Navigation


RSS : Articles / Comments


ஈழத்தமிழருக்கு உதவிட இங்கிலாந்திலிருந்து கப்பல்

11:16 AM, Posted by sathiri, 6 Comments

தினம் தினம் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கும் ஈழத்தமிழினத்தினை சர்வதேசமும் கைவிட்டுள்ள நிலையில் வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் ஒன்று சேர்ந்து ஒரு கப்பலில் ஒரு மருத்தவர்கள் அடங்கிய குழு ஒன்றுடன் அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் . உலர் உணவுப்பொருட்கள்.மற்றும் உடைகள் என்பவற்றினை சேகரித்து ஈழம் நோக்கி புறப்படதயாராகி வருகின்றனர்.

இந்த நடவடிக்கைக்கு ஒப்பரேஷன் "வணங்கா மண்" என பெயரிடப்பட்டுள்ளது. சட்டச் சிக்கல்கள், கடல் வழிப்பயண அனுமதி, பயணிப்பவர்கள், மாலுமிகள் மற்றும் சர்வதேச அங்கிகாரத்துடனான பாதுகாப்பு என்பன பூர்த்தியாகியுள்ள நிலையில் இக்கப்பலில் கொண்டு செல்ல உலர் உணவுப் பொருட்களை ஏற்பாட்டாளர்கள் புலம் பெயர் மக்களிடம் கோரி நிற்கின்றனர்.
மக்களிடம் என்னென்ன பொருட்களை எற்பாட்டாளர்கள் எதிர் பார்க்கின்றார்கள் என்கிற விபரம்.இலண்டனில் வெளியிடப்பட்டுள்ளது.

விபரங்கள் கிடைக்காதவர்கள் வெண்புறா அலவலகத்துடன் தொடர்பு கொண்டு விபரங்களை பெற்றுக் கொள்ளலாம். சேகரிக்கப் படும் பொருட்களின் விபரங்கள் பற்றிய பட்டியல் எனக்கு கிடைத்ததும் இங்கும் இணைக்கிறேன். கப்பல் இலங்கையை நோக்கி பறப்படும் என்பது தீர்மானமாகி விட்டது.. ஆனால் இலங்கையரசு இலங்கை கடல் எல்லைக்குள் அனுமதிக்குமா?? இல்லையா?? அல்லது தாக்குமா??என்பதனை காலமும் சந்தர்ப்ப சூழ்நிலைகளும் முடிவு செய்யட்டும்...நன்றி.

6 Comments

vasu balaji @ 1:48 PM

அனுமதிக்காவிடில் முகத்திரை கிழியும். அதன் பிறகும் ஐநா வாளாயிருப்பின் சாயம் வெளுக்கும்.

Anonymous @ 5:16 PM

சோமாறி சாத்திரி..ஹி.ஹி

தமிழ் மதுரம் @ 2:47 AM

சாத்திரி அண்ணா! வணக்கம்! முதலில் மன்னிக்கவும். தாமதமான பின்னூட்டத்திற்கு.....

நான் கொஞ்சம் பிசி....

ஆனாலும் தங்கள் பதிவுகளை நேரம் கிடைக்கும் போது படிப்பேன்.....
எம்மவர்களைக் காப்பாற்ற உலகமும் இல்லையாம்?? என்ன செய்வோம்? எமது தலை விதி???

sathiri @ 11:23 AM

//Blogger கமல் said...

சாத்திரி அண்ணா! வணக்கம்! முதலில் மன்னிக்கவும். தாமதமான பின்னூட்டத்திற்கு.....

நான் கொஞ்சம் பிசி....

ஆனாலும் தங்கள் பதிவுகளை நேரம் கிடைக்கும் போது படிப்பேன்.....
எம்மவர்களைக் காப்பாற்ற உலகமும் இல்லையாம்?? என்ன செய்வோம்? எமது தலை விதி???//

எல்லாவற்றிற்குமே அடுத்தவனை நம்பியே ஏமாந்து போய்விட்டோம். அது தலைவிதியென்று நிற்காமல் எங்கள் விதியை நாங்களே தீர்மானிப்போம் கமல் வரவிற்கு நன்றிகள்.

sathiri @ 1:37 PM

//Anonymous @ 5:16 PM

சோமாறி சாத்திரி..ஹி.ஹி//

தங்கள் வரவிற்கு நன்றிகள் மொல்லை மாரி அனானி ஈஈஈஈஈஈஈஈஈஈ.....

கிருஷ்ணா @ 11:45 AM

சாத்தியப்பாடுகளுக்கு அப்பால், இந்த முயற்சி சர்வதேச அளவில் பாரிய கவனஈர்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேசத்தால் நிராகரிக்க முடியாத மனிதாபிமான நோக்கத்துடன் இடம்பெறும் இந்த முயற்சி ஸ்ரீலங்காவுக்கு நோகாமல் அறிக்கைவிட்டுவரும் சர்வதேசத்துக்கு நிச்சயம் தலையிடியை ஏற்படுத்தும். முடிந்தவரை எல்லோரும் பங்களிப்போம்...