Navigation


RSS : Articles / Comments


வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்றைய காலத்திற்கு பொருத்தமானதா??

1:16 PM, Posted by sathiri, 7 Comments




வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்றைய காலத்திற்கு பொருத்தமானதா?? என்பது பற்றியதான கலந்துரையாடல்.. .ஈழத்தின் விடுதலைப்போராட்ட காலத்தின் ஆரம்பகால போராளியாகவும்..ஈரோஸ் இயக்கதின் மத்தியகுழு உறுப்பினராகவுமிருந்த கி.பி.அரவிந்தன் அவர்களுடனான கலந்துரையாடல்..கலந்து கொண்டபவர்கள்...சாத்திரி மற்றும் சாந்தி ரமேஸ் ஆகியோர்.இங்கு அழுத்தி கேட்கலாம்

7 Comments

Anonymous @ 2:03 PM

Th Th
à moi

afficher les détails 22:46 (Il y a 15 minutes)

Sorry better not hear this

as opinions does not change before Mullivaykaal and after MullivaikaaL

We have the need to tell this world the opinion of the people

Anonymous @ 5:30 AM

இது என்ன கொமெடி நிகழச்சியா? பேட்டி காணுகிறவையும் சிரிக்கினம் .. பேட்டி கொடுக்கிறவரும் அடிக்கடி வயிறு குலுங்கச் சிரிக்கிறார் ..

வட்டுக் கோட்டைத்தீர்மானத்திற்கும் தமிழீழத்திற்கும் உள்ள தொடர்பை மறுக்கிறார்கள் என்பதுதான் வருத்தமாக உள்ளது.

தமீழீழம் என்பது வட்டுக்கோடடைத்தீர்மானம் அல்ல என்பது சரி. அனால் அதனை மறுவழமாகக் , அதாவது வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்பது தமீழீழம் பற்றிய தீர்மானம் அல்ல எனக்கூறினால் அது தவறானது.

தனித்து தமீழீழம் வேண்டுமா வேண்டாமா என வாக்கெடுப்பு நடாத்துவதைக் காட்டினும். தமீழீழக் கோரிக்கையை வலியுறுத்திய ஒரு தீ்மானத்தின் அடிப்படையில் ஒரு வாக்கெடுப்பை நடாத்துவது என்பது நகைப்புக்குரிய விடயமில்லை.

ஐரோப்பாவில் இருக்கிறவர்கள் என்ற அடிப்படையில், மாஸ்ரிச் உடன்பாடு, லிஸ்பன் உடன்பாடு போன்றவை தொடர்பாக நடந்த சர்வசன வாக்கெடுப்புகள் பற்றி அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

உள்ளக சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான தீர்வுக்கும், தமிழீழக் கோரிக்கைக்கம் இடையிலான வேறுபாடுகள் பற்றி பேட்டி கண்டவருக்கு தெரியவில்லை அதனை தொட்டு பேசுவதற்கும் கி.பி. அரவிந்தனுக்கும் விருப்பமில்லை போல் தெரிகிறது.

யார் யாரையெல்லாமோ தாக்குவதற்காக அவல் என நினைத்து உரலை இடித்துள்ளார்கள்.

பார்த்திபன்

sathiri @ 12:03 PM

பார்த்திபன் அவர்களிற்கு இது நேர்காணல் அல்ல..கலந்துரையாடலே அதனை ஒலிப்பதிவின் ஆரம்பத்தில் தெளிவாக சொல்லியுள்ளார் சாந்தி அவர்கள்..அதே நேரம் நேர்காணலிலோ கலந்துரையாடலிலோ சிரிக்கக்கூடாது என்று ஏதாவது வரை முறை உள்ளதா என்பதையும் விளக்கவும்..அடுத்ததாக இங்கு யாருமே உள்ளக சுயநிர்ணய உரிமை பற்றி பேசவில்லையே..பிறகெப்படி அதன் வேறு பாடு பற்றி பேசமுடியும்..இறுதியாக ஒரு குறிப்பு இப்பொது அவலை யாரும் உரலில் இடிப்பதில்லை..நன்றி.

Anonymous @ 6:14 AM

happy birthday mahinda!
http://thesamnet.co.uk/?p=17682

Anonymous @ 4:10 PM

//tiger
November 19, 2009 9:36 AM
அரவிந்தன்!

நாம் எழுபதுகளின் பிற்பகுதியில் "தமிழீழப்" போராட்டத்தை முனைப்படுத்திய
போது,நீங்கள் லண்டனிலிருந்து இறக்குமதி செய்த "ஈழம்" என்ற சொல்லை தூக்கி வைத்து தற்கீகம் பண்ணியது ஞாபகம் வருகின்றது.

மீண்டும் "தமிழீழப்" போராட்டத்தை திசை திருப்பவும்,உங்கள் இருப்பை வெளிக் கொணரவும் நீங்கள் தூக்கிப் பிடித்த தர்க்கம்தான் வட்டுகோட்டைத் தீர்மானம்.

நன்றி, நடத்துங்கள் உங்கள் வேட்டையை. //
http://mullaimann.blogspot.com/2009/11/blog-post_11.html

ஒரு அகதியின் நாட்குறிப்பு !!! @ 9:48 PM

தாங்களும் குழம்பி,எல்லோரையும் குழப்புகிற கூட்டங்களின் மத்தியில் இத்தகைய கலந்துரையாடல்கள் அவசியமாகிறது.வட்டுக்கோட்டைதீர்மானம் என்பது எந்தத் தீர்மானமில்லாதவர்களுக்கும், இன்றைக்கு பேசவும்,பிழைப்பைத் தேடிக்கொடுக்கவும் வழிசமைத்திருக்கிறது.
இது தவிர வட்டுகோட்டைத்தீர்மானத்திற்கு ஒரு
தேர்தல், திம்புவிற்கு ஒரு தேர்தல், ஒஸ்லோவிற்கு ஒரு தேர்தல்,புலிகளின் தமிழீழப் பிரகடனத்திற்கு ஒரு தேர்தல் என புலன் பெயர் புண்ணியர்கள் பிழைக்க இன்னும் வழிகள்பல திறந்தே கிடக்கிறது.

ஒரு அகதியின் நாட்குறிப்பு !!! @ 10:10 PM

சாஸ்திரி அவர்களே, தங்களின் இணைய வலையை என் இணைய வலையில் தொடுப்புக்கொடுத்துள்ளேன்.
நன்றி உங்கள் பதிவிற்கு
தமிழ்சித்தன்