக்கு பிறகு நாங்கள் உங்களைப்பற்றி வாயே திறக்கமாட்டம்...அதே நேரம் இஞ்சை சும்மாயும் இருக்கமாட்டம்..இருக்கிறார் எண்டும் இல்லையெண்டும் கட்டுரையள் வந்துகொண்டிருந்தாலும்..அவர் இருந்த காலத்திலை அவரை முருகன் எண்டனாங்கள் இப்ப அவரை யேசுநாதராக்கிப் போட்டம்...இனி அல்லே லூயா என்றபடி அதைவைச்சு பாட்டெழுதி சிடி அடிச்சசு விக்கிற திட்டத்திலை இருக்கிறம்..பல்லாயிரம் சிடி வித்தோ..கரப்பட்டு கலண்டர் வித்தோ புலத்திலை தேசியத்தை வாடவிடாமல் வளர்த்துக்கொண்டுதான்இருப்பம்..


கடிதத்தை முடிக்க முதல் கடைசியாய் ஒரு விசயம்.. எங்களுக்கு முல்லைத் தீவு முத்தையன் கட்டிலை 3 ஏக்கர் காணி இருந்தது (சிறிமா காலத்திலை கள்ள உறுதி முடிச்சதுதான்) அதுகளின்ரை எல்லை கல் இப்ப இருக்கோ இல்லையோ தெரியாது..அதை பாக்கிறதுக்கு இந்த சமர் லீவுக்கு சிறீலங்கா வாறதுக்கு ஏயார் லங்காவிலை றிக்கெற்போட்டு வைச்சிருக்கிறன்..ஒரு கஸ்ரமும் இல்லாமல் கட்டுநாயக்காவை விட்டு வெளியேனால் கதிர் காமகந்தனிட்டை போய் மொட்டையடிக்கிறதாய் வேண்டுதல் வைச்சிருக்கிறன்..மொட்டையடிக்கிறதுக்கு என்ரை மண்டையிலை மயிர் இல்லை அதாலை எனக்கு பதிலா உங்கை யாராவது மொட்டையடிக்க சம்மதித்தால் அவரிற்கு 50 தோ 100 அவரின் மண்டையின் அளவைப்பார்த்துத் தராலம்..





புலம்பெயர் தமிழரின் தாகம்.தமிழீழத் தாயகம்



நன்றி

ஃ.சாத்திரி

தலைமைச் செயலகம்

;;;;

தமிழீழம்(பிரான்ஸ்)

''தமிழினப் படுகொலைகள்" - ஆவணப் புத்தகம்

11:14 AM, Posted by sathiri, One Comment


இலங்கை அரச பயங்கரவாதத்தின் கோரத்தாக்குதல்களில் 1956 முதல் 2008 வரையான பலியான தமிழர்கள் பற்றிய ஆவண நூல் *தமிழினப்படுகொலைகள்*.

காலத்துக்காலம் பலியெடுக்கப்பட்ட தமிழர்களின் துயரமும் தமிழின அவலமும் ஆவணமாக்கப்பட்டு நூலாக வெளியாகியுள்ளது.

இந்நூலினை தமிழிலும் ஆங்கிலத்திலும் பெற்றுக் கொள்ளலாம்.

நூலை பேபால் ஊடாக பணத்தைச் செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம்.



Massacres of Tamils





சிறீலங்காவை புறக்கணி

11:07 AM, Posted by sathiri, One Comment

கழுத்துறைச் சிறையிலிருந்து ஒரு தமிழ் பெண் கைதியின் குரல்...

12:58 PM, Posted by sathiri, No Comment


கழுத்துறைச் சிறையிலிருந்து ஒரு தமிழ் பெண் கைதியின் குரல்.....
கேட்பதற்கு இங்கு அழுத்தவும்...நன்றி

தமிழினப் படுகொலைகள் 1956....2008..ஆவணப்புத்தக வெளியீடு

8:26 AM, Posted by sathiri, No Comment


புத்தகம் லண்டன், பாரீஸ், ஜெர்மனி, சுவிஸ் மற்றும் நார்வே நாடுகளில் 2010 ஜனவரியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

நாடு கடந்த தமிழீழ அரசின் பிரித்தானியப் பிரதிநியான வசந்தகுமார்

11:14 AM, Posted by sathiri, No Comment



நாடு கடந்த தமிழீழ அரசின் பிரித்தானியப் பிரதிநியான வசந்தகுமார் அவர்களினுடனான செவ்வி
சாத்திரி

சாத்திரி. வணக்கம் தற்சமயம் நாடு கடந்த தமிழீழ அரசின் அடுத்த கட்ட நடவடிக்கைகள். அல்லது செயற்திட்டங்கள் என்னவாக இருக்கின்றது.

வசந்தகுமார்....தற்சமயம் தமிழர்கள் புலம்பெயர்ந்து வர்கின்ற தேசங்கள் எங்கும் நாடுகடந்த தமிழீழ அரசின் கட்டைமைப்பினை உருவாக்குவதற்காக பிரதிநிதிகளை தேர்தெடுப்பதற்கான தேர்தல் ஒன்றினை வருகின்ற வருடம் சித்திரை மாதமளவில் நடாத்துவதற்காக வேலைகளில் இறங்கியிருக்கிறோம்..என்ன காரணங்களை அடிப்படையாக வைத்து அந்தத் தேர்தல்கள் நடை பெறப்போகின்றதென்பது பற்றி அதற்கான அறிவித்தலும் வெளியாகியிருக்கின்றது.

சாத்திரி....நாடு கடந்த தமிழீழ அரசின் கட்டைமைப்பினை உருவாக்கும் தேர்தல் வருகின்ற சித்திரை மாதம் நடைபெறும் என்று அறிவித்தல் வெளியாகியுள்ள நிலையில்..பிரித்தானியாவில் வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான மீள் வாக்கெடுப்பு ஒன்றினை நடாத்த வேறு சில அமைப்புக்கள் முயற்சி செய்து வருகின்றார்கள் அதற்கான திகதிகளும் விளம்பரங்களும் வெளியாகி விவாதங்களும் நடந்து வருகின்றது. அந்த அமைப்புக்களுடன் நாடு கடந்த தமிழீழ அரசு குழுவினரும் இணைந்தே அந்த வாக்கெடுப்பினை நடாத்துவதாக சில செய்திகளும் மறுத்து சில செய்திகளும் வெளிவருகின்றது.அதனைப்பற்றி விளக்கமாக சொல்லுங்கள்.

வசந்தகுமார்...இதைப்பற்றி நான் தீர்மானிக்க முடியாது.. அதே நேரம் எங்கள் அமைப்பின் ஆலேசனைக்குழு வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பினை மற்றைய அமைப்புக்களுடன் இணைந்து நடத்துவதற்கான தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை.ஆனால் எமது அமைப்பின் பிரித்தானியக் கிளையினருடன் மற்றைய அமைப்புக்கள் தொர்பு கொண்டு பேச்சு வார்த்தைகளை நடாத்தியுள்ளனர்..வேண்டுமானால் அதுபற்றிய சில விபரங்களை நான் உங்களிற்கு தெரிவிக்கலாம்..

சாத்திரி.. அதாவது நா.க..தமிழீழ.அரசின் பிரித்தானியக் கிளையினர் வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான மீள் வாக்கெடுப்பை நடாத்தும் மற்றைய அமைப்பினருக்கு உங்கள் ஆதரவினை வழங்கியோ அல்லது அவர்களுடன் இணைந்து செயற்படுகிறீர்களா..

வசந்தகுமார்..இந்த வட்டுக்கோட்டை தீர்மானம் என்பது ஈத்தமிழர்களின் அரசியல் போராட்டத்தின் அரசியல் அடித்தளம் போன்றது. அந்தத் தீர்மான நிறைவேற்றலின் பின்னர்தான் எங்கள் போராட்டம் வேகமெடுத்தது.அதனை அன்று 77ம் ஆண்டு தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைவர்கள் அவர்களது கட்சிகள் இணைந்து தான் அந்தத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை நடத்தியிருந்தனர்.ஆனால் இன்று இங்கு பிரித்தானியாவில் அந்தத் தீர்மானத்தின் மீதான மீள் வாக்கெடுப்பை தாங்களகவே சிலர் சேர்ந்து செய்யப் புறப்பட்டவேளை நாங்கள் அவர்களை தொடர்பு கொண்டு அதனை தற்சமயம் அவசரமாக செய்யவேண்டாம்..இது ஒரு முக்கியமான வாக்கெடுப்பு எனவே இங்கு மட்டுமல்லாது உலகளாவிய ரீதியில் தமிழ் சங்கங்கள் அமைப்புக்கள் எல்லோரையும் ஒன்றிணைத்து அனைத்து நாடுகளிலும் இதனை நடாத்தினால் அது பெரிய பயனைத் தரும். எனவே இதுபற்றி தொடர்ந்து ஆலேசனைக்கூட்டங்களை வைத்து முடிவு செய்யலாமென்று கூறியிருந்தோம்..ஆனால் அவர்கள் தாங்களாகவே திடீரென ஒரு திகதியினை அறிவித்திருக்கிறார்கள். எனவே அவர்கள் எங்களுடன் இணைந்து செயற்பட விரும்பவில்லையென்றே நினைக்கிறேன்.

.சாத்திரி..நாடுகடந்த தமிழீழ அரசு சில நாடுகளிற்கு அதாவது கனடா அமெரிக்கா பிரித்தானி போன்ற நாடுகளிற்கு தங்கள் ஆலோசனைக்குழு பிரதிநிதிகளை நியமித்துள்ளனர். அதே நேரம் தமிழர்கள் அதிகமாக வாழும் மற்றைய நாடுகளிற்கான பிரதிநிதிகளை இன்னமும் அறிவிக்கவில்லை அதற்கான காரணம் என்ன...

வசந்தகுமார்....மற்றைய நாடுகளில் இன்னமும் ஆலோசனைக்குழு பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் வேலைகள் முழுமையாக முடிவடையவில்லை..அதனால் குறிப்பிட்ட திகதிக்குள் அந்த அறிவிப்பு வெளியாகாமல் தள்ளிப்போயுள்ளது..ஆனால் வெகு விரைவில் அவை வெளியாகும்

சாத்திரி..நல்லது ஆனால் இந்த நாடு கடந்த தமீழ அரசு கட்டமைப்பு பிரதிநிதிகள் மீது ஒரு பொதுவான அபிப்பிராயம் ஒன்றுள்ளது அவர்கள் இன்னமும் வந்து மக்களிடம் இறங்கி அல்லது அவர்களை அணுகி இன்னமும் சரியாக வேலைசெய்யத் தொடங்கவில்லை என்று அதனை பலர் குற்றச்சாட்டகவே வைக்கின்றனர்..அதைப்பற்றி..

வசந்தகுமார்..அந்தக்குறைபாடு உள்ளதுதான் ஒத்துக்கொள்கிறோம்..இப்பொழுதுதான் பல சிக்கல்களிற்கு மத்தியில் ஒரு ஆலேசனைக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. தற்சமயம்தான் நாங்கள் பிரித்தானியாவில் மக்களிடம் சந்திப்புக்களை மேற்கொண்டு கலந்துரையாடலகளை நடத்தத்தொங்கியுள்ளோம்..அவைகளை வேகப் படுத்துவோம்..

சாத்திரி.
..அடுத்த சித்திரை மாதம் நடக்கவிருக்கும் தேர்தலின் நோக்கம் என்ன

வசந்தகுமார்..தற்சமயம் எங்கள் அமைப்பின் கட்டமைப்பு ஒரு தற்காலிக ஆலேசனைக்குழுவைக் கொண்ட அமைப்பு மட்டுமே. அடுத்த தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள்தான் எங்கள் அமைப்பின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை தீர்மானிப்பார்கள்

சாத்திரி...நா.க.தமிழீழஅரசின் திட்டங்கள் ஒரு நீண்டகாலத்திட்டங்கள் அல்லது நீண்ட காலத்தின் பின்னர் நிறைவேற்ற முயற்சிக்கும் திட்டங்கள்.ஆனால் தற்சமயம்.இன்றைக்கு அந்த முகாம்களில் வாழும் மக்களிற்கான அந்த இலங்கையரசின் ஒடுக்குமுறைக்குள் வாழும் தமிழீழ மக்களிற்கான உதவும் திட்டங்கள் ஏதாவது உங்களிடம் இருக்கின்றதா..

வசந்தகுமார்...இறுதியாக நோர்வேயில் நடந்த கூட்டத்தில் இதுபற்றிய விடயங்கள்தான் பெரும்பாலும் ஆராய்ந்தோம்..ஆனால் நாங்கள் நேரடியாக அவர்களிற்கு எதுவும் செய்யமுடியாத நிலைமையிலேயே இன்று இருக்கின்றோம்..அதே நேரம் அவர்களிற்கு உதவக்கூடிய நிலையிலுள்ள அமைப்புக்கள் நிறுவனங்களின் உதவிகளை நாடி அவர்கள் ஊடாக உதவிகளை செய்வதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கின்றோம்..

சாத்திரி...இறுதியாக ஒரு கேள்வி என்னவென்றால் பிரித்தானியாவில் உங்கள் அமைப்பில் தற்காலிக ஆலேசனைக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் யார் யாரென்று பிரித்தானிய வாழ் தமிழர்களிற்கு இன்னமும் தெரியது..எனவே அவர்கள் பற்றிய அறிமுகம் விபரங்களை அவர்களது படங்களுடன் ஊடகங்களிலாவது வெளியிட்டால்தான் மக்கள் அவர்களை அடையாளம் கண்டு தொடர்புகளை ஏற்படுத்த முடியும்..அப்பொழுதானே மக்கள் தங்கள் சந்தேகங்கள் ஆலோசனைகள் என்று கேட்டு தெளிவுபெற முடியும். அதற்கான வழிவகைகளை ஏற்படுத்துவீர்களா

வசந்தகுமார்..லண்டனில் தற்சமயம்தான் நாங்கள் ஒரு அலுவலகத்தினை திறந்து அங்கு முழுநேர ஊழியர்கள் அமர்த்தப்பட்டுளர்..அதே நேரம் எங்கள் அமைப்பு பற்றிய விபரங்கள்..அமைப்பு ஆலோசகர்குழு பிரதிநிதிகள் பற்றிய விபரங்கள் அடங்கிய பிரசுரங்கள்..புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு வருகின்றது..அவை வெளியிடப்படும் அதே நேரம் வேறு ஊடகங்கள் ஊடாகவும் அவர்களது விபரங்கள் வெளியிடப்படும்.இவை அனைத்தும் இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் வெளியிடப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்..

தளபதி ராம் அவர்களின் மாவீரர் நாள் உரை 2009 ஒலிவடிவில்

8:25 AM, Posted by sathiri, One Comment


தளபதி ராம் அவர்களின் மாவீரர் நாள் உரை ௨௦௦9ஒலிவடிவில்

மாவீரர் தின உரை 2009

7:17 AM, Posted by sathiri, No Comment




சிறையிலிருந்து ஒரு குரல்

1:06 PM, Posted by sathiri, No Comment



சிறையிலிருந்து ஒரு குரல் உரையாடல்.
கழுத்துறைச் சிறையில் 12வருடங்களாக பொய்யான குற்றச்சாட்டின் பெயரில்கைதாகியிருக்கும் ஒரு இளைஞனின் குரல் இது. தென்னிலங்கைச் சிறைகளில்தமிழர்களின் அவலம் குறித்து உரையாடுகிறார். உரையாடியோர் சாத்திரி சாந்தி.

புலிகளின் தளபதி ராமின் அறிக்கை

5:07 AM, Posted by sathiri, No Comment

வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்றைய காலத்திற்கு பொருத்தமானதா??

1:16 PM, Posted by sathiri, 7 Comments




வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்றைய காலத்திற்கு பொருத்தமானதா?? என்பது பற்றியதான கலந்துரையாடல்.. .ஈழத்தின் விடுதலைப்போராட்ட காலத்தின் ஆரம்பகால போராளியாகவும்..ஈரோஸ் இயக்கதின் மத்தியகுழு உறுப்பினராகவுமிருந்த கி.பி.அரவிந்தன் அவர்களுடனான கலந்துரையாடல்..கலந்து கொண்டபவர்கள்...சாத்திரி மற்றும் சாந்தி ரமேஸ் ஆகியோர்.இங்கு அழுத்தி கேட்கலாம்

தமிழினப் படுகொலைகள் ஆவணப்புத்தகம்

12:21 PM, Posted by sathiri, No Comment

சிறீலங்காலில் 1956ம் ஆண்டிலிருந்து 2009 ம் ஆண்டு மேமாதம் வரையிலான தமிழினத்தின் மீதான சிறீ லங்கா அரசின் படுகொலைகளை ''தமிழனப் படுகொலைகள்' என்ற ஆவணப் புத்தகத்தை மனிதம் அமைப்பு மற்றும் சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியமும் இணைந்து வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.


உடனே இலங்கை அதிபரை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும். இலங்கை அதிபரின் தம்பிகள் இருவரையும், இராணுவ தளபதியையும் அப்படியே செய்ய வேண்டும். இது உலகம் முழுக்க உள்ள தமிழ் மக்களின் குரலாய் தற்போது ஒலித்துக் கொண்டிருக்கிறது.

இந்த சமயத்தில், அவர்களை குற்ற கூண்டில் ஏற்ற தேவையான படுகொலை ஆவணத்தை புத்தக வடிவில் தமிழகத்தை மையமாகக் கொண்டு இயங்கி வரும் மனிதம் - மனித உரிமை அமைப்பு, 6 மொழிகளில் (தமிழ், ஆங்கிலம், பிரன்சு, ஜெர்மன், சிங்களம் மற்றும் இந்தி) கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

வணங்காமண் நிவாரணப் பொருட்களை ஏற்றி வந்த கப்பலை இலங்கை அரசு முதலில் திருப்பி அனுப்பப்பட்ட பிறகு, 2009 அக்டோபர் இறுதி வாரத்தில் வன்னி மக்களிடம் வணங்காமண் நிவாரணப் பொருட்களை கொண்டு சேர்க்க காரணமாய் இருந்தது மனிதம் அமைப்பு என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மனிதம் அமைப்பு, புத்தக வெளியீட்டிற்காக எழுத்துபூர்வமான அனுமதியை முறையாக பெற்றுக்கொண்டு, சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்துடன் (International Association of Tamil Journalists,) தற்போது அப்பணிகளிலும் ஈடுபட்டுள்ளது என மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்துகிறது. (அனுமதி கடிதம் இணைக்கப்பட்டுள்ளது)

இலங்கையில் தமிழர் பகுதிகளில் 1956 முதல் 2009 ஏப்ரல் வரையில் சுமார் 200க்கும் அதிகமான படுகொலைகள் நடந்தறின.2009 ம் ஆண்டு மேமாதம் கடைசிகட்ட போர் குறித்த ஆவணங்கள் தற்போது அதிமுக்கிய பொறுப்பாளர்களால் சேகரிக்கப்பட்டு நிறைவு பெற்று வருகிறது என்பது குறிப்பித்தக்கது.

இப்படுகொலையில் இறந்தவர்கள் யார், யார் - காயமடைந்தவர்களின் பெயர்கள், எந்த ஊரை சேர்நதவர்கள், 14 வயதுக்கு கீழ்உள்ள குழந்தைகள் எத்தனை பேர், படுகொலை நடந்த இடம், தேதி முதலிய ஆவணங்களை கிளிநொச்சியை மையமாகக் கொண்டு இயங்கி வரும் 'வடகிழக்கு மனித உரிமைகள் செயலகம் (North East Secretariat on Human Rights)' தன்னிச்சையாகவும் சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்களுடன் இணைந்தும் செயல்பட்டு நேரிடையாக பார்வையிட்டு இந்த ஆவணங்களை சேகரித்து உள்ளது. அதேபோல், இப்புத்தகத்தில் படுகொலை செய்யப்பட்ட இடத்தின் வரை படங்களும், படுகொலையில் சிக்குண்ட நபர்களின் புகைப்படங்களும் கூடிய மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

படுகொலைகள் இலங்கை இராணுவ கட்டுப்பாட்டு பகுதிகள் மற்றும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளில் நடைபெற்றவைகளும் சேகரிக்கப்பட்டுள்ளன. 2002-ல் அமைதி உடன்படிக்கையின் போது நடைபெற்ற படுகொலைகளும் இதில் அடக்கம்.

புத்தகம் கிட்டத்தட்ட 350க்கும் மேற்பட்ட பக்கங்களில், இப்போது வடகிழக்கு மனித உரிமைகள் செயலகத்தின் முக்கிய பொறுப்பாளர்களால் திருத்தம் செய்யப்பட்டு, மக்களிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பை மனிதம் - மனித உரிமை அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆவணப்புத்தகத்திற்கான முன்னுரையை அமெரிக்காவில் ஈழத்தின் மனித உரிமை விடுதலைக்காக பாடுபட்டுவரும் திருமதி. எலின் சாடார் அவர்கள் கொடுக்க உள்ளார். புத்தகத்தின் அட்டை வடிவமைப்பும், மிகச்சிறந்த ஓவியரான நந்தா கந்தசாமியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மொழி மாற்றம் செய்யும் பணி தொடங்கப்பட்டு, விரைவில் முடிக்கப்பட உள்ளது என்பது மகிழ்ச்சியான செய்தி.

இனப்படுகொலையின் முக்கியமான வரலாற்று ஆவணமாக இப்புத்தகம் விளங்கப் போகிறது.சிறீலங்கா அரசின் போர்க்குற்றங்களிற்கு எதிராக மனிதவுரிமை அமைப்புக்களோ..நாடுகளோ..தனி நபர்களோ சட்டரீதியாக எடுக்கப்படும் நடவடிக்கைகளிற்கு இந்த ஆவணம் மிக உதவியாக இருக்கும். இப்புத்தகங்களை 2009ம் ஆண்டு இறுதிக்குள் கொண்டு வர திட்டமிட்டப்பட்டுள்ளது.

6 மொழிகளில் கொண்டுவரப்பட உள்ள இந்த ஆவணப்புத்தகத்தை அச்சிட்டு வெளி கொண்டுவர இந்திய ரூபாய் பல லட்சம் செலவு ஆகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

ஆனால் அதேசமயம், இப்புத்தகம் விற்பனை நோக்கம் கொண்டது அல்ல. புத்தகம் கொண்டுவர ஆகும் செலவு மற்றும் இதர செலவுகளை மட்டுமே நன்கொடையாக வாங்கப்படும்.

இப்புத்தகத்தில் கிடைக்கும் நன்கொடை தொகையை, ஈழத்தில் போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக செலவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்பது மிக முக்கிய செய்தியாகும்.

தமிழர் வரலாற்றில் பதிப்படப்போகும் இந்த ஆவணப் புத்தகத்தை வெளிகொண்டு வர ஆர்வமுள்ளவர்கள் நிதி ஆதரவு எதிர்பார்க்க்படுகிறது. குறித்த காலத்தில் இப்புத்தகத்தை கொண்டு வர உதவிகாரமாய் உங்கள் ஆதரவு இருக்கும். அத்தோடு, நிதி ஆதரவு கொடுப்போருக்கு, அவர்களுக்கு உரிய புத்தகங்கள் கொடுக்கப்படும்.

இப்புத்தகம் வெளிவர அனைத்து தமிழர்களின் ஒத்துழைப்பும்இ ஆதரவும் வேண்டி நிற்கிறோம். உங்களின் அரிய யோசனைகளையும் எங்கள் முகவரிக்கு தெரியப்படுத்தவும் கேட்டுக் கொள்கிறோம்.


புத்தக நிதி ஆதரவினை கொடுக்க விரும்புவோர், தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

தொடர்பு:

அக்னி சுப்ரமணியம்
செயல் இயக்குநர், மனிதம் - மனித உரிமை அமைப்பு
274- ஜி.சி, அவ்வை சண்முகம் சாலை, இராயப்போட்டை, சென்னை - 600014, தமிழகம்
தொலைப்பேசி எண் : +91-9003027712 - 9443322543 - 9003133661
தொலைநகலி எண் : +91-44-28133968
மின்னஞ்சல் : manitham@gmail.com
இணையம் : www.manitham.net/nesohr

சிறி
சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம் (International Association of Tamil Journalists), France
தொலைப்பேசி : 0033611149470
மின்னஞ்சல் : sri@orupaper.com sathiri@gmail.com

சும்மா பவிடிக்குத்தான்.......

9:15 AM, Posted by sathiri, 12 Comments

பெரிதாய் பார்க்க படத்தில் நீங்கள் விரும்பியவர் மீது அழுத்தவும்..



கிழக்குப் பதிப்பகம்.பா.இராவகன் திருடினாரா??

1:10 PM, Posted by sathiri, 5 Comments

எனது நண்பரான நந்தா கந்தசாமியின் மனக்குமுறல்.

என்னுடைய் ஓவியத்தை இணைய தளத்தில் இருந்து திருடி மழை ருசி என்னும் புத்தகத்தில் கவர் டிசைன் ஆக கிழக்கு பதிப்பகம் பாவித்திருந்தார்கள் . அதில் எனது பெயர் கூட குறிப்பிட படவில்லை. பல இணைய என் முகம் கூட தெரியாத நண்பர்கள் பலர் கிழக்கு பதிபக்தினருடன் இது சம்பந்தமாக இணைய தளங்களில் எழுதியும் அம்பலப் படுத்தி இருந்தனர்
இதன் பின்பு கிழக்கு பதிபகத்தை சேர்ந்த
சேசாத்ரி என்னுடன் தொடர்புக்கொண்டு நடந்த தவறுகளுக்கு ஒரு மன்னிப்பு கடிதம் எழுதி இருந்தார் அத்துடன் நான் கேட்டு கொண்டது க்கு இணங்க கைருப்பிலுள்ள எல்லா புத்தகங்களுக்கும் எனது பெயர் அச்சிடபட்டு வெளிடுவதாக சொன்னார்கள் அதன் பிற்பாடு
மழை ருசி இரண்டு புத்தகங்களில் எனது பெயர் வெட்டி ஒட்டி அனுபி ருந்தனர் அத்துடன் அவர்களது வெளிஈடுலிருந்து நான்கு புத்தகங்கள் அனுப்பி இருந்தார்கள் அனால் இன்று தட்செயலக இணைய தளத்தை பார்த்தபோது என்னக்கு காம்பன்சேஷன் தொகை கொடுக்கபட்டதாக ... Lire la suite
பா .ராகவன் எழுதி உள்ளார். இது மிகவும் கேவலமானதும் அப்பட்டமான பொய்யுமாகும்
அவரது இணையதலத்தில் நடந்த தவறுகளுக்கு மன்னிப்புகேட்க தவிர்க்கவில்லை என்ன சொல்லி கொடுப்பனவு கொட்டுக்கபட்டது என அபாண்டத்தை சுமத்துகிறார்