Navigation


RSS : Articles / Comments


ராஜீவ் காந்திக்கு பிரபாகரன் எழுதிய இறுதிக்கடிதம்

2:47 PM, Posted by sathiri, 3 Comments

ராஜீவ் காந்திக்கு பிரபாகரன் எழுதிய இறுதிக்கடிதம்


ஈழத்தில் புலிகள் மீதான யுத்தத்தினை இந்தியப் படைகள் தொடங்கிய பின்னர் அன்றை இந்தியப் பிரதமரான ராஜீவ்காந்திக்கு புலிகள் இயக்கத் தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் இரண்டு கடிதங்களை எழுதி அவை இரண்டிற்கும் புதுடெல்லியின் பிரதமர் அலுவலகத்திலிருந்து எவ்வித பதிலும் கிடைக்காததினால் மூன்றாவதாகவும் இறுதியாகவும் ஒரு கடிதத்தினை எழுதியிருந்தார்.அந்தக் கடிதத்தினை இங்கு இணைக்கிறேன்.


தலைமைச்செயலகம்
தமிழீழவிடுதலைப்புலிகள்
யாழ்ப்பாணம்
13.01.1988




கனம் ராஜீவ் காந்தி
இந்தியப் பிரதமர்
புதுடில்லி


கனம் பிரதம மந்திரி அவர்களே.
தமிழ் பகுதிகளில் தொடர்ந்தும் சமாதானம் சீர்குலைந்து வன்முறை தாண்டவமாடுவதனாலும் எமது மக்கள் தாங்கொணாத் துன்பத்திற்கு இலக்காகி இன்னல்படுவதனாலும் இராணுவ நடவடிக்கையை . சமாதானமும் இயல்பு நிலையும் திரும்பும் வகையில் சமரச முயற்சிகளை மேற்கொள்ளுமாறு நான் அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்.

போர்நிறுத்தம் செய்து கொள்ளப்பட்டு யுத்தம் ஆரம்பமாதற்கு முந்திய நிலைகளிற்கு இந்திய சமாதானப்படையினர் திரும்புவதே சமாதானத்திற்கும் இயல்பு நிலைக்கும் வழிகோலுமென நாம் கருதுகிறோம்.தமிழீழ மக்களும் இந்தக் கருத்தையே கொண்டிருக்கின்றனர்.சமாதான முயற்சியின் ஆரம்ப நடவடிக்கையாக தமிழீழ விடுதலைப்புலிகளிற்கு பொது மன்னிப்பு வழங்கும்படி இலங்கை அரசை கேட்டுக்கொள்ளுமாறு நான் உங்களை வேண்டிக் கொள்கிறேன்.அத்துடன் இந்திய சமாதானப்படையினரால் கைது செய்து காவலில் வைக்கப்பட்டிருக்கும் எமது இயக்க உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் விடுதலை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

விடுதலைப்புலிகளிற்கும் இந்திய அரசிற்கும் மத்தியில் புதுடில்லியில் ஏற்கனவே இணக்கம் காணப்பட்டஉடன்பாட்டின் பிரகாரம்.விடுதலைப்புலிகளை பெரும்பான்மையாகக்கொண்ட இடைக்கால நிர்வாக அரசு அமையப்பெற்றதும்
நாம் எமது ஆயுதங்களை ஒப்படைப்போமென உறுதி தருகின்றோம்.நான் உங்களிற்கு மீண்டும் மீண்டும் வலியுறுத்திக்கூறியது போல தமிழ் மக்களின் உயிரிற்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு தமிழ் மக்களின் நலன் பேணப்படுமாயின் இந்திய --இலங்கை ஒப்பந்தத்தை செயற்படுத்துவதற்கு எமது இயக்கம் ஒத்துழைக்கத்தயாராக உள்ளதுஎன்பதனையும் உங்களிற்கு தெரிவிக்க விரும்புகின்றோம்.

இந்த ஒப்பந்தம் பரிந்துரைக்கும் மாகாணசபைத்திட்டமானது தமிழ்மக்களின் அபிலாசைகளைப் பூர்த்திசெய்யவில்லை என்பதே எமது நிலைப்பாடாகும்.ஆகவே தமிழ் மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யும் அதிகாரம் கொண்டதான தமிழ்பிரதேச மானில ஆட்சியமைப்பை உருவாக்கும் எதிர்காலப்பேச்சுக்களில் விடுதலைப்புலிகளிற்கு முக்கிய பங்களிக்கப்பட வேண்டும் என்பதையும் நாம் இங்கு வலியுறுத்த விரும்புகின்றோம்.எமது யோசனைகளிற்கு முக்கியத்துவம் கொடுத்து சீரிய முறையில் பரிசீலனை செய்து தமிழீழத்தில் சமாதானம் நிலவவும் எமது மக்களின் துயரை துடைக்கவும் போர் நிறுத்தம் செய்து பேச்சுக்களை தொடங்க உடன் நடவடிக்கை எடுப்பீர்களென நான் மனதார நம்புகிறேன்.

வே.பிரபாகரன்
தலைவர்
தமிழீழ விடுதலைப்புலிகள்.



மேலேயுள்ள மூன்றாவது கடிதத்திற்கும் ராஜீவ் காத்தியிடமிருந்து எவ்வித பதிலும் புலிகளிற்கு அனுப்பப்படவில்லை. விடுதலைப்புலிகள் அமைப்பு இந்தியாவிடம் ஒவ்வொருதடைவையும் தங்கள் நேசக்கரத்தினை நீட்டியபொழுதெல்லாம் புலிகள் பலமிழந்து பயத்திலேயே தங்களை நோக்கி நேச்சக்கரத்தினை நீட்டுவதாக இந்தியா தப்புக்கணக்கு போடிருந்தது. அதுதான் இன்றுவரை தொடர்கின்றது.அதே நேரம் இந்தியப் படை தளபதியான ஜெனரல் திபேந்தர் சிங் என்பவர் தான் எழுதிய புத்தகத்தில்.. ராஜீவ் காந்தியிடம்.. புலிகள் பலமிழந்து பேச்சுவார்தைக்கு அழைப்பு விடுக்கவில்லையெனவும். எனவே அவர்களது கோரிக்கையை பரிசீலிக்குமாறு தான் அனுப்பிய செய்தி ஊதாசீனப்படுத்தப் பட்டதாகவும்.அதே நேரம்.இலங்கையிலிருந்த இந்திய இராணுவத் தரப்பு தளகர்த்தா சுத்தர்ஜீ ஈழத்தின் கள நிலைமைகள் பற்றியும் புலிகள் பலம் பற்றியும் ராஜீவிற்கு எடுத்து சொன்னவைகள்கூட பலனற்று போய்விட்டது என்று எழுதியுள்ளார்.

ராஜீவ்காந்திக்கு பிரபாகரன் எழுதிய முதலாவது கடிதம்

ராஜீவ்காந்திக்கு பிரபாகரன் எழுதிய இரண்டாவது கடிதம்

3 Comments

வெத்து வேட்டு @ 6:12 PM

the problem is letter was written in 1998 but Rajiv was killed before :)
Praba is the only smart guy who would write letter to a person whom he killed :)
that is why Rajiv couldn't read it....
where did Praba send this letter? to heaven? or hell?

sathiri @ 11:48 PM

சுட்டிக் காட்டியமைக்கு நன்றிகள் வெத்து வேட்டு நான் தட்டச்சு செய்யும் பொழுது 88 க்கு மாறி 98 என்று அடித்து விட்டேன் திருத்தியுள்ளேன்

Anonymous @ 10:40 AM

மனசாட்சி உள்ளவர்களிடம் கடிதம் கொடுக்கலாம் ......இவர்களிடம் கொடுத்து என்ன பயன் நண்பர்களே......